ஒரு முன்மாதிரியற்ற வரலாற்றை நாம் மறக்கும்பொழுது, அது மீண்டும் நம்முடைய வாழ்க்கையில் நிகழும். அதனால், வரலாற்றைப் பற்றிய பார்வையில் அதீத கவனம் செலுத்த வேண்டும் என்பது மேலைநாட்டு அறிஞர் ஒருவரின் கூற்றாகும்.

gujrat victims 400காந்தி பிறந்த மண்ணில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக, மிகப்பெரும் கலவரம் சங்பரிவார்களால் 2002ம் ஆண்டு கட்டவிழ்த்து விடப்பட்டது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1,50,000 பேர் அகதிகளாக்கப்பட்டனர். கோடிக்கணக்கான முஸ்லிம்களின்  சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

இந்த நிகழ்வு ஒட்டுமொத்த உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவைப் பற்றிய தவறான புரிதலை மீண்டும் ஒருமுறை ஏற்படுத்தியது. மாவட்ட அதிகாரமும் காவல் துறை நிர்வாகமும் கலவரக்காரர்களுக்கு உதவி செய்தது. கூடுதலாக அவர்களும் கலவரத்தில் பங்கு எடுத்துக் கொண்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

எல்லைப் பாதுகாப்புப் படையின் உளவுப் பிரிவு டி.ஜி. விபூதி நாராயணராய், 1995ம் ஆண்டு ‘வகுப்புக் கலவரங்களில் போலீஸின் நடுநிலைமை’ குறித்து ஒரு ஆய்வினை மேற்கொண்டார். எந்தக் கலவரத்தையும் 24 மணி நேரத்திற்குள் அடக்கிவிட முடியும் என்றும், அதற்கு மேல் கலவரம் நீடிப்பது என்பது போலீஸும், அரசும் விரும்பினால் மட்டுமே சாத்தியம் என்றும் அந்த அதிகாரி குறிப்பிடுகிறார்.

ஆனால், குஜராத்தில் இரண்டு மாதத்திற்கும் மேலாக கலவரம் நடத்தப்பட்டது. இந்த கலவரத்தை, மோடி தலைமையிலான குஜராத் மாநில அரசு தலைமையேற்று நடத்தியது. மாநில முதல்வராக இருந்து பிரதமராக மாறுவதற்கு குஜராத் கலவரம் மோடிக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது என்றே சொல்லலாம். இந்தக் கொடூரமான வரலாற்றை நாம் மறந்து விட்டோம். ஆனால், குஜராத்தில் உள்ள கலவரத்தில் பாதிக்கப்பட்ட எவராலும் இதை மறக்க முடியாது.

ஏனென்றால், இன்னும் அவர்களுக்கான நீதியோ, மறுவாழ்வு திட்டமோ, கலவரக்காரர்களுக்கு தண்டனையோ என்று எந்த நிகழ்வுகளும் முழுமை பெறவில்லை என்று சொல்லலாம்.

கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் வீதியில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் பெண்களின் பெயர்களை கூறி, நான்தான் இவளை கற்பழித்தேன் என்று கிண்டல் செய்யும் காட்சிகள் குஜராத்தில் அன்றாட நிகழ்வுகளாகும். பெற்றோர்களை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோர்களும், வீடுகளை இழந்த மக்களும், அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலும் இன்னும்  இருக்கின்றது.

இந்த நிகழ்வுகளை நாம் மறந்தோமானால், நம்முடைய வாழ்க்கையிலும் இது ஒரு நாள் நிகழும். சங்பரிவார்களின் உண்மை முகத்தை மக்களிடம் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் பொழுது ஃபாசிசத்தை இந்தியாவிலிருந்தே துடைத்தெறிய வேண்டும்.

சிறுபான்மை சமூக மக்களுக்கு எதிரõக நடத்தப்பட்ட குஜராத் இனப்படுகொலைகளுக்குப்பிறகு, இந்தியாவில் இந்த நிகழ்வுகள் குறைந்துள்ளதா என்று பார்த்தால், அதிகரித்துள்ளது என்றே சொல்ல முடியும். அதன்பிறகு அஸ்ஸலாம் கலவரம், முஸஃபர் நகர் கலவரம், காந்தாமல் கலவரம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். தற்பொழுது, ஆட்சியில் இருக்கும் மோடியின் சமூக, வரலாற்று, கலாச்சார மற்றும் கல்விசார் துறைகளை சங்பரிவார்கள் ஆக்கிரமிக்க முயற்சி செய்கின்றனர்.

