சமீபத்திய வாரங்களாக மியான்மர் நாட்டின் வறிய மாநிலமான ரஃஹினேயில் ரோஹிங்கியாவிற்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது காணக்கண்கூடு. இடம்பெயர்ந்த மக்களின் ஒரு அலை அட்டூழியங்களிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள தஞ்சம் கோருகிறது - அவர்கள் பாதம் போகும் வழியிலும், படகு போகும் வழியிலும் வங்கதேசத்திற்கு தப்பி ஓடுகின்றனர்.

அராக்கன் ரோஹிந்தியா சால்வேஷன் ஆர்மி (ARSA) யின் சமீபத்திய எதிர் நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரிக்கிறது.

rohingya refugees

மத மற்றும் இன வேறுபாடுகள் பரவலாக துன்புறுத்தலின் முக்கிய காரணியாக கருதப்படுகின்றன. ஆனால் இத்தகைய படுகொலைகள் மற்றும் இடப்பெயர்வுகளுக்கு பின்னால் மற்ற காரணிகள் இல்லை என்று நம்புவதற்கு மிகவும் கடினமாகி வருகிறது. காரணத்தை குறிப்பாக கூற வேண்டுமானால் மியான்மர் 135 உத்தியோகபூர்வ அங்கீகாரம் பெற்ற இனக்குழுக்களுக்கு சொந்தமானதாக உள்ள நிலையில் ரோஹிங்கியா இசுலாமியர்கள் மீது மட்டும் ஏன் இந்த பாகுபாடு ?. (1982 ஆம் ஆண்டில் ரோஹிங்யா இந்த பட்டியலில் இருந்து அகற்றப்பட்டது).

ரஃஹினேயில் நடைபெற்று வரும் சமீபத்திய வன்முறைகளை பகுப்பாய்வு நோக்கில் ஆராய்ந்து பார்த்தால், மேற்கத்திய ஊடகங்கள் மியன்மார் இராணுவத்தின் பங்கையும் , உலக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற மியான்மார் அரசாங்கத்தின் ஆலோசனைத் தலைவரான ஆங் சான் சூகியின் உருவத்தையும் மையப்படுத்தியுள்ளன. அவரது நிலைப்பாடு, அட்டூழியங்களின் சமீபத்திய ஆதாரங்கள் வெளிவந்ததிலிருந்து பரவலாக கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.

ரோஹிங்கிய மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட வன்முறைக்கு எதிராக தொடர்ந்து தன்னுடைய மௌனத்தை சாதித்துவரும் அவர் ரோஹிங்கிய மக்கள் மீதான மனித உரிமைகளுக்கு எதிரான தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்வதை தவிர்த்து வருகிறார். குறைந்தபட்ச ஊடக விழிப்புணர்வு இறுதியில் தங்கள் நிலைக்கு ஓரளவிற்கு மாறிவிட்டது.

ஆனால் இன்னும் விரிவாக ஆராயப்படாத ஏராளமாக சிக்கல்கள் உள்ளன. துன்புறுத்தல், பாதிப்பு மற்றும் இடப்பெயர்ச்சி ஆகியவற்றின் ஆழமான வேரூன்றலுக்கு காரணமாக சொல்லப்படும் மத - இன வேறுபாடுகளுக்கும் அப்பால் பார்க்க வேண்டியது மிகவும் முக்கியமானதாக கருதுகிறோம்.

வலுக்கட்டாயமாக இடப்பெயர்ச்சிக்கும் அகதிகளாக வெளியேறுவதற்கும் காரணிகளை முழுமையாக அறிய நாம் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை க் கருத்தில் கொள்ள வேண்டும் . அதுவே மியான்ரிமாரில் உள்ள ரோஹிங்யா மக்களை மட்டுமல்லாது காச்சி, ஷான், கரேன், சின் மற்றும் மோன் போன்ற சிறுபான்மையினருக்கும் பொருந்தும்.

