ஆகஸ்ட் மாத காலச்சுவடு இதழில், நலமா தமிழினி’ என்னும் தலைப்பில் ப்ரேமா ரேவதி என்பவர் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை - புலிகள் பெண்கள் அரசியல் பிரிவின் தலைவரான தமிழினியின் மேல் பரிதாபத்தைக் கொட்டும் தொனியில் அமைந்திருந்தாலும், உண்மையில் அக்கட்டுரை விடுதலைப்புலிகளையும், ஈழ ஆதரவாளர்களையும் கொச்சைப்படுத்துகிறது. ஈழ ஆதரவாளர்களைப் புண்படுத்திய இக்கட்டுரைக்கு மறுப்பாக, தோழர் பூங்குழலி காலச்சுவடு இதழுக்கு ஒரு கட்டுரையை எழுதி அனுப்பினார். காலச்சுவடு பூங்குழலியின் கட்டுரையைப் பிரசுரிக்காத நிலையில், அந்தக் கட்டுரையை இங்கு வெளியிடப்படுகிறது.

'நலமா தமிழினி" கட்டுரைக்கு எதிர்வினை
--------------------------------------------------------------------------
பூங்குழலி           
58, மூன்றாவது முதன்மைச் சாலை
ஆழ்வார் திருநகர் விரிவாக்கம்
சென்னை 600 087.
26-08-2009

என் அன்பு என்றும் உள்ள ப்ரேமா ரேவதிக்கு..

தமிழினிக்குத் தாங்கள் எழுதிய கடிதத்தை 25-08-2009 அன்று படிக்க நேர்ந்தது.

1998-ஆம் ஆண்டு, இராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை என்று அறிவிக்கப்பட்ட போது கண்களில் நீர் துளிக்க நின்ற அந்த ரேவதியின் மனிதாபிமானம், இன்று வாழ்க்கையின் ஓட்டத்தில் பலவற்றை ருசித்து, கசந்ததன் காரணமாகவோ என்னவோ, வற்றிப் போய் நிற்பதைக் கண்டு உண்மையாகவே அதிர்ச்சியுற்றேன்.

அந்த நிலையில் நின்று, தமிழினி அன்பு உள்ளவரா இல்லையா என்ற உங்கள் கேள்வியில் உள்ள அறியாமை உங்கள் மீது பரிதாபத்தைத்தான் ஏற்படுத்தியது.

உங்களுக்குத் தெரியுமா ரேவதி? தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது உண்மையான அன்பு கொண்டவர்களால் மட்டுமே போராளியாக முடியும்.

தமிழினி மட்டுமல்ல.. தங்கள் இளமையை, வாழ்க்கையை, உயிரைத் தன் மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்த ஒவ்வொருவரும் போராளிகள்தாம். அவர்கள் ஏதோ ஒரே நாளில் அல்லது ஒரே நிகழ்வில் உணர்ச்சிவசப்பட்டுத் துப்பாக்கி ஏந்தியவர்கள் அல்ல. அப்படி ஏந்தியிருந்தால் நீ அடித்தாயா.. நானும் பதிலுக்கு அடிக்கிறேன் என்ற நொடி நேர எதிர்வினையோடு அந்த வேகம் முடிந்திருக்கும். அவர்கள் எந்த அளவு தங்கள் மக்கள் மீது கொண்ட அன்பால் மக்களின் விடுதலைக்காய் தங்களை அர்ப்பணித்தவர்கள் என்பதற்கு ஒரே ஒரு சான்று சொல்கிறேன்.

19 வயதில் முதுகுத் தண்டில் குண்டடி பட்டு இடுப்பிற்குக் கீழ் செயலிழந்து போனார் கவுதமி என்ற ஒரு பெண் போராளி. 1993-ஆம் ஆண்டு சிகிச்சைக்காக அவர் இந்தியா கொண்டு வரப் பட்டார். அவருக்குத் துணை புரிய நிக்சி என்று மற்றொரு பெண் போராளி. சிகிச்சைக்காக வந்த அவர்களைப் 'பயங்கரவாதிகள்" என கைது செய்தது இந்திய-தமிழக அரசு. ஓராண்டல்ல.. ஈராண்டல்ல.. 8 ஆண்டுகள் காவல்துறையின் பாதுகாப்பில் பல்வேறு மன உளைச்சல்களுக்கு ஆளாக்கப்பட்டு மருத்துவமனையிலேயே சிறை வைக்கப்பட்டார் கவுதமி. அவருக்கு உதவி புரிய என்று வந்த நிக்சியை கைது செய்து தனியே சிறையில் அடைத்தது அரசு. அதற்கென ஒரு வழக்குப் போட்டு வெளிக் கொணர்ந்து, அவரையும் உடல்நலம் குன்றிய கவுதமியுடனேயே தங்க அனுமதி பெறப்பட்டது.

இந்த 8 ஆண்டுகளில், ஒரு நாள் கூட அவர்களின் முகங்களில் நீங்கள் சோர்வைக் கண்டிருக்க முடியாது. இருவருமே எப்போதும் புன்னகையுடன் இருப்பது மட்டுமன்றி, உடல்நலக் குறைவுள்ளவர் போன்று கவுதமி ஒருநாளும் தோற்றமளித்ததும் இல்லை.

19 வயதிலேயே இடுப்புக்குக் கீழ் செயலிழந்த நிலையில், 8 ஆண்டுகள் காவல்துறையின் கெடுபிடிகள், மன உளைச்சல்களுக்கு நடுவே புன்னகை பூத்த முகத்துடன் இருந்த கவுதமியின் மன உறுதி பெரியதா? அல்லது எந்த செயலுக்கும் பிறரை எதிர்பார்த்திருக்கும் நிலையில் உள்ள ஒருவரை 8 ஆண்டுகளாக எந்த முகச் சுளிப்போ சலிப்போ இன்றி சுத்தமாகவும் நோய்வாய்ப்பட்டத் தன்மையே இன்றி தோற்றமளிக்கும் அளவிற்கு பராமரிக்கவும் செய்த நிக்சியின் மன உறுதி பெரியதா? இவர்களுக்கு இத்தகைய மன உறுதி அளித்தது எது? சிங்களர் மீதான கோபமா? அல்லது தங்கள் மக்கள் மீதான பாசமா? நிச்சயமாக கோபமும் வெறுப்பும் தரும் மன உறுதி இந்த அளவிற்கு நீடிக்காது என்று எந்த உளவியல் நிபுணரும் உறுதிப் படுத்துவார்கள்.

இதோடு நிற்கவில்லை ரேவதி. சமாதான காலத்தில் அரசின் அனுமதியோடு இவர்கள் ஈழத்திற்கு மீண்டும் அனுப்பப்பட்டார்கள். அங்கே கவுதமிக்குக் கணினித் தொழில்நுட்பம் கற்றுக் கொடுக்கப்பட்டு அத்துறைக்குப் பொறுப்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார். உடல்நலன் சற்று பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள ஒருவரை நம் சமூகம் என்னவாக நடத்துகிறது என்பதை நீங்கள் அறியாதவர் அல்ல. ஆனால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒருவரை ஒரு துறையில் நிபுணராக்கி, தன்னம்பிக்கையோடு வாழ வைத்திருக்கிறது அந்த 'பயங்கரவாத" இயக்கம். இதற்குப் பெயர் அன்பில்லாவிட்டால் வேறு எதற்கு நீங்கள் அன்பென்று பெயர் சூட்டுவீர்கள்?

சமாதான காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்திற்குச் சென்ற நண்பர் ஒருவர், செஞ்சோலை குழந்தைகள் இல்லத்தைக் கண்டு நெகிழ்ந்த நிலையில், அங்கிருந்த 8 மாத குழந்தை ஒன்றை தான் தத்தெடுக்க விரும்புவதாகக் கூறினார். அதற்கு, செஞ்சோலை இல்லப் பொறுப்பாளரான போராளி கூறிய பதில் என்ன தெரியுமா? 'உங்கள் குழந்தையை நீங்கள் தத்துக் கொடுப்பீர்களா?" என்று. இதற்கும் உங்கள் அகராதியில் அன்பு என்று பொருள் கிடையாதோ?

இன்று இவ்வளவு பெரிய இழப்பைப் போராளிகளால் தடுக்க இயலாமல் போனது உண்மைதான். உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் ஒரு பக்கம் கை கோர்த்து நிற்க, தங்கள் மக்களைக் காக்க இயலாமல் போராளிகள் தோற்றது உண்மைதான். ஆனால் அந்த ஒரு உண்மை கடந்த காலத்தின் பல உண்மைகளை மறைத்து விடாது. எத்தனையோ ஆண்டு காலமாகத் தங்கள் மக்கள் மீது கொண்ட நேசத்தால் அவர்கள் செய்த தியாகங்கள் பொய்யாகிவிடாது. அந்தத் தியாகத்தின் பலனாய் அந்த மக்களுக்கு ஒரு கௌரவமான வாழ்வை அவர்கள் அளித்தது பொய்யாகி விடாது. அந்த காலத்தில்தான் உங்களைப் போன்றவர்கள் அம்மண்ணிற்குள் சென்று வர முடிந்தது. இன்று அதையே சாக்கிட்டு வதை முகாமில் நிற்கும் அவர்களை நோக்கி கணினி வழியாக (நிச்சயம் அவர்கள் வந்து பதில் சொல்ல இயலாது என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு) கை நீட்டி கேள்வி கேட்க முடிகிறது.

போர் நிறுத்தத்திற்கு தயார் என புலிகள் பல முறை அறிவித்தும், போர் நிறுத்தத்தைத் தவிர வேறெதையும் கோராமல் தமிழ்நாடு உட்பட உலகின் பல பகுதிகளிலும் தமிழர்கள் போராட்டங்கள் நடத்திய போதும் சிங்கள அரசோ அதற்கு உறுதுணையாய் நின்ற இந்திய அரசோ, உலக நாடுகளோ இவை எதற்கும் செவிமடுக்க மறுத்தன என்பதையும், சிங்கள அரசே தொடர்ந்து போரை நடத்தியது என்பதையும் முற்றிலுமாக மறைத்து, புலிகள், குறிப்பாக புலிகளின் தலைமை ஏதோ தன் இச்சைக்கேற்ப கட்டாயமாக போரைத் தொடர்ந்து நடத்தியதாக குற்றம் சாட்டுவது, உலகறிந்த உண்மையை கோணி போட்டு மூட முயல்வதைப் போன்றதே.

உண்மைக்கு முன்னால் நடுநிலைமை என்பது இல்லை. ஆனால் போருக்கு முன் நடுநிலைமை என்பது உண்டு. பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பதே அது. உங்களைப் போன்றவர்களுக்கு மக்களின் பக்கம் நிற்பதைக் காட்டிலும் போராளிகளுக்கு எதிராக நிற்பதில்தானே ஆர்வம் அதிகமிருக்கிறது.

நினைவில் கொள்ளுங்கள். போராளிகள் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல. அம்மண்ணிலிருந்து, அம்மக்களிலிருந்து வந்தவர்கள். அம்மக்களுக்காகவே தங்களை அர்ப்பணித்தவர்கள். அம்மக்களைக் காக்க இயலாமல் போனதில் உங்களையும் எங்களையும் நம் அனைவரையும் விட வலியும் வேதனையும் அவர்களுக்கே அதிகம். பெற்ற குழந்தையைக் கண் முன் பறி கொடுத்துவிட்டு நிற்கும் தாயின் வேதனைக்கு நிகரானது அது. பெற்ற குழந்தையை காக்க முடியாமல் போன வேதனையில் மருகி நிற்பவர்களை, உங்கள் சொற்களால் ஏறி மிதிக்காதீர்கள். இந்த நிலையில் இருப்பவர்களை நோக்கி நலமா என்ற கேள்வியிலேயே கெக்கலியிட்டு சிரிக்கும் உங்களின் 'நிறைந்த அன்பு" புலப்படுகிறது. அதிலும் எப்படி? உங்கள் சொற்களிலேயே சொல்வதானால், கால் வெட்டி வீசப்பட்டு வதை முகாமில் சிறையுண்டு இருப்பவரை நோக்கி, 'என்னாச்சு பார்த்தியா..? நீ யாரையெல்லாம் நம்பினாயோ அவர்களின் யோக்கியதை இதுதான் கண்டியா?’ என்று கேட்கும் தொனி வக்கிரமாக இல்லை?

"பிரபாகரன் உயிர்த்தெழுவார்" என்ற அவரது 'பக்தர்களின்" நம்பிக்கை ஒரு பக்கம் இருக்கட்டும். அவர் இறந்து விட்டார் என்று தலையில் அடித்து சத்தியம் செய்யும் நீங்கள் எந்த அறிவியல் பூர்வமான ஆதாரத்தைக் கொண்டு சொல்கிறீர்கள்? ஏற்கெனவே மூன்று முறை அவரைக் கொன்று விட்டு, பின்னர் சிறிதும் வெட்கமின்றி, முன்னர் சொன்ன செய்திக்கு ஒரு வருத்தம் கூட தெரிவிக்காமல், அவரின் பேட்டியையும் வெளியிட்டு காசாக்கி, இப்போது மீண்டும் கொன்றிருக்கும் ஊடகங்களில் வெளிவந்த படங்களை வைத்தா? உயிருடன் இருக்கிறார் என்பதை கேலிக்குள்ளாக்கும் உங்களுக்கு, சிங்கள அரசு வெளியிட்ட படங்களை பகுத்தறிவின்பாற்பட்டு கேள்விக்குள்ளாக்கும் நேர்மை இல்லாது போனதேன்? நாளை பிரபாகரன் வெளிப்படையாக வரும் போதும் கூட, நிச்சயம் இப்போது செய்த ஆர்ப்பாட்டங்களுக்கு உங்களைப் போன்றவர்கள் யாரும் வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை. மாறாக.. இத்தனை நாள் அவர் எங்கிருந்தார்? ஏன் தலைமறைவானார்? என்று பல வகையான ஆரூடங்களுடன் அதை வைத்தும் இப்படியான எழுத்து வணிகத்தைத்தான் நடத்துவீர்கள்.

மீண்டும் மீண்டும் புலிகளுக்கு அரசியல் தெரியாது என்று சொல்வதன் மூலம் உங்களைப் போன்றவர்கள் எதை நிலைநிறுத்த விரும்புகிறீர்கள்? 'அரசியல் நீக்கிய ஆயுதப் போராட்டம்’ என்ற ஒன்று இருக்கவே முடியாது என்பதை அறியாதவரா நீங்கள்? அரசியல் நீக்கினால் அது வெறும் 'ரவுடியிசம்’ தானே ஒழிய ஆயுதப் போராட்டம் அல்ல. எந்தவொரு போராட்டமும் ஓர் அரசியலின் பாற்பட்டே எழுகிறது என்ற அடிப்படையைக் கூட அறியாதவரா நீங்கள்? அப்படியானால் நீங்கள் குறிப்பிடும் 'அரசியல்’ என்பது என்ன?

'புலிகளை ஒழித்துக் கட்டிவிட்ட’.. 'புலிகளுக்குப் பின்னான’ இந்த 100 நாட்களில் என்ன மாதிரியான அரசியல் முன் முயற்சிகளை சிங்கள அரசு எடுத்திருக்கிறது?

வெறுமனே ஒரு குழுவினரின் ஆயுதப் போராட்டம்தான் சிக்கல் எனில்.. அவர்களும் மக்களும் வேறு எனில்.. அந்த குழுவையும், அதன் தலைவரையும் அழித்து விட்டோம் என்று அறிவித்த பிறகு மக்களை அடைத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? உங்களுக்குப் புரியாதது.. அல்லது நீங்கள் புரியாதது போல் நடிப்பதைச் சிங்கள அரசு புரிந்து வைத்திருக்கிறது. அதனால்தான் குழந்தைகள் உட்பட, ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அது போராளிகளாகப் பார்க்கிறது. ஓர் அரசியலின் அடிப்படையில் கிளர்ந்தெழுந்த போராட்டமே அது என்பதை சிங்கள அரசு உணர்ந்திருக்கிறது. அதனால்தான் அவர்களின் போராட்ட உணர்வுகளை முற்றிலுமாக நசுக்கத் திட்டமிட்டுச் செயல்படுகிறது.

'புலிகளின் அரசியல் தோற்றிருக்கிறது. அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை’ என்று நீங்கள் குறிப்பிடும் அந்த சூழ்ச்சி அரசியல் அவர்களுக்குத் தெரியத்தான் இல்லை. இந்தியாவையும் சிங்களத்தையும் போன்ற ஒரு சூழ்ச்சி அரசியலை முன்னெடுக்காமல் ஒரு நேர்மையான போராட்டத்தையே அவர்கள் முன்னெடுத்ததன் விளைவுதான் இன்று நாம் காண்பது. ஆக, நீங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் நேர்மையற்ற சூழ்ச்சி அரசியலை புலிகள் செய்திருக்க வேண்டும் என்பதைத்தானா?

சிங்கள அரசு சொல்வது போல் போர் முடிந்துவிடவில்லை. ஒரு தலைப்பட்சமான போர் இன்னமும் நடந்து கொண்டுதானிருக்கிறது என்பதற்கு இலங்கை அரசின் 'நலன்புரி’ முகாம்களில் தினமும் செத்து விழுந்து கொண்டிருக்கும் மக்களே சாட்சி. சொந்த நாட்டில் ஒட்டுமொத்தமாக ஓர் இனமே சிறைபடுத்தப்பட்டிருப்பது வரலாறு கண்டறியா கொடுமை. 'இது ஓர் இனப்படுகொலை அல்ல. இரு தரப்பினருக்கிடையே நடந்த போர்’ என்று கூசாமல் சொல்பவர்கள், இந்த முகாம்களில் ஏன் ஒரு சிங்களர் கூட இல்லை என்பதற்கு பதில் சொல்ல முற்படுவதில்லை. இரு இனங்கள் வாழும் ஒரு நாட்டில், ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களை ஒட்டுமொத்தமாக முகாம் என்ற பெயரில் சிறையிலடைத்துவிட்டு மற்றொரு இனம் அதிகாரத்தில் இருந்து கொண்டு நிருவாகத்தை நடத்துகிறது எனில் அதற்குப் பெயரென்ன? அப்படியான நிருவாகத்தில் இந்த மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருந்துவிட முடியும்? 'புலிகளால்தான் இந்த நிலை’ என்று கூக்குரல் இடுபவர்கள், புலிகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நடந்த இனக் கலவரங்களுக்கும் அதில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கும் யாரை பொறுப்பாக்குவார்கள்? எதற்கு எதிர்வினை எது என்ற வரலாற்றையே மாற்றிச் சொல்கிற உரிமையை இவர்களுக்கு யார் தந்தது?

