modern art600

அரிதாகத் தான் 
இப்பொழுதும் பேசுகின்றேன் 
அது என்னவோ 
கொட்டித் தீர்ப்பதாகவே 
இருப்பதாய் 
"ம் “ என்பதை மட்டும் 
இடைவெளிகளில் தருவிக்கின்றாய் 
அத்தனை ஆரவாரங்கள் 
எனக்குள் கொட்டமடிக்க 
வெற்றுப் பிதற்றலில் மீள்கிறேன் 
எல்லாம் முடிந்தபின் 
நல்லா தூங்கு சரியா?! என்று 
சாத்வீகமாய் தொனிக்கின்றாய் 
பாவத்தில் 
பங்கு எடுத்துக் கொள்ளும் 
கடவுள் இந்த முறை 
தூக்கத்தைப் பிடுங்கிவிட்டு 
உனக்குக் கொடுக்கட்டுமென 
உள்ளூரக் கிறுக்குகின்றது 
ஒரு வரி இப்படியும் 
இன்னொரு வரி அப்படியும் 
முடிவில் 
உன் வசம் சில கேள்விகளும் 
என்னிடம் 
மன்றாடிய அமைதியும் 
ஒரே போல் 
சொல்லி வைத்தன 
விடியற்காலை சீக்கிரம் 
எழவேண்டுமென.....!

- புலமி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.