குஜராத் படுகொலைகளுக்குப் பிறகான மிக மோசமான வன்முறைத் தாக்குதல்கள் அஸ்ஸாமில் இஸ்லாமிய மக்களின் மீது நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அஸ்ஸாமில் குடியேறிய பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் என்ற போர்வையின் கீழ் இத்தகைய மிகப்பெரும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. நான்கு லட்சத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள், போடோ பழங்குடி மக்கள், போடோ அல்லாத பிற இனத்து மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். கொட்டும் மழையில் ஒரு அகதிப் பெண் தனது குடும்பத்திற்கான உணவைத் தயாரிக்கும் புகைப்படங்கள் நம்மை என்னவோ செய்கிறது. இவ்வருடம் ஜூலையில் அஸ்ஸாமின் கோக்ரஜார் மாவட்டத்தில் ஆரம்பித்த இக்கலவரங்கள் போடோலாந்து பகுதி முழுவதும் பரவியது. போடோ மக்களுக்கும், போடோ அல்லாத மக்களுக்குமான கலவரம் என சொல்லப்பட்டாலும் போடோ பழங்குடிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையில்தான்தான் பிரதான கலவரம் நடைபெற்றது.

அஸ்ஸாமில் நடைபெற்றுள்ள கலவரங்களை ஏதோ இந்தியாவின் ஒரு மூலையில் நடைபெற்ற ஒரு கலவரமாகக் கருதி ஒதுக்கிவிட முடியாது. தாக்கப்பட்ட மக்கள் இஸ்லாமியர்கள், சிறுபான்மை மக்கள் எனும்போது அந்நிகழ்வு இந்தியா முழுமைக்கும் மிகப்பெரும் அதிர்வுகளை உருவாக்குகிறது. மும்பையில் மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. அது வன்முறை நிகழ்வாக மாறுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு எத்தகைய அச்சத்தில் மும்பை உறைந்திருந்ததோ அந்நிலைக்கு மீண்டும் மும்பை சென்றது. மும்பை இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரம் என்பது நமக்குத் தெரியும். மும்பையின் அச்சநிலை இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கவல்லது. அவ்வன்முறைக்கு மறுநாட்களில் மஹாராஷ்டிராவின் இரு வலதுசாரி கட்சிகளும் நடத்திக் காட்டிய பொதுக்கூட்டங்களிலும் பாசிசக் கருத்துகள் உதிர்க்கப்பட்டன. பீகார் மாநில போலீஸ்காரர்கள் மிரட்டப்பட்டனர். பதிலுக்கு பீகார் மாநிலத்தின் அரசியல்வாதிகள் தாக்கரேக்களின் பூர்வீகமே பீகார்தான் என்று தொல்பொருள் ஆராய்ச்சி செய்தனர். மற்றொருபுறம் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தியாவின் தெற்குப்பகுதியில் வாழும் வட-கிழக்கு மக்கள் மிரட்டப்பட்டனர். அதன் விளைவு அம்மக்களின் பெரும் இடப்பெயர்ச்சி. பிரிவினைக்குப் பிறகான மிகப்பெரும் இடப்பெயர்ச்சி.

assam_riots_600

இந்தியாவில் நடைபெறும் கலவரங்கள் அனைத்தும் மதரீதியான பரிமாணத்தை மிக விரைவில் அடையும் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தும். முதலாவதாக மதம் ஒரு வன்முறை நிகழ்வின் வீரியத்தை அதிகரிக்கவல்லது. வன்மத்தை அதிகரித்து அதைக் கொண்டிருப்பவர்களை பைத்திய நிலைக்கு கிறங்கடிக்கும் ஆற்றல் மதத்துக்கு உண்டு. ஒரு வன்முறை நிகழ்வுக்கு மதத்தை அடிப்படையாக்கினால் அவ்வன்முறைக்குப் பொறுப்பானவர்கள் எளிதில் தங்கள் குற்றங்களிலிருந்து விடுபடலாம். அல்லது மதம் தக்க பாதுகாப்பை அவர்கள் கேட்காமலேயே அளிக்கும். உலகத்து மனிதர்களின் மனங்களைப் பண்படுத்தத் தோன்றியதாக விளக்கப்படும் மதம் இன்றைக்கு உலகின் ரத்த ஆறுகளுக்கு ஊற்றுக் கண்களுமாக அமைந்து போனதை யாரும் மறுக்கமுடியாது.

இந்தியாவிற்குள் உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்குள்ளும் இஸ்லாமிய மக்களின் பரவலைப் பற்றி அறிய இந்திய வரலாற்றை நாம் கூர்ந்து நோக்கவேண்டும். இந்தியப் பிரிவினை நடத்திய ஊழிக்கூத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டும். முதலாவது ஆங்கிலேய-பர்மியப் போரில் ஆங்கிலேயர்கள் வென்றதன் அடிப்படையில் 1826-ல் ஆங்கிலேயர்கள் பர்மாவுடன் செய்துகொண்ட‌ 'யாண்டாபூ' ஒப்பந்தத்தின்படி அஸ்ஸாம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அதன்பிறகு அஸ்ஸாமின் சமூக, பொருளாதாரக் கட்டமைப்புகளில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன. காலனியாதிக்கவாதிகளின் லாபவெறி அஸ்ஸாமையும் விடவில்லை. அஸ்ஸாமில் தேயிலைத் தோட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. தேயிலைத் தோட்ட முதலாளிகள் ஆங்கிலேயர்களாக இருந்தார்கள். தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு மிகப் பெரும் எண்ணிக்கையில் வேலையாட்கள் தேவைப்பட்டார்கள். இந்நேரத்தில் தமிழகத்திலிருந்து பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிய இலங்கை அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பதையும், இலங்கை சுதந்திரம் அடைந்தபின்பு அவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு நிராதரவாக விடப்பட்டார்கள் என்பதையும் அவர்களில் ஒரு பகுதியினர் தமிழகத்திற்கு திருப்பியனுப்பப்பட்டனர் என்பதையும் மிக்க வேதனையோடு நாம் நினைவு கூர வேண்டும்.

1905-ல் வங்காளப் பிரிவினைக்கு முன்னர் அஸ்ஸாமும், கிழக்கு வங்காளமும் ஒரே மாநில அலகில் இடம் பெற்றிருந்தபோது முஸ்லீம்களின் அஸ்ஸாமியக் குடியேற்றங்கள் தீவிரமடையவில்லை. அதன் பிறகு கிழக்கு வங்காள மக்களை (இஸ்லாமியர்களை) அஸ்ஸாமில் குடியமர்த்தும் வேகம் அதிகரித்தது. 1905-க்குப் பிறகான காலத்தில் ஏறத்தாழ 10 லட்சத்திலிருந்து 15 லட்சம் கிழக்கு வங்க இஸ்லாமிய மக்கள் அஸ்ஸாமில் குடியேறினர் என்றும் இது அன்றைக்கு அஸ்ஸாமின் மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்கிலிருந்து ஆறில் ஒரு பங்கு அளவு வரை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சமீந்தாரி ஆட்சி முறையும், பர்மனென்ட் செட்டில்மெண்ட் முறையும் வங்காளத்தை பஞ்சம், பஞ்சமாக சிதைத்துப் போட்டிருந்த காலம் அது. வங்காளக் குடியானவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள் என்பதும், நிலம் தேடி, பிழைப்பு தேடி இந்தியாவின் எப்பகுதிக்கும் செல்ல அவர்கள் அணியமாகவிருந்தார்கள் என்பதும் வரலாறு.

அஸ்ஸாமின் பிரம்மபுத்திரா நதிக்கரையில் செழிப்பான வனங்களும், மேய்ச்சல் நிலங்களும் அபரிதமாக இருந்தன. அவ்வனப்பகுதிகளிலும், மேய்ச்சல் நிலங்களிலும் பாரம்பரியமாக வசித்து வந்த போடோ இனப் பழங்குடிகளினால் எவ்வித லாபமும் ஆங்கிலேய முதலாளிகளுக்குக் கிடைக்கவில்லை. காரணம் போடோ மக்கள் பழங்குடிகளுக்கே உரித்தான பயிரிடு முறையை (shifting cultivation) பின்பற்றி வந்தனர். அது அம்மக்களின் உணவுத் தேவைகளை நிறைவேற்றியதே தவிர உபரி உற்பத்தியை அவர்கள் மூலம் பெற வாய்ப்பில்லை என உணர்ந்த ஆங்கிலேய முதலாளிகள் உபரி மக்கள்தொகையைக் கொண்ட வங்காள மக்களைக் குடியேற்றத் தொடங்கினர். ஆங்கிலேயர்களின் லாபவெறிதான் பிரதான காரணம் என்றாலும் அன்றைக்கு இருந்த வங்காளத்தின் சமூகப் பொருளாதாரச் சூழ்நிலையும் இக்குடியேற்றத்திற்குப் பெரும் உதவி செய்தது. போடோ பழங்குடிகளின் மற்றுமொரு பண்பையும் நாம் காணவேண்டும். காலம் காலமாக தாங்கள் பயன்படுத்தி வந்த விளைநிலங்களை, மேய்ச்சல் நிலங்களை தங்களுடையது என்று அவர்கள் என்றும் உரிமை பாராட்டியது கிடையாது. வனங்கள் முழுவதையுமே தங்கள் பயன்பாட்டில் வைத்திருந்தாலும் வனம் என்றைக்கும் அழிந்தது கிடையாது. இந்தியா முழுவதும் இன்று பழங்குடி மக்களினங்கள்தான் இருக்கும் சொற்ப வனங்களைக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். இன்னமும் காப்பாற்றி வருகிறார்கள். அவ்வனங்களுக்குக் கீழே இருக்கும் கனிம வளங்களைக் கொள்ளைக் கொண்டு போவதற்கு வசதியாக அரசு அப்பழங்குடிகளின்மீது பச்சைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அஸ்ஸாமில் குடியேறிய இஸ்லாமியர்களை தொடக்கத்தில் அஸ்ஸாமியர்கள் வரவேற்றனர். அஸ்ஸாமின் வளர்ச்சியில் அவர்கள் பங்கு செலுத்தினர். கிழக்கு வங்காள முஸ்லீம்களின் குடியேற்றத்தை ஒரு கட்டத்தில் அச்சத்தோடு நோக்கிய அஸ்ஸாமியர்கள் குடியேற்றப் பகுதிகளில் ஒரு எல்லை வரை மட்டுமே அவர்கள் குடியமர்த்தப்படவேண்டும் என்ற Line System முறையைக் கொண்டுவந்தனர். 1920களில் Line System அமுல்படுத்தப்பட்டது. இம்முறையினால் இஸ்லாமியர்களின் குடியேற்றங்கள் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. 1939-ல் காங்கிரஸின் பர்டோலோய் அமைச்சரவையின் ராஜினாமாவையடுத்து முஸ்லீம் லீக் உதவியுடன் பதவியேற்ற சையத் முகம்மது சதுல்லா Line System முறையை ஒன்றுமில்லாமல் ஆக்கினார். கிழக்கு வங்க இஸ்லாமியர்களைத் தொடர்ச்சியாகக் குடியேற்றம் செய்தார். 1942-ல் மீண்டும் பதவிக்கு வந்த சதுல்லா, "போருக்கு உதவ அதிகமான உணவை விளைவிக்கவேண்டும்" என்றத் திட்டத்தின்கீழ் நவ்காங், டார்ரங், காம்ரூப் மாவட்டங்களின் வனப்பகுதிகளையும், மேய்ச்சல் நிலங்களையும் குடியேற்றங்களுக்காகத் திறந்துவிட்டார். சதுல்லாவின் இத்திட்டத்தை "Grow More Muslims" என்று வேவல் பிரபு அழைத்தார். 1940 வாக்கில் கீழ் அஸ்ஸாமின் பார்பீட்டா கோட்டத்தின் இஸ்லாமியர்களின் தொகை 49 சதவீதமாக மாறியது. 1911-ல் இது 0.1 சதவீதம் மட்டுமே. சுதந்திரத்திற்குப்பின்பு ஆட்சி செய்த காங்கிரஸ் அரசிலும், அஸ்ஸாம் இயக்கத்திற்குப் பின்னர் ஆட்சியைப் பிடித்த அசாம் கனபரிசத் அரசிலும் போடோ பழங்குடிகளின் வாழ்வுரிமைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

குடியேறிய இஸ்லாமியர்களில் பெரும் பகுதியினர் அஸ்ஸாமிய மொழியைக் கற்று, அஸ்ஸாமிய இஸ்லாமியர்களாயினர். இந்நிகழ்வுதான் இயல்பாகவும் இருக்கமுடியும். மொழியால் அவர்கள் அஸ்ஸாமியராயினர். தமிழகத்திலும் கூட மராட்டிய, நாயக்கர் ஆட்சிக் காலங்களில் பல்லாயிரக்கணக்கான கன்னடர்களும், தெலுங்கர்களும், மராட்டியர்களும் குடியேறினர். தமிழ் பயின்ற அவர்கள் இன்று அயலவர்கள் என்று பிரித்தறியப்பட முடியாதவர்களாக உள்ளனர். ஒரு தேச உருவாக்கத்திலும் சரி, ஒரு சமூக உருவாக்கத்திலும் சரி மொழி வகிக்கும் பங்கை நாம் நிராகரித்துவிட முடியாது. அதுபோல மதம் என்ற ஒன்று ஒரு தேச உருவாக்கத்திற்கோ, ஒரு சமூக உருவாக்கத்திற்கோ உதவி செய்துவிட முடியாது. மதம் என்பது தேச, சமூக உருவாக்கங்களுக்கு அடிப்படையாக இருக்குமானால் பாகிஸ்தானும், பங்களாதேஷும் பிளவு பட்டிருக்காது. ஐரோப்பாவின் பல தேசங்கள் ஒரே நாடாகத் தான் இருந்திருக்கும். எனவே தான் அஸ்ஸாம் மாநிலத்தில், அஸ்ஸாம் சமூகத்தில் இஸ்லாமியர்களும் என்றைக்குமே பிரிக்கமுடியாத ஒரு அங்கம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. போடோ இன‌த்தவர்களின் நிலமும், வனமும், அவற்றில் அவர்களுக்குரிய உரிமையும் எவ்வளவு நிதர்சனமான உண்மையோ, அந்த அளவுக்கு அஸ்ஸாம் மாநிலத்தில் நீண்ட காலத்துக்கு முன்னரே குடியேறிய இஸ்லாமியர்களுக்குமான உரிமையும் உண்மை.

assam_riot_570

தங்களின் ஒரே வாழ்வாதாரமான வனங்களும், மேய்ச்சல் நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டே வருவதை உணர்ந்த போடோ மக்கள் தனி மாநிலம் கேட்டுப் போராட்டம் தொடங்கினர். தொடக்கத்தில் மத்திய, மேற்கு அஸ்ஸாம் நிலப்பகுதிகளை ஒருங்கிணைத்து அங்கு வசிக்கும் அனைத்துப் பழங்குடி மக்களுக்குமான ஒரு தனி மாநிலம் வேண்டும் எனத் தொடங்கப்பட்ட இப்போராட்டம், நாளடைவில் மிஷிங் மற்றும் ராஃபா இன மக்களின் எதிர்ப்பையடுத்து போடோ இனத்துக்கான தனி மாநிலக் கோரிக்கையாக மாறியது. தாங்கள் கோரிய தனி மாநில நிலப்பரப்பில் போடோ இனமக்கள் மிகப் பெரும் பழங்குடி இனத்தவராக இருந்தபோதிலும் அவர்கள் பெரும்பான்மையினராக இல்லை. தனிமாநில இயக்கம் வன்முறையில் இறங்கியது. அன்றைய அஸாம் கனபரிசத் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய காங்கிரஸ் அரசு போடோ பிரிவினையை ஊக்குவித்தது. மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்தபிறகு போடோ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஒப்பந்தத்தின்படி அரசியல் சட்டத்தின் ஆறாம் பிரிவு திருத்தப்பட்டு போடோ தன்னாட்சிப் பிரதேசம் உருவாக்கப்பட்டது. இக்கவுன்சிலின் மொத்தமுள்ள 46 இடங்களில் 30 இடங்கள் போடோ இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆட்சிப்பிரதேசத்தில் போடோ அல்லாத மீதம் 70 சதவீத மக்களுக்கு மீதம் 16 இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டன. பழங்குடி அல்லாத மக்களின் நில உரிமைகளைப் பாதுகாக்க ஒப்பந்தத்தில் ஷரத்துகள் இருந்தாலும் அந்த ஷரத்துகள் தங்களுக்கு எதிரானவை என போடோக்களும், அந்த ஷரத்துகள் நடைமுறையில் மதித்து செயல்படுத்தப்படவில்லை என போடோ அல்லாத மக்களும் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்துள்ளனர்.

போடோ பழங்குடி மக்களுக்கும், குடி பெயர்ந்த இஸ்லாமியர்களுக்கும் இடையிலான மோதல்கள் கடந்த பல்லாண்டுகளாக தொடர்ந்து வந்திருக்கிறது. அஸ்ஸாம் கிளர்ச்சியின்போது தற்போதைய மாரிகோவான் மாவட்டத்தின் நெல்லீ என்னுமிடத்தில் 1983, பிப்ரவரி 18ல் ஒரே நாளில் வங்காள இஸ்லாமிய குடியேற்ற மக்கள் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக 1800 பேர் பழங்குடி மக்களால் கொல்லப்பட்டனர். 1993 அக்டோபரில் நடைபெற்ற கலவரத்தினால் இடம்பெயர்ந்த 4000 இஸ்லாமியக் குடும்பங்கள் இன்னமும் உதவி முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். 1994ல் பார்பீடா மாவட்டத்தில் நடைபெற்ற கலவரத்தில் போடோக்களும், இஸ்லாமியர்களுமாக 113 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் வீடிழந்திருக்கிறார்கள். 2008 அக்டோபரில் டார்ரங், உடல்குரி மாவட்டங்களில் நடைபெற்ற கலவரங்களில் இரு தரப்பிலும் 64 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இரண்டு லட்சத்திற்கும் பேற்பட்ட மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்தார்கள். இப்படியான ஒரு தொடர்ச்சிதான் சமீபத்தியக் கலவரங்களும்.

போடோக்களின் நியாயமான உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் வேறுபட்ட கருத்துகள் இருக்கமுடியாது. அதேபோல் போடோ தன்னாட்சிப் பிரதேசத்துக்கு அரசியல் சாசனத்தின் ஆறாவது பிரிவு (இந்தியப் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளின் ஆட்சித் திறம் பற்றியது) அதிகாரத்தை வழங்கியது பற்றியும், அக்கவுன்சிலில் போடோக்களுக்கு உள்ள மிக அதிகப்படியான உரிமையை ம‌றுப‌ரிசீல‌னை செய்வ‌து ப‌ற்றியும் மத்திய‌ அர‌சும், மாநில‌ அர‌சும் ந‌ட‌வ‌டிக்கை எடுப்ப‌து அவ‌சிய‌ம். அதோடு மார்ச், 25, 1971 (பாகிஸ்தான் அர‌சு டாக்காவில் ந‌ட‌வ‌டிக்கை தொட‌ங்கிய‌ நாள்)‍க்குப் பிற‌கு ப‌ங்க‌ளாதேஷிலிருந்து அஸ்ஸாமில் குடியேறிய‌ ம‌க்க‌ளை அடையாள‌ம் க‌ண்டு அவ‌ர்க‌ள் மீது ச‌ட்ட‌பூர்வ‌ ந‌ட‌வ‌டிக்கை எடுப்ப‌தும் மிக‌ மிக‌ அவ‌சிய‌ம். இத்த‌கைய‌ இரு முனை ந‌ட‌வ‌டிக்கைக‌ள் போடோக்க‌ளுக்கும், க‌ட‌ந்த‌ 100 ஆண்டுக‌ளுக்கும் மேலாக‌ வாழ்ந்துவ‌ரும் இஸ்லாமிய‌ மக்களுக்கும் இண‌க்க‌த்தை ஏற்ப‌டுத்தும். போடோ ம‌க்க‌ளுக்கும், இஸ்லாமிய‌ ம‌க்க‌ளுக்குமான‌ இக்க‌ல‌வ‌ர‌ம் ஒரு இந்து முஸ்லீம் க‌ல‌வ‌ர‌மாக‌ எவ‌ரும் க‌ருதிவிட‌வும் கூடாது.

போடோக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே நடைபெறும் கலவரங்களில் போடோ அல்லாத அஸ்ஸாமியர்கள் ஒருபோதும் இஸ்லாமியர்களை கைவிட்டுவிடக்கூடாது என்பதை மிகவும் அழுத்தமாகக் குறிப்பிடவேண்டும்.

- செ.சண்முகசுந்தரம், தஞ்சாவூர்.

Comments

42 comments

42
viyasan
அசாமில் ச‌ட்ட‌விரோத‌மாக‌ குடியேறிய‌ ப‌ங்க‌ளாதேசிக‌ளை முஸ்லீம்க‌ளாக‌ ம‌ட்டும் பார்த்து ஏனைய‌ இந்திய‌ முஸ்லீம்க‌ளைத் திருப்திப்ப‌டுத்துவ‌த‌ற்காக‌ எழுதுவ‌தையும், அர‌சிய‌ல் க‌ட்சிகள் அவ‌ர்க‌ளின் வாக்குக‌ளைப் பெறுவ‌த‌ற்காக‌ உப‌யோகிப்ப‌தையும் நிறுத்த‌ வேண்டும். அசாமிலுள்ள‌ ப‌ங்க‌ளாதேசிக‌ள் ச‌ட்டவிரோதமான‌ குடியேறிக‌ள். அவ‌ர்க‌ளுக்கென‌ சுத‌ந்திர‌மான‌, அவ‌ர்க‌ளின் ம‌த‌ச்சார்புள்ள வள‌மான‌ நாடிருக்கும் போது, இந்தியாவின் எல்லைக‌ளைச் ச‌ட்ட‌விரோத‌மாக‌க் க‌டந்து குடியேறிய‌வ‌ர்க‌ளை இந்தியாவில் குடிய‌ம‌ர்த்தி, இந்திய‌ர்க‌ளாகிய‌ அசாமிய‌ர்க‌ளின் பூர்வீக‌ ம‌ண்ணை அவ‌ர்க‌ளுக்கும் பிரித்துக் கொடுக்குமாறு கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் நியாய‌மான‌தாகும்?

அசாம் பிர‌ச்சனை, இந்து முஸ்லீம் பிர‌ச்சனைய‌ல்ல‌. அய‌ல் நாட்டிலிருந்து ச‌ட்ட‌ விரோத‌மாக‌ அசாமில் குடியேறிய‌/ குடியேறுகிற‌ இந்திய‌ர‌ல்லாத‌வ‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌து. இந்தியாவின் குடிவ‌ர‌வு ‍ குடிய‌க‌ல்வு ச‌ட்டங்க‌ள் முறையாக‌, ம‌ற்ற‌ மாநில‌ங்க‌ளிலுள்ள‌ வாக்குக‌ளைப் ப‌ற்றிச் சிந்திக்காம‌ல் ந‌டைமுறைப்ப‌டுத்த‌ப் ப‌ட்டால் அசாம் பிர‌ச்ச‌னை இல‌குவாக‌த் தீர்க்க‌ப்ப‌ட‌க் கூடிய‌தொன்றாகும்.

இன்று த‌மிழ‌ர்க‌ளின் பழமை வாய்ந்த‌ த‌லைந‌க‌ராகிய‌ த‌ஞ்சை மாந‌க‌ர‌த்தில் முஸ்லீம்க‌ள் தான் பெரும்பான்மையின‌ர் அல்ல‌து பெரும்பான்மையின‌ராகி வ‌ருகின்ற‌ன‌ர் என‌க் கேள்விப்ப‌ட்டேன். த‌மிழும் தேவார‌மும் ஒலித்த‌ ம‌ண்ணில் அன்னிய‌ அர‌பி மொழி ஒலிப்ப‌தை உண்மையான‌, மான‌முள்ள‌ எந்த‌ த‌மிழ‌னும் விரும்ப‌மாட்டான். ஆனால் ப‌ல‌ரும் அதை வெளிப்ப‌டையாக‌ச் சொல்ல‌த் த‌ய‌ங்குவார்க‌ள். த‌ஞ்சாவூர் முஸ்லீம்க‌ள் த‌மிழைப் பேசுப‌வ‌ர்க‌ளாக இருப்ப‌தால் ஏனைய‌ த‌மிழ‌ர்க‌ள் அதைப் பெரிது ப‌டுத்த‌ மாட்டார்க‌ள். ஆனால் அசாமைப் போல், த‌ஞ்சாவூரிலும் ப‌ங்க‌ளாதேஸ் முஸ்லீம்க‌ள் குடியேறி, த‌மிழ‌ர்க‌ளை அவ‌ர்க‌ளின் சொந்த‌, பார‌ம்ப‌ரிய‌ ம‌ண்ணிலேயே சிறுபான்மையின‌ராக்கி, க‌லாச்சார‌ அடையாள‌ங்க‌ளை மாற்றி, வ‌ள‌மான‌ தஞ்சாவூரின் வ‌ய‌ல் நில‌ங்க‌ளிலும் ப‌ங்கு கேட்டால் நிச்ச‌ய‌மாக‌ திருவாள‌ர் செ.சண்முகசுந்தரம், இப்படியான‌ க‌ட்டுரையை எழுத‌மாட்டார். “தலைவலியும், பல்வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்” என்பார்க‌ள்.

முஸ்லீம்களால் மீண்டும், மீண்டும் முதுகில் குத்த‌ப்ப‌ட்ட‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளால் அசாமிய‌ர்க‌ளின் உண‌ர்வை நிச்ச‌ய‌மாக‌ப் புரிந்து கொள்ள‌ முடியும். இன்று, ஈழ‌த்தின் கிழ‌க்கு மாகாணத்தை முழுமையாக‌ முஸ்லீம் மாகாண‌மாக‌ மாற்றுவோம் என்கிறார் இல‌ங்கை முஸ்லீம் காங்கிர‌சின் இளைஞ‌ர் காங்கிர‌சிஸ் தேசிய‌ அமைப்பாள‌ரும், கிழ‌க்கு மாகாண‌ ச‌பை உறுப்பின‌ராகிய‌ முக‌ம்ம‌து ஜெமில். அப்ப‌டியொரு முஸ்லீம் த‌லைவ‌ர் த‌ஞ்சாவூரிலும் உருவாகாம‌லிருக்க‌ த‌ஞ்சைப் பெருவுடையாரை வேண்டுவ‌தைத் த‌விர‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு வேறு வ‌ழி கிடையாது.
siraj
சட்ட விரோதகமாக குடியேறி, அவர்கள் கள்ள சாரயாமோ, விபசாரமோ நடத்தவில்லை. தங்களின் வயிற்று பிழைப்பிற்காக வந்துள்ளனர். உலகில் இது போன்று அகதிகள் வருகை எந்த நாட்டிலும் இல்லையா ? அங்கெல்லாம் இது மாதிரியான கலவரங்கள் நடக்கின்றனவா ?. அகதிகளாக வரும் ஒவ்வொரு மக்களையும் பாதுகாப்பது உலக நாடுகளின் கடமை. ஈழத்தமிழர்களை இங்கு அனுமதிக்க முடியாது என்றால் அது எவ்வளவு வேதனையான விசயமோ? அது போல்தான் வங்காள குடிகளும். அப்படி பார்த்தால் வெளிநாட்டில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களை எல்லாம் அந்த வெளிநாட்டினர் அடிக்க நினைத்தால் ?. அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை அமெரிக்கர்கள் அடிக்க நினைத்தால் ?. அது சரியான அணுகுமுறையா ?

தஞ்சாவூரில் தமிழ் இல்லாமல் போய், அரபி வந்து விட்டது என மருகும் சகோதரனே, பல நூறு ஆண்டுகளாக நம் தமிழை கோவில் கருவறை வரை சமஸ்கிருதம் ஆண்டு வருகிறதே ? அது பற்றிய கவலை நமக்கு ஏன் இல்லை ? நீங்கள் தமிழ் உணர்வுடன் பேசுவதை விடுத்து பாசிச இந்துத்துவ, இந்து முன்னனி ஆள் போல் பேசுகிறீர்கள் ?

சிங்களம் முழுமையாக ஆக்கப்பட்டது உங்கள் கவலை இல்லை, இருக்கும் தமிழ், முஸ்லிம், கிருஸ்த்துவ சிறுபான்மை இன மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒடுக்கப்படுவது உங்கள் கண்களுக்கு உறுத்த வில்லை.
viyasan
இத‌ற்கு நான் முத‌லிலேயே அசாம் பிர‌ச்ச‌னை ப‌ற்றிய‌ இன்னொரு க‌ட்டுரையில் ப‌தில‌ளித்துள்ளேன். இப்ப‌டிச் சொல்வ‌தால் இல‌ங்கை த‌மிழ் அக‌திக‌ளைத் திருப்பிய‌னுப்ப‌லாமே என‌ சில‌ புத்திசாலிக‌ள் கேள்வியெழுப்ப‌லாம். ப‌ங்க‌ளாதேஸ் போல், இல‌ங்கையிலும் த‌மிழ‌ர்க‌ளுக்கென‌ நாட‌மைந்தால் வெளிநாடுக‌ளிலும், இந்தியாவிலுமுள்ள‌ இல‌ங்கைத் த‌மிழ் அக‌திக‌ளும் திருப்பிய‌னுப்ப‌ப்ப‌ட‌ வேண்டிய‌வ‌ர்க‌ளே. தமிழ்நாட்டிலுள்ள‌ இல‌ங்கை அக‌திக‌ளால் த‌மிழ்நாட்டு ம‌க்க‌ள் சிறுபான்மையின‌ராக்க‌ப்பட‌வோ அல்ல‌து மொழி, க‌லாச்சார‌ மாற்ற‌ங்க‌ளோ ஏற்ப‌ட‌ப் போவ‌தில்லை ஏனென்றால் அவ‌ர்க‌ளும் த‌மிழ‌ர்க‌ளே. ஆனால் அசாமில் ச‌ட்ட‌விரோத‌மாக‌க் குடியேறும் ப‌ங்க‌ளாதேஸ் முஸ்லீம்க‌ளும், அசாமிய‌ பூர்வீக‌ ம‌க்க‌ளும் இரு துருவ‌ம் போன்ற‌வ‌ர்க‌ள். அத‌னால் அசாம் பிர‌ச்சனை, இந்து முஸ்லீம் பிர‌ச்சனைய‌ல்ல‌. அய‌ல் நாட்டிலிருந்து ச‌ட்ட‌ விரோத‌மாக‌ அசாமில் குடியேறிய‌/ குடியேறுகிற‌ இந்திய‌ர‌ல்லாத‌வ‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌து. இந்தியாவின் குடிவ‌ர‌வு ‍ குடிய‌க‌ல்வு ச‌ட்டங்க‌ள் முறையாக‌, ம‌ற்ற‌ மாநில‌ங்க‌ளிலுள்ள‌ முஸ்லீம்க‌ளின் வாக்குக‌ளைப் பெறுவதற்காக‌, சில‌ நாட்டு ந‌ல‌ம‌ற்ற‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் அசாம் பிர‌ச்ச‌னையை இந்து ‍ முஸ்லீம் பிர‌ச்ச‌னையாக‌ உருவாக்க‌ முனையாது விட்டால் அசாம் பிர‌ச்ச‌னை இல‌குவாக‌த் தீர்க்க‌ப்ப‌ட‌க் கூடிய‌தொன்றாகும்.

அசாமில் அத்துமீறிக் குடியேறியுள்ள‌ ப‌ங்க‌ளாதேசிக‌ளை அடிக்குமாறோ, அவ‌ர்க‌ளுக்கெதிரான வ‌ன்முறைக‌ளையோ நான் நியாய‌ப்ப‌டுத்த‌வில்லை, அதனால் அமெரிக்காவில் இந்திய‌ர்க‌ளும், புல‌ம்பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளும் 'அடிக்க‌ப்பட்டால்' என்ற‌ உங்க‌ளின் உதார‌ண‌ம் தேவைய‌ற்ற‌து ம‌ட்டும‌ல்ல‌, என்னுடைய‌ க‌ருத்துக்குச் ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌தும் கூட‌.
இந்தியா த‌லையிட்டு ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் நாடும் , ப‌ங்க‌ளாதேஸ் போல் பிரிந்திருந்தால், ஒவ்வொரு ஈழ‌த்த‌மிழ‌னும் த‌ன‌து நாட்டுக்கு ம‌கிழ்ச்சியாக‌த் திரும்பிப் போவ‌து ம‌ட்டும‌ல்ல‌, முழு இந்தியாவுக்கும், இந்திய‌ர்க‌ளுக்கும் ந‌ன்றிக்க‌ட‌னுள்ள‌வ‌ர்க‌ளாக‌ இருந்திருப்பார்க‌ள் என்ப‌து மறுக்க‌ முடியாத‌ உண்மை. அப்ப‌டியாகவா ப‌ங்க‌ளாதேஸ் மக்க‌ள் இன்று இந்தியாவை நினைக்கிறார்க‌ள், ந‌ட‌ந்து கொள்கிறார்க‌ள்? அசாம் பிர‌ச்ச‌னையில் இந்திய‌க்குடிம‌க்க‌ளாகிய‌ பூர்வீக அசாமிய‌ர்க‌ளின் ந‌ல‌ன்க‌ள், அவ‌ர்க‌ளின் உரிமை, க‌லாச்சார‌ம் என்ப‌வ‌ற்றைப் பாதுகாக்க‌ வேண்டிய‌ க‌ட‌மை இந்திய‌ அர‌சுக்குண்டு. ப‌ங்க‌ளாதேஸ் அர‌சுட‌ன் பேசி, இந்தியாவுக்குள் அத்துமீறிய‌ ப‌ங்களாதேசிக‌ள் அனைவ‌ரையும் நாடு க‌ட‌த்த‌ வேண்டும். அவ‌ர்க‌ளுக்கு பூர்வீக‌ இந்திய‌ அசாமிய‌ர்க‌ளின் நில‌ங்க‌ளைப் ப‌ங்கு போட்டுக் கொடுக்குமாறு கேட்ப‌து வெறும் முட்டாள் த‌ன‌ம்.