புலிகள் தங்கள் மக்களை பாதுகாக்க தங்கள் மண்ணைக் காக்கும் போரை மட்டுமே நடத்தினார்களே ஒழிய, மிகுந்த பலம் பொருந்திய காலக்கட்டத்தில் கூட எல்லை மீறிச் சென்று சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடத்தவோ சிங்களர் வாழும் மண்ணை ஆக்கிரமிக்கவோ முற்பட்டதே கிடையாது என்பதே வரலாற்று உண்மை. அப்படி தமிழ் மக்களை காத்து வந்த புலிகளும் இல்லாத நிலையில் சிங்கள அதிகாரத்தின் கீழ் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு யார் உறுதி அளிப்பது?

இன்று (26-8-2009) வெளியான ஒளிப்படங்களில் கடந்த ஜனவரி மாதத்தில் தமிழ் இளைஞர்களை நிருவாணப்படுத்திச் சுட்டுக் கொல்லும் காட்சிகளைக் கண்டது போல் இன்னும் 6 மாதங்களுக்குப் பிறகு இன்றைய கொடூரங்கள் வெளிவரக்கூடும். அனைத்தையும் இழந்து அதிகாரத்தின் பிடியில் சிக்கியிருக்கும் இம்மக்கள் மீது ஏவப்படும் உளவியல், உடல் மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளை 'ஒரு தலைப்பட்சமான போர்’ என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? நடந்து கொண்டிருக்கும் இந்த ஒரு தலைப்பட்சமான போரை குறித்த கேள்விகளை விட்டுவிட்டு, நடந்து முடிந்தவற்றிற்கு போராளிகளை பொறுப்பாக்குவதில் நீங்கள் தீவிரம் காட்டுவதேன்?

உலகுக்கெல்லாம் மனித நேயம் பேசிக் கொண்டு, காசுக்காவோ கலை தாகத்திற்காகவோ என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்டுகளுடன் சேர்ந்து படம் பண்ணும் உங்கள் அளவிற்கு அன்புள்ளவர்களாக அவர்கள் இல்லாமல் போகலாம். உலகிலேயே சுபிட்சமான இடம் மாணிக் பார்ம்தான் என்று கூசாமல் எழுதும் 'இந்து’ இதழைப் போன்ற நேர்த்தியானவர்கள் இவ்வுலகில் இல்லை என்று கருதும் நடுநிலைமை எனக்கில்லாமல் போகலாம். அல்லது நடுநிலைமையாளராகவும் மிகுந்த அக்கறை கொண்டவராகவும் காட்டிக் கொள்வதற்காக இந்தியாவையும் தமிழகத்தின் அரசியல் கட்சிகளையும் சாடும் நாடகத்தை ஒரு புறம் நடத்திக் கொண்டே, நுட்பமான சொற்களால் நஞ்சை நுழைக்கும் திறன் எனக்கு இல்லாமல் போகலாம்.

('இந்திய அமைதிப்படையின் கொடுமைகளால் போராளியானதாகச் சொன்னீர்கள் தமிழினி, நான் உங்களைச் சந்தித்த அதே கிளிநொச்சி நகரைப் புதுப்பிக்க இப்போது இந்தியா உதவி செய்யவிருக்கிற தகவல் உங்களுக்குத் தெரியுமா?’ - இந்த வரிகளில் உங்களின் இந்த இரட்டை நிலைப்பாடு தன்னையும் அறியாது வெளிப்பட்டுள்ளதே.)

ஆனாலும், உங்களிடம் கேட்பதற்கு எனக்கு ஒன்று உள்ளது. உரிமைகள் அனைத்தையும் இழந்த நிலையிலும், சுயமரியாதையான ஒரு வாழ்விற்காக நித்தமும் போராடிக் கொண்டிருக்கும் அந்த எளிய மக்களிடம் உங்கள் திறனைக் காட்டி நோகடிக்காதீர்கள். அவர்கள் விடுதலைக்கு ஏதேனும் செய்ய இயலுமாயின் செய்யுங்கள். இயலாதெனில் இடையூறாவது செய்யாதிருங்கள். நியாயமான உரிமைகளுக்கான அவர்களின் போராட்டம் அவை கிடைக்கும் வரை ஓயப் போவதில்லை. அடக்குமுறைகளாலேயே ஒரு விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட முடியாது என்கிற போது அவதூறுகள் என்ன செய்து விடும்?

தோழமையுடன்
பூங்குழலி

Comments

33 comments

33
Tamil
கட்டுரை மிக நன்றாக உள்ளது. எப்படித்தான் இப்படி ‘புலியர்கள்’ உண்மையை வளைக்கிறீர்களோ. மிகவும் திறமையான செயல் தான். இந்திய அரசு தடை செய்யப்பட்ட வெளிநாட்டு இயக்கத்தின் செயல்பாட்டாளரைத் தான் கைதுசெய்து வைத்திருந்ததது. பயங்கரவாதி காயம்பட்டதால் புனிதராகி விடுவாரா? ஆனால் புலிகள் தங்கள் ஆட்சிக்காலத்தில் தங்கள் மக்களுக்குச் செய்ததென்ன? பிணை நிறுத்திவிட்டுத்தான் மக்கள் ஊரைவிட்டுச் செல்லவேண்டும் என்பது சுதந்திரத்தின் எந்த வகை? நீங்கள் இங்குள்ள ‘புலியிஸ்டு’களின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் ஆதாரம் காட்டி அங்கே பாலும் தேனும் ஓடியது என்று எழுதலாம். ஏனெனில் நீங்களே கூறியபடி இலங்கை முகாம்களில் உள்ளவர்களின் கரங்களுக்கு எட்டாத தூரத்தில் தானே இருக்கிறீர்கள். எதுவும் எழுதலாம்.

சாதாரண போராளிகள் மீது எந்த வெறுப்பும் யாருக்கும் கிடையாது. ஆனால் அவர்களை மூளைச்சலவை செய்து அவர்களை பயன்படுத்தி தங்கள் நோக்கங்களுக்காக மக்களை நரகத்தின் வாசலுக்குக் கொண்டு சென்றவர்களை எங்ஙனம் துதிப்பது?

நீங்கள் குறிப்பிட்டுள்ள செஞ்சோலை சம்பவம் நடந்த நிகழ்ச்சி என்று நம்ப உங்களுக்கு சகல உரிமையும் உள்ளது. ஆனால் பலருக்கும் ஞாபகம் வருவது புலிகளிடமிருந்து புலிகளின் துப்பாக்கி குண்டுகளையும் மீறி உயிர்தப்பி சென்றவர்களோடு கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று ராணுவ முகாம் முன்பு மனிதவெடிகுண்டாக வெடித்து ஒட்டுமொத்த தமிழ் அப்பாவிகளையும் ஏற்கனவே வெறிகொண்டு துவம்சம் செய்யும் ராணுவ எந்திரத்தின் கண்களுக்கு பயங்கரவாதிகளாகக் காட்டி தமிழ் மக்களுக்குப் புலிகள் செய்த சேவைதான்.

இந்த உலகத்தின் எந்த ஒரு பிரச்சனைக்கும் ஓரணியில் திரளாத உலகம் இலங்கைப் பிரச்சனையில் மட்டும் உங்கள் கூற்றுப்படி ஓரணியில் திரள புலிகள்தான் முக்கிய காரணம் என்பதை ஏன் யோசிக்க மறுக்கிறீர்கள் என்பது புரியவில்லை. அந்த அளவிற்கு தங்கள் ‘தியாகங்கள்’ மூலம் சர்வதேச சமூகத்தை வெறுப்பேற்றியிருக்கிறார்கள் என்று கொள்ளலாமா? அல்லது உலகம் வெறுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தன் உதவிக்கு வந்து தங்களை ‘ஏர்லிப்ட்’ செய்து காப்பாற்றும் என்று நம்பியிருந்த அரசியலறிவைச் சொல்லவா?

கடைசிப் போரைத் தொடங்கியவர்களே புலிகள் எனும்போது (அணை நீரைத்தடுத்த நடவடிக்கை மூலமாக) போர்நிறுத்தம் பற்றி யாருக்குக் கவலை, அதுவும் எப்போது போர் நிறுத்தத்திற்கு தயாரானார்கள் என்பதை மீண்டுமொருமுறை மனசாட்சியோடு எண்ணிப்பாருங்கள். புலிகள் போர்நிறுத்தத்திற்கு தயார் என்று கூறிய போரின் கட்டத்தில், வெறிபிடித்த இலங்கை ராணுவத்தை விடுங்கள், வெற்றியின் விளிம்பிலிருக்கும் எந்த யுத்த எந்திரமாவது போரை நிறுத்த முன்வருமா?

நடுநிலை என்றால் அது புலிகள், ராணுவம் இரண்டினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்பதல்லவா? மாறாக அங்கு தமிழன் அனுபவிக்கும் எந்த ஒரு துன்பத்தின் நூறிலொரு பங்கு கூட இந்தியாவிலோ அல்லது எந்த வெளிநாட்டிலுமோ இருக்கும் நாம் அனுபவிக்க வேண்டியிருக்காது என்ற உண்மை தரும் துணிச்சலில் புலிகளின் அராஜகங்களைக் கண்ணை மூடிக்கொண்டு நியாயப்படுத்துவதா நடுநிலை?

‘நிறைந்த அன்பு’க்கு பதில் என்பது ஏற்கனவே குறிப்பிட்ட மனித வெடிகுண்டு சம்பவத்தில் அடங்கிவிடுகிறது.

விடுதலைப்புலி தலைமைக்கு அரசியல் தெரியும் என்பது நீங்கள் குறிப்பிட்ட ரவுடிக்குத் தெரிந்த அரசியல்தான். தன் இருப்பைக் காத்துக்கொள்ள ரவுடிக்கும் ஒரு அரசியல் உண்டுதானே.

‘நலன்புரி நிலையங்களின்’ செயல்பாட்டை எப்படி எற்றுக்கொள்ள முடியாதோ அதே அளவிற்கு இந்த முகாம்களில் ஒளிந்திருந்து சாதாரண மக்களின் வாழ்க்கையை சிரமத்திற்குள்ளாக்கும் ‘புலி’களின் செயலையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்புலிகள் தான் இலங்கை அரசின் தொடரும் சிறை வைப்பை நியாயம் என்று எண்ணவைப்பவர்கள். அவர்கள் ஒன்று சரணடையாமல் போராட்டத்தைத் தொடர்ந்திருக்கவேண்டும் அல்லது தங்கள் கலாச்சாரப்படி சயனைட் கடித்திருக்க வேண்டும் அல்லது அரசின்முன் தாங்களாக தங்களை வெளிப்படுத்தி விளைவை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். அல்லாமல் சாதாரன மக்களோடு கலந்து அவர்கள் துன்பத்தை பெருக்கக் கூடாது.

சானல் 4 விடியோ பொய் என்றும் அது செல்போனில் படமாக்கப்பட்டதல்ல வீடியோ காமிராவினால் எடுக்கப்பட்டது என்றும் வரும் தகவல்கள் பற்றி தங்கள் கருத்து என்ன? புலிகள் இதற்கு முன்னரும் தங்கள் வலிமை வாய்ந்த பிரச்சார சாதனங்கள் மூலமாக உண்மையற்ற படங்களை, செய்திகளை வெளியிட்டது சர்வதேச சமூகம் அவர்களை நம்பாமல்போனதற்கான காரணங்களில் ஒன்று என்பது பற்றிய தங்கள் கருத்து என்ன?

அப்பாவி இலங்கைத் தமிழர் மீது கொஞ்சமாவது அக்கறை இருந்தால் தங்கள் கட்டுரையின் கடைசிப் பத்தியை நீங்கள் புலிகளுக்குத்தான் சொல்லியிருக்க வேண்டும். புலிகள் எஞ்சியிருந்தால் அவர்களுக்கும், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நீங்கள் நம்புவதால் அவருக்கும் சொல்லுங்கள்.
Dr. V. Pandian
பூங்குழலியின் சிறந்த எதிர்வினைக்கு பாராட்டுகள். காலச்சுவடு இக்கடிதத்தைப் பிரசுரிக்காததன் உள்நோக்கத்தின் வக்கிரத்தை, இங்கு "தமிழ்" என்ற புனைபெயரில் மடலாற்றியுள்ள "பிசாசின்" பச்சையான வக்கிரத்தால் அளவிட்டுக் கொள்ளலாம்.

செஞ்சோலைச் சிறார்களின் படுகொலை உண்மையல்லவாம்! சேனல் 4 காட்டிய கொடு பாதகமான படுகொலைக் காட்சி உண்மையில்லையாம்! ஆனால், போரின் போதோ அல்லது இன்று வரையுமோ, உலக ஊடகங்களை அனுமதிக்காத ராஜபக்சவை இந்தப் பிசாசு நம்புமாம். அடச்சீ.... பேடிபோல நீ ஒளிந்து கொண்டு மடலாற்ற எமது உன்னத மொழியின் பெயர் தான் கிடைத்ததா? அப்பப்பா எவ்வளவு வக்கிரம்!

இந்திய தேசியப் பிசாசுகளுக்கு, ஈழச் சிக்கல் அனைத்துக்கும் பிரபாகரன் தான் காரணமாம். அவர் கைக் குழந்தையாயிருந்த 56 களில் நடந்த இனப்படுகொலை, 71, 72, 74 களில் நடந்த படுகொலைகள். யாழ் நூலகத்திற்கு 1981ல் வைக்கப்பட்ட தீ.... சொல்லுங்களேன், உங்களின் "வெற்று" வாய்க்குக் கிடைத்த அவலா, உலகின் உன்னதமான அந்தத் தமிழ்ப்போராளிகள்!

60களில், பிரபாகரன் சிறு பிள்ளையாய் இருந்த காலத்தில் தான், 5 தலைமுறைகளாக இலங்கையில், அம்மன்னை வளமாக்கி வாழ்ந்த, உழைக்கும் வர்க்க இந்திய வம்சாவளித் தமிழரில் பாதிப்பேரை, இந்தியா ஏன் திரும்பிப் பெற்றது? அது கொடுமையல்லவா? அந்தக் கொடுமையைச் செய்த இந்த அயோக்கிய பார்ப்பன, பனியா தேசத்தின் ஒற்றைக் கோட்பாடு, ஈழம் அமையக்கூடாது என்பது தான்.

இய்தியா என்ற இந்த அயோக்கிய தேசத்தின் சதிகளால் தான், அம்மக்களுக்கு ஏற்பட்ட அத்துனை இடையூறுகளும். அதற்கெல்லாம் இந்த பாரப்பன தேசம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

இந்தியா தனது நாட்டு மக்களை காஷ்மீரிலே கொலை செய்கிறது, அஸ்ஸாமிலே கொலை செய்கிறது, மணிப்பூரிலே கொலை செய்கிறது, நாகாலாந்திலே கொலை செய்கிறது. ஈழக்கொலைகளுக்கும் பின்புலமாக அன்றிலிருந்து இன்றுவரை உள்ள தேசமும், இந்த பார்ப்பன இந்தியா தான். இது ஒரு கொலைகார தேசம்!

இந்தப் பிசாசுகள் பதற்றப்படுவதன் பொருள் புரிகிறது. இவர்களின் பிரபஞ்சப் பொய்களையும் மீறி, தமிழ் மக்களிடையே, தமிழத்தேசியச் சிந்தனை ஆழ வேரூன்றி வளரத் தொடங்கியுள்ளது. அவர்களின் பதற்றம் மேலும் கூடும். அவர்களது பிதற்றல்களும் கூடும். எல்லாம் நன்மைக்கே!

ஈழத் தமிழனின் சாபம் பலிக்கும்!!!
Tamil
எதிர்வினைக்கு நன்றி பாண்டியனார் அவர்களே. தாங்கள் முனைவரா அல்லது மருத்துவரா என்பது தெரியவில்லை. எதுவாயினும் விஞ்ஞானத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லையோ என்று தோன்றுகிறது. சரியாகப் படிக்காமல் அல்லது புரியாமல் எதிர்வினையாற்றுவதால் இதைக் கூற வேண்டியிருக்கிறது. செஞ்சோலை பற்றி பூங்குழலி கட்டுரையில் கூறியிருப்பது அங்குள்ள சிறுவர் இல்லத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தை. அது புலிகளின் அன்பு, பாசம் குறித்த எடுத்துக்காட்டாகக் கூறப்பட்டது. அப்படி ஒரு சம்பவம் நடந்தும் இருக்கலாம் இல்லாமலும் இருக்க வாய்ப்புள்ளது. நடந்திருந்தாலும் அது அக்குறிப்பிட்ட மனிதநேயமிக்க ஒரு ஊழியரின் செயலாகவும் இருக்கலாம். ஆனால் மனிதவெடிகுண்டு சம்பவம் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி. யாராலும் மறுக்கப்படாதது. ஆனால் செஞ்சோலை குழந்தைகள் இல்ல சம்பவத்தை நான் குறிப்பிட தாங்கள் அதை செஞ்சோலை படுகொலை எனத் திரிப்பதைத் தான் கண்டிக்க வேண்டியுள்ளது. இது ஒரு கைப்பிழை அல்ல என்பது என் கருத்து. புலிகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் திட்டமிட்டு செய்கின்ற திசைதிருப்புதல் தான் இதுபோன்ற நிகழ்வுகள்.

