அப்பாவோடு சேர்ந்து சாப்பிட விளையாட
கதை பேசக் காத்திருந்து
அப்பாவிற்கான சாக்லேட்டையும்
உள்ளங்கையில் இறுக்கி மூடியபடியே
உறங்கிப்போன
அந்த சிறுமியின்
கண்களில்
அப்பாவிடம் காட்டுவதற்காக வரைந்த ஓவியங்களில்
வீட்டுப்பாடங்களில்
முத்தமிடும்
கார்ப்ரேட் தந்தையின்
உதடுகளில் மகளின் நேசம் ஈரமாய் பிசுபிசுக்கிறது.
வாசனைமிகு
அவளின் கனவுகளில் வளர்பிறையாய் அப்பா நிலவு.
பிஞ்சு விரல்களிடையே இனிப்புத் தேன்மிட்டாயென
இறுக்கமாய் கனக்கிறது
இருவருக்கான இரவு...

- சதீஷ் குமரன்

Pin It