குஜராத்தின் தற்போதைய நிலையைப்பற்றி அங்குள்ள பாரதிய முஸ்லிம் மஹிளா அந்தோலன் அமைப்பின் நிறுவனர் ஷக்கியா சோனம் குறிப்பிடும்பொழுது, 14 ஆண்டுகளை கடந்தும் குஜராத் கலவரத்தில் உயிர்ப்பிழைத்த மக்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டு வருகின்றனர். காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் இந்துத்துவா அடிப்படைவாத அமைப்புகள் தாக்குதலில் ஈடுபட்டனர். கலவரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தப்பியோடி அகதிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த அகதி முகாம்கள் கூட அரசுகளால் ஏற்படுத்தப்பட்டதல்ல. பெரும்பாலான அகதிகள் முகாம் கபரஸ்தானம், தர்ஹாக்களும், திறந்தவெளி மைதானங்களும் தான் அவர்களுக்கு புகலிடமாக இருந்து வருகின்றது. அடிப்படை தேவைகளான குடிநீர், சிறுநீர் கழிப்பிடம், போர்வைகள், உணவின்றி மிகவும் கஷ்டப்பட்டனர்.

இந்தக் கஷ்டமான சூழ்நிலையிலும் அரசு முறையாக உதவிகளை செய்து கொடுக்கவில்லை. முஸ்லிம் அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தான் இன்றும் உதவி செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான இழப்பீடும் வழங்கப்படவில்லை. குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் காயங்களை ஆற்றுவதற்கும், வெளியே÷றிய மக்களை மீள்குடியேற்றுவதிலும் அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வீடுகளையும், சொத்துக்களையும் இழந்தவர்களுக்கு அற்பத் தொகையே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தேதி வரை உயிர் பிழைத்தவர்களுக்கு மாற்று வாழ்வாதாரங்களை அல்லது மறுகட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றார். 

குஜராத்தில் உள்ள மனித உரிமை அமைப்பின் தலைவர் செட்ரிக் பிரகாஷ் அவர்கள் கூறும்பொழுது, சுதந்திர இந்தியாவில் 2002 குஜராத் இனப்படுகொலை என்பது இரத்தக் கறை படிந்த நிகழ்வாகும். இதில், வருந்தத்தக்க ஒரு நிகழ்வு என்னவென்றால், கொலை செய்தவர்கள், கற்பழிப்பு செய்தவர்கள், தீ வைத்தவர்கள், கொள்ளையடித்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சி அதிகாரங்களில் இருக்கின்றனர். உண்மைக் குற்றவாளிகள் ஒரு சில பேர் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், பெரும்பாலானவர்கள் இன்று வீதியில் சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சில முஸ்லிம்கள் இன்றும் நீதிக்காகவும், உண்மைக்காகவும் போராடிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். உண்மைகளை ஒருபோதும் மூடி மறைக்க முடியாது. பன்மைச்சமூகமாக வாழும் நாம் நீதித்துறை நீதியின் பக்கம் நிற்க முயல வேண்டும். ஊடகத்துறை உண்மையை உரைக்க வேண்டும். சிவில் சமூகம் பாசிச மற்றும் அடிப்படைவாத சக்திகளை எதிர் கொள்வதற்கு தைரியமாக இருக்க வேண்டும். அதுவே, இனியொரு குஜராத் நிகழ்வுகளை நாம் வராமல் தடுக்க முடியும்.

குஜராத்தில் சமூக செயற்பாட்டாளர் திரேந்திரா பந்தா என்பவர் கூறும்பொழுது, 2002 குஜராத் இனப்படுகொலை என்பது மறக்க முடியாத ஒன்றாகும். சங்பரிவார்கள் ஹிந்து ராஷ்ட்ராவை அமைப்பதற்கான சோதனைக்கூடமாக குஜராத்தைப் பயன்படுத்தினர். இந்தியாவின் மிகப்பெரும் அடிப்படைவாதிகள் சங்பரிவார்கள்தான். 2002ல் குஜராத்தில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள், 20072008ல் காந்தமாலில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டார்கள், 2014ல் முஸஃபர் நகரில் மீண்டும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள்.