ஈழப் பிரச்சனைகள் அனைத்திற்கும் பிரபாகரன் மட்டுமே காரணம் என நான் எங்கும் சொல்லவில்லை. ஆனால் அங்குள்ள தமிழர்களின் நிலை இவ்வளவு சீரழிய பிரபாகரன் மற்றும் புலிகள் ஒரு முக்கிய காரணம் என்பது எனது கருத்து. தனது ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி பிரபாகரன் செய்த பல பிழைகள் தமிழர்களை இன்றைய, நிலைக்கு இட்டுச்சென்ற காரணிகளில் பிரதானமானவை. வம்சாவளித் தமிழர் பிரச்சனையில் பிரபாகரன் பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ்ப்பாணீயம் என்ன நிலை எடுத்தது? தற்போது அதை நினைத்து அழ?

இந்திய தேசியம் பற்றிய உங்கள் அவதூறு குறித்து. தேசியம் குறித்து அர்த்தமற்ற வெற்றுச் சவடால்கள் விடும் நீங்கள் உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் தேசியத்தை மறுத்துத் தான் வாழ்கிறீர்களா? இந்திய பெருந்தேசியம் என்று நீங்கள் கூறும் கருத்தியலின் எந்த பலனையும் நீங்கள் அடைந்தது இல்லையா? தேசியத்தை வாய்ச்சொல்லில் மறுத்துக்கொண்டே அது தரும் சகல பலன்களையும் அனுபவிப்பதில் வெட்கமாக இல்லையா? தங்களை இந்திய தேசியக் குடியுரிமையை மறுத்து புலிகளின் இராச்சியத்தில் குடியுரிமை வாங்கிகொள்ளக்கூடாதா என கேட்குமளவிற்கு நான் நாகரீகமற்றுப் போய்விடவில்லை. காஷ்மீரிலும் அஸ்ஸாமிலும் இன்னமும் நீங்கள் குறிப்பிட்ட குறிப்பிடாமல் விட்டுப்போன இடங்களிலும் நடக்கும் அரச வன்முறைக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள், வலைத்தளங்களில் போலி ஒப்பாரி வைப்பதைத் தவிர? இந்திய தேசியம் ஒழிந்துவிட்டால் இப்பிரச்சனைகள் முற்றிலுமாக ஒழிந்துவிடும் என்பது பிரச்சனையின் அடிப்படை குறித்து சரியான புரிதல் இல்லாத வாதம் இல்லையா?

நான் பேடிபோல் ஒளிந்திருக்கிறேனா என்பது ஒருபக்கமிருக்கட்டும், தாங்கள் என்ன இயந்திரத் துப்பாக்கி ஏந்தி வன்னிக் காட்டிலா யுத்தம் செய்துகொண்டிருக்கிறீர்கள்? அங்கு யுத்தம் செய்யவேண்டிய நிலை உங்களுக்கு வராது என்ற தைரியம் தானே அங்குள்ள சாதாரண அப்பாவி மக்கள் படும் துன்பம் பற்றிய எந்த அக்கறையுமின்றி தேசியம் பற்றியும் புலியிசம் பற்றியும் வாய்ச்சவடால் விட நம்மை ஊக்குவிக்கிறது! நான் தமிழ் பின்னால் ஒளிந்துகொண்டிருக்க தமிழ் ஒன்றும் நீங்கள் பேடன்ட் உரிமை வாங்கிய உங்கள் சொத்தல்லவே. நான் பிசாசாக இருக்கிறேன் அல்லது கடவுளாக இருந்துவிட்டுப் போகிறேன். இரண்டும் எனக்கு ஒன்றுதான். இரண்டையுமே நான் நம்பவில்லை. இரண்டு கருத்தாக்கங்களும் மக்களை அடைமைப் படுத்துவதற்காக கட்டியெழுப்பப்பட்டவைதான் என்பதில் உறுதியாக நம்புகிறேன். அதுபோல் சாபம் தீங்கு செய்யும் என்றோ வரம் நன்மை செய்யும் என்றோ நான் நம்பவில்லை. ஆகையால் அவை பற்றிய கவலையில்லாமல் செயல்பட முடிகிறது. சாதாரண மக்களின் நன்மைக்கு உடன்பாடானவை என்று நான் நம்புகிறவற்றை உறுதியாகக் கூறமுடிகிறது, எழுத முடிகிறது. எனது கருத்துக்கள் சரியா தவறா என்பதை காலம் சொல்லும். தவறாக இருந்தால் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் திருத்திக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.

நான் யாரிடமும் கை நீட்டி காசு வாங்கிவிட்டு அவர்களுக்கு வக்கலாத்து வாங்கவேண்டிய நிலையில் இல்லை. நீங்களும் அப்படித்தான் என்று நினைக்கவே தோன்றுகிறது. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள பழகுங்கள், உண்மை அப்போதுதான் வெளிவரும். அந்த அறம் சார்ந்த வலு மனதில் இருந்தால் நீங்கள் உண்மை என்று நம்புவதை எழுதுங்கள். விவாதிப்போம். மற்றபடி சாபம் அவதூறுக்கெல்லாம் நான் பயப்படுவதில்லை.
தமிழவன்
ப்ரேமா ரேவதியின் கட்டுரைக்கு சிறந்த எதிவினையாற்றியிருக்கிறார் பூங்குழலி. ஆனால் இவரின் கட்டுரையை காலச்சுவடு பிரசுரிக்காதது அதன் ஊடக அறத்தை கேள்விகுள்ளாக்குகிறது. காரணம் - கருணாநிதிக்கும்-காலச்சுவடுக்கும் கொஞ்சநாள் முன்பு கனிமொழியின் நாடாளுமன்ற உரையின் பொருள் குறித்து தனது தலையங்கத்தையும், அதன்பால் விவாதங்களையும் எழுப்பி கேள்விக்குட்படுத்தியபோது காலச்சுவடுக்கு அரசுசார் நிருவனங்களில் தடைவிதித்து விட்டார்கள் என்று கூக்குரலிட்டு பேனா போர்வாள்களிடமெல்லாம் கையெழுத்து இயக்கம் நடத்தியது. அதன் நினைவுகளிலிருந்து கலைந்து போனதேன்.

காரணம் அங்கே (காலச்சுவடுக்கும்-கருணாநிதிக்குமான) யுத்தத்தில் எல்லா கடிதங்களும், எதிர்வினைகளும், மறுப்பு அறிவிக்கைகளும் பதியப்பட்டன அதே ஊடக அறம் ப்ரேமா ரேவதியின் கட்டுரைக்கான பூங்குழலியின் எதிர்வினையை பதிய மறுத்ததேன் ? அல்லது மறைத்ததேன் ?
Dr. V. Pandian
தமிழ் என்ற எமது உன்னதமான மொழியின் பெயரில் ஒளிந்து கொண்டு மடலாற்றுபவரே!

"நான் தமிழ் பின்னால் ஒளிந்து கொண்டிருக்க தமிழ் ஒன்றும் நீங்கள் பேட்டன்ட் உரிமை வாங்கிய சொத்தல்லவே!" என்ற உமது வெற்றுக் கூச்சலே உம்மைக் காட்டிக் கொடுக்கிறது. நான் எனது இயற்பெயரில் எழுதுகிறேன். வௌிப்படையாக! ஆனால் நீரோ, ஏதோ தமிழ் உமது பேட்டன்ட் சொத்து போல, தமிழ் என்ற புனைபெயரில் ஒளிந்து கொண்டு எழுதுகிறீர். வேறு புனை பெயரே கிடைக்க வில்லையோ? உண்மைத் தமிழனாக இல்லாமல், தமிழனாக வேடம் போடுபவன் இத்தகைய விமுறையைக் கையாண்டு ஏமாற்ற வழியுண்டு. வாசகர்களே! எத்தர்களிடம் எச்சரிக்கை!
//
இந்திய தேசியம் பற்றிய உங்கள் அவதூறு குறித்து. தேசியம் குறித்து அர்த்தமற்ற வெற்றுச் சவடால்கள் விடும் நீங்கள் உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் தேசியத்தை மறுத்துத் தான் வாழ்கிறீர்களா? இந்திய பெருந்தேசியம் என்று நீங்கள் கூறும் கருத்தியலின் எந்த பலனையும் நீங்கள் அடைந்தது இல்லையா? தேசியத்தை வாய்ச்சொல்லில் மறுத்துக்கொண்டே அது தரும் சகல பலன்களையும் அனுபவிப்பதில் வெட்கமாக இல்லையா?
//

அடச்சீ... இப்படிக் கேட்க உமக்கு வெட்கமாக இல்லை! நான் வாழ்வது "எனது தமிழ் நாட்டில்". எனது தமிழ்த்தேசம் இந்தியச் சிறையிலே அடைபட்டுக் கிடப்பதால், தமிழர்களாகிய நாங்கள் இழந்தது தான் மிச்சம். தமிழனது இந்த நிலையால் தான் எமது தமிழ் மக்கள் "எமது" ராமேசுவரம் கடல் பகுதியில், தினமும் சிங்கள நாய்களிடம் கடி பட்டுக் கொண்டுள்ளனர். கழிசடையே! இந்தியனாக நான் இழந்தது தான் மிச்சம். இந்தியாவில் தமிழர்களின் மக்கள் தொகை 8%. ஆனால், இந்தியாவின் பொருளாதாரத்தில் தமிழ் நாட்டின் பங்கு 14%. 1947ல் எங்களுக்கு விடுதலை கிடைத்திருந்தால், இன்று எமது "தமிழ் நாடு" ஜப்பானை விட மிளர்ந்திருக்கும். இது அப்பட்டமான உண்மை. இந்தியா எமது செல்வங்களை விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டு, எம்மை வஞ்சிக்கிறது.

இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்காது என்று நன்றாகத் தெரிந்திருந்தும், அங்கு தனி ஈழம் அமையவிடாமல், சொல்லொண்ணா அட்டூழியங்களைச் செய்து கொண்டுள்ளது, இந்த "காந்தி" தேசம்! வெங்காயம்! தமிழ் நாடு தனி நாடாக இருந்திருந்தால் எம்மின ஈழ மக்களுக்கு இந்நிலை வந்திருக்காது. அவர்களது மானமும், உயிரும் காப்பாற்றப் பட்டிருக்கும்.

//
தங்களை இந்திய தேசியக் குடியுரிமையை மறுத்து புலிகளின் இராச்சியத்தில் குடியுரிமை வாங்கிகொள்ளக்கூடாதா என கேட்குமளவிற்கு நான் நாகரீகமற்றுப் போய்விடவில்லை
//

அடச்சீ... கழிசடையே! இந்த உமது வாக்கியத்திற்கு என்ன பொருள்? "சொல்லுக சொல்லிற் பயனுடைய" என்று எமது ஐயன் திருவள்ளுவன் சொன்னான். நீ உண்மைத் தமிழனாக இருந்தால் இப்படிப் பிதற்றமாட்டாய்! எம்மன்னை விட்டு என்னை வௌியேறச் சொல்ல நீ யார்? எதிரியே, நீ எமது மன்னை விட்டு வௌியேறு என்று நான் உறுதியாகக் கூறுவேன். ஏனென்றால் நீ, இந்த மன்னின் மைந்தனாக இருக்க முடியாது. இதை நீ மறுக்க நினைத்தால் ஆதாரத்தோடு மறு! வெற்று வாய்ச்சவடால் கூடாது.

//
நான் யாரிடமும் கை நீட்டி காசு வாங்கிவிட்டு அவர்களுக்கு வக்கலாத்து வாங்கவேண்டிய நிலையில் இல்லை
//

சரியாகச் சொன்னாய்! புலிகளை எதிர்ப்பவர்கள் எல்லோருமே காசு வாங்கிச் செயல்படுபவர்கள் அல்ல என்பது எமக்குத் தெரியும். காசைவிட பெரும் பலன்கள், இந்திய தேசிய ஒருமைப்பாட்டால், சில கும்பல்களுக்கு விளைந்து கொண்டுள்ளது. ஒரு பார்ப்பனப் புறம்போக்கு, கீரல் விழுந்த இந்திய தேசிய ரெக்கார்டை கீற்று தளத்தில் பாடவிட்டுக் கொண்டிருந்தது. அந்தப் பரமாத்மாவின் மறு அவதாரம் தானோ நீர்? ஒரு வேளை "பட்டா இல்லாத" இடத்திலிருந்து காட்டமாகப் போராட இயலாதென்று, "தமிழ்ப் பட்டா" வாங்கிப் போராட வந்தீரோ?

ஒன்று உறுதியாகச் சொல்கிறேன்! ஆட்பலமும், பணபலமும், அரச பலமுமுள்ள எதிரியிடமிருந்து விடுதலை பெற, தவிற்க முடியாத ஒரு ஆயுதம் தான் தற்கொடைத் தாக்குதல். மாவோ சொன்னார், நாம் எடுக்கும் ஆயுதத்தை எதிரி தான் தீர்மானிக்கிறான் என்று. புலிகளைப் பழி சொல்லிப் பயனில்லை. புலிகள் இந்த வலுவான ஆயுதத்தை வளர்த்தெடுத்து, விசுவ ரூபம் எடுத்ததால், இந்தப் போர் முறையின் "Yield" தெரிந்து பதறிப்போன உலக ஏகாதிபத்தியங்கள் எல்லாம் ஒன்று கூடி, புலிகளை அழித்தன. அமெரிக்காவின் டிரில்லியன் டாலர் Star War புரோகிராமைவிட, மிக வலிமை வாய்ந்த ஆயுதம் தான் புலிகள் நேர்த்தியாக வடிவமைத்த தற்கொடை ஆயுதம். இப்போது புரிகிறதா, ஏன் உலக ஏகாதிபத்தியங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து புலிகளை அழித்தன என்று? புரிகிறதா?

நான் வாய்ச்சொல் வீரணல்ல! இணையப் புலியல்ல! விளைவுகளுக்கு தயாரான மன நிலையோடு, வௌிப்படையாக செயல்படும் "கர்ம வீர".
மகி தம்பி பிரபாவின் தம்பி
நல்ல பதிவு தோழி ,தொடருங்கள் நாம் கிழித்தெறிய வேண்டிய போலி முற்போக்கு முகமூடிகள் அதிகம் இருக்கு ....
ஜெரி ஈசானந்தா..
பூங்குழலிக்கு பாராட்டுகள். தொடர்கிறோம் தோழி
Tamil
அன்புள்ள வௌிப்படையாக செயல்படும் "கர்ம வீர". பாண்டியனாரே,
வணக்கம். கடைசி எழுத்தைத் தவிர்த்துவிட்டீர்கள், காரணம் அறியலாமா?

“எத்தர்களிடம் எச்சரிக்கை!”, “கழிசடையே!”, “அடச்சீ... கழிசடையே!”, “நீ உண்மைத் தமிழனாக இருந்தால் இப்படிப் பிதற்றமாட்டாய்!”, “எம்மன்னை விட்டு என்னை வௌியேறச் சொல்ல நீ யார்?”, “எதிரியே”, “பார்ப்பனப் புறம்போக்கு”,
விவாதத்தின் தரம் அருமை. கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிவிடாதீர்கள்.

//அவர்களின் பதற்றம் மேலும் கூடும். அவர்களது பிதற்றல்களும் கூடும்.//

யார் பதற்றப்படுகிறார்கள் என்பது மேற்கண்ட மேற்கோள்களிலிருந்து புரியவில்லையா? புரியாமல் தான் கேட்கிறேன் பாண்டியனாரே ஏன் இந்த கீழ்நிலை? பேட்டை ரவுடியிடமா நான் விவாதம் நடத்திக்கொண்டிருக்கிறேன்? தாங்கள் முனைவரா மருத்துவரா என்பதை என்னால் இன்னமும் அறிய முடியவில்லை. எதுவாக இருந்தாலும் இப்படி தரம் தாழ்ந்து எழுதவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? கேட்கப்பட்ட கேள்விக்கு அல்லது கூறப்பட்ட கருத்துக்கு நாகரீகமான வார்த்தைகளில் பதில் சொல்வதை ஏன் தவிர்க்கிறீர்கள்? அறிவின் வெளிச்சம் பரவ அதுதானே வழி.. வெற்றுக்கூச்சல் போட்டு விரட்டிவிட ஏன் முயற்சிக்கிறீர்கள்? எதைக்கண்டு அல்லது யாரை/எதை நினைத்து பயப்படுகிறீர்கள்? நான் வசவுகளுக்கும் கூச்சலுக்கும் சாபங்களுக்கும் பயப்படுவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன். என் சந்தேகங்களுக்கு நீங்கள் முறையான பதிலளிக்கும் வரையில், கீற்று தளம் அனுமதிக்கும் வரையில் நான் பதிவுகளுக்குத் தயாராக இருக்கிறேன், ஓடிப்போய்விடப் போவதில்லை. அதுதான் நோக்கமென்றால் தயவுசெய்து அம்முயற்சியைக் கைவிட்டுவிடுங்கள்.

எனது பெயர் புனைபெயர் என்று நான் எங்கும் சொல்லவில்லை. நீங்களாக முதல் பதிவில் முடிவு செய்து கொண்டீர்கள், திரும்பத் திரும்ப அதைக் கூறி அதனை என் கருத்தாக்க முயற்சிக்கிறீர்கள். என் விபரங்களை வெளிடுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. கீற்று மின்னஞ்சல் முகவரியை கேட்கிறது. அதைக் கொடுத்திருக்கிறேன். உங்கள் பெயர் என நீங்கள் குறிப்பிடுவது மட்டும் தனிப்பெயரா? பொதுப்பெயர் இல்லையா? தமிழுக்கு நானும் பேடண்ட் வாங்கியிருக்கவில்லை, நீங்களும் தமிழுக்கோ ‘பாண்டியன்’ என்ற பெயருக்கோ பேடண்ட் வாங்கவில்லை, வாங்கவும் முடியாது. நீங்கள் உங்கள் விபரங்களை வெளியிடுவதாக இருந்தால் அந்த அளவிற்கு நான் எனது விபரங்களையும் வெளியிடத் தயாராக இருக்கிறேன். மேலும், விவாதம் குழாயடி தரத்திற்கு மாறிவிட கீற்று அனுமதிக்குமா என்பது தெரியவில்லை. இந்தமாதிரி விஷயங்கள் எனக்குப் புதியவை.