முற்றிலும் உண்மை, த‌மிழ‌ர்க‌ளின் கோயில்க‌ளில் த‌மிழில் வ‌ழிபாடு ந‌ட‌த்த‌ப்ப‌ட‌ வேண்டும். அண்மையில் சுவிசில் ந‌ட‌ந்த‌ சைவ‌மாநாட்டில் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளால் அப்ப‌டியொரு கோரிக்கை கொண்டு வ‌ந்து நிறைவேற்ற‌ப்ப‌ட்டுள்ள‌து என‌ அறிந்தேன். ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளால் அந்த‌ த‌வ‌றும் திருத்த‌ப்ப‌ட‌லாம். அத‌ற்காக‌ பார‌ம்ப‌ரிய‌ த‌மிழ் ம‌ண்ணாகிய‌ தஞ்சாவூர் அரபு ம‌யமாக்க‌ப்ப‌டுவ‌து த‌வ‌ற‌ல்ல‌ என‌வும் சில‌ர் வாதாட‌ நினைப்ப‌தைப் பார்க்க‌ சிரிப்பு ம‌ட்டும‌ல்ல‌ வேத‌னையாகவுமிருக்கிற‌து.

இல‌ங்கையில் த‌மிழ், கிறித்த‌வ‌ர்க‌ள் என்று யாரும் கிடையாது. ம‌த‌ அடிப்ப‌டையில் த‌மிழின‌ம் பிரிவ‌தை நாம் விரும்புவ‌தில்லை, எந்த‌ ம‌த‌ அடிப்ப‌டையிலான‌ பிரிவினையையும் நாங்க‌ள் ஆத‌ரிப்ப‌துமில்லை. இல‌ங்கையில் த‌மிழ் பேசும் முஸ்லீம்க‌ள் தான் ச‌லுகைகளுக்காக் த‌ம்மை ம‌த‌ அடிப்ப‌டையில் பிரித்து வைத்துக் கொண்டு த‌மிழ‌ர்களின் முதுகில் குத்தினார்க‌ள், குத்துகிறார்க‌ள், நிச்ச‌ய‌மாக‌ வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் குத்துவார்க‌ள்.அத‌னால் இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளைப் பொறுத்த‌வ‌ரையில் அவ‌ர்க‌ள் த‌மிழ‌ரல்ல, வெறும் த‌மிழ் பேசும் முஸ்லீம்க‌ள் மட்டுமே. எந்த‌ ஈழ‌த்த‌மிழ‌னும் கிறித்த‌வ‌ த‌மிழ‌ர், இந்து த‌மிழ‌ர் என‌ப்பிரிக்கப்ப‌டுவ‌தை விரும்ப‌ மாட்டார்க‌ள். இன்றும் த‌மிழ‌ர்க‌ளின் அவ‌ல‌த்தை த‌ய‌க்க‌மின்றி, த‌ம‌துயிரைப் ப‌ணய‌ம் வைத்து உல‌குக்குத் தெரிவிப்ப‌வ‌ர்க‌ள் த‌மிழ்க் கிறித்த‌வ‌க் குருமார்க‌ள். நாங்க‌ள் த‌மிழ‌ர்க‌ளாக‌, நாம் த‌மிழ‌ர்க‌ளாக ஒன்றிணைந்து த‌மிழின‌ம் ஒடுக்க‌ப்ப‌டுவ‌தை, தமிழ்நாட்டில் த‌மிழ‌ர‌ல்லாத‌வ‌ர்க‌ளின் ஆதிக்க‌த்தை எதிர்க்க‌ வேண்டுமே த‌விர‌, எங்க‌ளை த‌மிழ‌ர்க‌ளாக‌வும் (இந்து என்று சொன்னால் தீட்டுப்பட்டு விடுமா?) கிறித்த‌வ‌ர்க‌ளாக‌வும், ப‌ள்ள‌னாகவும், பறைய‌னாக‌வும், சாதிக்க‌ட்சிக‌ள் அமைத்தும் த‌மிழின‌த்தைப் பிள‌வு ப‌டுத்த‌க் கூடாது. முத‌லில் த‌மிழின‌ம் சாதியை ம‌ற‌ந்து ஒன்று ப‌ட‌வேண்டும்.
செ.சண்முகசுந்தரம்
திரு.வியாசனுக்கும்,திரு.சிராஜுக்கும் நன்றி.அஸ்ஸாமின் சமீபத்தியத் தாக்குதல்களை இந்து-முஸ்லீம் மோதலாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றக் கருத்தை திரு.வியாசன் வலியுறுத்திக் கூறியதற்கு நன்றி.சில அஸ்ஸாம் ஊடகங்கள் இம்மோதலின்போது முஸ்லிம் அல்லாத அஸ்ஸாமியர்களை ஆதரித்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.'தஞ்சாவூரில் தேவாரத்திற்குப் பதில் அரபு மொழி ஒலிப்பதை எந்த உண்மையான, மானமுள்ள தமிழனும் விரும்பமாட்டான்' எனக் கூறுகிறீர்கள்.நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் எனப் புரியவில்லை.தஞ்சையில் தமிழ் உபயோகிக்கக்கூடாது,அரபு மொழிதான் உபயோகப்படுத்தவேண்டும் என்று யாரும் சட்டம் செய்யவில்லை.எனக்குத் தெரிந்தவரை எல்லாக் கோவில்களிலும் தமிழும்,சமஸ்கிருதமும் ஒலிக்கின்றன.எந்தக் கோவிலிலும் அரபு ஒலிக்கவில்லை.எல்லா மசூதிகளிலும் அரபுதான் ஒலிக்கும்.ஏனென்றால் அரபு மொழியில் மட்டுமே குரான் ஓதப்படவேண்டும்.வேறு எம்மொழியிலும் குரான் மொழி பெயர்க்கப்படக்கூடாது என கட்டுப்பாடுகளும் உள்ளன. தஞ்சாவூரில் முஸ்லீம்கள் பெரும்பான்மை அடையப்போகிறார்கள் என கூறுகிறீர்கள்.முஸ்லீம்கள் இந்நாட்டின் பிரஜைகள்.இதனை நாம் தெளிவாகப்புரிந்து கொள்ளவேண்டும்.முஸ்லீம்களின் குடியிருப்புகளையும்,மக்கள்தொகையையும் கூர்ந்து கவனித்தோமானால் சில ஊர்களில்,சில நகரங்களில் அவர்கள் எண்ணிக்கை பெரும்பான்மையாக இருப்பதை அறியமுடியும்.அவர்களின் பொதுமொழி தமிழ்தான்.அவர்களின் தொடர்பு மொழியும் தமிழ்தான்.தஞ்சாவூரில் தமிழர்களனைவரும்(இந்துக்கள்,இஸ்லாமியர்கள்,கிறிஸ்தவர்கள்)மதசகிப்புத்தன்மையோடு ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகிறோம்.தஞ்சாவூரின் சமூகக் கலாச்சாரத்தைப் பற்றி வியாசன் அவர்கள் எந்தக் கவலையும் படவேண்டாம்.கிழக்கிலங்கையில் முஸ்லீம் தலைவர்களின் நிலையை நான் ஆதரிக்கவில்லை.ஆனால் கடந்தகால வரலாறுகளை அவர்கள் விரைவில் மறந்துவிடமுடியாதல்லவா?'எந்த மத அடிப்படையிலும் பிரிவினையை நாங்கள் ஆதரிப்பதில்லை' என்கிறீர்கள்.ஆனால் தமிழர்கள் என்றும் முஸ்லீம்கள் என்றும் வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள்.ஆனால் மதம் கடந்து,சாதி கடந்து தமிழர்கள் ஒரு தமிழ்ச்சாதியாக ஒன்றுபடவேன்டும் என்ற உங்களது வேண்டுகோளை நான் 100 சதம் ஏற்றுக்கொள்கிறேன்.
viyasan
//'தஞ்சாவூரில் தேவாரத்திற்குப் பதில் அரபு மொழி ஒலிப்பதை எந்த உண்மையான, மானமுள்ள தமிழனும் விரும்பமாட்டான்' எனக் கூறுகிறீர்கள்.நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் எனப் புரியவில்லை. தஞ்சாவூரின் சமூகக் கலாச்சாரத்தைப் பற்றி வியாசன் அவர்கள் எந்தக் கவலையும் படவேண்டாம்.//

திரு. செ.ச‌ண்முக‌சுந்த‌ர‌ம் அவ‌ர்க‌ளுக்கு,

உங்களின் ப‌திலுக்கு மிக்க‌ ந‌ன்றி. ம‌ன்னிக்க‌வும், என்னுடைய‌ க‌ருத்தை உங்க‌ளுக்கு விள‌ங்கும் வ‌கையில் விள‌க்க‌மாக‌க் கூறவில்லை போல் தெரிகிற‌து. அதாவ‌து அசாமில் எவ்வாறு கொஞ்ச‌ம், கொஞ்ச‌மாக‌ அத்து மீறிக் குடியேறிய ப‌ங்க‌ளாதேஸ் முஸ்லீம்க‌ள் இன்று பூர்வீக‌ அசாமிய‌ர்க‌ளின் மொழிக்கும், க‌லைக்கும், க‌லாச்சார‌த்துக்கும், ஏன் அவ‌ர்க‌ளின் பூர்வீக‌ நில‌ங்க‌ளிலும் ப‌ங்கு கேட்டு, அவ‌ர்க‌ள் த‌ம‌து சொந்த‌ ம‌ண்ணில் அடையாள‌த்தை இழ‌ந்து விடுவோமோ என்று ப‌ய‌ப்ப‌டும் நிலை உண்டாகியுள்ள‌தோ, அதேபோல், த‌ஞ்சாவூரிலும் த‌மிழ‌ர்க‌ளை விட‌ முஸ்லீம்க‌ள் பெரும்பான்மையின‌ராகினால் ந‌டைபெற‌லாம் என்ப‌து தான் என்னுடைய‌ க‌ருத்தாகும். த‌ஞ்சாவூரிலுள்ள முஸ்லீம்கள் த‌மிழைப் பேசினாலும் கூட‌, தஞ்சாவூரில் அர‌பு மொழி த‌மிழை விட‌ உர‌த்தொலிக்க‌ப் போகிற‌து என்ப‌து தான் உண்மை. த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ள் த‌ம்மை இன்றும் த‌மிழ‌ர்க‌ளாக‌வே க‌ருதுவதால் நீங்க‌ள் என்னுடைய‌ க‌ருத்துட‌ன் ஒத்துப் போக‌ மாட்டீர்க‌ள், அதை விட‌ என்னுடைய‌ க‌ருத்தை வெளிப்ப‌டையாக‌ ஏற்றுக் கொள்ள‌வும் ப‌ல‌ர் த‌ய‌ங்குவ‌ர் என்ப‌தும் என‌க்குத் தெரியும். ஆனால் த‌மிழ்நாட்டின் வ‌ரலாற்றுச் சிற‌ப்புடைய‌, த‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ச்சின்ன‌ங்க‌ளாகிய‌ விள‌ங்கிய‌ திருவ‌ழுந்தூர் (தேர‌ழுந்தூர்) போன்ற தமிழ‌ர்க‌ளின் பழமை வாய்ந்த‌ ஊர்களில் முஸ்லீம்க‌ள் பெரும்பான்மையான‌தும்,ந‌ட‌ந்த‌வ‌ற்றைப் ப‌ற்றி நான் சொல்லித் தான் த‌மிழ்நாடு தெரிந்து கொள்ள‌ வேண்டிய‌தில்லை. அப்ப‌டியான‌ ஒரு நிலை, நாங்க‌ள் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, உல‌க‌மெல்லாம் ப‌ர‌வி வாழும் த‌மிழ‌ர்க‌ளெல்லாம் பெருமித‌த்தோடு பார்க்கும் த‌ஞ்சைமாந‌க‌ருக்கும் ந‌ட‌ந்து விட‌க் கூடாதென்ற‌ என்னுடைய‌ ஆத‌ங்க‌த்தைத் தான் நான் தெரிவித்தேன். ஆனால் ராஜ‌ ராஜ சோழ‌னும், ராஜேந்திர‌ சோழ‌னும் த‌மிழ‌ர்க‌ளின் எதிரிக‌ளைக் க‌ள‌மாடி, மீண்ட‌ த‌மிழ்ம‌ண்ணாகிய‌ த‌ஞ்சைம‌ண் த‌ன‌து த‌மிழ்த்துவ‌த்தையும், த‌னித்துவ‌த்தையும் இழ‌ந்து அர‌புக்க‌லாச்சார‌ம‌ய‌மாக்க‌ப்ப‌டாதென‌, த‌ஞ்சைத் த‌மிழ‌னாகிய‌ நீங்க‌ளே உத்த‌ர‌வாத‌ம் த‌ரும்போது, புல‌ம்பெய‌ர்ந்து வாழும் த‌மிழ‌ர்க‌ளாகிய‌ நாங்க‌ள் க‌வலைப்ப‌ட‌த்தேவையில்லை என்ப‌தை எண்ணும்போது ம‌கிழ்ச்சியாக‌ இருக்கிற‌து.
ஈழ‌த்தின் கிழ‌க்கு மாகாண‌த்தில் முஸ்லீம்க‌ளுக்கு ந‌ட‌ந்த‌தாக‌க் க‌ருத‌ப்ப‌டும் சம்ப‌வ‌ங்க‌ள் ம‌ட்டும் தான் விள‌ம்ப‌ர‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ன‌வே தவிர‌, முஸ்லீம்க‌ள் ப‌ல‌ நூற்றுக்கும‌திக‌மான‌ த‌மிழ‌ர்க‌ளைக் கொலைசெய்த‌தும், த‌மிழ்ப்பெண்க‌ளைக் க‌ற்ப‌ழித்த‌தும், சிங்க‌ள் இராணுவ‌த்துட‌ன் சேர்ந்து கொண்டு ந‌ட‌த்திய‌ அட்டூழிய‌ங்க‌ளும், இல‌ங்கைப் பிர‌ச்ச‌னையில் அக்க‌றை கொண்ட‌ சில‌ ந‌டுநிலையான‌ எழுத்தாள‌ர்க‌ளையும், வெளிநாட்டு அர‌சிய‌ல்வாதிக‌ளையும், ம‌னித‌வுரிமை நிறுவ‌ன‌ங்க‌ளையும் த‌விர‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ளிட‌ம் சென்றடைய‌வில்லை. அத‌னால் தான் ஈழத்தமிழ‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னையில் முஸ்லீம்க‌ள் ஒன்றும் தெரியாத‌ அப்பாவிக‌ள் என்ற‌ த‌வ‌றான‌ க‌ருத்து த‌மிழ்நாட்டில் நில‌வி வ‌ருகிற‌து.
நாங்க‌ள் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ளை ம‌த அடிப்ப‌டையில் பிள‌வு ப‌டுத்துவ‌தை விரும்புவ‌தில்லை. ஆனால் இல‌ங்கையிலுள்ள‌ த‌மிழ் பேசும் முஸ்லீம்க‌ள் த‌ம்மைத் த‌மிழ‌ர்க‌ளாக‌ அடையாள‌ப்ப‌டுத்துவ‌தில்லை.அத‌னால் நாங்க‌ளும் அவ‌ர்க‌ளைத் த‌மிழ‌ர்க‌ளாக‌க் க‌ருதுவ‌தில்லை. எங்க‌ளைப் பொறுத்த‌வ‌ரையில் அவ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள‌ல்ல‌. எந்த‌ள‌வுக்கு த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ள், அர‌பும‌ய‌மாக்க‌ப்ப‌டுகிறார்க‌ள், தமது ம‌த அடையாள‌த்தை வ‌லுப்ப‌டுத்த‌ முனைகிறார்க‌ள் என்ப‌தைக் க‌ண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அத‌னால் ஈழ‌த்தில் முஸ்லீம்க‌ள் எப்ப‌டி த‌மிழ‌ர்க‌ளின் முதுகில் குத்தினார்க‌ளோ அதே நிலை த‌மிழ்நாட்டிலும் ஏற்ப‌டும் என்ப‌து தான் என்னுடைய‌ க‌ருத்தாகும். அப்ப‌டி ஒரு நிலை ஏற்ப‌ட்டால் த‌மிழ‌ன் என்ற‌ முறையில் என‌க்கும் வேத‌னை தான். அத‌னால் என்னுடைய‌ க‌ருத்தைத் தெரிவிக்கும் உரிமை என‌க்குமுண்டல்ல‌வா?
viyasan
ச‌கோத‌ரி லறீன‌ புதுக்க‌தை விடுகிறார். உண்மையில் 1983 இன‌க் க‌ல‌வ‌ர‌த்தில் சிங்க‌ள‌க்கேடிக‌ளுட‌ன் சேர்ந்து த‌மிழ‌ர்க‌ளின் க‌டைக‌ளையும், வீடுக‌ளைக் கொள்ளைய‌டித்த‌திலும், எரித்த‌திலும் கொழும்பு மாந‌க‌ர‌ எல்லைக்குள் செறிந்து வாழும் முஸ்லீம் கேடிக‌ளுக்கும் ப‌ங்குண்டு. ஆனால் சிங்க‌ள‌வ‌ர்க‌ளால் பாதுகாக்க‌ப்ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ளில் என்னுடைய‌ உற‌வின‌ர்க‌ளுமுண்டு. ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் விடுத‌லைப் போராட்ட‌த்துக்கு எப்ப‌டியெல்லாம் இல‌ங்கை முஸ்லீம்க‌ள் இடையூறாக‌ இருந்தார்க‌ள், த‌ம‌து சுய‌ந‌ல‌ அர‌சிய‌லால் எப்ப‌டியெல்லாம் அவ‌ர்க‌ளின் மொழிவ‌ழிச் சகோத‌ர‌ர்க‌ளாகிய‌ இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளின் முதுகில் குத்தினார்க‌ள் என்ப‌தையெல்லாம் என்னால் விவ‌ர‌மாக‌ விவாதிக்க‌ முடியும் ஆனால் அத‌ற்கு கீற்று உக‌ந்த‌ இட‌ம‌ல்ல‌. என்னுடைய‌ இந்த‌க் க‌ருத்து வெளியிட‌ப்ப‌டாம‌லே போக‌லாம். ஆனால் உண்மையில் கீற்று நடுநிலைமையான‌ இணைய‌த்த‌ள‌ம‌ல்ல‌. இங்கு பார்ப்ப‌ன‌, இந்து எதிப்புக்கு ம‌ட்டும் தான் முன்னுரிமையுண்டு. சில‌ உண்மையான‌ விட‌ய‌ங்க‌ளைக் கூட‌, த‌ம‌து இல‌ட்சிய‌ங்க‌ளுக்கும், நோக்க‌ங்க‌ளுக்கும் எதிரான‌வையென்று கார‌ண‌ம் கூறி, கீற்று ஆசிரிய‌ர் குழு வெளியிட‌ ம‌றுத்த அனுப‌வ‌ம் என‌க்குண்டு.

இன்னும் எவ்வ‌ள‌வு நாளைக்கு தான் யாழ்ப்பாண‌த்திலிருந்து முஸ்லீம்க‌ளை வெளியேற்றிய‌ ச‌ம்பவ‌த்தை வைத்து அனுதாப‌ம் ச‌ம்பாதிக்கும் நோக்கில் இல‌ங்கை முஸ்லீம்க‌ள் இருக்கிறார்க‌ளோ தெரியாது. இவ்வ‌ள‌வுக்கும் பிர‌பாக‌ர‌ன் ம‌ட்டும‌ல்ல‌, ஏனைய‌ த‌மிழ‌ர்க‌ளும், ச‌ம்ப‌ந்த‌ன் போன்ற‌ இன்றைய‌ த‌மிழ்த்த‌லைவ‌ர்க‌ளும் வெளிப்ப‌டையாக‌ ம‌ன்னிப்பு கேட்ட‌து ம‌ட்டும‌ல்ல‌, ஏன் அப்ப‌டியான‌ ஒரு முடிவையெடுக்க‌ வேண்டியேற்ப‌ட்ட‌தென்ப‌த‌ற்கு விள‌க்க‌மும் த‌ந்து விட்டார்க‌ள். இல‌ங்கை முஸ்லீம் த‌லைமையும் பிர‌பாகர‌னின் ம‌ன்னிப்பையேற்று அவ‌ர்க‌ளுட‌ன் விருந்தும் உண்ட‌ன‌ர்.

உண்மையில் யார் அந்த‌ப் ப‌டுகொலையைச் செய்தார்க‌ள் என்று இன்றும் விவாதிக்க‌ப்ப‌டும் காத்தான் குடி ப‌டுகொலைக‌ளுக்காக‌, உல‌க‌த்திலுள்ள‌ முஸ்லீம் நாடுகளிட‌மிருந்தெல்லாம் ப‌ண‌, படை, இராணுவ‌ உத‌விக‌ளையெல்லாம் சிங்க‌ள‌ அர‌சுக்குப் பெற்றுக் கொடுத்து இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளனைவ‌ரையும் ப‌ழிவாங்கி, இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளை வேரறுக்க‌ச் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு உத‌விய‌வ‌ர்க‌ள் இல‌ங்கை முஸ்லீம்க‌ள். ஆனால் 12 ஆவ‌ணி 1990 இல் வீர‌முனைப் பிள்ளையார் கோயிலில் 200க்கும‌திக‌மான‌ அப்பாவித் த‌மிழ் அக‌திக‌ளை முஸ்லீம் ஊர்காவ‌ல் ப‌டையின‌ர் ப‌டுகொலை செய்த‌மைக்கும், 10 ஆனி 1990 இல் ச‌ம்மாந்துறையில் ம‌ட்டும‌ல்ல‌, அத‌ன் தொட‌ர்ச்சியாக‌ கொக்க‌ட்டிச்சோலையில், சொறிக்க‌ல்முனையில், க‌ண்ணகிபுர‌த்தில், செங்க‌ல‌டியில், துறைநீலாவ‌ணையில், நாலாம் கொல‌னி அம்பாறையில், த‌ள‌வாயில், திருகோண‌ம‌லையில், ச‌த்துருக்கொண்டானில் எல்லாம் முஸ்லீம்க‌ள், சிங்க‌ள‌ இராணுவ‌த்துட‌ன் சேர்ந்து தமிழ‌ர்க‌ளைப் ப‌டுகொலை செய்த‌மைக்கும், த‌மிழ்ப்பெண்க‌ளைக் க‌ற்ப‌ழித்த‌துக்கும் எந்த‌ முஸ்லீமாவ‌து ம‌ன்னிப்புக் கேட்ட‌துண்டா? யாழ்ப்பாண‌த்திலிருந்து முஸ்லீம்களை அவ‌ர்க‌ள் இல‌ங்கை இராணுவ‌த்துக்கு உள‌வு பார்க்கிறார்க‌ள் என்ற‌ கார‌ண‌த்தால், த‌விர்க்க‌ முடியாம‌ல் வெளியேற்றிய‌ போது, எந்த‌ முஸ்லீம் ச‌கோதரி மேலாவ‌து ஈழ‌த்த‌மிழ் இளைஞ‌ர்க‌ள் கைவ‌த்தார்க‌ளா? க‌ற்ப‌ழித்தார்க‌ளா? கொலை செய்தார்க‌ளா? ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளில் அல்ல‌து புலிக‌ளில் காழ்ப்புண‌ர்வுள்ள‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ள் கூட‌ க‌ற்பழிப்பு என்ற‌ ப‌ழியை ஒருநாளும் கூறிய‌தில்லை. ஏனென்றால் இன்றும் த‌மிழ்முஸ்லீம்க‌ளை அவ‌ர்க‌ளின் பெண்க‌ளை எங்க‌ளின் ச‌கோத‌ரிக‌ளாக‌ப் பார்க்கும் ப‌ண்புள்ள‌வ‌ர்க‌ள் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள், ஆனால் முஸ்லீம் ஊர்காவ‌ல் ப‌டையின‌ர் கிழ‌க்கில் சிங்க‌ளவர்க‌ளுட‌ன் சேர்ந்து த‌மிழ்ப்பெண்க‌ளைக் க‌ற்ப‌ழித்த‌ன‌ர். அத‌ற்காக‌வாவ‌து ச‌கோத‌ரி ல‌றீனா போன்ற எந்த‌ முஸ்லீமாவ‌து ம‌ன்னிப்புக் கேட்ட‌துண்டா?.

கிழ‌க்கில் ந‌ட‌ந்த‌ த‌மிழ‌ர்க‌ளின் ப‌டுகொலைக‌ளிலெல்லாம் முஸ்லீம்க‌ளின் ப‌ங்க‌ளிப்புக்கு ந‌டுநிலையான‌ ஆதார‌ங்க‌ள் இணைய‌த்திலேயே உண்டு. ஆனால் இழிச்ச‌வாய்த் த‌மிழ‌ர்களுக்கு முஸ்லீம்க‌ள் போல் அவ‌ற்றை விள‌ம்ப‌ர‌ப்ப‌டுத்தி உல‌க‌த்தின் அனுதாப‌த்தைப் பெற‌வோ, அல்ல‌து இல‌ங்கை முஸ்லீம்க‌ள் அப்பாவிக‌ள‌ல்ல‌, ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் விடுத‌லைப் போராட்டத்தில் எந்த‌ள‌வுக்கு அவ‌ர்க‌ள் தமிழ‌ர்க‌ளின் முதுகில் குத்தினார்க‌ள் என்ப‌தையோ வெளிப்ப‌டுத்த‌த் தெரிய‌வில்லை.

ம‌ண்ட‌ப‌த்தில் வாழும் எம‌து ச‌கோத‌ரர்க‌ளுக்கு நாம் என்ன‌ செய்தோம் என்ப‌தை நாங்க‌ள் விள‌ம்ப‌ர‌ப்ப‌டுத்த‌த் தேவையில்லை. ம‌ண்டப‌த்திலுள்ள நிலையை விட‌ மோசமான‌ நிலையில் எங்க‌ள் ச‌கோத‌ர‌ர்க‌ளின் நிலை ஈழ‌த்திலுள்ள‌து. அவ‌ர்க‌ளுக்குப் புல‌ம்பெய‌ர்ந்த‌ என்னைப் போன்ற‌ த‌மிழ‌ர்க‌ள் உத‌விக‌ள் செய்து கொண்டிருக்கிறார்க‌ள். எங்க‌ளின் ச‌கோத‌ர‌ர்க‌ளின் இன்றைய‌ இழிநிலைக்கு இல‌ங்கை முஸ்லீம்க‌ள் த‌ம‌து மொழிவ‌ழிச்ச‌கோத‌ர‌ர்க‌ளாகிய‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் முதுகில் குத்தி, அவ‌ர்க‌ளை அழித்தொழிக்க‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு உத‌வி செய்த‌மையும் ஒரு கார‌ணம் என்ப‌தை நீங்க‌ள் ஒப்புக்கொள்கிறீர்க‌ளா?
sirajudeen
திரு. விசயன். அசாமில் குடியேறியது வங்காளி முஸ்லிம்கள் மட்டுமல்ல, வங்காளி இந்துக்களும்தான். ஆனால், தாக்கப்பட்டதோ, முஸ்லிம்கள் என்பதை கவனத்தில் கொள்ளப்படவேண்டும். இந்த குடிபெயர்வு உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் இந்திய அரசின் ஒப்புதலோடுதான் நடைபெற்றது என்பதே உண்மை. இந்திய ஈழம் பெற்றுக் கொடுக்கும் என்ற பகல் கனவை நீங்கள் மட்டும்தான் காண வேண்டும். அசாமில் கலாசாரத்தை, தஞ்சாவூரின் பெருமையை காக்க பாடுபடும் நீங்கள், ஏன் போடோ இன மக்களின் கலாசாரத்தை இந்துத்துவ பார்ப்பனிய கலாசாரத்திற்கு மாற்றும் பார்ப்பனிய பானியா கும்பலை விட்டு விட்டீர்கள். தமிழ்நாடு முழுவதும் மார்வாடி செட்டுகளின் கையில் உள்ளது. அவர்களின் கலாசாரம் இங்கு பரப்பப்படுகிறது. அதை தட்டிக் கேக்க முடியாதவர்கள்தான், தஞ்சாவூரில் அரபி மொழி அதிகரிப்பைப் பற்றியும், அசாமின் கலாசாரம் கவலைபடுகிறீர்கள். தமிழனுக்கு சாதி வேண்டாம், மதம் வேண்டாம் என்று போலி கண்ணீர் வடிக்கும் நீங்கள்தான், தமிழ்நாட்டு முஸ்லிம், தமிழ்நாடு கிறஸ்தவர்கள் என பிரித்து பார்க்கும் வேலையை செய்கிறீர்கள்.

முதலில் தமிழ் தேசிய வாதிகள், ஆதிக்க சாதி வெறியன் பசும்பொன் முத்துராமலிங்கத்திடம் மண்டி இடுவதை நிறுத்தினால்தான், தாழ்த்தப்பட்ட சமுகம் திரும்பி பார்க்கும்.

ஈழ விவகாரம் குறித்து புலம் பெயர் தமிழர் திரு.கலையரசின் பதில் இதோ:

அசாமில் வாழும் வங்காளிகள் எல்லோரும் முஸ்லிம்கள் அல்ல. நிறைய இந்து வங்காளிகளும் வாழ்கின்றனர். அசாமில் புராதன இந்து ராஜ்யங்கள் இருந்துள்ளன. பண்டைய காலத்தில் இருந்தே வங்காள மொழி பேசும் மக்கள் அங்கு வாழ்ந்து வந்தனர். இன்றைய அசாம் பிரச்சினை, பழங்குடி இன மக்களின் வாழ்விடம் சம்பந்தமானது. பழங்குடி இன மக்களின் பிரதேசங்களில், வங்காளிகளின் குடியேற்றம் இந்திய அரசின் ஒப்புதலின் பேரில் தான் நடந்து வந்தது.

அசாம் பிரச்சினை, இலங்கையில் இந்தியத் தமிழர் குடியேறிய பிரச்சினையை ஒத்திருக்கின்றது. அசாம் போன்று, இலங்கையிலும் பிரிட்டிஷ் காலத்தில் தான் பல மாற்றங்கள் ஏற்பட்டன. பிரிட்டிஷ் காலத்தில் வங்காளிகள் குடியேறி இருந்தால், அது அவர்கள் தவறல்ல. ஏனெனில், அன்று எல்லாம் ஒரே நாடாக இருந்தது. எனக்குத் தெரிந்த வரையில், பங்களாதேஷ் (அல்லது கிழக்கு பாகிஸ்தான்) பிரிந்த பின்னர் பெருமளவு வங்காளிகள் குடியேறி இருக்க வாய்ப்பில்லை. பீகாரில் வேலை தேடும் பங்களாதேஷ் முஸ்லிம்கள் போல, அசாமுக்கும் சென்றிருப்பார்கள். அவர்கள் அசாமில் நிரந்தரமாக தங்கி விடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அப்படியே தங்கினாலும், வேலை தேடி வந்தவர்களை மட்டும் திருப்பி அனுப்புவது வேறு விடயம். அசாம் பிரச்சினை இலங்கையுடன் எப்படி ஒத்துப் போகின்றது என்று சொல்கிறேன்.

இலங்கையில் வடக்கு கிழக்கில் பூர்வீகத் தமிழர்கள் வாழ்கின்றனர். டச்சுக் காலனிய காலத்திலேயே, ஆயிரக் கணக்கான தமிழ்நாட்டு தமிழர்கள் குடியேறினார்கள். அவர்களில் ஒரு பகுதி சிங்களவர்களுடனும், மறுபகுதி ஈழத் தமிழர்களுடனும் ஒன்றாக கலந்து விட்டனர். ஆனால், பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வரப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளிகள், மலைநாட்டில் குடியேற்றப் பட்டனர். இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், அவர்களை வெளியேற்றுவது சிங்கள இனவாதிகளின் குறிக்கோளாக இருந்தது. மலையகத் தமிழரின் குடியுரிமை பறிக்கப் பட்டது. இந்திய-இலங்கை அரசுகள் ஒப்பந்தங்கள் போட்டு, அவர்களை வெளியேற்றினார்கள். அதனால், மலையகத்தில் தமிழரின் சனத்தொகை அரைவாசியாகக் குறைந்தது. வடக்கு-கிழக்கு தமிழர்கள் கூட, சிங்களப் பேரினவாதிகளின் தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு துணை நின்றார்கள். மலையகத் தமிழர்கள் வெளியேற்றப் பட்டிருக்கா விட்டால், இன்று தமிழரின் விகிதாசாரம் குறைந்தது 40 % மாகிலும் இருந்திருக்கும்.

இன்று அசாம் வங்காள முஸ்லிம்களை, பங்களாதேஷ் நாட்டிற்கு மீள்குடியேற்றம் செய்வதை ஆதரித்துப் பேசுகிறார்கள். இதே நியாயத்தை தான், இனக்கலவரங்களின் போது தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழரை அடித்து விரட்டிய சிங்கள இனவாதிகளும் சொன்னார்கள். அதாவது, "(ஈழத்) தமிழருக்கு சிங்கள சிறிலங்காவில் இடமில்லை. அவர்கள் தமது தாய்நாடான இந்தியாவுக்குப் போக வேண்டும்." என்று சொல்லித் தான் அடித்தார்கள். பெரும்பான்மை ஈழத்தமிழர்கள் இந்துக்கள் என்பதாலும், தமிழ்நாடு அயலில் இருந்ததாலும், இந்தியா முழுவதும் தமிழர்கள் வாழ்வதாகத் தான் சிங்கள இனவாதிகள் நம்பினார்கள்.

கனடாவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் அகதிகளாக சென்ற ஈழத் தமிழர்கள், பத்து வருடங்களுக்குப் பிறகாவது அந்த நாடுகளின் பிரஜைகளாக அங்கீகரிக்கப் பட்டார்கள். ஆனால், இந்தியாவில், அதுவும் தமிழர்களின் மாநிலமான தமிழ்நாட்டில், ஈழத்தமிழ் அகதிகள் இருபது வருடங்களுக்கும் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் எத்தனை பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப் பட்டது? அவர்கள் எதற்காக, இத்தனை வருடங்களாக அகதி முகாம்களில் தங்க வைக்கப் பட்டிருக்கின்றனர்? பிரஜாவுரிமை கொடுக்கா விட்டாலும், வெளிநாட்டவர்களுக்கான நிரந்தரமாக தங்கும் உரிமையையாவது கொடுத்திருக்கலாம் தானே? இந்தியாவில் வசிக்கும் எத்தனையோ வெள்ளையின மக்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை இருக்கிறது. ஏன் ஈழத்தமிழருக்கு இல்லை? அதற்கு காரணம் உண்டு. ஆரம்பத்தில் இருந்தே, இந்திய அரசு அவர்களை தற்காலிகமாகத் தங்க வைக்கும் எண்ணத்தில் மட்டுமே விட்டு வைத்திருந்தனர். பாகிஸ்தான் ஆப்கான் அகதிகளை எப்படி நடத்தியதோ, அதே மாதிரித் தான் இந்தியா ஈழத் தமிழ் அகதிகளை நடத்தி வருகின்றது. அதாவது, சிறிலங்கா அரசுடன் அரசியல்-பொருளாதார பேரம் பேசலுக்கு ஈழத் தமிழ் அகதிகள் தேவை. இலங்கை முழுவதையும், இந்திய மேலாதிக்கத்திற்குட்பட்ட காலனி நாடாக்கும் காலத்தில், ஈழத் தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப் படுவார்கள். அது வரைக்கும் தான் காத்திருக்கிறார்கள். ஆகவே, ஈழம் கிடைத்தால் மட்டுமே திருப்பி அனுப்புவார்கள் என்பது ஒரு கற்பனாவாதம்.
ஏ. எச். லறீனா
//முஸ்லீம்களால் மீண்டும், மீண்டும் முதுகில் குத்த‌ப்ப‌ட்ட‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளால் அசாமிய‌ர்க‌ளின் உண‌ர்வை நிச்ச‌ய‌மாக‌ப் புரிந்து கொள்ள‌ முடியும். //

சகோதரர் வியாசன்,

யார் முதுகில் யார் குத்தினார்கள் என்று வரலாறு தெரியாமல் பேசாதீர்கள்.

1983 இல் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் பெரும்பான்மையினரால் கட்டவிழ்த்து விடப்பட்டபோது, தங்கள் இல்லங்களில் தமிழர்களை மறைத்து வைத்து உயிர் காத்தவர்கள் இங்குள்ள முஸ்லிம்கள்தாம்.

ஈழத் தமிழரின் பிரச்சினைகளின் போதும், அவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளின்போதும் தோளோடு தோள் நின்றவர்கள்தாம் வடக்குக் கிழக்கு முஸ்லிம்கள். ஆரம்ப காலத்தில் விடுதலை இயக்கங்களில்கூட முஸ்லிம்களும் பணியாற்றி உயிர் நீத்துள்ளனர். அதையெல்லாம் முற்றாக மறந்துவிட்டு, யாரோ ஒரு சிலரின் தவறுக்காய் 1990 இல் முழு மொத்த வடக்கு - கிழக்கு முஸ்லிம் மக்களையும் உடுத்த உடையுடன், வெறும் 500 ரூபாய் பணத்துடன் சொந்த மண்ணைவிட்டுத் துரத்தியவர்கள் அல்ல, துரத்தப்பட்ட முஸ்லிம்கள்தான் முதுகில் குத்துபவர்கள், இல்லையா? ஆகா! என்னே நேர்மையான கருத்து!!!

யாரோ ஒரு அரசியல் வியாதியின் உளறலைப் பெரிதுபடுத்திக்கொண்டு, இலங்கை முஸ்லிம்கள் பற்றிக் கருத்தெழுதும் நீங்கள், இலங்கை அரசுக்கு முழு ஆதரவு வழங்கிய உங்கள் இந்திய, தமிழ்நாட்டு அரசைக் கண்டித்து என்னதான் செய்தீர்கள்?

மண்டபம் அகதி முகாமில் இன்றும் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வரும் உ(எ)ங்கள் சகோதரர்களுக்கு என்ன உதவி செய்து விட்டீர்கள்? ஒரு முறையேனும் சென்று அவர்களைச் சந்தித்துள்ளீர்களா? உங்கள் அரசு நலத் திட்டத்தில் இருந்து உதவிகள் கொடுக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தீர்களா?
viyasan
ஜ‌னாப். சிராஜுடீன் அவ‌ர்க‌ள் தானும் குழ‌ம்பி ம‌ற்ற‌வ‌ர்க‌ளையும் குழ‌ப்புகிறார் போல் தெரிகிற‌து. இந்தியா ஈழ‌ம் பெற்றுத் தருமென்று நான் எங்கே ஐயா சொன்னேன். 'இந்தியா ப‌ங்க‌ளாதேசைப் பிரித்த‌து போல், ஈழ‌த்தையும் த‌னிநாடாக‌ப் பிரித்திருந்தால்', என‌ உதாரண‌த்துக்காக‌ச் சொன்னால், அதைப் பார்த்து நீங்க‌ள் குழ‌ம்பிப் போன‌து ம‌ட்டும‌ல்ல‌, நான் ப‌க‌ல் க‌ன‌வு காண்பதாக‌வும் கூறுகிறீர்க‌ளே, இது நியாய‌மா? த‌மிழ்நாட்டை மார்வாடிக‌ள் ம‌ட்டும‌ல்ல‌, த‌ம‌க்கென‌ தனியாக‌ மாநில‌ங்க‌ளை வைத்துக்கொண்டு, த‌மிழ்நாட்டுக்கு த‌ண்ணீர் கூட‌க் கொடுக்க‌ ம‌றுக்கும் த‌மிழ‌ர‌ல்லாத‌ திராவிட‌ர்க‌ளும் தான் த‌மிழ்நாட்டின் ஆட்சியையும், பொருளாதார‌த்தையும் த‌ம‌து க‌ட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்க‌ள்.அவ‌ர்க‌ளையும் தான் எதிர்க்க‌ த‌மிழ்தேசிய‌வாதிக‌ள் இன்று திர‌ள்கின்ற‌ன‌ர். அக்க‌றையிருந்தால் நீங்க‌ளும் அவ‌ர்களுட‌ன் இணைய‌ வேண்டிய‌து தானே. த‌மிழ்நாட்டுக் கிறித்த‌வ‌ர்க‌ள் தமிழ‌ர்க‌ளல்ல‌ என நான் ஒருபோதும் பிரிக்க‌வில்லை. நான் கூறுவெதெல்லாம் இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளைப் பொறுத்த‌வ‌ரையில் தமிழ்பேசும் முஸ்லீம்க‌ள் த‌மிழ‌ர்க‌ள‌ல்ல‌. ஏனெனில் அவ‌ர்க‌ள் த‌ம்மைத் த‌மிழ‌ர்க‌ளாக‌ இல‌ங்கையில் க‌ருதுவ‌தில்லை. அத‌னால் அவ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள‌ல்ல‌. நாங்க‌ள் அவ‌ர்க‌ளுடன் த‌மிழ‌ர்க‌ளாக‌ ஒன்றுப‌ட‌ விரும்பினாலும், இல‌ங்கையிலுள்ள‌ த‌மிழ்பேசும் முஸ்லீம்க‌ள், த‌ம‌து முன்னோர்க‌ள் தமிழ‌ர்க‌ள‌ல்ல‌, அவ‌ர்க‌ள் அரேபியாவிலிருந்தோ அல்ல‌து துருக்கியிலிருந்தோ வ‌ந்த‌வ‌ர்க‌ளாக‌ப் பெருமை பேசுகிறார்க‌ள். அத‌னால் அரேபியர்க‌ளும், துலுக்க‌ர்களும் எப்ப‌டித் த‌மிழ‌ர்க‌ளாக‌ முடியுமென்ப‌தை நீங்க‌ள் தான் விள‌க்க‌ வேண்டும்.

அசாம் பிர‌ச்ச‌னை இந்து ‍ முஸ்லீம் பிர‌ச்ச‌னையும‌ல்ல‌,ஆங்கிலேய‌ர் கால‌த்திலும், ட‌ச்சுக் கால‌த்திலும், இந்தியா சுத‌ந்திரம‌டைய முன்பும், ப‌ங்க‌ளாதேஸ் த‌னிநாடாக‌ப் பிரியு முன்பும் அசாமில் குடியேறிய‌ வங்காளிகளைப் ப‌ற்றிய‌தோ அல்ல‌து இந்தியாவின் வ‌ங்காள‌ மாநில‌த்திலிருந்து வ‌ங்காள‌த்தில் குடியேறிய‌ வங்காளிகள் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌தோ அல்ல‌. ப‌ங்க‌ளாதேஸ் பிரிவினைப் போராட்ட‌க் கால‌த்தில் அக‌திக‌ளாக‌க் குடியேறிய‌ வ‌ங்காளிக‌ள் திரும்பிப் போக‌வில்லை. அவ‌ர்க‌ளில் கூட‌ பெரும்பாலானோரை அங்கேயே நிர‌ந்த‌ர‌மாக‌ வாழ‌ போடோ பூர்வீக குடியின‌ரும் உட‌ன்ப‌ட்ட‌ன‌ர். ஆனால் ப‌ங்க‌ளாதேஸ் த‌னிநாடாக‌ப் பிரிந்த‌ பின்ன‌ரும், இந்தியாவுக்குள் அத்து மீறி ஒவ்வொரு நாளும் குடியேறிய‌/குடியேறுகின்ற‌ ப‌ங்க‌ளாதேசி க‌ள்ள‌க்குடியேறிக‌ளிளால் ப‌ங்க‌ளாதேஸ் முஸ்லீம்க‌ளின் எண்ணிக்கை இன்று அசாமின் எல்லா மாவ‌ட்ட‌ங்க‌ளிலும் உய‌ர்ந்துள்ள‌து. 1941 ச‌ன‌த்தொகைக் க‌ண‌க்கெடுப்பில் அசாமின் பூர்வீக‌க் குடிக‌ளின் எண்ணிக்கை முழுச்ச‌ன‌த்தொகையில் 53.16% ஆனால் இன்று அவ‌ர்க‌ள் 37.23 ம‌ட்டும் தான். ப‌ங்க‌ளாதேஸ் பிரிவ‌த‌ற்கு முன்னால் குடியேறிய‌ முஸ்லீம்க‌ளைத் தொட‌ர்ந்து அசாமில் வாழ‌ அனும‌திக்க‌வும், ஆனால் ப‌ங்க‌ளாதேசிலிருந்து அசாமிற்குள் ஒவ்வொரு நாளும் க‌ள‌வாக‌க் குடியேறும் ப‌ங்க‌ளாதேசிக‌ளைத் திருப்பிய‌னுப்புமாறும் தான் அசாமிய‌ர்க‌ள் கேட்கிறார்க‌ள். அத‌ன் ப‌டியே பொடொ பூர்வீக‌ அசாமிய‌ர்க‌ளுட‌ன் இந்திய‌ அர‌சு ஒப்ப‌ந்த‌ம் செய்த‌ பின்பும், ப‌ங்க‌ளாதேசிக‌ளை நாடு க‌ட‌த்தாத‌த‌ற்கு இந்திய அர‌சிய‌ல்வாதிக‌ளின் முஸ்லீம் வாக்கை ம‌ட்டும் க‌ருத்தில் கொண்ட‌ சுய‌நல‌ அர‌சிய‌ல் தான் காரண‌ம். அசாமில் குடியேறிய‌வ‌ர்க‌ளில் முஸ்லீம்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌ இந்து வ‌ங்காளிக‌ளும் உண்டென்ப‌தை ந‌ண்ப‌ர் சிராயுடீன் அவ‌ர்க‌ளே ஒப்புக்கொள்கிறார். அவ‌ர்க‌ளையும் நாடுக‌ட‌த்துமாறு தான் பூர்வீக‌ அசாமிய‌ர்க‌ள் கேட்கிறார்க‌ள். இதிலிருந்து அசாம்பிர‌ச்ச‌னைக்கு இந்து-‍முஸ்லீம் ம‌த‌ச்சாய‌ம் பூசுவ‌து த‌வ‌றான‌து ம‌ட்டும‌ல்ல‌, முட்டாள் த‌ன‌மான‌தும் கூட‌ என்ப‌து புல‌னாகிற‌த‌ல்ல‌வா?

ந‌ண்ப‌ர் சிராயுடீன் மொட்டைத் த‌லைக்கும், முழ‌ங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார். இல‌ங்கையில் ஆங்கிலேய‌ர் த‌ம‌து ஆட்சிக்கால‌த்தில், த‌ம‌து நிர்வாக‌த்தின் கீழ் அவ‌ர்க‌ளால் ச‌ட்ட‌பூர்வ‌மாக‌ இல‌ங்கையில் குடியேற்றப்ப‌ட்ட‌ ம‌லைய‌க‌த்த‌மிழ‌ர்க‌ளையும்,ப‌ங்க‌ளாதேஸ் பிரிந்த‌ பின்பும் அசாமில் க‌ள‌வாக‌க் குடியேறிய‌/குடியேறுகின்ற‌ ப‌ங்க‌ளாதேசின் முஸ்லீம்க‌ளையும் ஒப்பிடுவ‌திலிருந்தே இல‌ங்கையிலுள்ள‌ த‌மிழ‌ர்க‌ளைப் ப‌ற்றி இவ‌ருக்கு எதுவும் தெரியாது என்ப‌தை அறிய‌லாம். ம‌லைய‌க‌த் த‌மிழ‌ர்க‌ளின் குடியுரிமையைப் ப‌றித்ததை ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் ஆத‌ரித்த‌னர் என்ப‌து உண்மைய‌றியாத‌ சிறுபிள்ளைத்த‌னமான‌ பேச்சு. அசாம் பிர‌ச்ச‌னைக்கும் ஈழ‌த்த‌மிழ‌ர் பிர‌ச்ச‌னைக்கும் எந்த‌தொட‌ர்பும் கிடையாது. இருந்தாலும் ந‌ண்ப‌ர் அதையும் துணைக்க‌ழைத்திருக்கிறார். ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ரும் த‌மிழ்நாட்டில் குடியேறினாலும் கூட‌, அசாமிய‌ பூர்வீக‌க்குடிக‌ளைப் போல், த‌மிழ்நாட்டு ம‌க்க‌ளும் அவ‌ர்க‌ளின் மொழி, க‌லை, க‌லாச்சார‌ங்க‌ளில் மாற்ற‌ம் ஏற்ப‌டுவ‌தாக‌ எதிர்க்க‌ மாட்டார்க‌ள் ஏனென்றால் ஈழ‌த்த‌வ‌ர்க‌ளும் த‌மிழ‌ர்க‌ளே. ஈழ‌த்த‌மிழ் அக‌திக‌ளுக்கு இந்தியா குடியுரிமைய‌ளிக்க‌ வேண்டுமென்று எந்தச் சட்ட‌த்திலும் கிடையாது. ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் அக‌திக‌ளாக‌க் குடியேறிய‌ மேலைநாடுக‌ளைப் போல, அக‌திக‌ள் ச‌ம்ப‌ந்த‌மான‌ ஜெனீவா ஒப்ப‌ந்தத்தில் இந்தியா கைச்சாத்திட‌வில்லை. இந்தியாவிலுள்ள‌ ஈழ‌த்த‌மிழ் அக‌திக‌ளை இந்தியாவால் இல‌ங்கைக்குத் திருப்பிய‌னுப்ப‌ முடியும். அதே போல், இந்தியா த‌ன‌து வீர‌ர்க‌ளைக் காவு கொடுத்துப் பிரிவினை பெற்றுக் கொடுத்த‌ ப‌ங்க‌ளாதேசிக‌ளை, அவ‌ர்க‌ளுக்கெனத் த‌னியாக‌, அவ‌ர்க‌ளின் ம‌த‌ச்சார்புள்ள‌ நாடிருக்கும் போது, இந்திய‌க் குடிக‌ளான அசாமிய‌ர்க‌ளின் நில‌ங்க‌ளை அவ‌ர்க‌ளுக்குப் பிரித்துக் கொடுத்து, ச‌ட்ட‌விரோத‌மாக‌ இந்தியாவுக்குள் குடியேறிய‌ ப‌ங்க‌ளாதேஸ் இந்துக்க‌ளுக்கும், இஸ்லாமிய‌ர்க‌ளுக்கும் இந்திய‌க் குடியுரிமை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட வேண்டுமென்ப‌து முட்டாள்த‌ன‌ம் ம‌ட்டும‌ல்ல‌ அது இந்தியாவின் இறைமைக்கும், இந்தியாவின் ஒற்றுமைக்கும் குந்த‌க‌ம் விளைவிக்கும் செய‌லாகும்.
Kalai
இங்கே கருத்து என்ற பெயரில் இனவாதம் பேசிக் கொண்டிருக்கும் வியாசன் என்பவர், இனப்படுகொளையாளி மோடியின் பிரச்சாரப் பீரங்கி போல பேசிக் கொண்டிருக்கிறார். வேண்டுமென்றே தவறான, திரிபுபடுத்தப் பட்ட தகவல்களை எழுதி வருகின்றார். இன்று பல இந்து மதவெறியர்கள், ஈழ ஆதரவாளர் என்ற போர்வையில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். சிங்கள பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரலின் படி, தமிழ் தேசியத்தை உடைப்பதற்காக செயற்பட்டு வருகின்றார்கள். ஈழக் கோரிக்கையை பலவீனப் படுத்துவதற்காக, கிழக்கு மாகாணத்தில், தமிழ் - முஸ்லிம் முரண்பாட்டை சிங்கள அரசு வளர்த்து விட்டது. வியாசன் போன்ற பலர் சிங்கள அரசின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, அந்தப் பிரிவினையை தூண்டி விடுகின்றனர். "ஈழத்தமிழர் என்பது முஸ்லிம்களை உள்ளடக்கியது என்றும், அங்கே தமிழர் முஸ்லிம் என்ற பாகுபாடு இல்லை, புலிகள் இயக்கத்திற்குள் முஸ்லிம் போராளிகள் இருந்தார்கள், இம்ரான் படையணி இருந்ததது..." இப்படி எல்லாம் குறிப்பிட்டு, கீற்று தளத்தில் பல கட்டுரைகள் வந்துள்ளன. கீற்று ஆசிரியரும், நாம் தமிழர், மே 17 ஆதரவாளர்களும் அவ்வாறான கட்டுரைகளையும் பின்னூட்டங்களையும் எழுதி உள்ளனர். தமிழக தமிழ் தேசியவாதிகளுடன் இணையுமாறு வியாசன் அழைப்பு விடுக்கிறார். ஆனால், அவர் குறிப்பிடும் தமிழ் தேசியவாதிகள், முஸ்லிம்கள் விடயத்தில் வியாசனுடன் முரண் படுகின்றனர். அவரது இனவெறி/மதவெறிக் கருத்துக்களுக்கு கீற்று இடம் கொடுக்காததில் வியப்பேதும் இல்லை. முதலில் அவர் தமிழ் தேசியவாதத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளட்டும். பின்னர், மற்றவர்களை சேர்க்கலாம். வியாசன் போன்றவர்கள் தான் ஈழ ஆதரவாளர்கள் என்றால், அந்த ஈழம் ஒருக்காலும் சாத்தியப் பட்டிருக்காது. ஏனெனில், தமிழீழத்தின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினரான முஸ்லிம் மக்களை பகைத்துக் கொண்டு ஈழம் காண முடியாது. அப்படியே தமிழீழம் கிடைத்தாலும், அங்கே மீண்டும் முஸ்லிம் ஈழம் பிரிவதற்கான போராட்டம் நடந்திருக்கும். வியாசன் போன்றவர்கள் இலங்கையின் இனப்பிரச்சினையை புரிந்து கொள்வதில்லை. ஒரு பக்க நியாயம் மட்டுமே பேசத் தெரிந்த ஒருவரால், தமிழரின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இவர்கள் பிரச்சினையை இன்னும் பல மடங்கு மோசமாக்குவார்கள். இலங்கையில் தற்போது மூன்று தேசிய இனங்கள் இருப்பது உண்மை தான். இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் தங்களையும் நான்காவது தேசிய இனமாக அங்கீகரிக்க கோருகின்றனர். தமிழ் தேசியம் என்பது, தமிழ் மொழி பேசும் மக்களுடைய தேசியம் என்று பொருள்படும். அவர்களுக்குள் எந்தெந்த இனங்கள் கலந்திருக்கின்றன என்பது முக்கியமில்லை. அப்படி இல்லை. முஸ்லிம்களை தவிர்த்து, இந்துக்களும், கிறிஸ்தவர்களும் மட்டும் சேர்ந்தது தமிழ் தேசியம் ஆகாது. அதற்கு வேறு பெயர் வைக்க வேண்டும்.

//அசாம் பிர‌ச்ச‌னை இந்து ‍ முஸ்லீம் பிர‌ச்ச‌னையும‌ல்ல‌,ஆங்கிலேய‌ர் கால‌த்திலும், ட‌ச்சுக் கால‌த்திலும், இந்தியா சுத‌ந்திரம‌டைய முன்பும், ப‌ங்க‌ளாதேஸ் த‌னிநாடாக‌ப் பிரியு முன்பும் அசாமில் குடியேறிய‌ வங்காளிகளைப் ப‌ற்றிய‌தோ அல்ல‌து இந்தியாவின் வ‌ங்காள‌ மாநில‌த்திலிருந்து வ‌ங்காள‌த்தில் குடியேறிய‌ வங்காளிகள் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌தோ அல்ல‌////////.// //////////
//

இங்கே வியாசன் சொல்ல வருவது என்னவென்றால், வாங்காள மொழி பேசும் இந்துக்கள் அஸ்ஸாமில் வாழலாம். ஆனால், வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் திருப்பி அனுப்பப் பட வேண்டும். அசாம் பிரச்சினை, இந்து முஸ்லிம் பிரச்சினை அல்ல. ஆனால், வியாசன் அதனை மத அடிப்படையில் பிரித்துப் பார்க்கிறார். ஆரெஸெஸ் போன்ற இந்து மதவெறி அமைப்புகளும் இதே மாதிரியான பிரச்சாரங்களை செய்கின்றனர். இனவெறியர்களும், மதவெறியர்களும் சட்டவிரோதமாக பங்களாதேஷில் இருந்து குடியேறிய முஸ்லிம் அகதிகளில் இருந்து தான் ஆரம்பிப்பார்கள். ஏனென்றால் அவர்களின் பக்க நியாயம் பலவீனமாது. ஆனால், அது விரைவில் நூறாண்டுகளாக அஸ்ஸாமில் தங்கி வாழும் வங்காளி முஸ்லிம்களை வெளியேற்றுவதில் போய் முடியும். இதனை பி.பி.சி. செய்தியும் உறுதிப் படுத்தியுள்ளது. அதாவது, கலவரத்தால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வெளியேறிய எல்லோரும், புதிதாக பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அல்ல. அது இனவெறியர்கள் கூறும் நியாயம். இதே மாதிரியான நியாயத்தை தான் சிங்கள இனவெறியர்களும் கூறினார்கள். "சட்டவிரோதமாக கள்ளத்தோணிகளில் வந்து கொழும்பு போன்ற நகரங்களில் வேலை தேடிய இந்தியத் தமிழர்கள் மட்டுமே வெளியேற்றப்பட வேண்டும்" என்று ஆரம்பத்தில் சிங்கள இனவெறியர்கள் கூறி வந்தனர். இன்று வியாசன் கூறும் அதே நியாயங்களை அடுக்கினார்கள். அதாவது இந்தியாவும், இலங்கையும் சுதந்திர நாடுகளான பிறகு சட்டவிரோதமாக வந்து குடியேறிய தமிழர்களை பற்றியது மட்டுமே பிரச்சினை என்றார்கள். அவர்களை வெளியேற்றிய பிறகு, மலையகத் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றினார்கள். கடைசியாக வடக்கு-கிழக்கில் வாழ்ந்த பூர்வீகத் தமிழர்களையும், உலகம் முழுவதும் அகதிகளாக அடித்து விரட்டினார்கள். இந்திய வம்சாவழித் தமிழர்களின் குடியுரிமை பறித்த சட்டத்திற்கு ஆதரவாக, தமிழ்க் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தார்கள். இந்த விபரம் இலங்கை பாராளுமன்ற பதிவுப் புத்தகத்தில் உள்ளது. பல வரலாற்று நூல்களில் பதிவு செய்யப் பட்டுள்ளன.

//ந‌ண்ப‌ர் சிராயுடீன் மொட்டைத் த‌லைக்கும், முழ‌ங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார். இல‌ங்கையில் ஆங்கிலேய‌ர் த‌ம‌து ஆட்சிக்கால‌த்தில், த‌ம‌து நிர்வாக‌த்தின் கீழ் அவ‌ர்க‌ளால் ச‌ட்ட‌பூர்வ‌மாக‌ இல‌ங்கையில் குடியேற்றப்ப‌ட்ட‌ ம‌லைய‌க‌த்த‌மிழ‌ர்க‌ளையும்,ப‌ங்க‌ளாதேஸ் பிரிந்த‌ பின்பும் அசாமில் க‌ள‌வாக‌க் குடியேறிய‌/குடியேறுகின்ற‌ ப‌ங்க‌ளாதேசின் முஸ்லீம்க‌ளையும் ஒப்பிடுவ‌திலிருந்தே இல‌ங்கையிலுள்ள‌ த‌மிழ‌ர்க‌ளைப் ப‌ற்றி இவ‌ருக்கு எதுவும் தெரியாது என்ப‌தை அறிய‌லாம்.//
இலங்கையில் உள்ள தமிழர்களைப் பற்றி வியாசனுக்கு எதுவும் தெரியாது என்பது தெரிகின்றது. வியாசன் முதலில் இலங்கையின் இனப்பிரச்சினையின் வரலாற்றை படித்து விட்டு வருவது நல்லது. ஆங்கிலேயர்கள் மலையகத் தமிழர்களை குடியேற்றியது மாதிரித் தான், அஸ்ஸாமில் வங்காள மொழி பேசும் மக்களை குடியேற்றினார்கள். அது சட்டபூர்வமானது என்றால், இதுவும் சட்டபூர்வமாகத் தான் நடந்தது. ஏனென்றால், அஸ்ஸாம், இந்தியா, பங்களாதேஷ், இலங்கை எல்லாம் ஆங்கிலேயரின் ஆட்சியில் ஒரே நாடாக இருந்தது. இலங்கையில் மலைநாட்டில் பெருந்தோட்டச் செய்கைக்காக தமிழர்களை குடியேற்றியது போல, அஸ்ஸாமில் பெருந்தோட்ட பயிர்ச் செய்கைக்காக வங்காளிகளை கொண்டு சென்று குடியேற்றினார்கள். இந்த விபரங்கள் ஏற்கனவே மேலே சண்முகசுந்தரம் எழுதியுள்ள கட்டுரையில் வருகின்றன. எல்லோருக்கும் மிகத் தெளிவாகத் தெரியும் ஒற்றுமை, வியாசனின் கண்ணுக்கு மட்டும் தெரியவில்லை. அதுமட்டுமல்ல, அவர் தனக்குத் தானே முரண்படுகின்றார். //அசாம் பிர‌ச்ச‌னை இந்து ‍ முஸ்லீம் பிர‌ச்ச‌னையும‌ல்ல‌,ஆங்கிலேய‌ர் கால‌த்திலும், ட‌ச்சுக் கால‌த்திலும், இந்தியா சுத‌ந்திரம‌டைய முன்பும், ப‌ங்க‌ளாதேஸ் த‌னிநாடாக‌ப் பிரியு முன்பும் அசாமில் குடியேறிய‌ வங்காளிகளைப் ப‌ற்றிய‌தோ அல்ல‌து இந்தியாவின் வ‌ங்காள‌ மாநில‌த்திலிருந்து வ‌ங்காள‌த்தில் குடியேறிய‌ வங்காளிகள் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌தோ அல்ல‌//////////////// ? //இதையும் அவர் தான் கூறினார். அது சரி, அது என்ன "சட்டபூர்வமான குடியேற்றம்"? ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்து வைத்திருந்த நாட்டில் தாம் விரும்பியவாறு குடியேற்றினார்கள். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் குடியேற்றுவது சர்வதேச சட்டங்களுக்கு விரோதமானது. இலங்கை முழுவதையும் ஒரு சிங்கள அரசு ஆள்வதால், வடக்கு- கிழக்கில் நடைபெறும் சிங்களக் குடியேற்றங்களையும் வியாசன் ஆதரிக்கின்றாரா? வியாசன் ஆதரித்து பேசும் ஆங்கிலேயரின் சட்ட நியாயங்கள், சிங்களவர்களுக்கும் பொருந்துகின்றது.

//அவ‌ர்க‌ளுக்கெனத் த‌னியாக‌, அவ‌ர்க‌ளின் ம‌த‌ச்சார்புள்ள‌ நாடிருக்கும் போது, இந்திய‌க் குடிக‌ளான அசாமிய‌ர்க‌ளின் நில‌ங்க‌ளை அவ‌ர்க‌ளுக்குப் பிரித்துக் கொடுத்து, ச‌ட்ட‌விரோத‌மாக‌ இந்தியாவுக்குள் குடியேறிய‌ ப‌ங்க‌ளாதேஸ் இந்துக்க‌ளுக்கும், இஸ்லாமிய‌ர்க‌ளுக்கும் இந்திய‌க் குடியுரிமை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட வேண்டுமென்ப‌து முட்டாள்த‌ன‌ம் ம‌ட்டும‌ல்ல‌ அது இந்தியாவின் இறைமைக்கும், இந்தியாவின் ஒற்றுமைக்கும் குந்த‌க‌ம் விளைவிக்கும் செய‌லாகும்.//
இங்கேயும் ஒரு சிங்கள இனவாதியின் குரலாகத் தான், வியாசனின் குரலும் ஒலிக்கின்றது. "இந்தியாவில் தமிழர்களுக்கு என்று தனியாக தமிழ்நாடு மாநிலம் இருக்கின்றது. சட்டவிரோதமாக குடியேறிய தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென்பது முட்டாள்தனம்." ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இப்படிச் சொல்லித் தான், சிங்கள இனவெறியர்கள் தமிழர்களை ஒடுக்கினார்கள். அதன் விளைவு ஒரு இலட்சம் தமிழர்களை காவு கொண்ட இனப்படுகொலையில் சென்று முடிந்தது. ஈழத்தில் நடந்த இனப்படுகொலை அஸ்ஸாமிலும் நடக்க வேண்டும் என்பது தான், வியாசன் போன்றவர்களின் நோக்கமாக இருக்கின்றது.
ஏ. எச். லறீனா
சகோதரர் வியாசன், நீங்கள் ஏதாவது பிரபல நாளேட்டுக்கோ சஞ்சிகைக்கோ நாவல் எழுதினால் நன்றாக எடுபடும். அதைவிட்டுவிட்டு இங்கே இப்படிக் கதைவிடாதீர்கள்.

///உண்மையில் 1983 இன‌க் க‌ல‌வ‌ர‌த்தில் சிங்க‌ள‌க்கேடிக‌ளுட‌ன் சேர்ந்து த‌மிழ‌ர்க‌ளின் க‌டைக‌ளையும், வீடுக‌ளைக் கொள்ளைய‌டித்த‌திலும், எரித்த‌திலும் கொழும்பு மாந‌க‌ர‌ எல்லைக்குள் செறிந்து வாழும் முஸ்லீம் கேடிக‌ளுக்கும் ப‌ங்குண்டு.///

83 கலவரத்தில் இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள முஸ்லிம்கள் (நடுநிலையான சிங்களவர்களும்தான்) தமிழ்ச் சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்டியிருக்காவிட்டால் பேரினவாதத் தீவிரவாதிகள் தமிழர்களைப் பூண்டோடு ஒழித்துக்கட்டி இருப்பார்கள் என்ற குறைந்தபட்ச நன்றியுணர்வுகூட இல்லாமல் இப்படிச் சேற்றைவாரி இறைத்து வீண்பழி சுமத்துகின்றீர்கள். சரி, பரவாயில்லை, இப்படியான வீண்பழிகளைச் சுமப்பது எங்களுக்கு ஒன்றும் புதிதும் அல்ல, தன்னுடைய வாதமே சரி என்று நிறுவும் ஒரே நோக்கில் இப்படி அபாண்டமாகப் பழிசுமத்துவது உங்களைப் போன்றவர்களுக்கு எளிதாயும் இருக்கலாம்.

(ஒரு சிங்களப் பெரும்பான்மை ஊரில் வாழ்ந்தபோதிலும் ஏராளமான தமிழ்ச் சொந்தங்களை நாம் எங்கள் வீட்டில் ஒளித்துவைத்துப் பாதுகாத்தோம். அந்த அன்பையும் நட்பையும் மறக்காமல் இன்றும் எப்போதாவது நம்மை வந்து சந்தித்துப் போகும் அந்த உண்மை நண்பர்களின் நட்பு நமக்கு எஞ்சி இருக்கின்ற ஆறுதல் நமக்குண்டு. எனவே, எட்டியிருந்து எச்சில் துப்பும் உங்களைப் போன்றோரின் காழ்ப்புணர்வு எங்களைப் பெரிதாய் பாதித்துவிடப் போவதில்லை.)

என்னது! பிரபாகரன் மன்னிப்புக் கேட்டாரா? எங்கு எப்போது? ஒருபோதுமே முஸ்லிம் மக்களிடம் நேரடியாய் மன்னிப்புக் கேட்டு அறிக்கை விடவில்லை. ஒருசிலர் தவறு செய்தால் அதற்கு முழு சமூகத்தையுமே பழிவாங்குவது என்ன நியாயம்? கருணாவும் பிள்ளையானும் காட்டிக் கொடுத்ததற்காய் கிழக்குத் தமிழர்கள் அனைவரையும் பூண்டோடு அழிக்கவேண்டும் என்று முடிவு செய்துவிட முடியாதே!அது நியாயமும் அல்லவே! அப்படித்தான் இதுவும்.

