புது விசை ஜூன் 32 ஆவது இதழில் யோ.கர்ணன் எழுதிய‌ ‘துவாரகாவின் தந்தை பெயர் பிரபாகரன்’ எனும் தலைப்பிலும், அதே போல் ஆதவன் தீட்சண்யா எழுதிய ‘ஒரு பில்லியன் பிரார்த்தனைகளும் ஒற்றைச் சூடக்கட்டியும்’ எனும் தலைப்பிலும் இரண்டு சிறுகதைகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

     கர்ணனின் கதை ஈழத் தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளது. மிக்சர் கம்பெனி வைத்திருந்த வீரப்பிள்ளை மகன் பிரபாகரனைப் பற்றிக் கதை சொல்லத் தொடங்கி, அவருக்கு ஒரு மகள் துவாரகா எனச் சொல்லி வேலுப்பிள்ளை பிரபாகரனை நினைவூட்டிப் பகடி செய்யும் கதை. "இலங்கையில் முப்பது வருடங்களாக நீடித்து வந்த உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்த கையுடன்" எனத் தொடங்கும் கதை, "விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, அவரது மகள் துவாரகாவை நினைவூட்டும் வகையில்" மிக்சர் கடை வீரப்பிள்ளை மகன் பிரபாகரன் தப்பி தமிழகத்திற்கு வந்து, பின்னர் தாய்லாந்து சென்று பிரிட்டனுக்கு விசா விண்ணப்பம் கொடுப்பதாகக் கதை. ஈழத்தில் அவரது மகளின் கைது விசாரணை மூலம், தப்பித்த பிரபாகரன் மிக்சர் கடை பிரபாகரன் என வெளிப்படுத்துவது. கதையில் கையாளும் மனிதர்களும், செய்திகளும் நெடுமாறன், சீமான், வைகோ என துணைச் செய்திகளும் முப்பது ஆண்டு காலம் நடந்து தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட ஈழ விடுதலைப் போராட்டத்தின் நாயகர்களை பகடி மூலம் கொச்சைப்படுத்துகிற செயலை இக்கதை எழுதியவர் செய்துள்ளார்.

ஆதவன் தீட்சண்யாஇறுதியில் மகள் துவாரகாவை தான் அகதியாக தஞ்சம் புகுந்துள்ள ஆஸ்திரேலியாவுக்கு அழைக்கிறார். ‘‘எங்கட நாட்டை விட்டுட்டு வர விருப்பமில்லை’ என பதில் தருகிறார் துவாரகா. கதையின் இறுதி வாசகமாக வீரப்பிள்ளை பிரபாகரன் சொல்வதாக "நாடும், மசிரும்" என முடிக்கிறார்.

 ஆதவன் தீட்சண்யாவின் கதை மாரிச்சாமி எனும் ஒற்றைக் கதாபாத்திரத்தை தமிழகத்தின் தமிழ்த்தேச இயக்கங்களை, உணர்வாளர்களை உருவகப்படுத்தி ஆதவனின் வழக்கமான கிண்டல், கேலிகள் ஊடே எளிமைப்படுத்தியுள்ளார். தமிழகத்தின் தமிழ்த்தேச, ஈழ ஆதரவாளர்களின் செயல்பாடுகள் ஆதவனை எரிச்சலூட்டியிருக்கலாம். இதன் வெளிப்பாடாக கிரிக்கெட் போட்டிக்கு வரும் இலங்கை அணிக்கு எதிராக மாரிச்சாமியை ஒரு கேலிக்கும், கிண்டலுக்கும் உரிய பொருளாக மாற்றுவதன் மூலம் ஈழத் தமிழர் ஆதரவு ஆர்வலர்களை, செயல்பாட்டாளர்களை, "இணைய தளத்திற்குள் ஈழம் அமைத்தே தீருவது எனப் போராடி வரும்" என இயக்கங்களை வரிசைப்படுத்துகிறார். இடையில் மாரிச்சாமி மருகுவதாய் "இலங்கையில் தொழில் நடத்துகிற அசோக் லேலண்ட், ஹிந்துஜா வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை" எனச் சுட்டிச் செல்கிறார். இணையத்துக்குள் இன்று ஈழத்திற்கு ஆதரவான குரல் அதிகரித்திருப்பதும், அது இதர கருத்தியலை ஏற்றுக் கொண்டுள்ள சிந்தனையாளர்களை, செயல்பாட்டாளர்களை எரிச்சலூட்டியுள்ளது என்பதும் தெரிகிறது. கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி தோற்றுப்போக மாரிச்சாமி பிரார்த்தனை செய்வதாகவும், போட்டியில் இலங்கை அணி தோற்றுப் போனது தனது சூடக்கட்டி பிரார்த்தனையால்தான் என மன நிறைவு கொள்வது போலவும் கதை முடிவுறுகிறது.

 இரண்டு கதைகளுமே  அரசியல் கிண்டல் சிறுகதைகள். கடந்த முப்பது ஆண்டுகளாக சிறிய அளவில் வடிவமெடுத்த ஈழ விடுதலைப் போராட்டம், இந்திய அரசின் தெற்காசிய அரசியல் நடவடிக்கையின் மையமாக மாற்றப்பட்டதும், இலங்கையை மையப்படுத்திப் போட்டி மையங்கள் இன்று உருவாகி உள்ளன என்பதும் வெளிப்படையான உண்மை. சுமார் 15 இயக்கங்கள், அதில் ஐந்து பிரதான அமைப்புகள் முன்னிருத்தப்பட்டும், முன்னெழுந்தும் வந்தன. இந்திய அரசின் ஆயுத உதவியுடன் இந்தியாவின் விரிவாக்க நோக்கத்தை நிறைவேற்ற வளர்த்து விடப்பட்டன. அரசியல் ரீதியாக இந்திய உளவு நிறுவனமான ‘இரா’  ஈழ அமைப்புகளுக்கிடையே போட்டியை உருவாக்கி, மோதலை உண்டாக்கி ஒருவரையொருவர் அழிப்பதில் இறங்கி, இறுதியில் சில அழிக்கப்பட்டன. எஞ்சிய இரு அமைப்புகள் ஈரோஸ், விடுதலைப் புலிகளுடன் இணைந்து போராட்டக் களத்தைச் சந்தித்தன. ஈழ இயக்கங்களின் தோற்றம், தலைமைகள், அரசியல் நிலைப்பாடுகள், இந்திய அரசுடனான உறவு, உட்பகை, அழிவு என விவரிக்கத் தொடங்கினால் மிகவும் விரிவானது. தியாகம், துரோகம் என இரு முனை விவாதமாகச் சுருக்க முடியாது.

1987க்கு முன், 1987க்குப் பின் எனக் காலக் கட்டத்தைப் பிரித்து அணுக வேண்டியுள்ளது. ஆம். இந்திய அமைதிப்படை இலங்கை சென்றதற்கு முந்தைய சூழல், பிந்தைய சூழல் எனப் பரிசீலிக்க வேண்டும். இந்திய அரசின் ‘இரா’ உளவுத் துறையின், அன்றைய பிரதமர் இராசீவ் காந்தியின் இராணுவ, வெளியுறவுத் துறை அதிகாரிகளின் பாத்திரம் என்ன? தெற்காசியாவின் பேட்டை ரவுடி இந்தியாவின் சதிச் செயலுக்கு எதிராகத் தாக்குப் பிடித்த  சக்திகள் எவை? நார்வே மூலம் தலையிட்ட  சர்வதேச சக்திகளின் பாத்திரம், இலங்கை, இந்திய, தெற்காசியப் பகுதியில் உள்ள இடதுசாரிக் கட்சிகளின் செயல்பாடுகள் என மிக விரிவான தளத்தில் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய ஒரு இனத்திற்கான சனநாயகப் போராட்ட வரலாறு. சிங்களம் மட்டுமே என்ற சட்டத் திருத்தம் தொடங்கி நடந்த வெகுமக்கள் போராட்ட  கட்சிகளும், தனி ஈழமே எனப் போராடிய விடுதலைப் போராட்டத்தின் முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டமும் என மிகவும் கனமான, இரத்தமும், சதையும் லட்சக்கணக்கான உயிர்ப்பலிகளும் நிறைந்த போராட்டம் கேலிக்குரியதா? கிண்டலுக்குரியதா? பகடிக்குரியதா? இருக்கலாம். யாருக்கு? ஆளும் வர்க்கச் சேவை புரிபவர்களுக்கு. ஆதவன் தன்னை அப்படித் தான் முன்னிருத்துகிறாரா? புதுவிசை தன்னை எந்தவகையான கலாச்சாரக் காலாண்டிதழாக முன்னிருத்துகிறது.

 தமிழகத்தின் இருதுருவ அரசியல் அனைத்துக் கட்சிகளை, இயக்கங்களை தன் பின்னே அணிதிரட்டுகிறது. இடதுசாரிக் கட்சிகளும் இதற்கு விதிவிலக்கில்லை. தலித் அரசியலுக்கான கருத்தியல், சர்வதேசிய, தேசிய, தமிழ்த் தேசிய, ஏனைய அனைத்து சமூக இயக்கங்களையும் மறுதலிக்கிறது. ஆனால் இருதுருவ அரசியலுக்குள் மாட்டிக் கொள்கிறது. சிறுபான்மை இயக்கங்களின் இந்துத்துவ மதவெறி எதிர்ப்பு அரசியலுக்கான கருத்தியல் தனக்கான அணி சேர்க்கைக்கு முக்கியத்துவ‌மளிக்கும் அதே வேளை தமிழகத்தின் இருதுருவ அணி சேர்க்கையில் சிக்கிக் கொள்கிறது. தேசிய இன அரசியலும் இதே கதி தான். இடதுசாரி அரசியல் இருதுருவ அரசியலுக்குள் மாட்டிக் கொண்டு, சிக்கிக் கொண்டு விடுபட முடியாமல் திணறிக் கொண்டுள்ளது. விடுபடுவதற்கான விருப்பத்தை, முயற்சியைக் கூடப் பார்க்க முடியவில்லை.

 ஆனால் வர்க்கப் போராட்டம் எனும் சொல்லாடல் இன்று பரந்த பொருளில் பார்க்கப்பட்டு, பேசப்பட்டு, கையாளப்பட்டு வருகிறது. பன்முகப் பரிமாணத்தைக் கொண்டுள்ள இந்திய, தமிழ்ச் சமூகத்தில் தலித் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலுக்கு சாதி ஒழிப்பு நோக்கில் இணைத்துப் பார்க்கும் தன்மை மா- லெ அமைப்புகளில் மட்டுமே இருந்தது. இடதுசாரிகள் சாதிக் கலவரமாக, மோதலாக, வர்க்க ஒற்றுமைக்கு எதிரான ஏகாதிபத்தியச் சதியாகப் பார்த்த சூழல் மாறி இன்று ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’யாக அடியெடுத்து வைத்துள்ளது; மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதைக் கூட எரிச்சலாகப் பார்க்கும் மரபு ரீதியான இடதுசாரிகள் இன்றும் அமைப்புகளுக்குள் உள்ளார்கள்.

