நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்ட பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு சட்டத்தின் பின்னால் மிகப்பெரும் சூழ்ச்சியை மறைத்து வைத்து, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னாடுகளை பேராபத்தில் தள்ளியிருக்கிறது மோடி அரசு. இந்தி பேசும் வட இந்திய மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதிகளை தென்னிந்திய நாடாளுமன்ற தொகுதிகளை விட பன்மடங்கு அதிகரித்து தென்னாட்டு மக்களுக்கு துரோகத்தை பரிசளிக்கப் போகிறது பாஜக அரசாங்கம்.

மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் மக்களவையில் நிறைவேறியிருக்கிறது. இதில் பெண்களுக்கான மக்களவை இருக்கையில் 33% இடஒதுக்கீட்டை, ஆறு ஆண்டுகள் கடந்து 2029-ம் ஆண்டு நிறைவேற்றுவதாக மோடி அறிவித்திருக்கிறார். பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்பது வருடங்கள் கடந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில், மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவோம் என்று கூறியிருக்கிறார்கள். இதில்தான் ‘மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை’ என்னும் தூண்டிலைப் போட்டு தமிழ்நாடு உள்ளிட்ட தென்னாடுகளின் குரல்வளைகளை நெருக்கும் வேலையை செய்திருக்கிறார்கள்.modi in new parliament 2தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய தென்னாடுகள் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டைப் பின்பற்றி இந்தியாவின் வளர்ச்சிக்கு அதிக பங்கினை அளித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இப்படி சரியான முறையில் நடந்து கொண்டதற்காகவே மோடி அரசாங்கம் தண்டனையை தருகிறது. ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள தொகுதிகளையும் மக்கள் தொகையின் அடிப்படையில் பிரித்தால், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை முறையாகப் பின்பற்றாத இந்தி பேசும் வடமாநிலங்கள் இப்போதுள்ள தொகுதி எண்ணிக்கையிலிருந்து இரு மடங்கிற்கும் அதிகமான தொகுதிகளைப் பெறும். இதனால் தென்னாடுகள் மிகக் குறைவான தொகுதிகளையும், நிதி ஒதுக்கீடுகளையும் பெறும் சூழல் ஏற்படும். மேலும், நம்முடைய பிரதிநிதித்துவம் இல்லாமலேயே அனைத்து சட்டத்திருத்தங்களும், கொள்கை முடிவுகளும் எடுக்கப்படும்.Indian States by TFRமக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் :

புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்படும் போதே இப்போதுள்ள 552 இருக்கைகளுக்கு பதிலாக 888 நாடாளுமன்ற இருக்கைகள் அமைக்கப்பட்டன. இதற்கான பலத்த சர்ச்சைகள் கிளம்பினாலும், இந்தத் தொகுதிகளை அதிகப்படுத்தும் நோக்கத்தை தேசிய கட்சிகள் எதுவும் வலிமையாக கேள்வியெழுப்பவில்லை. மாநிலக் கட்சிகள் ஆளும் தென்பகுதியே குறிப்பாக தமிழ்நாடே எதிர்ப்பை வலுவாகப் பதிவு செய்தது.

நாடாளுமன்றத் தொகுதிகள் மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிடப்பட்டால் தென்னிந்தியா முழுதும் இப்போதுள்ள 132 தொகுதியிலிருந்து 167 தொகுதிகளாக மட்டுமே மாறும். அதாவது சுமார் 30 தொகுதிகள் அளவே அதிகரிக்கும். ஆனால் வட இந்தியாவில் இந்தி பேசும் மாநிலங்களில் மட்டும் இப்போதுள்ள 244 தொகுதியிலிருந்து 439 தொகுதிகளாக கிட்டத்தட்ட இரு மடங்கு அளவிற்கு கூடுதலாக பெறும். குறிப்பாக உத்திரப்பிரதேசத்தின் இருக்கைகள் 80-லிருந்து 143 அளவிலும், ராஜஸ்தானில் இப்போதுள்ள 25 லிருந்து 50 அளவிலும், மத்தியப் பிரதேசத்தில் 29 லிருந்து 52 அளவிலும், பீகாரில் 40 லிருந்து 79 அளவிலும் என இரட்டை மடங்கு இருக்கைகளைப் பெறும். இதே வேளையில் தென்னாடுகளில் குறிப்பாக தமிழ்நாடு 39 லிருந்து 49 அளவிற்கும், மற்ற தென்மாநிலங்களும் மிகவும் குறைந்த அளவிற்கே சுமார் 30 தொகுதிகள் அளவிற்கே அதிகரிப்பைப் பெறும். ஆக மொத்தத்தில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டைப் பின்பற்றாத மாநிலங்கள் கையில் வெண்ணெயும், பின்பற்றி நடந்த தென்னாடுகளுக்கு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் கொடுமையும் அரங்கேறும். probable seats in lok sabhaவடமாநிலங்கள்