2016ல் என்ன நடந்து கொண்டிருக்கின்றது? முற்போக்குச் சிந்தனையாளர்களும், தலித்துகளும், நாத்திகர்களும், பகுத்தறிவுவாதிகளும் தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் கொண்டிருக்கின்றார்கள். இதையெல்லாம் அவர்கள் தேசியவாதம் என்கிறார்கள். நாட்டின் மதச்சார்பற்ற தன்மையையும், ஜனநாயக முறையையும் பிரமாணியத்துவமாக மாற்ற நினைக்கிறார்கள். இதை தொடங்கியும் விட்டார்கள். பல்கலைக்கழகங்கள், ஊடகத்துறை, அதிகாரத்துறை, காவல்துறை மற்றும் நீதித்துறையும் காவிமயமாகி கொண்டிருக்கின்றது.

இவர்களுக்கு எதிராக பேசவும், சிந்திக்கவும், எழுதவும் தொடங்கும் பொழுது தேசவிரோதிகளாக மாற்றப்படுவார்கள். ஆனால், நாம் உறுதியாக நின்று போராட வேண்டும். குஜராத் இனப்படுகொலைக்கான நீதி கிடைக்கும் வரை போராடிக் கொண்டே இருக்க வேண்டும் என்றார்.

குஜராத் கலவரம் நடைபெற்று 14 வருடங்கள் கழித்து நாம் அங்கு நடைபெற்ற நிகழ்வுகளை திரும்பிக் பார்க்கின்றோம். இந்த 14 வருடத்தில் இந்துத்துவா அமைப்புகளின் செயல்பாடுகள் ஏதும் குறைந்துள்ளதா என்று பார்த்தால், அதில் நமக்கு பெரிய ஏமாற்றம்தான் மிஞ்சும். ஏனென்றால், குஜராத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது, அதை வேடிக்கைப் பார்த்த நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இருக்கின்றார். அதனுடைய விளைவுகள் ஜனநாயக மரபுகளும், மதச்சார்பற்ற தன்மைகளும் பாதிப்புக்குள்ளாக்கப்படுகின்றது. ஜனநாயகம், மதச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், மதச்சார்பற்ற தன்மை, நல்லிணக்கம், சகிப்பின்மை போன்றவைகள் குழிதோண்டி புதைக்கப்படுகின்றன. பெரும்பாலான மக்கள் அச்சத்துடனும், பயத்துடனுமே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிகழ்வுகள் எல்லாம் களையப்பட வேண்டும் என்றால், நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.   

Comments

7 comments

7
Manikandan
குஜராத் கலவரத்திற்கு இஸ்லாமியர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் (கிடைக்க வேண்டும்) ஆனால் கோத்ர ரயிலில் எரிக்கப்பட்டவர்களுக்கு இந்த நாட்டில் நீதி கிடைக்க போவதில்லை என்பது தான் வேதனையான விஷயம். இந்த நாட்டில் பிரதமரை கொலை செய்தவர்களுக்காக போராட ஒரு கூட்டம் இருக்கும், இந்த நாட்டின் பாராளுமன்றத்தை தாக்கியவர்களை அப்பாவிகள் என்று சொல்லி நீதித்துறையை அவமதிக்க ஒரு கூட்டம் இருக்கும் ஆனால் அப்பாவி மக்களுக்கு குரல் கொடுக்க யாருமே கிடையாது. இந்த நாட்டின் பிரதமரோடு கொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கு குரல் கொடுக்க ஒரு இயக்கமாவுது இந்த நாட்டில் இருக்கிறது இல்லை காரணம் அவர்கள் எல்லாம் சாதாரண பொதுஜனம். அதே போல் கோத்ர ரயிலில் எரிக்கபட்டவர்களுக்கு குரல் கொடுக்கவும் யாரும் இந்த நாட்டில் இல்லை
Prem Kumar
Godhra rail eripu kolai kidaiyathu athu voru vibathu. Uyir thappiyavarkal Nanavadhi commission-il sonna vaankumoolamum Ithai thaan nirubikirathu. Oru vibathai kalavarathukaana thoondukolaai Modi-um Sangparivaarum payanpaduthina. For more read this link (http://www.truthofgujarat.com/topics/godhra-train-burning/)

