இப்பொழுதெல்லாம் எதற்கெடுத்தாலும் பாகிஸ்தானுக்கு ஓடி விடுங்கள் என்று சொல்வது வழக்கமாகிவிட்டது. மாட்டுக்கறி தின்றால் பாகிஸ்தானுக்கு ஓடிவிடவேண்டும் என்கின்றான்; இராமனை வணங்காவிட்டால் பாகிஸ்தானுக்கு ஓடிவிடவேண்டும் என்கின்றான்; இப்போது பாரத் மாதா கீ ஜெய் என்று சொல்லவில்லை என்றால் பாகிஸ்தானுக்கு ஓடி விடவேண்டும் என்கின்றான். பாஜக ஆட்சி  முடிவதற்குள் இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் பாகிஸ்தானுக்கு ஓடிவிட்டால்  இந்தியாவில் முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் , கம்யூனிஸ்ட்டுகள், அப்புறம் அம்பேத்கர், பெரியார் கொள்கைகளை கடைபிடிப்பவர்கள் என யாருமே இருக்கமாட்டார்கள்.

 bharat mata அப்படி என்றால் இந்தியாவில் யார்தான் இருப்பார்கள்?  தொந்தி சரிந்த பார்ப்பனக் கூட்டமும், அவர்களை நக்கிப் பிழைக்கும் கோடான கோடி மானங்கெட்ட சாதி இந்துக்களுமே இருப்பார்கள். ஒரு வேளை இவர்கள் தான் அகண்ட பாரதத்தில் வாழ பாரத மாதாவால் அனுமதி வழங்கப்பட்டவர்கள் போலும்.

 இந்த காவி பயங்கரவாதிகளின் அடாவடித்தனம் எல்லை கடந்து போய்க் கொண்டிருக்கின்றது. நாட்டில் நிலவும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாத இந்த அயோக்கியர்கள், சதா சர்வகாலமும் எப்படி முஸ்லீம்களுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டிவிடுவது என்பதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக உள்ளனர். ஒரு பக்கம் மாட்டுக்கறி தின்னக் கூடாது என்கின்றார்கள்; மற்றொரு பக்கம் வீர இந்துக்கள் நடத்தும் தொழிற்சாலைகள் மூலம் லட்சக்கணக்கான  டன் மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்கின்றனர். ஒரு பக்கம் பாரத் மாதா கீ ஜெய் என்கின்றார்கள்; மற்றொரு பக்கம்  ஒவ்வொரு நாடாக விமானத்தில் பறந்து போய் அதை கூட்டிக்கொடுப்பதற்கு மாமா வேலை பார்க்கின்றார்கள்.

  இப்படி இந்தப் பைத்தியக்கார காவிபயங்கரவாதிகளின் அடாவடித்தனத்தின் உச்சமாக ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்று சொல்ல மறுத்த அகில இந்திய முஸ்லீம் மஜ்லிஸ் கட்சியின் எம்எல்ஏ வரீஸ் பதான் மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்று சொல்லாதது, அதுவும் உருவ வழிபாட்டை  ஏற்காத முஸ்லீம்கள் சொல்லாதது அவ்வளவு பெரிய தேசத் துரோகமா? அப்படித்தான் அவர்கள் சொல்கின்றார்கள்.

 பாரதத்தாயை புகழும் ‘பாரத்மாதா கீ ஜெய்’ என்னும் கோஷத்தை முழங்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று பா.ஜ.க பொதுச்செயலர் கைலாஷ் விஜய் வர்கீயா சொல்கின்றார். மேலும் ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்று  முழக்கமிட மறுப்பவர்களின் குடியுரிமையையும், வாக்குரிமையையும்  ரத்து செய்யவேண்டும் என சிவசேனா கட்சி கூறியுள்ளது.

கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினாலும் பாரத் மாதா கீ ஜெய் என்று சொல்லமாட்டேன் என்றும் அப்படி சொல்லவேண்டும் என இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் எங்கும் கூறவில்லை என்றும் கூறிய ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் நாக்கைத் துண்டிப்பவர்களுக்கு  ஒரு கோடி பரிசு தரப்படும் என்று உத்திரப் பிரதேச மாநில பாஜக தலைவர் ஷியாம் பிரசாத் திவேதியும், பாரத் மாதா கீ ஜெய் என்று சொல்ல மறுக்கும் ஒவைசின் தலையை சட்டப்பூர்வமாக துண்டிக்க வேண்டும் என்று சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவும் கூறுகின்றன.

  இந்தியாவிலேயே விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலம் மகாராஷ்டிராதான். தினமும் அங்கு  7 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாத மகாராஷ்டிராவை ஆளும் பொறுக்கி பாஜகவும், சிவசேனாவும் ஒரு முஸ்லீம் எம்எல்ஏவையும் ஒரு முஸ்லீம் எம்பியையும் பாரத் மாதா கீ ஜெய் என்று சொல்ல வைக்காமல் விடமாட்டோம் என கங்கணம் கட்டிக்கொண்டு நிற்பதும், அதற்காக சட்டசபையில் இருந்து இடை நீக்கம் செய்வதும், ‘தலையை வெட்டுவேன், நாக்கை அறுப்பேன்’ என்று சொல்வதும்தான் இவர்கள் இந்திய மக்களுக்குக் கற்றுக் கொடுக்க விரும்பும் தேசபக்தியா?