நில அபகரிப்பு

மியான்மார் மண்ணெங்கும் நில அபகரிப்பு மற்றும் பறிமுதல் ஆகியவை பரவலாக உள்ளன. அங்கு இது ஒன்றும் புதிய நிகழ்வும் அல்ல.

1990 ஆம் ஆண்டுகளில் இருந்து, மியான்மார் நாட்டிலுள்ள இராணுவச் சட்டங்கள் சிறுபான்மையினரின் - சிறு நில உடைமையாளர்களின் நிலத்தை இனம் அல்லது மத நிலைகளை பொருட்படுத்தாமல் எந்தவொரு இழப்பீடும் தராமல் எடுத்துக் கொள்கிறது.

இராணுவ தளம் விரிவாக்கங்கள், இயற்கை வளத்தை சுரண்ட மற்றும் பிரித்தெடுத்தல், மிகப் பெரிய அளவிலான வேளாண் திட்டங்கள், உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா தளம் அமைத்தல் உள்ளிட்ட "அபிவிருத்தி" திட்டங்களுக்கு பாரிய அளவிலான நிலங்கள் கையகப் படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டிற்கு பரந்த தங்க சுரங்கத்திற்கு ஆதரவாக காச்சின் மாநிலத்தில் 500 மேற்பட்ட ஏக்கர் கிராமங்களை இராணுவம் கைப்பற்றி உள்ளதைக் கூறலாம்.

உள்நாட்டு எல்லைகளிலும் பங்களாதேஷ், இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர் அல்லது இந்தோனேசியா, மலேசியா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு கடல் மூலம் வெளியேற்றப்படுவதை கட்டாயப்படுத்தினர்.

மியான்மரில் கடந்த 2011 ஆம் ஆண்டு பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் என்று சுட்டி மியான்மர் அரசாங்கம் நிறுவிய ​​"ஆசியாவின் கடைசி எல்லை" என்ற அறிவிக்கையின் பின்னர் முதன் முதலாக வெளிநாட்டு முதலீட்டிற்கு திறந்துவைக்கப்பட்டது.

சிறிது காலத்திற்குப் பின்னர், 2012 ஆம் ஆண்டில், வன்முறைத் தாக்குதல்கள் ரஃஹினே மாநிலத்தில் உள்ள ரோஹிங்கியாவிற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அதிகரித்தன மற்றும் குறைந்த அளவிற்கு முஸ்லீம் கரேனுக்கு எதிராகவும் அவை தொடர்ந்தன. இதற்கிடையில், மியான்மர் அரசாங்கம் விவசாய நிலத்தின் மேலாண்மை மற்றும் விநியோகம் தொடர்பான பல சட்டங்களை நிறுவியது.

இந்த நடவடிக்கைகள் தீவிரமாக விமர்சிக்கப்பட்டன, இருந்தும் பெரிய நிறுவனங்களின் திறனை வலுப்படுத்த இலாபத்தை உயர்த்த நிலப்பகுதிகள் துண்டாடப்பட்டன என்றால் மிகையாகாது.

எடுத்துக்காட்டாக, பன்னாட்டு விவசாய வர்த்தக நிறுவங்களின் குறிப்பாக போஸ்கோ டேவூ போன்ற நிறுவங்கள் அரசாங்கத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டு சந்தையில் நுழைந்தன.

பிராந்திய அமைவு எனும் சாபம்

நீண்ட காலமாக இயற்கை வளங்கள் மீது கண் கொண்டு நிற்கும் சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு இடையேயான நிலை உள்ள மியான்மரின் பூகோள அமைப்பு இதற்கொரு காரணம். 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து (கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக) சீன நிறுவனங்கள் வடக்கில் ஷான் மாகாணத்தில் மரங்கள், ஆறுகள் மற்றும் தாதுக்களை சுரண்டிக் கொண்டன.