Ranjiv kolai seythathaaka kutram saatapattavarkal appaavikal endru evalavo aatharankal, puthakankal vanthapirakum mindum muthalil irunthu kelvi keppathu enna niyayam endru theeiyavillai.. Jain commission, Chandra commission ellam unmai kutravalikal innum kandupidikapadavillai endrum.... subramaniya swamy, chandra swamy aagiyorkal visarikkapada vendiyavarkal endrum kooriyullathu..... aanal atha subramaniya swamy ippothu BJP-il... unmai kutravalikalai kandupidiyunkal, kidaitha appavikalai kuttravaaliyaka muthiraikuthaathirkal.
Manikandan
உங்களை போன்றவர்களுக்கு தான் ராஜீவ் காந்தியை யார் கொன்றார்கள் என்று நன்றாக தெரிந்து இருக்கிறதே உங்களிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து அப்பாவிகளை காப்பாற்ற வேண்டியது தானே, ஒரு முறைக்கு நான்கு முறை நீதிமன்றம் உங்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்தான் உங்களால் அவர்களை நிரபராதிகள் என்று நிரூபிக்க முடியவில்லையே இத்தனைக்கும் ஒரு சிட்டிங்கிற்கு 10 லட்சம் ரூபாய் வாங்கும் இந்தியாவின் மிக சிறந்த வக்கிலை வைத்து வாதாடும் அளவிற்கு வசதிபடைத்த உங்களால் ஏன் அவர்களை நீதிமன்றத்தில் நிரபராதிகள் என்று நிருபிக்க முடியவில்லை.

சும்மா அவன் சொன்னான் இவன் சொன்னான் என்ற கதையெல்லாம் வேண்டாம், ஆதாரபூர்வமாக நீதிமன்றத்தில் இவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிறுத்து காட்டுங்கள் இல்லையென்றால் இவர்கள் கொலைகார பாவிகள் என்று ஒப்புகொள்ளுங்கள்
Manikandan
கோத்ரா ரயில் எரிப்பில் நீங்கள் சொல்லாத பொய்களா, S 9 பெட்டியில் பயணம் செய்தவர்கள் அவர்களுக்கு அவர்களே தீ வைத்து கொளுத்தி கொண்டு இஸ்லாமியர்கள் மீது பழி போட்டார்கள் என்று ஆரம்பித்து விபத்து அது என்று அனைத்து பொய்களையும் பரப்பியவர்கள் தானே நீங்கள். நீதிமன்றம் கடைசியில் நீங்கள் சொன்ன பொய்யை In October 2006, the court quashed the conclusions of Banerjee and ruled that the investigation was "unconstitutional, illegal and null and void", declared its formation to be a "colourable exercise of power with mala fide intentions", and its argument of accidental fire "opposed to the prima facie accepted facts on record." The High Court also directed that the report should not be tabled in the Parliament

நான் சொன்னது போல் இந்த நாட்டில் அப்பாவி மக்களுக்காக குரல் கொடுக்க ஒருவரும் இல்லை உங்களை போன்றவர்கள் எல்லாம் உண்மைகளை திரித்து (மறைத்து) வாய்க்கு வந்த பொய்களை சொல்லி வெறுப்பு பிரச்சாரம் செய்விர்கள் ஆனால் ஹிந்துவாக இருந்தால் என்ன இஸ்லாமியனாக இருந்தால் என்ன தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் குடும்பங்கள் இருக்கிறது அதற்காக தான் ஒவ்வொரு மனிதனும் வாழ்கிறான் ஆனால் கொலை செய்து ஒரு குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டு வந்து விட்டு அந்த அப்பாவி மக்களின் பிணத்தின் மீது நின்று கொண்டு வெறுப்பு பிரச்சாரம் செய்யும் போது எனக்கு மனிதம் மீதே நம்பிக்கை போய்விடுகிறது.

