(எழுத்தாளர் திரு.நாராயன் அவர்களுடன் ஒரு நேர்காணல்)
தமிழில் : ஏ.எம்.சாலன்

கேரள தலித் எழுத்தாளர் திரு. நாராயன் அவர்கள். மலையாள இலக்கியத்தில் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, ஐந்து நாவல்களும் ஒரு சிறுகதைத் தொகுதியும் படைத்துள்ளார். மலைவாழ் மக்களின் வாழ்க்கையினை, அம்மக்களின் நோக்கில் எழுதும் எழுத்தாளர்கள் - கேரளத்தில் மிகவும் குறைவு. திரு நாராயன் அம்மக்களுக்கு இடையே பிறந்து. வளர்ந்து. ஆளானவர். ஆகவே. அந்தப் பிரிவினரது பண்பாட்டினையும், அவர்களது வாழ்க்கையில் நிகழ்ந்துவரும் மாறுதல்களையும் இவரது படைப்புகளில் காணமுடிகிறது. வளர்ந்து வரும் புதிய நாகரிகம். பழைய மரபின் நல்ல அம்சங்களை விழுங்கி ஏப்பம் விட்டுச் செல்வதையும் திரு. நாராயன் தன் படைப்புகளில் பதிவு செய்யத் தவறவில்லை.

இவரது படைப்புகளைத் தரிசிக்கும் போது, ஆதிவாசி மக்களைப்பற்றி நாம் அறியக் கிடைத்த பல தகவல்கள் 'பொய்’யெனப் புரிய வருகிறது. அது மட்டுமின்றி, மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை. மதவழிபாடு. மதமாற்றம். அதற்கான காரணம். அதன் போர்வையில் நடைபெறும் தில்லுமுல்லுகள் என, ஏராளமான மேல் விவரங்களையும் இலக்கிய உலகிற்கு எடுத்துக்காட்டி வருகிறார் இவர்.

கேள்வி : உங்களுக்கு இலக்கியவாதியாக வேண்டும் என்னும் ஆசை. நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே ஏற்பட்டதா?

பதில் : இல்லை. அப்படி ஏற்படுவதற்கான சூழல் அன்று இல்லை. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது. கொஞ்சம் வாசிப்பதற்குய வசதி கிடைத்தது. எங்கள் பள்ளிக்கூடத்திற்குப் பக்கத் தில் ஒரு நூலகம் இருந்தது. மதிய வேளையில் எனக்கு உண்ண உணவு இல்லாததினால். நான் அந்த நூலகத்திற்குச் செல்வது வழக்கம். இப்படித்தான் கொஞ்சம் புத்தகங்களும். பத்திகைகளும் வாசிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு படித்ததினால் சில விஷயங்கள் எனக்குத் தெய வந்தன:

1. ஆதிவாசி மக்களைப்பற்றி எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் பலருக்கும் அவர்களைப்பற்றியும். அவர்களது வாழ்க்கையைப்பற்றியும் சரியான அறிவு இல்லை.
2. அம்மாதிரி எழுதிவரும் எழுத்தாளர்களின் எழுத்துகளில் 'ஆதிவாசி மக்கள் நாககமற்ற காட்டு மிராண்டிகள்’ என்னும் பிரச்சார நெடி வீசுவதைக் காண முடியும். இதை அவர்கள் திட்டமிட்டே செய்கிறார்கள். எனவே எனக்கு இப்படியொரு எண்ணம் தோன்றியது- அதாவது. ஆதிவாசி மக்கள். நவநாகக மனிதர்களை விட மேலனவர்கள் என்பதை வெளியுலகத்திற்குத் தெயப்படுத்த வேண்டும். என. இதுதான் நான் ஓர் இலக்கியவாதியாக உருவாக முக்கிய காரணம்.

கேள்வி : ஆதிவாசி மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதிய நாவலாசியை பி.வத்சலாவினுடைய 'நெல்’ மலையாற்றூர் ராமகிருஷ்ணன் எழுதிய ‘பொன்னி’ போன்ற நாவல்களிலும் ஆதிவாசி மக்களின் வாழ்க்கை எதார்த்தமாக விவக்கப்படவில்லை என்னும் கருத்து உங்களுக்கு இருப்பதாகக் கூறப்படுகிறதே. உண்மைதானா?