 தலித் அரசியலே மண்ணுக்கேற்ற மார்க்சியம்! தேசிய இன விடுதலையே மண்ணுக்கேற்ற மார்க்சியம்! எனப் புதிது, புதிதாக முழக்கங்கள் எழுந்து வந்த சூழலில் மார்க்சியத்தின் மறுவாசிப்பும், சுய பரிசீலனையும், தாக்குதல்களும், கடந்த இருபது ஆண்டுகால விவாதங்களும் படிப்படியாக மாற்றங்களைச் சந்தித்து ‘வர்க்கப் போராட்டம்’ அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி இணைத்துக் கொண்ட பரந்த பொருளில் தன்னை முன்னிருத்தியுள்ளது. பல் தேசிய இன இந்திய நாட்டில், இந்திய ஆளும் வர்க்கம் இந்துத்துவா அரசியலின் மூலம் ஒற்றை அடையாளத்தை முன்னிருத்துகிறது என்றால், உலகமயச் சூழல் உலகமே ஒரு கிராமமாக ஒற்றைத் தன்மையை முன்னிருத்துகிறது. இந்தி மொழித் திணிப்பிற்கு எதிரான இயக்கம் தொடங்கி, இன்றைய இலங்கை அரசுக்குத் துணையான இராணுவ உதவி வரை இந்திய அரசால் தமிழக, தமிழன் உணர்வுகள் புறந்தள்ளப்படுவதை பார்க்க முடியவில்லையா?

 தேசிய இன அமைப்புகளின், தலித் இயக்கங்களின் விருப்பத்திற்கேற்றவாறு கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தியாவில் இயங்க முடியாது. தலித் இயக்கங்களின் விருப்பங்களுக்கு இணங்க தமிழ்த் தேசிய அமைப்புகள் இயங்க முடியாது. வர்க்க ஒற்றுமை, இன ஒற்றுமை பேசும் அமைப்புகளின் நோக்கங்களுக்காக தலித் இயக்கங்கள் தன் மீதான ஒடுக்குமுறையைத் தாங்கிக் கொண்டு, தனது எழுச்சியைத் தள்ளிப் போட முடியாது. சகலமும் அறிந்ததாக மார்தட்டிக் கொள்ளும் கம்யூனிஸ்ட் அமைப்புகளின், புரட்சியாளர்களின் விருப்பம், உணர்வுகளுக்கேற்றவாறு தலித் இயக்கங்களோ, தேசிய இன இயக்கங்களோ, பெண் விடுதலை அமைப்புகளோ, சிறுபான்மை அமைப்புகளோ, சுற்றுச் சூழல் அமைப்புகளோ சிந்திககவோ, செயல்படவோ முடியாது. இதில் ஆதவன் தீட்சண்யாக்கள் எரிச்சலடைவது எதனால்?

 தங்களது படைப்புகளை ஏனைய கருத்தியலை நோக்கித் திருப்பும் தீட்சண்யாக்கள் கூடங்குளத்தில் அணு உலை ஆதரவும், செகதாவூரில் அணு உலை எதிர்ப்பும் என நிலை எடுக்கும் இடதுசாரிகளைப் பார்த்து எரிச்சல்படுவதில்லையே, ஏன்? ஐந்து ஆண்டுகள் வர்க்கச் சுரண்டலுக்கு எதிராகப் போராடி, போராட வைத்து, அடி உதை வாங்கிச் சிறை சென்று, ஆளும் வர்க்கக் கட்சிகளின் தலைவர்களை சனநாயகத்தைக் கொண்டு வரும் விடுதலை வீரர்களாக, வீராங்கனைகளாகச் சித்தரிக்கும் மாபெரும் படைப்பாளிகளான பாட்டாளி வர்க்கத் தலைவர்களை நோக்கித் திருப்புவதே இல்லையே ஏன்? தனது கதையில் படைப்பின் உத்திகளை, படைப்புச் சுதந்திரத்தைப் பாருங்கள் எனக் கூறும் தீட்சண்யா மன்மோகன்சிங், கிலானி, இராசபக்சே, நெடுமாறன், சீமான், வைகோ என எல்லோரையும் தான் சொல்லியிருக்கிறேன், ஒரு படைப்பாளிக்கு சார்புத் தன்மை இல்லை எனக் கூடப் பேசலாம். படைப்புச் சுதந்திரத்தை ஏற்றுக் கொள்! என அறைகூவல் விடுக்கலாம்.

கிரிக்கெட் மைதானத்தில் மாரிச்சாமித் தமிழனை நிராயுதபாணியாக நிறுத்தி கோவணத்தை உரியும் தீட்சண்யா வங்க உணர்வு பொங்கி வழியும் பட்டாச்சார்யாக்களை, பாசுக்களை, சட்டர்ஜிகளை, முகர்ஜிக்களை, யெச்சூரிகளை, மலையாள உணர்வு பெருக்கெடுத்து முல்லைப் பெரியாறு வரை அணை உடைக்கும் அச்சுதானந்தன்களை அழைத்து வந்திருக்கலாமே! ஆந்திரத்தின் தெலுங்கானாவை ஏன் விட்டு விட்டார்? காஷ்மீரின் கிலானி உங்களது கிண்டலுக்கு சோளப்பொறி. வர்க்க உணர்வுகளை தேர்தல் சூத்திரத்திற்கு ஏற்ற அரசியல் உணர்வாக மாற்றி வடிவமைக்கும் கட்சித் தலைவர்கள் மீது காட்டலாமே! பரம ஏழை டாடாவிற்கு சிங்கூர், நந்திகிராம் நிலங்களைப் பிடுங்கிக் கொடுத்து மாட்டிக் கொண்டதை மறைக்க, மாவோயிஸ்ட் பூதத்தைக் காட்டி மம்தாவிடம் பறிகொடுத்த கதையை நூறு கதைகளாக்கலாம். இலங்கைக்குப் போகும் அசோக் லேலண்ட், இந்துஜா பெருமுதலாளிகளுக்கு எதிராக வீட்டு முன் ஆர்ப்பாட்டத்தை த.மு.எ.க.ச வை, சி.ஐ.டி.யூ வை, சி.பி.ஐ (எம்) ஐ நடத்தச் சொல்ல வேண்டியது தானே! ஏர்டெல்லுக்கு எதிரான இயக்கத்தை மே- 17 இயக்கம் முன்னெடுக்காமல், பி.எஸ்.என்.எல் எம்ளாயிஸ் யூனியனா நடத்தியது?

  தாங்கள் நேரிடையாக எதிர்க்க முடியாத சர்வாதிகாரிகள் அடக்குமுறையாளர்கள், கங்காணிகள், ஆதிக்க சக்திகள் இவர்களுக்கெதிராக வெளிப்படும் கோபத்தை உருமாற்றிப் பாடல்கள், கதைகள், பழமொழிகளாக வெளிப்படுத்த உழைக்கும் மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உதவும் கலை வடிவங்கள்தான் பகடி, கேலி, கிண்டல். சாப்ளின் மிகப் பெரிய மேதை. முதலாளித்துவக் கலாச்சாரத்திற்கு எதிராக, இயந்திரமயமாக்கத்திற்கு எதிராகப் பகடிகளைப் பயன்படுத்திய மேதை. என்.எஸ்.கே சாப்ளினின் தமிழ் அடையாளம். அந்தப் பகடி, கேலி, கிண்டல் ஆதவனுக்கு இரத்தம் சிந்திப் போராடிய விடுதலை இயக்கங்களுக்கு எதிராக, போராட முனையும் தமிழகப் போர்க்குணமிக்க இளைஞர்களுக்கு எதிராகப் பயன்படுகிறதே! இதுவும் வர்க்கச் சேவைதான். ஆம். ஆளும் வர்க்கச் சேவை. அந்தோணியோ கிராம்சியின் எழுத்துக்கள் விசையில் பிரசுரிக்க மட்டும் தானே! செயல்பாட்டுக்கு, படைப்புக்கு அல்ல.

 போராட்டங்களை, போராளிகளை, திட்டங்களை, முழக்கங்களை, இலக்குகளை, தலைமைகளை கொச்சைப்படுத்தாமல் கருத்தியல், அரசியல் ரீதியாக விமர்சிக்க நிதானமும், தத்துவ அரசியல் புலமையும் அவசியம். புரட்சிகரத் தலைவர்களுக்கு எதிராக வீசப்பட்ட வதந்திகளை, கிண்டல், கேலிகளை புறந்தள்ளிவிட்டுச் சந்தித்த வரலாறு இலக்கியங்களாக நம் முன் இன்றும் இருக்கிறது. பொறுப்புடன், விமர்சனங்களை முன்வைக்கப் பழகுவதும், பழக்கப்படுத்துவதும் இதழாளர்களின், படைப்பாளிகளின் மாபெரும் கடமை. உணர்ச்சியைக் கொட்டுவதற்கும், உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கும் தமிழகச் சூழலில் ஏராளமான விசைகள் உள்ளன. புதுவிசை எதற்கு? அரிப்பதைச் சொறிவதும், சொறிவதினால் ஏற்படும் சுகத்தை, எரிச்சலைப் பதிவு செய்யும் சாரு நிவேதிதாக்கள் பேசும் படைப்புச் சுதந்திரம் யாருக்கு?

 இந்தியாவை ஏற்றுக் கொள்ளாதே எனும் தமிழ்த் தேசிய முன் வைப்புகளுக்கு தீட்சண்யாவின் பதில் என்ன? தமிழ்த் தேசிய அரசியலைக் கிண்டலடி என்பதா? சரியான அணுகுமுறையா? தமிழ்த் தேசிய அரசியலுக்கான புறநிலை யதார்த்தம் உள்ளதா? இல்லையா? ஈழ மக்களின் போராட்டங்களுக்கு தமிழகத்தின், தமிழர்களின் பங்கு, பாத்திரம் அவசியமா? இல்லையா? ஒரு படைப்பு உணர்வுகளைத் தூண்டி, வழி நடத்த வேண்டும். அதைச் செய்கிறதா உங்களது படைப்பும், தாங்கள் வெளியிட்ட படைப்பும்.

