“இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்! பாக்கிஸ்தான்” என்று வாட்சாப் குழுவில் பதிவிட்டேன். பதிவிட்ட சில நிமிடங்களில் பத்து உறுப்பினர்கள் வெளியேறினர்.

நானும் அதையே செய்திருப்பேன் என்றால், இந்தப் பதிவு ௨ங்களுக்கே.

அந்தப் பதிவில் என்ன தவறு? ஆகஸ்ட் 13, 1947 வரை பாக்கிஸ்தான், வங்காளம், இந்தியா எல்லாம் ஒன்றே. வெள்ளைக்காரன் போட்ட கோடு மட்டுமே நம்மைப் பிரித்தது.

காந்திஜி, நேதாஜி என அனைத்து சுதந்திரப் போரளிகளும் பாக்கிஸ்தானுக்கும் வங்காளத்திற்கும் சேர்த்தே போராடினார்கள். நாம் (இந்தியர்கள்) பெற்ற சுதந்திரத்தில் ஜின்னா அவர்களுக்கும் பங்கு உண்டு.

பின் ஏன் இந்த பகுபாடு?

என் பெயர் “அருண்”. என் பாக்கிஸ்தானி நண்பன் பெயர் “செசாத் அஹமத்”.

நான் அரபு எமிரேட்சில் வேலை பார்த்தேன். பக்கத்தில் உள்ள அலுவலகத்தில் வேலை செய்தார் அவர். எப்படியோ நண்பர்கள் ஆனோம். ஆரம்பத்தில் 'கிரிக்கெட்', 'உலக சினிமா' பற்றி மட்டுமே பேசினோம்.

சில சமயங்களிள் இந்தியா , பாகிஸ்தான் உறவு மற்றும் உலக அரசியல் பேசுவோம்.

ஒரு நாள் அவர் என்னிடம் எனக்கு இந்தியாவை சுற்றிப் பார்க்க வேண்டுமென்று ஆசை என்றார். "அதற்கு என்ன, நான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறேன். வாருங்கள்" என்றேன்.

"எனக்கு பயமாக உள்ளது" என்றார்.

"ஏன்?" என்று வினவினேன்.

அவர் அதற்கு "என்னை இந்தியாவில் தீவிரவாதியாக நினைக்கக்கூடும். நான் உங்கள் வீட்டிற்கு வந்தால் உங்களுக்கும் கூட அது நல்லது அல்ல" என்றார்.

இவ்வார்த்தைகள் என்னிடம் பல கேள்விகளை எழுப்பிச் சென்றன. சில நிமிட உரையாடலுக்குப் பின்னர் "தென்இந்தியா சற்றே பாதுகாப்பானதே" என்று ஒப்புக் கொண்டார்.

"எனக்கும் பாக்கிஸ்தான் வர ஆசை" என்றேன் (சிறிய பயத்துடன்).

நாங்கள் பேசிக் கொண்டிற்கும்போது நடுவில் ஒரு இந்திய நண்பர் வந்தார். நாங்கள் அப்போது போர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அவர் குறுக்கிட்டு “பாக்கிஸ்தான் எங்கள் கால் தூசிக்கு சமம். நாங்கள் நினைத்தால் ஒரு நாளில் பாகிஸ்தானை தரை மட்டம் ஆக்குவோம்" என்று கூறி என்னைப் பார்த்து சிரித்தார். நான் ஒன்றும் பேசாது தலை குனிந்து விட்டேன்.

சில நிமிடங்களில் அவர் விடைபெற்றார். அதன் பின் பாகிஸ்தானி நண்பர் என்னிடம் "பாகிஸ்தானிலும் இது போன்று பல முட்டாள்கள் உண்டு" என்றார்.

சிரித்து விட்டேன்.

அன்றைக்கு ஒன்று விளங்கியது, நண்பர்களாகுவதற்கு நாடு/மொழி/மதம்/சாதி என எது வித்திடாலும், நண்பர்களாக நீடிப்பது அவரவர் குணங்களைப் பொருத்தது.

இரண்டு எழுத்துகளில் அவர் இந்தியாவிற்கு எவ்வளவு நெருக்கமானவர் என்று அறிந்து கொள்ளலாம். அவர் சொந்த ஊர் பெயர் 'குஜராத்'. அவரின் தாய் மொழி 'பஞ்சாபி'. இப்போதாவது நம்புங்கள் வெள்ளைக்காரன் போட்டது வெறும் கோடு மட்டுமே.

