யார் தான் நீ???

அன்றிலிருந்து இன்று வரை ...

வேறெதுவும் தெரியாதே

உன் நினைவுகளில் அடைப்பட்ட

இவனின் நெஞ்சத்திற்கு...

மஞ்சத்திருக்கும்

தெரிந்து விட்டதோ....இனி

இவன் உறங்கப்

போவதில்லையென

எள்ளி நகைத்து

ஏளனம் செய்கிறதே

ஓ..தலையணைக்குள்

நான் புதைத்த கண்ணீர்

கசிந்து விட்டதோ ...

 

விடுமுறை கொடுத்தும்

விலகாமல் கண்சிமிட்டியே

சிரிக்கின்றன எனதறையின்

மின்விளக்குகள்... கள்ளி

அதிலுமா உன் ஆட்சி...

இரு விடியட்டும்

விளக்கம் தேடலாமென

விழித்திருந்தேன் ......

சிறைபட்ட உன்

நினைவால் இரவு பகல்

தெரியவில்லை அன்றிலிருந்து

இன்று வரை ...

 

- ஜி.கே

http://gkkarai.blogspot.com/

 

Comments

2 comments

2
Natchatra
மிக அருமையான கவிதை தோழா....

இங்கே உங்களின் கவிதைகளை வாசிப்பத்தில் மிக்க மகிழ்ச்சி....

உங்கள் கவிப்பயணம் தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள்...
Siva.M
Vidiyalukaana vaaipu irupathaga theriyavillaye......

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.