தமிழ் இலக்கியத்தை ஐயமுற அறிந்து உணர்ந்தவர்கள் தமிழரிடத்தில் சாதிப்பிரிவுகளும் வருணபேதங்களும் சங்க காலத்திற்கு முன்பாக அதாவது பார்ப்பனர்கள் இந்தியாவில் காலடி வைத்து வேறூன்றிய போது ஏற்பட்டதாக பல்வேறு அறிஞர்கள் அதாவது கால்ட் வெல், தேவனேய பாவாணர் போன்றோர் ஆராய்சிகள் மூலம் தெளிந்து அறிவித்திருக்கிறார்கள். நூல் ஆதாரம் தேவநேய பாவாணர் அவர்கள் எழுதிய வடமொழி வரலாறு மற்றும் தமிழ் மொழி வரலாறு.

தமிழர்கள் மட்டுமல்ல.. உலகம் முழுவதும் தொழில் சார்ந்த பிரிவுகள் பல இருந்திருக்கின்றன. அவை யாவும் தொழிலை வைத்து இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் என்று பிரித்துக் காட்டுவதில்லை. பீயள்ளுபவன், பெருமாளுக்கு மணியாட்டுபவன் இருவருக்கும் பேதம் இருந்தாக தெரியவில்லை. பெருமாள் என்பது மாயோன் என்ற தமிழ்கடவுள் என்பதை நினைவு கொள்க. இந்த பேதம் எப்போது ஏற்பட்டது என்றால் சரியாக ஆரியர்கள் தந்திரத்தால் சிந்துசமவெளி நாகரிகத்தை அழித்து தாசர்களை வென்று இந்தியாவில் கால் ஊன்றிய போது தங்களை உயர்த்திக் காட்டுவதற்காகவும் இந்தியாவில் வாழ்ந்த மற்ற மக்களை ஏமாற்றவும் மனு, சதுர்வேதமாகிய சாதிவேதத்தை ஏற்படுத்தினர். அவர்கள் குழு மக்கள்.. எப்பொழுதும் தண்டச்சோறு உண்டு நன்மை அடைய வேண்டும் என்ற அவர்களுடைய நீண்ட காலத்திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கினர் . பார்ப்பனர்கள் இன்றும் குழுக்களாக இருப்பதையும் மற்றவர்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமானவற்றைக்கூட தடுக்க முயற்சிப்பதையும் இதெல்லாம் இவர்கள் குலவழக்கு என்பதையும் கருத்தில் கொள்க.

அன்றைய காலக் கட்டத்தில் இவ்வாறாக தமிழகத்தில் நுழைக்கப்பட்டது தான் தமிழகத்தில் சாதி பேதம். வேத காலத்திற்கு முற்பட்ட தமிழ் நூல்கள் கிடைக்காததால், அன்றைய காலகட்டத்தில் தமிழ் சமுதாயத்தில் சாதிப் பிரிவுகள் இருந்தனவா என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் பகவத் கீதையிலும், மனுவிலும் இவைகள் இருந்ததற்கான ஆதாரம் நிறையவே உள்ளது. சங்க காலத்திலும், அதற்குப்பிறகும் தமிழகத்தில் சாதிப்பிரிவுகள் புறையோடி இருந்தற்கான ஆதாரங்கள் நிறையவே உள்ளன. இவையெல்லாம் தமிழகத்தில் ஆரியக் கலப்பினால் உண்டானவை என்பதால் பல நூல்கள் சாதிப் பிரிவை எதிர்த்தே எழுதியிருக்கின்றன.

தமிழர்களும், தமிழ் சித்தர்களும் அதை எதிர்த்தே வந்திருக்கின்றனர்.

"சாதிப் பிரிவினிலே தீ மூட்டுவோம்; சந்தை வெளியினில் கோல்
நாட்டுவோம்" - சிவவாக்கியர்

இவ்வாறு பார்ப்பனர்களால் தமிழுக்கும், தமிழர்களுக்கும் சாதி பேதத்தால் இழுக்கு ஏற்பட்ட போது தோன்றியவர்கள் தான் சித்தர்கள். இவர்கள் பார்ப்பன வேதப் புரட்டுகளை புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள்.