அப்பொழுது உலக கோப்பை கிரிக்கெட் நடந்த நேரம். பாக்கிஸ்தான் அணி இந்தியா செல்லுமா என்ற கேள்விகள் எழுந்த நாட்கள் அது . அவர் 'மொகலி' பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு மிக்க நகரம் என்றார். பின் அவரே சொன்னார் "இறுதியாக மொகலியில் நடந்த கிரிக்கெட் போட்டியை காணச் சென்ற பாக்கிஸ்தானியர்கள் இருவர்(மாணவர்கள்) நாடு திரும்பவில்லை" என்றார். "பின் அதை ஏன் பாதுகாப்பான இடம் என்கிறீர்கள்?" என்றேன். அதற்கு "இருவர் மட்டுமே நாடு திரும்பவில்லை. ஆகையால் 'மொகலி'யே சிறந்த இடம்" என்றார்.

நம்மில் பலருக்கு இது ஒரு செய்தியாகக் கூட தெரிந்திருக்காது, ஏனெனில் நாம் காண்பவை, கேட்பவை, படிப்பவை அனைத்தும் இந்திய ஊடகங்களே.

ஆரம்பத்தில் போர் மற்றும் தீவிரவாதம் பற்றி பேசுவதைத் தவிர்த்து வந்தோம். பின்பு அவையும் உரையாடலில் கலந்தன.

திடீர் என்று ஒரு நாள் மும்பை தாக்குதல் பற்றி பேசத் தொடங்கினோம். அவர் சொன்ன வார்த்தைகள் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தின.

அவர் குறிப்பிட்டதாவது “மும்பை தாக்குதல் இந்தியா நடத்திய நாடகம் (false flag attack)” என்றார். அந்த தாக்குதல் நடந்த நேரம் பாக்கிஸ்தான் உலக அரங்கில் பெரும் நெருக்கடியில் இருந்ததாகவும், அந்த தாக்குதல் சம்பவமே பெரும் நெருக்கடியை கொடுத்தாகவும், ஆக பாக்கிஸ்தான் இதை நடத்தியிருக்க வாய்ப்பே இல்லை என்றார்.

நான் "ம்ம்" என்றேன்.

நான் அவர் கூறியதை நம்பவில்லை என்றாலும் அது ஒரு தீப்பொறியை விட்டுச் சென்றது.

அமெரிக்கா, இரான், லிபியாவில் நடத்திய சதிகளை நானே தேடிப் படித்திருக்கிறேன். ஆனால் என் இந்தியாவை அப்படி பார்த்தது இல்லை.

இருப்பினும் அதைப் பற்றி ஆராய நான் விரும்பவில்லை. மேலும் இந்தியா, பாக்கிஸ்தானில் பல தீவிரவாத இயக்கத்திற்கு உதவுவதாகவும் சொன்னார்.

அதற்கும் "ம்ம்" என்றேன்.

ஆக ஒன்று விளங்கியது பாக்கிஸ்தான் மக்களுக்கு இந்தியர்கள் தீவிரவாதி, இந்திய மக்களுக்கு பாக்கிஸ்தானி தீவிரவாதி.

இந்த நிலைக்கு யாரை குறை கூறுவது?

எனக்கு வரலாறு அதிகம் தெரியாது. இருப்பினும் ஒன்று தெரியும், “இந்தியா எந்த நிலையிலும் காஷ்மீரை விட்டுக் கொடுக்காது. காரணம் இந்தியா சீட்டுக்கட்டில் செய்த கோட்டை போல் பல இனம், மொழி, மதம் என ஒன்று இணைந்து உலகிற்கு ஒற்றுமையை பறை சாற்றி நிற்கிறது. அதில் ஒன்று விலகினாலும் கோட்டை தகறும் அபாயம் உள்ளது ”.

'வாகா' படம் பார்த்தேன். அதில் ஒரு காட்சியில் ஒரு ஆட்டுக் குட்டியை பாக்கிஸ்தானி ராணுவ வீரன் சுடுவார். அதற்கு இந்திய அதிகாரி ஒருவர் சொல்வார் “இரக்கம் காட்ட அவர்கள் இந்தியர்கள் அல்ல, பாக்கிஸ்தானியர்” என்று. இது போன்ற கீழ்த்தரமான படைப்பாளிகளும், ஊடகங்களும், சுயநல அரசியல்வாதிகளும் இருக்கும் வரை, நாம் எதிரிகளே.

