உடுமலையில் 2016 ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி நடந்த அந்தப் படுகொலை ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. அதுவரை சாதி ஆணவப் படுகொலை என்பதை வார்த்தைகளில் மட்டுமே கேட்டு, அதன் மீது பெரியதாக கவலை கொள்ளாத பலரை அதன் கொடூரம் நிலைகுலையச் செய்தது. பட்டப்பகலில் நடு ரோட்டில் ஊரே வேடிக்கை பார்க்க, சாதிவெறியர்கள் தங்களின் கொடும் கரங்களால் சங்கரை வெட்டிச் சாய்த்தார்கள். கவுசல்யா கொடுங்காயங்களுடன் உயிர் தப்பினார். தங்கள் சாதியே உலகில் மிக உயர்ந்த சாதி என்ற இறுமாப்பு கொண்ட பார்ப்பானின் வைப்பாட்டி மகன்கள், தங்களை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது, இந்த உலகமே தங்களின் அறுவாவுக்கு அடிமை, சட்டம், ஜனநாயகம் எல்லாம் தங்களின் மானங்கெட்ட சாதிவெறிக்குக் கீழ்ப்பட்டதுதான் எனக் கருதி, சாதியின் பெயரை சொல்லிக் கொண்டு வயிறு வளர்க்கும் பொறுக்கிக் கும்பல் தங்களின் கொலை வெறியை அரங்கேற்றியது. ஆனால் யாரும் சாட்சி சொல்லக் கூட வரமாட்டார்கள் என்ற அகம்பாவத்தில் நடத்தப்பட்ட இந்தப் படுகொலைக்கு சிசிடிவி கேமரா அப்பட்டமான சாட்சியாக மாறிப்போனது. சில சமயங்களில் உயிர் உள்ள கோழை மனிதர்களைவிட உயிரற்ற கேமராக்கள் குற்றத்துக்கான சாட்சியாக தன்னை உறுதியாக அறிவித்துக் கொள்கின்றது.

sankar gowsalyaஇந்த வழக்கில் மிக முக்கிய சாட்சி என்பதே அந்த சிசிடிவி கேமரா பதிவுகள்தான். ஒருவேளை அது இல்லாமல் இருந்திருந்தால் இந்த வழக்கின் போக்கு நிச்சயம் வேறு மாதிரியாக இருந்திருப்பதற்கான வாய்ப்புகளே மிக அதிகம். தோழர் கவுசல்யா அவர்கள் பல மேடைகளில் குறிப்பிட்டது போல காவல்துறையின் பொறுக்கித் தின்னும் குணம்தான் சங்கர் படுகொலைக்கு மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது. தங்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது என கொடுக்கப்பட்ட புகாரை காவல்துறை மிக அலட்சியமாகக் கையாண்டுள்ளது என்பது மாத்திரம் அல்லாமல், காவல்நிலையத்தில் வைத்து கட்டப் பஞ்சாயத்தும் பேசப்பட்டுள்ளது. 'சாதிவெறி பிடித்த தன் தந்தையை காவல்துறையினர் புகார் கொடுத்தும் கண்டிக்கக் கூட இல்லை, அதுவே பின்னர் அவரை கூலிப்படை வைத்து சங்கரையும் என்னையும் கொலை செய்ய முற்படும் அளவிற்கு இட்டுச் சென்றது' என கவுசல்யாவின் குற்றச்சாட்டை நாம் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது.