பதில் : அந்த நாவல்கள். ஆதிவாசி மக்களின் வாழ்க்கையை உண்மையான முறையில் பிரதிபலிக்கவில்லை. வத்சலாவின் நாவலில். திரண்டெழும் ஆதிவாசிமக்களுக்குத் தலைமை தாங்குவதற்காக வேண்டி மேல் சாதியைச் சேர்ந்த ஒரு தம்புரானைக்கொண்டு வருகிறார். உண்மையில் அது. அவசியமற்ற ஒன்று.

வய நாட்டிலுள்ள மலைவாழ் மக்களில் ஒரு பிரிவினர் முன்பு எப்போதோ அடிமைப்பட்டு இருந்திருக்கிறார்கள். ஆனால். உண்மையில் அவர்கள் அடிமைகள் அல்ல. கேரள ஆதிவாசி மக்கள் ஒட்டுமொத்தமாக அடிமைகளாக இருந்து வருகிறார்கள் என்ற செய்தியே அப்பட்டமான 'பொய்’யாகும். ஆனால் திருமதி. வத்சலாவின் 'நெல்’ நாவல் இதை நமக்கு உண்மை என. எடுத்துக்காட்டுகிறது. இப்படிச் சொல்வதன் மூலம் ஆதிவாசி மக்களின் வாழ்க்கைப் பிரச்சனை மறைக்கப் படுகிறது. வயநாட்டில் அடிமை முறை இருந்ததே கிடையாது.

கிட்டத்தட்ட மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் 'பொன்னி’ நாவலும் இதே மாதிரிப்பட்டதுதான். மலைவாழ் மக்களின் உண்மையான பிரச்சனை இந்த நாவலிலும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆதிவாசி மக்களுக்கு இடையே அனைத்தையும் தீர்மானிப்பது 'ஊர் மூப்பன்மார்’ என்றே எல்லா எழுத்தாளர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால். உண்மையில் இப்போது ஆதிவாசி மக்களுக்கு இடையே பண்டைய மூப்பன்மார்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கிடையாது.

கேள்வி :தலித் சார்புள்ள எழுத்தாளர்கள் எம். டி. வாசுதேவன் நாயருடைய படைப்புகளை ஒருவித எரிச்சலோடு அல்லவா பார்க்கிறார்கள். ஆனால், நீங்கள் எம். டி. யினுடைய ரசிகர் என்று சொல்கிறீர்களே?

பதில் : அதற்குக் காரணம் இருக்கிறது. எம். டி. வாசுதேவன் நாயர். தான் பிறந்த நாயர்குலப் பெருமையின் வீழ்ச்சியைப்பற்றி மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறார் என்று, அவரது படைப்புகளைப்பற்றிச் சில விமர்சகர்கள் விமர்சிப்பதைக் காண முடிகிறது. நாயர்குலப் பெருமையைப் பற்றியும், அவர்களது வாழ்க்கை முறையினைப் பற்றியும் எனக்கு ஒன்றும் தெரியாது. அதுபோல் எம்.டி.க்கு காட்டில் வாழும் எங்களுடைய வாழ்க்கையைப்பற்றியும் அவ்வளவாகத் தெரிந்திருக்க நியாயம் இல்லை என்றே நினைக்கிறேன். தனக்குத் தெந்த. தன் குலத்தினைப்பற்றிய விஷயங்களை உண்மையாகவும் நேர்மையாக வும் நமக்குப் படைத்துத் தருகிறார் எம்.டி. அவர்கள். ஒருவர் தாம் செய்யும் வேலையை நேர்மையுடன் செய்வதுதானே முக்கியம்?

கேள்வி : உங்களுடைய படைப்புகள் பலவும் மலைவாழ்மக்களின் மொழியில் படைக்கப்பட வில்லை என்று சொல்லப்படுகிறதே. உண்மையா?

பதில் : ஆதிவாசிமக்கள் பேசும் மொழிக்கு சரியான எழுத்து வடிவம் கிடையாது. அவர்கள் பேசும் மொழி, அப்படியே மலையாளத்தில் எழுதப்பட்டால். பிறமக்கள் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருக்கும். நாம் எழுதும்போது எல்லாருக்கும் புரிய வேண்டும் அல்லவா? இதை உணர்ந்து கொண்டுதான் ஆதிவாசி மொழியைக் கொஞ்சம் திருத்தி. புரியும்படியாக மாற்றி எழுதுகிறேன்.

