சிறு சிறு கனவும் நீ

கனவின் நினைவும் நீ

இமைக்குள் விழியும் நீ

இமையோரம் வலியும் நீ

பகலில் இருளும் நீ

இருளின் நிலவும் நீ

படர்ந்த கொடியும் நீ

கொடியின் மலரும் நீ

உயிருட்டும் உணர்வும் நீ

உணர்வின் குருதியும் நீ

பனியின் உருகலும் நீ

உருகலின் துளியும் நீ

என் இரவின் தவிப்பும் நீ

தவிப்பின் இதமும் நீ

எனதறையின் ஜன்னலும் நீ

வெளியே சுழலும் உலகமும் நீ

வாடை காற்றின் ஈரமும் நீ

ஈரத்தின் சாரமும் நீ

சொல்லின் வலிமையும் நீ

வலிமையின் பெண்மையும் நீ

பார்வையின் பிம்பமும் நீ

பிம்பத்தின் வண்ணமும் நீ

இவனின் காதலும் நீ

காதலின் காமமும் நீ

நதியின் வேகமும் நீ

வேகத்தின் சாரலும் நீ

மாலை மழையும் நீ

அதில் சிறு மின்னல் கீற்றும் நீ

விடையின் வினாவும் நீ

இது வரை இல்லா விளக்கமும் நீ

- ஜீ.கே

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Comments

3 comments

3
pannir
so nice poem :-)))))))))
Natchatra
வினாவும் விளக்கமுமாகவும், வாழ்வின் மொத்தமுமாக இருக்கும் உங்களவளோடு வாழ்வு சிறக்க வாழ்த்துகள் ஜி.கே.... :-)

மென்மேலும் பல பல கவிதைகள் படைத்திடுங்கள்...
Anitha
வாழ்த்துக்கள் ஜிகே !!

மேலும் பல பல படைப்புகள் படைக்கவும் ...அவை வலை தளங்களில் பிரசுரிக்க படவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.