அந்தக் கொடூர கொலைக் காட்சியை ஊடகங்கள் வெளியிட்டு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கையும், காவல்துறையின் மிகக் கேவலமான செயல்பாடுகளையும் அம்பலப்படுத்திய பின்னர்தான், வேறு வழி இன்றி அம்பலப்பட்ட காவல்துறை, சாதிவெறி பிடித்த நாய்களைக் கைது செய்தது. சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான பல்வேறு அமைப்புகள், கட்சிகள் நடத்திய தீவிரமான போராட்டம் குறிப்பாக திவிக, சிபிஎம், எவிடென்ஸ் அமைப்பு மற்றும் பல்வேறு மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்புகள் கொடுத்த அழுத்தமே குற்றவாளிகளுக்கு கடைசி வரைக்கும் ஜாமீன் கொடுக்க முடியாமல் அதிகார வர்க்கத்தைத் தடுத்து வைத்திருந்தது. இந்த எதிர்ப்பெல்லாம் இல்லை என்றால் நிச்சயம் சாதிவெறியர்கள் ஜாமீனில் வெளிவந்து, அனைத்து சாட்சிகளையும் அறுவாளைக் காட்டியே மிரட்டி இருப்பார்கள். ஆனால் பல பேர் காவல்துறைதான் இந்த வழக்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு நீதியைப் பெற்றுத் தந்ததாக பாராட்டுகின்றார்கள். காவல்துறையின் இந்தச் செயல்பாட்டுக்கு பின்னால் பல சமூக அமைப்புகளின் மிகப்பெரிய அழுத்தம் இருந்ததை இவர்கள் பார்க்கத் தவறுகின்றார்கள். சங்கரின் படுகொலைக்கே இந்தக் காவல்துறையின் கேவலமான செயல்பாடுதான் காரணம் என்பது அப்பட்டமாகத் தெரிந்த பின்னரும் நாம் காவல்துறையைப் பாராட்டுவது குற்றத்தில் இருந்து காவல்துறையைத் தப்புவிக்கும் செயலாகும்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரில் சின்னசாமி, ஜெகதீசன், கலைதமிழ்வாணன், மதன் என்கின்ற மைக்கேல், பழனி மணிகண்டன், செல்வகுமார் ஆகிய ஆறு பேருக்குத் தூக்கு தண்டனையும், தன்ராஜ் என்கின்ற ஸ்டீபன் தன்ராஜுக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனையும், பட்டிவிரன்பட்டி மா.மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, கல்லூரி மாணவர் பிரசன்னகுமார் ஆகிய மூன்றுபேர் விடுதலையும் செய்யப்பட்டுள்ளனர். தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிக்க விரும்பவில்லை என்றாலும், இந்த மூன்று பேரையும் விடுதலை செய்தது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. நீதிபதி அவர்கள் இந்த மூன்று பேருக்கும் கடுமையான தண்டனைகள் கொடுத்திருந்தால் இந்தத் தீர்ப்பு நிச்சயம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பாக இருந்திருக்கும். இருப்பினும் மூன்று பேரின் விடுதலையை எதிர்த்து, தான் வழக்குத் தொடரப் போவதாக தோழர் கவுசல்யா அவர்கள் கூறியிருப்பதால் பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானதில் இருந்தே சாதிவெறியர்கள் அனைவரும் ஓர் அணியில் திரண்டு, தோழர் கவுசல்யாவின் நடத்தையைப் பற்றி சமூக வலைத்தளங்களில் கலாச்சார வகுப்பெடுக்கத் தொடங்கியுள்ளனர். பார்ப்பனியத்திடம் வேசி மகன் பட்டம் வாங்கிய மானங்கெட்ட ஜென்மங்கள் அதைப் பற்றி கொஞ்சம் கூட சுயமரியாதை உணர்வும், தன்மான உணர்வும் அற்ற உலுத்துப்போன நாய்கள் தோழர் கவுசல்யாவை அவதூறு செய்வது கேலிக்கூத்தானது. கவுசல்யா எப்படி முடிவெட்டிக் கொள்ள வேண்டும், எப்படி ஆடை அணிய வேண்டும் என்பதை எல்லாம் சாதி மலத்தை வயிறுபுடைக்க தின்னும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்த பன்றிகள் அவருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அது அவரின் உரிமை. அதைக் கேள்விக்கு உட்படுத்த எவனுக்கும் எந்த உரிமையும் கிடையாது.

gowsi sankar

இந்த சாதிவெறி பிடித்த நாய்களுக்கு தீர்ப்பு உண்மையில் கிலியை ஏற்படுத்தி இருக்கின்றது. அதன் வெளிப்பாடுதான் தங்களது மூத்திரத்தால் நனைந்துபோன அண்டர்வேயரை மறைத்துக்கொண்டு கூச்சல் போட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். இன்னும் சில சாதிவெறி பிடித்த அயோக்கியர்கள் 'மரண தண்டனை எதிர்ப்பு' என்ற கோஷத்துக்குள் ஒளிந்துகொண்டு, தீர்ப்புக்கு எதிராக கருத்து தெரிவிக்கின்றார்கள். தூக்கு தண்டனைக்கு எதிராகவோ, இல்லை மரண தண்டனைக்கு எதிராகவோ கருத்து சொல்லும் பல பேர் அதை அரசியல் அற்ற தளத்தில் இருந்து வெளிப்படுத்துவதன் விளைவுதான், இன்று அதே முழக்கத்தை சாதிவெறியர்கள் கையில் எடுக்கக் காரணமாக உள்ளது.

