பால் குடி மறவா
பச்சிளங்குழந்தைக்கு
சில ஆயிரம் ரூபாய்
நுழைவுக் கட்டணம் கேட்கும்
கல்வி கூடங்களையும்..

மூன்றாம் வகுப்பு
மரியாவோ.. செல்வியோ
வகுப்பு இடைவெளியில்
சிறுநீர் கழிக்கச்சென்ற
அந்த புதர்காட்டிலிருந்து
வெளிவந்தபோது
கண்ணீர் வழித்து
அடிவயிற்றை பிடித்தற்கான
காரணகர்த்தாக்களை
பிடித்து உலுக்கத் தெரியா
மலட்டுச் சட்டங்களையும்..

எந்த எவனுக்கும்
எவன் எவளுக்கும்
எது நடந்தாலென்ன..
விடுதலை உயர்குடிக்கு
தண்டனை கீழ்குடிக்கு என
அத்துமீறல் போதையில்
ஆடித்திரியும் நீதிமான்களையும்

உதைத்து திருத்த வழிதெரியா...
உங்கள்
வந்தே மாதரத்தையும்
தேசப் பக்தியையும்
எந்த கருவாட்டுச் சட்டியில்
நான் போட்டு வறுத்தெடுக்க..?

- இரா.சந்தோஷ் குமார்

Comments

1 comment

1
சேயோன் யாழ்வேந்தன்
அருமை தோழர்!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.