- மீ.த.பாண்டியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

27 comments

27
kumaresan
சிங்கள் என்.ஜீ.ஓக்களிடம் பொறுக்கித் தின்பவரிடம் போய் தத்துவம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? சோபாசக்தி, அ.மார்க்ஸ், ஆதவனுக்கு எல்லாம் ஒரு தத்துவமும் கிடையாது... யார் பிஸ்கட் போட்டாலும் வாலாட்டுவதுதான் அவர்களது புரட்சிகரத் தத்துவம்
ravanan
shame on you aadavan and your cpm co! we cant expect any more from these dubious opportunist fellows... its all the more shame that they use periyar marx and ambedkar for their opportunism... lets have open debate on eelam.. will they ever come? they are yet answer that dalit massacre that happened in marijhobi in bengal taking nearly 17000 dalits lives.. he claims to be a dalit writer what a shame...
இன்பா
இவங்க அராஜகத்தை அறிவுகெட்டதனத்த கேரளாவில் கண்கூடாக பார்க்கலாம் சில ஆண்டுகளுக்கு முன்பு இவங்க உள்கட்சி தேர்தல் அதுல CPM மில் இருந்து ஒருத்தன் பிரிஞ்சு போய் தனியா நின்னு ஜெயிச்சுட்டான் அதனால அவன் மேல இருக்கற கோவத்துல...அவன் நிர்வாகிய இருக்கற புகழ் பெற்ற பாம்பு பண்ணையை தீ வச்சி விட்டாங்க ...நெறைய பாம்பு அறிய பறவை உயிரினம் எல்லாம் செத்து போச்சு .(இரண்டு முறை இது மாதிரி இதே இடத்தில நடந்திருக்கு ) ..சமிபத்துல கூட BJP காரனை அடிக்க முடியாதவங்க அவங்க வீட்டு நாயை பத்து பேரு சேர்த்து அடிச்சு கொன்னுருக்காங்க....மொத்தத்தில் CPM ஒரு பைத்தியகாரங்க....இதுல ஆதவன் எம்மாத்திரம் ...எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ....
aruna
Beware. such people, who are getting grant-in-aid from Indian and Srilankan governments, are subtly and stealthily working in their agenda to tarnish the image of fighters of Tamils's rights and to create a image about them like chauvinists,for the later battle, their pay masters are going to wage.
ம பொன்ராஜ்
ஒட்டுமொத்த ஈழ போராட்ட வரலாறை 'பிரபாகரனில்' இருந்து துவங்குபவர்களை சுருக்கமாக 'அரைவேக்காடுகள்' என்று சொல்லலாம். ஆனால் 'மிக்சர்' பிரபாகரன் என்று விளிப்பதன் மூலம் ஆதவன் தீட்சண்யா தன்னை ஒரு 'கால் வேக்காடு' என்று நிரூபித்துள்ளார்.
viyasan
இப்படியான "எழுத்தாளர்கள்" தான் ஈழத்தமிழினத்தின் சாபக்கேடுகள். பாவப்பட்ட ஈழத்தமிழினத்தின் அழிவுக்குக் காரணம் இவர்களைப் போன்ற உடன்பிறந்தே கொல்லும் நோய்களே. சிங்களவர்கள் போடும் எலும்புத்துண்டுக்காக முழுத்தமிழினத்தையும் காட்டிக் கொடுக்கப் பல பச்சோந்திகள் எம்மிடையே உள்ளனர். ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதும், அவர்களின் தமிழ்நாட்டு ஆதரவாளர்களை வசைபாடுவதும் இப்பொழுது இலாபகரமான தொழில் என்பதை பல ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் அறிந்துள்ளார்கள். அந்தளவுக்கு சிங்கள அரசின் தூதரகங்கள் பணத்தை தண்ணியாகச் செலவிடத் தயாராகவுள்ளார்கள். அதை விட ஈழத்தில் சிங்கள அரசின் காலைநக்கும் தமிழ் வாலாயங்களுக்கு இப்படியான ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் தயவு தேவை எனென்றால் அவர்களில் பலருக்கு எழுத வாசிக்கத் தெரியாது.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடையே வாழும், இப்படியான சோரம் போன ஈழத்தமிழ் எழுத்தாளர்களில் பலர் நாற்பது அல்லது ஐம்பது வயதை தாண்டியவர்கள். அவர்கள் எல்லோரும் இலங்கையில் தனித்தமிழில் கல்வியைக் கற்றவர்கள். இவர்களில் பலருக்கு ஆங்கில அறிவோ அல்லது மற்ற ஐரோப்பிய மொழி வல்லமையோ கிடையாது. அதனால் பலரும் வருமானம் குறைந்த கூலிவேலை செய்பவர்களாக அல்லது பல பொய்களைச் சொல்லி அரசாங்கத்தின் உதவிப்பணத்தில் வாழ்க்கை நடத்துபவர்களாகவுள்ளனர். அவர்களின் கையில் அளவுக்கதிகமான நேரமுள்ள அளவுக்குப் பணவசதியில்லை, அதனால் அவர்களுக்குக் கூலிக்கு மாரடிக்க வேண்டிய தேவை அதிகம். அதே வேளையில் இரண்டாவது தலைமுறையின் ஈழத்தமிழர்கள் அல்லது மேற்குலகில் கல்வியை முடித்த ஈழத்தமிழர்களுக்கு தமிழீழப் போராட்டத்தையும், தமிழ்மண்ணைக் காக்க தம்முயிரை ஈந்தவர்களையும் இழிவு படுத்தி, சிங்கள அரசைத் திருத்திப் படுத்திக் கைக்கூலி பெற வேண்டிய தேவை கிடையாது. அதனால் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் இளைய சமுதாயம், இப்படியான ஈழத்தமிழ் எழுத்தாளர்களை விட ஈழவிடுதலையில் உண்மையானவர்களாக, பாசாங்கற்றவர்களாக உள்ளனர்.

அண்மைக்காலமாகப் பல ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் தம்மைத் தலித் என அடையாளப்படுத்துவதில் முன்னணியில் நிற்பதைக் காணலாம். அதில் வேடிக்கை என்னவென்றால் "தலித்" என்ற பதத்தையே பெரும்பாலான ஈழத்தமிழர்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். ஈழத்தமிழர்களில் பலருக்கு இன்றும் அதன் கருத்தே தெரியாது. தலித் என்ற அடையாளம், ஈழத்து அரைவேக்காட்டு எழுத்தாளர்களுக்குக் கூட ஒரு அறிமுகத்தையும், விசிறிகளையும், ஆதரித்துக் கூச்சல் போட ஒரு கூட்டத்தையும் வலைப்பதிவுகளிலும், திரட்டிகளிலும், இணையத்தளங்களிலும் ஏற்படுத்திக் கொடுத்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பெரியார் என்றால் யாரென்றே தெரியாத ஈழத்தமிழர்கள், அதிலும் சைவமும் தமிழும் பிரிக்கமுடியாதவை என நம்பும் ஈழத்தமிழர்கள், இணையத்தளங்களில் பிரபலமடையவும், தமிழ்நாட்டுத் தலித் எழுத்தாளர்களின் நட்புக்காகவும் பெரியாரிஸ்டுகளாக மாறினார்கள் என்பதும் நாடறிந்த உண்மை. அந்த வகையில் எழுத்தாளராக பிரபலமடைந்த பல ஈழத்து வலைப்பதிவாளர்கள் பலர் இன்று அந்த பிரபலத்தைப் பாவித்து சிங்கள அரசுக்கு ஆதரவாக, ஈழத்தமிழர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பணம் பண்ணுகிறார்கள். தலித் என்ற பெயரினால் கிடைக்கும் ஆதரவினாலும் ,அனுதாபத்தினாலும் எழுத்தாளர் அறிமுகத்தைப் பெற்றவர்கள் குலத்தைக் கெடுக்கும் கோடரிக்காம்பாக, இனத்தைப் பிரிக்கும் பச்சோந்தியாக மாறி, எவற்றையெல்லாம் ஈழத்தமிழர்கள் போற்றுகிறார்களோ அவற்றையெல்லாம் இழிவு படுத்தும், சிங்கள அரசின் பிரச்சார ஊதுகுழலாகவுமுள்ள பன்னாடைகளில் பலர் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ளனர்.

கூலிப்பட்டாளத்துக்குத் தேவை கூலியே தவிர அது எங்கிருந்து வருகிறது என்பதையெல்லாம் நினைத்து அவர்கள் அலட்டிக் கொள்வதில்லை. அதனால் தான் சும்மா முப்பது மாதங்களுக்கு முன்னால் இணையத்தளங்களில் புலிக்கூத்தாடிய ஈழத்தமிழ் வாலாயங்களெல்லாம் இன்று சிங்கள பைலா ஆடுகிறார்கள்.

"விதியே, விதியே தமிழச்சாதியை என்செயக்கருதி இருக்கின்றாயடா."
திருப்பரங்குன்றம் செந்தில்
"அம்சா" வின் கைக்கூலி ஆதவன் அவர்களே,

"கோடிகால் பூதமடா,
கோபத்தின் ரூபமடா,
பாட்டாளி வர்க்கமடா"

டாட்டா வோட கூட்டாளியடா?

அன்று,
"சானிபாலை நிறுத்து,
சவுக்கடியை நிறுத்து"

இன்று,
"டாடாவுக்கு சலாம் போடு,
மார்க்சுக்கு பூணுல் போடு,
மகிந்தவுக்கு ஜெ போடு"

[பெரியார் & பிரபாகரன் க்ரூப்ஸ்]
tamilselvan
மீ.த.பாண்டியன் அவர்களின் கட்டுரையில் கடந்த 30 ஆண்டுகளில் காணக்கிடைக்காத ஒரு நிதானமான தொனியும் கதைகளை வாசித்து விட்டு எழுதியிருப்பதும் கேள்விகளை எழுப்பியிருப்பதும் அவருடைய கோபமும் நியாயமானதென்று கருதுகிறேன்.விடுதலைப்புலிகள் இயக்கத்தவரான -போரில் ஒரு காலை இழந்தவருமான-யோ.கர்ணன் இப்போதும் இலங்கையில் வாழ்கிறார்-அவர் கதையை புதுவிசையில் பிரசுரித்ததற்காக கடந்த ஒருவார காலமாக நம் நண்பர்கள் அவரைத் தொலைபேசியில் அழைத்து கொலை மிரட்டல் விடுப்பதும் அவர் கிடைக்காதபோது அவருடைய துணைவியாரை இரவு நேரங்களில் அழைத்து உன் கணவனைக் கொல்லாமல் விடமாட்டோம் என்று மிரட்டுவதும் நடந்து கொண்டிருக்கிறது.இந்தச்சூழலில் மீ.த.பாண்டியன் கட்டுரையின் தொனி மிகுந்த ஆரோக்கியமான ஒன்று.
தமிழ்க்கனல், சென்னை
ஆதவண், காத்திரமான தலித் எழுத்தாளர் என்பதற்காக அவரை விமர்சிக்காமல் பல தமிழ்த் தேசிய அமைப்புகள் நிராகரிப்பதுதான், அவர், தொடர்ந்து, அபத்தமாகவும் அவர் நேசிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் உழைக்கும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் பேசுவதற்கு வாய்ப்பாக இருக்கிறது.

இனப்படுகொலை உச்சத்தைத் தொடங்கியபோது, இப்படித்தான் அவரின் சிங்களப் பாசம் பற்றிய கருத்தாடல்கள் கி்ளம்பியபோது, மலையகத் தமிழர்கள்தான் கஷ்டப்படுகிறார்களா என்கிறபடியாக கருத்தை முன்வைத்தார். இதற்கு அரசியல் நேர்மை உள்ளவராக இருந்தால் அவரே பதில் சொல்லவேண்டும்.