//ஒரு வேளை "பட்டா இல்லாத" இடத்திலிருந்து காட்டமாகப் போராட இயலாதென்று, "தமிழ்ப் பட்டா" வாங்கிப் போராட வந்தீரோ?//
இதன் அர்த்தம் பலமுறை படித்தும் புரியவில்லை. தெளிவுபடுத்துங்கள், பதில் கூறுகிறேன்.

//இன்று எமது "தமிழ் நாடு" ஜப்பானை விட மிளர்ந்திருக்கும்//
ஜப்பான் மிளிர்வதாக நீங்கள் வேண்டுமானால் பெருமைப்பட்டுக்கொள்ளுங்கள். எனக்கு முழு உடன்பாடு கிடையாது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காலடியில் வாலைச் சுருட்டிக்கொண்டு கிடந்து ஜப்பான் பெற்ற முதலாளித்துவ ‘மிளிர்ச்சி’ தமிழகத்திற்குத் தேவைதானா நண்பரே?

“தற்கொடைத் தாக்குதல்” - அருமையான வார்த்தை பிரயோகம். ஆனால் இந்த வடிவம் புலிகளினுடைய கண்டுபிடிப்பு அல்ல என்பது தாங்களுக்குத் தெரியும் என்று நம்புகிறேன். புலிகள் இதை பயன்படுத்திய எல்லா சந்தர்ப்பங்களும் எனக்கு ஏற்புடையவையும் அல்ல.

மற்றபடி எனது எந்த கேள்விக்கும் / சந்தேகத்திற்கும் இதுவரை பதிலளிக்கவில்லை. நீங்கள் சவடாலாகக் கூறியவற்றுக்கு சென்ற பதிவில் அதே அளவு சவடாலாக பதிலளித்திருந்தேன் என்பதுதானே தவிர ஆக்கபூர்வமான விவாதத்திற்குத் தயாராகவே உள்ளேன். எனது அடுத்த பதிவு சிறிது கால தாமதமாகவே வரும். எனவே நான் ஓடிப்போய்விட்டதாக தயவு செய்து கருதாதீர்கள்.
Dr. V. Pandian
கீற்று ஆசிரியர் குழுமத்துக்கும், வாசகர்களுக்கும் ஒரு சில விளக்கங்கள். இந்த "மஹாத்மா", "கடவுளின் தூதர்", தமிழ் என்ற பெயரில் மடலாற்றும் நபர், எனது "கழிசடை, எதிரி போன்ற" சொல்லாடல்களைக் கோடிட்டு, எனது விவாதத்தின் தரத்தை, ஒரு ரவுடியிசமாக மதிப்பெண்ணிட்டுக் காட்ட முற்படுகிறது.

எனது இனம் கொடூரமாக அழிக்கப்பட்டுள்ளது. சிங்கள ஓனாய்கள் இந்த 21ம் நூற்றாண்டிலும், உலகத்தின் பார்வையை மறைத்து, 3,00,000 லட்சம் மக்களை மிருகவதை செய்து கொண்டுள்ளது. இந்த நிலையில் கொடூரமாக அழிக்கப்பட்டுள்ள புலிகளைத் தாக்கிப் பேசுவது மனிதத் தன்மையாகாது. இறத்தவர்களைப் பற்றி, இறந்த உடனேயே யாரும் தூற்ற மாட்டார்கள். இறந்தவன் பதிலளிக்க இயலாது என்பதால் சற்று இரக்கத்தோடு தான் விமர்சிப்பார்கள். இது தனிமனித இழப்புகளுக்கே இப்படி என்றால் அகில உலகமும் சேர்ந்து ஒழித்துக் கட்டப்பட்ட ஒரு விடுதலை இயக்கத்தைப் பற்றிக் கூற வேண்டியதில்லை. 30,000 உன்னதமான போராளிகளின் வீரமரணம், தற்கொடை, பயனற்றுப் போயுள்ளது என்பதை எண்ணும்போது மனம் பதறுகிறது. இந்த கேடுகெட்ட உலகின் மீதே வெறுப்பு உண்டாகிறது.

ஆனால், புலிகளின் மீது திட்டமிட்டு அவதூறு பரப்ப, இந்தக் ****களுக்கு தேவையுள்ளது. ஏனென்றால், தமிழ் மக்களுக்கு உண்மை தெரிந்து, தமிழத்தேசிய சிந்தனை வளர்ந்துவிடக் கூடாதென்று, இந்திய தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டிக் காக்க வேண்டிய தேவையுள்ள, பாரப்பன, பனியா சக்திகள், இந்த நிலைமைக்கு புலிகள் தான் காரணம் என்று காட்டத் துடிக்கின்றன. இந்த அவதூறுகளின் மூலமும் இது தான்.

செய்வதையும் செய்துவிட்டு, பழியைப் புலிகளின் மீது போடும் இத்தகைய அயோக்கிய சக்திகளை, இப்படிச் சாடுவது கீழ்மையாகாது. உன்னத கொள்கைக்காக உயிர் கொடுத்துப் போராடும் போராளியைக் கொச்சைப் படுத்துவது போல ஒரு கேவலமான, படு பாதகமானச் செயல் வேறொன்னு இருக்க இயலாது. எனது கோபத்தைக் காட்ட இந்த எனது மொழிநடை அவசியம். பாம்பைப் பாம்பென்று சொல்வது கீழ்மையாகாது.

இங்கு ஒரு வராலாற்றச் சான்றையும் வைக்கிறேன். கம்பன் காலத்தில் வாழந்த, அவ்வையாரைப்பற்றி கம்பன் ஏதோ ஒரு கீழ்மையான கருத்தைச் சொல்ல, அதற்கு அக்காலத்திலேயே அவ்வையார் "அடடா.... யாரையடா..." என்ற வசைவுடன் கம்பனையே திட்டியதாக வரலாறுண்டு. நமது மொழி, நமது ஞாயமான கோபத்தை வௌிப்படுத்த வேண்டும். அதற்கு ஒரு வௌி கொடுக்கப்பட வேண்டும். நிற்க.

இந்த மஹாத்மாவின் போலித்தனத்தை நிறுவ சில சான்றுகளோடு முடிக்கிறேன்.

//
“தற்கொடைத் தாக்குதல்” - அருமையான வார்த்தை பிரயோகம். ஆனால் இந்த வடிவம் புலிகளினுடைய கண்டுபிடிப்பு அல்ல என்பது தாங்களுக்குத் தெரியும் என்று நம்புகிறேன்.
//

இந்த மேற்கூறிய கருத்தைப் பாருங்கள். இவர் மனித வெடிகுண்டு என்று முன்பே பதிந்தார். நான் தற்கொடைத் தாக்குதல் என்றேன். ஒரே பொருளை இரண்டு பேர் இரண்டு விதமாகப் பார்க்கிறோம். நீங்களே சொல்லுங்கள், என்னிடம் நாகரிகம் இருக்கிறதா அல்லது இவரிடம் இருக்கிறதா? புலிகளின் தற்கொடைத் தாக்குதல் "Mindless Terrorism" அல்ல! தனது இனத்தின் விடுதலை என்ற உயரிய வேட்கைக்காக தன்னையே அற்பனித்தச் செய்யும் போர்முறை இது. It is a Targetted Violence. இது அவ்வளவு சாதாரண விடயமல்ல. இந்தக் *****, அதை ஒரு அல்ப "வெடிகுண்டாகக்" குறுக்குகிறது.

இதிலே இந்தக் ****யின் இன்னொறு வக்கிரத்தைப் பாருங்கள்! நான் அவர் கூறியதைத் திருத்தி "தற்கொடைத் தாக்குதல்" என்றவுடன், இதற்கு ஒரு மறியாதை உள்ளதை உணரந்த இந்தக் ****, அதைக் பொறுத்துக் கொள்ள முடியாமல் "இது புலிகள் உருவாக்கியதல்ல" என்று காமுறுகிறது. புலிகளின் மீது அவ்வளவு காழ்ப்புணர்ச்சி! இவர்களிடம் நேர்மையான விவாதத்தை எதிர்பார்க்க இயலுமா? தற்கொடைத் தாக்குதல் யார் கண்டுபிடிப்பு என்பதா இங்கு விவாதப் பொருள்? இந்தக் **** இப்படி சம்பந்தா சம்பந்தமில்லாமல் விதண்டாவாதம் செய்யுமாம், நான் எனது நேரத்தை வீணடிக்க வேண்டுமாம்!

அடுத்து ஜப்பானைப்போல தமிழ்நாடு மிளிர்ந்திருக்கும் என்றேன். நான் சொன்னதின் பொருள் நாம் இந்தியாவிற்கு கட்டும் கப்பத்தை நமது நலனுக்கு பயன்படுத்தி, அவனைப்போல தொழில் நுட்ப, மற்றும் நேர்த்தியிலும், பொருளுதார முன்னேற்றத்திலும் வளர்ச்சி கண்டிருக்கலாம் என்பது தான். அவன் அமெரிக்காவிடமிருந்து பணம் வாங்கி மிளிர்ந்தான் என்பதா விவாதப் பொருள்? (அமெரிக்கா ஒன்றும் சும்மா கொடுத்துவிட வில்லை. தனது அனுகுண்டு அட்டூழியத்தின் அநீதியின் பரிகாரம் தான் அவனது உதவி.) ஆக, இப்படி வெற்று விதண்டாவாதம் செய்யும் நபரிடம் வி..வா..தம் செய்ய வேண்டுமாம் நான், நேரத்தை வீண்டித்து!

இறுதியாக........

தனக்கு எந்த கெடுதியும் செய்யாத ஈழத்தமிழனையும் அழித்துக் கொண்டு, அப்படி அழியும் தனது இனத்திற்காக தமிழகத் தமிழர் வெகுண்டெழாமல் தடுக்க, புலிகளின் மீது அபாண்ட பழிகளைச் சுமத்தி, ஏதோ புலிகளால் தான் இவ்வளவும் நடந்தன என்பது போல, தமிழ் மக்களிடம் ஒரு பிம்பத்தைக் கட்ட, படாத பாடு படுகின்றனர், இந்திய தேசியத்தில் குளிர்காயும், இத்தகைய அயோக்கிய சக்திகள்.

நெஞ்சு பொறுக்குதில்லை.............
Dr. V. Pandian
நான் சமீபத்தில் இந்தியா (வட நாடு) சென்றிருந்தேன். அங்கு எனது நீண்டநாள் நன்பர் தனது இல்லத்தில் விருந்து கொடுத்தார். எங்களின் நீண்ட நாள் பழக்கத்தில் அவரும் தன்னை பிராமனராக அறிமுகப் படுத்திக் கொண்டதில்லை, நானும் அது தெரிந்ததாக வௌிப்படுத்திக் கொண்டதில்லை. அவர் ஒரு வடஇந்தியப் பிராமனர்.

வழக்கமாகவே புலிகளை இழித்துக் கூற முற்படுவார். எனது எதிர்ப்பைக் கண்டு, உடனே பேச்சை மாற்றி விடுவார். ஆனால் இம்முறை, ஈழப்போருக்குப் பிறகு, அவர் ஈழத்தைப் பற்றி எதையும் என்னிடம் விசாரிக்கவில்லை. இது நான் எதிர் பார்த்த ஒன்று தான். குற்றமுள்ள நெஞ்சாயிற்றே!

ஆனால், அவர் இன்னொன்று புதிதாகக் கேட்டார். இது போன்ற ஒரு விடயம் அவர் இதுவரை கேட்டதில்ல. அது என்ன தெரியுமா? "தமிழகத்தில் இபோது பிராமனர், பிராமனரல்லாதோர் இடையே உள்ள உறவு எப்படி உள்ளது" என்பது தான்.

நான் தௌிவாக விடையளித்தேன், "மிக மோசமாக உள்ளது. இது போன்று வரலாற்றில் இதுவரை இருந்ததில்லை" என்று. மிகவும் விசனமடைந்தவராக, மேற்கூரையையே 15 வினாடிகளுக்கு மேலும் பார்த்துக் கொண்டிருந்தார். என்ன ஆயிற்று என்றேன். சுதாரித்துக் கொண்டார்.

ஈழக்கொடுமைகளும், அதனால் தமிழகத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சமூக மாற்றமும், அகில இந்திய பார்ப்பனீயத்தையும் அசைத்திருக்கிறது என்பது தான் உண்மை.

ஈழக்கொடுமைகள், தமிழகத்தில் உணர்வாளர்களை வேகமாக ஒன்றிணைத்துக் கொண்டுள்ளது. ஒரு புதிய தோழமை தமிழர்கள் மத்தியில் உருவாகிக் கொண்டுள்ளது. இதன் ஆக்கபூர்வமான விளைவுகள் வருங்காலத்தில் தெரியும். ஈழக் கொடுமைகள் உலகத் தமிழர்களை ஒன்றிணைய வைத்துள்ளது. கெட்டதிலும் ஒரு நல்லது என்பது இது தான். நல்லவன் என்ற வெற்றுப் பெருமிதத்திலே பெட்டைகளாக வாழந்த தமிழனுக்கு, இந்த அழிவு ஒரு காலத்தின் தேவை. இதை நாம் ஒவ்வொருவரும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இன்னொரு கொடுமை தமிழினத்திற்கு வராமல் தடுக்க இப்போதே செயல்படத் தொடங்க வேண்டும்.

இந்த தமிழிய உணர்வையும், தமிழத்தேசிய உணர்வையும் கண்டு ஜன்னி கொண்டுள்ள பாரப்பனீயம், புலிகளின் மீது பொய் மூட்டைகளையும், அவதூறுகளையும் அள்ளி வீசிக்கொண்டுள்ளது.

ஆனால், அதுவே மேன்மேலும் தமிழின உணர்வைத் தூண்டி விடுகின்றன என்பது, இதைச் செய்யும் அகில இந்திய பார்ப்பனீய சக்திகளுக்கு புரியவில்லை. எல்லாம் நன்மைக்கே!

இன்னொன்றையும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். விபரம் தெரிந்த தமிழ் உணர்வாளர்கள் அனைவருமே, இந்தியாவின் மீதும், பார்ப்பனீயத்தின் மீதும், கருணாநிதியின் மீதும் மிகக் கடுமையான கோபத்தில் உள்ளனர் என்பது தான் அது.
sanjaya raghunathan
vanakkam, mathipukuriya poongkuhali katturai nermaiyagg irunthahtu. aanal prema revathi ponravarkalin "iraiyaanmai" munbu edubadumaa??
v.chellan
thamizh enbvar yezhuthum pathilkalai naan dinamalar, dinakaran, tuqlaq, hindu pondra pathirikai kali padithirukiren. avar puthithaga ondrum yezhutha villai. evarkal nammai vida thamizh nandraga pesuvargal, yezhuthuvargal. poiyarum nalla thamizh poyaraga irukum. kudave india iraiyanmai pathukappaks irukkum. pandian sabaiyel intha kutravalligal thappipathum achariyam illai.
nallu
கர்மவீரரின் பெயரைக் கெடுக்க ,
தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொள்ளும் முனைவர் (!) பாண்டியன் அவர்கள்,
இதற்கு முன்பு பல முன்னோட்டங்களில் ***** வரிந்து கட்டிக்கொண்டு வந்துள்ளார். விடுதலைப்புலிகள் குறித்து யாரும் விமர்சனம் செய்யக்கூடாது. அவ்வளவு தான்... அய்யா பாண்டியனுக்கு கோபம் வந்தால் என்ன நடக்கும் என்பதை தமிழ் எழுதிய பின்னூட்டத்திற்கு அளித்துள்ள பண்புமிக்க(!) எதிர்வினையில் கண்டுகொண்டீர்களா?
நடிகர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என உயர்நீதிமன்றம் ஒரு திரைப்படம் குறித்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. நல்ல நடிகரான பாண்டியன் அதாவது முனைவர் பாண்டியன் விடுதலைப்புலிகளை விமர்சிக்கக்கூடாது என்பதை பார்ப்பனியம், தமிழ்தேசியம் என பல வார்த்தை பிரயோகத்துடன் வன்முறையான வார்த்தைகளுடன் எழுதுகிறார். தமிழுக்கு அவர் எழுதிய எதிர்வினையில் * * * என ஆங்காங்கே முத்திரை குத்தப்பட்டது கீற்றாலா அல்லது பாண்டியனா?
// ஈழக்கொடுமைகள், தமிழகத்தில் உணர்வாளர்களை வேகமாக ஒன்றிணைத்துக் கொண்டுள்ளது. ஒரு புதிய தோழமை தமிழர்கள் மத்தியில் உருவாகிக் கொண்டுள்ளது.//
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐயா, பாண்டியன் ஆதரவளித்தவர்கள், தேர்தலுக்குப் பின் இலங்கைப் பிரச்சனையில் காட்டிய போக்கு புதிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. கோவில் அருகே அமர்ந்திருப்பவன், போகும் வண்டியை மறித்து பொருட்களை கொள்ளையடிக்க சத்தம் போடுவானாம். அப்போது "வந்தா தெரியும்ல" என்ற வார்த்தையை உபயோகிப்பானாம். அந்த வழியாகப் போன வழிப்போக்கனிடம் அதே குரலில் உயர்த்திச் சொன்னானாம்,"வந்தா தெரியும்ல" ! வண்டிக்காரனும் "வந்து பாரு" என்றானாம். எனக்கு கால் ஊனம் வரமுடியாது என்று வழிமறித்தவன் சொன்னானாம். அது போல் இருக்கிறது தமிழின உணர்வை தூண்டிவிடும் பாண்டியனின் பின்னூட்டங்கள்.
மழைக்கு வந்துவிடும் ஈசல்கள் போல, யார் பின்னூட்டம் செய்வார்கள் எனக்காத்திருக்கும் பாண்டியனுக்கு மீண்டும் எதிர்வினையை தமிழ் ஆற்றவேண்டியிருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் தமிழ் எழுப்பிய கேள்விகளுக்கு இத்தனை பின்னூட்டம் செய்தும் முனைவர் பாண்டியனிடம் பதில் இல்லை.
Dr. V. Pandian
நல்லு என்றும், தமிழ் என்றும் புனைவுகளில் புகுந்து கொண்டு எழுதுபவர்கள் "நொண்டிகளா?", இல்லை வௌிப்படையான அடையாளங்களோடு எழுதுபவர்கள் நொண்டிகளா?