இந்தியாவிலும், பாக்கிஸ்தானிலும் ஒரு வேளை சோற்றுக்கு அல்லாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். இருந்தும் நாம் ராணுவம், எல்லைப் பாதுகாப்பு என பல கோடிகளை செலவிடுகிறோம் என்றால், இதனால் பயனடைவோர் யார்? இந்தியாவும், சீனாவும் ஒன்று சேராமல் இருப்பதில் யார் பயன் பெறுகிறார்கள் என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மனிதனுக்கு இயல்பிலே தைரியம் குறைவு. அவன் ஒரு சமூகமாக (நாடு/மொழி/மதம்/சாதி) வாழ்க்கையிலேயே தைரியம் கொள்கிறான். அந்த தைரியம் கொண்டு சிறுபான்மையினர் மீது வன்மம் கொள்தல் தவறு. நாம் சமூகமாக (நாடு/மொழி/மதம்/சாதி) வாழ்வது நம் முன்னேற்றத்துக்காக மட்டுமே.

“இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்” என்பதற்கும் “ஒரு எதிரி நாட்டவரை வெறுக்கிறேன்” என்பதற்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு.

அவரும் , நானும் உறவுகளைப் பிரிந்து வாழ்க்கையைத் தேடி ஓடினோம். எங்களுக்குள் எந்த பாகுபாடையும் இதுவரையில் கண்டது இல்லை.

வேற்றுமையிலும் ஒற்றுமை காண்போம்! எல்லோரையும் நேசிப்போம்!! மனிதம் போற்றுவோம்!!

- க.அருண்

Comments

11 comments

11
Manikandan
மிக நல்ல பதிவு பாராட்டுக்கள் அருண்,

உலகில் அனைத்து நாடுகளிலும் நல்லவர்கள் இருக்கவே செய்கிறார்கள், பாகிஸ்தானிலும் நல்லவர்கள் இருப்பார்கள், பெரும்பாலானவர்கள் நல்லவர்களாக இருந்தாலும், சில இயக்கங்களின் தீவிரவாத செயல்களால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் கெட்ட பெயரை சுமக்கிறார்கள். ஆனால் அந்த இயக்கங்களை பாக்கிஸ்தான் அரசே நேரடியாக வெளிப்படையாக ஆதரிக்கும் என்ன செய்ய முடியும் ? பிரச்சனை அங்கே தான் ஆரம்பிக்கிறது, பாகிஸ்தானிகள் மீதான நம்பிக்கையின்மை அவர்கள் அரசின் தீவிரவாத ஆதரவால் தான் வருகிறது. இதை புரிந்துகொள்ளும் நிலையில் பாகிஸ்தானிகள் இல்லை
Renga
Individual relationships can not decide international relationship. As a country Pakistan is behaving responsibly.
Please go through history of our relations.

Islamic state behaves totally different. I have Pakistani friends too. It is all like Modi's visit to Nawaz Sheirf family party. It won't bring anything.

Until Pakistan becomes a secular state, things won't change. All crap words like Kafir, Jihad will be used politically.

(Finally Jinnah did nothing for independence. He lived in London for 17 years during the struggle.
When Independence was on sight, he came back to divide. Please read history)
Ramea
இரண்டு எழுத்துகளில் அவர் இந்தியாவிற்கு எவ்வளவு நெருக்கமானவர் என்று அறிந்து கொள்ளலாம். அவர் சொந்த ஊர் பெயர் 'குஜராத்'. அவரின் தாய் மொழி 'பஞ்சாபி'. இப்போதாவது நம்புங்கள் வெள்ளைக்காரன் போட்டது வெறும் கோடு மட்டுமே.

திரு.அருண் அவர்களே! இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை ஏதோ ஆங்கிலேயரின் எண்ணம் என்று புரிந்து கொண்டு இருக்கிறீர்கள். உண்மையில் இது தங்கள் ஆதிக்கம் தளர்ந்து விடக் கூடாது என்பதற்காகவே பார்ப்பனர்கள் உருவாக்கிய தொலை நோக்குத் திட்டம். அக்காலத்தில் வகுப்பு வாரிப் பிரதிதித்துவம் பற்றி நீதிக் கட்சி வலுவாகப் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தது. காந்தி தன் உயிரைப் பணயம் வைத்துத் தோற்கடித்த தனி வாக்காளர் தொகுதிக் கருத்தியலும் குற்றுயிராகவோ குலையியிராகவோ உயிருடன் தான் இருந்தது. பிரிவினைக்கு முந்திய இந்தியாவின் இஸ்லாமிய மக்கள் தொகையையும் கணக்கில் கொண்டால், ஒரு வேளை பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புக் கருத்தியலுக்கு வலிமை கூடி விடுமோ என்ற அச்சம் பார்ப்பனர்களுக்கு இருந்தது. ஆகவே நாட்டுப் பிரிவினைக்கு இராஜாஜி ஆதரவு அளித்தார். மத ரீதியில் நாடு பிரிக்கப்பட்டால், அனைத்து இஸ்லாமியர்களும் பாகிஸ்தானுக்குப் போய்விட வேண்டும் என்ற நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத காவிக் கூட்டத்தின் புலம்பலைப் புறந்தள்ளி விட்டு, இராஜாஜி அதற்கு ஆதரவு அளித்தார் என்றால் அதில் மறைந்துள்ள பார்ப்பனச் சூழ்சிசயைப் புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே வெள்ளையன் போட்ட கோடு என்று புரிந்து கொள்வது பிரச்சினையை அளவுக்கு மீறி எளிதாகப் புரிந்து கொள்வதாய் விடும்.
அருண்
முதலில் என் முதல் பதிவிற்கு தங்கள் கருத்தை தெரிவித்த சகோதர/சகோதரிகளுக்கு நன்றி.