இதுவரை அவர் சார்ந்துள்ள கட்சி, மலையகத் தமிழருக்காக, இன்றும் மலையகப் பகுதியில் டெண்ட்டுகளில் உயிர் வாழப் போராடிக் கொண்டிருக்கும் நிலைமை பற்றி இங்கு எத்தனை இயக்கங்கள் நடத்தியிருப்பார்கள்? ஈழத்தமிழர்கள் மொத்தமாக சாகும்போது மட்டும் உங்களுக்கு மலையகத் தமிழர் மீது பாசம் பொத்துக்கொண்டு வந்ததன் மர்மம் என்ன?

இது படைப்பு சுதந்திரம் என புலி எதிர்ப்பு வன்மங்களைப் படைப்பு எனக் கொண்டாடுபவர்கள், அரசியலில் யோக்கியமாக இருந்தால், மலையகத் தமிழரைப் பற்றிய படைப்புகளையும் அல்லவா இதுவரையிலும் பதிவு செய்திருக்கவேண்டும்.

அதைச் செய்யத் துப்பில்லாதபோது, சி்ங்களனிடம் காசு வாங்கியதாக யாராவது உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டால் மட்டும் பொங்கி எழுந்துவிடுகிறார்கள், கொஞ்சமும் கூச்சமே இல்லாமல்!

ஷெல்லடி, வேதிக்குண்டுகள், விமானத் தாக்குதல்களால் குடல் வெலியே வந்து அழக்கூடத் தெம்பு இல்லாமல் பச்சிளம் குழந்தைகள் அவலமாகச் செத்துப்போன புகைப்படங்களைப் பார்த்தும் இந்தப் படைப்பாளிகளுக்கெல்லாம் எப்படி இப்படியான மிருக குணம் கொண்டவர்களாக இருக்கிறார்களோ தெரியவில்லை. இதுகள் என்ன மனித ஜென்மங்களோ? என்று சொல்லத்தான் தோன்றுகிறது. இவர்களுக்கு உழைக்கும் மக்களின் விடிவெள்ளிகளான பேராசான்கள் தந்துசென்ற கம்யூனிச முகமூடி பயன்படுவது அவர்களைக் கேவலப்படுத்துகிறது, காலக்கொடுமை.
ravanan
Dear Comrades,

The writings of Aadavan,A.marx kavinmalar, shobasakthi, sugan, suseendran and their cronies are not an aberration, it is systematic propaganda enacted by Srilankan empassy and indian machineries to divert the voices for tamil eelam struggle.. and also lets not get in to the trap that these writers positions on other issues are pro people, only on the eelam question they differ. No i am sorry, one cant be such.

Because, the eelam question is The question at this juncture to polarize, decide and determine who are the friends of people and ruling class that be... the diverting debate is a convenient tool of the ruling class to fracture the unity of voices for eelam... friends believe me they have succeeded to an extend in that...

It is utter shame that we give them a space in political space, because not that they dont deserve but theirs is not a debate it is propoganda, venom nothing much...they have trained how to conveniently use periyar, ambedkar and marx against the tamil society just for few personal gains...

Finally to talk about cpm, it is a punch of brahmins and petty bourgeise intellectualso ... if at all they have some kind of honesty, ask them to have clear analysis of dalits and backward classes in bengal...there are lot of evidences to show that cpm atrocities in bengal... it is not even near to social democracy forget about being communist or socialist party.

i dont know how long are we going to tolerate these dubious degenerated opportunist elements..
Munusamy
தமிழ்ச்செல்வன் என்ன சொல்றார்? முன்னாள் புலி என்பதால் யோ.கர்ணன் எழுதும் குப்பைக்கெல்லாம் சலாம் போடலாம் என்கிறாரா? அப்படிப் பார்த்தால் கருணா, கே.பி. கூட முன்னாள் புலிகள்தான்.. அதெல்லாம் விடுங்க... ஆதவன் விடாமல் விஷத்தைக் கக்கும் தமிழ்த் தேசியவாதிகளில் பாதிபேர் சிபிஎம் குட்டையிலிருந்து கரை சேர்ந்தவர்கள்தான். நீண்ட நாள் சிபிஎம் அடிமையான தமிழ்ச்செல்வனுக்கு அவர்கள் யார் யாரென்று சொல்லாமலே விளங்கும். முன்னால் புலி என்பதாலேயே யாரையும் கொச்சைப்படுத்தி எழுதலாம் என்பது எந்த மார்க்சிய தத்துவத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது? ஆதவனுக்கு கொலைமிரட்டல் விடுப்பது குறித்து மறக்காமல் பதிவு செய்யும் தமிழ்ச்செல்வன், ஆதவன் தொடர்ந்து புலிகள் மீதும் பிரபாகரன் மீதும் அவதூறு செய்வது தொடர்பாக‌ தனது கருத்து என்ன என்பதை ஏன் பதிவு செய்யவில்லை? 'அறிவுஜீவி'த் தோற்றத்தில் இருக்கும் ஆதவன் அவதூறுகளாலும், பகடிகளாலும் ஒரு போராட்டத்தை, தலைவர்களை கொச்சைப்படுத்துவது சரி என்றால், அதற்கு எதிர்வினையாக பாமர மக்கள் உணர்ச்சிவசப்பட்டு கொலை மிரட்டல் விடுப்பது சரிதானே! ஆதவன் செயலுக்கான எதிர்வினைதானே பாமரர்களின் தொலைபேசி மிரட்டல்.. பொருள்முதல்வாதம் சொல்வது இதைத்தானே...! பாமரர்களின் எதிர்வினையை ஒரு குற்றமாக பதிவு செய்யும் நீங்கள், ஆதவனின் தடித்தனத்தை எங்காவது கண்டித்திருக்கிறீர்களா? ஏதோ ஆதவன் உயிருக்கு ஆபத்து என்பது போல் சித்தரிக்காதீர்கள்... அந்தளவுக்கு சகிப்புத்தன்மையற்றவர்களாக தமிழர்கள் இருந்திருந்தால், இத்தனை காலம் கொழுப்பேறி எழுதிக் கொண்டு இதே தமிழ் மண்ணில் ஆதவன் வாழ்ந்திருக்க முடியாது..
aruna
Note that the journal E.P.W. which in its editorial asked the LTTE to surrender has not stated any word either about the killing of Tamils in thousands in the war in violation of international laws,for nearly 2 years.It uttered words only after the report of the committee of UNSG . If a full- fledged UN inquiry is conducted, the roll of one of such Marxist/Journalist,who is suspected to have played a role to conduct and complete the 'WAR WITHOUT WITNESS' which ended in genocide crime, will be exposed. Remember that the same Marxist/Journalist praised the camps in which the Eezham Tamils were placed after the war, but the UNSG's committee report says that the camps are inhuman one. Judge the standard of such Indian left people.
ravanan
@aruna, Not only EPW maintained silence about the killings of tamils, even it had been publishing articles written by lankan state bedfellows like akilan kadirkamar and rohini hensmen to portray the war was a just war against terrorism..... so much so those articles literally played as a mouthpiece of srilankan embassy. Also these so called left scholars played major role in misguiding north indian intellectual community particularly the CPM varieties left did the atmost intellectual violence on tamils.
அசோகன் முத்துசாமி
புது விசையில் வெளிவந்துள்ள கதைகளில் இருக்கும் பகடி தமிழ் மக்களைப் பற்றியதல்ல எனபது என் கருத்து. விடுதலைப்புலி ஆதரவாளர்களின் மீதான பகடி அது. ஆனால், பகடி செய்கிறார் என்று நீங்கள் கோபப்பட்டால் புரிந்து கொள்ளலாம். ஆளும் வர்க்க சேவை செய்கிறார் என்று சும்மா சொல்லிச் செல்கிறீர்களே ஒழிய அதை நீங்கள் நிரூபிக்கவில்லை. புலி ஆதரவாளர்களைக் கேலி செய்வது ஆளும் வர்க்க சேவையாக எப்படி ஆகும் என்றும் தெரியவில்லை. உண்மையில் புலி ஆதரவாளர்கள்தான் இந்திய ஆளும் வர்க்கத்திடம் சண்டை நடஎது கொண்டிருந்த போது தலையிடுமாறு மன்றாடிக் கொண்டிருந்தார்கள். (அப்போது மூன்று லட்சம் தமிழர்களை புலிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மனிதக் கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்). நீ போகவில்லை என்றால் சீனா போய் உட்கார்ந்துவிடும், பாகிஸ்தான் போய் உட்கார்ந்து விடும் என்றெல்லாம் இந்திய ஆளும் வர்க்கங்களின் நலன்களை மனதில் வைத்துப் பேசினார்கள். 2009 தேர்தலில் இங்கே தாமரை மலர்ந்தால் அங்கே ஈழம் மலரும் என்றெல்லாம் பாஜகவிற்கு ஆதரவு திரட்டியவர்கள் இருக்கிறார்கள். காஞ்சிக் கொலைகாரனைப் போய் பார்த்தார்கள். மேலும், சீமான் இந்துத்துவவாதிகளை ஆதரிக்கிறார். பால் தாக்கரேயை புகழ்கிறார். வைகோ ஏகாதிபத்திய அமெரிக்காவை பூஜிக்கிறார். உண்மையில் இவைதான் ஆளும் வர்க்க சேவைகள். இந்திய மக்களின் பிரச்சனைகளிலிருந்து . குறிப்பாக தமிழக மக்களின் பிரச்சனைகளிலிருந்து கவனத்தை திசை திருப்பவே தமிழகத்தில் உள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்களின் செய்லகள் பயன்பட்டன. வேலையின்மைக்கு எதிராகவோ, விலை உயர்வுக்கு எதிராகவோ,சாதிக் கொடுமைக்கு எதிராகவோ ஒரு போராட்டம் கிடையாது. ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக போராட வேண்டிய மக்களை அண்டை மாநிலத்து மக்களுக்கு எதிராகப் போராட வைப்பதில்தான் அவர்களது கவனம் இருந்தது. அதனால்தான் இலங்கையில் முதலீடு செய்திருக்கும் முதலாளிகளுக்கு எதிராக ஏன் போராடவில்லை என்று ஆதவன் கேட்கும் கேள்வியில் அல்லது அவரது கதையில் வரும் கதாபாத்திரம் கேட்கும் கேள்வியில் நியாயம் இருக்கிறது. கம்யூனிஸ்டுகள் தங்களது வர்க்கப் போராட்டங்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுதான் விடுதலைப்புலி ஆதரவாளர்களுக்கு எரிசலாக இருக்கிறது. .
அன்பன்
//மீ.த.பாண்டியன் அவர்களின் கட்டுரையில் கடந்த 30 ஆண்டுகளில் காணக்கிடைக்காத ஒரு நிதானமான தொனியும் கதைகளை வாசித்து விட்டு எழுதியிருப்பதும் கேள்விகளை எழுப்பியிருப்பதும் அவருடைய கோபமும் நியாயமானதென்று கருதுகிறேன்.விடுதலைப்புலிகள் இயக்கத்தவரான -போரில் ஒரு காலை இழந்தவருமான-யோ.கர்ணன் இப்போதும் இலங்கையில் வாழ்கிறார்-அவர் கதையை புதுவிசையில் பிரசுரித்ததற்காக கடந்த ஒருவார காலமாக நம் நண்பர்கள் அவரைத் தொலைபேசியில் அழைத்து கொலை மிரட்டல் விடுப்பதும் அவர் கிடைக்காதபோது அவருடைய துணைவியாரை இரவு நேரங்களில் அழைத்து உன் கணவனைக் கொல்லாமல் விடமாட்டோம் என்று மிரட்டுவதும் நடந்து கொண்டிருக்கிறது.இந்தச்சூழலில் மீ.த.பாண்டியன் கட்டுரையின் தொனி மிகுந்த ஆரோக்கியமான ஒன்று.//