ரஃஹினே மாநிலமானது, சீன - இந்திய நலன்களை பரந்த சீன-இந்திய உறவுகளின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளது. இந்த சீன-இந்திய நலன்களே முக்கியமாக பிராந்தியத்தில் உள்கட்டமைப்பு மற்றும் குழாய்களின் கட்டுமானத்தை வேகமாக ஏற்படுத்தியது. அத்தகைய திட்டங்கள் தான் மியான்மர் முழுவதற்கும் வேலை உத்தரவாதத்தையும், எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாய்களையும் உறுதிப்படுத்துகின்றன.

இத்தகைய பல வளர்ச்சி திட்டங்களில், சீன தேசிய பெட்ரோலியம் கம்பெனி (CNPC) கட்டப்பட்டு உள்ள சீன - மியான்மர் இணைப்பு ஒரு பன்னாட்டுக் குழாய்த்திட்டமானது ரஃஹினேயின் தலைநகரான சிட்வேவையில் தொடங்கி சீனாவின் குன்மிங்கிற்கு வரை கொண்டுசெல்லப்பட்டு வருகிறது, 2013 செப்டம்பரில் இது செயல்படத் தொடங்கியது. மியான்மர் எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஷ்வே வாயுத் துறையில் இருந்து சீனாவின் குவாங்ஜோ பகுதிக்கு எடுத்துச் செல்லும் பரந்த முயற்சிகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் ஒரு இணை குழாய் பாதிப்புத் திட்டமானது க்யாக்ப்ஹயு (Kyaukphyu) துறைமுகத்திலிருந்து மத்திய கிழக்கு எண்ணெய் எண்ணை சீனாவுக்கு அனுப்பவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், ரஃஹினே மாநிலத்தின் நடுநிலை ஆலோசனை கமிஷன் மியான்மர் அரசாங்கத்தை மீண்டும் ஒரு முழு விரிவான தக்க மதிப்பீடு செய்ய வலியுறுத்தியுள்ளது.

உண்மையில், இந்த குழாய் பதிப்பானது அதற்கு அருகாமையில் உள்ள உள்ளூர் சமூகங்களை ஆபத்தில் வைத்துக் கொண்டே இருக்கும் என்ற உண்மையை அந்தக் கமிஷன் அங்கீகரிக்கிறது.

நிலம் கைப்பற்றுதலுடன் சம்பந்தப்பட்ட குறிப்பிடத்தக்க உள்ளூர் பதற்றம், சேதங்களுக்கு இழப்பீட்டாக வழங்கப்படும் இழப்பீட்டின் குறைந்த மதிப்பு, சுற்றுச்சூழல் சீர்குலைவு, அதிகரித்த உள்ளூர் வேலை வாய்ப்புகளை விட வெளிநாட்டு தொழிலாளர்களின் வருகை ஆகியனவை குறித்த அறிக்கையும் அந்த கமிஷனின் கைவசமுள்ள உள்ளன.

இதற்கிடையில், சிட்வே ஆழ்ந்த கடல் துறைமுகமானது, கலடன் பல மாதிரி போக்குவரத்து திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவால் நிதியளிக்கப்பட்டு கட்டப்பட்டது. இதன் நோக்கம் இந்தியாவின் வடகிழக்கு மிசோரம் மாநிலத்தை வங்காள விரிகுடாவுடன் இணைப்பது ஆகும்.

ரஃஹினே மாநிலத்தின் கரையோரப் பகுதிகளை திட்டமிடப்பட்ட உத்தி அடிப்படையில் தெளிவாக இந்திய மற்றும் சீன அரசுகள் கையாள்கின்றன. எனவே தான் மியான்மரின் விரைவான பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதற்காக துணித்து அரசாங்கம் நிலத்தை அழிப்பதில் ஆர்வம் கொண்டு இயங்கி வருகிறது.

