love separationஎங்களுக்குள்
பத்தாண்டுகளுக்கும் மேலான
ஒரு பந்தமிருக்கிறது
முதன்முதலில்
அதற்கு சீருடை அணிவித்து
அழகு பார்த்தோம்
வளர வளர இருவரும்
வண்ணங்களாய்ப் பிரிந்தோம்
என்னுடைய நிறத்திற்கு
இயற்பியலென்று பெயரிடப்பட்டது
அவனுடையதோ
வணிகவியலாகிப் போனது
எத்தனையோ இடைவெளிகளைக் கடந்தும்
பிரிவும், முறிவுமாகி
மீண்டும் இணைந்த போது
எங்களிடம் பத்தாண்டுகளுக்கும் மேலான
வளர்ச்சியிருந்தது
வளர்ந்து நிற்கும் பருவத்தில்
நட்பாய் விலகி நின்றோம்
நாட்கள் கைபிசைந்தபடி உருண்டோட
யாரும் எதிர்பாரா வகையில்
தொலைந்தே போனது
இருவருக்குமிடையிலான
கண்துடைப்பான சாத்தியமொன்று
கடைசியில் காட்டிக் கொடுக்கப்பட்டு
அடிமையாகிப் போனோம்
முதற்காதலின் வேரூன்றலுக்கெதிராக
எங்களைக் கடந்த
எந்தப் புயலுக்கும் அசைத்துப் பார்க்கும்
சக்தியில்லையென்பதை
உணரத் துவங்கிய கணத்தில்
முதன்முதலாய்
எங்கள் இருவரது சைக்கிள்களும்
ஒரு திருப்புமுனையில்
மோதி நின்ற
பதின் பிரமிப்பாயிருக்கிறது....!

- புலமி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.