lovers differenceஎன் வீட்டிற்கும்
உன் வீட்டிற்கும்
சில வயல்வெளிகளே
தூரம் இருப்பதாக சொன்னாய்

இரயில் எஞ்சினின்
பெருமூச்சு
உன் வாசலில் கேட்கும் போது
கடைசிப் பெட்டி
என் வீட்டைக்கடந்து செல்லக்கூடும்
என்று அடிக்கடி சொல்வாய்..!

உன் அப்பாவும்
என் அப்பாவும்
ஒரே துறையில்
வேறு வேறு அலுவலகங்களில்
இணையான அதிகாரிகளாக
பதவி வகித்திருக்கிறார்கள்..!

உன் தெருவில் பெய்த
மழையின் சாரல்
என் வாசலில்
ஈரம் சொட்டுவதை
நெடுநாள் இரசித்திருக்கிறேன்..!

ஆனாலும் -
உன் நெஞ்சில் பொங்கி
பிரவகித்த காதலை
கண்களால் அன்றி
சொற்களால்
சொல்ல முடியாமல் போனதற்கு
காரணங்கள் நான் அறிவேன்..!

தண்டவாளங்களில்
நம் உடல்கள்
வெட்டுண்டுக் கிடக்காமல்
வேறு வேறு குடும்பங்களாய்
வாழ்ந்திருந்து நலம்
விசாரித்துக் கொள்கிறோம்..!

ஊரும் சேரியும்
ஒன்றாகும் காலத்தில்
நாம் மீண்டும்
காதலிக்கலாம் அன்பே..!

- அமீர் அப்பாஸ்

Comments

3 comments

3
neethimalar
vanakkam thozhar
vazhthukkal thozhar.aanal muthukelumbai udaithuvittu udalai mattum katti ullerkal.yen? ungalin iyalaamaikku adutha jenmaithai mudivaka solli iruppathu vedhanai.
K.Tamizhvanan
Thozhar vanakkam. kavithai nandraka ullathu.
Tharpothu suronidhan yendra peyaril kanakku thunkiyullen. padaippai valaiyetra muyandrapothu font family yendra option ellai. melum payanalar peyarai tamizhil matra vendum
vazhimurai koorunkal thozhar. yennudaiya email id:

[email protected]
ஆர்.தியாகு
//ஊரும் சேரியும்
ஒன்றாகும் காலத்தில்
நாம் மீண்டும்
காதலிக்கலாம் அன்பே..!//

காதல் உடல் சார்ந்ததல்ல.. அதற்கு முடிவுமில்லை.. மீண்டும் காதலிக்க அந்த காதலை கவிதாயாக படிக்கவேணும் உங்கள் ஊரும் சேரியும் ஒன்றாய் சேரட்டும்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.