எல்லா சமூகத்திலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருதரப்பாரும் இருப்பது இயல்பு. அதற்காக அந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றஞ்சாட்டுவதும் வெறுத்து ஒதுக்குவதும் அறிவுடைமையாகாது. எனவேதான், வடக்கு கிழக்கில் போரினால் நமது சொந்தங்கள் இன்னல்களை எதிர்கொண்ட போது அவர்களுக்காக, போர் இல்லாத பிரதேசத்தில் வாழ்ந்துவரும் நாமும் தொடர்ந்து குரல்கொடுத்தும் எழுதியும் வருகின்றோம். சிங்கள சகோதரர்களுக்கும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள், அவர்களின் துயரங்கள் குறித்து கலந்துரையாடி விழிப்புணர்வூட்டி வருகின்றோம்.

முஸ்லிம்கள் முதுகில் குத்தினார்கள் என்றும், ஆதாரம் உள்ளது என்றும் சொன்னால், ஆதாரத்தை முன்வைப்பதுதானே?

அப்படி முஸ்லிம்கள் அநீதி இழைத்திருந்தால் அதனைக் கண்டித்து எழும் முதல் குரல் எங்கள் குரலாகவே இருக்கும். மாறாக, நிறைமாதக் கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து, சிசுவை வெளியில் எடுத்து எரித்த இழிசெயல்களுக்கு எல்லாம் சப்பைக்கட்டு கட்டி, பூசிமெழுகும் அளவுக்கு எங்கள் இதயங்கள் இன்னும் மரித்து விடவில்லை.

அண்மையில், சில முஸ்லிம் தலைவர்கள் ஜெனீவா சென்றதை எதிர்த்து இன்றுவரை நாம் காரசாரமாக விமர்சித்தும் கண்டித்தும் வருகின்றோம். இறுதிக்கட்ட யுத்தத்தில் நடந்த அநீதிகள் குறித்து நமக்கிடையில் மட்டும் இன்றி, நமது சிங்கள சகோதரர்கள் மத்தியில்கூட கலந்துரையாடி, நடந்தது அநீதியே என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். மூன்று இனத்தவர் மத்தியிலும் புரிந்துணர்வும் நல்லெண்ணமும் தோற்றுவிக்கப்பட்டால் ஒழிய நிரந்தர சமாதானம் ஏற்படுவது சாத்தியமிலலை என்பதால், அதன்பொருட்டு செயற்பட்டு வருகின்றோம். அப்படி இருக்க, இலங்கைக்கு வெளியே இருந்துகொண்டு, களம் கிடைத்துவிட்டதே என்று கண்டபடி எழுதாதீர்கள் சகோதரா.

மண்டபம் அகதி முகாமில் நம் ஈழச் சொந்தங்கள் அடையும் அன்றாட அவலம் நாங்கள் அறியாததல்ல. அண்மையில் அருந்ததி ராய்கூட அது பற்றிக் கூறுயிருந்தார். ஒரு பதச் சோறுக்கு இந்த அகதிப் பெண்மணியின் கண்ணீர்க் கடிதத்தை வாசியுங்கள், புரியும்:

http://www.inneram.com/articles/readers-articles/letter-by-a-srilankan-refugee-5085.html

அதுசரி, கீற்று நடுநிலைமையான இணைய தளமல்ல என்று நீங்கள் அபாண்டம் சுமத்தியுள்ள நிலையில் அதைக்கூட பெருந்தன்மையோடு வெளியிட்டுள்ளார்களே! அப்போ, உங்கள் குற்றச்சாட்டுக்கள் எல்லாமே இப்படி ஊகத்தின் அடிப்படையில், சேற்றைவாரி இறைக்கும் முயற்சிதானோ? அதுதான் உங்கள் இயல்பு என்றால், இனி அதையிட்டு அலட்டிக்கொள்ளத் தேவையே இல்லை என்பது என் அபிப்ராயம். (சகோதரா, நல்லாருங்க சகோதரா! :-) )
viyasan
திரு. க‌லை அவ‌ர்க‌ளேநீங்க‌ள் சொல்வ‌து முற்றிலும் உண்மை. 'ஈழ‌க்கோரிக்கையை ப‌ல‌வீன‌ப்ப‌டுத்துவ‌த‌ற்காக‌ சிங்க‌ள‌ அரசு தமிழ் -முஸ்லீம் முர‌ண்பாட்டை வ‌ள‌ர்த்து விட்ட‌து'. அதை இல‌ங்கையின் 'தொப்பி பிர‌ட்டி' முஸ்லீம்க‌ள் சாத‌கமாக்கிக் கொண்டு அற்ப‌ ச‌லுகைக‌ளுக்காக‌, சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு உல‌க‌த்திலுள்ள‌ முஸ்லிம் நாடுக‌ளின் உத‌வியை எல்லாம் பெற்றுக் கொடுத்து த‌மிழ‌ர்க‌ளை வேர‌றுத்த‌ன‌ர். அது ம‌ட்டும‌ல்ல‌ கிழ‌க்கு மாகாண‌த்தில் த‌ம்முட‌ன் வியாபார‌த்திலும் க‌ல்வியிலும் போட்டி போட‌க் குடிய‌வ‌ர்க‌ளையெல்லாம் புலிக‌ளென‌ பொய்த்த‌க‌வ‌ல் கொடுத்து அவ‌ர்க‌ளை அழித்த‌ன‌ர். இல‌ங்கையின் புல‌னாய்வுத்துறையில் த‌மிழ்பேசும் முஸ்லீம்களின் ப‌ங்க‌ளிப்பு இல்லாது விட்டால் இந்த‌ள‌வு அழிவு த‌மிழ‌ர்க‌ளுக்கு வ‌ந்திருக்காது. த‌மிழைப் பேசிக் கொண்டு, த‌மிழ‌ர்க‌ள் ம‌த்தியில் வாழ்ந்து கொண்டு த‌மிழ‌ர்க‌ளின் க‌ழுத்த‌றுத்த‌வ‌ர்க‌ள் முஸ்லீம்க‌ளில் ப‌ல‌ர். இன்று எப்ப‌டி த‌ஞ்சாவூர் த‌மீம் அன்சாரி த‌மிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு பாகிஸ்தானுக்கு உள‌வு பார்த்தானோ அது போல் தான் ஈழ‌த்திலும் ந‌ட‌ந்த‌து. புலிக‌ளின் ப‌டைக‌ளில் சாள்ஸ் ப‌டைய‌ணியும் இருந்த‌து அத‌னால் அந்த‌ப‌டையணியில் வெள்ளைக்கார‌ர்க‌ள் இருந்தார்க‌ள் என்று கூறுவ‌து போன்ற‌து தான் இம்ரான் ப‌டைய‌ணியில் முஸ்லீம்க‌ள் இருந்தார்க‌ள் என்ப‌து. அது வெறும் பெய‌ர் ம‌ட்டும் தான். ஆர‌ம்ப‌ கால‌த்தில் சில‌ முஸ்லீம்க‌ளும் புலிக‌ளுட‌னிருந்தார்க‌ள், அவ‌ர்க‌ள் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுட‌ன் சேர்வ‌து த‌ம‌க்கு இலாப‌க‌ர‌மான‌தென்றுணர்ந்த‌தும் தொப்பியை பிர‌ட்டி விட்டார்க‌ள். இல‌ங்கை முஸ்லிம்க‌ளுக்குத் தொப்பி பிர‌ட்டி முஸ்லீம்க‌ள் என்று பெய‌ர் வ‌ந்த‌மைக்குக் கார‌ண‌மே, அவ‌ர்க‌ள் யாழ்ப்பாண‌த்தில் இருக்கும் போது த‌ம்மைத் த‌மிழுண‌ர்வாள‌ர்க‌ளாக‌வும், கொழும்பைய‌ட‌ந்ததும் சிங்கள‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளாக‌ மாறி விடுவதாலும் தான். எங்கேயென்றாலும் ச‌ரி, ஒரு ரூபாய் கிடைக்குமென்றால் அவ‌ர்கள் தொப்பியை பிர‌ட்டி விடுவார்க‌ள். அந்த‌க் க‌லையில் இல‌ங்கை முஸ்லீம்க‌ளை வெல்ல யாராலும் முடியாதென்ப‌து ஈழ‌த்தில் யாவ‌ருமறிந்த‌ உண்மை.
த‌மிழ்நாட்டின் த‌மிழ்த்தேசிய‌த்தில் முஸ்லிம்களும் இணைந்திருக்க‌லாம், ஏனென்றால் த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ள் இன்றும் தம்மைத் தமிழ‌ர்க‌ளாக‌ அடையாள‌ப்ப‌டுத்துவ‌தாக‌க் கூறுவ‌ர். அது கூட‌ வ‌ஹாபி இஸ்லாத்தின் ப‌ர‌வ‌லும், முழுமையான அர‌பும‌ய‌மாக்க‌லின் பின்ன‌ர் மாற‌லாம். ஆனால் அதுவ‌ல்ல‌ என்னுடைய‌ வாத‌ம், நான் கூறுவ‌தெல்லாம் இல‌ங்கையில் த‌மிழ்பேசும் முஸ்லீம்க‌ள் த‌ம்மைத் த‌மிழ‌ர்க‌ளாக‌ அடையாள‌ப்ப‌டுத்துவ‌தில்லை. த‌மிழைப் பேசினாலும் இல‌ங்கையில் அவ‌ர்க‌ள் த‌மிழ்த்தேசிய‌த்தின் எதிரிக‌ள். ஈழ‌த்தில் முஸ்லீம்க‌ளைத் த‌மிழ‌ர்க‌ள் ப‌கைத்துக் கொள்ளவில்லை. முஸ்லீம்க‌ள் தான் சிங்கள‌வ‌ர்க‌ளிட‌மிருந்து ச‌லுகைக‌ளைப் பெற்றுக் கொள்வ‌த‌ற்காக‌ த‌மிழ‌ர்க‌ளிட‌மிருந்து த‌ம்மை வேறுப‌டுத்திக் கொண்டார்க‌ள். சென்ற‌ நூற்றாண்டின் ஆர‌ம்ப‌த்தில் சேர்.இராம‌நாத‌ன் கூட‌ முஸ்லீம்களைத் த‌மிழ‌ர்க‌ளாக‌ அர‌வணைத்துக் கொள்ள‌முய‌ன்றார். ஆனால் அக்கால‌க‌ட்ட‌த்தில் முஸ்லீம்க‌ளின் த‌லைமை ப‌டித்த‌, தென்னில‌ங்கை ம‌லே முஸ்லீம்க‌ளின் கைக‌ளில் இருந்ததால் த‌மிழ் முஸ்லிம் ஒற்றுமை சாத்திய‌ப்ப‌ட‌வில்லை. இந்த‌ப் பிரிவினைக்கு அவ‌ர்க‌ளும் முக்கிய‌ கார‌ணமாகும். இன்றும் த‌மிழ் முஸ்லிம்க‌ளின் த‌லைமை வ‌ட‌‍ கிழ‌க்கு முஸ்லீம்க‌ளிட‌மில்லை. தென்னில‌ங்கையில் சிங்க‌ள‌வ‌ர் ம‌த்தியில், சிங்க‌ள‌வ‌ர்க‌ளுட‌ன் தம‌து அர‌சிய‌ல், பொருளாதார‌ நல‌ன்க‌ளையுடைய‌ ஹக்கீம் போன்ற‌வ‌ர்க‌ளிட‌ம் தானுள்ளது. அத‌னால் அவ‌ர்க‌ளின் சுய‌ந‌ல‌ அர‌சிய‌லுக்குப் ப‌லியாவ‌தும் வ‌ட‌ கிழ‌க்கு த‌மிழ் முஸ்லீம் ஒற்றுமை தான்.

'முஸ்லீம் ஈழ‌மொன்று' பிரிவதென்ப‌து உங்க‌ளின் விருப்ப‌மாக‌ இருக்க‌லாம் ஆனால் இல‌ங்கையின் த‌மிழ்பேசும் முஸ்லீம்க‌ளே தாங்க‌ள் த‌மிழ‌ர்க‌ள‌ல்ல‌, த‌ம‌து முன்னோர்க‌ள் அரேபியாவிலோ அல்ல‌து துருக்கியிலிருந்தோ வ‌ந்த‌தாக‌ பெருமையாக‌ வாதாடும் போது, இல‌ங்கையின் பூர்வீக‌ குடிக‌ள‌ல்லாத‌, இர‌வ‌ல் மொழியைப் பேசும், இர‌வ‌ல் க‌லாச்சார‌த்தைக் கொண்ட‌, த‌ம‌க்கென ச‌ரித்திர‌பூர்வ‌மான‌ வ‌ரைய‌றுக்க‌ப்ப‌ட்ட‌ நில‌ப்ப‌ர‌ப்பைக் கொண்டிராத‌, இல‌ங்கையில் ஒரு போதும் ஆட்சியாள‌ர்க‌ளாக‌வோ அல்ல‌து த‌ம‌க்கென‌ ஒரு இராச‌தானியையோ கொண்டிராத‌, இல‌ங்கைக்கு வெளியே உருவாகிய‌ ஒரு ம‌த‌த்தை அடிப்ப‌டையாக‌க் கொண்ட‌ குழுவின‌ராகிய‌ முஸ்லீம்க‌ள் எந்த‌ அடிப்ப‌டையில் தேசிய‌ இன‌மாவார்க‌ள் அல்ல‌து எந்த‌ வ‌ழியில் ஐயா 'முஸ்லீம் ஈழம்' என்ற‌ ஒன்றை இல‌ங்கையில் கேட்க‌ முடியும்? இர‌வ‌ல் மொழியினைப் பேசும் ஒரு ம‌த‌ப்பிரிவின‌ர் தேசிய‌ இனமாக‌ முடியாது. த‌மிழ்தேசிய‌ம் ம‌த‌ அடிப்ப‌டையிலான‌த‌ல்ல‌, த‌மிழ் பேசும் கிறித்தவர்க‌ள் தாம் த‌மிழ‌ர்க‌ள் அல்ல‌ என‌ வாதாடுவ‌தில்லை. ஆனால் இல‌ங்கை முஸ்லிம்க‌ள் தாம் த‌மிழ‌ர்க‌ளல்ல‌ என்கிறார்க‌ள். அத‌னால் அவ‌ர்க‌ள் ஈழ‌த்தில் த‌மிழ‌ர்க‌ளும‌ல்ல‌, த‌மிழ்த்தேசிய‌த்துக்கும் அவ‌ர்க‌ளுக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் கிடையாது. இணைய‌த்திலுள்ள உங்க‌ளின் முஸ்லிம் ந‌ண்ப‌ர்க‌ளைத் திருப்திப்ப‌டுத்துவ‌த‌ற்காக‌ நீங்க‌ள் எதையும் எழுத‌லாம் ஆனால் ஈழ‌த்திலுள் த‌மிழ்பேசும் முஸ்லீம்க‌ள் தாம் த‌மிழ‌ர்க‌ள‌ல்ல‌ என‌ வாதாடுவ‌தை ம‌றைத்து விட‌ முடியாது. என‌க்கும் தான் த‌மிழ்நாட்டில் முஸ்லீம் நண்ப‌ர்க‌ள் உள்ள‌ன‌ர். நான் அவ‌ர்க‌ளிட‌ம் கூட‌ உண்மையைக் கூற‌த் த‌ய‌ங்குவ‌தில்லை இந்த‌ விட‌யத்தைப் ப‌ற்றி ப‌ல‌முறை வாதாடியுள்ளேன். அத‌னால் நான் இந்துத்துவா, மோடியின் ஆத‌ர‌வாள‌ர் என்ப‌துக்கெல்லாம் ப‌ய‌ந்து என‌து க‌ருத்தைச் சொல்ல‌த் த‌ய‌ங்குவேன் என‌க் க‌ற்ப‌னை செய்ய‌ வேண்டாம்.

நான் 'வாங்காள மொழி பேசும் இந்துக்கள் அஸ்ஸாமில் வாழலாம். ஆனால், வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் திருப்பி அனுப்பப் பட வேண்டும்' என்று சொல்ல‌வில்லை அந்த‌ள‌வு மட்டும் தான் உங்க‌ளுக்கு புரிந்துள்ள‌து. நான் சொல்வ‌தெல்லாம் இந்துவோ முஸ்லீமோ யாராக‌ இருந்தாலும், சுத‌ந்திர‌ நாடாகிய‌ ப‌ங்க‌ளாதேசிலிருந்து, இந்தியாவுக்குள் அத்து மீறி ச‌ட்ட‌விரோத‌மாக‌ நுழைந்த‌/நாளும் நுழைந்து கொண்டிருக்கிற‌ ப‌ங்க‌ளாதேசிக‌ள் அவ‌ர்க‌ள் இந்துவாக‌ இருந்தாலென்ன‌ முஸ்லிமாக‌ இருந்தாலென்ன‌ நாடு க‌ட‌த்த‌ப்ப‌ட‌ வேண்டுமே த‌விர‌ அவ‌ர்களால் அசாமின் க‌லாச்சார‌, மொழி பார‌ம்ப‌ரிய‌ங்க‌ள் மாற்ற‌ப்ப‌ட‌வோ அல்ல‌து அசாமின் பூர்விக‌ குடியின‌ர் த‌ம‌து சொந்த‌ பார‌ம்ப‌ரிய‌ ம‌ண்ணிலோ சிறுபான்மையின‌ராக‌வோ அனும‌திக்க‌ப்ப‌டக் கூடாது என்ப‌து ம‌ட்டும் தான்.
sirajudeen
திரு.விசயன், உங்களுடைய கனவு என்ன, இந்துத்துவ அகண்ட பாரதம் போல், இந்துத்துவ ஈழமா. தமிம் அன்சாரி பற்றிய வழக்கே ஓர் ஜோடிக்கப்பட்ட வழக்கு. அது பற்றிய கட்டுரை வினவு தளத்தில் வந்ததுள்ளது. தயவு கூர்ந்து படிக்கவும். இந்திய உளவு துறை ரா -வின் கையாள் போல்தான் உள்ளது உங்கள் பேச்சு.
விட்டால் தஞ்சாவூரில் அரபி மொழி அதிகரிப்பிர்க்கும், பாகிஸ்தானிற்கும் தொடர்பு உண்டோ என்று கூறினாலும் ஆச்சரியம் படுவதர்க்கில்லை.
viyasan
ச‌கோத‌ரி ல‌றீனா,

இல‌ங்கையில் முஸ்லீம்க‌ள் எப்ப‌டியெல்லாம் த‌மிழ‌ர்க‌ளின் முதுகில் குத்தினார்கள், சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு முஸ்லீம் நாடுக‌ளின் உத‌விக‌ளைப் பெற்றுக் கொடுத்து த‌மிழ‌ர்க‌ளை வேரறுக்க உத‌வினார்க‌ள் என்ப‌தைத் தய‌க்க‌மில்லாம‌ல‌ பேசுவ‌தால், நான் முஸ்லீம்க‌ளுக்கு எதிரான‌வ‌ன் என்றோ, நானும் ஒரு க‌ர‌சேவ‌க‌ர் என்றோ அல்ல‌து என‌க்குத் த‌னிப்ப‌ட்ட‌ முறையில் முஸ்லீம் ந‌ண்ப‌ர்க‌ள் இல்லையென்றோ க‌ருத‌ வேண்டாம், சிங்க‌ள‌வ‌ர்க‌ளுட‌னோ, முஸ்லிம்க‌ளுட‌னோ எங்க‌ளுக்குள்ள‌ த‌னிப்ப‌ட்ட‌ ந‌ட்பை, அவ‌ர்க‌ளது த‌மிழெதிர்ப்பு அர‌சிய‌லையும், அவ‌ர்க‌ளின் த‌மிழின‌ விரோத‌த்தையும் அள‌க்கும் அள‌வு கோலாக‌ப் பாவிக்க‌ முடியாது. என்னுடைய‌ பெற்றோர் தென்னில‌ங்கைப் ப‌ல்கலைக்க‌ழ‌க‌ங்க‌ளில் க‌ல்வி க‌ற்ற‌வ‌ர்க‌ள். அவ‌ர்க‌ளுக்கும் சில சிங்க‌ள‌ குடும்ப‌ங்க‌ளுக்கும் ப‌ல ஆண்டுகால‌ ந‌ட்புண்டு, அந்த‌ ந‌ட்பு இப்பொழுது அடுத்த‌ த‌லைமுறைக்கும் தொட‌ர்கிற‌து. அத‌ற்காக‌ சிங்கள‌வ‌ர்க‌ள் எல்லோருமே இன‌வாதிக‌ள் இல்லையென்றும், இல‌ங்கையில் த‌மிழ‌ர்க‌ளுக்குப் பிரச்ச‌னை இல்லையென்றும் வாதாட‌லாமா? 1983 க‌ல‌வ‌ர‌த்தில் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து கொழும்பு முஸ்லீம்க‌ளும் த‌மிழ‌ர்க‌ளைக் கொள்ளைய‌டித்த‌தையும், அந்த‌க் க‌ல‌வ‌ர‌த்திலிருந்து த‌ப்பிய‌வ‌ர்க‌ளும் என்னுடைய‌ குடும்ப‌த்திலேயே உண்டு. முஸ்லீம்க‌ளை யாழ்ப்பாண‌த்திலிருந்து சிங்க‌ள‌ , இராணுவ‌த்துக்கு உள‌வு பார்த்த‌தால், அவ‌ர்க‌ளால் அநியாய‌மாக‌ இள‌ந்தமிழ‌ர்க‌ள் ப‌லியாவ‌தைத் த‌டுக்க‌, முஸ்லீம்க‌ளின் பாதுகாப்பைக் க‌ருதி, அவ‌ர்க‌ளை யாழ்ப்பாண‌த்திலிருந்து வெளியேற்றிய‌தை, ப‌ல‌ த‌மிழ‌ர்க‌ள் எதிர்த்த‌ன‌ர். அதைப்ப‌ற்றி எழுதின‌ர் அத‌னால் புலிக‌ளின் எதிர்ப்பையும் ச‌ம்பாதித்துக் கொண்ட‌ன‌ர். ஆனால் புலிக‌ளைப் ப‌ழிவாங்குவ‌த‌ற்காக, முழுத் த‌மிழின‌த்தையும் அழிப்ப‌த‌ற்கு முஸ்லிம்க‌ள், உல‌க‌த்திலுள்ள‌ முஸ்லீம் நாடுக‌ளிட‌மிருந்தெல்லாம் இராணுவ‌ உத‌விக‌ளையும் பெற்றுக் கொடுத்த‌து ம‌ட்டும‌ல்ல‌, புல‌னாய்வு ந‌ட‌வ‌டிக்கைக‌ளையும் இல‌ங்கை முஸ்லீம்க‌ளும் மேற் கொண்ட‌ன‌ர் அதை எந்த இல‌ங்கை முஸ்லீமாவ‌து எதிர்த்த‌துண்டா? போரின் போது த‌னிப்ப‌ட்ட‌, சுத‌ந்திர‌மான‌ ப‌த்திரிகையாள‌ர்க‌ள் யாரும் அனும‌திக்க‌ப்ப‌ட‌வில்லை.அவ‌ர்க‌ளின் பிர‌ச்சார‌த்துக்காக‌வும், முஸ்லிம் நாடுக‌ளிலிருந்து உத‌விக‌ளைப் பெறுவ‌த‌ற்காக‌வும் இல‌ங்கை அர‌சு சொல்வ‌து ம‌ட்டும் தான் செய்தி. அப்ப‌டியான‌து தான் நீங்க‌ள் கூறும் 'நிறைமாதக் கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து, சிசுவை வெளியில் எடுத்து' க‌தையெல்லாம், அத‌ற்கெல்லாம் எந்த‌வித‌ ந‌டுநிலையான‌ ஆதார‌ங்க‌ளும் கிடையாது. சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் பிர‌ச்சார‌ வ‌லையில் தெரிந்தும் தெரியாம‌லும் முஸ்லிம்க‌ள் விழுந்து ஈழத் த‌மிழ‌ர்க‌ளை வேரோடும், வேர‌டி ம‌ண்ணோடும் அழிப்ப‌த‌ற்கு சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு உத‌வி செய்தார்க‌ள் என்ற‌ உண்மையை ம‌ட்டும் தான் நான் கூறுகிறேனே தவிர‌ எதையும் பூசி மெழுகும் நோக்க‌ம் என‌க்குக் கிடையாது. வ‌ட‌க்கு, கிழ‌க்கில் ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாக‌ த‌மிழ‌ர்க‌ளும், முஸ்லிம்க‌ளும் ச‌கோத‌ர‌ர்க‌ளாக‌ எந்த‌ வித‌ ச‌ண்டையுமில்லாம‌ல் வாழ்ந்து வ‌ந்திருக்கிறோம். ந‌ட‌ந்து முடிந்த‌ தேர்த‌லின் பின்ன‌ர் அந்த‌ நிலை மீண்டும் ஏற்ப‌ட‌லாம் என்ற‌ ந‌ம்பிக்கையில், முஸ்லீம்க‌ளுக்கு முத‌ல‌மைச்ச‌ர் ப‌தவியைக் கூட‌ விட்டுக் கொடுக்க‌த் த‌யாராக‌ இருந்த‌ த‌மிழ‌ர்க‌ளின் முதுகில் மீண்டும் குத்தி விட்டு, சிங்க‌ள‌வ‌ர்க‌ளுட‌ன் இணைந்து கொண்ட‌ன‌ர் இல‌ங்கையின் த‌மிழ் பேசும் முஸ்லீம்க‌ள் என்ப‌தை உங்களால் ம‌றுக்க‌ முடியுமா?

///என்னது! பிரபாகரன் மன்னிப்புக் கேட்டாரா? எங்கு எப்போது? ஒருபோதுமே முஸ்லிம் மக்களிடம் நேரடியாய் மன்னிப்புக் கேட்டு அறிக்கை விடவில்லை.///

இணைய‌த்த‌ள‌ங்களில் இவ்வ‌ள‌வு வாய்ச்சவ‌டால் விடும் உங்க‌ளுக்கு இது கூட‌த் தெரியாத‌து ஆச்ச‌ரிய‌ம் தான். வெறும் கூகிளில் தேடியே அந்த செய்தியைப் பார்த்திருக்க‌லாம். ஆம்,13 ஏப்ர‌ல் 2002 இல் பிர‌பாக‌ர‌ன் வெளிப்ப‌டையாக‌ முஸ்லீம்க‌ளின் ம‌ன்னிப்புக் கேட்டார். ந‌ட‌ந்த‌ க‌ச‌ப்பான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை ம‌ற‌ந்து நாம் த‌மிழ்பேசும் ச‌கோத‌ர‌ர்க‌ள் ஒன்று ப‌ட‌வேண்டுமென‌ வேண்டிக் கொண்டார், அந்த‌ ம‌ன்னிப்பை ர‌வூப் ஹ்க்கீமூம் ஏனைய‌ முஸ்லீம் த‌லைவ‌ர்க‌ளும் வ‌ன்னிக்குப் போய் ஏற்றுக் கொண்ட‌து ம‌ட்டும‌ல்ல‌. வ‌ன்னியில் வ‌ளர்ந்த‌ சுவையான‌ ஆடுக‌ளை வெட்டி, விருந்துண்டும் வ‌ந்த‌ன‌ர். அத‌ன் பின்ன‌ர் முஸ்லிம் த‌லைவ‌ர்க‌ள் முஸ்லிம் நாடுக‌ளுக்குப் போய்த் த‌மிழ‌ர்க‌ளை அழிக்க‌ ப‌ண‌மும்,இராணுவ‌ உத‌வியும் பெற்றுக் கொடுத்த‌ன‌ர், அது வேறு க‌தை.

கீழேயுள்ள‌ இணைப்பில் ப‌ட‌ங்க‌ளையும் காண‌லாம். இப்பொழுதாவ‌து, எல்லாம் முடிந்த‌ பின்னாராவ‌து ஒரு ஈழ‌த்து முஸ்லீம் ச‌கோத‌ரிக்கு உண்மையைத் தெரிய‌ வைக்க‌ என்னால் முடிந்த‌தையிட்டு உண்மையிலேயே ம‌கிழ்ச்சிய‌டைகிறேன்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=6845
viyasan
ச‌கோத‌ரி ல‌றீனா, கீற்று உண்மையில் ந‌டுநிலையான இணைய‌த்த‌ள‌மா அல்ல‌து நான் சும்மா சேற்றை வாரி இறைக்கிறேனா என்ப‌தை என்மீது நீங்க‌ள் சேற்றை வாரி இறைக்காம‌ல் ஒரு மின்ன‌ஞ்ச‌ல் மூல‌மாக‌ அவ‌ர்க‌ளிட‌மே தெரிந்து கொள்ள‌லாமே.

பிர‌பாக‌ர‌ன் முஸ்லீம்க‌ளிட‌ம் பெருந்த‌ன்மையுட‌ன் வெளிப்ப‌டையாக‌ ம‌ன்னிப்புக் கேட்டார் என்ப‌த‌ற்கு மேலும் சில‌ ஆதார‌ங்க‌ள். இந்த‌ ம‌ன்னிப்பு எல்லா த‌மிழ்பேசும் மக்க‌ளையும் த‌மிழீழ‌த்தில் அர‌வ‌ணைக்க‌ வேண்டுமென்ற‌ ந‌ல்லெண்ண‌த்துட‌ன் கேட்க‌ப்ப‌ட்ட‌து. ஆனால் முஸ்லீம்க‌ள் அந்த‌ பெருந்த‌ன்மையை உண‌ராமல் த‌மிழ‌ர்க‌ளை அழிக்க‌ச் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு உத‌வின‌ர் இன்றும் உத‌வுகின்ற‌ன‌ர் அது தான் உண்மை.

PIRABHAKARAN’S APOLOGY

Velupillai Pirabakaran has apologized to the Muslims on behalf of the LTTE for their action in chasing out the Muslims from Jaffna. All Tamils know why this happened. It is an open secret that the government was using the Muslims, as they always do to weaken the Tamils. They were used as spies in the very heartland of the Tamils to thwart the freedom struggle of the Tamils. That caused grave concern and frustration to the LTTE including the Tamil civilians. Information was passed on to the Sri Lankan security forces from some Muslims living in Jaffna and the Tamil Liberation movement suffered many setbacks. This led to what is now history. It is indeed unfortunate that this was done to the Muslim community as a whole, but Tamils know why. Regrettably many Muslims who had nothing to do with such unfaithful acts also had to suffer for the fault of a few. The LTTE couldn’t wait till they could prove who the saboteurs were ‘beyond reasonable doubts’; if they did, a likely event would have been – no more LTTE.
If I may recollect, please correct if I am wrong. Subject to correction, the Tamils at the start of their struggle in the 1970’s were keen to include the Muslims of the North and East too as ‘Tamil speaking people’, and it was the then Muslim leaders who rejected it, saying that they have a separate identity and even though they speak Tamil they are not Tamils. They refused to be a party to the liberation struggle of the Tamil-speaking people. Please correct me if I am wrong since I am depending purely on my memory. Now all of a sudden, when they realize that the Tamils may see light at the end of the tunnel, the Muslim leaders are attempting to include themselves too as Tamils speaking people, to claim their share of the cake that they once opposed claiming a separate identity.
I don’t think the Muslims contributed in any big way to the Tamil struggle. It is, however, undeniable that the Muslim also suffered immensely in the conflict, but only because they were living in the conflict zone. The government was conveniently using the Muslims to do their dirty work. So naturally they were in the ‘firing line’. But they did not suffer directly as a result of contributing to the liberation of the Tamil speaking people. They suffered opposing and obstructing the aspirations of the Tamils. Now they want Pirabakaran to solve their problems too! They did not help to bake the cake but now they are demanding a share of the cake to eat.
http://www.sangam.org/ANALYSIS/Muslim04_11_02.htm

http://archives.dailymirror.lk/2002/04/06/News/ltte.html
ஏ. எச். லறீனா
சகோதரர் வியாசன்,

நீங்கள் அவலை நினைத்து உரலை இடித்துக்கொண்டு உள்ளீர்கள் என நினைக்கிறேன்.

முதலில், தமீழீழக் கோரிக்கை தொடங்கியதில் இருந்து வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் கூட இருந்து தோள் கொடுத்துள்ளார்கள் என்பதை உலகறியும்.

புலிகளின் ஆரம்பகால தளபதிகளில் பெரிதும் மதிக்கப்பட்டவர் லெப்.கர்னல் ஜுனைதீன்

புலிகளின் முதன்மை போர் பயிற்றுவிப்பாளராக செயல்பட்டவர் கடாபி என்கிற முஸ்லிம்

புலிகளின் போர்ப்படையில் தமிழீழ விடுதலைக்காக களமாடி வீரமரணம் கண்ட வீரன் இம்ரான் என்கிற முஸ்லிமின் பெயரால்,இம்ரான் படை அணி என்று ஒரு தனிப் பிரிவே தோற்றுவிக்கப்பட்டிருந்தது.

இதற்கெல்லாம் பிரதியாகப் புலிகள் கொடுத்த பரிசு என்ன? எந்தச் சமூகத்திலும் எட்டப்பன்கள் இருக்கத்தான் செய்வார்கள். அதற்காக அவர்களைத் தேடித் தண்டிப்பது நியாயமே தவிர, முழு சமூகத்தையும் பழிவாங்குவது எந்த வகையில் நியாயம் என்று நீங்கள் கருதுகிறீர்களோ தெரியாது. அன்று புலிகள்தான் அப்படிச் செய்தார்கள் என்றால், இன்று நீங்களும் இன்னொரு வகையில் அதே துரோகத்தை எங்களுக்குச் செய்துகொண்டு இருக்கிறீர்கள். சில சந்தர்ப்பவாத அரசியல்வியாதிகளின் செயலுக்கு முழு மொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் வெறுப்பை உமிழ்கின்றீர்கள். அதற்கு முதலில் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள் சகோதரா.