நான் இந்த அனைத்து கருத்தையும் ஏற்று கொள்கிறேன் .
இவைகளை நான் பதிவில் கூறி இருக்க முடியும், அவ்வாறு செய்யாததர்க்கு
இந்த பதிவின் முதல் மூன்று பத்தியில் பதில் உள்ளது.

மற்றும் இந்த பதிவு இந்தியா - பாக் நட்டின் உறவு பற்றி இல்லை.
இரு நாட்டிலும் உள்ள எளியவர்களின் உறவை பற்றியே.

[quote name="Renga"]Individual relationships can not decide international relationship. As a country Pakistan is behaving responsibly.
Please go through history of our relations.

Islamic state behaves totally different. I have Pakistani friends too. It is all like Modi's visit to Nawaz Sheirf family party. It won't bring anything.

Until Pakistan becomes a secular state, things won't change. All crap words like Kafir, Jihad will be used politically.

(Finally Jinnah did nothing for independence. He lived in London for 17 years during the struggle.
When Independence was on sight, he came back to divide. Please read history)[/quote]
ஜின்னா அவர்களுக்கு பங்கு இல்லை என்பதை முற்றிலும் எற்க
முடியவில்லை, அவ்விடத்தில் நான் தலைமை ஏற்றவர்களை தவிர்த்து இருக்கலாம்.

[quote name="Ramea"]இரண்டு எழுத்துகளில் அவர் இந்தியாவிற்கு எவ்வளவு நெருக்கமானவர் என்று அறிந்து கொள்ளலாம். அவர் சொந்த ஊர் பெயர் 'குஜராத்'. அவரின் தாய் மொழி 'பஞ்சாபி'. இப்போதாவது நம்புங்கள் வெள்ளைக்காரன் போட்டது வெறும் கோடு மட்டுமே.

திரு.அருண் அவர்களே! இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை ஏதோ ஆங்கிலேயரின் எண்ணம் என்று புரிந்து கொண்டு இருக்கிறீர்கள். உண்மையில் இது தங்கள் ஆதிக்கம் தளர்ந்து விடக் கூடாது என்பதற்காகவே பார்ப்பனர்கள் உருவாக்கிய தொலை நோக்குத் திட்டம். அக்காலத்தில் வகுப்பு வாரிப் பிரதிதித்துவம் பற்றி நீதிக் கட்சி வலுவாகப் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தது. காந்தி தன் உயிரைப் பணயம் வைத்துத் தோற்கடித்த தனி வாக்காளர் தொகுதிக் கருத்தியலும் குற்றுயிராகவோ குலையியிராகவோ உயிருடன் தான் இருந்தது. பிரிவினைக்கு முந்திய இந்தியாவின் இஸ்லாமிய மக்கள் தொகையையும் கணக்கில் கொண்டால், ஒரு வேளை பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புக் கருத்தியலுக்கு வலிமை கூடி விடுமோ என்ற அச்சம் பார்ப்பனர்களுக்கு இருந்தது. ஆகவே நாட்டுப் பிரிவினைக்கு இராஜாஜி ஆதரவு அளித்தார். மத ரீதியில் நாடு பிரிக்கப்பட்டால், அனைத்து இஸ்லாமியர்களும் பாகிஸ்தானுக்குப் போய்விட வேண்டும் என்ற நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத காவிக் கூட்டத்தின் புலம்பலைப் புறந்தள்ளி விட்டு, இராஜாஜி அதற்கு ஆதரவு அளித்தார் என்றால் அதில் மறைந்துள்ள பார்ப்பனச் சூழ்சிசயைப் புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே வெள்ளையன் போட்ட கோடு என்று புரிந்து கொள்வது பிரச்சினையை அளவுக்கு மீறி எளிதாகப் புரிந்து கொள்வதாய் விடும்.[/quote]