கேள்வி : மலைவாழ்மக்களுக்கு நம் ஆட்சியாளர்களிடமிருந்து ஒரு போதும் நீதி கிடைக்கவில்லை எனச் சொல்லுகிறீர்களே, குறிப்பாக. டாக்டர் அம்பேத்கர் போலும் அவ்வாறு தான் நடந்து கொண்டார் என்றா குறிப்பிடுகிறீர்கள்?

பதில் : மலைவாழ்மக்கள் அல்லது ஆதிவாசிப்பிவினர் என்றால் யார், யார் என்பதை நம் அம்பேத்கர்கூட தெளிவுபடுத்தவில்லை. அவர் ஒருமுறை குறிப்பிட்டதாவது. 'ஆதிவாசிகள் அனுபவித்த துன்பங்கள் ஒன்றும் எனக்கு ஏற்படவில்லை.’ என. தாழ்த்தப்பட்டவர்களை அவர் சட்ட ரீதியாகப் பாதுகாத்தார். அல்லது பாதுகாக்க முயன்றார். தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறினால். முன்பு அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருந்த சலுகைகள் ஒன்றும் கிடைக்காது. ஆனால், ஆதிவாசி மக்களைப்பற்றி அவர் குறிப்பிட்டதாவது, 'அவர்களுக்கு சாதி. மதம் - இவை ஒன்றும் கிடையாது.’ என்று. அவர்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களாகவோ இருக்கலாம். நாம். மேலே கண்ட கருத்து ஆதிவாசிமக்களை இல்லாமல் செய்தவதற் காக வேண்டி உணர்வுபூர்வமாக எழுதிச் சேர்த்தது என்று தான் நான் நினைக்கிறேன். ஆக. வெளியே இருந்து வந்து,ஆதிவாசி மக்களுக்கு நடுவே இறங்கி. பிரச்சாரம் செய்து அவர்கள் வேறு மதத்தில் போய்ச் சேர இது வழி வகுத்தது.

கேள்வி : கேரளத்தைப் பொறுத்தமட்டில் ஆதிவாசி மக்கள் பிவில் மலையரையர்கள்தான் கல்வியிலும் சமூக வளர்ச்சியிலும் முன்னேறி இருக்கிறார்கள். இப்படி அவர்கள் முன்னேற கிருஸ்துவ மதத்திற்கு மதம் மாறியதுதான் காரணம். இல்லையா?

பதில் : இது. அவர்கள் கிருஸ்துவ மதத்தைப் பின்பற்றியதனால் ஏற்பட்டது இல்லை. மலையரையர்கள் என்றாலே 'கிருஸ்துவ மததினர்தான்’ என்ற சித்திரத்தை உருவாக்கியெடுப்பதற்காக வேண்டி மத மாற்றத்தை நடத்தத் தூண்டிவர்களின் ஒரு முயற்சி என்றே இதைக் குறிப்பிட வேண்டும். ஆதிவாசி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளைத் தட்டி எடுத்தவர்களுடைய வாழ்க்கையும், நடைமுறையும் மலையரையர்களைப் போன்றதல்ல. (பெரும்பாலும் மலையரையர்களின் சலுகைகள் அனைத்தையும் கேரளத்தைப் பொறுத்தமட்டில் கிருஸ்துவ மதத்தைத் தழுவிய மலையரையர்களே பெற்று வருகின்றனர். குறிப்பாக, கல்வித்துறையிலும். வேலை வாய்ப்பினைப் பெறுவதிலும். இதைத்தான் திரு. நாராயன் அவர்கள் மேலே குறிப்பிடுகிறார்- மொ.ர்)

கிருஸ்துவ மதத்திற்கு மாறியவர்கள் கிருஸ்துவ நிறுவனங்கள் மூலமாகவும் சங்கம் மூலமாகவும் காடுகளுக்குள் நடத்திய சுரண்டலை தடுத்து நிறுத்த இயலாமல் ஆனபோது, படிப்படியாக சில ஆதிவாசிக் குடும்பங்கள் கிருஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். இப்படி மதம் மாறுவதற்கு மனம் இல்லாத ஆதிவாசிகளுக்குப் பல சலுகைகளும், வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது. கிருஸ்துவ மதத்திற்கு மாறிய ஆதிவாசி மக்களில் பகுதி பேர்களுக்கு மேல் அரசு அலுவலகங்களிலும், பொது நிறுவனங்களிலும் வேலை கிடைத்தது. இந்த சலுகைகள் முழுவதும் 'மலையரையர்கள்’ என்ற லேபிளின் பெயல்தான்.

