chess coinsஅவர்கள் இருவரும்
ஆளுக்கொரு பூனையை
மடியில் கட்டிக்கொண்டு
அருகருகே வசிக்கிறார்கள்.
எதிரியாக இருந்தாலும்
பூனை வளர்க்கும் விஷயத்தில் நண்பர்கள்.
இரண்டுக்கும் ஒரே தாய்தான் என்றாலும்
தாயினருகில் அண்ட விடுவதில்லை.
கருவாட்டுப் பானையின்
ருசி காட்டுவதில்லை.
'எலியும் பூனையுமாக' என்று சொல்லக்கூட
வாய்ப்புத் தருவதில்லை.
இப்படியாக அவை இரண்டும்
அவர்கள் இருவரையும் போல
ஒரே மாதிரி
வேறு மாதிரி வளர்ந்து
மடிவிட்டு இறங்க
நல்ல சகுனம் பார்த்துக்கொண்டிருக்கின்றன.

- மனோ ரெட்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.