// 1983 க‌ல‌வ‌ர‌த்தில் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து கொழும்பு முஸ்லீம்க‌ளும் த‌மிழ‌ர்க‌ளைக் கொள்ளைய‌டித்த‌தையும், //

சரி, அதை உண்மை என்றே கொண்டாலும் இதை மட்டும் வைத்து, இலங்கை முஸ்லிம்கள் அனைவரையும் எப்படிக் குற்றம்சாட்டுவீர்கள்? நாட்டின் ஏனைய பகுதிகளில் எல்லாம், சகோதரர் உயிர் காத்தோமே, அதெல்லாம் ஏன் கணக்கில் வரவில்லை? இது வடிகட்டின காழ்ப்புணர்ச்சி இல்லாமல் வேறு என்ன?

//அப்ப‌டியான‌து தான் நீங்க‌ள் கூறும் 'நிறைமாதக் கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து, சிசுவை வெளியில் எடுத்து' க‌தையெல்லாம், அத‌ற்கெல்லாம் எந்த‌வித‌ ந‌டுநிலையான‌ ஆதார‌ங்க‌ளும் கிடையாது. //

அடேங்கப்பா! புலிகள் கிழக்கில் செய்த படுகொலைகள் எல்லாம் ஆதாரமற்ற வதந்தி என்று நீங்கள் சொன்னால் நாங்கள் மறு பேச்சின்றி அதை நம்பவேண்டும். அதேவேளை, முஸ்லிம்கள் அது செய்தார்கள் இது செய்தார்கள் என்று நீங்கள் முன்வைக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நாங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். நல்ல வேடிக்கை! என்னே நடுநிலைமை!

ரவூஃப் ஹக்கீமை முஸ்லிம்களே மதிப்பது கிடையாது. அதனால்தான் அரசியல் வியாதி என்று சொன்னேன். அந்தாள் அரசோடு சேரமாட்டேன் என்று சொன்ன வாக்குறுதியை நம்பித்தான் முஸ்லிம்கள் ஓட்டுப் போட்டதே! இப்போது அந்தாள் பெல்ட்டி அடிக்கிறான் என்றால், அதுக்கு மக்கள் எப்படிப் பொறுப்பு ஆவார்கள்?

நடராசா குருபரன் அந்தாளுக்கு எழுதியுள்ள பகிரங்க மடல் இதை உணர்த்தும்:
http://www.jaffnamuslim.com/2012/07/blog-post_7917.html

முஸ்லிம்கள் முஸ்லிம் நாடுகளிடம் ராணுவ உதவி பெற்றுக்கொடுத்தார்கள் என்று சொல்லும் உங்களிடம் சில கேள்விகள்:

1) இயக்கத்தவருக்கு ராணுவப் பயிற்சி அளித்தவர்கள் பலஸ்தீனர்கள், இலங்கை ராணுவத்துக்குப் பயிற்சி அளித்தவர்கள் இஸ்ரேலும் இந்தியாவும். இது உங்கள் கணக்கில் விடுபட்டு விட்டதோ?

2) இறுதிக்கட்டப் போரில், முழுக்க முழுக்க இலங்கை அரசுக்குப் பக்க பலமாக இருந்தது இந்தியாதான் என்பதை வசதியாக மறந்துவிட்டு, முஸ்லிம் நாடுகளை மட்டும் குற்றம் சாட்டுவதன் மர்மம் என்ன?

3) கருணாவும் பிள்ளையானும் காட்டிக்கொடுத்ததால்தான் புலிகளை அழிப்பது அரசுக்கு மிக மிக இலகுவாயிற்று என்பது உலகமே அறிந்த உண்மையாய் இருக்க, அந்தப் பழியை இலங்கை முஸ்லிம்களின் மீது போட்டுவிட முனைவதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன?

சில முஸ்லிம் தலைவர்கள் ஜெனீவா போனது பிழை என்பதை ஏற்கெனவே நான் ஒப்புக்கொண்டு விட்டேன். ஆனால், புலிகள் செய்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவிக்காத நீங்கள், புலிகளின் பொருட்டு முழு தமிழ்ச் சகோதரகளையும் வெறுத்தொதுக்காத எங்கள் அனைவரையும் "இலங்கை முஸ்லிம்கள்" எனும் ஒரே பொதுப்பெயருக்குள் வைத்து, ஒரு சிலரின் தவறுக்காய் சேற்றை வாரி இறைத்து, வருங்கால சந்ததியினர் மத்தியில் காழ்ப்புணர்வையும், குரோதத்தையும் வளர்க்க முனையும் உங்கள் செயல் மனித தர்மத்துக்கு அப்பால்பட்டது, தார்மீகமற்றது.

இரு சமூகத்தின் மத்தியிலும் தவறுகள் நேர்ந்திருந்தால், அதற்கு முழு சமூகத்தின் மீதும் வெறுப்பை உமிழ்வதை விடுத்து, இனிவரும் காலத்தில் இணைந்து செயல்பட்டு நாட்டிலும் சமூகங்களுக்கு இடையிலும் சுபீட்சமான சகவாழ்வைக் கட்டியெழுப்ப முனைவதே அறிவுடைமை.

கீற்று போன்ற பாதிக்கப்பட்ட விளிம்பு நிலையாளர்களின் குரலுக்கு முன்னிலை வழங்கும் இணைய தளங்களை, போரின் பின் வாழ்வுக்கு வழியற்றுத் தவிக்கும் நம் தமிழ்ச் சொந்தங்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்ற கலந்துரையாடலுக்கும் விழிப்புணவூட்டுவதற்கும் களமாகப் பயன்படுத்துவோம்.

என் வார்த்தைகள் அருமைச் சகோதரர் வியாசனின் மனதை நோகடித்திருந்தால், அதற்காய் அகமிக வருந்துகின்றேன். என் கருத்துக்களை வெளியிட அனுமதித்த கீற்றுக்கு கோடி நன்றி.
Kalai
வியாசன் என்பவரின் தொடர்ச்சியான முஸ்லிம் விரோத பிரச்சாரத்தினால், கீற்று இணையத்தளமும், தமிழக தமிழ் தேசியவாதிகளும் சங்கடத்திற்கு உள்ளாவார்கள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், அவர்கள் இது வரை காலமும் ஈழப்பிரச்சினை பற்றி தெரிவித்து வந்த கருத்துக்கள் அனைத்தையும், வியாசன் சுக்குநூறாக உடைத்தெறிந்து விட்டார். ஒரு உண்மையான தமிழ் தேசியவாதி, இவ்வாறு முஸ்லிம்களை பாகுபாடு காட்டி எழுத மாட்டான். துரதிர்ஷ்டவசமாக தமிழர்கள் மத்தியில் வியாசன் போன்ற இனவாதிகளும் இருக்கின்றனர். இனவாதிகள் எல்லா சமூகங்களிலும் இருக்கின்றனர். சிங்களவர்கள், முஸ்லிம்களிலும் இனவாதிகள் இருக்கின்றனர், அவர்களுக்கும் வியாசன் போன்ற இந்து-தமிழ் இனவாதிக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இவர்கள் பேசும் மொழியும் ஒன்று தான். மற்ற இனத்தால், தனது இனம் எப்படி எல்லாம் பாதிக்கப் பட்டது என்று பட்டியல் போடுவார்கள். ஆனால், தனது இனம் மற்ற இனத்திற்கு எந்தெந்த கொடுமைகளை செய்தது என்று வாய் திறக்க மாட்டார்கள். தமிழ் தேசியத்தை பலவீனப் படுத்தும் நோக்கில், ஸ்ரீலங்கா அரசு தமிழ், முஸ்லிம் பிரிவினையை தூண்டி விட்டது என்று நான் எழுதியதை வியாசன் ஆமோதிக்கிறார். ஆனால், வழக்கம் போல மீண்டும் ஒரு பக்க நியாயம் பேசுகின்றார். ஸ்ரீலங்கா அரசின் சூழ்ச்சியின் படி, முஸ்லிம் ஊர்காவல் படையினர் தமிழ்ப் பொது மக்களை கொன்றார்கள் என்று கூறுகின்றார். உண்மை தான். வியாசன் இங்கே ஆனால் சொல்லாமல் மறைக்கும் இன்னொரு பக்கத்தையும் நாங்கள் பார்க்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில், புலிகள் முஸ்லிம் மக்களை கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. அப்படியானால், ஸ்ரீலங்கா அரசின் சூழ்ச்சி அங்கே நிறைவேறி இருக்கிறதல்லவா? ஸ்ரீலங்கா அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு, முஸ்லிம் ஊர்காவல் படை மட்டுமல்ல, தமிழ்ப் புலிகளும் துணை போயிருக்கின்றனர். அடிப்படையில் புலிகள் முஸ்லிம்களுக்கு விரோதமானவர்கள் இல்லை என்றே நாங்களும் நம்புவோம். ஆனால், வியாசன் போன்று முஸ்லிம்களை வெறுக்கும் இனவாதிகள் ஈழத்தில் இருந்திருந்தால், நிச்சயமாக அவர்கள் புலிகள் அவ்வாறு செய்ய வேண்டும் என்று தூண்டி விட்டிருப்பார்கள். யாழ் குடாநாட்டில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை வியாசன் ஏற்றுக் கொள்கிறார். புலிகள் முஸ்லிம்களை பகைத்துக் கொண்ட சம்பவங்களால், அவர்கள் முஸ்லிம்களின் ஆதரவை இழந்து தனிமைப் படுத்தப் படுவார்கள். அதன் பிறகு புலிகளை அழிப்பது ஸ்ரீலங்கா அரசுக்கு இலகுவாக இருந்திருக்கும். வியாசன் போன்றவர்களது முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் பிரச்சாரங்களின் உள்நோக்கம் என்னவென்று அறிந்து கொள்வது கஷ்டமானதல்ல. மேலும் இராமநாதன் முஸ்லிம்களை அரவணைத்து சென்றதாக வரலாற்றை திரிக்கிறார். வியாசன் போற்றும் இராமநாதன் ஒரு தமிழினத் துரோகி. 1915 ம் ஆண்டு, இலங்கையின் முதலாவது இனக்கலவரமான சிங்கள-முஸ்லிம் கலவரம் நடந்தது. அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசு சிங்கள இனவாதிகளை கைது செய்து சிறையில் அடைத்தது. சேர் பொன் இராமநாதன் என்ற தமிழன், லண்டன் சென்று சிங்கள இனவாதிகளுக்கு ஆதரவாக வழக்காடி வென்றான். இராமநாதன் நாடு திரும்பியதும், சிங்கள இனவாதிகள் அவரை பல்லக்கில் சுமந்து சென்றார்கள். இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், சிங்களக் கைக்கூலி இராமநாதனுக்கு, பாராளுமன்ற முன்றலில் சிலை வைத்துக் கௌரவித்தார்கள்.

தமிழர்களுக்கு முஸ்லிம்கள் இழைத்த கொடுமைகள் பற்றி வியாசன் முன் வைக்கும் நியாயங்கள் எல்லாம், ஏற்கனவே சிங்கள இனவாதிகளிடம் கேட்டு கேட்டுப் புளித்து போன நியாயங்கள். அவர்களும் தமிழர் செய்த கொடுமைகளை பட்டியலிடுவார்கள். புலிகளால் கொலை செய்யப்பட்ட சிங்களக் கிராமவாசிகள், பஸ் குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்ட சிங்களப் பொதுமக்கள் என்று ஒரு நீண்ட பட்டியலை தருவார்கள். வியாசன் கூறுவதைப் போலவே, அதைக் காட்டி தமிழர்கள் எத்தனை கொடுமைக்காரர்கள் பார்த்தீர்களா என்று நியாயம் கேட்பார்கள். ஆனால், மறந்து போயும் சிங்கள இராணுவம் எத்தனை தமிழ்ப் பொதுமக்களை கொன்று குவித்தது, அல்லது எத்தனை தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது என்ற விபரங்களை கூற மாட்டார்கள். போர் நடந்திராத காலங்களில் நடந்த இனக்கலவரங்களில் எத்தனை தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் போன்ற விபரம் எல்லாம் அவர்களிடம் கிடைக்காது. திரும்பத் திரும்ப புலிகள் செய்த படுகொலைகளை மட்டுமே சொல்லி நியாயம் தேடுவார்கள். வியாசனும் அதைத் தான் செய்கின்றார். முஸ்லிம் ஊர்காவல் படையினரால் கொலை செய்யப்பட்ட தமிழ்க் கிராமவாசிகளின் பட்டியல் அவரிடம் தாராளமாக இருக்கின்றது. ஆனால், புலிகளால் கொலை செய்யப்பட்ட முஸ்லிம் கிராமவாசிகள் பற்றி அவர் வாய் திறப்பதில்லை. அப்படி எதுவும் நடக்கவில்லை என்று அவர் மறுத்தால், அவருக்கு ஈழப் பிரச்சினை பற்றி எதுவும் தெரியாது என்று அர்த்தம். சிங்கள இராணுவம் செய்த படுகொலைகளை சிங்கள இனவாதிகள் ஏற்றுக் கொள்ள மறுப்பதைப் போல, வியாசனும் மறுத்து வருகிறார். ராஜபக்சே பேசுவதில் நியாயம் இருக்கலாம் என்று உலகில் யாரும் நம்புவதில்லை. அதே போல வியாயசன் பேசுவதையும் யாரும் நம்புவதில்லை. ராஜபக்சவும், வியாசனும், தமது சொந்த இனத்தவர் புரிந்த குற்றங்களை மறைத்துக் கொண்டு, அடுத்த இனத்தவர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் கில்லாடிகள். ராஜபக்ச தமிழருக்கு விரோதமான சிங்களப் பேரினவாதத்தை பாதுகாக்கிறார். வியாசன் முஸ்லிம்களுக்கு விரோதமான தமிழ்ப் பேரினவாதத்தை பாதுகாக்கிறார். இருவருக்கும் இடையில் என்ன வித்தியாசம்?
இலங்கையில் நடந்த அனைத்து வகையான போர்க்குற்றங்களும், அதனை யார் செய்திருந்தாலும், சர்வதேச சமூகத்தினால் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஐ.நா. விசாரணைக் குழு, அம்னெஸ்டி இண்டர்நாஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாச் போன்ற மனித உரிமை நிறுவனங்கள் விரிவான அறிக்கைகளை தயாரித்து வெளியிட்டுள்ளன. இலங்கையில் நடந்த முப்பதாண்டு கால போரில் இடம்பெற்ற அத்தனை குற்றங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மிக அதிகளவு போர்க்குற்றங்களை சிங்கள இராணுவம் புரிந்துள்ளது. போரில் கொல்லப்பட்ட பெரும்பான்மையான மக்கள் தமிழர்கள் என்பதும், சிங்கள இராணுவமே அவர்களை கொன்றது என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். அது எல்லோருக்கும் தெரிந்த விடயம். வியாசன் கூறுவதைப் போல, முஸ்லிம் ஊர்காவல் படையினர் தமிழ்ப் பொது மக்களை கொன்றுள்ளனர். அதுவும் உண்மை தான். அதே நேரம், சிங்கள, முஸ்லிம் பொதுமக்கள் புலிகளினால் கொல்லப் பட்டனர். அதுவும் உண்மை தான். முப்பதாண்டு கால ஈழப்போரில் அனைத்து தரப்பினரும் குற்றங்களை புரிந்துள்ளனர். அதனால், தமிழர்கள் மட்டுமல்ல, முஸ்லிம், சிங்கள பொது மக்களும் போரினால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த உண்மையை முதலில் நாங்கள் ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும். அப்போது தான் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண முடியும். இல்லா விட்டால், அடுத்த நூறாண்டுகளுக்கும் பிரச்சினையை தீர்க்க முடியாது.
viyasan
ச‌கோத‌ரி ல‌றீனா,

க‌ல‌க‌ம் பிற‌ந்தால் தான் நியாய‌ம் பிற‌க்கும் என்பார்க‌ள். நீங்க‌ள் இந்தியா, இஸ்ரேல், க‌ருணா, பிள்ளையானை எல்லாம் தாக்குவ‌தை விட்டு, எத‌ற்காக‌ முஸ்லீம்க‌ளைக் குற்றம் சாட்டுகிறீர்க‌ள் என‌க்கேட்டீர்க‌ள். ஈழ‌த்தில் த‌மிழ‌ர்க‌ளும் முஸ்லீம்க‌ளும் ச‌கோத‌ர‌ர்க‌ள், விரும்பினாலும், விரும்பா விட்டாலும் வ‌ட‌க்கு, கிழ‌க்கில் நாங்க‌ள் ஒற்றுமையாக‌ வாழ்ந்து தானாக‌ வேண்டும், எல்லாவ‌ற்றையும் விட‌ த‌மிழ் எங்க‌ளை இன்றும் மொழிவழிச்ச‌கோத‌ரர்க‌ளாக‌ இணைக்கின்ற‌து. ப‌ங்காளிக‌ள் துரோக‌ம் செய்தால், அவ‌ர்க‌ளுட‌ன் ம‌ன‌த்தாப‌ம் இருந்தால் தான் ச‌ண்டை போட்டு நியாய‌ம் கேட்பார்க‌ள், ஆனால் ப‌க்க‌த்து வீட்டுக்கார‌ர்க‌ளிட‌ம் போய் யாரும் உரிமையோடு ச‌ண்டை போடுவ‌தில்லை. ஈழத்தில் முஸ்லீம்க‌ள் தாம் அரேபியாவிலிருந்து வ‌ந்த‌தாக‌ அட‌ம்பிடித்தாலும் கூட‌ த‌மிழைத் தாய்மொழியாக‌ப் பேசும் வ‌ரை அவ‌ர்க‌ள் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் ப‌ங்காளிக‌ள். இந்தியா எங்க‌ளுக்குப் ப‌க்க‌த்து வீடு, ப‌க்க‌த்து வீட்டுக்கார‌ன் துரோக‌ம் செய்தால் அதைத் த‌ட்டிக் கேட்க‌ முடியாது. க‌ருணாவும், பிள்ளையானும் எட்ட‌ப்ப‌ன்க‌ள், குல‌த்தைக் கெடுக்க‌ வ‌ந்த‌ கோட‌ரிக்காம்புக‌ள், யாரும் இன‌த்துரோகிக‌ளிட‌ம் நியாய‌ம் பேச‌ப் போக‌மாட்டார்க‌ள். ஆனால் த‌மிழ்பேசும் முஸ்லீம்க‌ள் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் ப‌ங்காளிக‌ள் அவ‌ர்க‌ளுட‌ன் தான் உரிமையுட‌ன் ச‌ண்டை போட‌ முடியும். அத‌னால் தான் முஸ்லீம்க‌ள் சிங்க‌ளவ‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து த‌மிழ‌ர்க‌ளின் முதுகில் குத்திய‌து ச‌ரியா என்று நான் கேட்கிறேன். ச‌ந்த‌ர்ப்பம் கிடைத்தால் என்னைப் போல் ப‌ல‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் உங்க‌ளிட‌ம் இதே கேள்வியை நிச்ச‌ய‌மாக‌க் கேட்பார்க‌ள். அதை விட‌ ந‌ட‌ந்து முடிந்த‌ தேர்த‌லில், நாங்க‌ள் அனைவ‌ரும் எம‌து க‌ச‌ப்பான‌ அனுப‌வ‌ங்க‌ளை ம‌ற‌ந்து த‌மிழ்பேசும் ம‌க்க‌ளாக‌ ஒன்றுப‌ட‌லாம் என்ற‌ க‌ன‌விலிருந்த‌ என்னைப் போன்ற ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் ம‌ன‌தில் இடியாக‌ இருந்த‌து முஸ்லீம் காங்கிர‌சின் முடிவு. ஆனால் நீங்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, ப‌ல‌ முஸ்லீம் சான்றோர்க‌ள் அந்த‌ முடிவுக்கு வெளிப்ப‌டையாக‌ எதிர்ப்பைத் தெரிவிப்பதைப் பார்க்கும் போது, ஈழ‌த்தில் த‌மிழ் முஸ்லீம் உற‌வு இன்னும் ப‌ட்டுப் போக‌வில்லை, அது மீண்டும் துளிர்க்க‌லாம் என்ப‌து தெரிகிற‌து.

புலிக‌ள் செய்த‌வ‌ற்றையெல்லாம் நியாய‌ப்ப‌டுத்துவத‌ல்ல‌ என்னுடைய‌ நோக்க‌ம். ஆனால் முஸ்லீம்க‌ளுக்குப் புலிக‌ள் இழைத்த‌ துன்ப‌ங்க‌ள் கொலைக‌ளை விட‌ மோச‌மான‌ கொலைக‌ளும், க‌ற்ப‌ழிப்புக‌ளும் ம‌ட்டும‌ல்ல‌, முஸ்லிம்க‌ளின் ஒரு சில‌ ப‌டுகொலைச் ச‌ம்ப‌வங்க‌ளை விட‌ மிகவும் அதிக‌மான‌ ப‌டுகொலைக‌ளை முஸ்லீம் ஊர்காவ‌ல் ப‌டையின‌ர் சிங்க‌ள இராணுவ‌த்துட‌ன் சேர்ந்து செய்துள்ள‌ன‌ர். ஆனால் முஸ்லீம்க‌ள் தாம் ப‌ட்ட‌ துன்ப‌ங்க‌ளை ம‌ட்டும் பெரிது ப‌டுத்தி, உல‌க‌ளவில் அனுதாப‌த்தைப் பெற்ற‌து ம‌ட்டும‌ல்ல‌, சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்குப் ப‌ல‌ முஸ்லிம் நாடுக‌ளின் உத‌விக‌ளைப் பெற்றுக் கொடுத்து த‌மிழ‌ர்க‌ளைப் ப‌ழிவாங்கி விட்ட‌ன‌ர். அதை விட‌ பிர‌பாக‌ர‌ன் வெளிப்ப‌டையாக‌ ம‌ன்னிப்புக் கேட்டும் கூட‌, எந்த‌ முஸ்லீமும் இதுவ‌ரையில் த‌மிழ‌ர்க‌ளுக்குத் தாம் இழைத்த‌ துன்ப‌ங்க‌ளுக்கும் ப‌டுகொலைக‌ளுக்கும் வெறும் ம‌ன‌த்தாப‌த்தைக் கூட‌த் தெரிவிக்க‌வில்லை என்ப‌து தான் என்னுடைய‌ க‌ருத்தாகும்.

நீங்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, இணைய‌ எழுத்தாள‌ர்க‌ளில் சில‌ரும் த‌வ‌றான‌ க‌ருத்துக்க‌ளை த‌ம‌து வ‌லைப்ப‌திவில் ப‌திந்துள்ள‌ன‌ர். எல்லாவ‌ற்றுக்கும் ஆதார‌ம் கேட்கும் கீற்று ஆசிரிய‌ர் குழு சில‌ரின் ப‌திவுக‌ளை ம‌ட்டும் எந்த‌ ஆதார‌மின்றி அனும‌தித்துள்ள‌ன‌ர் என்ப‌து தெரிகிற‌து. உதார‌ண‌மாக‌ ‍ "தமிழீழ விடுதலைக்காக களமாடி வீரமரணம் கண்ட வீரன் இம்ரான் என்கிற முஸ்லிமின் பெயரால்,இம்ரான் படை அணி என்று ஒரு தனிப் பிரிவே தோற்றுவிக்கப்பட்டிருந்தது". **இதில் எள்ள‌ள‌வும் உண்மையில்லை. இம்ரான் என்ற‌ ப‌ட்ட‌ப்பெய‌ர் கொண்ட‌ அந்த‌ புலிக‌ளின் போராளியின் இய‌ற்பெய‌ர் ச‌ங்க‌ர‌ப்பிள்ளை ச‌தான‌ந்த‌ன், கொக்குவில், யாழ்ப்பாண‌த்தைச் சேர்ந்த‌வ‌ர், அவ‌ர் ஒரு முஸ்லீம் அல்ல‌. அடுத்த‌து 'புலிகளின் ஆரம்பகால தளபதிகளில் பெரிதும் மதிக்கப்பட்டவர் லெப்.கர்னல் ஜுனைதீன்' என்ப‌து. உண்மையில் அவ‌ர் முஸ்லீம்க‌ளுக்காக‌ கோப்ரா என்ற இய‌க்க‌த்தைத் தொட‌ங்கிய‌வ‌ர், பிற்கால‌த்தில் புலிக‌ளுட‌ன் இணைந்து செய‌ல்ப‌ட்டு இல‌ங்கை இராணுவ‌த் தாக்குத‌லில் கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர் என்பதை வெறும் கூகிள் தேடுத‌லிலேயே அறிய‌லாம். புலிக‌ளின் இய‌க்க‌த்தில் ஈழ‌த்துப் பார்ப்ப‌ன‌ர்க‌ள் கூட‌த் தான் இணைந்து த‌மிழீழ‌த்துக்காக‌ப் போரிட்ட‌ன‌ர். உதார‌ண‌மாக‌ த‌மிழ்ச்செல்வ‌னின் மெய்க்காப்பாள‌ராக‌ இருந்து அவ‌ருட‌ன் சேர்ந்து கொல்லப்ப‌ட்ட‌வ‌ர் மாவைக்கும‌ர‌ன் என்ற‌ ஈழ‌த்துப்பார்ப்ப‌ன‌ப் போராளி.


ச‌கோத‌ரி, உங்க‌ளின் வார்த்தைக‌ள் என்னை ஒன்றும் நோக‌டிக்க‌வில்லை மாறாக‌ உங்க‌ளைப் போன்ற‌ த‌மிழ‌ர்க‌ளைத் த‌ம‌து சொந்த‌ங்க‌ளாக‌ நினைக்கின்ற‌ முஸ்லீம்க‌ள் ஈழ‌த்தில் இன்றுமுள்ளார்க‌ள் என்ற‌ உண‌ர்வு உண்மையில் ம‌கிழ்ச்சியைத் த‌ருகிற‌து. உண்மையில் த‌மிழ்பேசும் ம‌க்க‌ள் அனைவ‌ரும் ஒருங்கிணைந்து ஈழ‌த்தில் எம‌துரிமைக‌ளை நிலைநாட்டும் நாள் வ‌ந்தால் அதைப்பார்த்து ம‌கிழ்ச்சிய‌டையும் முத‌ல் ஈழ‌த்த‌மிழ‌ன் நானாக‌த் தானிருப்பேன்.

** இம்ரான் என்றழைக்க‌ப்ப‌ட்ட‌ யாழ்ப்பாண‌த்தைச் சேர்ந்த‌ போராளி ச‌ங்கர‌ப்பிள்ளை ச‌தான‌ந்த‌னின் ப‌ட‌த்தை இந்த‌ இணைய‌த்த‌ள‌த்தில் காண‌லாம்.
http://www.eelamwallpapers.com/details.php?image_id=379&sessionid=f2q6cm62p7jrck245p9r4d2933
viyasan
திரு க‌லை அவ‌ர்க‌ளுக்கு,

உங்க‌ளின் சில‌ கேள்விக‌ளுக்கான‌ ப‌தில் ச‌கோத‌ரி ர‌பீனாவுக்கு நான் எழுதிய‌ ம‌றுமொழியில் உண்டு, த‌ய‌வு செய்து வாசிக்க‌வும். நான் ஒரு இந்து த‌மிழ் இன‌வாதியென்றால் தம‌து ம‌த‌த்துக்கு முன்னுரிமை கொடுக்கும் முஸ்லீம்க‌ள் எல்லாம் ம‌த‌வாதிக‌ள் என்ப‌து தான் உங்க‌ள‌து க‌ருத்தா? த‌மிழ்பேசும் முஸ்லீம்க‌ளும், கிறித்த‌வ‌ர்க‌ளும் த‌ம‌து ம‌த‌ங்க‌ளைப் போற்ற‌லாம் ஆனால் த‌மிழ‌ர்க‌ளில் பெரும்பான்மையினராகிய‌ இந்துக்க‌ள் ம‌ட்டும் த‌ம‌து ம‌த‌த்தைத் தூற்ற‌ வேண்டுமென்ப‌து எப்ப‌டி நியாய‌மாகும்? ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் யாருமே த‌மிழின‌த்தை ம‌த அடிப்ப‌டையில் பிள‌வு ப‌டுத்த‌ விரும்புவ‌தில்லை, ம‌த‌த்தையும் அர‌சிய‌லையும் நாம் க‌லப்பதுமில்லை அதே வேளையில் சைவ‌மும் த‌மிழும் பிரிக்க‌ முடியாத‌வை என்ப‌தில் ஆழ்ந்த‌ ந‌ம்பிக்கை கொண்ட‌வ‌ர்க‌ள் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள், அத‌னால் தான் நாய‌ன்மார்க‌ளின் தேவார‌ம் பிர‌ப‌ல‌மடைந்த‌ள‌வுக்கு, பெரியாரிச‌ம் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளிட‌ம் எடுப‌ட‌வில்லை. வேண்டுமானால் அதைப் ப‌ற்றித் த‌னியாக‌ விவாதிக்க‌லாம். நான் ஒரு த‌மிழ‌ன், என்னுடைய‌ பார‌ம்ப‌ரிய‌ ம‌த‌ம் சைவ‌ம் அல்ல‌து இந்து, அதனால் நான் ஒரு இந்து-த‌மிழ் இன‌வாதியா? இங்கு தான் ஈழ‌த்துத் த‌மிழ்த் தேசிய‌த்துக்கும், த‌மிழ்நாட்டுத் த‌மிழ்த்தேசிய‌த்துக்கும் மோத‌ல் ஏற்ப‌டுகிற‌து. ஈழ‌த்த‌மிழ்த் தேசிய‌த்தில் முஸ்லீம்க‌ள் த‌மிழர்க‌ள‌ல்ல‌, அவ‌ர்க‌ளாக‌வே தாம் த‌மிழர்க‌ள‌ல்ல‌, தாம் முஸ்லீம்க‌ள் ம‌ட்டுமே என அடையாள‌ப்ப‌டுத்துகின்ற‌ன‌ர். ஆனால் த‌மிழ்நாட்டுத் த‌மிழ்தேசிய‌த்தில் முஸ்லிம்க‌ளும் த‌மிழ‌ர்க‌ள் ஆனால் த‌மிழைப் பேசித் த‌ம்மைத் த‌மிழ‌ர்க‌ளாக‌ அடையாள‌ப்ப‌டுத்தும் பார்ப்பன‌ர்க‌ளுக்கு இட‌மில்லை, ஆனால் ஈழ‌த்துத் தமிழ்த்தேசிய‌த்தில் ஈழ‌த்துப் பார்ப்ப‌ன‌ர்க‌ளும் த‌மிழ‌ர்க‌ளே. இவை தீர்க்க‌ப்ப‌ட‌ முடியாத‌ முர‌ண்பாடுக‌ள்.

சேர் இராம‌நாத‌ன், ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் இணைய‌ற்ற‌ த‌லைவ‌ர், இல‌ங்கையின் வ‌ர‌லாற்றிலேயே மிக‌ச்சிற‌ந்த‌ இல‌ங்கைய‌ர் என‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளாலேயே இன்றும் போற்ற‌ப்ப‌டும் தலைவ‌ர். அவ‌ரை ஒருமையில் அழைப்பது, நீங்க‌ள் எப்ப‌டியான‌ சூழ‌லில் வ‌ள‌ர்ந்திருப்பீர்க‌ள் என்ப‌தைக் காட்டுகிற‌து. இல‌ங்கையில் ந‌ட‌ந்த‌ முத‌ல் இன‌க்க‌ல‌வ‌ர‌ம் முஸ்லிம்க‌ளுக்கு எதிரான‌து. ஆனால் அதில் ஆங்கிலேயர் முஸ்லீம்க‌ளுக்குச் சார்பாக‌ ந‌ட‌ந்து கொண்ட‌ன‌ர். அத‌னால் முழு இல‌ங்கைய‌ரின‌தும் த‌லைவ‌ராகிய‌ சேர்.இராம‌நாத‌ன், விக்ரோறியா ம‌காராணியுட‌ன் அவ‌ருக்கிருந்த‌ செல்வாக்கைப் ப‌ய‌ன்ப‌டுத்தி,சிங்க‌ள‌த் த‌லைவ‌ர்க‌ளைச் சிறையிலிருந்து விடுத‌லை செய்வித்தார். அவ‌ர் முழு இல‌ங்கைய‌ரையும் நேசித்த‌ த‌லைவ‌ர். அதே இராம‌நாத‌ன் தான், த‌மிழ‌ர்க‌ளில் எப்ப‌டி இந்துக்க‌ளும், கிறித்த‌வ‌ர்க‌ளும் உள்ள‌ன‌ரோ அது போன்றே முஸ்லீம்க‌ளும் ம‌த‌த்தால் ம‌ட்டும் வேறுப‌ட்ட‌ தமிழ‌ர்க‌ள் என வாதாடி முஸ்லீம்க‌ளையும் த‌மிழ‌ர்க‌ளாக‌ அர‌வ‌ணைக்க‌ முனைந்து, அக்கால‌த்தில் ப‌டித்த‌வ‌ர்க‌ளாக‌ ம‌ட்டும‌ல்ல‌, அர‌சிய‌லிலும் முஸ்லிம்க‌ளுக்குத் த‌லைவ‌ர்க‌ளாக‌ இருந்த‌ தென்னில‌ங்கை ம‌லே முஸ்லிம்களுட‌ன் பாராளும‌ன்ற‌த்தில் வாக்கு வாத‌ப்ப‌ட்ட‌வ‌ர். அது ம‌ட்டும‌ல்ல‌ இல‌ங்கை முஸ்லீம்களில் பெரும்பாலானோர் த‌மிழ்நாட்டின் கீழைக்க‌ரையிலும், இராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌த்திலும், ம‌ல‌பார்க்க‌ரையிலுமிருந்து வ‌ந்த‌ இஸ்லாமிய‌த் த‌மிழ‌ர்க‌ள் என்ப‌தை றொயல் ஆசிஅடிச் ஸொசிஎட்ய் க்கு அவ‌ர் எழுதிய‌ க‌ட்டுரையில் ஆதார‌பூர்வ‌மாக‌க் காட்டிய‌வ‌ர்.