கேள்வி: 'வருணாசிரமத்திற்கு வெளியே நிற்கும் ஆதிவாசிகளும் தலித்துகளும் இந்துக்கள்தாம்’ என்று சொல்வது அர்த்தமற்ற ஒன்றுதானே?

பதில் : ஆதிவாசி மக்களைப் பொறுத்தமட்டில் அவர்கள். வருணாசிரம தர்மத்திற்கு வெகுதூரத்திற்கு அப்பால் நிற்பவர்களே. இனி, மேல்சாதியினருக்கும் ஆதிவாசி மக்களுக்கும் இடையே காணப்படும் அதே இடைவெளிதான். தலித் மக்களுக்கும் ஆதிவாசி மக்களுக்கும் இடையேயும் காணப்படுகிறது. இந்த இரண்டு பிரிவினரும் தங்களை இந்துக்கள் என்று சொல்வது. ஆதிவாசி மக்களும் தலித் பிரிவினரே என சில புத்திமான்கள் குறிப்பிடுவதற்கு சமமானதே. ஆதிக்கச் சாதியினர் தங்கள் மேலாண்மையை நிலைநிறுத்துவதற்காக வேண்டித்தான், தலித்துகளும் ஆதிவாசி மக்களும் இந்துக்கள்தான்’ என்று சொல்கிறார்கள். அவர்களுடைய கோவில்களுக்குள் நுழையும் போது இனி. அவர்கள் தடுத்து நிறுத்தமாட்டார்கள். அதன் பின்னால் மறைந்து இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா? 'ஓட்டு.’ அப்புறம் 'பணம்’. தலித்துகளிடையிலும் ஆதிவாசி மக்களுக்கிடையிலும் ஏராளமான இந்துக்கள் இருக்கிறார்கள்.

கேள்வி : மதம் மாறாதவர்களைப்பற்றி ஒரு நேர்காணலின் போது நீங்கள் பழைமைவாதிகள் என்று குறிப்பிட்டீர்களே. நினைவிருக்கிறதா? அது பற்றி. . .

பதில் : நான் அவ்வாறு குறிப்பிட்டது மதம்மாறிச் செல்பவர்கள் பழைய ஆசாரங்களை உதறித்தள்ளிவிட்டுப் போகாமல். எங்கள் குல ஆசாரங்களையும் அனுஷ்டானங்களையும் பின்பற்றுபவர்களை மனதில் வைத்துக்கொண்டுதான். ஒரு குலம் என்று சொல்லும்போது. அதற்கு மட்டுமே உரித்தான சில பிரத்தியேகப் பண்பாடு உண்டு. மதம்மாறிச் சென்றவர்களைப் பொறுத்தமட்டில் அவை. மூடப்பழக்க வழக்கமாகத் தோன்றுவது இயல்பே.

கேள்வி : மலைவாழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய முன்னேற்றத்திற்காக வேண்டி என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? அவர்கள், தங்களுடைய பழைய ஆசாரங்களை நோக்கித் திரும்பிச் செல்ல வேண்டும் என்றா? அல்லது நவீனப் பண்பாட்டினைப் பின்பற்றிக் கொண்டவர்கள் தங்களுடைய பழைய வாழ்க்கை முறையை உதறித்தள்ள வேண்டும் என்றா?