பாரதமாதா கீ ஜெய் என்று சொல்லாதவன் எல்லாம் தேசத் துரோகி என்றால் தினம் தினம்  7 விவசாயிகளைத் தற்கொலை செய்து கொள்ள வைக்கும் அயோக்கியர்களுக்கு என்ன பெயர் வைக்கலாம்? ‘பன்னாட்டு நிறுவனங்களை நக்கிப் பிழைக்கும் நாய்கள்’ என்று சொல்லலாமா? இல்லை ‘பாரத மாதவை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து மிலேச்சர்களுக்குக் கூட்டிக் கொடுக்கும் மாமா பயல்கள்’ என்று சொல்லலாமா? எப்படி சொன்னாலும் இந்த மானங்கெட்ட பார்ப்பனக் கும்பலுக்கு உறைக்காது என்பது தான் உண்மை.

  சரி, பாரத மாதா, பாரத மாதா என்கின்றார்களே... யார் இந்த பாரத மாதா? இவருக்கும் அரசியலுக்கும் என்ன சம்மந்தம்? ஏதாவது சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து இருக்கின்றாரா? அல்லது இந்திய மக்களின் வளர்ச்சிக்காக, அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு இருக்கின்றாரா? எதற்காக இந்தப் பொம்பளையைப் பார்த்து ஜெய் சொல்ல வேண்டும்? நீங்கள் ஒரு இந்துவாகவோ, தேசியவாதியாகவோ இருக்க விரும்பினால் கண்டிப்பாக நீங்கள் ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்று சொல்லித்தான் ஆகவேண்டும். எப்படி என்றால் பார்ப்பன கடவுள்களைக் கும்பிடாதவன் எப்படி ஒரு இந்துவாக இருக்க முடியாதோ, இந்து ராமனை வணங்காதவர்கள் எப்படி ஒரு தேசியவாதியாக இருக்க முடியாதோ... அதே போல இந்தக் காவி சேலை கட்டிய பாரத மாதாவை வணங்காதவர்கள் ஒரு இந்தியனாக இருக்க முடியாது. காரணம் இந்தப் பாரத மாதாவும் ஒரு பார்ப்பனக் கண்டுபிடிப்பாகும்!

  இந்திய சுதந்திர போராட்டத்தில் இருந்து முஸ்லீம்களை தனிமைப்படுத்த நினைத்த பார்ப்பனக் கூட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சித்திரமே இந்தப் பார்ப்பன மாதா. எப்படி என்றால் நான்கு கைகளிலும் ஆரியர்களால் இயற்றப்பட்ட வேதத்தையும், நெற்கறையும், ஜெப மாலையையும், வெள்ளைத் துணியையும் வைத்திருக்கும் இந்த மாதாவை பார்ப்பன மாதா என்றுதான் சொல்ல முடியுமே தவிர பாரத மாதாவாக என்று சொல்ல முடியாது. முஸ்லீம்களை ஒழித்துக் கட்டிவிட்டு இந்து தேசியத்தை கட்டியமைக்க நினைத்த பார்ப்பனன் பக்கிம் சந்திர  சாட்டர்ஜியால் உருவாக்கப்பட்ட வந்தே மாதரம் பாடலில் தான் இந்த பார்ப்பன மாதாவைப் பற்றிய வர்ணனை வருகின்றது. பின்னாட்களில் இதற்கு உருவம் கொடுத்து கையில் வேதத்தைக் கொடுத்து பார்ப்பன கும்பல் இதை பார்ப்பன மாதாவாக பிரகடனப்படுத்தியது.

  இப்படி இந்து தேசியத்தின் குறியீடான இந்தப் பார்ப்பன மாதாவின் சிலை 1936 ஆம் ஆண்டு காசி பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டு அது பனியா காந்தியால் திறந்து வைக்கப்பட்டது. அதே போல 1983 இல் விசுவ இந்து பரிஷத்தால் கட்டப்பட்ட ஒரு சிலை அரித்துவாரில் பார்ப்பன இந்திரா காந்தியால் திறந்து வைக்கப்பட்டது. இதுதான் மானங்கெட்ட பார்ப்பன மாதாவின் வரலாறு.

  இந்தப் பார்ப்பன மாதாவைத்தான் இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள் என அனைவரும் வணங்க வேண்டும் என பார்ப்பனக் கும்பல் ரவுடித்தனம் செய்து கொண்டிருக்கின்றது. அதற்கு பார்ப்பனக் கும்பலை நக்கிப்பிழைக்கும் சில இந்து அமைப்புகளும் ஜால்ரா போட்டுக் கொண்டு இருக்கின்றன. இந்த பார்ப்பன மாதாவுக்கு ஜெய் சொல்லும் ஒவ்வொருவனும் தேசபக்தன் அல்ல; அவன்தான் இந்தியாவில் இருந்து ஒழித்துக் கட்டப்பட வேண்டிய தேசத் துரோகி ஆவான். நீங்கள் தேசபக்தனாக இருக்க விரும்புகின்றீர்களா... இல்லை தேசத் துரோகியாக இருக்க விரும்பிகின்றீர்களா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

- செ.கார்கி

Pin It