தமிழின்மேல் உள்ள காதலால் தன் வருணாசிரம பார்ப்பனப் பெயரான சூரிய நாராயண சாஸ்திரி என்ற குலம் சார்ந்த பெயரை வெறுத்து ஒதுக்கி தூய தமிழில் பெயர் மாற்றிக் கொண்டார் பரிதிமார் கலைஞர் என்ற பார்ப்பனர். தமிழகத்தில் இருந்த தொழில் முறைகளின் பெயரை அவர்களின் ஜாதிகளாக சொல்ல ஆரம்பித்தனர் பார்ப்பனர். பின் அவைகளில் அரசனை அண்டிப்பிழைக்க, அரசர்கள் வீரத்தில் சிறந்தவர்கள்.. ஆகவே அவர்கள் பிரம்மனின் மார்பில் பிறந்த சத்திரியர் என்று புகழ்ந்தனர். புகழ்தலுக்கு அடிமையான மன்னர்கள் பார்ப்பனர்களின் புழுகலுக்கும் அடிமையாகி சொந்த மக்களையே வருண பேதத்தால் பிரித்துப் போட்டனர் . அதன் பிறகு மனு (அ)தர்மத்தைக் காட்டி காட்டி இவன் இவன் எல்லாம் வைசியன், சூத்திரன், இவன் இவனிடம் பெண் எடுக்கக் கூடாது என்றெல்லாம் விதிகளைக் காட்டி தமிழரிடத்தில் வினைகளை விதைத்தனர்.

பார்ப்பனர்களின் வாக்கு வேத வாக்கு என்று நம்ப ஆரம்பித்த காலத்தில் தான் தமிழகத்தில் தொல்காப்பியர், திருவள்ளுவர் போன்றவர்கள் தோன்றி இருக்க வேண்டும். தமிழகத்தில் அன்றைய காலகட்டத்தில் கல்வி கேள்விகளில சிறந்தவர்கள் அந்தனர்களாக அழைக்கப்பட்டனர். அவர்களில் எல்லா பிரிவினரும் இருந்தனர். அவர்கள் தாங்கள் ஆசான்கள் என்று காட்டுவதற்காக âßல் (â‎Ïகின்ற நூல்) அணிந்திருந்தனர். அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையைப் பார்த்த ஆரியர்கள் தாங்களும் âßல் அணிந்து அந்தனர் என்று அழைத்துக் கொண்டனர்! அதாவது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பாக பார்ப்பனர்கள் âßல் அணிய ஆரம்பித்தனர். âßல் தூய தமிழ் சொல்லே. ஆரியர்கள் வந்தேரிய காலத்தில் âßலோ, வேத நூலோ இருந்திருக்கவில்லை.

இவ்வாறு தங்களை தந்திரமாக மேன்மையாக காட்டிக் கொண்ட பிறகே தமிழகத்தில் தங்களுடைய வருணாசிரம இழி செயலைச் செய்ய ஆரம்பித்தார்கள் பார்ப்பனர்கள்.

18 ஆண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை இந்தியர்களுக்கு, அதுவும் குறிப்பாக திராவிடமொழி பேசுபவர்களுக்கு, ஆரியம் என்பது வெளிநாட்டு மொழியென்ற அறிவோ அல்லது பார்ப்பனர்கள் வந்தேறியவர்கள் என்ற அறிவோ இல்லை. அவ்வளவு ஏன்? பார்ப்பனர்களுக்குக்கூட தாங்கள் வந்தேறியவர்கள் என்றே தெரியாது. அதைப் பற்றி ஆராயும் அளவுக்கு 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு தொல்துறையோ, தொழில் நுட்பமோ இருந்ததில்லை. மேலும் திராவிடர்கள் வடமொழியை தேவபாசை என்று நம்ப வைக்கப்பட்டு தாம் மயக்கத்தில் இருப்பதே தெரியாத நிலையில் இருந்தனர். பல்வேறு சாதிகளுக்கும் தோற்றுவாய் எது என்ற ஆராய்ச்சிக்கு அவர்கள் செல்லவில்லை .

ஆயினும் சாதிகள் மலிந்து கிடந்த போது அதற்குக் காரணம் எது என்று தெரியாமலேயே தமிழ் புலவர்கள் அதை சாடியும் வந்திருக்கின்றனர். தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் காணும் குறிப்புகள், சாதிக் குறிப்புகளைக் காட்டி கொக்கறிக்கும் கும்பலுக்கு இந்த விசயம் தெரியாமல் இல்லை.