இவை அனைத்தும் துரிதகதியில் பூகோள அரசியல் சூழ்ச்சியின் பரந்த சூழலில் நடைபெறுகின்றன. இனப் பதட்டங்களுக்கு எரியூட்டும் பங்களாதேசத்தின் சூழல் மேலும் கடுமையாக மாற்றுகிறது. அத்தகைய அதிகாரப் போராட்டங்களில், மனிதர்களின் உயிரின் மதிப்பு விலை மிகவும் மோசமாகவே உள்ளது.

சிறுபான்மையினரின் கூடுதல் பாதிப்பு

மியான்மரில், திட்டமிடப்பட்ட நில அபகரிப்புக்குள்ளாகி உள்ள பாதிக்கப்பட்ட மக்களின் குழுக்கள் பெரும்பாலும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சூழலில் தற்பொழுது இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டாக ரோஹிங்கியாவின் ரஃஹினேயில் இருந்து வெளியேற்றப்பட்டுக்கொண்டு இருக்கும் சிறுபான்மையினர் மீது சுமத்தப்படும் பரந்த வெளியேற்றம் இருக்கிறது.

இதில் குறிப்பாக ஒரு குழு ஓரங்கட்டப்பட்டு மற்றும் ஒடுக்கப்பட்டால், அவர்கள் பாதிக்கப்படுவதைக் குறைத்து, அவர்களின் உரிமைகள் உட்பட அவர்களின் உரிமைகளை பாதுகாப்பது கடினமாக உள்ளது.

இந்த வகையில் பார்த்தால் ரோஹிங்கியா மக்கள், தங்கள் வீடுகளை நிலத்தை பாதுகாக்க உள்ள வாய்ப்பை மியான்மர் அரசால் தங்கள் பர்மிய குடியுரிமை திரும்பப்பெறப்பட்டதன் மூலம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

1970 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலிருந்து சுமார் ஒரு மில்லியன் ரோஹிங்கியா மக்கள் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க தம்மை தற்காத்துக்கொள்ள மியான்மரை வெளியேறியுள்ளனர். எதிர்பாராத துன்பவசமாக, அவர்கள் பெரும்பாலும் தங்களின் அண்டைய நாடுகளால் ஓரங்கட்டப்படுகிறார்கள்.

ரோஹிங்கியா மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் வாழ்விற்கும் வாழ்வுரிமைக்கும் எந்தவொரு நாடும் பொறுப்பேற்க விரும்பாததால், அவை தொடர்ந்து எல்லைகளை கடப்பதற்கு வலிந்து புறநிலைகளால் நிர்பந்திக்கப்படுகின்றன அல்லது ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த இயக்கத்தை ஊக்குவிப்பதற்கு பயன்படுத்தப்படும் நுட்பங்கள் ரோஹிங்யாவை ஒரு பலவீனமான நிலையில் சிக்கியுள்ளது.

ரோஹிங்கியாவின் சோகம் என்பது மியான்மரில் உள்ள சிறுபான்மையினர் பெரும்சோகத்தின் ஒரு பகுதியே மற்றவை மியான்மரின் அண்டை நாடுகளுக்கு ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இடப்பெயர்வைக் காண்கிறது.

மியான்மரில் மத மற்றும் இனப் பிரச்சினைகளின் பொருளுதவியும் சிக்கலானது மறுக்க முடியாதது. ஆனால், அரசியல் மற்றும் பொருளாதார சூழலும், இடப்பெயர்ச்சியின் வேரூன்றலுமான காரணங்களை நாம் கவனிக்காமல் போகக்கூடாது.