எல்லோருக்கும் குரல் கொடுங்கள் ஹிந்து முஸ்லிம் என்று பிரிக்காதிர்கள், குஜராத் கலவரத்திற்கு நியாயம் கேட்பது போல் கோத்ரா ரயில் எரிப்பிர்க்கும் நியாயம் கேளுங்கள்.

இந்திய பிரதமரோடு அப்பாவி மக்களை கொன்றார்கள் அந்த அப்பாவி மக்களுக்கு நியாயம் கேளுங்கள்... பிணத்தின் மீது நின்று கொண்டு கொடூர அரசியல் செய்யாதிர்கள்.
Prem Kumar
Vaakumoolam vaanguna cbi athikari thiyagarajan sollitaru avarkal sonna vaakumoolathai naan ezhuthavillai nu... ingu neethimandrankal yaarukaaka seyal padikindrana enbathu ellarukum theriyum... aatharankalai vathu theerpu tharaamal kootu manasaachi adipadaiyil theerpu tharum neethimandrankal yaarukaaka seyyal padubana endru ellarukum theriyum.... unmai kutravalikalai kandupidiyunkal yarum venamnu sollala.... kedachavankala kutravaaliaakkavenam...
Manikandan
ஜயா சாமிகளா தியாகராஜன் சொன்னதை முழுதாக படியுங்கள். கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பேரறிவாளன் சொல்வது பொய்யாக இருக்கலாம் அதனால் அவர் சொன்னதை அப்படியே எழுதவில்லை என்று சொல்லியிருக்கிறார். தியாகராஜன் பேரறிவாளன் ஒன்றும் தெரியாத அப்பாவி என்று சொல்லவில்லை.

பேரறிவாளன் போன்றவர்கள் மீதான குற்றசாட்டுகள் சந்தேகத்திற்கு இடம் இல்லாதவாறு நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு தண்டனை கிடைத்து இருக்கிறது. யாரும் பேரறிவாளன் போன்றவர்கள் அப்பாவிகள் என்று சொல்லவில்லை.

உங்களால் முடிந்தால் நீதிமன்றத்தில் பேரறிவாளன் நிரபராதி என்று நிருபித்து காட்டுங்கள் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்ற கதையெல்லாம் வேண்டாம். அப்படி உங்களால் பேரறிவாளன் நிரபராதி என்று நிரூபிக்க முடியவில்லை என்றால் நீதித்துறை மீது அவதூறு பரப்பியதற்கு மன்னிப்பு கேளுங்கள்.
Manikandan
உங்களை போன்றவர்கள் அனைத்திலும் அரை உண்மைகள் அல்லது பொய்களை தான் சொல்கிறிர்கள், எதிலும் உங்களால் முழுமையாக உண்மையை பேச முடியவில்லை.

பாராளுமன்றத்தை தாக்கியவர்கள் மீதான குற்றசாட்டுகள் சதேகதிர்க்கு இடம் இல்லாமல் நிரூபிக்கப்பட்டதால் தான் அவர்களுக்கு தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கிறது ஆனால் நீதிபதி சொன்ன ஒரு வார்த்தையை எப்படியெல்லாம் திசை திருப்ப முடியும்மா அப்படியெல்லாம் திசை திருப்பி என்னமோ வேண்டும் என்றே யாரோ ஒருவரை தண்டிக்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றம் அப்சல் குருவை தண்டித்து இருக்கிறது எனபது போல் பிரச்சாரம் செய்கிறிர்கள். இதை எல்லாம் பார்க்கும் போது உண்மையில் உங்களை போன்றவர்களுக்கு மனித நேயம் மனசாட்சி எல்லாம் இருக்கிறதா என்று சந்தேகமே வருக்கிறது.

நீதிமன்றத்தில் அப்சல் குருவின் தவறுகள் நிரூபிக்கப்பட்டு அதன் பிறகு தான் தண்டிக்கபட்டு இருக்கிறார். காஷ்மீர் தீவிரவாதிகளின் மதவெறி செயலுக்காக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் முதலில் அந்த அப்பாவி மக்களின் உயிருக்கு பதில் சொல்லுங்கள் பிறகு நீங்கள் தீவிரவாதிகளுக்காக அனுதாபபடலாம்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.