ஐயா பார்ப்பனமார்களே! நீங்கள் எங்களுக்கு தீங்கு செய்வதோடு உங்கள் வேலையை நிறுத்திக் கொண்டால் நலம். எங்களுக்கு புத்தி சொல்லவோ, எங்களை மதிப்பிடவோ உங்களுக்கு அறுகதையில்லை. பாம்பின் அறிவுறை தவளைக்குக் பயன்படாது!

நாகரிகம் என்பது ஒருவர் பயன்படுத்தும் சொல்லைவிட அதன் உட்பொருளில் தான் உள்ளது. இதற்கு சான்றாக ஒரு திரைக்கதையைப் பார்ப்போம். நடிகர் பிரபுவின் தந்தையின் "வைப்பாட்டியின் பிள்ளையாக" நடிகர் கார்த்திக். பிரபுவுக்கு, கார்த்திக்கைப் பார்த்தாதலே, அருவருப்பாக இருக்கும். தனது I.P.S. அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரபு, கார்த்திக்கை தளைப்படுத்தச் செல்வார். கார்த்திக் அரஸ்ட வாரண்ட் கேட்பார். சற்று நிதானிக்கும் பிரபு, அனைவரும் கேட்கும்படியாக, "நாகரீகமான" வார்த்தைகளால், "உனது அப்பன் பெயர் என்ன", என்பார். ஆத்திரம் அடைந்த கார்த்திக், அடிக்கக் கையை ஓங்குவார். "கான்ஸ்டபிள், அரஸ்ட் ஹிம்", என்னைத் தாக்க முயற்சித்தார் என்று தளைப்படுத்துவார்.

எனவே, நாகரிகமாக சொல்லப்படும் அனைத்தும் உண்மையிலேயே நாகரிகமானவை அல்ல. பச்சையான உணர்வுகளைப் வௌிப்படுத்தப் பயன்படுத்தும், ஒரு எல்லைக்கு உட்பட்ட, வன் சொற்கள் நாகரிகமற்றவை ஆகா! இதற்கு அனைவரும் போற்றும் பல தமிழிலக்கிய ஆசான்களின், நான் முன்பு குறிப்பட்டது போன்ற, கவிதைகளே சான்றுகள்.

எங்கெல்லாம் நாகரிகமாகவோ, அநாகரிகமாகவோ அட்டூழியமாக எழுதப்படுகின்றனவோ, எனது பச்சையான உணர்வுகளை வௌிப்படுத்தும் விதத்தில், எல்லைக்கு உட்பட்டு, எழுதுவது எனது பாணி. நான் கைத்தட்டல் வாங்குவதற்காக எழுதவில்லை. கொடுமைப் படுத்தப்படும் எனது இனத்திற்காக எனது ஞாயமான சினத்தை வௌிப்படுத்த எழுதுகிறேன். தனது புகழுக்கும், தற்பெருமைக்கும் வளைந்து கொடுத்து எழுதுபவனிடம் நேர்மை தேய்ந்துவிடும். அப்படிப்பட்டப் பலரை தமிழுலகிலே நாம் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்!

அதற்கு எதிர் சான்றாக நான் மதிக்கும் அம்பேத்கரின் தன்மையை எடுத்துக் காட்ட விரும்புகிறேன். தாழ்த்தப்பட்டவர்களின் சுயமரியாதைக்காக போராடிய அம்பேத்கரை கடவுளாகக் கண்ட ஒருவர், பொதுகூட்ட மேடையேறி, அம்பேத்கரின் காலைத் தொட்டு வணங்கினார். அவரை எழுப்பிய அம்பேத்கர், அத்துனை பேரின் முன்பும், அந்த நபரைப் "பளார்" என்று அறைந்து, இனி எவன் காலிலும் விழாதே என்று சொல்லி அனுப்பினார். தன்னைப் புகழ்கின்ற ஒருவனின் தவறையும், இரக்கமில்லாமல் கண்டிக்கும் நேர்மைதான் ஒரு பகுத்தறிவாளிக்கு அழகு.

அதேபோல, தன்னைப்பற்றி நல்லதொரு பிம்பத்தை வளர்த்துக் கொண்டு, உண்மையில் வேறு விதமாக வாழ்ந்தவர்களும் உண்டு.

"மஹாத்மா" காந்தி ஒரு முறை "நான் அடுத்த ஜென்மத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, மலம் அள்ளி, அந்த சமூகத்திற்கான நன்றியை செலுத்துவேன்" என்றார்.

அதற்கு அம்பேத்கர், "அய்யா காந்தி அவர்களே! அதற்கு நீங்கள் அடுத்த ஜென்மம் வரை காத்திருக்க வேண்டியதில்லை. இப்போதே அந்தப் பணி உங்களுக்காக காத்துக் கொண்டுள்ளது என்றார்."

காந்தியின் நாகரிகமான சொற்களின் ஆழம் எவ்வளவு என்று புரிகிறதா? "மஹாத்மா" யார், "ஹீனாத்மா" யார் என்று புரிகிறதா?

ஆக, என்னைப் பற்றிய பிம்பங்களை அசட்டை செய்கின்றவர் நான்! தமிழரின் மெய்யான அடையாளம், ஆசீவக அறிவரான, நக்கீரர்!

குறிப்பு:
கீற்றுவின் நெறிமுறைகள் அவர்களின் உரிமை. சிறப்பான பணி செய்யும் கீற்று குழுமத்திற்கு, எனது மடல்களைத் திருத்தும் அதிகப்படிப் பணியைத் தவிற்க, முடிந்தவரை இனி முயல்கிறேன். கீற்றும் பரிசீலிக்கட்டும்!
ஏகாந்தன்
தமிழரே!!...
நீங்கள் தேசிய தமிழரா?..சர்வதேசியவியாதிகள் தமிழரா?.. இல்லை ஈழத்தமிழரா மன்னிக்கவும் இலங்கை தமிழரா?,சுகன்- சோபாசக்திதமிழரா?கருணா தமிழரா?..அல்லது ராம்,சோ.,தமிழரா? ஏனென்றால் நீங்கள் எழுதியிருக்கும் எதிர்வினை மடலைப்பார்த்து அவர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயிருப்பார்கள்.
”சாதாரண போராளிகள் மீது எந்த வெறுப்பும் யாருக்கும் கிடையாது.” தமிழரே சாதாரண போராளிகள் என்றால் யார்? அவர்கள் நோக்கம் என்ன?.அதேபோல் பயங்கரவாதப் போராளிகள் என்றால் யார்? அவர்கள்நோக்கம் என்ன? எனக்கு சற்று விளக்குவீர்களா?..
” பயங்கரவாதப்போராளி காயம்பட்டால் புனிதராகி விடுவாரா?” அய்யா தமிழரே காயம்பட்டு உயிருக்கு போராடும் நிலயில் அடைக்கலமாக வந்தவருக்கு முதலில் அவருக்கு உரிய சிகிச்சை அளித்து அந்த உயிரை காப்பாற்றுவதுதான் மனித நேயம்.அவர் போராளியா?பயங்கரவாதியா..?கொள்ளைக்காரனா? என்பதையெல்லாம் பிறகு பார்துக்கொள்ளலாம்.இங்கு தான் இந்து ராம்,தமிழர் போன்றவர்களின் மூலமக ராஜபக்க்ஷேயின் கோரைப்பற்களோடு கூடிய விகாரமான ,மனிதநேயம் கட்டிதட்டிபோன கோரமுகம் தென்படுகிறது.நிற்க.
“புலிகள் தங்கள் ஆட்சிகாலத்தில் தங்கள் மக்களுக்குச் செய்ததுஎன்ன?.பிணைநிறுத்திவிட்டுதான் மக்கள் ஊரைவிட்டுச் செல்லவேண்டும் என்பது சுதந்திரத்தின் எந்தவகை? அய்யா தமிழரே நீங்கள் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் நன்றாகத்தான் முடிச்சுபோடுகிறீகள். மிக்க நன்று.
“நீங்கள் இங்குள்ள புலியிஸ்டுகளின் எழுத்துக்களையும், பேச்சுகளையும் ஆதாரம் காட்டி அங்கே பாலும் தேனும் ஓடியது என்று எழுதலாம்.ஏனெனில் நீங்களே கூறியபடி இலங்கை முகாம்களில் உள்ளவர்களின் கரங்களுக்கு எட்டாத தூரத்தில் தானே இருக்கிறீர்கள். எதுவும் எழுதலாம்”
அய்யா தமிழரே அவர்களுக்கு எட்டாத தூரம் தான்.ஆனால் உங்களுக்கு இந்து ராம், ராஜபக்க்ஷே மூலம் தொட்டுவிடும் தூரம் தான்.நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள்.இவர்களை பிடித்துக்கொண்டுபோய் முகாம்களில் நிறுத்தி இவர்கள் எழுதியதை அவர்களிடம் காட்டுங்கள், அதோடு இப்போது நீங்கள் எழுதிக்கொண்டிருக்கிறீர்களே இதையும் காட்டுங்கள்.பிறகு நீங்கள் சொல்லுங்கள் என்ன நடந்தது என்று.
“ நீங்கள் குறிப்பிட்டுள்ள செஞ்சோலை சம்பவம் நடந்த நிகழ்ச்சி என்று நம்ப உங்களுக்கு சகல உரிமையும் உள்ளது. ஆனால் பலருக்கும் ஞாபகம் வருவது புலிகளிடமிருந்து புலிகளின் துப்பாக்கி குண்டுகளையும் மீறி உயிர்தப்பி சென்றவர்களோடு கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று ராணுவ முகாம் முன்பு மனிதவெடிகுண்டாக வெடித்து ஒட்டுமொத்த தமிழ் அப்பாவிகளையும் ஏற்கனவே வெறிகொண்டு துவம்சம் செய்யும் ராணுவ எந்திரத்தின் கண்களுக்கு பயங்கரவாதிகளாகக் காட்டி தமிழ் மக்களுக்குப் புலிகள் செய்த சேவைதான்”
மீண்டும் தமிழரே நீங்கள் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் நன்றாகத்தான் முடிச்சுபோடுகிறீகள்.இது இவர்மற்றும் ராம் ஆகியோரின் HIS MASTERS VOICE ராஜபக்க்ஷேவினுடையதுதான்.
” இந்த உலகத்தின் எந்த ஒரு பிரச்சனைக்கும் ஓரணியில் திரளாத உலகம் இலங்கைப் பிரச்சனையில் மட்டும் உங்கள் கூற்றுப்படி ஓரணியில் திரள புலிகள்தான் முக்கிய காரணம் என்பதை ஏன் யோசிக்க மறுக்கிறீர்கள் என்பது புரியவில்லை. அந்த அளவிற்கு தங்கள் ‘தியாகங்கள்’ மூலம் சர்வதேச சமூகத்தை வெறுப்பேற்றியிருக்கிறார்கள் என்று கொள்ளலாமா? அல்லது உலகம் வெறுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தன் உதவிக்கு வந்து தங்களை ‘ஏர்லிப்ட்’ செய்து காப்பாற்றும் என்று நம்பியிருந்த அரசியலறிவைச் சொல்லவா?
அய்யா தமிழரே இன்றைய உலகை சற்று கூர்ந்து கவனியுங்கள ஒன்று உங்களுக்கு புரியும். யார் எக்கேடுகெட்டுப் போனால் எனக்கு என்ன? என் பங்கு எனக்கு கிடைத்தால் போதும்.என்ற நிலை. சர்வதேசியம் பேசிய இடதுசாரிகள் இன்று சர்வதேசிய ஏகபோகமூலதனச்சுரண்டலை போல தாங்களும் சுரண்டலாம் என்று எண்ணதலைப்பட்டுவிட்டனர்.ஆகவே இலங்கையில் போரை நட்த்துவது இந்தியா என்ற நிலையில் இந்தியாவை பகைத்துக்கொண்டு ஈழப்போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் முன் வரவில்லை. ஏனெனில் இந்தியவின் சந்தையை இழக்க விரும்பவில்லை.அது போலவே .சீனா ஆசியாவில் தனது வல்லாதிக்கத்தை நிலைநாட்ட ஏற்கனவே பாக்கிஸ்தான், பங்களாதேக்ஷ், நேபாளம், பர்மா போன்ற நாடுகளுடன் ராணுவ, பொருளாதார நலனுக்கு ஏற்றவாறு ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளது. மேலும் சீனாவால் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ள திபேத்திய தலாய்லாமா தலையிலான பல்லாயிரக்கண்க்கான பயங்கரவாதிகளுக்கு(சீனாவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதி தலய்லாமாவுக்கு ) இந்தியாவில் அடைக்கலம் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே அது இயல்பாகவே
இந்தியாவின் மீது எரிச்சலில் உள்ளது. இல்ங்கயிலும்,சீனாவிலும் புத்தமதமே .சீனா பல்லாயிரம் கோடிப்பணதை இலங்கையில் முதலீடு செய்துள்ளது. இந்தியவிற்கு நெருக்கடி தரும் நோக்கில் இலங்கைக்கு ஏராளமான ஆயுத்ங்களையும், பண உத்வியும் செய்து அதற்கு பிரதிபலனாக தனக்கென ஒரு தளத்தையும் ஏற்படுத்திக்கொண்டது. ஆகவேதான் அய். நா.மன்றத்திலும், ஈழத்த்மிழர்களுக்கு எதிராகவும்,ராஜபக்க்ஷேவுக்கு ஆதரவாகவும் நட்ந்துகொண்டனர்.இந்த சிவப்பு சமூக முதலாளித்துவ நாட்டுடன் இதர சிவப்புநாடுகளும் ராஜபக்க்ஷேவுக்கு ஆதராவாக ந்டந்துகொண்டன.உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நலனை முன்னிட்டு நியாயமான் ஈழமக்களின் விடுதலை போராட்டத்தை பலிகொண்டுவிட்ட்னர். இதுதான் உண்மை.
” புலிகள் போர்நிறுத்ததிற்கு தயார் என்று கூறிய கட்டத்தில்,வெறிபிடித்த இலங்கை ராணுவத்தைவிடுங்கள் வெற்றியின் விளிம்பில் இருக்கும் எந்த யுத்தஎந்திரமாவது போரை நிறுத்த முன் வருமா?” அய்யா தமிழரே உங்களிடம் ஹிட்லரின் கோயபல்ஸ், நால்வர் கும்பல், போல்பாட், போன்றவர்களின் மொத்ததிறமையும் உள்ளது.ஆனால் கோயபல்ஸ் பதவிக்கு ஏற்கனவே இந்து ராம் சேர்ந்து விட்டார். கோத்தபயா ,ராஜபக்க்ஷேவிற்கு ராணுவ ஆலோசகராக் சேரலாம். அவர் உங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்.
’ நடுநிலை..........................நியாயப்ப்டுத்துவதா நடுவுநிலை.’ இங்கே வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது.