இந்திய நாடாளுமன்றத்திற்குரிய தொகுதிகள் 1971-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பிரிக்கப்பட்டன. இதனால் தமிழ்நாட்டிற்கு 39 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 1976-க்குப் பிறகு இந்தப் பிரிக்கப்பட்ட நிலையே தொடரும் என சட்டத்திருத்தம் உருவாக்கப்பட்டது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். அவ்வாறு 2011-ம் ஆண்டும் நடத்தப்பட்டது. அதுவரை 1971 கணக்கெடுப்பின்படி நிதிப் பங்கீடே அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் தொடர்ந்த நிலையில், 2011-ம் ஆண்டில்தான் இந்நிலை மாறியது. 2011-ம் ஆண்டில் இருந்த மக்கள் தொகை அளவிற்கேற்ப நிதிப் பங்கீடு ஒதுக்குவது துவங்கியது. இதனால் தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இன்றுவரை நிதிப் பரிமாற்றம் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாடு உள்ளிட்ட தென்னாடுகள் இந்திய ஒன்றியத்திற்கு 1 ரூபாய் அளித்தால், திரும்ப 40 பைசாவே கிடைப்பதும், உத்திரப் பிரதேசம் போன்ற இந்தி பேசும் மாநிலங்கள் 1 ரூபாய் கொடுத்தால் திரும்ப 2 ரூபாய் பெறுவதும் தொடர்கிறது. தென்னாட்டைச் சுரண்டி வடநாட்டை கொழுக்க வைக்கும் ஏற்பாடு 2011-லிருந்து இந்திய ஒன்றிய அரசினால் ஆரம்பிக்கப்பட்டது.

மாநிலம்

தற்போதைய மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை

உயர்த்தப்படப்போகும் எண்ணிக்கை

விழுக்காடு

உத்திர பிரதேசம்

80

143

79

ராஜஸ்தான்

25

50

100%

ஹரியானா

10

18

80%

உத்தரகண்ட்

5

7

40%

இமாச்சல பிரதேசம்

4

4

0%

குஜராத்

26

43

65%

மத்திய பிரதேசம்

29

52

79%

சட்டிஸ்கர்

11

19

72%

ஜார்கண்ட்

14

24

71%

பீஹார்

40

79

98%

மொத்தம்

244

439

79.9%

தென் மாநிலங்கள்

மாநிலம்

தற்போதைய மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை

உயர்த்தப்படப்போகும் எண்ணிக்கை

விழுக்காடு

தமிழ்நாடு

39

49

26%

கேரளா

20

20

0%

கர்நாடகா

28

41

46%

ஆந்திரா /தெலங்கானா

42

54

29%

புதுச்சேரி

1

1

0%

கோவா

2

2

0%

மொத்தம்

132

167

24.3%

பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். பெண்கள் வேலைக்கு செல்வதால் ஆண்களுக்கு வேலை கிடைப்பதில்லை எனப் பல்வேறு வகையில் பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கப் பேசியவர்களே பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைமைகள். ஆனால் தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் திடீரென்று பெண்களின் முன்னேற்றம் மீதான அக்கறை பாஜகவிற்கு ஏற்பட்டிருப்பதை உற்றுக் கவனிக்கும் போதுதான் அவர்கள் போடும் அடிப்படைக் கணக்கே தெரிய வருகிறது. இந்த மகளிர் இடஒதுக்கீட்டினை வாய்ப்பாகக் கொண்டு நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்க இருக்கும் ஆபத்தும் புலனாகிறது.

இந்தியாவில் சரிபாதி இருக்கும் பெண்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்காகவும், மணிப்பூரில் நடந்த பெண்கள் மீதான வன்புணர்வு கொடுமைகள் மோடியின் பிம்பத்தை பெண்களின் மத்தியில் நிலை நிறுத்துவதற்காகவும் நகர்த்தப்பட்ட நகர்வாகவே பெண்களுக்கான இந்த இட ஒதுக்கீடை பலரும் பார்க்கிறார்கள். மோடி அரசு இந்த இடஒதுக்கீடு பட்டியலின மக்களுக்கான தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூற, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கான இடஒதுக்கீடு, இஸ்லாமிய பெண்களுக்கான இடஒதுக்கீடுகளைப் பற்றி பேசப்படவில்லை என விவாதங்களை இதற்குள் அடக்கியே விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் விட, தென்னாடுகளை வஞ்சிக்கும் ‘மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை’ செய்யும் நயவஞ்சகத் திட்டத்தைப் பற்றி பேசவேயில்லை. திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.