ஆஹா தமுஎசாவில் இருக்கும் நிதானமான நீங்கள் ஏன் இந்த நிதானத்தை ஆதவனிடம் சொல்ல மாட்டீர்களா? தவிறவும் யோ.கர்ணனுக்கு கால் இல்லை என்பது அவருக்கான சலுகையா? அவருக்கு கால் இல்லை என்பதால் பிரபாரனை திட்டும் உரிமை உண்டா?
vasan
தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராகவும் ,ஈழ மக்களின் துயரத்தை பாரமலும் தொடர்ந்து பேசி வரும் ஆதவன் உள்ளிட்ட போலி கம்யூனிச ,பின்னவீத்துவ கும்பலின் முகத் திரை கிழிக்கபடாமல் அனுமதிக்கபடுவதைதான் இக் கட்டுரையும் செய்திருக்கிறது.விவாதத்தை இக் கும்பலின் பின்னவீனத்துவ மூளைக்கு எதிராக கூர்மையாக்குங்கள்
Mano
தமிழகதில் தமிழர்கள் இன பற்று கொள்ள கூடாது என்று இங்குள்ள பூனுளிச்ட்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால் அண்டை மாநிலங்களில் நடை பெற்று வருவம் விடயங்கள் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக கேரளாவில் முன்னால் முதலமைச்சர் அச்சுதானந்தன் நடந்து கொண்ட விதம் அனைவரும் அறிந்ததே. மலையாள இன வெறியுடன் ஆட்சி செய்ததை அனைவரும் பார்த்து கொண்டு தான் இருந்தோம். அது மட்டும் இல்லாமல் முல்லை பெரியாறு அணை இடிந்து மக்கள் பலியாவது போன்ற வீடியோ வையும் பூனுளிச்ட்கள் விநியோகித்தனர். இவ்வாறு இல்லாததும் பொல்லாததும் அவதூறு பரப்புவதிலும் பூனுளிச்ட்களுக்கு நேரம் செலவிடுவதிலேயே சரியாக இருக்கும் பொழுது வர்க்கம் போராட்டம் நடத்தி கொண்டு இருக்கிறோம் என்று சொல்வதுதான் நகைபுகுரியது. வங்காளத்தை எடுத்து கொண்டால், அங்குள்ள பூனுளிச்ட்கள் மேலைநாட்டின் மேட்டு குடியினர் அறிமுகம் செய்த மட்டை பந்தில் கங்குலியை சேர்க்கவில்லை என்று தெருவில் இறங்கி போராடினர். இவர்களின் வர்க்க போராட்டம் மெய் சிலிர்க்க வைக்கிறது. இல்லாத இந்திய தேசியத்தை பேசும் பூனுளிச்ட்கள் கடல் சார் பல்கலைகழகத்தில் நடந்து கொண்ட விதம் அவர்களின் வங்காள இன வெறியை வெளிபடுத்தியது. ஆனால் தமிழகத்திலோ நியாயமான கோரிக்கைகளுக்கு நாம் குரல் கொடுத்தால் நம்மை இன வெறியர்கள் என்றும், பிரிவினைவாதிகள் என்றும் பூனுளிச்ட்கள் முத்திரை குத்துகின்றனர். உச்ச நீதி மன்ற தீர்ப்பை அமுல் படுத்தாமல் காலில் போட்டு மிதித்த அச்சுதானந்தன் ஒரு பொதுவுடைமைவாதி. ஆனால் உச்ச நீதி மன்ற தீர்ப்பை அமுல் படுத்த கோரி போராடும் தமிழர்கள் இன வெறியர்கள். பாரதீய சனதாவும் CPM உம ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. ராமர் பால விடயத்தில் பாரதீய சனதா அது மக்களின் நம்பிக்கை சார்ந்த விடயம் என்று கூறியது. அதே போல் சபரி மலை மகா ஜோதியும் மக்களின் நம்பிக்கை சார்ந்த விடயம் என்று அச்சுதானந்தன் திருவாய் மலர்ந்தார். இந்தியாவிலே சிறந்த முதலமைச்சர் புத்ததேவ் பட்டச்சார்யா என்று டாட்டா பாராட்டினார். பாட்டாளிகளுக்கு பகையாளிகலகாவும் முதலாளிகளுக்கு பங்காளியாகவும் மாறிய பூனுளிச்ட்கள் இன்று தமிழகத்தில் வர்க்க போராட்டம் நடத்து கிறோம் என்கின்றனர். மராட்டியத்தில் அமைய போகும் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பூனுளிச்ட்கள் நம்மூர் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் எதிர்ப்பு தெரிவிக்காமல் வரவேற்றனர். சாக போவது தமிழர்கள் தானே என்ற நிலைபாடோ என்னவோ தெரிய வில்லை. ஏனென்றால் ஒன்றரை லட்சம் ஈழ தமிழர்கள் மடிந்து கொண்டிருந்த பொழுது அதை தடுத்து நிறுத்த தமிழகத்தில் எழுந்த எழுச்சியை மிக சுலபமாக தமிழக பிரச்சனைகளில் இருந்து திசை திருப்ப நடக்கும் முயற்சி என்று ஈவிரக்கம் இல்லாமல் கொச்சை படுத்துகின்றனர்.
தமிழ்நாட்டுக்கு கொஞ்சம் கூட தொடர்பு இல்லாத லிபியாவில் நாடோ படை தாக்குதல் தொடுத்த பொழுது அமெரிக்க கொடியை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பூனுளிச்ட்கள் நம் தொப்புள் கொடி உறவுகள் கொத்து கொத்தாக செத்த பொழுது நாம் அவர்களுக்காக குரல் கொடுத்தால் அது தமிழக பிரச்சனைகளில் இருந்து திசை திருப்ப நடக்கும் முயற்சியாம். இது தான் பார்பனியத்தின் உச்ச கட்டம். பாரளுமன்ற விவகாரத்தை மக்களிடம் அம்பல படுத்ததான் போகிறோம் என்று மக்களின் காதில் பூ சுத்திய பூனுளிச்ட்கள் கடைசியில் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் என்று விருதுகளை வாங்கி வந்தனர். தமிழ்நாடு எங்கள் தாய் நாடு. இந்தியா என்பது பக்கத்துக்கு நாடு. பல்வேறு தேசிய இனங்களின் சிறை கூடமே இந்தியா. சில பார்பன, பணியா முதலாளிகளுக்கு சந்தையை விரிவு படுத்தவும் தேசிய இனங்களின் வளங்களை கொள்ளை அடிபதற்கும் இந்தியா தேவை படுகிறது. இந்தியா முழுவதும் வர்க்க விடுதலை என்ற கருத்தியல் என்பது சாத்தியம், இல்லாத ஒன்று. தேசிய இனங்களின் விடுதலையே ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை கூர்மைபடுத்தும். வளர்ந்து வரும் தமிழ் தேசியத்தால் எரிச்சல் அடைந்த வருவது போலி கம்யூனிஸ்ட் களே. "ஒரு கம்யூனிஸ்ட் என்பவன் வர்கதிர்க்காகதான் விசுவாசமாக இருக்க வேண்டுமே தவிர நாட்டிற்காக அல்ல".- மார்க்ஸ்.
திருப்பரங்குன்றம் செந்தில்
மூன்று விழுக்காடு உள்ள பார்பனிய பணியா முதலாளிகள் சுரண்டலுக்காக இந்தியா என்கிற கட்டமைப்பு தேவை படுகிறது. அந்த கட்டமைப்பை பாதுகாப்பதற்கும் அமெரிக்க போன்ற வல்லரசுகளுக்கு அடிபணிந்து பல்வேறு தேசிய இன மக்களின் இயற்கை வளங்களை மேல் நிலை வல்லரசுகளுக்கு கொடுத்து விட்டு அதற்கு பிரதி பலனாக சிறு பயன்களை இங்குள்ள பார்பன பணியா கும்பல்கள் அனுபவிக்கிறது. இந்த பார்பனிய நலன்களை வரலாறு முழுவதும் பல தத்துவங்கள் எதிர்த்து வந்தது. பௌத்தம், சமணம், சாந்தியசம், மீமாம்சம்,மைசெரியம் மற்றும் சார்வாகம் போன்ற வேத மறுப்பு தத்துவங்களை பார்ப்பனீயம் ஊடுருவி அழித்தது. இந்த பார்பனிய தத்துவங்களுக்கு சரியான எதிரியாக இருக்கின்ற மார்க்சியத்திற்குள் பார்ப்பனீயம் செரித்து தின்றது. RSS ஆரம்பிக்கப்பட்டது 5 பார்பனர்களால்.அப்போது கம்யூனிஸ்ட் ஆரம்பித்தது 4 பார்பனர்களும் ஒரு இஸ்லாமியரும்.. பார்ப்பனீயம் இந்துத்துவம் பேசுகிறது. போலி கம்யூனிஸ்ட் கள் இந்தியாவை பேசுகின்றனர்.
பெரியாரிடம் போலி கம்யூனிஸ்ட்கலை பற்றி கேட்டதற்கு "கம்யுனிசம் வந்து விட கூடாது என்பதற்காகக் தான் அவர்கள் இருக்கிறார்கள்" என்று கூறி இருப்பார். தீண்டாமையை எதிர்த்து வெகுண்டெழுந்த பெரியாரின் மீது சகட்டு மேனிக்கு கேலி செய்தனர். பிரமான துவேசி என்றும் தவறான தத்துவங்களுக்கு சொந்த காரர் என்று கொச்சை படுத்திய போலி கம்யூனிஸ்ட் கள் இன்று சாத்தியம் பிடிக்காமல் போனது ஆச்சர்யமே. பெரியார் சொன்னது "காங்கிரஸ் காரனுக்கு பணம் இருக்க கூடாது. கம்யூனிஸ்ட் காரனுக்கு தொந்தி இருக்க கூடாது. இப்போது இந்த இரண்டுமே இருவரிடமே இருக்கிறது. சோமநாத் சாடர்ஜி யின் தந்தைக்கு RSS விருது வழங்கி சிறப்பித்தது. வங்காளத்தில் கடந்த ஆட்சி பதவி ஏற்பின் பொது சிறப்பு அழைப்பாளராக பரம ஏழை யான முஹேஷ் அம்பானி அலைகபடிருந்தார். "சந்தாவுக்கு சங்கம் ,பந்தாவுக்கு சிகப்பு துணி,செய்வதெல்லாம் தரகு பணி".
டாடாவுக்கு நிலம் கொண்டு பொதுவுடமைக்கு விடை கொடு என்பதே கடந்த ஆட்சியின் தாரக மந்திரமாக இருந்தது.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=10605:2010-08-24-01-36-20&catid=1:articles&Itemid=264
களப்பிரன்
"ஏதோ ஆதவன் உயிருக்கு ஆபத்து என்பது போல் சித்தரிக்காதீர்கள்... அந்தளவுக்கு சகிப்புத்தன்மையற்றவர்களாக தமிழர்கள் இருந்திருந்தால், இத்தனை காலம் கொழுப்பேறி எழுதிக் கொண்டு இதே தமிழ் மண்ணில் ஆதவன் வாழ்ந்திருக்க முடியாது.." - இந்தியர்கள் எல்லாம் எப்படி இந்துக்கள் இல்லையோ அதே போல எல்லா தமிழர்களும் பிரபாகரன் ஆதரவாளர்கள் இல்லை. பிரபாகரன் ஆதரவாளர்கள் பிரச்சனையை மொத்த தமிழர் பிரச்சனையாக மாற்றாதீர்கள்.இது சூது இல்லையா?
Rajaguru K B
@ களப்பிரன்:
//இந்தியர்கள் எல்லாம் எப்படி இந்துக்கள் இல்லையோ அதே போல எல்லா தமிழர்களும் பிரபாகரன் ஆதரவாளர்கள் இல்லை. பிரபாகரன் ஆதரவாளர்கள் பிரச்சனையை மொத்த தமிழர் பிரச்சனையாக மாற்றாதீர்கள்.இது சூது இல்லையா?//

