ஒரு கைபிடிச் சோற்றுருண்டையில்
ஒரு கல்லேதும் தட்டுப்பட்டால்
வீசியெறியாமல்
மென்று தின்றுப்பழகுங்கள்
என் செல்லக் குழந்தைகளே..!

மரமின்றி
மழையின்றி
விவசாயம் பொய்த்துப்போகும்
நாளைய தேசத்தில்
கற்களும்
கற்கள் மட்டும் கூட
ஆகாரமாக கூடும்.

கவலைப்படாதீர்கள்
மெல்லுகின்ற கற்களை
அரவை செய்து
ஜீரண சக்தியாக்க
விஞ்ஞானம் ஏதேனும்
அவசரம் செய்யக்கூடும்..!

இன்றே கல்லை
மென்று தின்றுப் பழகுங்கள்.
இல்லையேல்
மரக்கன்று ஒன்றை
நட்டுவைத்து
விவசாயத்தைப் பழகுங்கள்.

- இரா.சந்தோஷ் குமார்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.