இந்தி பேசும் மாநிலங்களின் தொகுதிகள் அதிகமானால் நிதிப் பங்களிப்பும் அதிகமாகும். நாம் இந்திய ஒன்றியத்திற்கு அளிக்கும் நிதிப்பங்களிப்பு கூடும், மாறாக நமக்கு திரும்ப கிடைக்கும் நிதி அளவீடு குறையும். நம்மைச் சுரண்டி இந்தி பேசும் வட மாநிலங்களை வாழ வைப்பார்கள். அது மட்டுமில்லாது பெரும்பான்மை இல்லாததால் இந்திய ஒன்றிய அரசு எடுக்கும் கொள்கை முடிவுகள் எதுவும் நாம் வாக்களிக்காத நிலையிலே நிறைவேறும். நமது குரல் முடங்கும். தென்னாட்டு மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக, மூன்றாம்தர குடிகளாக மாற்றப்படுவார்கள்.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு, 2026 மக்கள் தொகைக் கணக்கீட்டின்படிதான் கொண்டு வர வேண்டுமா? 1971 மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி இந்தி பேசாத வட மாநிலங்களும், இந்தி பேசும் மாநிலங்களும் சற்றேறக்குறைய ஒரே மக்கள் விதிதத்தில் இருந்தது. அந்தக் கணக்கின்படி, மகளிருக்கான இட ஒதுக்கீடு செய்வதை விடுத்து 2026 தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு நடைமுறைப்படுத்துவோம் என்று சொல்வது மகளிரை மட்டுமல்ல, தென்னாடுகளை மட்டுப்படுத்துவதன் ஏற்பாடன்றி வேறொன்றுமில்லை. இந்திய ஒன்றியத்தை இந்து தேசமாக மட்டுமல்ல, இந்தி தேசமாக மாற்றும் ஏற்பாடே இந்த மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தின் உண்மையான நோக்கமாக இருக்கிறது.

தென்னிந்தியாவில் இப்போதிருக்கும் 25% பிரதிநிதித்துவத்துவத்தை இனி 19% – ஆக மாற்றப்படும் அபாயத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த அரசியல் சூழலைத் தான் இலங்கையில் உருவாக்கினார்கள். மலையகத் தமிழர்களின் பங்களிப்பால் தமிழர்களுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் கணிசமான இடங்கள் இருந்தது. சிங்கள இனவெறி அரசு மலையகத் தமிழர்களின் ஓட்டுரிமையைப் பறித்து, தமிழர்களின் நாடாளுமன்ற இடங்களை குறைத்தது. இதனால் பெரும்பான்மையின்றி தமிழர் நலன் சார்ந்த சட்டங்கள் இயற்ற முடியாமல் தமிழினம் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை தமிழர்களின் உரிமை சார்ந்த எந்த சட்டத்தையும் நிறைவேற்ற இயலவில்லை. இனவுரிமை மறுக்கப்பட்டு இரண்டாம்தர குடிமக்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இதே போன்ற சூழலையே இனி தமிழ்நாடு உள்ளிட்ட தென்னாடுகள் சந்திக்கும் நிலையை மோடி அரசு உருவாக்கி இருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் பாஜக சர்வாதிகார ஆட்சியே நமக்கு நிரந்தரமாகும்.

மே 17 இயக்கம் கடந்த ஒரு வருடமாக இந்த ‘நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை’ அநீதியைப் பற்றி புள்ளி விவரங்களுடன் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். 1971-ல் பிரிக்கப்பட்ட பழைய விகிதப்படியே அனைத்து மாநிலங்களுக்கும் நிதிப்பங்களிப்பும், தொகுதிப் பங்களிப்பும் அமைய வேண்டும். இந்திய ஒன்றியத்தின் ஆட்சியை எந்த கட்சிகள் பிடித்தாலும் தமிழ்நாட்டின் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் கூடாது. தமிழர்கள் விழிப்புடன் செயல்படுவோம். பாஜகவின் தமிழ்நாட்டுத் தலைமைகளை நோக்கி கேள்வியெழுப்புவோம். மகளிர் இடஒதுக்கீடு என்னும் மாயையைக் கொண்டு நம்மை இரண்டாம் தரமல்ல, மூன்றாம் தர குடிமக்களாக்கும் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த கட்சி, இயக்கம் கடந்து ஒன்றிணைந்து செயலாற்ற தமிழ்நாடு அணியமாக வேண்டிய அவசியமுள்ளது.

- மே பதினேழு இயக்கம்

Pin It