பதில்: வளரும் சமூகத்திற்குத் தேவையில்லாத நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் சுமந்து கொண்டு நடக்க வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் அதே வேளையில் பழமையினை நாம் உதறித் தள்ளும் போது, அந்த இடத்தை எவ்வாறு நிரப்பப்போகிறோம் என்பதையும் சற்றுச் சிந்திக்க வேண்டி இருக்கிறது. அதாவது பழையவைகளிலுள்ள நல்ல அம்சங்களை ஒதுக்கித்தள்ளவும் கூடாது; புதியவைகளின் வடிவில் வரும் மோசமானவைகளை சுவீகரிக்கவும் கூடாது. எங்களுடைய குலத்தில் பெண்களைப் பொறுத்த மட்டில் மாதவிடாய் காலங்களில் பெண்களை வீட்டிலிருந்து சற்று தூரத்தில் ஒரு ஓலைப்புரை கட்டி. அதனுள்ளே கொண்டு போய் உட்கார வைத்துவிடுவோம். இது. ஆதிவாசிக் குலத்தைப் பொறுத்தவரையில் ரொம்பக் கறாரான விஷயம். இந்த வேளையில் ஆண்களைப் பார்க்கக்கூட அவர்களை அனுமதிக்க மாட்டோம்.

இங்கே இன்னொரு விஷயத்தைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். பண்டைய காலத்தில் உயர்ந்த சாதியைச் சேர்ந்த பெண்களை சிறு பிராயத்திலேயே (அதாவது 15 அல்லது 16 வயதிலேயே) திருமணம் செய்து கொடுத்துவிடுவார்கள். ஆனால் எங்கள் குலத்தில் பெண்களின் திருமண வயது அன்றும் சரி, இன்றும் சரி 18 ஆகும். இப்படி 18 வயதில்தான் திருமணம் செய்துவைக்க வேண்டுமென இப்போது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

கேள்வி : வாழ்க்கையில் பல விஷயங்களில் மலைவாழ் மக்களும் தலித் மக்களும் ஒரே மாதியான பிரச்சனைகளையே சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். என்றாலும்கூட. கேரளத்தில் அவர்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்படவில்லையே. அது ஏன்?

பதில் : இன்றைய தலித்துகள் கேரளத்தில் ஒரு காலத்தில் அடிமைகளாக இருந்தவர்களே! ஆனால். ஆதிவாசி மக்கள் இதுவரையில் ஒருவருக்கும் அடிமைகளாக இருந்தவர்களல்ல. அதனால்தான் இந்த இரண்டு பிரிவினரும் ஒன்று சேர வாய்ப்பு ஏற்படவில்லை.

இந்த வேளையில் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டியுள்ளது. நம் ஜவஹர்லால் நேரு அவர்கள் காலத்தில் ஆதிவாசிமக்களுக்கென ஒரு தனித்துறை அமைக்கப்படவில்லை. ஆனால் தாழ்த்தப்பட்டவர்களுக்காக வேண்டி ஒரு தனித்துறை அமைத்து இயங்கிக் கொண்டிருந்தது. அதற்கென ஒரு மந்திரியும் இருந்துவந்தார். அவரிடம் 'நீங்களே ஆதிவாசி மக்கள் நலனையும் கவனித்துக் கொள்ளுங்கள்’ என ஒப்படைக்கப்பட்டிருந்தது.

கேள்வி : அதற்கு தலித்துகள் என்ன செய்ய முடியும்?

பதில் : கேரளத்தைப் பொறுத்தமட்டில் இப்போது தலித்துகளில் பலரும் மேல்சாதியைப் போன்று உயர்ந்தவர்களே. ஆதிவாசி மக்களும் நாமும் ஒரே பிரிவினர்தாம் அல்லது சமமானவர்கள்தாம் என அவர்கள் ஒரு போதும் கருதியது கிடையாது. உண்மை என்னவெனில், இன்று தலித்துகளுக்கும்கூட ஒரு கீழ்ச்சாதியினர் தேவைப்படுகிறார்கள் அல்லது தேவையாக இருக்கிறது. இங்கே மேல்சாதியிலுள்ள ஒரு பிராமணனுக்கும் தலித்துக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைவிட ஆதிவாசி மக்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே காணப்படும் இடைவெளி அதிகம் என்றே சொல்லலாம்.

கேள்வி : நீங்கள் 'தாராளமயமாக்கல்’ கொள்கையை ஒரு முறை எதிர்த்துப் பேசி இருக்கிறீர்கள். உண்மையில் அதில் வரவேற்கத்தக்க அம்சங்களும் இருக்கின்றனவல்லவா? குறிப்பாக அது. சாதி வேலிகளைத் தகர்த்து எறிகிறதில்லையா?