ஆம் மிகவும் எளிமை படுத்தி விட்டேன். அதை விவரிப்பது எவ்வளவு சரியாக இருந்திருக்கும்
என்று தெரியவில்லை.
Ramea
You are right Mr.Arun. It may not be appropriate to write this point in this article. However it may be correct record this in feedback since this point is deliberately avoided elsewhere also.
Manikandan
Ramea எனக்கு என்னமோ எதற்கு எடுத்தாலும் பிராமணர்கள் மீது பழி போடுவதை வழக்கமாகவே சிலர் வைத்து இருக்கிறார்கள். இந்தியா சுதந்திரம் என்பது பிராமணர்கள் மட்டும் அல்ல நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் இணைந்த போராடி பெற்றது, மகாத்மா காந்தி அவர்களின் வார்த்தைபடி சொல்வது என்றால் அது சாதாரண உழைக்கு மக்களால் போராடி வென்று எடுக்கப்பட்டது தான் இந்தியாவின் சுதந்திரம்.

ஒரு வகையில் பாக்கிஸ்தான் பிரிந்தது நல்லதே, இணைந்து இருந்திருந்தால் இன்று பாகிஸ்தானில் நடந்த கொண்டு இருக்கும் தீவிரவாத செயல்கள் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பரவி பெரும் அழிவை கொண்டு வந்து இருக்கும்
Ramea
திரு.மணிகண்டன் அவர்களே! எதற்கெடுத்தாலும் அல்ல, பழி இருக்கும் போது தான் அதைச் சொல்கிறோம். அதைப் பற்றிப் பேசுவதை விட்டு விட்டு "எதற்கெடுத்தாலும்" என்ற சொல்லைப் பயன்படுத்தி விஷயத்தை நீர்க்க வைக்க முயல வேண்டாம்.

ஆங்கிலேயர்களை வெளியேற்றியது என்னமோ அனைத்து மக்களும் போராடித் தான் என்பது உண்மை தான். ஆனால் அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளது பார்ப்பனர்கள் தான் என்பது மறுக்க முடியாத உண்மை அல்லவா?

பாகிஸ்தான் பிரியாமல் இருந்திருந்தால், தீவிரவாதம் தலை தூக்காமலேயே இருந்திருக்கும் அல்லவா? அப்படி ஏன் நினைக்கத் தோன்றவில்லை?

அனைத்து வகுப்பு மக்களிடமும் அறிவும் திறமையும் பொதிந்து இருக்கையில், பார்ப்பனர்கள் உயர் நிலை வேலைகளுக்கும் மற்றவர்கள் அடுத்த நிலை வேலைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்டும் சூதினை ஒழித்து விட்டால் "எதற்கெடுத்தாலும்" பார்ப்பனர்கள் மேல் "பழி" போடும் வேலை இல்லாமல் போய்விடுமே? அதற்கு ஏன் நீங்கள் ஆயத்தமாக இல்லை?
Renga
Any issue need not be diverted as Brahmin and Non-Brahmin issue. This article talks about Indian Friendship with Pakistani. Hidden message is Since Pakistan has got good people, India and Pakistan friendship also possible.

But forgotten fact is Political Islam does not want peace any peace with anybody. No matter you are Dalit, Brahmin, OBC , Christian, Buddhist, Farsi, yeziidi,communist , US ..
Please look at the whole world. Not only Tamil Nadu

Until Kafir, Jihad are not redefined, this problem will continue
It does not matter how many Muslim friends we have
Ramea
But forgotten fact is Political Islam does not want peace any peace with anybody.

Dear friend, why did you miss political Hinduism which does not want peace? Is it accidental or deliberate?
Renga
There is nothing called political Hinduism. Some political parties may consolidate Hindu votes.

Islam is different. They announce as Islamic state by constitution. Even in Pakistani passport, you have to declare your religion.

Political parties can talk anything. BUT a country claims as Islamic state and start differentiate by religion, it is serious.
Ramea
Mr Renga! It is not that there is nothing called political Hinduism. They don’t have the moral courage to declare the same. Only the political Hinduism caused bomb culture in India. They know well that what they are doing is wrong and are not ready to come out of it. That is why they don’t declare their deeds.

As for as Islamic State is concerned, though they are wrong, they don’t think so and they declare openly what they are doing and intend to do. The root of the problem lies elsewhere and solution also lies elsewhere.
Kindly read the article given in the following link.
http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-aug16/31400-2016-09-05-14-06-28

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.