வீட்டின் முற்றத்து வேப்பமர நிழலில் அமர்ந்திருந்தேன்.
வறண்ட நாவால் இல்லாளிடம்
தாகமென்றேன்.
அடுக்களையிலோ
தாய்க்கும் சேய்க்கும் சிறு சமர்.
மகள் சொம்பு நிறைய நீர் மொண்டு
ததக்கா புதக்காவென நடந்து
வந்தாள்.

அவள் எனை நெருங்கி வைக்கும்
ஒவ்வொரு அடிக்கும் ஒரு பங்கு நீர் சிந்த
நிலத்தின் தாகம் தணிந்தது.

எனையடைந்த இறுதியடியில்
மகள் காலி சொம்பை நீட்டுகையில்
சொம்பின் வெற்றிடத்தில்
சிரிப்பை நிரப்பினேன்.
தீர்ந்தது பல வருடத்தின் தாகம்.

- நெகிழன்

Comments

9 comments

9
வெங்கட்ராமன்
அருமை நெகிழ்
மீனாட்சி சொக்கன்
நல்லாருக்கு நெகிழன்
விஜயபாலன்.அகோ
சிரிப்பை நிரப்பினேன்
தீர்ந்தது பல வருடத்தின் தாகம்
அடடா ஆகச் சிறந்த கவிதை... வாழ்த்துகள்.
கார்த்திகேயன் மாகா
அருமை நெகிழன்
Selvabackiyaraja
பிராமாதம் Bro
நெகிழன்
நன்றி தோழமைகளுக்கு
நெகிழன்
நன்றி தோழமைகளுக்குகு
Vanmathi
அருமை
Vanmathi
அருமை நெகிழன்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.