மக்கள் எழுச்சி மற்றும், விழிப்புணர்வினால் வடமொழியும், வருணாசிரமும் தூக்கியெறியப்பட்ட இன்றைய காலகட்டத்தில், அவற்றை நியாயப்படுத்த முயலும் பார்ப்பனீய சாதி/வருண வெறிதான் திருக்குறள் மற்றும் தொல்காப்பியத்தின் மூலம் தமிழர்கள் சாதி பேதத்தில் இருந்தது போல் காட்ட விளைகிறது. தமிழர்களிடத்தே சாதீய உணர்வு இருந்தது உண்மையாக இருக்கும் என்று நாம் நம்பினாலும் அந்த காலகட்டத்தில் இந்தியாவில் சாதி எவ்வாறு நுழைந்தது என்று அறியாமலேயே தமிழ் புலவர்கள் இருந்தனர் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

இவ்வாறாக 18 ஆம் நூற்றாண்டிற்கு முன்புவரை பார்ப்பனர்களின் இருப்பிடம் மத்திய ஆசியாவா, இன்றைய ஈரானா அல்லது எதுவென்றோ, தாங்கள் வந்தேறியவர் என்றோ தெரிந்திருக்கவில்லை. அதுவரை தாங்கள் பிரம்மாவின் முகத்திலிருந்துதான் பிறந்தோம், தில்லைவாழ் அந்தனர்களான நாங்கள் தேரில் இறங்கி வந்தோம் என்றெல்லாம் காலம் காலமாக செவிவழியாகவும் பார்ப்பன சதுர்வேதம் வழியாகவும் நம்பிக் கொண்டிருந்தனர். பார்ப்பனர்களுக்கே தங்கள் வந்தேறியவர்கள் என்று தெரியாதபோது, அவர்களுடைய வாந்தி பேதியினால்தான் தமிழகத்திலும், இந்தியாவிலும் சாதி எனும் தொற்று நோய் பரவியிருக்க முடியும் என்று பண்டைய இந்தியர்கள் ஒரு காலும் நினைத்துப் பார்த்திருக்கவே முடியாது.

இன்றைய காலக் கட்டத்தில் பார்ப்பனப் புரட்டுகள் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டன. இதை புரிந்து கொண்ட பார்ப்பனர்கள் தங்கள் குலம் ஹிட்லரின் நாஜி வம்சத்தை சேர்ந்தது என்று பெருமைôபடவும், உயர்ந்த குலம் என்று தனக்கு தானே அறிவித்துக் கொள்ளும் மற்றொரு சாதி/இன வெறி பிடித்த இஸ்ரேல் யூத கும்பலுக்கும் காவடி எடுக்க ஆரம்பித்திருப்பதும் அனைவரும் அறிந்ததுதான்.

வீன் வாதம் பேசும் மற்ற பார்ப்பனர்கள் இதை எப்படி மறைக்கலாம் என்று ஆராய்ந்து ஓய்ந்து, முடிவாக தமிழை ஆராய்ந்தால் ஏதாவது ஆதாயம கிடைக்குமா என்று பார்த்து இவர்கள் எடுத்துப் போடுவதுதான் தொல்காப்பியம் மற்றும் திருக்குறளில் இருக்கும் சாதி பற்றிய குறிப்புகள். இதன் மூலம் இவர்கள் நிறுவ முயலுவது, வருண பேதம் தங்களால் ஏற்படவில்லை என்பதை அல்ல. மாறாக தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் சாதீயம் இருக்கிறது பாருங்கள் என்று கூறி அதன் மூலம் தங்களின் மனுதர்மத்தையும், சதுர்வேதத்தையும் தாங்கிப்பிடிக்கும் ஆதாரங்களாக அவைகளை தேடிப்பிடித்துக் காட்டுகிறார்கள்.

ஏனென்றால் இவர்களுடைய எழுத்தில் வருணாசிரம கொள்கையே தவறு என்றோ, பாவச் செயல் என்றோ, சக மனிதனுக்கு அதனால் தீங்கு மட்டுமே விழைந்திருக்கிறது என்றோ பார்ப்பனர்கள் சொல்லத் துணிவதில்லை என்பதிலிருந்து தெளிவாகிறது.

பார்ப்பனர்களின் நோக்கம் இப்பொழுது நமக்கு நன்றாக தெரிவதால், அவர்கள் எத்தகைய ஆதாரங்களை எடுத்துப் போட்டாலும், அவை புரட்டுக்கள் மற்றும் சப்பைக் கட்டுகளே என்பது தெளிவு! அவை தமிழில் இருந்தாலும் கூட, அவை அந்த காலத்தில் பார்ப்பன வருகையின் அறியாமையால் தமிழ் புலவர்களுக்கு இந்த வாந்தி பேதி தொற்று நோயின் தோற்றுவாய் தெரிந்திருக்க வில்லை என்றும் நாம் அறியலாம்.

- விடாது கறுப்பு

Pin It