நலன்புரி நிலையம்.வடக்கின் வசந்தம் இந்த சொற்களின் தன்மையிலேயே இவர்கள் பாலறும் தேனாறும் ஓடவைக்கிறார்கள். பரமண்டலத்தில் இருக்கும் எம் பிதாவே இவர்கள் அறியாமல் இல்லை இல்லை அறிந்தே பிழை செய்கிறார்கள் இவர்களையும் மன்னியுங்கள்.
” புலிகள் எஞ்சியிருந்தால் அவர்களுக்கும், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நீங்கள் நம்புவதால் அவருக்கும் சோல்லுங்கள்.” ஏன் அய்யா தமிழரே ராஜ பானம் அதிகம் அருந்திவிட்டீரா? கொஞ்சம் முன்னால் தான் உங்கள் முகாம்களில் புலிகளும் இருப்பதால் தான் இலங்கை அரசின்சிறை வைப்பு நியாய்ம் என்று கூறினீர்கள்.. மக்களின் துன்பத்திற்கு காரணமாக இருக்கும் புலிகள் சயனைட் கடித்து சாக வேண்டும் என்றும் நா கூசாமல், நெஞ்சம் பதறாமல்கூறுவதற்க்கு உங்களைப்போன்ற போல்பாட், ராஜப்க்க்ஷே கும்பல்கலால் தான் முடியும்.ராஜ போதை அதிகமாக ஆகிவிட்டதால் உண்மை வெளிவந்து விட்டது.
அய்யா தமிழரே இன்னும் உமக்கு தமிழர்களின் மீது வெறுப்பும்,வன்மமும், அவர்களை வேரோடும் வேரடிமண்ணோடும் பிடுங்கிஎறியவேண்டும் ஆவேசமான் உணர்வும் இருப்பதை புரிந்துகொண்டோம்..
மகாபாரததில் ஒரு காட்சி.கர்ணண் விழுப்புண் பட்டு வீழ்ந்து கிடக்கிறான்.உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.அர்ச்சுணன் கிருக்ஷ்ணனிடம் இவ்வளவு அம்புகள் தைத்தும் கர்ணணின் உயிர்போகவில்லையே? ஏன்? என்றுகேட்க அத்ற்கு கிருக்ஷ்ணன் அது அவன் செய்த தர்மம் தான் அவனைக் காக்கிறது..நான் போய் அவன் உயிரை போக்கிவருகிறேன்.என்று கூறிவிட்டு ஏழை பிராமணன் உருவத்தில் கர்ணணிடம் வ்ந்து பிட்சை கேட்கிறான். அதற்கு கர்ணன் நான் உயிர் போகும் நிலையில் இருக்கிறேன் ,என்னிடம் எதுவும் கொடுப்பற்கு இல்லையே என்று வருந்த , அதற்கு கிருக்ஷ்ணன் ”நீ இதுவரை செய்ததானதர்மத்தின் பலன்களையும்,இப்போது எனக்கு அளிக்கப்போகும் தர்மத்தின் பலனையும் எனக்கு தாரைவார்த்துக் கொடு ’என்று கேட்க ,கர்ணணும் மகிழ்ச்சியோடு தன் குருதியால் தாரைவார்த்துக் கொடுக்கிறான். உடனடியாக அவனது உயிரும் அவனை விட்டு பிரிகிறது. அன்றைய போரும் முடிவிற்கு வருகிறது.
இது போலத்தானே ஈழத்த்மிழர்களை முற்றாக ஒழித்தால் தான் ஈழவிடுதலைப் போரும் முடிவிற்கு வரும் என்று நினைக்கிறீர்கள். சரி உடனடியாக கிருக்ஷ்ணனின் மறு அவதாரமான ராம் அவர்களின் துணையோடு வதை முகாம் தவ்று நலன்புரி முகாம் சென்று அங்குள்ள தமிழர்களிடம் “தமிழ் மக்களே நீங்கள் இங்கே கொஞ்சம், கொஞ்சமாக செத்துக்கொண்டு இருக்கிறீர்கள் எங்கள் மனதிற்கு நெருடலாக இருக்கிறது.ஆகவே நீங்கள் உங்கள் தியாகங்களையும் ,போராட்டத்தையும் இந்த ஈழ மண்ணயும் எங்கள் குலக்கோமான் ராஜபக்க்ஷேவிற்கு தாரைவார்த்து தந்து விட்டு சயனைட் குப்பிகடித்து செத்துப் போங்கள். நாங்கள் உங்களை இந்த மண்ணிலேயே புதைத்து விடுகிறோம்.அதன் பின் தமிழர்கள் யாரும் இல்லாததல் ,அவர்களுக்கு எந்த தீங்கும் செய்யமாட்டோம். அது உறுதி’ என்று யாசகம் கேட்டுப்பாருங்கள்.அப்படியும் சாகமறுத்தார்கள் என்றால் இருக்கவே இருக்கிறது புலிபயங்கரவாத பீதி.அதைக்காட்டி அவர்கள் மீது நேபாம் குண்டு, கிளஸ்டர்குண்டு போட்டு கொறுவிடுங்கள். அதன் பிறகு தான் உங்கள் மனம் சாந்தி அடையும்.
தமிழரே நீங்கள் வாழ்க! வாழ்க!! வாழ்க!!! பல்லண்டு நலமுடன். நன்றி.
nallu
வாய்ச்சொல்லில் வீரரடி. . .
------------------------------------
எத்தனை முறை சொன்னாலும் திருந்தாத ஜென்மங்களை எங்ஙனம் திருத்துவது?
விடுதலைப்புலிகளுக்கு எதிராக யார் எழுதினாலும், அவர்கள் பார்ப்பனராகத்தான் இருக்க வேண்டும் என கருதும் அறியாமைமிக்க பாண்டியனின் ராஜ்யத்தில், உண்மை பேசுபவர்களை பார்த்து நக்கல், நையாண்டி செய்துவிட்டு, என்னுடைய எழுத்து முறை இப்படித்தான் என ஓடிஒளிந்து கொள்ளும் அவரைப்பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது.
அநாகரீகமாக எழுதுபவர்களுடன், நாகரீகமாக எழுதுபவரையும் திட்டுவது தான் பாணி என்றால், குழப்பத்தின் உச்சத்தில் பாண்டியன் இருக்கிறார் என நினைக்கிறேன். மை போட்டு காணாமல் போனதைக் கண்டுபிடிக்கும் குறிசொல்பவர்களை மிஞ்சும் வகையில் பின்னூட்டம் செய்பவர்களின் பெயர்களை வைத்தே அவர்கள் பிற்படுத்தப்படுத்தப்பட்டவனா, தாழ்த்தப்பட்டவனா,உயர்ந்த பிரிவைச் சேர்ந்தவனா என கண்டுபிடிக்கும் அற்புத ஆற்றல்மிக்க ஐயா, பாண்டியன் “அக்னி நட்சத்திரம்“ படக்காட்சிகளை ரசித்து எழுதியுள்ளார். எனவே, இனி பத்திரிகைகளில் அவரை சினிமா விமர்சனம் எழுதச்சொல்லலாம். பாவம் புலிகளை விட்டுவிடுங்கள். ஏனெனில் உங்களிடம் உண்மை இல்லை. நெஞ்சில் உரமுமின்றி, நேர்மை திறனுமின்றி வஞ்சனை செய்வாரடி, கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி. . .
Dr. V. Pandian
வாய்ச்சொல்லில் வீணரடி.....
----------------------

//
விடுதலைப்புலிகளுக்கு எதிராக யார் எழுதினாலும், அவர்கள் பார்ப்பனராகத்தான் இருக்க வேண்டும் என கருதும் அறியாமைமிக்க பாண்டியனின் ராஜ்யத்தில், .............................

.................மை போட்டு காணாமல் போனதைக் கண்டுபிடிக்கும் குறிசொல்பவர்களை மிஞ்சும் வகையில் பின்னூட்டம் செய்பவர்களின் பெயர்களை வைத்தே அவர்கள் பிற்படுத்தப்படுத்தப்பட்டவனா, தாழ்த்தப்பட்டவனா,உயர்ந்த பிரிவைச் சேர்ந்தவனா என கண்டுபிடிக்கும் அற்புத ஆற்றல்மிக்க ஐயா, பாண்டியன்................
//

ஒரு சிறிய பின்னூட்டத்திலேயே, இப்படிப் பச்சையான முரண். எழுதுவதை ஒரு முறையாவது திரும்பிப் பார்க்க மாட்டார்களா? அதோடு இவர் பார்ப்பனர் என்பதை அவரது பெயரை வைத்து எடை போடுவதில்லை. இவரது எழுத்தை வைத்துத் தான். நான் மேற்குறிப்பிட்ட இரண்டாவது பத்தியைப் பாருங்கள். இவரது சிண்டு முடிக்கும் வேலை தெரிகிறதா? இது தான் பார்ப்பனீயம்!

//
உண்மை பேசுபவர்களை பார்த்து நக்கல், நையாண்டி செய்துவிட்டு, என்னுடைய எழுத்து முறை இப்படித்தான் என ஓடிஒளிந்து கொள்ளும் அவரைப்பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது.
//

யார் உண்மை பேசுகிறார்? "இந்தத்" தமிழா? சானல் 4 வீடியோ பொய் என்று ஒரு சிங்களன் சொன்னால் புரிந்து கொள்ளலாம். உலகின் கண்களைக் கட்டிப் போட்டுவிட்டு, சானல் 4ல் காட்டப்பட்டதைப் போன்ற மனதைப் பதறவைக்கும் அட்டூழியங்களைச் செய்யும் ராஜபக்ஷ கம்மனாட்டியின் மொழியை, தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு பேசும் இந்தத் "தமிழ்" உண்மை பேசுகிறதா?

இப்போது கீற்றில் வௌியிடப் பட்டுள்ள சமூகநீதித் தமிழத்தேசத்தில் உள்ள "குறுக்கு விசாரணைக் கூண்டில் இந்து என். ராம்" என்ற கட்டுரையைப் படித்தால், இப்படி எழுதுபவர்களின் நதி மூலம் தெரியும்!

நான் தொடர்ந்து எழுதிக் கொண்டுதானுள்ளேன். ஓடி ஒளிந்து கொள்ளவில்லை! உங்களின் அடிமனது ஆசை, பாவம், நிறைவேறாது "தோழரே!"

//
பாவம் புலிகளை விட்டுவிடுங்கள். ஏனெனில் உங்களிடம் உண்மை இல்லை
//

இப்படி நான் உம்மிடம் கேட்கமாட்டேன், நல்லு! ஏனெனில் நீரும், உங்களது குழாமும் புலிகளைப் பற்றி நிறைய எழுதவேண்டும். நீங்கள் அம்பலமாக வேண்டாமா?
சிறுத்தை
கீற்று ஒட்டு குழு உறுப்பினர்களின் கூடாரமாகிவிட்டது..நான் எழுதிய பின்னுடங்கள் ஒன்றுகூட முன்பு போல் வருவதில்லை.. இது தமிழ்தேசிய உணர்வாளர்களை வருத்தம் கொள்ள செய்கிறது
ஏகாந்தன்
" விடுதலைப்புலி தலைமைக்கு அரசியல் தெரியும் என்பது நீங்கள் குறிப்பிட்ட ரவுடிக்குத் தெரிந்த அரசியல்தான். தன் இருப்பைக் காத்துக்கொள்ள ரவுடிக்கும் ஒரு அரசியல் உண்டுதானே." ஒரு ரவடிக்குத்தான் இன்னொரு ரவுடியின் அரசியல் தெரியும்.அப்படியானால் இந்த ரவுடி தனது அரசியலை விளக்குவாரா?
இக்பால்
தமிழ் எழுதியுள்ள கருத்துக்களில் எனக்கு மாறுபாடு உண்டு... எனினும் அவரது கருத்தைச் சொல்ல அவருக்கு உரிமை உள்ளது. அந்த கருத்தை மறுப்பதற்கு எனக்கும் உரிமை உண்டு. ஆனால், அது நயத்தக்க நாகரிமான வகையில் அமைய வேண்டும்.

பிரேமா ரேவதிக்கான எதிர்வினையில், தோழர் பூங்குழலி பல்வேறு விவரங்களை அழுத்தமாகவும்- தெளிவாகவும், அதேநேரத்தில், நாகரிமாகவும் எடுத்துரைத்துள்ளார்.

பதில் சொன்னால் இதுபோல மிகுந்த நாகரிகமாக, எதிர்த் தரப்பினரையும் ஈர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

ஆனால், சம்பந்த சம்பந்தமே இல்லாமல், பாண்டியன் என்பவர் (டாக்டர் என்று அடைமொழி வேறு போட்டுக் கொண்டுள்ளார்) எல்லோரையும் சகட்டுமேனிக்கு வசைபாடுவதை ஏற்க முடியவில்லை. அவரால், நல்ல- ஆரோக்கியமான விவாதம் நடைபெறுவது தடைபடுகிறது.

கீற்று குழுவினர், பாண்டியனின் பின்னூட்டங்கள் தொடர்பாக "கூடுதல்" கவனம் செலுத்த வேண்டும்.
யாழேந்திரன்
கிராமங்களில் சின்னக்குழந்தைகள் சில்லாக்கு வைத்து விளையாடும் விளையாட்டிற்கு பாண்டியாட்டம் எனப்பெயர் உண்டு. அப்படி தான் இருக்கிறது பாண்டியனின் தொடரும் பின்னூட்டங்கள்.
தமிழ், நல்லு ஆகியோர் ஒன்று சொன்னால், இவர் சம்பந்தமில்லாமல் எதை எதையோ சொல்கிறார். பெயரை வைத்து கணிக்கவில்லை: அவர்களின் எழுத்தை வைத்து தான், பார்ப்பனியத்தைக் கண்டுபிடிக்கிறேன் எனக் கூறும்"செர்லாக் ஹோம்ஸ்" பாண்டியன், ஓடி ஒளியமாட்டேன் என்று கூறியுள்ளார்.
விவாதத்திற்குரிய தமிழ், நல்லு ஆகியோரின் கேள்விக்கு இத்தனை பின்னூட்டம் செய்தும் பதில் சொல்லாமல், பிதற்றித்திரிவதை ******* எனக்கூறலாமா? இவரே, பாண்டியன் எனப்பெயர் வைத்துள்ள பார்ப்பானாக இருப்பாரோ?
Dr. V. Pandian
இக்பால் அவர்களே! ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் உண்டு. தங்களுக்கும் ஒரு அரசியல். அது தான் ஊரறிந்த விடயமாயிற்றே! நன்று. தமிழின் எழுத்துகளை நீங்கள் ஒப்பவில்லை. முதலில் பின்னூட்டமிட்டவர் தமிழ் தான். தமிழோடு ஒவ்வாத நீங்கள் எதில் ஒவ்வவில்லையோ அதை விமர்சித்துவிட்டு, என் பக்கம் திரும்பி இருக்க வேண்டும். அது உண்மையலேயே நீங்கள் விவாதம் செய்ய வருகின்றவர் என்று பொருள்படும். தமிழ் மிக, மிக அட்டூழியமாக சானல் 4ல் வந்தவற்றை நம்பமுடியாது என்கிறார். அது உங்களுக்கு ஏற்புடையதா, இல்லையா? உண்டு என்றால் அதை நிறுவ வாதிக்க வேண்டும். இல்லை என்றால் அவரைச் சாட வேண்டும். அது தான் "விவாதம்" என்பது.

அது எதையும் சொல்லாமல் எனக்கு சட்டாம்பிள்ளை வேலையை மட்டும் செய்கின்றீர். இங்கு தான் "உங்களின்" அரசியல் உள்ளது! நீங்கள் வாதம் செய்ய வரவில்லை. என்னோடு "விதண்டா" வாதம் செய்யத் தான் வந்துள்ளீர். நீங்கள் நாகரிகமாகத்தான் எழுதுகிறீர்! ஆனால், பாவம், உங்களது நாகரிகம், நான் மேற்குறிப்பிட்ட "மஹாத்மாவின்" நாகரிகம் போலவே உள்ளது. வாழ்த்துக்கள்!

நான் டாக்டர் என்று "போட்டுக்கொள்ளவில்லை" தோழரே! எனது பல வருட ஆய்வுக்காக, தகுதியான அரசு நிறுவனத்தால் "வழங்கப்பட்டது". புரிந்ததா? ஒருவரின் தகுதியையும், உழைப்பையும் இப்படிக் கொச்சைப் படுத்துவது தான் "நாகரிகமா" தோழரே! நான் சொன்ன கதையில் பிரபுவின் நாபகம் தான் வருகிறது, உங்களது செயலை நினைத்தால்! சட்டாம்பிள்ளையே! சயனம் சொல்லும் பல்லிதான், கழனிப் பானையில் விழுமாம்! ஸ்விம்மிங் சூட் போட்டுக் கொள்ளுங்கள், பாவம்!

ஒருவரின் டாக்டர் பட்டம், அவருக்கு ஆய்வு Methodology, Collection of Data, Objective Reasoning, Establishment of Truth, Writing the Thesis (i.e., publication of the results), ஆகிய அத்துனை தகுதிகளும் உண்டு என்பதற்கான சான்றாதாரம் தான். புரிகிறதா? "*******" அவ்வளவு எளிதில் புரிந்துவிடுமா என்ன?
Dr. V. Pandian
யாழேந்திரன் அவர்களே! இதுவரை நீங்கள் "பெரிய" மனிதர் தான். ஆனால், இப்போது என்னோடு விளையாட வந்துவிட்டீர்கள் அல்லவா? இனிமேல் நீங்களும் இந்தச் சிறுபிள்ளையின் "பெரிய" கூட்டாளி தான். இந்தச் சிறுபிள்ளை பாண்டியனின் விளையாட்டு, அவ்வளவு சுவாரஸ்யமா கூட்டாளியே! ஆனால் போங்கள், நான் "மட்டும்" தான் தொடர்ந்து விளையாடுகிறேன். இந்தப் பாண்டியாட்டத்தின் "பாண்டி" எனக்குத் தானோ?

என்னை "செர்லாக் ஹோம்ஸ்" என்று "அன்பாக" அழைத்த கூட்டாளியே, உங்களின் துப்பறியும் திறன் மிக அபாரம்! என்னைப் பார்ப்பனன் என்று நீங்கள் கண்டுபிடித்தது, செயற்கரிய செயல். இத்தகைய செயல் கௌரவப் படுத்தப்பட வேண்டியது தான். நீங்கள் எனக்குக் கொடுத்த பட்டத்தையே நானும் உங்களுக்குக் கொடுத்தால், "பெரியவராகிய" நீங்கள் கவலை கொள்வீர்கள். எனவே நான் உங்களை "Cerelac ஹோம்ஸ்" என்று அழைத்து பெருமை செய்கிறேன்! வாழ்த்துக்கள்!
சிறுத்தை
தமிழ்தேசிய தோழர் பாண்டியன் அவர்களே!

இவர்களை பற்றி நாம் அதிகம் கவலைகொள்ள தேவை இல்லை..தமிழ்தேசிய தோழர்களுக்கு எவ்வளவோ பணிகள் உள்ளன.. ரோவின் ஆட்களுக்கு பதில் சொல்லி தங்கள் பொன்னான நேரத்தினை வீணாக்கவேண்டாம்.. இவர்களுடைய அக்கா தங்கைகளுக்கு அண்ணன்களுக்கு இவ்வாறு கொடுமை நிகழ்தாலும் ..அதை சேனல் 4 ல் நேரடியாக காட்டினாலும்.. அது என் அக்காவோ தங்கையோ இல்லை என சாதிப்பார்கள்.. அவர்கள் வளர்ந்த விதம் அப்படி! இந்தி தேசியத்தால் மூளை சலவை செய்யபட்டுள்ளார்கள்!!

தீக்குளித்து..உண்ணாவிரதம் இருந்து..மழையில் மனிதசங்கிலியில் நின்று..ரயிலை நிறுத்தி..என அனைத்தும் செய்து பார்த்தும்.. ஒன்றும் மசியவில்லை..தமிழ்"நாட்டு" மீனவர்களை சுட்டு கொல்வது தொடர்கதையாக உள்ளது..சராசரி ஒரு தனிமனிதன் சிங்குக்கொ அல்லது மலையாளிக்கோ உள்ள மரியாதை கூட ஒட்டு மொத்த தமிழினத்திற்கு இல்லை.. முள்ளிவாய்க்கால் பேரழிவிற்கு பிறகு பெரும்பான்மையான தமிழர்கள் ஏன் நமக்கு மட்டும் இவ்வாறு நடக்கிறது? என சிந்திக்க தலைபட்டுள்ளார்கள்.. தமிழர்கள் ஆக்கபூர்வமாக சிந்தித்தால் இவர்கள் அடிவாரம் ஆட்டு கண்டுவிடும் என்பது தாங்கள் அறியாதது அல்ல..

