swamiyar 350ஒரு மதம் சார்ந்த மடத்தின் தலைவருக்கு, அவர் செய்த குற்றத்திற்காகத் தண்டனை கொடுக்கப்பட்டதை எதிர்த்து, இன்று ஹரியானாவும், பஞ்சாபும் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்திலும், ஜெயலலிதா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டபோது இப்படி ஒரு வன்முறை நடந்தேறியது.

இங்கு அரசியலின் பெயரால் நடந்தது, அங்கு ஆன்மிகத்தின்  பெயரால் நடக்கிறது.

ஹரியானா மாநிலம் சிர்சா என்னுமிடத்தில் உள்ள தேரா சச்சா சவுதா என்னும் அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹீம் சிங் பாலியல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.

அதனை எதிர்த்து அங்கு தொடங்கியுள்ள கலவரத்தில் இன்றுவரை  30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான ஊர்திகள் எரிக்கப்பட்டுள்ளன.

குற்றம் செய்தவர் நிம்மதியாகச்சிறையில்  உள்ளார். அவருக்கான தண்டனைக் காலம் எவ்வளவு என்பதையே 28ஆம் தேதிதான் நீதிமன்றம் சொல்ல இருக்கிறது.

அதற்குள்  குற்றம் செய்யாத அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்படுகின்றனர்.  இதுதான் ‘பாருக்குள்ளே சிறந்த பாரத நாட்டின்’ இன்றைய நிலை.   

ஆன்மிகத்தின் பெயரால், இந்தியாவில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எல்லாவற்றையும் துறந்துவிட்டேன் என்று சொல்லிவிட்டு, பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கலாம்.

எங்களுக்கு எதற்குப் பணம் என்று கேட்டுவிட்டு, லட்சம் கோடி ரூபாய்க்கு வணிகம் செய்யலாம். பற்றற்றவர்கள் என்று உலகிற்கு அறிவித்துவிட்டு, ஆசிரமங்களில் சுகபோக வாழ்வு நடத்தலாம்.

பாஜக ஆட்சி நடத்தும் மாநிலத்தில் ஆசிரமம் வைத்துள்ள, அரசின் இசட் பிளஸ் பாதுகாப்பு பெற்றுள்ள,  பாஜக ஆதரவு சாமியார் அவர் என்பதை  இந்த இடத்தில் நாம் நினைவில் கொள்ளவேண்டியுள்ளது.   

Comments

1 comment

1
Arinesaratnam Gowrikanthan
தெற்காசியாவில் காணப்படும் பிரதான நான்கு மத நிறுவங்களிலும் இந்து மத நிறுவனம் ஒன்றுதான் நிறுவன ரீதியான கட்டுக்கோப்புகள் எதுவுமே இல்லாத மதமாகும். சாமி மார்களுக்கென்று எந்த பொதுவான நிறுவனமும் இல்லை. இதைத்தான் இந்துத்துவவாதிகள் இந்துமதந்தான் சுதந்திரமான மதமெனக் கூறுகிறார்கள். இறுக்கமான நிறுவனக் கட்டுப்பாடுகள் உள்ள மதநிறுவனங்களின் சாமியார்களே போக்கிலித்தனமுள்ளவர்களாக இருப்பதை தடுக்கமுடியாதுள்ளது. ஆனாலும் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிறுவனம் என்ற முறையில் அதன் மதவிழுமியத் தூய்மையைப் பாதுகாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இந்து மத நிறுவனங்கள் அவ்விதமானவையல்ல. பற்பல நிறுவனங்களாக அவை சிதறிக் கிடக்கின்றன. இவற்றில் மனிதர்களின் மனத்தூய்மைக்காக செயற்படுபவை மிகச் சிலவே. அவ்விதமான நிறுவனங்கள் தத்தமது நிறுவனச் சாமியார்களின் செயற்பாட்டுக்கான ஒழுக்கக் கோவைகளையும் கொண்டுள்ளன. ஆனால், பெரும்பான்மையான இந்து, சைவ நிறுவங்கள் அவ்விதமானவையல்ல. அவை அவ் மதநிறுவனங்களின் தலைமைச் சாமியார்களின் அபிலாசைகளையும், அதிகாரத்தையும் நிறைவேற்றுபவனாகவே உள்ளன. அரசியல் சார்பும், பல்வேறுமட்ட போக்கிரித்தனங்களும், பணக்குவிப்புகளுந்தான இவ் நிறுவனங்களின் நியமங்களாக உள்ளன. இப்புரிதலுடந்தான் இவ்வித சாமியார்களை எதிர்கொள்ளவேண்டுமேதவிர, இவற்றை தனிநபர் பிரச்சனையாகப் பார்க்கக்கூடாது. இதற்காக நாம் செய்யவேண்டியது ஒன்று அரசை மதநீக்கம் செயவது, இரண்டாவது மத நிறுவனங்களை அரசியல் நீக்கம் செய்வது. அப்போதுதான் தேற்காசிய நாடுகளின் பாசிஸத்தை வெற்றிகொள்ள முடியும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.