இதை வேறுவிதமாகவும் பதிவு செய்யலாம்,
அடிமை இந்தியாவில் வாழ்ந்த எல்லோரும் விடுதலை போராளிகளோ, ஆதரவாளர்களோ இல்லை
அதே போல் எல்லா தமிழர்களும் பிரபாகரன் ஆதரவாளர்கள் இல்லை. பிரபாகரன் ஆதரவாளர்கள் பிரச்சனையை மொத்த தமிழர் பிரச்சனையாக மாற்றாதீர்கள், இதில் களப்பிரன் போன்ற அடிமை விரும்பிகளும் உண்டு!!
மதுரை தளபதி
புதுவிசை என்ற பத்திரிக்கையில் துவரகா என்ற தலைப்பில் தமிழீழத் தேசியத்தலைவரை கொச்சைப்படுத்தி எழுதியிருக்கும் சி.பி.எம் உறுப்பினரான, அ.மாக்சின் கூட்டாளியான கருங்காலி ஆதவன் தீட்சண்யாவுக்கு தமிழன் என்கிற வகையில் என்னுடைய தனிப்பட்ட கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

1000 ஆண்டுகளுக்குப்பிறகு தமிழ் இனத்தில் தோன்றிய தன்னலமற்ற மாவீரனை கொச்சைப்படுத்த தமிழ்நாட்டிலிருந்து அவ்வப்போது சில எச்சை கூட்டங்கள் முயன்றுகொண்டே இருக்கின்றன. இவர்களுக்கு நாம் பதில் சொல்லி நம்மை ஏன் நாமே சிறுமை படுத்திக்கொள்ளவேண்டும் எனக்கூட எனக்கு தோன்றிற்று, இருந்தாலும் இந்த குள்ளநரிக்கூட்டத்தின் பின்னாலூம் சில அப்பாவித்தமிழர்கள் திரிந்துகொண்டிருக்கிறார்களே அவர்கள் தெளிவுபெறவேண்டும் என்ற நோக்கத்திலே எழுதியுள்ளேன்.

இலட்சியத்தில் சமசரம் செய்துக்கொள்ளதா, நேர்மை நிறைந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக களத்திலே நின்று போராடிக்கொண்டிருக்கும் அந்த ஒப்பாறும், மெப்பாறுமற்ற தலைவனை பற்றி விமர்சனம் செய்ய சனநாயகத்தை மதிக்கும் லெனினையும், சே, கப்ராலையும், மாவோ, சைமன்பொலிவார், காரல் மாக்சையும் மனதிலே இருத்திக்கொண்டவர்களுக்கு முழு தகுதி உண்டு. அப்படி ஒரு தலைவன் வாழ்ந்த காலத்திலே நாங்கள் வாழ்ந்தோம் என மார்த்தட்டிக் கொள்ளும் தமிழர்களுக்கு உன்னுடைய எழுத்துக்கள் எள்ளிநகையாடத்தான் படும்.

உலகத்தமிழர்கள் போற்றும் தன்னிகரற்ற தலைவனை கொச்சைப் படுத்தும் உங்களை போன்ற எச்சை கூட்டங்கள் தமிழ் இனத்தில் மட்டும் அல்ல, உலகத்தில் உள்ள அனைத்து இனங்களிலும் உள்ளனர். உங்களை போன்ற துரோகிகள் இருப்பதால் தான் நாங்களும் அடிக்கடி எங்களை மீள் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்கின்றோம். என்ன செய்ய புலி இனத்தில்தானே கழுதைப்புலியும் இருக்கிறது. இனியாவது விமர்சனம் செய்ய சப்பை காரணங்களை சொல்லமல், விமர்சனம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரிந்து விமர்சனம் செய்தால் நல்லது.

இதற்கு ஆதவனின் பதில் பின் வருமாறு

"துவாரகாவின் தந்தை பெயர் பிரபாகரன் என்ற கதையை எழுதியவர் ஈழத்தைச் சேர்ந்த யோ.கர்ணன் என்பவர். போர்க்காலத்து அட்டூழியங்கள் அனைத்தையும் இன்றைக்கு எழுத்துவடிவில் அம்பலப்படுத்தி வருகிறவர்களில் முக்கியமானவர். முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் போது ஒரு காலை இழந்து உயிர் தப்பியவர். அவரது தேவதைகளின் தீட்டுத்துணி என்ற சிறுகதைத் தொகுப்பு கடந்த ஆண்டில் மிகச்சிறந்ததென மதிக்கப்பட்டது. அமில்கர் கப்ரால் தொடங்கி சைமன் பொலிவார் வரை தெரிந்துவைத்திருக்கும் உங்களுக்கு யோ.கர்ணன் பற்றி தெரியாமலிருக்காது. என்மீது வசை பாட இப்படி ஒரு வதந்தியை கிளப்பிவிட்டு வயிறு வளர்க்க கிளம்பியிருக்கிறீர்.

'துவாரகாவின் தந்தை பெயர் பிரபாகரன்' என்ற கதை பிரபாகரன் என்று பெயர்வைத்துக்கொண்டதாலேயே ஒருவர் படுகிற அவலத்தை பகடியாக வெளிப்படுத்தும் கதை. இதைக்கூட விளங்கிக்கொள்ளாத நீங்கள் " லெனினையும், சே, கப்ராலையும், மாவோ, சைமன்பொலிவார், காரல் மாக்சையும்" எந்த லட்சணத்தில் விளங்கிக்கொண்டிருப்பீர்கள் என்று நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. நீங்கள் அரைவேக்காடாய் இருப்பது உங்கள் உரிமை. ஒரு செய்தியை உண்மையா என்று கூட அறிந்து கொள்ளாமல் அபிப்பிராயம் சொல்லக்கிளம்பும் இந்த அரைவேக்காட்டுத்தனத்தை மின்னஞ்சல் அனுப்பி மற்றவர்களையும் ஆக்க முயற்சிப்பது அடி முட்டாள்தனம்.

முதலில் கதையைப் படியுங்கள். உண்மையில் அந்தக்கதை உள்நோக்கத்துடன் எழுதப்பட்டிருப்பதாக கருதுவீர்களேயானால் அதை எழுதி அனுப்புங்கள். வாசகர் கடிதமாக வெளியிடுகிறோம்.

- ஆதவன் தீட்சண்யா"

இதைக்கூட விளங்கிக்கொள்ளாத நீங்கள் " லெனினையும், சே, கப்ராலையும், மாவோ, சைமன்பொலிவார், காரல் மாக்சையும்" எந்த லட்சணத்தில் விளங்கிக்கொண்டிருப்பீர்கள் என்று நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. நீங்கள் அரைவேக்காடாய் இருப்பது உங்கள் உரிமை.

புலி எதிர்ப்புக் கோஷமிட்டால் எல்லாரும் அறிவாளி. அதை தட்டிக் கேட்டால் அரை வேக்காடா. நல்லா இருக்கு உங்க CPM நியாயம்.

ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட பின்னரும் ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு காண வேண்டும் என்று சொல்பவர்கள் தானே நீ சார்ந்த மார்க்சிஸ்ட் கட்சி வெங்காயங்கள்.
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை வேண்டும் என்று சட்டமன்றத் தீர்மானம் கொண்டு வந்த போது அதை எதிர்த்த ஒரே கட்சி உன் கட்சிதானே.
மதுரை தளபதி
மரியாதைக்குரிய ஆதவன் தீட்சண்யா,

எப்படியும் உள்ளே மரியாதை என்பது ஒரு மசிருக்கும் (நன்றி: கர்ணன்) வரப்போவதில்லை என்பதால், கடிதத்தை தொடரும் போதாவது மரியாதை கொடுத்துத் தொலைப்போமே.

வழக்கமாக வெற்று கும்மியடிக்கும் புதுவிசை போன்ற இலக்கிய மொக்கைகளையோ, மலம் கழிப்பதைக் கூட புரட்சிகரமாக (!?) கட்டுடைக்கும் உங்களைப் போன்ற பி.நவீனத்துவ வாதிகளையோ நாங்கள் பொருட்படுத்துவதும் இல்லை, கவலைப்படுவதும் இல்லை.

ஆனாலும் உங்களைப் போன்ற அறிவு சீவிகள் மலம் கழிப்பதை தமுஎகசவிலோ அல்லது உங்களை 'வராது வந்த மாமணி' என்ற உச்சி முகர்ந்து கொண்டாடுகிறதே மார்க்சிஸ்ட் கட்சியுடனோ நிறுத்திக் கொண்டிருந்தால் உங்களுக்கும் கடிதம் எழுதும் துர்ப்பாக்கிய நிலைமை எனக்கு வந்திருக்காது.

ஆனால் அப்படியில்லாமல் யார் மீது வேண்டுமானாலும் மலம் கழிக்கலாம், எவர் மீது வேண்டுமானாலும் எச்சில் துப்பலாம். இது கருத்து சுதந்திரம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்களானால்.... மன்னிக்கவும். உங்கள் பாணியிலேயே பதில் சொல்வதானால் 'அறிவாளித் தனத்தையெல்லாம் உங்கள் அன்டர்வேரோடு நிறுத்திக் கொள்ளுங்கள் ஆதவன். அதுதான் உங்களுக்கும் நல்லது. உங்கள் அன்டர்வேருக்கும் நல்லது.