சேர் இராம‌நாத‌னுக்கு பாராளும‌ன்ற முன்ற‌லில் சிலை வைக்க‌ப்ப‌ட்டது, அவ‌ர் இல‌ங்கைய‌ர் அனைவ‌ருக்கும் பார‌ப‌ட்ச‌மின்றி ஆற்றிய‌ தொண்டுக்காக‌ ம‌ட்டும‌ல்ல‌, அவ‌ர் தான் முத‌லில் பிரிட்டிஸ் பாராளும‌ன்ற‌த்துக்கு இல‌ங்கைய‌ர்க‌ள் அனைவ‌ராலும் ஒருமித்துத் தெரிவு செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ர் என்ப‌தாலும் தான். அதே இராம‌நாத‌ன் சிங்க‌ள‌வ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ளின் முதுகில் குத்தி விட்டார்கள் என்ற‌ வேத‌னையுட‌ன் ம‌றைந்தார் என்ப‌து க‌ச‌ப்பான‌ உண்மை.

தமிழ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌ சிங்க‌ள, முஸ்லீம் மக்களும் போரினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர், ஆனால் த‌மிழ‌ர்க‌ளைப் போன்று திட்ட‌மிட்ட‌ இன‌வ‌ழிப்புக்கு உள்ளாக‌வில்லை. அத‌னால் முஸ்லீம்க‌ளின‌தும் ,சிங்க‌ள‌வ‌ர்க‌ளின‌தும் இழ‌ப்புக்க‌ளை த‌மிழ‌ர்க‌ளின் இழ‌ப்புக்க‌ளுட‌ன் ஒப்பிடுவ‌து அடாவ‌டித்த‌ன‌ம். அத்த‌கைய‌ இன‌ அழிப்புக்கு உள்ளாகியிருந்தும், நாங்க‌ள் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள், இன்றும் முஸ்லீம்க‌ளை எம‌து ச‌கோத‌ர‌ர்க‌ளாக‌ அரவ‌ணைத்து முத‌ல‌மைச்ச‌ர் ப‌த‌வியையும் விட்டுக் கொடுக்க‌த் த‌யாராக‌ இருந்த‌ போதும் வ‌ழ‌க்க‌ம் போல் முஸ்லீம்க‌ள் சுய‌ந‌ல‌த்துக்காக‌வும், ப‌தவி மோகத்திலும், சிங்க‌ள‌வ‌ர்க‌ளுட‌ன் இணைந்து மீண்டும் த‌மிழ‌ர்க‌ளின் முதுகில் குத்தி விட்டார்க‌ள், த‌மிழ்பேசும் மக்க‌ள் க‌ட‌ந்த‌ கால‌ க‌ச‌ப்பான‌ அனுப‌வ‌ங்க‌ளை ம‌றந்து ஒன்றுப‌ட‌க் கிடைத்த‌ வாய்ப்பைத் த‌வற‌ விட்டு விட்டார்க‌ள், பார‌ம்ப‌ரிய‌ த‌மிழ்ம‌ண்ணாகிய‌ கிழ‌க்கு மாகாண‌த்தை மேலும் சிங்க‌ள‌ம‌ய‌மாக்க‌ வழி திற‌ந்து விட்டார்க‌ள் என்ப‌து தான் என்னுடைய‌ க‌ருத்தாகும்.
Kalai
வியாசனின் கருத்துக்களைப் பார்க்கும் பொழுது ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. "தொப்பி பிரட்டி" என்ற சொல்லுக்கு பொருத்தமான நபர் அவர் தான். கிழக்கு மாகாணசபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் சேர்ந்து கொண்ட செயலை குறிப்பிட்டுக் காட்டி, அது தமிழர்கள் முதுகில் குத்திய செயல் என்று வியாசன் விமர்சித்தார். (அவரைப் பொறுத்த வரையில் தொப்பிபிரட்டித் தனம்) அப்படியானால், சிங்கள-முஸ்லிம் கலவரத்தின் பின்னர், இராமநாதன் சிங்களவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டது மட்டும் எப்படி சரியாகும்? இராமநாதனின் தொப்பிபிரட்டித் தனத்தினால், முழுத் தமிழர்களும் முஸ்லிம்களின் முதுகில் குத்தினார்கள் என்று வியாசன் பாணியில் முஸ்லிம்கள் பேச வேண்டுமா? முஸ்லிம் அரசியல்வாதிகள், சிங்கள அரசுக்கு சார்பாக ஜெனீவா வரை சென்றதை வியாசன் விமர்சித்திருந்தார். முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடு கண்டிக்கப் பட வேண்டியது தான். அப்படியானால், இராமநாதன் செய்த வேலை என்ன? சிங்களவர்களுக்கு ஆதரவாக லண்டன் வரை சென்று வழக்குப் பேசியது தவறாகாதா? இவ்வாறு இராமநாதனுக்கு ஒரு நியாயம், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இன்னொரு நியாயம் பேசுவது, வியாசனின் தொப்பிபிரட்டித் தனத்தை தான் காட்டுகின்றது. கருணா, பிள்ளையான், டக்லஸ் ஆகியோர் சிங்கள ஆட்சியாளருடன் சேர்ந்தியங்குவது இனத்துரோகம் என்றால், இராமநாதன் செய்ததற்கு என்ன பெயர்? இராமநாதன் சிங்கள இனவாதிகளுக்கு ஆதரவாக வாதாடியதையும், அதற்கு நன்றிக் கடனாக சிங்கள இனவாதிகள் இராமநாதனுக்கு சிலை வைத்துள்ளதையும் வியாசன் ஒத்துக் கொள்கிறார். (அதிலே பெருமை வேறு) இதெல்லாம் தமிழ் தேசியவாதிகளைப் பொறுத்த வரையில் தமிழினத் துரோகம் அல்லவா? இதற்குப் பிறகும், சிங்களக் கைக்கூலி இராமநாதனுக்கு நாங்கள் மரியாதை கொடுத்துப் பேச வேண்டுமாம். இராமநாதன், சிங்களவன் வீசிய எலும்புத்துண்டுக்கு ஆசைப்பட்டு, இஸ்லாமியருக்கும், இந்து-கிறிஸ்தவ தமிழருக்கும் இடையில் விரிசலை உண்டாக்கிய தமிழினத் துரோகி மட்டுமல்ல. அவன் ஒரு சாதி வெறியனும் கூட. ஆங்கிலேயர்கள் யாழ்ப்பாண பாடசாலைகளில் கொண்டு வந்த சமபந்தி ஆசனத்தை எதிர்த்து வந்தார். 1928 ம் ஆண்டு, சாதி அமைப்பு முறையிலான பாடசாலை நடைமுறைக்காக, வெள்ளைக்கார தேசாதிபதியை சந்தித்து பேசினார். சாதி அமைப்பு முறை பாதுகாக்கப் பட வேண்டும் என்று, டொனமூர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்தார். அந்தக் காலத்தில் புலிகள் இயக்கம் இருந்திருந்தால், இராமநாதனுக்கு துரோகிப் பட்டம் சூட்டி மரண தண்டனை வழங்கி இருப்பார்கள். வியாசன், இராமநாதன் போன்ற இனத்துரோகிகளை கொண்டாடுவதன் மூலம், தான் யார் என்பதையும் அடையாளம் காட்டி விடுகிறார். அதற்கு நாம் நன்றி கூற வேண்டும்.

வியாசனுக்கும் தமிழ் தேசியத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பதையும், அவர் தமிழினவாதம் பேசும் இந்து மதவெறியர் என்பதையும் தெரிவித்திருக்கிறேன். தனது இனத்தை, மதத்தை நேசிப்பது தவறல்ல. ஆனால், தனது இனத்தவர் அல்லது மதத்தவர் செய்த அநியாயங்களை பற்றி எதுவும் கூறாமல், அல்லது ஏற்றுக் கொள்ளாமல், அடுத்த இனம் அல்லது மதம் மீது காழ்ப்புணர்ச்சி காட்டுவதற்குப் பெயர் இனவாதம். இப்படியான நடத்தை கொண்டவர்கள், சிங்களவர்களாக இருந்தாலும், தமிழராக இருந்தாலும் இனவாதம் தான். ஒரு தமிழ் தேசியவாதியாகவும், சைவ மதப் பற்றாளனாகவும் நான் கூறிக் கொண்டால், அதற்கு எல்லோரும் மதிப்புக் கொடுப்பார்கள். ஏனென்றால், நான் இதுவரை எந்தவொரு இனத்தை அல்லது மதத்தை சேர்ந்தவர் மீதும் துவேஷத்தை காட்டி எழுதவில்லை. ஆனால், வியாசன் அப்படி அல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
//தமிழ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌ சிங்க‌ள, முஸ்லீம் மக்களும் போரினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர், ஆனால் த‌மிழ‌ர்க‌ளைப் போன்று திட்ட‌மிட்ட‌ இன‌வ‌ழிப்புக்கு உள்ளாக‌வில்லை. அத‌னால் முஸ்லீம்க‌ளின‌தும் ,சிங்க‌ள‌வ‌ர்க‌ளின‌தும் இழ‌ப்புக்க‌ளை த‌மிழ‌ர்க‌ளின் இழ‌ப்புக்க‌ளுட‌ன் ஒப்பிடுவ‌து அடாவ‌டித்த‌ன‌ம். //
முதலில் அடாவடித்தனம் என்ற சொல்லின் அர்த்தம் புரிந்து தான் பேசுகின்றீர்களா? எது அடாவடித்தனம்? "எனக்கு வந்தால் இரத்தம், அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி" என்பது தான் வியாசனின் வாதம். "எனது குடும்பத்தின் இழப்பு மட்டுமே பெரிது, மற்ற குடும்பத்தின் இழப்பு பற்றி எனக்கு கவலையில்லை." என்று பேசுவது அடாவடித் தனம் மட்டுமல்ல, மனித நேயமற்ற செயலாகும். இனவாதிகளும், மதவெறியர்களும் மனிதர்களாக கருதப் பட முடியாதவர்கள் என்பதைத் தான் வியாசன் நிரூபிக்கிறார். தமிழரானாலும், சிங்களவரானாலும், முஸ்லிம்களானாலும் மரணம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும். அயலவனின் மரணச் சடங்குக்கு சென்று துக்கம் விசாரிப்பது மனிதத் தன்மை. நாங்கள் மற்றவர்களின் துன்பத்தை பகிர்ந்து கொண்டால் தானே, மற்றவர்களும் எமது வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வருவார்கள்? அந்த அடிப்படை மனிதாபிமானம் கூட வியாசனிடம் கிடையாது. மேலும் ஒரு நாட்டின் இனப்பிரச்சினை, எந்த இனம் அதிகம் இழந்திருக்கிறது என்பதை வைத்து தீர்மானிக்கப் படுவதில்லை. "தமிழர்கள் அதிகமாக இழந்திருக்கிறார்கள். அதனால் ஈழம் கொடுக்க வேண்டும்," என்று சிறுபிள்ளைத் தனமாக பேசிக் கொண்டிருந்தால், யாரும் உங்களை கணக்கெடுக்க மாட்டார்கள். அப்படிப் பார்த்தால், அமெரிக்காவில் செவ்விந்தியர்களும், அவுஸ்திரேலியாவில் அபோரிஜன்களும் தமிழர்களை விட அதிகமாக இழந்திருக்கிறார்கள். அவர்களது இனங்களில், ஏறத்தாள 90 % மான மக்கள் திட்டமிட்ட இனவழிப்புக்கு ஆளானார்கள். அமெரிக்காவை செவ்விந்தியர்களிடம், அவுஸ்திரேலியாவை அபோரிஜன்களிடம் ஒப்படைத்து விட்டு, இனப்படுகொலையாளர்கலான ஆங்கிலேயர்கள் வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லையே? மேலும் சிங்கள பேரினவாத அரசு, தமிழ் மக்களின் தனிநாட்டுக் கிளர்ச்சியை அடக்க நினைத்தால், இலட்சக்கணக்கான மக்களை படுகொலை செய்யவும் அது தயங்காது. இது எல்லோருக்கும் ஏற்கனவே தெரிந்த உண்மை. புலிகள் என்ற அமைப்பு தோன்றி இருக்காத காலத்திலேயே தெரிந்த உண்மை. 1971 ம் ஆண்டு, பத்தாயிரம் சிங்கள மக்களை படுகொலை செய்த ஸ்ரீலங்கா அரசு, மீண்டும் 1989 - 1991 ல் குறைந்தது எழுபதாயிரம் சிங்கள மக்களை படுகொலை செய்தது. தனது சொந்த இன மக்களையே, ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த அரசு, சிறுபான்மை இனமான தமிழ் மக்களை அழிக்கவும் தயங்காது. இதெல்லாம் நடக்கும் என்று தெரிந்து தான் புலிகள் போராடத் தொடங்கினார்கள். புலிகளை அழிக்கும் காலத்தில், ஏராளமான அப்பாவி மக்களும் அழிக்கப் படுவார்கள் என்பது ஏற்கனவே தெரிந்தது தான். "நிரந்தரமாக போரை நிறுத்த வேண்டுமானால், இப்படியான இழப்புகளை எதிர்பார்க்க வேண்டியிருக்கும்." என்று அமெரிக்க அரசும் நியாயம் கூறியது. ஈழப் போர்க் கள நிலவரம் அந்தளவு மோசமாக இருந்தது. அனால், இங்கே வியாசன் என்ன செய்கிறார்? யாருடைய பக்கம் அதிக இழப்பு ஏற்பட்டது என்று கணக்குப் பார்க்கிறார். இப்படி இழப்புக் கணக்குக் காட்டுவதால், தமிழ் மக்களுக்கு என்ன பிரயோசனம்? இழந்த உயிர்கள் எல்லாம் திரும்பக் கிடைத்து விடுமா? தமிழரின் பிணங்களின் எண்ணிக்கையை சரியாக கணித்துக் கூறினால் என்ன கிடைக்கும்? அதனால் என்ன இலாபம்?
viyasan
க‌லை அவ‌ர்க‌ளே,

விடுத‌லைப் புலிக‌ள் இய‌க்க‌த்தில் ஆர‌ம்ப‌த்தில் முஸ்லீம்க‌ள் இருந்திருக்க‌லாம் அவ‌ர்க‌ளில் பெரும்பாலானோர் பின்ன‌ர் சிங்க‌ள‌ அர‌சுட‌ன் சேர்ந்து ஊர்காவ‌ல் ப‌டையாக‌ மாறித் த‌மிழ‌ர்க‌ளைப் ப‌டுகொலை செய்த‌ன‌ர் த‌மிழ்ப்பெண்க‌ளைக் க‌ற்ப‌ழித்த‌ன‌ர் என்ப‌தும் ம‌றுக்க‌ முடியாத‌ உண்மை. நான் சொல்வ‌தெல்லாம், இம்ரான் என்ற‌வ‌ர் முஸ்லீம் அல்ல‌, இம்ரான் ப‌டைய‌ணி ஒரு முஸ்லிமின் நினைவால் அமைக்க‌ப்ப‌ட்ட‌தல்ல. இம்ரான் என்ற‌ழைக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர் ச‌ங்க‌ர‌ப்பிள்ளை ச‌தான‌நந்த‌ன் என்ற‌ யாழ்ப்பாண‌த்தைச் சேர்ந்த‌ த‌மிழ‌ர் என்ப‌தே. கீற்று வேறு வித‌மாக‌ எதையும் வெளியிட்டிருந்தால் அத‌ற்குப் ப‌தில‌ளிக்க‌வேண்டிய‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளே த‌விர‌, நான் அல்ல‌.

என்னையும், சேர். இராம‌நாதனையும் தொப்பி பிர‌ட்டி என்ப‌திலிருந்தே, உங்க‌ளுக்கு தொப்பி பிர‌ட்டி என்றால் என்ன‌ என்றே தெரியாது என்ப‌து தெளிவாகிற‌து. இல‌ங்கை முஸ்லீம்களுக்குத் தொப்பிபிர‌ட்டிக‌ள் என்ற பெயர் த‌மிழீழ‌ விடுத‌லைப் போராட்ட‌த்தை விட‌ முந்தைய‌து. அது இல‌ங்கை முஸ்லீம்க‌ளின், பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டும் விலாங்குப் புத்தியினால் ஏற்ப‌ட்ட‌ பெய‌ர். அவ‌ர்க‌ள் யாழ்ப்பாணத்லிருக்கும் போது த‌மிழ் முஸ்லிம்க‌ள், கொழும்பில் சிங்க‌ள‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் வாழும் போது, சிங்க‌ளவர்களுக்கு வால் பிடித்துப் பிழைத்துக் கொள்வார்க‌ள். உங்களின் க‌ருத்துப்ப‌டி சேர் இராம‌நாத‌ன் சிங்க‌ளவர்க‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ச் செயல்ப‌ட்ட‌தாலா, முஸ்லீம்க‌ள் சிங்க‌ளவ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வ‌ளித்து த‌மிழ‌ர்க‌ளின் முதுகில் குத்தி, த‌மிழ‌ர்க‌ளை அழிக்க‌ உத‌வினார்க‌ள். சேர் இராம‌நாத‌னின் அன்றைய‌ செய‌ல் முஸ்லிம்க‌ளுக்கு எதிரான‌த‌ல்ல‌, அவ‌ர் அப்பொழுது முழு இல‌ங்கைய‌ரின் த‌லைவ‌ர். முழு இல‌ங்கையையும், ஆங்கிலேய‌ரின் பிரித்தாளும் செய‌லிலிருந்து காக்க‌ வேண்டிய‌ க‌ட‌மை அவ‌ருக்கு இருந்தது. ஆனால் அதே சிங்க‌ளத் தலைவ‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து கொண்டு, முஸ்லீம்க‌ளில் த‌மிழ‌ர்க‌ளின் முதுகில் குத்தினார்க‌ளே, இன்னுமா முஸ்லிம்க‌ளுக்கு அந்தப் ப‌ழிவாங்கும் உண‌ர்வு தீர‌வில்லை. சேர் இராம‌நாத‌ன் எத‌ற்காக‌ ச‌ர்வ‌ச‌ன‌ வாக்குரிமையை ம‌றுத்தார் என்ப‌து விவாத‌த்துக்குரிய‌து. இது அவ‌ர‌து உண்மையான‌ நோக்க‌த்தை அறியாத‌வ‌ர்க‌ள் த‌மிழ்நாட்டுப் பெரியாரிஸ்டுக‌ளைத் திருப்திப்ப‌டுத்த‌ க‌ட்டிய‌ க‌தைக‌ளில் ஒன்று.

ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் த‌மிழ்த்தேசிய‌த்துக்கும், த‌மிழ்நாட்டுத் த‌மிழ்த்தேசிய‌த்துக்கும் முர‌ண்பாடுகளுண்டு. ஈழ‌த்தின் த‌மிழ்த்தேசிய‌த்தில் முஸ்லீம்களுக்குப் ப‌ங்கு கிடையாது ஏனென்றால் ஈழ‌த்தில் முஸ்லீம்க‌ள் தமிழ‌ர்க‌ள‌ல்ல‌ அவ‌ர்க‌ளின் முன்னோர்க‌ள் அரேபியாவிலிருந்து, அல்ல‌து துருக்கியிலிருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள், அவ‌ர்க‌ள் வெறும் முஸ்லீம்க‌ள் ம‌ட்டுமே. அத‌னால் தமிழ்நாட்டுத் த‌மிழ்தேசிய‌த்துக்கும் என‌க்கும் ச‌ம்ப‌ந்த‌ம் கிடையாது, நான் த‌மிழ‌ன் ம‌ட்டுமே. ஈழ‌த்தில் த‌மிழ்பேசும் முஸ்லிம்க‌ள் தமது மொழிவ‌ழிச்ச‌கோத‌ர‌ர்க‌ளாகிய‌ த‌மிழ‌ர்க‌ளை வேரறுக்க‌ச் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு உத‌விய‌தை சொல்வ‌தும் எழுதுவ‌தும் என்னைத் த‌மிழின‌வாதியாக்குமென்றால், அது என‌க்குப் பெருமையே, நான் இன்னும் எழுதுவேன். கீற்றில் இல்லாது விட்டால் என்னுடைய‌ வ‌லைப்ப‌திவில் எழுதுவேன். இப்ப‌டியான‌ புருடாக்க‌ளுக்கெல்லாம் ப‌ய‌ந்தால் நான் இங்கு ப‌திலெழுதியிருக்க‌வே மாட்டேன‌ல்ல‌வா?

இன்று ம‌னிதவுரிமைக‌ள் இய‌க்க‌ங்க‌ளோ அல்ல‌து எந்த‌ நடுநிலையான‌ வெளிநாட்டு நிறுவ‌னமோ,இல‌ங்கையில் ந‌ட‌ந்த‌ போர்க்குற்ற‌ங்க‌ளுக்கு நீதி கேட்கும் போதெல்லாம் சிங்க‌ள‌வ‌ர் கூறுவ‌தெல்லாம், புலிக‌ள் சிங்க‌ள‌வ‌ரையும் கொன்ற‌ன‌ர் என்ப‌து தான். அந்த‌ ஒரு சில‌, ம‌றுதாக்குத‌ல்க‌ளில் ந‌ட‌ந்த உயிரிழ‌ப்புக்களைக் காட்டி, திட்ட‌மிட்டுச் செய்த‌ த‌மிழ‌ர்க‌ளின் இன‌ப்ப‌டுகொலைக்குப் ப‌தில் சொல்வ‌தைத் த‌விர்க்க‌ விரும்புகிறது சிங்க‌ள‌ அர‌சு. அப்ப‌டியானால், க‌லை அவ‌ர்க‌ளின் வாத‌த்தின் ப‌டி, புலிக‌ளின் தாக்குத‌ல்க‌ளில் நூற்றுக்கண‌க்கில் சிங்க‌ள‌வ‌ர்க‌ளும் கொல்ல‌ப்ப‌ட்ட‌தால், 40,000 க்கும‌திக‌மான‌ த‌மிழ‌ர்க‌ள் திட்ட‌மிட்டுக் கொல்ல‌ப்ப‌ட்ட‌ இன‌ அழிப்புக்குத் த‌மிழ‌ர்க‌ள் நீதி கேட்க‌க் கூடாது. இவ‌ர் எப்ப‌டி த‌ன்னுடைய‌ சுயரூப‌த்தை ம‌றைத்தாலும் இவ‌ர‌து ஈழ‌த்த‌மிழ‌ர் எதிர்ப்பு முக‌ம் தெரிகிற‌து. அத‌ற்கிடையில் விவ‌ர‌ங்கெட்ட‌ உதார‌ண‌ங்க‌ள் வேறு. நான் ஒன்றும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் இற‌ப்பைக் குறைத்து ம‌திப்பிட‌வில்லை. ஆனால் இந்த‌ப் போரில் சிங்க‌ள‌வ‌ர்க‌ளாலும், முஸ்லிம்க‌ளாலும் பெரும் உயிரிழ‌ப்பை, இனவ‌ழிப்பைச் ச‌ந்தித்தவ‌ர்க‌ள் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் ஆனால் த‌மிழ‌ர்க‌ளை வில்ல‌ன்க‌ளாக்கிப் பிர‌ச்சார‌த்தாலும், முஸ்லீம் நாடுகளின் ஆத‌ர‌வினாலும் அனுதாப‌த்தைச் ச‌ம்பாதித்துக் கொண்ட‌வ‌ர்க‌ள் இல‌ங்கை முஸ்லிம்க‌ள். இல‌ங்கை முஸ்லிம்க‌ளின் ப‌ழிவாங்கும் உண‌ர்வு த‌மிழ‌ர்க‌ளைக் கொல்ல‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு உத‌விய‌து.

புலிக‌ள் செய்த‌வ‌ற்றையெல்லாம் நியாய‌ப்ப‌டுத்துவத‌ல்ல‌ என்னுடைய‌ நோக்க‌ம். ஆனால் முஸ்லீம்க‌ளுக்குப் புலிக‌ள் இழைத்த‌ துன்ப‌ங்க‌ள் கொலைக‌ளை விட‌ மோச‌மான‌ கொலைக‌ளும், க‌ற்ப‌ழிப்புக‌ளும் ம‌ட்டும‌ல்ல‌, முஸ்லிம்க‌ளின் ஒரு சில‌ ப‌டுகொலைச் ச‌ம்ப‌வங்க‌ளை விட‌ மிகவும் அதிக‌மான‌ ப‌டுகொலைக‌ளை முஸ்லீம் ஊர்காவ‌ல் ப‌டையின‌ர் சிங்க‌ள இராணுவ‌த்துட‌ன் சேர்ந்து செய்துள்ள‌ன‌ர். ஆனால் முஸ்லீம்க‌ள் தாம் ப‌ட்ட‌ துன்ப‌ங்க‌ளை ம‌ட்டும் பெரிது ப‌டுத்தி, உல‌க‌ளவில் அனுதாப‌த்தைப் பெற்ற‌து ம‌ட்டும‌ல்ல‌, சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்குப் ப‌ல‌ முஸ்லிம் நாடுக‌ளின் உத‌விக‌ளைப் பெற்றுக் கொடுத்து த‌மிழ‌ர்க‌ளைப் ப‌ழிவாங்கி விட்ட‌ன‌ர். அதை விட‌ பிர‌பாக‌ர‌ன் வெளிப்ப‌டையாக‌ ம‌ன்னிப்புக் கேட்டும் கூட‌, எந்த‌ முஸ்லீமும் இதுவ‌ரையில் த‌மிழ‌ர்க‌ளுக்குத் தாம் இழைத்த‌ துன்ப‌ங்க‌ளுக்கும் ப‌டுகொலைக‌ளுக்கும் வெறும் ம‌ன‌த்தாப‌த்தைக் கூட‌த் தெரிவிக்க‌வில்லை என்ப‌து தான் என்னுடைய‌ க‌ருத்தாகும்.
sirajudeen
திரு.விசயன் தொடர்ந்து பதிவில் இருக்கும் உங்கள் கருத்துகளை படிக்கும் யாவருக்கும் ஒன்று நன்றாக புரியும். பாசிச இந்த்துவ கருத்துகளை முன்னெடுத்து, முஸ்லிம்கள் முதுகில் குத்தினார்கள் என்றவாறே, பின்னர் சகோதரி லறீனாவிற்கு பதில் கூறும் போது நாங்களும் முஸ்லிம்களும் சகோதரர்கள் என்று அப்படியே பல்டி அடிக்கும் உங்கள் தொடர் பதிலே சாட்சி.

திரு.கலை மற்றும் சகோதரி லறீனாவின் பதில்களுக்கு இன்னும் முழுமையான் பதில்கள் கூறாமல், சொன்னதையே திருப்பி சொல்லும் ஊதுகூழாக இருப்பது தெரிகிறது.

இத்தனை மாற்று மத விரோத போக்கினை உடைய உங்களை காணும் போது இன படு கொலையாளிகள் நரேந்திர மோடியும், ராஜ பக்சேவும் தோற்றார் போங்கள்.

ஆதிக்க சாதி வெறியன் பசும்பொன்னை போற்றும் தமிழ் தேசிய வாதிகளும், பாசிச இந்த்துவ கருத்து உடைய நீங்களும் ஈழப் பிரச்சனையில் அடையாளம் காணப்படக் கூடியவர்கள்.

தொடர்ந்து கூறுங்கள் உங்கள் கருத்தை கோயபல்சை போல.......
Kalai
வியாசன் அவர்களே! உங்களிடம் ஒரு கேள்வி. கீழேயுள்ள தகவல் கீற்று இணையத்தளத்தில் வந்தது. கீற்று ஆசிரியரும், நாம் தமிழர், மே 17, சேவ் தமில்ஸ் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எல்லோரும் இந்த தகவலை உண்மையென்று கூறினார்கள். ஆனால், உங்களது பின்னூட்டங்களை பார்க்கும் பொழுது, அந்த தகவல் மீது சந்தேகம் எழுகின்றது. நீங்கள் முஸ்லிம்கள் பற்றி தெரிவிக்கும் கருத்துகளும், கீற்று இதுவரை காலமும் எமக்கு தெரிவித்த கருத்துகளும் முன்னுக்குப் பின் முரண்படுகின்றன. நீங்கள் சொல்வது சரியா? அல்லது கீற்று சொல்வது சரியா?
//புலிகள் இயக்கத்தில் இந்துக்கள், கிறித்துவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தினரும் இருந்திருக்கிறார்கள். எல்லா மதத்தவர்களும் சமமாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். எந்த மதத்தைச் சேர்ந்தவர் இயக்கத்தில் புதிதாக சேர்ந்தாலும், அவர்களுக்கு இயக்கப் பெயர் ஒன்று சூட்டப்படுவதும், அவர்கள் தங்களது மதவழிபாட்டைத் தொடர அனுமதிக்கப்படுவதும் வழக்கத்தில் இருந்திருக்கிறது. தோழர் இஸ்மாயில் முஸ்தீன் தனது நேர்காணலில்"சங்கர் என்னும் ஆயுதப் பயிற்சியாசிரியரை போர்நிறுத்தக்காலத்தில் புலிகளின் பிரதேசத்தில் நான் சந்தித்தேன். அவருடன் பேசத் தொடங்கிய பிறகுதான் அவர் நான் வாழும் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவர் ஒரு முஸ்லிம் என்பதும் எனக்குத் தெரிய வந்தது. இதுபோல் நிறைய முஸ்லிம்கள் புலிகள் அமைப்பில் கடைசிவரை இருந்தார்கள். புல்மோட்டை ஊர் முழுக்கவே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான ஊர் என்னும் நிலைப்பாடு இருந்தது. அந்த அளவுக்கு புல்மோட்டையைச் சேர்ந்த முஸ்லிம் அன்பர்கள் பலர் கடைசி வரை புலிகள் அமைப்பில் இருந்தார்கள்." என்று கூறுகிறார். முஸ்லிம் சகோதரர்கள் மதநம்பிக்கையை விட்டுத்தராதவர்கள் என்பதை தனியே சொல்லத் தேவையில்லை.//- கீற்று நந்தன்

மேலும் பிரபாகரன் மன்னிப்புக் கேட்டதாக நீங்கள் திரும்பத் திரும்பக் கூறுகின்றீர்கள். கிளிநொச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தான் அது நடந்தது. அதையும் பிரபாகரன் சார்பில் அன்டன் பாலசிங்கம் தான் அவ்வாறு கூறினார். அதுவும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றம் சம்பந்தமாக பதிலலளிக்கும் போது மட்டுமே. "(முஸ்லிம்களை வெளியேற்றியது) ஒரு துன்பியல் சம்பவம். அதற்காக வருந்துகிறோம்." என்று பிரபாகரன் கூறியதை, பாலசிங்கம் ஆங்கிலத்தில் மன்னிப்புக் கேட்பது மாதிரி திரித்துக் கூறினார். (அந்த ஒளிப்பதிவை நீங்கள் இப்போதும் யூடியூபில் பார்க்கலாம்.) பாலசிங்கம் "மன்னிப்புக் கேட்டதை", பிரபாகரன் கேட்டதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால், புலி ஆதரவு தமிழ் ஊடகங்கள் அதனை மறுத்து வந்தன. "பிரபாகரன் ஒருக்காலும் மன்னிப்புக் கேட்கவில்லை" என்று அரசியல் அவதானிகள் என்ற பெயரில் பலர் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வியாசன் கூட, அன்று அப்படித் தான் பேசியிருப்பார். இன்று பிரபாகரன் உயிரோடு இல்லை என்ற நம்பிக்கையில், அவர் அப்படிச் சொன்னார், இப்படிச் சொன்னார் என்று நாங்கள் எதையும் கூறலாம். பிரபாகரன் இப்போதும் உயிருடன் இருந்தால், அவரோடு தொடர்பில் உள்ள நெடுமாறன், வைகோ போன்றோர் பிரபாகரனின் கருத்தை கேட்டுச் சொல்ல வேண்டும். வியாசன் சொல்வது உண்மையா, பொய்யா என்பதை, பிரபாகரன் வாயாலேயே நேரடியாக கேட்போமே. மேலும் அன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், "மன்னிப்பு" மட்டுமே கேட்கப் பட்டதே தவிர, முஸ்லிம்களை மீளக் குடியேற வருமாறு அழைப்பு விடுக்கவில்லை. அவ்வாறு பிரபாகரன் சொல்லி இருந்தால், வியாசன் அதற்கு ஆதாரம் காட்ட வேண்டும்.
viyasan
சிராயுதீன், நான் ச‌கோத‌ரி ல‌றீனாவின் எந்த‌க் கேள்விக்குப் ப‌தில‌ளிக்க‌வில்லையென்பதைச் சுட்டிக்காட்டினால், உங்க‌ளுக்கு விள‌ங்கும் வ‌கையில் ப‌தில‌ளிக்கிறேன், இல‌ங்கை முஸ்லிம்க‌ள் த‌மிழ‌ர்களின் முதுகில் எத்த‌னை முறை குத்தினாலும், நாங்க‌ள், ஈழத்த‌மிழ‌ர‌கள் அவ‌ர்க‌ளைச் ச‌கோத‌ர‌ர்க‌ளாக ஏற்றுக் கொண்டு ஒற்றுமையுட‌ன் வாழ‌த்த‌யாராக இருக்கிறோம் என்ப‌தைத் தான் என‌து ப‌திலில் காட்டினேனே த‌விர‌ ப‌ல்டி அடிக்கும் ப‌ழ‌க்க‌ம் என‌க்குக் கிடையாது. முஸ்லீம்க‌ள் த‌ம‌து ம‌த‌த்தை முன்னிலைப்ப‌டுத்தி தாங்க‌ள் த‌மிழ‌ர்க‌ளே இல்லை என்கிறார்க‌ள், ஆனால் என்னைப் பார்த்தால் தான் மாற்று ம‌த‌விரோதியாக‌த் தெரிகிற‌து, அப்ப‌டித் தானே? முஸ்லீம்க‌ள் தம‌து ம‌த‌த்தைப் போற்ற‌லாம், ம‌த‌ அடிப்ப‌டையில் தம்மை அடையாள‌ப்ப‌டுத்தி, த‌மிழைப் பேசிக் கொண்டே, ஏனைய‌ த‌மிழ‌ர‌களின் முதுகில் குத்தலாம், நான் என்னுடைய‌ பார‌ம்ப‌ரிய‌ ம‌த‌ம் சைவ‌ம் என்றால், நான் இந்த்துத்துவ‌வாதியா? அப்ப‌டியானால் பெரும்பாலான‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் இந்துக்க‌ள், அதிலும் சைவ‌மும் த‌மிழும் பிரிக்க‌ முடியாதவையென ந‌ம்பும் இந்துக்க‌ள், எங்கு சென்றாலும் உல‌கின் மூலை முடுக்கெல்லாம் கோயில் க‌ட்டும் இந்துக்க‌ள், அவ‌ர்க‌ளெல்லாம் பாசிச‌வாதிக‌ளா? இணைய‌த்த‌ள‌ங்க‌ளில் உங்க‌ளில் ஒரு சில‌ரைத் திருப்திப்ப‌டுத்துவ‌தற்காக‌ எந்த‌ உண்மையான‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் எவ‌ரும் த‌ம‌து பார‌ம்ப‌ரிய‌த்தை விட்டுக் கொடுக்க‌ மாட்டார்க‌ள். ம‌த‌வெறியைப் ப‌ற்றி உங்க‌ளைப் போன்ற முஸ்லீம்க‌ள் பேசுவ‌து தான் வேடிக்கை.
viyasan
//"மன்னிப்பு" மட்டுமே கேட்கப் பட்டதே தவிர, முஸ்லிம்களை மீளக் குடியேற வருமாறு அழைப்பு விடுக்கவில்லை. அவ்வாறு பிரபாகரன் சொல்லி இருந்தால், வியாசன் அதற்கு ஆதாரம் காட்ட வேண்டும்.//

வியாச‌ன் கூட‌ பிர‌பாக‌ர‌ன் பிரபாகரன் ஒருக்காலும் மன்னிப்புக் கேட்கவில்லை என்று தான் அன்று பேசியிருப்பார் என்று நீங்க‌ள் ஊகிக்க‌த் தேவையில்லை, என்னைபொறுத்த‌வ‌ரையில் இந்த‌ ம‌ன்னிப்பு தேவையில்லாத ஒன்று, ம‌ன்னிப்பு கேட்கும‌ள‌வுக்கு இல‌ங்கை முஸ்லீம்க‌ள் அப்பாவிக‌ளும‌ல்ல‌, த‌மிழ‌ர்க‌ளைப் ப‌டுகொலை செய்யாத‌வ‌ர்க‌ளும், த‌மிழ்ப்பெண்க‌ளைக் க‌ற்ப‌ழிக்காத‌ நிர‌ப‌ராதிக‌ளும‌ல்ல‌.