திராவிடத்தை இழுபார்கள்..மார்கசியத்தை இழுப்பார்கள்..சோசலிசத்தை இழுப்பார்கள்.. சாதியைமுதலில் ஒழித்து விட்டு தமிழ்தேசியத்தை அமையுங்கள் என்பார்கள்..அதாவது 3000 ஆண்டுகளாக தமிழ்சமுதாயத்தில் புரையோட்டிய வர்ணாசிரம் தர்மத்தினை தமிழ்தேசியத்தினை அமைப்பது என்ற உடன் 2 நாளில் சாதி அமைப்பை ஒழித்துவிட வேண்டும்.. கூர்ந்து கவனித்தால் இவர்கள் சொல்லவருவது "அதுவரை நீ இந்திக்காரனிடம் அடிமையாக இரு என்பதாகும்"..
சாதி ஒழிப்பு என்பது தமிழ் தேசியத்தின் ஒரு முக்கிய அங்கம் என்று நாம் விவாதித்தாலும் அது அவர்கள் காதில் ஏறாது .. ஏன் இந்திக்காரனிடம் சாதி முறைகள் இல்லையா? அவன் நாட்டை வைத்து கொண்டு நம்மை ஏய்த்து பிழைப்பு நடத்துகிறானே? அவர்களிடம் இவர்கள் தங்கள் தத்துவங்களை வைக்கவேண்டியது தானே? வைக்க முடியாது அல்லவா ஏனெனில் அவர்களுடைய கையாட்கள் தானே இவர்கள்?

இன்னும் சில தோழர்கள் தமிழ்நாட்டில் இருந்து.. வீரதீரமாக காசுமீர் ..அஸ்ஸாம் ..மணிப்பூர் என்று வீரதீரமாக வெட்டி முழங்குகிறார்கள்..ஒரு செய்தியாவது அவர்கள் ஈழத்து உறவுகளுக்காக உண்ணாவிரதம் இருந்த செய்தியை கேட்டதுண்டா?

எனவே இணைய "வீரர்களிடம்" தங்கள் நேரத்தை செலவிடுவதை விடுத்து.. நமது சாதி சமயங்கள் அற்ற சோசலிச நமது "நாட்டிற்கான" தேவை குறித்தும்.. அது எவ்வாறு அமைப்பது குறித்தும்..தங்கள் உறவினர்கள் ..தோழர்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துங்கள்.. நானும் எனது பிரச்சாரத்தினை எப்போதோ ஆரம்பித்துவிட்டேன்...
ஏகாந்தன்
//..." விடுதலைப்புலி தலைமைக்கு அரசியல் தெரியும் என்பது நீங்கள் குறிப்பிட்ட ரவுடிக்குத் தெரிந்த அரசியல்தான். தன் இருப்பைக் காத்துக்கொள்ள ரவுடிக்கும் ஒரு அரசியல் உண்டுதானே."...//

ஒரு விடுதலை போராட்ட தலைமையை,அந்த போராட்ட வழிமுறை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்,பெரும்பான்மை மக்கள் அவர்கள் பின்னால் அணிவகுத்து நின்றார்கள் என்பது உண்மை. அப்படிப்பட்ட தலமையை ரவுடி என்று அழைப்பவர் எப்படி நாகரீகமான மனிதராக இருக்கமுடியும்.ஆகவே தான் திரு பாண்டியன் அவர்கள் இந்த கீழ்நிலை பேட்டை ரவுடியிடம் எப்படி விவாதம் செய்ய வேண்டுமோ அப்படி தனக்கே உரிய பாணியில்
விவாதம் செய்கிறார் என்று எடுத்துக்கொள்ளலாமே!!!
Dr. V. Pandian
சிறுத்தை அவர்களே!

உங்களின் செறிவான கருத்துகளுக்கு நன்றிகள் பல. நீங்கள் கூறியது போலவே தான் நானும் தோழர்கள் அனைவருக்கும் கடந்த இரண்டு வருடமாக இணையத்தின் மூலமாக விண்ணப்பித்து வருகிறேன்.

அதோடல்லாமல், நீங்கள் குறிப்பிட்டபடி, பன்முகத்தன்மையோடு பணியாற்றிக் கொண்டுள்ளேன். தொலைக்காட்சிகளால் காயடிக்கப்படும் நமது சமூகத்தை மீட்பது எப்படி, தமிழ் நாட்டிற்கான பொதுஉடைமைக் கோட்பாடு எத்தகையதாக இருக்க வேண்டும், நாம் பெற இருக்கும் தமிழ்த்தேசத்தின் அரசமைப்பு எவ்வாறாக இருக்க வேண்டும், சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவது எப்படி, பார்ப்பனீய திட்டப்படி லஞ்சத்தில் ஊறியுள்ள நமது சமூகத்தை, அதன் பழைய அறவழிக்கு மீட்டெடுப்பது எப்படி, என்பன போன்ற ஆக்கபூர்வமான சிந்தனைகளையும், நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

பெங்களூரில் வசித்துவந்த நான், ஜெயலலிதாவின் "பொடா" பொய்வழக்கிற்கப்புரம், சென்னைக்கு மாற்றிக்கொண்டு வந்தேன். தொடக்கத்தில் எனக்கு மலைப்பாகத்தான் இருந்தது. நான்காம் கட்ட, ஈழப்போருக்குப் பிறகு, நமது உன்னதமான தமிழ்த்தேசத்தை மீட்டு, உலகின் உன்னதமான தேசமாக மிளிரவைக்க முடியும் என்ற நம்பிக்கை உண்மையாகவே எனக்கு ஏற்பட்டுள்ளது. தமிழன் தற்போது சிந்திக்கத் தொடங்கி விட்டான். நமது எதிரிகளுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

இணையத்தில் இவாகளுக்கு பதிலளிக்க நமது பொன்னான நேரம் செலவானாலும், இதுவும் நாம் எதிர்கொள்ளும் போரின் ஒரு அங்கம் தான். அனைத்து முனைகளிலும் போராடுவோம். நமது நேரவிரயத்தைத் தவிற்கவும் புதிய உத்திகளை வகுப்போம்.

நமது கோரிக்கை ஞாயமானது. நமது வழிமுறை நேர்மையானது. நமது செயல்படாடு தொய்வில்லாதது. வெற்றி நமதே!

தமிழத்தேசத்தை மீட்டு, உலகெலாம் வள்ளுவம் சாரந்த, "சர்வதேசியத்தை" உருவாக்குவோம். உலகின் மூத்தக் குடியான நமக்கு அந்தக் கடமை உள்ளது.

மனிதன் ஒரு Social "Animal" என்று அவர்கள் செல்லமாக அழைக்கும், இந்த உலக மனிதர்களை நாம், "வள்ளுவ மாந்தர்களாக" மாற்றுவோம்.

ஏகாந்தனின் ஆதரவுக்கும் நன்றிகள்!

எனது மின்னஞ்சல்: [email protected]
இக்பால்
பாண்டியன் அவர்களே..

நான் ஒரு வாசகன்தானே தவிர படைப்பாளி அல்ல! பல்வேறு விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காக மட்டுமே இணையதளத்தை பயன்படுத்தி வருகிறேன். அவற்றில் இடம்பெறும் கட்டுரைகள் தொடர்பாக எனக்கு மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும், அவற்றை விவாதிப்பதில் எனக்கு இன்னும் தேர்ச்சி போதாது என்று எண்ணுகிறேன்.

தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற சிந்தனையோட்டம் கொண்டவன்தான் நான். நான் பிரேமா ரேவதியின் கட்டுரையைப் படிக்கவில்லை. மாறாக பூங்குழலியின் கட்டுரையை மட்டுமே படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில், பிரேமா ரேவதி கூறியுள்ளவற்றை குறிப்பிட்டு, அவற்றுக்கு தோழர் பூங்குழலி தகுந்த பதிலளித்துள்ளதைக் காண முடிந்தது. பிரேமா ரேவதியின் அரசியலையும் இனம்காண முடிந்தது.

எனினும், பின்னூட்டத்தில் தமிழ் என்பவர் பல்வேறு கேள்விகளையும், கருத்துக்களையும் முன்வைக்கிறார் எனும்போது, அதைப் படிக்காமல் இருக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை, தமிழின் பின்னூட்டங்களுக்கும் சேர்த்துத்தான், தோழர் பூங்குழலி பதிலளித்துள்ளதாக கருதுகிறேன். எனவே, ஈழ மக்களுக்காக கண்ணீர் வடிப்பது போல, நடிப்பவர்கள் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அவற்றை தோழர் பூங்குழலி போல அம்பலப்படுத்தும் வேலையைத்தான் நாம் செய்ய வேண்டும். அதற்கேற்ப நமது எழுத்துக்கள் இருக்க வேண்டும். இதுதான் எனது கருத்து.

மாறாக, நீங்கள் வெறுமனே ஆவேசப்பட்டு, எதிர்க்கருத்துடையோரை, தாறுமாறாக எழுதுவதாக நான் நினைக்கிறேன். கீற்று அதிகமாக மட்டுறுத்தியிருப்பதும், உங்களின் பின்னூட்டங்களைத்தான். இதன்மூலமே உங்களின் எழுத்து எப்படியிருக்கிறது என்பதை நீங்களும் புரிந்து கொள்வீர்கள்.

ஆவேசம் அவசியமில்லையா... என்று நீங்கள் கேட்கலாம். அவசியமானதுதான். ஆனால், அதன்மூலம் நாம் எதைச் சாதித்தோம்... உரிய முறையில் எதிராளிகளையும், துரோகிகளையும் அம்பலப்படுத்தி விட்டடோமா, அதற்கு இந்த ஆவேசம் உதவியாக இருக்கிறதா? என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். உலகில் எந்த இனத்திற்கும் நேராத கொடுமை, தமிழினத்திற்கு மட்டும் ஏற்படுகிறதே, இந்த இழிவைத் துடைக்க, உணர்ச்சிவயம் மட்டும் போதுமா? இவ்வளவு காலமாக உணர்ச்சிவயப்பட்டு எதைப் பெற்றிருக்கிறோம்...

நாம் பார்ப்பானை விமர்சிக்கிறோமே.. ஆனால், அவனிடமிருந்து "சாமர்த்தியமாக சாதிப்பது, எப்படி?" என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டுமா? இல்லையா?

இதைச் சொல்வதற்காக என்னை சட்டாம்பிள்ளை செய்வதாக கூறுகிறீர்கள்...
நீங்கள் டாக்டர்தானா? என்ற தொனியில் நான் கேட்டது நாகரிகம் இல்லைதான். அதற்காக வருந்துகிறேன்.

அதேநேரத்தில், நீங்கள் மட்டுமே உண்மையான தமிழ்த் தேசியவாதி என்று கருதினால் அதற்காக நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள்; தவறில்லை! ஆனால், மற்றவர்கள் யாரும் என்னைப் போல உண்மையாக இருக்க முடியாது என்று மட்டும் தயவுசெய்து கருதாதீர்கள். ஏனெனில் உங்களின் பின்னூட்டங்கள் பெரும்பாலும் அந்த தொனியையே தருகின்றன
Dr. V. Pandian
எனக்கு இன்று வந்த ஒரு மின்னஞ்சலின் ஒரு பகுதியை இங்கே பதிக்கிறேன்.

//

தேக்கடி படகு விபத்து பற்றி அறிந்ததும் பதட்டத்தோடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் செரியன் பிலிப்ஸை தொடர்புகொண்ட கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி ""நம்ம மலையாளிகள் யாராகிலும் இறந்தார் களோ...?'' என்று கேட்டார்.

"இல்லை... இல்லவே இல்லை'' என்றதும் நிம்மதியாக போனை கட் செய்தார். மலையாள தொலைக்காட்சிகள் கூட, ""நம்ம மலையாளிகள் யாரும் மரிக்கவில்லை. 13 வருடம் முன்பு கும்பகோணத்துக்கு போய்விட்ட 3 மலையாளிகள் படகு விபத்தில் இறந்திருக் கிறார்கள். அவர்கள் முழுக்க மலையாளிகள் இல்லை'' என்று ஃபிளாஷ் நியூஸ் ஓட்டிக் கொண்டிருந்தன.

இது என்னடா தேசம்!

//

தமிழன் மட்டும் தான் திராவிடனாக மட்டுமில்லாமல், இந்தியனாகவும் இருக்கிறான். மற்ற திராவிடர்கள் எல்லோரும் மலையாளியாகவோ, கன்னடனாகவோ அல்லது தெலுங்கனாகவோ தான் இருக்கின்றனர்.

படித்த தமிழர்களே! உறக்கத்திலிருந்து மீளுங்கள்! உங்களது பொது சேவைக்கான காலம் இது! தமிழன் மீது கட்டப்பட்ட முகமூடியைக் களைந்து, அவனது உண்மை அடையாளத்தை அவனுக்குக் காட்டுங்கள்.
Dr. V. Pandian
இக்பால் அவர்களே!

விவாதம் செய்ய உங்களுக்கு தேர்ச்சி போதாது என்று சொல்லியுள்ள உங்களின் இந்த இரண்டாவது பின்னூட்டம், இதை நிறுவும்படியாக இல்லை. உங்களிடம் விவாதத் தேர்ச்சி உள்ளது! உங்களுக்கு செய்திகள் தெரியாமல் இருக்கலாம். தெரிந்தவற்றை மட்டும் வைத்துக்கொண்டு, நேர்மையாக, தெரிந்த அளவில் மட்டுமாவது விவாதம் செய்ய வேண்டும். அனைத்தையும் தெரிந்தவர் உலகில் யாரும் இல்லை!!!!!!!!!!!!!!!

"தமிழ், தமிழர், தமிழ் நாடு என்ற சிந்தனையோட்டம் கொண்டவன் தான் நான்", "உலகில் எந்த இனத்திற்கும் ஏற்படாத கொடுமை தமிழினத்திற்கு மட்டும் ஏற்படுகிறதே" என்றெல்லாம் பதிவு செய்த உங்களுக்கு நான் சிறம் தாழ்த்துகின்றேன்.

ஆனால், உங்களின் இந்த இரண்டாவது மடலைப் பார்த்தவுடன், மீண்டும் உங்களது முதல் மடலைப் படித்துப் பார்த்தேன். ஏனென்றால், நான் தவறு செய்திருக்கக் கூடாதல்லவா? நீங்களும் மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்களேன்.........................!

என்மேல் உங்களுக்கென்ன அப்படி ஒரு தனிப்பட்ட சினம்? சானல் 4ல் காண்பித்ததைப் பொய் என்று சொன்ன பஞ்சமாபாதகன் மீது வராத சினம், என் மீது ஏன் தோழரே! அந்த ஆழ்மனது சினம் தான் எனது டாக்டர் பட்டத்தையும் கேவலப் படுத்தியது.

ஆனால், இந்த சினம் இன்னும் ஆரவில்லை போலத்தான் தெரிகிறது. எப்படிச் சொல்கிறேன் என்பதைக் காட்ட உங்களது வரிகளிலேயே....

//
நீங்கள் மட்டுமே உண்மையான தமிழ்த் தேசியவாதி என்று கருதினால் அதற்காக நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள்; தவறில்லை! ஆனால், மற்றவர்கள் யாரும் என்னைப் போல உண்மையாக இருக்க முடியாது என்று மட்டும் தயவுசெய்து கருதாதீர்கள். ஏனெனில் உங்களின் பின்னூட்டங்கள் பெரும்பாலும் அந்த தொனியையே தருகின்றன
//

நான் எப்போதுமே, எதற்குமே முற்றுரிமை கோறுவதில்லை. அது எனது பண்பாடு! ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக, தமிழ்த்தேசிய மற்றும் தமிழீழ கருத்துகள் சார்ந்து எனது பின்னூட்டங்கள் தான் கீற்றில் அதிகம் என்பது நான் சொல்லாமலேயே விளங்கும் விடயம் தான். எனது பின்னூட்டங்கள் மிகையாக வருவதாலேயே நான் இவற்றிற்கு முற்றுரிமை கோறுவதாக நீங்களாகவே நினைத்துக் கொண்டு என்னைத் தூற்றுகின்றீர்கள்.

எந்த ஒரு இணைய தளத்திலாவது தமிழுக்காக விவாதம் செய்து கொண்டு நீங்கள் இப்படி எழுதினால் அதில் பொருளுண்டு. நீங்கள் விவாதத்திற்கு தேரச்சி பெறாதவர் என்று சொல்லிக்கொண்டு, இது போன்ற விவாதங்களில் கலந்து கொள்ளாமல், அப்படி கலந்துகொள்ளும் ஒருவரைப்பற்றி இப்படித் தூற்றுவது ஞாயமா?

அடுத்தவர் மீது நாம் ஒரு விரலைச் சுட்டும் போது, நம்மை நோக்கி மூன்று விரல்கள் சுட்டுகின்றன. ஆகவே, அடுத்தவரை விமர்சிக்க உரிய தகுதி நம்மிடம் உள்ளதா என்று முதலில் பார்க்க வேண்டும்.

தோழரே! நான் ஒரு இயற்பியல் அறிஞர்! (இங்கே அறிஞர் என்பது நான் உணர்ந்தே எழுதுவது). எனக்கு அறிவியல் ஆய்வு என்றால் கொள்ளை ஆசை! நான் பிறப்பெடுத்ததே அறிவியலுக் காகத்தான்! ஆனால், நான் ஏன் இப்படியெல்லாம் பதிலெழுதிக் கொண்டிருக்க வேண்டும்?

ஜெயலலிதா என்ற ஒரு கூத்தாடி, கன்னடக் கூத்தாடி, தமிழகத்தில் பிழைக்க வந்தக் கூத்தாடி, இங்குள்ள பார்ப்பனச் சூழ்ச்சியால் ஆட்சியில் அமர்ந்து, வந்தேறியான இவர், இந்த மன்னின் மைந்தர்களை, 10 வருடங்கள் விசாரணையில்லாமல் கொடுஞ்சிறையி லடைக்கக்கூடிய "பொடா" வில் கைது செய்தது கண்டு வெகுண்டு, தமிழகத்தில் உள்ள "படித்தத்" தமிழனெல்லாம், என்ன "மசிரையா பிடுங்கிக் கொண்டிருக்கிறான்" என்று அங்கலாய்த்து, தமிழகம் வந்து, இப்படியெல்லாம் உங்களோடு போராடிக் கொண்டிருக்கிறேன்.