புதுவிசையில் யோ. கர்ணன் பெயரில் வந்திருந்த கதையையும் ('துவாராகாவின் தந்தை பிரபாகரன்), உங்கள் பெயரிலேயே வெளியிட்ட மாரிச்சாமி; கதையையும் நண்பர்கள் வலியுறுத்திப் படிக்கச் சொன்னதால் படித்தேன்.

நேரடியாகவே கேட்கிறேன். எவ்வளவு காசு வாங்கிக் கொண்டு இதை எழுதினீர்கள். வெறும் காசுக்குப் படுக்கும் விபசாரிகளைக் கூட கருணையுடன் பார்ப்பவர்கள் நாங்கள். ஆனால் காசுக்கு எழுதும் உங்களைல்லாம் கண்டிப்பாக மன்னிக்கவே மாட்டோம்....
காசு வாங்கவில்லை என்கிறீர்களா? உங்கள் சொந்த அரிப்பைத் தீர்த்துக் கொள்ளத்தான் எழுதினீர்களா. அப்படியென்றால் உங்களிடம் பேசித் தீர்க்க வேண்டியது நிறைய இருக்கிறது. (பேச்சு சரிவராது என்கிறார்கள் அருகிலிருக்கும் தோழர்கள் ... பொறுமை... பொறுமை....)

ஈழ விடுதலைப் போராட்டம் என்றால் இங்கே காந்தி நடத்தியதாக நீங்கள் சிறுவனாய் இருந்தபோது வரலாற்றுப் புத்தகங்களில் படித்திருப்பீர்களே, அது போன்றதொரு போராட்டம் என்று நினைத்திருக்கிறார்களா என்ன? அது ஒரு ரத்தம் தோய்ந்த வரலாறு. அந்த வரலாற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் ஓராயிரம் உயிர்கள் பலிகொள்ளப்பட்டிருக்கும். ஒவ்வொரு அசைவுக்குப் பின்னரும் ஒரு நூறு ஈகங்கள் நடந்திருக்கும்.

ஓசூரில் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு ஈழ விடுதலைப் போரை விமர்சிக்க உமக்கு என்னய்யா தகுதி? ஈழப் போராட்ட வரலாற்றில் நீங்கள் தலைகீழாக நின்றாலும் அழிக்க முடியாத பெயருக்குச் சொந்தக்காரன் பிரபாகரன். அவன்பெயரைக் கொச்சைப்படுத்தி எழுத உமக்கு என்ன உரிமை.

ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட பின்னரும் ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு காண வேண்டும் என்று சொல்பவர்கள் தானே நீ சார்ந்த மார்க்சிஸ்ட் கட்சி வெங்காயங்கள்.
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை வேண்டும் என்று சட்டமன்றத் தீர்மானம் கொண்டு வந்த போது அதை எதிர்த்த ஒரே கட்சி உன் கட்சிதானே. ஒரே ஒரு எச்சரிக்கை.
உன் இலக்கிய மொக்கைகளை வேறு எங்காவது வைத்துக்கொள்.


பின் வரும் பகுதிகள் கர்ணனுக்கு...

சிங்களப் பேரினவாதத்தை பயம் கொள்ள வைத்த பிரபாகரனை, அவருக்கு துணையாய் இருந்த கடாபி உள்ளிட்ட தளபதிகளை அவர்களுடைய களப்போராட்டங்கள் பற்றி கேள்வியாவது பட்டிருக்கிறாயா? பொரிகடலைக்காரன் என்றும், முறுக்கு சுடுபவர்கள் என்றும் கோபப்படுத்தியிருக்கிறாயே, அவர்களை குறைந்த பட்சம் பார்த்தாவது இருக்கிறாயா?

தமிழில் எழுதத் தெரியும் என்பதற்காக எதையாவது எழுதிவிடுவதா? போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்ற ஜே.ஆரின் கூற்றுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வரலாறு அறிவாயா நீ. அந்த வரலாற்றில் எத்தனை நாடுகள், எத்தனை உயிர்கள் உருண்டன? தெரியுமா உனக்கு?

பிரபாகரனைப் பற்றி என்ன தெரியும் உனக்கு? நாய்கள் என்று அழைத்த தமிழர்களை புலிகள் என்று வீறு கொண்டெழச் செய்தவன் பிரபாகரன். என்னேரமும் போதையில் உருள்பவர்களுக்கு எதிரில் இருப்பார் கூட போதையில் இருப்பதாகவே தெரியும். அந்த ரகம் நீ. புலிகள் இயக்கத்தில் முதல் கட்டுப்பாடே குடிக்கக் கூடாது என்பதுதான்.

தன் மகன் சார்லஸ் அந்தோனியை சமர்க்களத்தில் மற்ற போராளிகளோடு எதிரிகளை நேர்கொள்ள விட்டு போராடியவன் பிரபாகரன். நீ நக்கல் அடிக்கிறாயே அவர் மகள் துவாரகா, அவளும் ஒரு போராளிதான். மகனுக்கும் மகளுக்கும் கோடிகோடியாய் கொள்ளையடித்துச் சொத்துச் சேர்க்கும் தலைவனல்ல அவன். தான் பெற்ற மக்களையும், தன்னைப் பெற்றவர்களையும் ஒரு சாதாரண பொதுமக்கள் போலவே நடத்தியவன். அப்படி ஒரு தன்னிகரற்ற தலைவன் இன்னும் பத்துத் தலைமுறை தேடினாலும் கிடைப்பது அரிது. அப்படி ஒரு தலைவன் தமிழினத்திற்கு கிடைத்ததை கொண்டாடுவதற்கு தயாராய் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.
ஆனால் உன் போன்ற பதர்கள் அவரைக் கேவலப்படுத்துவதைச் சகித்துக் கொண்டிருப்போம் என்று கனவிலும் நினைக்க வேண்டாம். அப்படிப்பட்ட தலைவனா நாட்டை மசிர் என இழித்துப் பேசுவான். நையாண்டிக்கும் ஒரு எல்லை வேண்டாமா?

பிரபாகரனையும், அவன் தந்தையையும் அவன் குடும்பத்தையும் கொச்சைப்படுத்தி எழுதும் மன விகாரம் பிடித்த உன் போன்ற மன நோயாளிகளுக்கு கூட வெறுமனே கடிதம் எழுதிப் பயனில்லை. நேரடி மருத்துவம் தான் தேவை.

ஒரு பெரிய இனப்படுகொலையாய் நடந்த இந்தப் போர் நீ எழுதுவது போல் நகைச்சுவைக் களமல்ல. மரணங்களும் வன்முறைகளும், ஈகங்களும் துயர்களும் நிறைந்து உள்ள ஈழச் சுழல் உன் நையாண்டிக்கெல்லாம் அப்பாற்பட்டது. அந்த வலி அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும். உன்போல் காசுக்கு எதும் அவிசாரித்தனமானவர்களுக்கல்ல.

இதோடு நிறுத்திக் கொள். அதுதான் நல்லது.

இறுதியாக ஒரு வார்த்தை....
உன் பாணியிலேயே...
உன் கதையும்.. மசிரும்..
Guest
அன்பன் அவர்களுக்கு.. யோ.கர்ணனுக்குக் கால் இல்லாத காரணத்தால் சலுகை காட்டச்சொல்வதாக எழுதியிருக்கிறார்.நான் சொல்ல வருவது புரியாததுபோல ஏன் எழுதிச்செல்கிறார் என்று புரியவில்லை.புலிகள் இயக்கத்துக்குத் துரோகம் செய்துவிட்டுப் போன கருணாவைப்போன்றவர் அல்ல யோ.கர்ணன் .முள்ளிவாய்க்கால் போர் வரைக்கும் களத்தில் புலிகள் இயக்கப் போராளியாக நின்று போரில் காலை இழந்தவர்.பைக் ஆக்சிடண்ட்டில் அல்ல.அவர் தன் கனவுகள்,தன் வாழ்வு எல்லாம் சிதைந்த நிலையில் இன்றும் ஈழத்தில் வாழ்ந்து கொண்டு புலிகள்,புலிகளின் பாதை எல்லாவற்றையும் மீள் பார்வைக்கு உட்படுத்துகிறார்.அதைக் குற்றம் சொல்ல நம்மில் யாருக்கும் தகுதியும் இல்லை.உரிமையும் இல்லை.சவுண்டு கொடுத்ததைத்தவிர நாம் என்ன செய்தோம்.ஆகவே யோ.கர்ணன் போன்றவர்கள் சொல்வதை நாம் செவிமடுத்தே ஆக வேண்டும் என்கிறேன்.அவதூறு பேசி அவரைப்போன்ற ஈழத்தமிழர்களின் குரல்வளையை சௌகரியமாக இருக்கும் நாம் நெரிக்கக்கூடாது என்கிறேன்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலான காலத்தில் புலிகளின் பாதையை ஏற்காதவர்கள் உலகத்தில் உண்டு.ஈழத்திலேயே உண்டு .அதனால்தானே அத்தனை தமிழ்ப் போராளித் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.புலிகள் மீதும் விமர்சனங்கள் உண்டு.விமர்சனங்கள் எல்லாம் தமிழ் மக்களின் வாழ்வின் மீதான அக்கறையிலிருந்து வைக்கப்பட்டவை என்கிற யதார்த்தத்தை ஏற்க மறுக்கும் மனநிலைதான் அவதூறுகளிலும் சேறு வாரியிறைப்பதிலும் இறங்குகிறது.

சிபிஎம் மீது இன்னும் புதுசாக என்ன சேற்றைத்தான் வாரி இறைக்கப்போகிறார்கள் நண்பர்கள்.மம்தா வைக்காத குற்றச்சாட்டுகளையெல்லாம் இங்குள்ள நண்பர்கள் ’கண்டுபிடித்து’ விடுகிறார்கள்.அவதூறுகளில் எதை மிச்சம் வைத்திருக்கிறார்கள்.

ஆனாலும் இப்போதும் நாங்கள் ஈழத்தமிழர் நல்வாழ்வை முன்வைத்து - ஒரு சாதாரண மனித வாழ்வுக்கான உரிமை கூட இல்லாமல் உணவுப்பொட்டலங்களுக்கு சிங்கள ராணுவத்தின் லாரிகளுக்குப் பின்னால் கையேந்தி நிற்கும் அவலம் தொடர்கின்ற இன்றைய சூழலில்-பெற்ற மக்களைத்தேடி ராணுவ முகாம்களின் -சிறைக்கூடங்களின் வாசல்களில் காத்துக்கிடக்கும் தமிழ்ப்பெற்றோர்களின் பிறழ்ந்த மனநிலைகளை மனதிற்கொண்டு- இப்போதாவது சாத்தியமான அவசியமான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்கிறோம்.