த‌மிழ்பேசும் ம‌க்க‌ளின் ஒற்றுமை வேண்டி பிர‌பாக‌ர‌ன் ம‌ன்னிப்புக் கேட்டார். எந்த‌ நேர்காண‌லிலும் அன்ர‌ன் பால‌சிங்க‌ம் தான் பிரபாக‌ர‌னின் குர‌லாக‌ இருந்த‌வ‌ர். பிர‌பாக‌ர‌னின் க‌ருத்தைத் தான் அவ‌ர் விள‌க்கியிருப்பார். அத‌னால் தான் sangam.org போன்ற‌ த‌மிழீழ் சார்பான‌ இணைய‌த் த‌ளங்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌. Transcurrent போன்ற‌ புலி எதிர்ப்பு அல்ல‌து( ந‌டுநிலையான) இணைய‌த்த‌ள‌ங்க‌ள் கூட‌ பிர‌பாக‌ர‌ன் ம‌ன்னிப்புக் கேட்ட‌தாக‌ தெரிவிக்கின்ற‌ன‌. அதை விட‌ முஸ்லீம் க‌ல்விமான்க‌ளாகிய‌ பேராசிரிய‌ர் இம்தியாஸ் (Temple University, USA) போன்றோர், பிர‌பாகர‌ன் முஸ்லீம்க‌ளிட‌ம் ம‌ன்னிப்புக் கேட்ட‌தை ம‌ட்டும‌ல்ல‌, முஸ்லீம்க‌ளை மீள‌க்குடியேறுமாறு அழைத் த‌தையும் அவ‌ர‌து ப‌ல‌ ஆராய்ச்சிக் க‌ட்டுரைக‌ளில் குறிப்பிட்டுள்ளார். அதை வெறும் கூகிள் தேடுத‌லில் காண‌லாம். உண்மையில் நானும் இணைய‌த்திலும், என‌து ந‌ண்ப‌ர்க‌ள், உற‌வின‌ர்க‌ளிட‌மிருந்து தான் த‌மிழீழப் போராட்ட‌த்தின் வ‌ர‌லாற்றைப் ப‌ற்றி அறிகிறேனே த‌விர‌, நேர‌டியான‌ அனுப‌வ‌ம் என‌க்கும் கிடையாது.

மீள் குடியேற்ற‌த்துக்கு பிர‌பாக‌ர‌ன் அழைப்பு விடுத்தார் என்ப‌த‌ற்கான ஆதார‌ங்க‌ளை கீழேயுள்ள‌ இணைய‌த்த‌ள‌ இணைப்புக‌ளில் காண‌லாம்.

["A joint committee comprising representatives of LTTE and SLMC would be appointed to co-ordinate affairs related to the return of displaced Jaffna Muslims to their own homes," Mr. Hakeem, a Minister in Sri Lanka's government told reporters at a press conference in Colombo, on his return from Killinochchi Saturday night.

"Mr Pirapaharan has agreed to invite all displaced Muslims to return to their own places in the northeast," Mr. Hakeem said. Likewise, it was decided that a suitable environment should be created for people displaced

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=6845]

[Consequently in April 2002 Mr Hakeem had a round of meetings with Prabaharan and his team and signed an agreement promising that the displaced Muslims would be allowed to return to their homes in the LTTE held Northern districts (Imtiyaz, 2009). Following this, when the government had its second meeting with the LTTE in November 2002 in Thailand, the LTTE announced that the property of the displaced Muslims would be restored to them and that they would be allowed to return.

http://transcurrents.com/news-views/archives/2834]

[…..In 2002 LTTE leader Vellupillai Prabhakaran formally apologized for the expulsion of Muslims from the north and asked the Muslims to return. Some families returned and re-opened the Osmania College and two mosques in 2003

http://www.sangam.org/ANALYSIS/Muslim04_11_02.htm]
viyasan
[///மேலும் ஒரு நாட்டின் இனப்பிரச்சினை, எந்த இனம் அதிகம் இழந்திருக்கிறது என்பதை வைத்து தீர்மானிக்கப் படுவதில்லை. "தமிழர்கள் அதிகமாக இழந்திருக்கிறார்கள். அதனால் ஈழம் கொடுக்க வேண்டும்," என்று சிறுபிள்ளைத் தனமாக பேசிக் கொண்டிருந்தால்.தமிழரின் பிணங்களின் எண்ணிக்கையை சரியாக கணித்துக் கூறினால் என்ன கிடைக்கும்? அதனால் என்ன இலாபம்?///]

க‌லை அவ‌ர்க‌ளே,

க‌ருத்துப் புரியாது விட்டால் ம‌ற்ற‌வ‌ர்க‌ளிட‌ம் கேட்டுத் தெரிந்து கொள்ள‌ வேண்டுமே த‌விர‌ க‌ண்ட‌ப‌டி உள‌ற‌க் கூடாது. இவ்வ‌ள‌வு நாளும் ந‌ட‌ந்த‌ இந்த‌க் க‌ருத்துப்ப‌ரிமாற‌லில் ஈழ‌ப்பிரிவினையை ப‌ற்றி நான் ம‌ட்டும‌ல்ல‌ யாருமே பேச‌வில்லை. இதெல்லாம் அதிக‌ப்பிர‌ச‌ங்கித்த‌ன‌மாக‌ ம‌ற்ற‌வ‌ர்களின் ப‌திலை முழுமையாக‌ வாசிக்காம‌ல் ப‌திலெழுதுவ‌தால் வ‌ரும் வினை. உங்க‌ளின் உதார‌ண‌ங்க‌ள் கூட‌க் க‌ருத்துக்குச் ச‌ம்ப‌ந்த‌ம‌ற்ற‌வை தான். 200 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால் அமெரிக்காவில் செவ்விந்திய‌ர்க‌ளும் அவுஸ்திரேலியாவில் பூர்வீக‌ குடியின‌ரும் அதிக‌மாக‌ உயிர் இழ‌ந்திருக்கின்ற‌ன‌ராம் அத‌னால் 21ம் நூற்றாண்டில், ஐக்கிய‌நாடுகள் ச‌பையில் அங்க‌த்துவ‌முள்ள‌ நாட்டில், ம‌னிதவுரிமை ஒப்ப‌ந்த‌ங்க‌ளிலும், போரில் க‌டைப்பிடிக்க‌ வேண்டிய‌ ந‌டைமுறைக‌ளைப் ப‌ற்றிய‌ ஒப்ப‌ந்த‌ங்க‌ளிலும் கைச்சாத்திட்ட‌ நாட்டில் ந‌ட‌ந்த‌ இன‌வ‌ழிப்பில் இழந்த‌ ம‌க்க‌ளின் எண்ணிக்கையை க‌ண‌க்கிடவோ அல்ல‌து கொலைக‌ளின் இழ‌ப்பின் எண்ணிக்கையை ஒப்பிட்டோ பேச‌க் கூடாதாம். இவ‌ர் இந்த‌க் க‌ண‌க்கில் போனார் என்றால், மகாபார‌த யுத்தத்தில் கோடிக்க‌ண‌க்கானோர் இழ‌ந்த‌ன‌ர் என்றும், அத‌னால் இலங்கையில் இழ‌ந்த‌ த‌மிழ‌ர்க‌ளின் எண்ணிக்கையைக் க‌ண‌க்கிவோ ஒப்பிட‌வோ கூடாதென‌வும், ம‌காபார‌த‌ உதார‌ண‌த்தை அவிழ்த்து விட்டாலும் விடுவார் போலிருக்கிற‌து. இவ‌ரின் க‌ருத்துப்ப‌டி பார்த்தால், க‌டைசி யுத்த‌த்தில், வ‌ன்னியில் பெரும‌ள‌வில் ம‌க்க‌ள் ப‌டுகொலைசெய்ய‌ப்ப‌ட்ட‌து கண்டிக்க‌த்த‌க்க‌தென‌வும், இத்த‌னையாயிர‌ம் ம‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌த‌ற்கு நீதி விசார‌ணை ந‌ட‌த்த‌ப்ப‌ட‌ வேண்டும், இழ‌ப்புக்க‌ளின் எண்ணிக்கை மிக‌வும் அதிக‌ம் என்ற‌ அடிப்ப‌டையில் போர்க்குற்ற‌ விசார‌ணைக்கு வ‌லியுறுத்தும் நாடுக‌ளின் த‌லைவ‌ர்க‌ள், மனித‌வுரிமை இய‌க்க‌ங்க‌ள், ம‌னித‌வுரிமை ஆர்வ‌ல‌ர்க‌ள் எல்லாம் முட்டாள்கள், ம‌னித‌நேயம‌ற்ற‌வ‌ர்கள், அப்ப‌டித்தானே?

இந்த‌ லட்ச‌ணத்தில் இற‌ந்த‌ த‌மிழ‌ர்க‌ள் திரும்பி வ‌ர‌மாட்டார்க‌ள் என்றொரு வியாக்கியான‌ம் வேறு அப்ப‌டியானால் இந்த‌ ஆளின் க‌ருத்துப்ப‌டி நூற்றுக்க‌ணக்கில் முஸ்லீம்க‌ளும், சிங்க‌ள‌வ‌ர்க‌ள் இற‌ந்த‌தையும், ஆயிர‌க்க‌ண‌க்கில் அதுவும் வ‌ன்னியில் ஒரு சில‌ நாட்க‌ளில் 40,000 க்கு மேல் ம‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌தையும் ஒன்றென‌ நினைத்து, விட்டு விட‌ வேண்டும். சிங்க‌ள‌ போர்க்குற்ற‌வாளிக‌ளுக்கெதிராக‌ நீதி விசார‌ணை கேட்க‌க் கூடாது. இல‌ங்கை முஸ்லீம்க‌ள் அவ‌ர்க‌ளின் சிங்க‌ள‌ எச‌மான்க‌ளைப் பாதுகாப்ப‌திலும், அவ‌ர‌க்ளுக்கு உத‌வுவ‌திலும் தான் குறியாக‌ இருப்பார்க‌ள் என்ப‌து இதிலும் தெளிவாகிற‌து. ஒரு சில‌நாட்க‌ளில் 40,000 க்கு மேல் த‌மிழ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌தைக் கூட‌க் க‌ண‌க்கிடாம‌ல் விட்டு விட‌ வேண்டும் ஏனென்றால் அதனால் த‌மிழீழ‌ம் கிடைக்காது. இப்ப‌டியான‌ முட்டாள் த‌ன‌மான‌ க‌ருத்துக்க‌ளெல்லாம், ப‌திலெழுத‌ வேண்டிய‌ என் நிலையை நினைத்து, எந்த‌ச் சுவ‌ரில் முட்டிக்கொள்வ‌தென்று தெரியவில்லை.
Kalai
வியாசன் அவர்களே! நான் எழுதியது புரியா விட்டால் தெளிவாக எழுதும் படி கேட்க வேண்டும். அதை விட்டு விட்டு அதிகப் பிரசங்கித் தனமாக உளறக் கூட்டாது. சிங்கள அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை கூடாது என்று நான் எங்கே சொல்லி இருக்கிறேன்? நான் சொல்லாததை எல்லாம் சொன்னதாக பதில் கூறக் கூடாது. ஏற்கனவே கூறியிருக்கிறேன், ஈழப்பிரச்சினை பற்றி தெரியா விட்டால், யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அங்கே போர் நடந்தது. படுகொலைகள் நடந்தன. தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள, முஸ்லிம் மக்களும் படுகொலை செய்யப் பட்டார்கள். அந்த உண்மைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
போரில் கொல்லப்பட்ட 40000 தமிழ் மக்களின் விடயம் சிறிய விடயமல்ல. ஆனால், இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அதைக் காட்டி எதையும் பெற்றுக் கொள்ள முடியாது. முதலில் நீங்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ள முயற்சியுங்கள். தமிழர்களின் இனப்பிரச்சினை எத்தனை மக்கள் படுகொலை செய்யப் பட்டனர் என்பதில் தங்கி இருக்கவில்லை. இலங்கையில் முப்பதாண்டுகளாக போர் நடந்தது. மூன்று இனங்களை சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டனர். இந்த உண்மையை மூன்று இனங்களையும் சேர்ந்தவர்கள் ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும். முஸ்லிம், சிங்கள மக்களின் படுகொலைகள் நடந்துள்ளன. தமிழர்களான நாங்கள் அந்த தவறை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும். சிங்கள, முஸ்லிம் மக்களும் 40000 தமிழ் மக்களின் படுகொலையை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெற வேண்டும். இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அதுவே முதல் படி. இனங்களுக்கு இடையே குரோதங்கள் நிலைத்து நின்றால், இனப்பிரச்சினையும் நீடித்துக் கொண்டே செல்லும். இதெல்லாம் வியாசனுக்கு புரியாது. ஏனென்றால் அவர் ஈழத்தில் வாழும் ஒருவரல்ல. ஈழப் பிரச்சினைக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அவர் ஒரு இந்து மதவெறியர். ஆரெஸெஸ் காரர்களுடன் சேர்ந்து அகண்ட இந்து ராஜ்ஜியம் அமைப்பதே அவரது நோக்கம். வியாசன் உலகில் நடந்த படுகொலைகளை ஏற்றுக் கொள்ள மறுத்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்பாவி மக்களின் படுகொலை பற்றி எந்த வித சலனமும் இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார். உலகில் எந்த இனம் அழிந்தாலும் கவலைப்படாத ஒருவர், தமிழினம் அழிந்ததைப் பற்றி கண்ணீர் வடிக்கிறார். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகின்றது. மனிதநேயம் என்றாலே என்னவென்று தெரியாத ஒருவர், 40000 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள், உலகமே எங்களை திரும்பிப் பார் என்று கத்தினால் யாரும் வர மாட்டார்கள்.தமிழ் மக்களுக்காக யார் பேசுவது என்ற தகுதி வேண்டாமா? வியாசன் போன்ற இனவெறியர்களை பேச விட்டால், தமிழ் மக்களுக்கு ஏற்கனவே இருக்கும் ஆதரவும் இல்லாமல் போகும். ஏற்கனவே இந்த கீற்று தளத்தில் நீங்கள் உரையாடத் தொடங்கிய பின்னர், ஈழத்தமிழர்கள் மீதான தமிழக சகோதரர்களின் அனுதாபம் குறைந்து கொண்டே செல்கின்றது. தயவு செய்து, ஈழத் தமிழர்களை தனிமைப் படுத்தி விடாதீர்கள். நீங்கள் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய விரும்பினால், இனவாதம்/மதவாதம் பேசாமல் ஒதுங்கி இருங்கள். இல்லாவிட்டால், தமிழ் மக்கள் உங்களை ஒதுக்கி வைப்பார்கள்.
Kalai
// 40,000 க்கும‌திக‌மான‌ த‌மிழ‌ர்க‌ள் திட்ட‌மிட்டுக் கொல்ல‌ப்ப‌ட்ட‌ இன‌ அழிப்புக்குத் த‌மிழ‌ர்க‌ள் நீதி கேட்க‌க் கூடாது. //
ஐயா, பெரியவரே! இனவழிப்புக்கு நீதி கேட்கும் வேலையை ஈழத் தமிழர்களான நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்களுக்கு அந்தக் கவலை தேவையில்லை. குஜராத்தில் 40000 க்குமதிகமான முஸ்லிம்களை திட்டமிட்டு இனவழிப்பு செய்த மோடியின் ஆதரவாளர், அதைப் பற்றிப் பேசக் கூடாது. மோடி குஜராத்தில் என்ன செய்தாரோ, அதைத் தானே ராஜபக்ச செய்தார்? வியாசன் ஈழத் தமிழருக்கு ஆதரவாகப் பேசுவதை நாங்கள் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டியுள்ளது. ஒரு இனப்படுகொலையை ஆதரிப்பவர், இன்னொரு இனப்படுகொலையினால் பாதிக்கப் பட்ட மக்கள் பற்றி பேசக் கூடாது. அதனை ஈழத் தமிழரான நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த வியாசன் எழுதிய முதலாவது பின்னூட்டமே, அஸ்ஸாமில் நடந்த திட்டமிட்ட இனவழிப்பை ஆதரிப்பதாகத் இருந்தது. கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் நடந்த காலத்தில், அஸ்ஸாமில் வங்காளி முஸ்லிம்களின் இனப்படுகொலை நடந்தது. இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் திட்டமிட்டு இனவழிப்புச் செய்யப் பட்டனர். அதற்காக அஸ்ஸாமியர்கள் நீதி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை யாரும் தண்டிக்கப் படவில்லை. இன்றைக்கு இந்த தளத்தில் உரையாடிக் கொண்டிருக்கும் வியாசன் கூட அந்த இனவழிப்பு பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. இவர் ஈழத் தமிழரான எங்களது இனவழிப்பு பற்றி பேசுகிறாராம். ஐயகோ! என்ன கொடுமை இது. ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகின்றது. வியாசனை இப்படியே பேச விட்டால், ஹிட்லர், முசோலினி, மோடி, ராஜபக்ச எல்லோரும் ஈழத் தமிழர்களுக்கு நீதி கேட்டு வந்து விடுவார்கள். வியாசன் போன்ற இனப்படுகொலை ஆதரவாளர்களின் பேச்சை கேட்குமளவிற்கு, ஈழத் தமிழர்களின் நிலைமை தாழ்ந்து விடவில்லை.
Kalai
உண்மையில் வட மாகாண முஸ்லிம்களை வெளியேற்றும் எண்ணம் பிரபாகரனுக்கு இருக்கவில்லை என்றும், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை படுகொலை செய்வதற்கு காரணமாக இருந்த கருணா சொல்லித் தான், அவர்கள் வெளியேற்றப் பட்டனர். இந்த விபரங்கள் வியாசன் தந்துள்ள இணையத் தளங்களில் உள்ள தகவல்களில் இருந்து தெரிய வருகின்றது. பிரபாகரன் பெருந்தன்மையுடன் மன்னிப்புக் கேட்டார். அது பாராட்டப் பட வேண்டியது. ஆனால், முஸ்லிம்களின் கொலைக்கு காரணமாக இருந்த கருணா மன்னிப்புக் கேட்டாரா, அல்லது முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் வியாசன் மன்னிப்புக் கேட்டாரா? இங்கே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய விஷயம் சிங்கள கைக்கூலி கருணாவுக்கும், வியாசனுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரும் புலிகளை ஆதரிப்பதாக காட்டிக் கொண்டே, முஸ்லிம்கள் மீது விரோதம் பாராட்டி வந்துள்ளனர். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் படுகொலை செய்த போர்க்குற்றங்களில் கருணா சம்பந்தப் பட்டது எங்கள் எல்லோருக்கும் தெரியும். வியாசனுக்கும் அப்படியான சம்பந்தம் இருக்கின்றதா தெரியாது. ஆனால், முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷமாக பேசும் ஒருவர், கருணாவின் செய்யலை வரவேற்றிருப்பார். முஸ்லிம் விரோத கருணா ஒரு கோடரிக் காம்பு என்றால், வியாசனும் கோடரிக் காம்பு தான். கருணாவுக்கும், வியாசனுக்கும் ஒரே கொள்கை தான். 40000 தமிழர்கள் இனவழிப்பு செய்யப்பட்ட கணக்கை காட்டுவதால், தமிழ் மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை நண்பரே. 77 , 83 ஆண்டுகளில் எல்லாம் திட்டமிட்ட இனவழிப்பு நடந்தது. அதற்குப் பிறகு தான் புலிகளின் போராட்டம் தீவிரமடைந்தது. முதலாவது ஈழப்போரிலேயே குறைந்தது ஐம்பதாயிரம் தமிழர்கள் இனவழிப்பு செய்யப் பட்டனர். அப்போதெல்லாம், வியாசன் மாதிரி புலிகளும் "திட்டமிட்ட இனவழிப்பு" பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கவில்லை. ஸ்ரீலங்கா அரசை எதிர்த்துப் போராடுவதில் முனைப்புக் காட்டினார்கள். ஏனென்றால், எப்போதும் 40000 , 50000 என்று எண்ணிக்கையை காட்டிப் பேசிக் கொண்டிருந்தால், தமிழ் மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை. ஈழத் தமிழ் மக்களும் அதைப் பற்றி யோசிக்கவில்லை. தமது உரிமைகளை வென்றெடுப்பதில் மட்டுமே உறுதியாக இருந்தனர். இதைத் தான் நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். இதற்காக, புலிகளையும், ஈழத் தமிழர்களையும் வியாசன் முட்டாள்கள் என்று ஏசலாம். அதற்காக நாங்கள் கவலைப் படப் போவதில்லை. ஈழத்தமிழரான நாங்கள் என்றுமே பிணங்களை வைத்து அரசியல் நடத்துவதில்லை. பெரும் எண்ணிக்கையில் நடந்த திட்டமிட்ட இனவழிப்பு என்றெல்லாம் எடுத்துக் காட்டி, ஐ.நா. சபையிடம் பிச்சை கேட்டு யாசிப்பதில்லை. எங்களுக்கு யாருடைய கழிவிரக்கமும் தேவையில்லை. ஈழத் தமிழர்களான இத்தனை இழப்புகளைக் கண்டு துவளாது, எமது உரிமைகளை நாங்களே போராடிப் பெறுவோம். வியாசன் போன்ற இந்து மதவெறியர்களின் ஆதரவும் தேவையில்லை. வெளிநாட்டில் ஈழத்தமிழரின் அவலத்தை விற்பனைப் பொருளாக்கி, பணம் சேர்க்கும் பேர்வழி என்பது அவரது எழுத்துக்களில் இருந்து தெரிகின்றது. உங்களது அகண்ட இந்து ராஜ்யக் கனவை இந்தியாவோடு வைத்துக் கொள்ளுங்கள். ஈழத்தை அதற்குள் சேர்க்க வேண்டாம். சிங்கள இராணுவம் செய்த படுகொலைகள், முஸ்லிம் ஊர்காவல் படைகள் செய்த படுகொலைகள், புலிகள் செய்த படுகொலைகள், இவை எல்லாம், ஐ.நா., மற்றும் மனித உரிமைகள் நிறுவனங்களால் பதிவு செய்யப் பட்டுள்ளன என்று நான் தெரிவித்த பொழுது, வியாசன் மௌனமாக இருந்தார். பிறகு திடீரென பல்டியடித்து, போர்க்குற்ற விசாரணை கோரும் நாடுகள், மனித உரிமை இயக்கங்கள் எல்லாம் முட்டாள்களா என்று கேட்கிறார். ஏற்கனவே நான் அவரைக் கேட்ட கேள்வி அது என்பதை வசதியாக மறந்து விட்டார். நண்பரே, போர்க்குற்ற விசாரணைகள் நடக்கும். மனிதநேயவாதிகளான நாங்கள் அதனை வரவேற்கிறோம். ஆனால் இனவாதிகளான நீங்கள் அதற்கு தயாரா? தைரியமாகப் பதில் கூறவும். ஏனென்றால், போர்க்குற்ற விசாரணை வழக்குகள் சர்வதேச நீதிமன்றத்தில் வந்தால், அனைத்து தரப்பு செய்த படுகொலைகள் பற்றிய உண்மைகள் வெளிவரும். சிங்கள இராணுவம் புரிந்த படுகொலைகள், முஸ்லிம் ஊர்காவல் படை புரிந்த படுகொலைகள் இவற்றுடன் புலிகள் செய்த படுகொலைகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அப்போது உலகம் நான் பேசுவதைப் போலத் தான் பேசப் போகின்றது. அதாவது போரில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரும் போர்க்குற்றங்கள் புரிந்த உண்மையை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும். அந்த நாள், வியாசன் போன்ற இனவாதிகள் தனிமைப் படுவார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்க யாரும் இருக்க மாட்டார்கள். கீற்றில் வந்து கூட புலம்ப முடியாது. நாங்கள் சர்வதேச போர்க்குற்ற விசாரணையை விரைவு படுத்தக் கோருவோம். ஈழப்போரில் நடந்த போர்க்குற்றங்கள் அனைத்தும் வெளியில் வரட்டும்.
Periyasamy
முஸ்லீம்களுக்காக இத்தனை கண்ணீர் வடிப்பவர்கள் கிழக்கு மாகாணத்தில் பல பாரம்பரிய தமிழ் கிராமங்கள் முஸ்லீம்கள் வசம் போனது எப்படி என்பதை விவரிக்க வேண்டும். சிங்கள காடை இராணுவத்துடன் சேர்ந்து கொண்டு கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சூறையாடல் ஆகியவற்றை மேற்கொண்டு இந்த இஸ்லாமிய கும்பல்கள் இந்த நிலங்களை வளைத்து போட்டன. போதாக்குறைக்கு பல்வேறு விதமான தடைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்க முடியாமல் திணறிய தமிழர்களின் காணிகளை சொற்ப விலைக்கு வாங்கிக்கொண்டதன் மூலமும் இந்த இஸ்லாமிய மயமாக்கல் நடந்தது. இன்னும் இருபது ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்தில் இருந்து தமிழர்கள் சுத்தமாக துடைக்கப்படுவார்கள். அந்த மாகாணம் முழு இஸ்லாமிய மாகாணமாக மாறும் (கொஞ்சம் சிங்கள குடியேற்றம் போக). கடந்த நாற்பது ஆண்டு கால வரலாற்றில் இலங்கையில் சிங்களரும் முஸ்லீம்களும் மிகவும் வளர்ந்து இருக்கிறார்கள். தமிழர்கள் தான் தேய்ந்து போய் உள்ளார்கள்.
இந்துக்கள், புத்த மதத்தை பின்பற்றும் சக்மாக்கள் ஆகியோர் வாழும் பங்களாதேசத்தை இஸ்லாமிய தேசமாக அறிவித்ததே அடிப்படையில் குற்றம். போதாக்குறைக்கு தங்களுடைய மத அடிப்படைவாத புத்தியால் மற்ற மதத்தினருக்கு பல வகையில் தொல்லையை கொடுத்து அவர்கள் இந்தியாவுக்கு ஓட செய்வது. அப்புறம் தாங்களே ஏழைகள் என்னும் பெயரில் இந்தியாவுக்கு (அதாவது அசாமுக்கு) போய் அங்கு சில மாவட்டங்களில் பெரும்பாண்மையாகவும் ஆகி தொல்லை கொடுப்பது.
அதாவது தமிழர்கள் (இந்துக்கள், கிறித்தவர்கள்) மற்றும் இஸ்லாமியர்கள் ஆகியோரும் வாழும் இலங்கையை புத்த மத நாடாக அறிவிப்பது. பல வழிகளில் தொல்லை கொடுத்து இன ஒடுக்குமுறை செய்த்து தமிழர்களை தமிழ் நாட்டுக்கு ஓடச் செய்வது. பிறகு தாங்களும் ஏழைகள் என்னும் பெயரில் நிறைய சிங்களர்கள் தமிழ் நாட்டில் வந்து குடியேறி பல மாவட்டங்களில் பெரும்பாண்மையினராக மாறினால் எப்படி இருக்கும். தமிழகத்தில் இருக்கும் தமிழர்கள் திராவிட கட்சிகளுக்கு தான் வாக்களிக்கிறார்கள். சிங்களிரின் ஓட்டு நமக்கு தான் கிடைக்கும் என்னும் ஆசையில் காங்கிரசு கட்சி சிங்களருக்கு ஓட்டுரிமை, ரேஷன் கார்டு ஆகியவற்றை வழங்கினால் எப்படி இருக்கும். எத்தகைய ஆத்திரத்தை ஏற்படுத்தும்? அசாமில் இப்படிப்பட்ட கொந்தளிப்பு தான் நிலவுகிறது. போடோக்களை அதிகமாக குற்றம் காண முடியாது.
Periyasamy
மேற்கத்திய உலகம் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை ஆரம்பத்தில் ஆதரித்து தான் வந்துள்ளது. ஆனால் அது செப்டம்பர் 11 இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு பின்னர் தான் மாறியது. இஸ்லாமியர்கள் விரும்பியோ விரும்பாமலோ தமிழர்களின் போராட்டத்துக்கு பிரச்சினையாக தான் இருந்து வந்துள்ளார்கள்.
Kalai
கீற்று ஆசிரியருக்கு, வியாசனுக்கு நான் அளித்த பதில்களை இன்னமும் வெளியிடாமல் தடுத்து வைத்திருக்கும் காரணத்தை தெரிந்து கொள்ளலாமா?
K.Easwaran
We cannot justify LTTE chasing of Muslims. That was a decision taken by LTTE hierachy without the consent of the Jaffna Tamil population. Yes there were many muslims helped Tamils during 1983 and many other times. However, some Muslims from the East worked with Sri Lankan army, and committed atrocities on Tamils and lot of Young men from the East came running to Jaffna through Jungles. Their plight might have influenced the decision to chase Muslims from Jaffna. Those Mulims should be identified as Sri Lankan army and not as Muslims. Whatever it was, it was a very bad decision to evict Muslims from Jaffna. We, Tamils, in Sri Lanka, are a suffering community and we should not have inflicted suffering on others. The only satisfaction is that they were not killed in Jaffna.
viyasan
ஜ‌னாப். க‌லையின் உள‌ற‌ல்க‌ளுக்குப் ப‌தில‌ளித்து என்னிடைய‌ நேர‌த்தை வீணாக்க‌ விரும்ப‌வில்லை. உண்மையில் முஸ்லீம்க‌ள் ம‌ட்டும் ஈழ‌விடுத‌லைப் போராட்ட‌த்துக்குத் த‌டையாக‌ இல்லாம‌லிருந்திருந்தால், விடுத‌லைப்புலிகள் மிக‌வும் இல‌குவாக‌ த‌மிழீழ‌த்தை அடைந்திருப்பார்க‌ள், எப்ப‌டி கோசோவோவை மேற்கு நாடுக‌ள் அங்கீக‌ரித்த‌னவோ அவ்வாறே ந‌ட‌ந்திருக்குமென்றால் மிகையாகாது என்று சொல்லி மார்த‌ட்டினார் கிழ‌க்குமாகாண பிர‌தேச‌ச‌பை உறுப்பின‌ர் முகம்ம‌து சுகைர் (M.M.Zuhair, P.C). 'Muslim Resistance to LTTE in East First Major Obstacle to Eelam' (google) என்ற தன‌து பேச்சில் அவ்வாறு குறிப்பிட்டார். அப்ப‌டியிருக்க‌ இங்கு புதுக்க‌தை விடுகிறார் முகம்ம‌து க‌லை. இல‌ங்கையின் த‌மிழ்பேசும் முஸ்லீம்க‌ள் அற்ப‌ ச‌லுகைக‌ளுக்காக‌ சிங்க‌ளவருட‌ன் இணைந்து த‌மிழ‌ர்க‌ளின் முதுகில் குத்தாம‌லிருந்திருந்தால் நிச்ச‌ய‌மாக‌ த‌மிழீழ‌ம் எப்பொழுதோ விடுத‌லைய‌டைந்திருக்கும், த‌மிழ‌ர்க‌ளுக்கு உல‌கில் ஒரு நாடு கிடைத்திருக்கும் என்ப‌தை உண்மையான‌ த‌மிழ‌ர்க‌ள் அறிவ‌ர். இல‌ங்கையில் முஸ்லீம்க‌ள் த‌மிழ‌ர்க‌ளல்ல‌, அவ‌ர்க‌ள் த‌ம்மைத் த‌மிழ‌ர்க‌ளாக‌ அடையாள‌ப்ப‌டுத்துவ‌தில்லை. அங்கு அவ‌ர்க‌ளுக்கும் த‌மிழ்தேசிய‌த்துக்கும் எந்த‌ வித‌ ப‌ங்கும் கிடையாது. ஏன் த‌மிழ்நாட்டில் கூட‌, ப‌ல‌த்தீனிய‌ர்க‌ளின் குழ‌ந்தைக்கு ப‌ல்விழுந்தால் கூட‌ குய்யோ முறையோ என்று கூக்குர‌ல் போட்டு வீதிக்குப் ப‌டையெடுக்கும் முஸ்லீம்க‌ள் ப‌ல்லாயிர‌க்கண‌க்கான‌ த‌மிழ‌ர்க‌ளும், த‌மிழ்க்குழ‌ந்தைக‌ளும் இற‌ந்த‌ போது மெள‌ன‌மாக இருந்த‌ன‌ர், அதை ஆத‌ரித்துப் பேசி, இலங்கை அர‌சுக்கு ஆத‌ர‌வாக‌ப் பேசிய‌ த‌மிழ்நாட்டு முஸ்லிம்க‌ளையும் என‌க்குத் தெரியும், உதார‌ணாமாக ஜனாப். ஜெய்னுலாப்தீன், அவ‌ரது எத்த‌னையோ பேச்சுக்க‌ளில் இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளின் போராட்ட‌த்தை இழிவு ப‌டுத்தியும், புலிக‌ளில் முழுக் குற்றச்சாட்டையும் கூறி இல‌ங்கை அர‌சுக்கு ஆத‌ர‌வாக‌ப் பொய்ப்பிர‌ச்சார‌ம் செய்வ‌தை Youtube வீடீயோக்க‌ளில் காண‌லாம். நான் இந்த்துவாவும் இல்லை, மோடிக்கு ஆத‌ர‌வும் இல்லை எதிர்ப்புமில்லை. இல‌ங்கையின் பெரும்பான்மையான‌, சைவ‌மும் த‌மிழும் பிரிக்க‌ முடியாது என‌ ந‌ம்பும், சைவ‌சித்தாந்த‌ பார‌ம்ப‌ரிய‌த்தில் வ‌ந்த‌ யாழ்ப்பாண‌த் த‌மிழ‌ர்க‌ள் கூட‌, த‌மிழ், தமிழ‌ர்க‌ளின் ஒற்றுமை என‌ வ‌ரும்போது, த‌ம‌து ம‌த‌த்துக்கு முன்னுரிமை கொடுக்க‌மாட்டார்க‌ள் என்ப‌தை 50 வருட‌ங்க‌ளுக்கு முன்பே, கிறித்த‌வ‌ராகிய‌ சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வ‌நாய‌கத்தை த‌ம‌து த‌லைவ‌ராக‌, ஈழ‌த்தின் த‌ந்தையாக‌ ஏற்றுக் கொண்டு தாம் ம‌த‌ச்சார்ப‌ற்ற‌வ‌ர்க‌ள் என்ப‌தை உல‌குக்கு எடுத்துக்காட்டியுள்ள‌ன‌ர். இன்று கூட‌ பெரும்பான்மையான‌ இந்து த‌மிழ‌ர்க‌ள் எந்த‌ள‌வுக்கு கிறித்த‌வ‌க் குருமார்க‌ளை ம‌திக்கிறார்க‌ள் போற்றுகிறார்க‌ள் என்றால் அத‌ற்குக் கார‌ணம், ஈழத்தில் கிறித்த‌வ‌க்குருமார்க‌ள் த‌மது த‌மிழின‌ப்பற்றுக்கு முன்னுரிமை கொடுப்ப‌து ம‌ட்டும‌ல்ல‌, அவ‌ர்கள் த‌மிழைக் காக்க‌த் த‌ம‌துயிரையும் கொடுக்கவும் த‌யங்காத‌வ‌ர்க‌ள் என்ப‌தால் தான். அவ‌ர்க‌ள் த‌மது ம‌த‌ம் ம‌ட்டும் தான் கிறித்தவ‌ம்,ஆனால் அவ‌ர்க‌ளின் முத‌ல‌டையாள‌ம் த‌மிழ‌ர்க‌ள் என்பதை ம‌றுக்காத‌வ‌ர்க‌ள். இன்று கூட‌ இல‌ங்கையில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளில் ஒருவ‌ர் த‌மிழ‌ர் தேசிய‌ முன்ன‌ணியின் சும‌ந்திர‌ன்,அவ‌ரும் ஒரு கிறித்த‌வ‌ர் தான். ஆனால் நாங்க‌ள் பெரும்பான்மையான‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் அவ‌ரைத் த‌மிழ‌ராக‌ ம‌ட்டும் தான் பார்க்கிறோமே த‌விர‌ கிறித்த‌வ‌ராக‌ அல்ல‌. ஆனால் நாங்க‌ள் வ‌லிந்த‌ழைத்தாலும், முஸ்லீம்க‌ள் இல‌ங்கையில் த‌ம்மைத் த‌மிழ‌ர்க‌ளாக‌ அடையாள‌ப்ப‌டுத்துவ‌தில்லை, அத‌னால் அவ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள‌ல்ல‌ என்ற உண்மையைத் தான் நான் சொல்கிறேனே த‌விர‌ த‌னிப்ப‌ட்ட‌ முறையில் முஸ்லீம்க‌ளிட‌ம் என‌க்கு எந்த‌வித‌ காழ்ப்புண‌ர்வு கிடையாது. ப‌ன்னாட்டு முஸ்லிம்க‌ளுட‌ன் ப‌ழ‌கும் வாய்ப்பு என்னைப் போன்ற புல‌ம்பெய‌ர்ந்த‌ தமிழ‌ர்க‌ளுக்குண்டு, என்னுடைய‌ அனுப‌வ‌த்தில் அரேபிய‌, ஜோர்டானிய‌, ஈரானிய‌ முஸ்லீம்க‌ளை விட‌ த‌மிழ் பேசும் முஸ்லீம்க‌ள் ப‌ழ‌மைவாதிக‌ள், ம‌த‌வெறி பிடித்த‌வ‌ர்க‌ள், அவ‌ர்க‌ளுக்கு ஒரு அர‌பு அல்ல‌து ஆபிரிக்க‌ முஸ்லிமில் உள்ள‌ ப‌ரிவும் பாச‌மும், அவ‌ர்க‌ளுக்கு ஏதாவ‌து ந‌ட‌ந்தால் துடித்துப் போகும் த‌ன்மையும் த‌ம‌து த‌மிழ்பேசும் ஈழ‌த்து மொழிவ‌ழிச்ச‌கோத‌ர‌ர்க‌ளிட‌ம் கிடையாது. இத‌ற்கு மாறாக‌ ஒரு ஆபிரிக்க‌ முஸ்லிமோ அல்ல‌து ஜோர்டானிய‌ன் முஸ்லீமோ, ஒரு த‌ன‌து நாட்ட‌வ‌ன் அல்ல‌து த‌னதின‌த்தைச் சேர்ந்த‌, த‌ன‌து மொழியைப் பேசுகின்ற‌ கிறித்த‌வ‌ன் தான் த‌ன‌க்கு மிக‌வும் நெருங்கியவ‌னாக‌ உணர்வ‌தாக‌க் கூறுவ‌ர். நான் இந்த‌ விட‌ய‌த்தை ஜோர்டானிய‌ன், எகிப்திய‌ ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் க‌ல‌ந்துரையாடிய‌தால் தான் இவ்வ‌ள‌வு உறுதியாக‌க் கூறுகிறேன். அரபுக்க‌ளில் கூட‌ ம‌த‌வெறி பிடித்த‌வ‌ர்க‌ள் த‌மிழ் முஸ்லீம்க‌ளை விட‌ மிக‌வும் குறைவாக‌த் தானிருப்பார்க‌ளென்ப‌து என்னுடைய‌ க‌ருத்தாகும். மிக‌வும் சிறுபான்மையின‌ராகிய‌ அர‌புக்க‌ள் தான் ம‌த‌வெறிபிடித்த‌வ‌ர்க‌ளாக‌ இருக்க‌ வேண்டும். அவ‌ர்க‌ளால் தான் இஸ்லாத்தைப் ப‌ற்றிய‌ த‌வறான‌ க‌ருத்து ஏற்ப‌டுகிற‌து.
viyasan
-சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு கிழ‌க்கைத் தாரைவார்க்கும் முஸ்லீம்க‌ள்-