பதில்: அந்தக் கருத்தை நான் அங்கிகரிக்கமாட்டேன். காரணம், நம் சொத்து முழுவதையும் சுரண்டிக் கொண்டு போவதுதான் அதன் நோக்கம். அது போகிற போக்கில் ஒருவருக்கும் தேவையற்ற ஆதிவாசிகள் கூட இனி தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய சவால்களை சந்திக்கப்போவது உறுதி. இதன் பேஎஇல் நம் அரசாங்கம் ஆதிவாசி குலத்தை இல்லாமலாக்கினால்கூட நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

கேள்வி: உங்களுடைய ‘வன்னலா’ நாவலின் முன்னுரையில் கீழ்க்கண்டவாறு எழுதியிருப்பதைக்காண நேர்ந்தது.
நெல்மணிக்கும் பதருக்கும் இடையேயுள்ளது தான் 'வன்னலா’ (அதாவது பிஞ்சில் பழுத்தது). அதாவது. ஆதிவாசிகள் இன்றைய சமூகத்தில் 'வன்னலா; போன்றவர்கள் என்றா குறிப்பிடுகிறீர்கள்?

பதில் : நம் நாட்டில் தீட்டப்பட்ட எந்தத்திட்டமும் வளர்ச்சியும் அவர்களை வந்து அடையாததினால்தான் ஆதிவாசிகள் அப்படியாகிப் போனார்கள்.

கேள்வி : இந்துப் பண்பாட்டினை எடுத்துப் பரிசோதிக்கும் போது. அதில் ஆதிவாசிமக்கள்தான் இந்த மண்ணின் உண்மையான மைந்தர்கள் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டதா?

பதில்: வரலாற்று ரீதியாக நாம் சற்றுப்பின்னால் சென்று பார்த்தால் தெரியும். இந்த மண்ணின் உண்மையான வாரிசுகள் ஆதிவாசி மக்கள் என்று.

கேள்வி : நீங்கள் 'வன்னலா’ எழுதுவதற்கான காரணம் என்ன?

பதில் : நாம் நம்முடைய பழையமரபுகளைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால் இன்றைய வயதான மனிதர்களிடம் இருந்துதான் அவற்றைக் கற்றுக்கொள்ள முடியும். இன்று அவர்களுடைய எண்ணிக்கை மிகவும் குறைவு. நம் புதிய தலைமுறையினருக்கு பழைய காரியங்களைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கிடையாது. ஆனால். நம் பழைய மரபுகளுக்கும் பாரம்பயத்திற்கும் முக்கியத்துவம் உண்டு என்ற சிந்தனைதான் என்னை இந்த நாவல் எழுதத் தூண்டியது.

கேள்வி : உங்களுடைய 'கொச்சு அரையத்தி’என்ற நாவலில் நவீனக் கல்வியின் மூலம் மலைவாழ் மக்கள் விமோசனம் அடையமுடியும் எனக்குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதே வேளையில் இந்த நாவலில் மலைவாழ்மக்கள் ஒன்றுதிரண்டு சங்கம் அமைத்துப் போராடினால் மட்டுமே விமோசனம் கிடைக்கும் என எண்ண வைக்கிறது. அது சரிதானா?

பதில் : ஒன்றாக அணிதிரண்டு நின்றால். வெளியே இருந்து ஏற்படும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த முடியும். ஆனால். நாம் இந்த இடத்தில் ஒன்றை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பல மலைகளிலும் அதன் அடிவாரங்களிலுமாக ஆங்காங்கே போராடிக் கொண்டிருப்பவர்கள் ஒன்று சேர்வது என்பது அவ்வளவு எளிதல்லõ சாலைமறியல் நடத்தவோ. அல்லது அரசு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தித் தங்கள் நோக்கத்தை அடைவதற்குய ஆள்பலமோ அவர்களுக்குக் கிடையாது. எங்கள் ஆதிவாசிமக்களில் சில பிவினருக்குச் சாதிச்சங்கங்கள் இருக்கின்றன. ஒன்று சேர்ந்து ஒரு கருணை மனுவைக் கொடுப்பதைத் தவிர அவர்களால் வேறு என்ன செய்ய இயலும்? 'மலையரையர் மகாசபை’ முன்பு பல நல்ல காயங்கள் செய்திருக்கிறார்கள். அதிலுள்ள மிக முக்கிய அம்சம் என்னவென்றால். 'ஆதிவாசிகள் அனைவரும் அவரவர் பிள்ளைகளைக் கண்டிப்பாக பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிப் படிக்கச் செய்ய வேண்டும்’ என்பதே.

