ஆறடி நிலத்திற்கு சண்டையிட்டார்கள்
கேட்டலும் மறுத்தலும் எதிரெதிரே நின்றது
வெகுதூரத்தில் புறம்போக்கு நிலம்
கொடுத்தது அந்த ஆறடியை
பல வருடங்களுக்குப் பிறகு
சண்டையிட்டவர்கள் நகரத்திற்கு குடிபெயர்ந்து
வரிசையில் நிற்கிறார்கள்
மின் மயானத்தில் எரிவதற்கு
மின்சாரம் மேல்சாதியென்பதற்காய்
மஞ்சள் தூளைத் தராது
சாம்பலைத்தான் தரும்
நெருப்பிடம் செல்லாது
சாதிப் பட்டமும் சான்றிதழும்.
கீற்றில் தேட...
மின்மயானம்
More articles by கோசின்ரா
- உன் கொடூரத்தை எனக்கு மட்டும் பங்கிடு (22 ஆக 2015)
- ஒளிரும் வானம் (14 மே 2015)
- கண்களிலிருந்து விடுதலை செய்! (06 மே 2015)
- என் சாம்பலில் உன்னைத் தேடாதே (30 ஏப் 2015)
- முதல் முத்தம் (22 ஏப் 2015)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.