கிழ‌க்கு மாகாண‌சபையின் த‌விசாள‌ராக‌ சிங்க‌ள‌ உறுப்பின‌ராக‌ ஆரிய‌வ‌தி க‌ல‌ப‌தி என்ற‌ சிங்க‌ளப்பெண்ணை முஸ்லீம்க‌ள் முன்மொழிந்து தெரிவு செய்துள்ள‌ன‌ர். கிழ‌க்கை சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு தாரைவார்க்கும் ந‌ட‌வ‌டிக்கைக‌ளின் அங்க‌மாக‌ கிழ‌க்கு மாகாணச‌பையில் அங்க‌ம் வ‌கிக்கும் முஸ்லீம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ள் உட்ப‌ட‌ முஸ்லீம்க‌ள் இத‌னைச் செய்துள்ள‌ன‌ர்.

கிழ‌க்கு மாகாண‌ச‌பையின் முத‌லாவ‌து கூட்ட‌ம் இன்று திருகோணம‌லையில் ஆர‌ம்ப‌மான‌து.கூட்ட‌ம் ஆர‌ம்ப‌மான‌தும் கிழ‌க்கு மாகாண தவிசாள‌ர், ம‌ற்றும் உதவி தவிசாள‌ர் தெரிவு இட‌ம்பெற்ற‌து. கிழ‌க்கு மாகாண‌ச‌பையின் த‌விசாள‌ராக‌ ஆரிய‌வ‌தி க‌ல‌ப‌தி என்ற‌ சிங்க‌ள‌ப்பெண்ணை கிழ‌க்கு மாகாண‌ முத‌ல‌மைச்ச‌ரான‌ நஜீப் முன்மொழிய‌ முஸ்லீம் காங்கிர‌ஸ் உறுப்பினர் ஜெமீல் வ‌ழிமொழிந்தார். பிரதி த‌விசாள‌ராக‌ சுபைர் தெரிவு செய்ய‌ப்ப‌ட்டார். த‌விசாள‌ராக‌ தெரிவு செய்ய‌ப்ப‌ட்டிருக்கும் ஆரிய‌வ‌தி, மோச‌டிக் குற்ற‌ச்சாட்டில் கைது செய்ய்ப்ப‌ட்டு விள‌க்க‌ம‌றிய‌லில் இருந்த‌ இவ‌ர் பிணையில் விடுவிக்க‌ப்ப‌ட்டார் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌தாகும்.

ப‌ட‌ம்:
http://www.thinakkathir.com/?p=41976

கிழ‌க்கு மாகாண‌த்தில் த‌மிழ் பேசும் முஸ்லீம்க‌ள் தொட‌ர்ந்து த‌மிழ‌ர்க‌ளின் முதுகில் குத்துவ‌து ம‌ட்டும‌ல்ல‌, த‌மிழ‌ர்க‌ளை ஓர‌ங்க‌ட்ட‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு உத‌வுகின்ற‌ன‌ர் என்ப‌து தான் உண்மை.
sirajudeen
இந்த்துவத்தின் தந்திரங்களில் ஒன்று எதிரிகளின் மீதான விரோதத்தை வார்த்தைக்கு வார்த்தை வரிக்கு வரி சொன்னதையே சொல்லி, மூளை சலவை செய்வார்கள். அதைதான் திரு. விசயனும் செய்கிறார். அவரின் இனவாத கருத்துகளை ஒட்டுமொத்த ஈழதமிழர்களின் கருத்தாக திரிபு படுத்தி கூறுகிறார்.
தவுஹித் ஜாமத் தலைவர் ஜெய்னுலாப்தீன் ஈழப் பிரச்சனையில் எந்த போராட்டம் நடத்தவில்லை என்பதற்காக ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம்களும் ஈழப் போராட்டத்தை புறகணிப்பு செய்தனர் என்ற மாயை ஏற்படுத்துகிறார். ஜெய்னுலாப்தீன் போன்றவர்கள் மதவாதிகள் (உங்களைப் போன்ற). அவர்களுக்கு அவர்களுடைய மதமும், அதனை சுற்றியுள்ள விசயங்கள் மட்டுமே கண்ணுக்கு தெரியும். யதார்த்த வாதத்திற்கு அவர்கள் வரமாட்டார்கள் (உங்களைப் போன்ற).
அப்படி பார்த்தால் இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் ஈழப் பிரச்சனையில் பெரிய போராட்டம் நடத்தவில்லை. அதனை ஒட்டுமொத்த இந்துக்களின் மௌனம் என கணக்கில் கொள்ளலாமா ? ஆனால் அதுவே, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் எல்லா போராட்டத்திலும் கலந்து கொண்டார் என்பதும் எங்களுக்கு தெரியும்.
ஈழப் பிரச்சனையில் அமைப்பாக, கட்சிகளாக முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் கலந்து கொண்டு உள்ளன என்பதை நீர் அறிவீரா திரு.விசயன் அவர்களே ! பேராசிரியர் ஜவஹிருல்லாவின் தலைமையில் மக்கள் மனித நேய கட்சி போராட்டம் நடத்தியுள்ளது, பல ஆண்டுகளாக தமிழ் தேசியம் பற்றிய பத்திரிகை நடத்தி வரும் தமிழ் முழக்கம் சாகுல் அமீது பற்றி தெரியுமா ? .தோழர் நசுருதீன் அவர்களின் இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய நண்பர்களின் கூட்டணியின் போராட்டம் பற்றி தெரியுமா ? இப்படி எல்லாவற்றையும் மறைத்து விட்டு பொத்தம் பொதுவுவாக,

ஓர் குறிப்பிட்ட அமைப்போ, குறிப்பிட்ட சதவிகித மக்களோ ஈழப் பிரச்னைக்கு எதிராக இருந்தார் என்பதை ஒட்டுமொத்த இனத்தின் பழியாக கொண்டுவரும் இந்துத்துவ மாயை உங்களுக்கு நன்றாகவே கை கொடுக்கிறது. தொடரட்டும் உங்கள் கோயாபல்ஸ் பொய் உரைகள்......
viyasan
ஜ‌னாப். சிராயுதீன்,

என்னிட‌ம் முஸ்லீம்க‌ளுக்குமெதிராக‌ எந்த‌க் காழ்ப்புண‌ர்வும் கிடையாது. என்னுடைய‌ ச‌ண்டை, ச‌ச்ச‌ர‌வு, வாக்குவாத‌ம் எல்லாமே த‌மிழைப் பேசிக்கொண்டு, தாம் த‌மிழர‌ல்ல‌ என‌ ம‌றுத‌லித்துக் கொண்டு, த‌மிழ‌ர்க‌ளைக் க‌ழுத்த‌றுக்க‌ சிங்க‌ளவர்க‌ளுக்கு உத‌வும் இல‌ங்கையிலுள்ள‌ த‌மிழ்பேசும் முஸ்லீம்க‌ளிட‌ம் ம‌ட்டும் தான். அசாம் பிர‌ச்ச‌னையை நான் இந்து முஸ்லீம் பிர‌ச்ச‌னையாக‌ப் பார்க்க‌வில்லை. அசாமில் அத்து மீறிக் குடியேறிய‌ ப‌ங்க‌ளாதேசி இந்துக்க‌ளும் நாடுக‌ட‌த்தப்ப‌ட‌‌ வேண்டிய‌வ‌ர்க‌ளே. ஜெய்னுலாப்தீன் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு எதிரான‌வ‌ர், சிங்க‌ள‌ அர‌சின் அடிவ‌ருடி என்ப‌தை அவ‌ர‌து youtube வீடியோக்க‌ளைப் பார்த்த‌வ‌ர்க‌ளுக்குத் தெரியும். அதனால் த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ள் அனைவ‌ரும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளை எதிர்ப்ப‌தாக‌ நான் கூறவில்லை. உதாரண‌த்துக்கு இய‌க்குன‌ர் அமீர் அவர்க‌ள் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் போராட்ட‌த்தை ஆத‌ரித்த‌வ‌ர். ஆனால் ஜ‌னாப்.ஜாவாகிருல்லாவும் ஜெய்னுலாப்தீனும் ஆர‌ம்ப‌கால‌ நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ள். ஒத்த‌ க‌ருத்துள்ள‌ வ‌ஹாபிஸ்டுகள் என்ப‌தை யாவ‌ரும் அறிவ‌ர். த‌.மு.மு.க‌ட்சியின் வ‌ள‌ர்ச்சி த‌மிழ‌ர்க‌ளுக்கும் முஸ்லீம்க‌ளுக்கும் த‌மிழ்நாட்டில் பிள‌வையேற்ப‌டுத்தும், இப்பொழுது த‌ம்மைத் த‌மிழ‌ர்க‌ளாக‌ அடையாள‌ப்ப‌டுத்தும் த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ள் த.மு.மு.க‌ட்சியின் வ‌ஹாபிய‌ கொள்கைக‌ளின் ப‌டி தொட‌ர்ந்து அர‌புமய‌மாக்க‌ப்ப‌ட்டால் இல‌ங்கையில் த‌மிழ்- முஸ்லீம் ஒற்றுமைக்கு என்ன‌ ந‌ட‌ந்த‌தோ அதே நிலைமையுண்டாகும் என்ப‌து என்னுடைய‌ க‌ருத்தாகும், அப்ப‌டியான‌ மாற்ற‌ங்க‌ள் க‌ட‌ந்த‌ சில‌ வ‌ருட‌ங்க‌ளில் ந‌டந்துள்ள‌து என்ப‌தை நேர‌டியாக‌க் க‌ண்டிருக்கிறேன். ராம‌கோபால‌ன் போராட்ட‌ம் ந‌ட‌த்தினாலும் ஒன்று தான் ந‌ட‌த்தாவிட்டாலும் ஒன்று தான். இல‌ங்கையில் ந‌ட‌ப்ப‌து இந்துக்க‌ளின் போராட்ட‌ம‌ல்ல‌, த‌மிழ‌ர்க‌ளின் விடுத‌லைப் போராட்ட‌ம். இல‌ங்கையில் தமிழ்பேசும் முஸ்லீம்க‌ள் தான் தாம் த‌மிழ‌ர்க‌ளல்ல என்று த‌மிழ‌ர்க‌ளின் எதிரிக‌ளுக்கு உத‌வுகிறார்க‌ளே த‌விர‌, இந்துக்க‌ளோ, கிறித்த‌வ‌ர்க‌ளோ தாம் த‌மிழ‌ர்க‌ள‌ல்ல‌ என மறுக்க‌வில்லை. என்னை ம‌த‌வாதி, இந்துத்துவா எனும் உங்க‌ளைப் போன்ற ம‌த‌த்தை அடையாள‌மாக‌க் கொண்ட‌வ‌ர்க‌ளின் முட்டாள் த‌ன‌த்தை நினைத்து அழுவ‌தா, சிரிப்ப‌தா என்று தெரிய‌வில்லை. என்னிட‌ம் இந்துத்துவாவும் இல்லை, எந்த‌ இந்து மாயையும் கிடையாது. ம‌த‌ அடிப்ப‌டையில் த‌மிழின‌த்தைப் பிரிப்ப‌தை நான் விரும்ப‌வில்லை. இல‌ங்கையில் ப‌ல‌ நூற்றாண்டுகளாக‌, தாயும் பிள்ளையும் போல், புட்டுக்கு தேங்காய்ப்பூ போட்ட‌து போல், முஸ்லீம் கிராம‌ங்க‌ளும், த‌மிழ்க்கிராம‌ங்க‌ளும் அடுத்த‌டுத்து ஒற்றுமையாக‌ வாழ்ந்தன‌ர்.ஆண்டுக்கொரு முறை ஊர்ந‌டுவில் ப‌ந்த‌ல் போட்டு, சீறாப்புராண‌ம் பாடி, பொங்க‌லிட்டு இஸ்லாமிய‌த் த‌மிழ‌ர்க‌ளாக‌ வாழ்ந்த‌ முஸ்லீம்க‌ள் அர‌பும‌ய‌மாக்க‌ப்ப‌ட்டதால் த‌மிழ‌ர்க‌ளுக்கிடையில் மேலும் பிள‌வு ஏற்ப‌ட்ட‌து போன்ற‌ நிலை த‌மிழ்நாட்டிலும் ஏற்ப‌ட‌லாம் அத‌ற்கான‌ அறிகுறிக‌ளைத் த‌மிழ்நாட்டில் இப்பொழுதே காண‌லாம்.
Kalai
வியாசன் போன்ற இந்து-தமிழ் இனவாதிகளும், பௌத்த - சிங்கள இனவாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதற்கான ஆதாரம் இந்த வீடியோ.
Attack of Bangladesh High Commission with Stones by Buddhist monks https://www.youtube.com/watch?v=w9bc5_dx76M&feature=player_embedded#!
viyasan
ஜனாப். க‌லை ஒரு ச‌ரியான‌ த‌லிபான். அவ‌ருக்கு முஸ்லீம்க‌ள் செய்யும் த‌வ‌றுக‌ளை நியாயாப்படுத்த‌வும், ம‌றைக்க‌வும் ம‌ட்டும் தான் தெரியும். சிங்க‌ள‌ பெள‌த்த‌ர்க‌ளும், முக‌ம்ம‌து கலை போன்ற‌ த‌லிபான்க‌ளும் சரியான‌ சாடிக்கேற்ற‌ மூடிக‌ள். பங்க‌ளாதேசிலுள்ள‌ முஸ்லீம் த‌லிபான்க‌ள் அங்குள்ள‌ புத்த‌கோயில்க‌ளை எரித்தார்க‌ள் அத‌னால் சிங்க‌ள‌ த‌லிபான்க‌ள் கொழும்பிலுள்ள‌ ப‌ங்க‌ளாதேஸ் தூத‌ர‌க‌த்தைத் தாக்கினார்க‌ள். ஆனால் முஸ்லீம் த‌லிபான்க‌ள் புத்த‌கோயில்க‌ளை எரித்த‌தைப் ப‌ற்றிக் குறிப்பிடாம‌ல் த‌விர்த்து சிங்க‌ள‌த்த‌லிபான்க‌ளை ம‌ட்டும் இன‌வாதிக‌ள் என்கிறார் இல‌ங்கை முஸ்லீம் த‌லிபான் முகம்ம‌து க‌லை. சிங்க‌ள‌வ‌ர்க‌ள் என்ன‌ செய்தாலும், இல‌ங்கை முஸ்லிம் த‌லிபான்க‌ள் அவ‌ர்க‌ளுக்குத் தான் ஆத‌ர‌வ‌ளிப்பார்க‌ள் ஏனென்றால் சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் அடிவ‌ருடிக‌ளாக‌ இருந்தால் தான் ஏதாவது இலாப‌ம் கிடைக்கும். த‌ம்புள்ளையில் ப‌ள்ளிவாச‌லை உடைத்த புத்த‌பிக்கு, போர்த்திருந்த‌ துணியைத் திற‌ந்து ப‌ள்ளிவாச‌லுக்கும் முஸ்லீம்க‌ளுக்கும் காட்டிய‌ (அப்ப‌டிச்செய்வ‌து சிங்க‌ள‌க் க‌லாச்சார‌த்தில் மோச‌மாக‌ அவ‌ம‌திக்கும் செய‌ல்) பின்பும் இல‌ங்கையிலுள்ள‌ முஸ்லீம்க‌ள் எல்லாம், ஐக்கிய‌நாடுக‌ள் ச‌பை த‌மிழ‌ர்க‌ளுக்குச் சார்பாக‌ போர்க்குற்ற‌ விசார‌ணையைக் கேட்ப‌தாக‌க் கூறி சிங்க‌ளவர்க‌ளுக்காத‌ர‌வாக‌ கொழும்பிலுள்ள‌ ஐக்கிய‌நாடுக‌ள் ச‌பையின் அலுவ‌ல‌க‌த்தின் முன்னால் ஆர்ப்பாட்ட‌ம் செய்த‌ன‌ர். அடுத்த‌ வார‌மே ம‌கிந்த‌ ராஜ‌ப‌க்ச‌, த‌ம்புள்ளைக்குப் போய், எந்த‌ புத்த‌பிக்கு த‌ம்புள்ளை ப‌ள்ளிவாச‌லை அவ‌ம‌தித்தாரோ அவ‌ர‌து காலில் விழுந்து ஆசீர்வாத‌ம் பெற்ற‌து ம‌ட்டும‌ல்ல‌, அந்த‌ பிக்குவுக்குத் த‌ன‌து ஆத‌ர‌வையும் தெரிவித்து விட்டு வ‌ந்தார். அவ‌ற்றையெல்லாம் சொல்லி ப‌ள்ளிவாச‌ல்க‌ளைக் காக்க‌ த‌ன‌க்கு வாக்க‌ளிக்குமாறு கேட்டு வெற்றி பெற்ற‌ முஸ்லீம் காங்கிர‌ஸ், அடுத்த‌ வார‌மே ராஜ‌ப‌க்ச‌வின் காலில் விழுந்து இன்னொரு ம‌ந்திரி ப‌தவியைப் பெற்றுக் கொண்ட‌து, இது தான் முக‌ம்ம‌து க‌லை போன்ற‌ இல‌ங்கைத் த‌லிபான் த‌ம்பிக‌ளின் த‌மிழர் எதிர்ப்பு தொப்பி பிர‌ட்டி அர‌சிய‌ல்.
sirajudeen
திரு.விசயன் அவர்களின் வாதங்கள் எல்லாம் முழுக்க முழுக்க ஒரே சார்ப்புடைய வாதங்கள்தான். இவர் கூறுவது போல், யாரோ ஓர் சிலர் வஹாபி முஸ்லிம் என்றும், அரேபிய தேசத்தில் வந்தவர்கள் என்றும் கூறுவது என்பது முஸ்லிம் சமூகத்திற்கு மட்டும் பொருந்தாது. பழமை பேசி திரிவதும், நாங்கள் ஆண்ட பரம்பரை என தற்போது எதற்கும் உதவாத வெற்று வசனங்கள் பேசுவது, எல்லா சமூகத்திலும் உண்டு. இன்னமும் ஈழ தேசத்தில் சிங்களர் படகில் வந்திறங்கிய நினைவை போற்றும் தபால் தலையை சிலாகித்து தற்போது நடைமுறைக்கு உதவாத பொழுது போக்கான பேச்சுக்கள் உங்கள் சைவ சமூகத்திலும் உண்டு திரு.விசயன் அவர்களே. நாங்கள் சைவர்கள் என மூச்சக்கு முண்ணூறு தடவை சொல்லிக்கொள்ளும் நீங்கள் தான் சாதி இல்லா மதம் இல்லா தமிழனை கண்டுபிடிக்கப் போகிறீர்கள்.

ஈழ போரின் அழிவிற்கு இலங்கை முஸ்லிம்கள்தான் காரணம் என்றும், அவர்கள் மூலம்தான் முஸ்லிம் நாடுகள் ஆயூதவி செய்தது என்று திரு.விசயனின் வாதத்திற்கே வருவோம். திருகோணமலை ஆசியாவின் முக்கியமான ராணுவதளம், எண்ணெய் வளம் இல்லாவிட்டாலும் இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை அச்சம் உண்டாக்க வேணும் என்ற எண்ணத்தில் இலங்கை மீது அமெரிக்காவிற்கு எப்போதும் ஓர் கண் உண்டு. அதற்க்கு இலங்கை அரசும் அப்போது தளம் அமைக்க விருப்பம் தெரிவித்தது. ஆனால் இந்திரா காந்தி ஆட்சியில் இருந்த சமயம், தனக்கு கீழ் உள்ள நாட்டில் அமெரிக்கா ஆளுமை கொள்வது தனக்கு ஆபத்து என்ற நினைத்த காரணத்தில் தான் ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டினார். ஆனால், இலங்கை அரசு முரண்டு பண்ணவே, அதன் பிந்தான் விடுதலை புலிகள் போன்ற போராளி குழுக்களுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்க ரகசிய ஏற்பாடு செய்தார் இந்திரா.

அடுத்து, சீனா தன்னுடைய பலத்தை ஆசியா எங்கும் நிலை நிறுத்தவும், ஆப்கானிஸ்தான் வரை பரவியிருக்கும் அமெரிக்காவின் ஆளுமையை ஒடுக்கவுமே, இலங்கையை தேர்ந்தெடுத்தது, இலங்கையும் சீனாவிற்கு ரத்தன கம்பளம் விரித்து, புலிகளை ஒடுக்க சீனாவின் மூலம் ஆயுதங்கள் இறகுமதி செய்தன.

திரு.விசயன் அவர்களே, நடந்த முடிந்த இன அழிப்பிற்கு இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு, சீனா, ரஷ்யா, வியட்நாம், சவூதி அரேபியா, ஈரான், இஸ்ரேல் மற்றும் உலக தாத்தா அமெரிக்காவும் ஒவ்வொரு வகையில் அவர்களின் எதிர்கால லாப நோக்கோடு கூட்டு பங்கு கொண்டுள்ளன. இவற்றில் எத்தனை நாடுகள் முஸ்லிம்கள் நாடுகள் என்று படிக்கும் அனைவருக்கும் தெரியும்.

இங்கு முஸ்லிம் மக்களுக்கு மட்டும்தான் முஸ்லிம் நாடுகள் உதவும் என்ற உங்கள் அதி புதிதிசாலித்தனமான அறிவிற்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
பாலஸ்தீன பிரச்சனை ஆகட்டும், சாதம் உசேன் கொலை ஆகட்டும், இங்கு தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவும், எதிர்கால லாப நோக்கும் மட்டும் அந்த அந்த நாடுகளுக்கு முக்கியம். அதன் வகையில் சீனாவிற்கு உதவும் இலங்கையும், அமரிக்காவிற்கு உதவும் சவூதி அரேபியாவும் ஒன்று.

பொதுவாக இணைய படிக்கும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, ஏகாதிப்பத்திய நாடுகள் தங்களுக்கு தேவையான வளங்களை சுரண்ட வளரும் நாடுகளை எந்த வகையிலும் தங்கள் கட்டுக்கு கொண்டுவரும். அது போல், வளரும் நாடுகளில் இருக்கும் அரசு ஆட்சியாளர்கள் தங்களுக்கு லாபமான விசயம் எது என்று, அது தன் நாட்டையும் நாடு மக்களையும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கு தாரை வார்த்து கொடுக்கவும் தயங்காத சுய நல ஆட்சியாளர்கள் இருக்கும் வரை, ஒவ்வொரு நாட்டிலும் இந்த இன அழிப்பு தொடரும்.(நன்றி திரு.கலை)

அது எண்ணெய் வளத்துக்கான ஈராக், ஆப்கானிஸ்தான் போராகட்டும், சொந்த நாடு மக்களை கொன்று கனிம வளங்களை திருடும் இந்தியாவாகட்டும், மொத்த நாட்டையும் பிற நாடுகளுக்கு பங்கு போட்டு கொடுத்துக் கொண்டிருக்கும் இலங்கை ஆகட்டும் ஒன்றுதான்.

பறிப்பவன், பறிகொடுத்தவன் என்பாதுதான் கணக்கு. பொதுவான இந்த விசயங்கள் உங்களைப் போன்ற அதி மேதாவிகளுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் அது பற்றி வாய் திறக்க மாட்டீர்கள். என்னென்றால் உங்களுக்கு இனவாதம் ஓர் வியாபாரம். ஓர் லாபம். திரும்ப திரும்ப ஓர் குறிப்பிட்ட சமூகத்தையே மொத்த இன அழிப்பிற்கும் காரணம் கற்பிக்க பட்டு ஒன்றாக வாழும் மக்கள் இடையே பிரிவினை ஏற்படுத்தும் இலங்கை வாழ் ராஷ்டிரிய சுயம் சேவக்குகள் நீங்கள்.

உங்களுக்கு வேண்டியது மக்களுக்கு இடையேயான பதட்டமும், பீதியும். இத்தனை வாதம் வைத்த நீங்கள் நடந்து முடிந்த இன அழிப்பிற்கு பின் எடுக்க வேனிய நடவடிக்கைகள் கூறித்து இன்னும் பேசவில்லை. அது உங்களுக்கு தேவையும் இல்லை. ஏனென்றால் நீங்கள் ஓர் இன வியாபாரி.
Kalai
தொப்பி பிரட்டி என்றால் என்ன அர்த்தம் என்று தெரியுமா? ஏற்கனவே வியாசன் என்ற அறிவாளி அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். விலாங்கு மீன் மாதிரி, மீனுக்கு தலையையும், பாம்புக்கு வாலையும் காட்டுவதே தொப்பிபிரட்டித்தனம். மிகச் சரியாக வியாசனின் குணமும் அது தான். தமிழர்களுடன் சேர்ந்து கொண்டு தன்னை ஒரு தமிழன் என்றும், புலிகளின் ஆதரவாளன் என்றும் காட்டிக் கொள்வார்கள். அதே நேரம், புத்த பிக்குகள் முஸ்லிம்களை தாக்கும் பொழுது தன்னை ஒரு பௌத்த-சிங்கள இனவெறியனாக காட்டிக் கொள்வார். அது தான் அவரது சுயரூபமும். ஆர்எஸ்எஸ் இந்து மதவெறியர்களின் கொள்கை எதுவோ, சிங்கள பிக்கு வியாசன் மாத்தையாவின் கொள்கையும் அது தான்.
மனோகரன்
அஸ்ஸாம் பிரச்னை பற்றி மேலும் ஒரு கட்டுரை.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21030:2012-09-05-10-30-19&catid=1509:162012&Itemid=753

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.