கேள்வி : உங்களுடைய நாவலில் ஆதிவாசி மக்களுடைய கோவில்களில் ஒரு நம்பூதி பிராமணரை பூஜாரியாகப் படைத்ததன் நோக்கம் என்ன?

பதில் : நம் நாட்டில் நம்பூதி பிராமணர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் தெய்வநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு சுரண்டல் நடத்துகிறார்கள். அவர்கள் ஆதிக்கச் சாதியினரின் பிரதிநிதிகள் மட்டுமல்ல! 'ஒரு பிராமணர்தான் கோவில்களில் பூஜைக் கர்மங்கள் நடத்த வேண்டும்’ என்ற எண்ணத்தை ஆதிவாசிமக்களுக்கு இடையிலும் கூட அவர்கள் வளர்த்தெடுத்திருக்கிறார்கள். ஆதிவாசிமக்களுக்கு இடையே கும்பாபிஷேகமும். பிரதிஷ்டையும் நடத்தும்போது நம்பூதிரிக்கு தட்சிணையும். 'வழிபாடு’ என்ற பேரில் காசும் கிடைத்தது. அவர்களுடைய காணிக்கைப்பெட்டி நிரம்புகிறது. பக்தர்கள் அனைவரும் வந்து வணங்கி விட்டுப் போவது வரையிலும். கோவிலைத் திறந்து வைத்து வெகு நேரம் வரையில் காத்திருந்தால் எந்த நம்பூதிக்கு மரியாதை இருக்கும்? மரியாதை போய்விடும்.

'நான் கோவில் கதவை மூடிவிடுவதற்குள் நீ போட வேண்டிய காணிக்கையைக் கொண்டு வந்து போட்டுவிட்டுப் போக வேண்டும்.’ ஆக. ஆதிவாசி மக்கள் தங்கள் கையிலுள்ள படையலை சாமிக்குச் சமர்ப்பிப்பதற்காக வேண்டி செல்லும்போது. அங்கே உண்டியலைக் காண முடியாது. அதைப் பெறுவதற்கு பூசாரியும் அங்கே இருக்கமாட்டார். அவர், தன்னுடைய சௌகர்யத்திற்கு ஏற்ப கோவில் கதவை இழுத்து மூடிவிட்டுச் சென்றுவிடுவார். பக்தியோடு சென்றவர்கள், தங்கள் படையலுடன் மனவேதனையோடு வீடு திரும்புவார்கள். அதிகமாக வருமானம் இல்லாத பல ஆதிவாசிக் கோவில்களில் ஆதிவாசி மக்களில் ஒருவரே, பூசாரியாக இருந்து பூசைக் கர்மங்களை நடத்திக்கொள்வார்.

மொத்தத்தில் இந்துப்பண்பாட்டிற்கு ஆதிவாசிமக்களை தன் அரவணைப்பிற்குள் கொண்டு வர முடிந்திருக்கிறது.

கோவில் கட்டுவது கூட. தேவ பிரஸ்னத்தின் விதிப்படிதான் கட்டுவார்கள். என்னென்ன செய்தால் எந்த இடத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்ற சிந்தனை அவர்களைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது. 'கோவில்கட்டி. பகவதியை அதனுள் குடியமர்த்தவில்லையெனில் உங்களுக்கு ஆபத்து வந்து சேரும்’ என. பயமுறுத்தப்படுவதோடு, அதற்குப் பரிகாரம் கிடைக்க வேண்டுமானால், வழிபாடு நடத்த வேண்டும். அதுவும் நம்பூதிரி பிராமணர்களை வைத்துத்தான் நடத்த வேண்டும், இவ்வாறு நம்பூதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். இம்மாதிரி பிரச்சாரம் செய்வதற்குக் காரணம் என்னவெனில். அவர்கள் மட்டத்திற்கு வேறு எவராவது உயர்ந்துவிட்டால். அவர்களைத் தூக்கியெறிந்துவிட்டு அப்படி உயருபவர்களைத் தேடி ஆதிவாசிமக்கள் போய்விடுவார்கள் என்ற பயமே.

நன்றி. கலாகௌமுதி. ஜூன். 25. 2006.

Pin It