ஊறிக்கசிந்த விரக தாபத்தில் தனித்தபடி
இளமையை தின்றுகொண்டிருக்கும்
பசி எனது

நிறமிழந்து மங்கிப்போகும் இத்தேடலில்
நீதானென்று அனுமானிக்க முடியாது
ஒவ்வொரு முறையும்
தோற்றுபோகிறதென் விழிகள்
உன் குரல் பருக எத்தனித்து தாகித்தபடி
செவிடாகிக் கொண்டிருக்கிறதென் புலன்கள்
பூப்பானதிலிருந்து
இன்றைய தேதிவரை புதிது, புதிதாய்
பகிர்ந்து கொள்ளவென்று நதிகளை இணைத்து
ஒரு கடல் முத்தம் தேக்கிவைத்திருந்தேன்

என் தேடலின்
கனவிலும் உன்னை காணவில்லை
இப்போதென்ன……
கயல்கள் குதித்த காலம் மாறி
முயல்கள் பதுங்க கரைகள் வளரும்
காடாகும் இனி இந்த சமுத்திரம்.

- ரோஷான் ஏ.ஜிப்ரி, இலங்கை.

Comments

1 comment

1
Ganesan
விரகதாபத்தின் வெளிப்பாடா! வெளிரிப்போன சமூக விலங்குகளின் வெளிதேடளா!!! முயல்கள் மூர்க்கமாகும்போது கடலும் கவிழூம்!!! தேர்ந்த்த வார்த்தைகளின் சொற்சிலம்பம்! வாழ்க!!

கணேசன்,
புதுவை.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.