துப்பாக்கிகளோடும் லத்திகளோடும் காத்திருக்கும்
அரசாங்கத்தின் அடியாட்களிடம்
உயிர் பறிப்பதால்
உயர்பதவி அடையும்
சட்டத்தின் கொலைகாரர்களிடம்
ரோஜாப்பூக்களை நீட்டுகிறார்கள் மாணவிகள்.
அரச பயங்கரவாதிகளும்
வழிதவறிய மனிதர்களே
என்னும் நேசிப்பின் வழியாக
சொற்களால் இட்டு நிரப்ப முடியாத
அன்பை மலரச் செய்கிறார்கள்.
மண்ணைத் தீண்டும் மழையைப்போல
அடையாளங்களைக் கடந்து
அன்பின் உன்னதங்களை ஆராதிக்கிறார்கள்.
- அமீர் அப்பாஸ்