hraja speech 640//கல்விக் கொள்கை: சூர்யாவின் பேச்சு வன்முறையைத் தூண்டுகிறது- எச்.ராஜா //

நவம்பர் 30, 2014 - மோடியையோ, மத்திய அரசையோ அல்லது ராஜ்நாத் சிங் போன்ற பாஜக தலைவர்களையோ வைகோ விமர்சித்தால் அவர் செல்லும் இடங்களில் பேசிவிட்டு பாதுகாப்பாக திரும்ப முடியாது என்று ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவரை பகிரங்கமாக தாக்குவோம் என்று கூறியது வன்முறை இல்லையா?

15, டிசம்பர் 2017 - காரைக்குடியில் நடந்த பா.ஜ.க கூட்டத்தில் 'திருமாவளவனை ரவுடின்னு எல்லாரும் சொல்றாங்க.. வேட்டியை மடிச்சுக் கட்டினா நானும் ரவுடிதான்..' என்று வெட்டித்தனமாக பேசி வன்முறையைத் தூண்டியது யார்?

மார்ச் 6, 2018 - திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டபோது, இதேபோன்று தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று பதிவிட்டு, தமிழகத்தில் வன்முறையைத் தூண்டி விட்டுவிட்டு, பின்னர் நான் பதிவு போடவில்லை, எனது அட்மின் பதிவு செய்துவிட்டார் என்று கோழைத்தனமாக பயந்து போய் நடுங்கினீர்களே அந்த வன்முறைப் பேச்சு ஞாபகமிருக்கிறதா?

செப்டம்பர் 15, 2018 : 'ஹைகோர்ட்டாவது எச் ராஜாவாவது(******). யூனிபார்ம கழட்டிப் போட்டுட்டு நீங்கலாம் வீட்டுக்கு போயிருக்கனும்' என்று பேசி ஒட்டு மொத்த இந்திய ஜனநாயகத்தையும், காவல் துறையினரையும் கேவலப்படுத்தினீர்கள்

'கிறிஸ்தவர்கள்கிட்டயும் முஸிலிம்ஸ்கிட்டயும் லஞ்சம் வாங்குறீங்களேயா நான் தர்றேன் லஞ்சம். ஹிந்து விரோதி நீங்க. புழல் சிறைல முஸ்லீம் பயங்கரவாதிகளை 19 கலர் டிவி வெக்கமில்லையா போலீஸ்காரங்களுக்கு. ஹைகோர்ட்டாவது மண்ணாங்கட்டியாவது'

என்று கோர்ட்டையும் அவமரியாதையாகப் பேசி, மத உணர்வுகளைத் தூண்டி தமிழகத்தில் மதக்கலவரத்திற்கான வன்முறையைப் பரப்ப திட்டமிட்டீர்கள்.

செப்டம்பர் 18, 2018 - திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் ,

ஸ்டெர்லெட்க்கு எதிராக நடந்த போராட்டத்தை , சுத்தமான காற்று கேட்டு மக்கள் நடத்திய போராட்டத்தை கொச்சைப்படுத்தி,

"இடதுசாரிகள், பிரிவினைவாதிகள், நக்சல்கள் உள்ளிட்டோர்தான் காரணம் . இதேபோல் 8 வழிச்சாலை திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற விடாமல் இந்த அமைப்பினர் மக்களை தூண்டி விட்டு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்" என்றும்,

மெரினாவில் நடந்த மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் புரட்சி அல்ல என்றும், அங்கு சேலை கட்டிய பெண்களுக்கு அனுமதி இருக்கவில்லை எனவும் மது, மாது, மாட்டுக்கறி ஆறாக ஒடியது எனவும், போராட்டத்தை கொச்சைப்படுத்தி, ஒரு வன்முறைக் கலவரத்தை தூண்டினீர்களே?

நவம்பர் 16, 2018 - ''ஈவேரா பற்றியும் மணியம்மை பற்றியும் படிக்கும் குழந்தைகள் ஒழுக்கமாக இருக்குமா? யோசிக்க வேண்டாமா? என்று அரியலூர் மாவட்டம் பிரகதீஸ்வரர் கோயிலுக்குச் சென்று கோயில் வளாகத்தில் வைத்து இப்படி கொச்சையாகப் பேசியது வன்முறையைத் தூண்டவில்லையா?

புதிய இந்தியா என்கிற பெயரில் நீங்கள் செய்கின்ற படுகொலைகள், கலவரம் செய்யத் தூண்டிய விஷப் பேச்சுக்கள் தான் வன்முறைகளைத் தூண்டுகிறது, மக்களை மதங்களின் சாதிகளின் பெயரில் பிரிக்கிறது.

ஒருவேளை சூர்யா பேச்சால் தமிழ் மக்கள் விழிந்தெழுந்து பாஜகவினரை, தமிழ்நாட்டை விட்டே நிரந்தரமாக விரட்ட வேண்டிய சூழ்நிலைகள் வரலாம் என்று நீங்கள் பயப்படுகின்றீர்கள் எனில் இது இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுள் ஒன்று.

ஆம் புதிய கல்விக் கொள்கையைப் பற்றி சூர்யா பேசியது இந்தியாவின் வளர்ச்சிக்கான வன்முறை.

- ரசிகவ் ஞானியார்

Pin It