நாங்கள் எப்போது ஈழத்தமிழர் பிரச்னையில் மௌனமாக இருந்ததே இல்லை.நீங்கள் எத்தனை ஆவேசமாகவும் நக்கலாகவும் அவதூறாகவும் ஓங்கிய குரலில் பேசிக்கொண்டே வந்த காலம் முழுவதும் நாங்கள் பேசிக்கொண்டும் நீங்கள் செய்த எல்லா வடிவங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் ,போராட்டங்கள் (அதைத்தவிர யார்தான் என்ன செய்து விட்டோம்) நடத்திக்கொண்டேதான் இருந்தோம்.தனி ஈழம் சாத்தியமில்லை, புலிகளின் அரசியலற்ற ராணுவப்பாதை சரியல்ல என்று சொன்னதால் நாங்கள் எழுப்பிய குரல்களை நீங்கள் மதிக்கவில்லை.பகடி செய்தீர்கள்.கள்ள மௌனம் சாதித்ததாக தொடர்ந்து
சொல்லி வந்தீர்கள்-பொய் என்று தெரிந்தும்.உங்கள் நற்சான்றிதழ் பெற எங்களால் ஒருபோதும் முடியவில்லை.

உண்மையில் ஈழத்துக்காகப் புலிகளுக்காகக் குரல் கொடுத்துப் பல முறை சிறை சென்ற அன்புத்தம்பி சீமான் ஒருபோதும் சிபிஎம் மீது இப்படியான அவதூறுகளை அள்ளி வீசியதில்லை.நெடுமாறனொ ,வைக்கோ வோ ஒரு கூட்டத்திலும் இப்படிக் கேவலமாக சிபிஎம்மைப் பேசியதில்லை.இந்த வலைத்தளப் புலிகள் மட்டுமே இந்தக் கரசேவையைச் செய்து வருகிறார்கள்.

கடந்த காலம் முழுவதிலும் ஈழப்பிரச்னை குறித்த மாற்றுக்கருத்துக்களை புதுவிசை யும் ஆதவனும் தொடர்ந்து முன்வைத்து வந்துள்ளார்கள்.ராஜபக்சேயின் கைக்கூலி என்று சொல்லி மாற்றுக்கருத்துக்களை வரவிடாமல் ‘கொதவளை’யிலேயே பூட்டி வைத்துவிட நடந்த முயற்சிகள் சரிதானா என்று இப்போது கூட மறு பரிசீலனை செய்ய மாட்டார்களா?

புஷ்பராஜாவும் முறிந்த பனையும் முன்வைத்த விமர்சனங்களைக் கண்டுகொள்ளாததுபோலவே இப்போது இத்தனை அழிவுக்கும் குருதிக்கும் பிறகு அங்கிருந்து அனைத்தையும் இழந்த மக்கள் பேசும் குரல்களையும் நிராகரிப்பதும் அவதூறு செய்வதும் யாருக்கு லாபம்?

இன்று அகதிகளாக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கு உடனடியான நிவாரணம் தேவை.வீடும் வாழ்வாதரங்களும் தேவை.ராணுவத்தால் புலி என்று சொல்லித் தூக்கிச் செல்லப்பட்ட இளைஞர்களும் யுவதிகளும் என்ன ஆனார்கள் என்று தெரிய வேண்டும்.போர்க்குற்றவாளிகள் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.தமிழருக்குச் சம உரிமையிலான அரசியல் தீர்வு வேண்டும்.முரண்பட்ட தீர்வுகளை நாம் ஒவ்வொருவரும் சொல்வதால் இலங்கைப் பிரச்னையில் ஒரு கூட்டு இயக்கம் சாத்தியமற்றதாகிக் கொண்டே போகிறது.இதுவே மிகுந்த கவலை அளிக்கும் இன்றைய யதார்த்தம்.

பொது வெளியில் சிபிஎம் அல்லது தமுஎகச மேடைகளில் புலிகள் மீதான விமர்ச்னத்தை நாங்கள் பேசுவதில்லை.அது இப்பபோது தேவையற்றது.ஆனால் கருத்துலகில் எல்லா உண்மைகளும் பேசப்படவேண்டும்.இப்போதும் வாழ்வுரிமை கேட்டு நிற்கும் மக்களை ஈழம் கேள் என்று இங்கிருந்து பேசுவதில் உள்ள நியாயம் பிடிபடவில்லை.

மாற்றுக்கருத்துக்களை பாமரர்கள் அப்படித்தான் எதிர் கொள்வார்கள் என்று சொல்லி பாமரர்களைக் கொச்சைப்படுத்தாதீர்கள். அவதூறு செய்பவர்கள் ஒருபோதும் பாமரர்கள் அல்ல.மிகச்சிறந்த அறிவாளிகள்தான் தனி ஈழம் பற்றிய மாற்றுக் கருத்து வந்து விட்டால் அதை பகுத்தறிவின் பரப்பில் வைத்துப் பார்க்காமல் பாய்ந்து பிடுங்கிவிடுகிறார்.பாமரர் அறிஞர் என்கிற பேதமில்லை.

புலிகளின் ஏகப் பிரதிநிதித்துவக் கோட்பாட்டை இன்னும் தூக்கிப் பிடிக்கத்தான் வேண்டுமா?வாழ்வே சிதைந்து போன ஈழத்தமிழ் மக்கள் மீது இரக்கமே இல்லையா?
S.Sundaram.
C.P.I. (M) is a Red B.J.P. In the name of Marx, they followed the path of MANU. Thamizh chelvan and Aathavan dhikshnya are fully known that the party was controlled by Bhramins and privetely accepted this fact.For the sake of petty benifits, they agreed to continueing in that party as slaves or otherwise 'SUDRAS'. We respect them much. Hope, they may getrid of that anti Thamizh party.
kandee
தமிழ்நாட்டு தமிழர்கள் மீதே அக்கறையில்லாதவர்கள் கடல் தாண்டி தவிக்கும் தமிழர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவர் என்று நம்புவதும் அதற்காய் நன்றிக்கூட்டங்கள் நடத்துவதும்....நான் சமச்சீர் கல்வி குறித்து மட்டுமே பேசுகிறேன்..
களப்பிரன்
Anonymous - கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கிறதா இணைய புலிகலே. அல்லது இன்னும் சி.பி.எம்.யை திட்டித்திட்டியே உங்கள் இன அரசியலை தொடரப்போகிறீர்களா? எம் சொந்தங்களான ஈழ மக்கள் பாவம். உங்களின் அதிதீவர அரசியலுக்கு அவர்கள் வாழ்வில் விளையாட வேண்டாமே. நீங்கள் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் தேவையில்லாமல் கொந்தளிப்பதை விட்டுவிட்டு ஈழ மக்கள் குரல்களுக்கு செவிகொடுங்கள். அவர்களுக்கான அரசியல் தீர்வை அவர்கள் முன் வைக்கட்டும். அதற்கு நாம் எல்லேரும் சேர்ந்து குரல் கொடுப்போம். உசுப்பேத்தி உசுப்பேத்தி அங்குள்ள இயக்கங்களை பலி கொடுத்தது போதும்.
iqbal
1) தமிழ் ஈழம் என்பதை ஏற்றுக்கொள்வதில் தமிழகத்தில் இரண்டு கருத்துக்கள் எப்போதும் இப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. விடுதலைப்புலிகளின் கருத்து ஜனநாயகம், அடுத்தவர்களின் கருத்து சுதந்திரத்தை அவர்கள் எவ்வாறு மதித்தார்கள் என்பதற்கு ஏகப்பட்ட உதாரணகளை சொல்ல முடியும். தமது கருத்துக்களை அல்லது ஈழம் என்பதை ஏற்காதவர்களை எல்லாம், அவர்கள் போராளிகளோ அல்லது அமிர்தலிங்கம் போன்றவர்களோ, எல்லாம் சுட்டு கொன்ற உயரிய ஜனநாயகத்தை கடைப்பிடித்த பண்பாளர்கள்தான் பிரபாகரனும் புலிகளும். ஒரு வேளை அவர்கள் விரும்பிய தனி ஈழம் கிட்டியிருந்தாலும் கூட இத்தகைய உயரிய ஜனநாயகத்தையும் மாண்பையும்தான் கடைப்பிடித்திருப்பார்களோ என்னவோ! இப்போது ஆதவனையும் யோ.கர்ணனையும் புலி ஆதரவாளர்கள் இணைய தளங்களில் எதிர்கொள்ளும் விதமும் புலிகளின் ஜனநாயக கருத்து சுதந்திரத்தை மதிக்கும் அதே விதத்தில்தான் உள்ளது என்பது கண்கூடு. கருத்தை எதிர்க்கருத்தால் எதிர்கொள்ள அங்கே அறிவு மட்டுமல்ல, விவேகமும் பொறுமையும் கூட அவசியம். இரண்டும் இல்லாதபோது மிரட்டலும் தொலைபேசி மிரட்டலும் இயல்பாகவே வந்துவிடும். ஆதவன் விசயத்தில் அதுதான் நடக்கின்றது.
2) தமிழ்நாட்டில் மிகவும் பத்திரமாக இருந்து கொண்டு புலிகளுக்கு ஆதரவாக ஆவேசக்குரல் கொடுப்பதும் இலங்கை அரசுக்கு எதிராக குரல் எழுப்புவதும் இங்கே தமிழ்நாட்டில் இருப்பவர்களை ஏமாற்றும் வேலை மட்டும் அல்ல, இவர்கள் கொண்டாடும் களத்தில் இறங்கி ஆயுதம் ஏந்தி போராடிய புலிகளையும் கூட ஏமாற்றும் வேலை என்பதை வெளிப்படையாக சொன்னால் கோபம் வருகின்றது, என்ன செய்ய? நேரடியாக ராஜபக்சேயை சந்தித்த ஒருவரை 'நல்ல வேளை நீங்கள் பிரபாகரனோடு இருந்திருந்தால் நீங்களும் இப்போது உயிருடன் இருந்திருக்க மாட்டீர்கள்' என்று ராஜபக்ஷே சொன்ன போது கேட்டுக் கொண்டிருந்துவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்தபின் வீதிகள்தோறும் 'அவன் என்னை அப்படி பேசிட்டான்' என்று ஆவேசமாக பேசித்திரிந்த ஒருவர்தான் தவிர்க்க இயலாமல் ஞாபகத்திற்கு வருகின்றார். அதற்குப்பின் அவர்க்கு கருணாநிதியுடன் சீட் பேரம் பேசவே நேரம் சரியாக இருந்தது. புலிகளுக்கும் ஈழத்துக்கும் ஆதரவாக ஆவேசமாக பேசித்திரியும் தமிழக அரசியல் கட்சி சிங்கங்கள் எத்தனை பேர் நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் ஈழம், இலங்கை குறித்த விசயங்களை மையமாக வைத்தார்கள் என்பதை கோபப்படும் நண்பர்கள் நியாயமாக பரிசீலனை செய்து அவர்கள் மீது தங்கள் கோபத்தையும் விமர்சனத்தையும் திருப்பினால் நல்லது. நாகரீகமான வழியில் விமர்சனங்களை, எதிர் விமர்சனங்களை செய்வோம்.
இக்பால்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.