இந்திய சமூக அமைப்பில் சாதி என்பது பெருங்கேடாய், இந்தச் சமூகத்தை பின்நோக்கி இழுக்கும் தீமையாய் இருந்து வருகின்றது. இந்தச் சமூகம் தனக்கு எதிரான அநீதிக்கு எதிராக அணிதிரள முடியாமல் அவர்களைத் தடுத்து வைத்திருப்பதற்கும் காரணம் சாதியே ஆகும். அதுதான் தினம்தோறும் இந்தச் சமூகத்தில் சாதி ஆணவப் படுகொலைகள் செய்ய ஒவ்வொரு நபரையும் தூண்டிக் கொண்டே இருக்கின்றது. அப்படிப்பட்ட சமூக அமைப்பில் இந்தத் தீர்ப்பு மிக முக்கியமானது. நிச்சயம் இந்தத் தீர்ப்பு சாதிவெறிபிடித்த நாய்களுக்கு ஒரு சவுக்கடியான தீர்ப்புதான். கொலை செய்துவிட்டு மிக எளிதாகத் தப்பிவிடலாம் என்ற திட்டத்தில் அறுவாளைத் தூக்கும் பொறுக்கிக் கும்பலுக்கு நிச்சமாக இந்தத் தீர்ப்பு ஜீரணிக்க முடியாத ஒன்றுதான். அப்படிப்பட்ட திட்டத்தில் இருக்கும் நாய்கள் தான் இப்போது ஆத்திரம் தலைக்கேறி சமூக வலைதளங்களில் வந்து குரைத்துக்கொண்டு இருக்கின்றது.

இது போன்ற தீர்ப்புகள் முன்பே கொடுக்கப்பட்டிருந்தால் இளவரசன் உயிர் பிழைத்திருக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும், தீரன் சின்னமலை பேரவை என்ற அமைப்பைச் சேர்ந்த யுவராஜ் என்ற கவுண்டர் சாதி வெறியனால் கோகுல்ராஜ் தலை துண்டித்துக் கொல்லப்படாமல் தடுத்திருக்க முடியும். நாம் நீதிமன்றத் தீர்ப்புகளால் குற்றம் முழுதாக சமூகத்தில் குறைந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்து சொல்லவில்லை, சாதிவெறியர்களின் உண்மையான யோக்கியதையின் அடிப்படையில் இருந்து சொல்கின்றோம். உண்மையில் இந்தச் சாதிவெறிபிடித்த நாய்கள் கல்லெடுத்தால் பல பர்லாங்கு ஓடிவிடும் கோழைகள். ஆயுதங்கள் ஏதுமற்ற நிராயுதபாணியாக நிற்கும் மனிதனை கூட்டாகச் சேர்ந்து வெட்டிக் கொல்லும் இந்த கோழைகள், நிச்சயம் மாட்டிக்கொண்டால் தூக்கு தண்டனை கிடைத்துவிடும் என்று தெரிந்தால் அறுவாளை அல்ல, பிளேடைக் கூட எடுக்க மாட்டார்கள். எப்படியும் தங்கள் சாதிக்கட்சித் தலைவன் காப்பாற்றிவிடுவான், ஜாமீனில் வெளிவந்துவிடலாம், எவனையும் தனக்கு எதிராக சாட்சி சொல்ல முடியாமல் அதிகார, அரசியல் பலத்தைக் கொண்டு தடுத்துவிடலாம் என்ற நிலை இருப்பதால்தான் இந்தக் கோழைகள் எல்லாம் அறுவாளைத் தூக்குகின்றார்கள்.

எனவே இந்தத் தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இது போன்ற தீர்ப்புகள் கோகுல்ராஜ் கொலை வழக்கிலும் தரப்பட வேண்டும் என்பதுதான் சாதிவெறியர்கள் தவிர்த்த மற்ற அனைவரின் விருப்பமாக உள்ளது. இந்தத் தீர்ப்புக்காக போராடிய தோழர் கவுசல்யாவுக்கு நாம் மனமார வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் அவர் பல்வேறு சமூகப் பணிகளில் இன்னும் தீவிரமாக பங்கெடுத்து, கட்டுப்பெட்டித்தனமாக இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் பல பிற்போக்கு பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கவும் வேண்டிக் கொள்கின்றோம்.

- செ.கார்கி

Pin It