நிரல்படவும் நேரடியாகவும் கதை சொல்லும் எதார்த்தவாத நாவல்களின் இயல்பினின்றும் மாறுபட்டு வாசக இடைவெளி களுக்கும். மௌனங்களுக்கும் இடம்தரும் உத்தியில் புனைவுற்றுள்ள 'மீன்காரத்தெரு’ நாவல். பழநிக்கு அருகிலுள்ள இஸ்லாமியர் வாழும் கிராமம் ஒன்றில் அவர்களுக்கிடையிலான சமூக. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் இன்னபிற சாதியினரோடு கொண்டுள்ள உறவுகளையும் குறித்து மிகவும் அழுத்தமான பதிவுகளை உருவாக்க முனைகிறது.

தனிமனிதனின் வாழ்க்கையை மட்டும் முன்வைக்காமல் தெருவில் வசிக்கும் வெவ்வேறு நபர்களினூடாக உருவாக்கப் பட்டிருக்கும் முழுமையான சித்திரத்தின் ஊடும் பாவுமான ஒவ்வொரு பாத்திரமும் முடிவின்றி நீளும் விவாதங்களின் பிரதிநிதிகளாகி நிற்கிறார்கள்.

இவர்களின் மனவோட்டங்களில் ஆழ்ந்து சஞ்சத்திருக்கும் கீரனூர் ஜாகிர் ராஜாவிடமிருந்து. குறிப்பாக சலீம் குறித்த ஆமினாவின் அகவுணர்வுகளில் வாசிப்பின் உன்னதமான தருணங்கள் வாய்த்துள்ளன. பங்களாத் தெருவில் விலை போகும் சராச மீன்காதான் என்றபோதிலும் பால்ய காலத்திலேயே ஏற்பட்டுவிட்ட அளவு கடந்த ஈர்ப்பின் காரணமாகவே. பூரண சம்மதத்துடன் உடலையும் மனதையும் ஒருசேர சலீமிடம் ஒப்புக் கொடுக்கிறாள் ஆமினா. இறுதி முடிவு என்னவாகும் என்பதும் கூட அவள் அறியாததல்ல. 'அய்யோ கெடுத்துட்டான்’ என்று முறையிடும் தொனியின்றி இயலாமையும் ஆற்றாமையும் பொங்கிப் பிரவகிக்கும் இந்தப் பெண் கதாபாத்திரம் நுட்பமான உணர்விழைகளால் நெய்யப்பட்டிருக்கிறது.

முன்பொரு காலம் பாலியல் பலிகடாவாக்கப்பட்ட ரமீஜாவே இப்போது பங்களாத் தெருவில் பசிதீர்க்க ஆள்தேடி அலையும் முரணும் அது முன் வைக்கும் வாழ்வின் மீதான விசாரணையும் அவ்வளவு எளிதாக புறந்தள்ளக் கூடியதல்ல.

இன்னும். எவ்வித அரசியல் புதலுமின்றி வர்க்க வேறுபாடு குறித்த கரட்டுத்தன்மை கொண்ட பொதுப்புத்தியுடன் சந்தர்ப்பம் வாய்க்கும் பொழுதெல்லாம் பங்களாத் தெருக்காரர்களோடு மோதிக்கொண்டிருக்கும் நைனாவும். வெவ்வேறு பெண்களுடன் தொடர்ந்து கொண்டேயிருக்கும் அவன் உறவுகளும். கட்சியின் இழிவானதொரு அடிநிலைத் தொண்டனாக வாழ்வதில் சுகம் காணும் காசிமும் நாவலை விந்து பரந்த தளத்துக்கு இட்டுச் செல்கின்றனர்.

காசிமின் அரசியல் வெகுளிக் கூத்துக்களை எழுதும் கீரனூர் ஜாகிர் ராஜாவுக்கு மருதமுத்து என்ற பள்ளி ஆசியர் வாயிலாக. தீவிரமும் போர்க்குணமும் கொண்ட திராவிட இயக்கத்தின் தொடக்க காலகட்டத்தை எழுதுகின்ற நேர்மையும் இரண்டையும் பகுத்தறிந்து வேறுபாடு காணும் அரசியல் பிரக்ஞையும் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் மத்திய கால கட்டத்தில் மௌனமாக எழுந்தடங்கிய நாவிதர் சமூகத்தின் விடுதலையுணர்வையும் அதன் குறியீடான சலூனையும் கூட இந்நாவல் சேர்த்தணைத்துக்கொண்டு ஒட்டுமொத்த கிராமத்தின் சகல விதமான ஏற்றத் தாழ்வுகள் மீதும் வினா எழுப்பிச் செல்கிறது. இதில் பங்களாத் தெருவில் வாழ்ந்து கெட்டு மீன்காரத் தெருக்கு வந்து சேரும் குடும்பமும் கூட உள்ளடக்கம்.

இஸ்லாமியர் என்றாலே வணிக சமூகத்தினர். வெளிநாடு சென்று பொருளீட்டி செழிப்புடன் வாழ்பவர்கள் என்னும் பொதுப் புத்திக்கு மாறாக அங்கேயும் தலித்துகள் உள்ளிட்ட தெளிவான வேறுபாடுகள் உண்டு என்பதை கீரனூர் ஜாகிர்ராஜா இந்த நாவலில் வர்க்க சிந்தனையுடன் நிறுவுகிறார். அவர் தனது முன்னுரையில் அழுத்தம் கொடுத்த இவ்விஷயங்களை வெற்றிகரமாக நிரூபணம் செய்துள்ள போதிலும். பெரும்புதினமாகி இருக்க வேண்டிய மீன்காரத் தெருவை சுருங்கத் தந்திருப்பது வாசக மனங்களின் மேல் சுமத்தியிருக்கிற பாரமாகவும் கருதத் தோன்றுகிறது.

ஜாகிர் ராஜாவின் எல்லாத் துகள்களையும் கவ்விக்கொள்கிற காந்தப் பார்வைக்கும் இயல்பாகி சாத்தியப்படுத்தும்

மொழியாளுமைக்கும் இந்தக் கதை ஒரு சிறு குத்தூசி மட்டும்தான். இஸ்லாமிய சமூகத்தில் சக சகோதரர்கள் மேல் தலித் முத்திரை உண்டு என்னும் அவமானகரமான உண்மையை வெளிப்படையாகப் பதிவு செய்தமைக்காக இஸ்லாம் கறை பட்டுவிட்டதென வெகுண்டு அவர்மேல் *பத்வா பிறப்பிக்கப்படவில்லை என்பது நமக்கு ஆறுதலான செய்தி.
Pin It