மூலம் :

தி கன்வெர்சேஷன்

எழுத்து :

டாக்டர் கியூசெப் ஃபோரோனோ - பொருளாதார புவியியல் ( பேரழிவு நிலைமை) 

தாமஸ் ஜான்சன் - கட்டுமான பணி முகாமைத்துவம் மற்றும் பேரழிவு தயாரிப்பு மற்றும் புனரமைப்பு

மொழிப் பெயர்ப்பு :

சிவப்ரியன் செம்பியன்

POSCO Daewoo Corporation :

தென் கொரியாவை தலைமைபீடமாக கொண்டு இருக்கும் போஸ்கோ டேவூ கார்ப்பரேஷன் வர்த்தகம், இயற்கை வள மேம்பாடு மற்றும் உலகளவில் பிற தொழில்களில் ஈடுபடுகிறது.

குறித்த எஃகு உற்பத்தி நிறுவனம் ஏற்றுமதி மற்றும் வர்த்தகத்தில்

சூடான மற்றும் குளிரூட்டப்பட்ட இரும்புகள், அரை / நீண்ட பொருட்கள், ஆற்றல் / கப்பல் கட்டுதல் இரும்புகள், வாகன எஃகு தாள்கள் மற்றும் துருப்பிடிக்காத இரும்புகள் உட்பட இரசாயன பொருட்கள், பெட்ரோலிய உற்பத்திகள், நறுமணச் சேர்மங்கள் மற்றும் சோப்பு பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்குகிறது.

இந்நிறுவனம் செயற்கை இழைகளை மற்றும் இரசாயன இழைகள் பொருட்கள் உட்பட கீழ்நோக்கி பெட்ரோ இரசாயனங்களை வழங்குகிறது; மற்றும் செயற்கை மற்றும் இயற்கை ரப்பர்கள், பியூற்றாதையீன், உரங்கள் / டயர் பொருட்கள், உரங்கள், மற்றும் கனிம-துல்லியமான இரசாயனங்கள்.

கூடுதலாக, நிறுவனத்தின் ஏற்றுமதிகள், இறக்குமதிகள் மற்றும் அல்லாத இரும்பு உலோகங்கள் வர்த்தகம் தொடர்புடையது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

References :

http://www.daewoo.com/eng/index.do

https://www.bloomberg.com/research/stocks/private/snapshot.asp?privcapId=5466505

https://www.theguardian.com/global-development-professionals-network/2017/jan/04/is-rohingya-persecution-caused-by-business-interests-rather-than-religion

https://www.globalpolicy.org/social-and-economic-policy/world-hunger/land-ownership-and-hunger/52166-commission-will-report-over-300-land-grabs-to-myanmar-mps-.html

http://saskiasassen.com/PDFs/publications/SS%20Massive%20Loss%20Habitat.pdf

https://thediplomat.com/2016/11/myanmars-opening-doing-business-in-asias-final-frontier/

http://parlinfo.aph.gov.au/parlInfo/download/library/prspub/2613925/upload_binary/2613925.pdf;fileType=application/pdf

https://qz.com/1074906/rohingya-the-oil-economics-and-land-grab-politics-behind-myanmars-refugee-crisis/

https://thediplomat.com/2016/03/between-china-and-myanmar-the-battleground-region-of-northeastern-myanmar-faces-an-uncertain-future/

https://www.forbes.com/sites/ericrmeyer/2015/02/09/oil-and-gas-china-takes-a-shortcut/#6e66c7f67aff

http://archive-3.mizzima.com/business/natural-resources/item/16206-kyaukpyu-deep-sea-port-ready-to-send-oil-to-china/16206-kyaukpyu-deep-sea-port-ready-to-send-oil-to-china

http://www.eastasiaforum.org/2017/03/31/are-indias-plans-in-myanmar-a-pipeline-or-a-pipe-dream/

https://www.adb.org/countries/myanmar/economy

https://nsnbc.me/2012/09/08/myanmar-gas-and-the-soros-funded-explosion-of-a-nation-state/

https://www.theguardian.com/global-development/2016/nov/03/myanmar-casts-minorities-to-margins-citizenship-law-denies-legal-identity

http://www.aljazeera.com/indepth/interactive/2017/03/persecution-path-myanmar-fleeing-rohingya-170314125333337.html

 

Pin It