இக்பால், உண்மையிலேயே நீங்கள் தமிழின் மீது அளவற்ற பற்றுள்ளவராய் இருந்தால், எனது பணியை நீங்கள் சிறப்பாகச் செய்யுங்கள். நான் விலகிக் கொள்கிறேன். எனக்கென, "நான் மட்டுமே செய்யக் கூடிய பணிகள்" ஏராளம் உள்ளன. பொதுப் பணிகள் தாம்! அந்தப் பணிகளுக்கு நான் முற்றுரிமை "கோறக் கூடிய" தகுதியும் உள்ளது.!

அடுத்து, எனது பாணியை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன். யாருக்கு எப்படிப் பதில் சொல்வதென்பது எனக்குத் தெரியும். உணர்ச்சியால் தமிழன் என்ன சாதித்தான் என்று கேட்டுள்ளீர்கள். இது பச்சைப் பொய். தமிழன் ஒரு சண்டி மாடு போன்றவன். சான்று வேண்டுமா?

"ஆஸ்திரியாவில்" சீக்கியக் குழுச்சண்டை. ஒரே ஒரு மதகுரு கொலையுண்டான். பஞ்சாபே எரிந்தது. இது இந்தியாவின் தவறல்ல! ஆனால், மன்மோகன் மன்னிப்புக் கேட்டார். கைதுகளே இல்லை!

அதே காலகட்டத்தில், இந்தியாவின் பச்சை துரோகத்தால், "ஒரே நாளில்" 20,000 தமிழர், கொடூரமாக கொலை செய்யப் பட்டனர். இந்தியா ஒரு குற்றவாளி! எவனும் மன்னிப்பு கேட்கவில்லை! தட்டிக் கேட்டப் பலர் "தேசிய பாதுகாப்பு சட்டத்தில்" கைதானார்கள்.

தமிழன் சொரணை கெட்ட பேடிகளாக, எவனுக்கோ சிறைத்துக் கொண்டிருந்தான். தமிழகமே தெருவுக்கு வந்திருந்தால் 20,000 பேரையாவது காத்திருக்கலாம்.

நீங்கள் நாகரிக மனிதராக வாழுங்கள் தோழரே! நான் வேறு மனிதன்!

மாந்தருக்கு மாந்தன்! மிருகத்திற்கு மிருகம்!!

இன்றும் நாம் வாழ்வது, பண்படாத "கானகத்தில்" தான். இங்கு வாழும் தத்துவம் என்பது "Survival of the Fittest".

இந்திய மன் பௌத்தத்தை வீழ்த்திய மன்! அந்தப் பட்டறிவினால் "பட்டை" தீட்டப் பட்டவன் நான்.

நான் வள்ளுவத்தைப் பற்றிப் பேசுவதெல்லாம் for the Post Tamil National Times!

கீற்றுவிற்கு ஒரு வேண்டுகோள்:

இந்த மடலில் உள்ள சில சொற்களுக்கு நட்சத்திர அந்தஸ்த்து கொடுக்க வேண்டாம். இந்த எனது சினம் அடுத்தவருக்கும் தொற்ற வேண்டும்!
சிறுத்தை
தமிழ் ‘நாட்டு’ மீனவர்களை சுட ஆரிய ‘இந்தி’ யா இலங்கை கடற்படைக்கு பயிற்சி!
source:http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18074
தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல் எப்போதும் தமிழினத்தை குறிவைத்து தாக்கும் இந்தியா தற்போது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டு விளையாட பயிற்சி வழங்கியுள்ளது.. ஏற்கனவே ஈழ தமிழர்களின் கதையை முடித்தாகிவிட்டது.. இனி அடுத்து தமிழக தமிழர் தானே! அதுதானெ முறை?

இதை எடுத்து சொன்னால் இந்தி தேசிய அடிப்பொடிகள் சீனா பாகிஸ்தான் என்று.. பசப்புவார்கள் அவர்களிடத்தில் ஒன்றைதான் நாம் கேட்க முடியும்..ஏன் சிங்களன் உங்கள் அக்கா தங்கையின் மீதி மையல் கொண்டுவிட்டால் .இதைதான் சொல்வீர்களா? நாம் பெண்ணை சப்ளை செய்யவில்லை என்றால் சீனாக்காரனும் பாகிஸ்தான்காரனும் சப்ளை செய்து விடுவார்கள் என்று?..இவர்கள் செய்தாலும் செய்வார்கள் ஏன் விளக்கு கூட பிடிப்பார்கள் …இப்படித்தானே இந்தியத்தால் இவர்களுக்கு மூளை சலவை செய்யபட்டுள்ளது..

அவர்களை விடுங்கள்..மீனவ சமுதாய மக்களே! உங்கள் இரண்டு குப்பத்து மக்களிடையே சண்டை என்றால் இரண்டு குப்பங்களும் பற்றி எரிகிறது..எல்லையில்லாத கடலுக்குள்ளே உங்களுக்குள் எல்லை தகராறு வருகிறது.. ஆனால் உங்களை தினந்தோறும் சுட்டு கொல்லும் சிங்களினிடத்தில் ஏன் ஒருமுறை கூட திருப்பிதாக்கவில்லை? அவனிடத்தில் துப்பாக்கி இருக்கிறது சரி நீங்களும் துப்பாக்கி ஏந்தலாமே? ஏன் நீங்கள் இன்னும் போராளியாக மாறவில்லை.. அதிகமாக மீன் பிடித்தால் வருமான வரித்துறைக்காரன் 6DD(e) of Rules, 1962 பிரிவின் படி உங்கள் வீட்டு வாசலை தட்டுகிறானே அந்த களவாணிகளையாவது ஒரு நாள் சிறைபிடித்து வைத்தீர்களா? மற்றும் ஒரு செய்தி தமிழக மீனவர்களை காப்பாற்ற தமிழ்நாடு மீனவளத்துறை அதிரடி நடவடிக்கை..என்னமோ ஏதோ என்று பார்த்தால்.. கச்சதீவை தமிழக மீனவர்கள் நெருங்க கூடாதாம்.. மாற்று வழியாக ராமேசுவரம் மீனவர்களை தேவிபட்டினத்தில் மீன் பிடிக்க சொல்கிறார்கள்..அடபாவமே! அதை விட ஊர் ஏரி குளத்தில் மீன் பிடிக்க சொல்லலாமே?

கட்சதீவுக்கு ஒரு நீதி என்றால்..காசுமீருக்கும் அதே தான் தீர்வு..உடனடியாக ஒப்ப்ந்தம் போட்டு காசுமீரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இணைத்துவிடல் வேண்டும்..செய்வார்களா? இந்தி அரசியலில் காலங்காலமாக ஊரை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் காசுமீர் பண்டிட்டு குடும்பத்திற்கு ஆப்பு இறங்குமல்லவா?சிங்களவன் தனது பரம் எதிரியாக நினைப்பது இந்தி யர்களை அல்ல! ஈழத்து தொப்புள் கொடி உறவுகளாக உள்ள நம்மைத்தான்!.. இந்திகாரர்கள் எதிர்காலத்தில் சிங்களவன் கேட்கிறான் என்றால் நம்மையும் விற்க தயங்க மாட்டார்கள்.. எனவே தமிழக தமிழர்கள் அரசியல் வியாதிகளை நம்பி தந்தியடிப்பது.. உண்ணாவிரதம் இருப்பது.. தெரு முக்கில் கத்திவிட்டு வீட்டிற்கு போய் இழுத்து போர்த்தி தூங்குவது போன்ற காலத்திற்கு ஒவ்வாத செயல்களை கைவிடல் வேண்டும்.. இன்று எத்தனை சிங்குகள் ..மலையாளிகள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்? இது எல்லாம் இளிச்சவாய் தமிழர்கள் நமக்குத்தானே?

இதற்கு தீர்வு எல்லாம் தமிழ்”நாடே”.. சாதி சமயங்கள் அற்ற சோசலிச தமிழ்நாட்டை அமைப்பதே இன்று நம் கண் முண் உள்ள தீர்வாகும்..ஆயுத வழி போராட்டமோ அறவழி போராட்டமோ.. எதுவாக இருந்தாலும் தமிழ்தேசிய தோழர்களுக்கு இன்று தேவைபடுவது தொலைநோக்கு பார்வை.. அதாவது தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் தேசிய உணர்வை ஊட்டுவதோடு.. அணுக்கரு..வேதியல் ..உயிரியல் ஆயுதங்கள் பற்றிய அறிவை ஊட்டுவதாகும்.. அதுவே நம் மீது கைவைக்க எவனுக்கும் அச்சத்தினை ஊட்டும்.. நமக்கு இங்கே இடமில்லையென்றால் வேறு எவனுக்கும் இங்கே இடமில்லை.. இவ ர்களை சுளுக்கெடுப்பதே நமது முதற்கடமை!! தமிழ்தேசிய தோழர்கள் செய்வார்களா?
த.வெ.சு. அருள்
பாண்டியனாரே!

வாழ்த்துக்கள்!

உங்களுடைய ஆவேசம் இயல்பானது என்பதை உண்மை தமிழர் உணர்வர்.

தொடர வேண்டும் உங்களது பணி.

- த.வெ.சு. அருள்
Tamil
//அப்படிப்பட்ட தலமையை ரவுடி என்று அழைப்பவர் எப்படி நாகரீகமான மனிதராக இருக்கமுடியும்//

நன்றி நன்பர் ஏகாந்தன். 'ரவுடி' என்ற சொல் நான் பயன்படுத்தியதல்ல. எனது பதிவு "நீங்கள் குறிப்பிட்ட ரவுடிக்குத் தெரிந்த அரசியல்தான்" ரவுடி என்ற வார்த்தைப் பிரயோகம் கட்டுரையாளருடையது, அதை நான் எடுத்து கையாண்டிருந்தேன்.

//நீங்கள் தேசிய தமிழரா?..சர்வதேசியவியாதிகள் தமிழரா?.. இல்லை ஈழத்தமிழரா மன்னிக்கவும் இலங்கை தமிழரா?,சுகன்- சோபாசக்திதமிழரா?கருணா தமிழரா?..அல்லது ராம்,சோ.,தமிழரா?//

இப்படிப்பட்ட அடைமொழிகள் இல்லாமல் யாராலும் இவ்வுலகில் வாழ இயலும். அத்தகையோரையும் நீங்கள் மனிதராகக் கணக்கில் கொள்ளுங்கள். அடுத்த மனிதனின் துன்பம் கண்டு துடிக்கவும் அத்துன்பத்தை நீக்குமுகமாக தன்னால் முடிந்த ஏதாவது செய்ய வேண்டும் என்ற பதைப்பும் ஒருவனுக்கு இருந்தால் போதுமானது, உங்கள் அடைமொழிகள் ஏதுமே தேவையில்லை.

//தமிழரே சாதாரண போராளிகள் என்றால் யார்?//

சாதாரண போராளிகள் என்று நான் குறிப்பிட்டது உணர்ச்சிவேகத்தின் அடிப்படையில் மற்றும் துப்பாக்கிமுனையில் இயக்கத்தில் சேர்க்கப்பட்டு விவேகமற்ற தலைமையால் மூளைச்சலவை செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களை.

//அய்யா தமிழரே காயம்பட்டு உயிருக்கு போராடும் நிலயில் அடைக்கலமாக வந்தவருக்கு முதலில் அவருக்கு உரிய சிகிச்சை அளித்து அந்த உயிரை காப்பாற்றுவதுதான் மனித நேயம்.//

இது நீங்கள் கூறியது.

//சிகிச்சைக்காக வந்த அவர்களைப் 'பயங்கரவாதிகள்" என கைது செய்தது இந்திய-தமிழக அரசு. ஓராண்டல்ல.. ஈராண்டல்ல.. 8 ஆண்டுகள் காவல்துறையின் பாதுகாப்பில் பல்வேறு மன உளைச்சல்களுக்கு ஆளாக்கப்பட்டு மருத்துவமனையிலேயே சிறை வைக்கப்பட்டார் கவுதமி.//

இது கட்டுரையாளர் கூறியது. மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கட்டுரையாளரே கூறியிருக்கும்போது நான் ஏன் அதை மறுக்கப்போகிறேன்?

//“புலிகள் தங்கள் ஆட்சிகாலத்தில் தங்கள் மக்களுக்குச் செய்ததுஎன்ன?.பிணைநிறுத்திவிட்டுதான் மக்கள் ஊரைவிட்டுச் செல்லவேண்டும் என்பது சுதந்திரத்தின் எந்தவகை? அய்யா தமிழரே நீங்கள் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் நன்றாகத்தான் முடிச்சுபோடுகிறீகள். //

மொட்டைத்தலையும் முழங்காலும் ஒரே உடம்பில் இருக்கும்வரை இரண்டும் தொடர்புடையவை தாம். என்னுடைய அடிப்படைக் கருத்தே ஈழத்தமிழரின் தற்போதைய துன்பங்களுக்கான காரணங்களில் புலிகளும் ஒன்று என்பதுதான். மொட்டைத்தலையாலும் முழங்காலினாலும் ஈழத்தமிழன் துன்பம் அனுபவிக்கிறான்.

//ஆனால் பலருக்கும் ஞாபகம் வருவது புலிகளிடமிருந்து புலிகளின் துப்பாக்கி குண்டுகளையும் மீறி உயிர்தப்பி சென்றவர்களோடு கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று ராணுவ முகாம் முன்பு மனிதவெடிகுண்டாக வெடித்து ஒட்டுமொத்த தமிழ் அப்பாவிகளையும் ஏற்கனவே வெறிகொண்டு துவம்சம் செய்யும் ராணுவ எந்திரத்தின் கண்களுக்கு பயங்கரவாதிகளாகக் காட்டி தமிழ் மக்களுக்குப் புலிகள் செய்த சேவைதான்”
மீண்டும் தமிழரே நீங்கள் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் நன்றாகத்தான் முடிச்சுபோடுகிறீகள்.இது இவர்மற்றும் ராம் ஆகியோரின் HIS MASTERS VOICE ராஜபக்க்ஷேவினுடையதுதான்.//

சம்பவம் நடக்கவில்லை என்றால் ஆதாரம் காட்டி மறுக்கவேண்டியதுதானே. ஏன் அவதூறு செய்கிறீர்கள்? ஈழ தமிழர் பற்றிய செய்திகளைப் பொறுத்தவரை வரும் செய்திகளில் எது உண்மை எது பொய் என்று புரிந்துகொள்ளவே முடியவில்லை. பலமுனைகளிலிருந்து வரும் தகவல்களை வைத்தும் எதிர் தரப்பிலிருந்து வரும் மறுப்பு அறிக்கைகளை வைத்தும் ஒரு தகவலின் உண்மைத்தன்மையை சோதனைக்குள்ளாக்கித் தான் உண்மையைக் கண்டடையவேண்டியிருக்கிறது. மேற்கண்ட செய்தி பிபிஸி வெளியீடு என ஞாபகம். உங்களிடம் இதுகுறித்த ஆதாரம் இருந்தால் தரவும், என் கருத்தை மாற்றிக்கொள்கிறேன்.

//அய்யா தமிழரே இன்றைய உலகை சற்று கூர்ந்து கவனியுங்கள .............. உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நலனை முன்னிட்டு நியாயமான் ஈழமக்களின் விடுதலை போராட்டத்தை பலிகொண்டுவிட்ட்னர். இதுதான் உண்மை.//

முதலாளித்துவ அரசுகளின் நிலை இந்தப் பிரச்சனையில் மட்டுமல்ல எந்தப்பிரச்சனையிலும் இப்படித்தான் இருக்கும், அதனால் தான் அவற்றை எதிர்க்கவேண்டியுள்ளது. ஆனால் ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்நாடுகள் எடுத்த நிலைகளை நியாயம் எனக்கருதும் வகையிலேயே புலிகளும் பல்வேறுகாலகட்டங்களில் நடந்துகொண்டனர். புலிகளின் இவ்வகையான நடவடிக்கைகள்தான் முதலாளித்துவ நாடுகளிலுள்ள ஜனநாயக, மனித உரிமை ஆர்வலர், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்களை இம்மாதிரி சிந்திக்க வைத்தது என்பதுதான் உண்மைநிலை.

//” புலிகள் போர்நிறுத்ததிற்கு தயார் என்று கூறிய கட்டத்தில்,வெறிபிடித்த இலங்கை ராணுவத்தைவிடுங்கள் வெற்றியின் விளிம்பில் இருக்கும் எந்த யுத்தஎந்திரமாவது போரை நிறுத்த முன் வருமா?”//

இதற்கு அர்த்தம் மக்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்துவைத்துக்கொண்டு அவர்களின் அழிவை சர்வதேச (முதலாளித்துவ என படிக்கவும்) சமூகத்திற்கு படம்பிடித்துக் காட்டி அவர்களின் மனசாட்சியை உலுக்கி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டின் மூலமாக தங்கள் தலைமையினருக்கு தப்பிப்போக வழிகிடைக்கும் என்ற நினைப்பில் தங்கள் கைவசமிருந்த கடைசித் தோட்டா தீரும் வரை சுட்டுவிட்டு அதன்பின் ஆயுதங்களை 'மௌனிக்கிறோம்' என்பது எந்தவகைப் போர்த்தந்திரத்தில் சேர்த்தி என்பதுதான். உங்கள் போன்றவர்களுக்கு புலிகள் மீதுள்ள மோகத்தினால் அப்பாவி மக்களின் துன்பம் புரியவில்லையா? இந்த தந்திரம் முட்டாள்தனமானது மட்டுமல்ல, ஒருகாலமும் ஏற்றுக்கொள்ள முடியாத்தது என ஏன் எற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்?

//கொஞ்சம் முன்னால் தான் உங்கள் முகாம்களில் புலிகளும் இருப்பதால் தான் இலங்கை அரசின்சிறை வைப்பு நியாய்ம் என்று கூறினீர்கள்..//

சிறைவைப்பு நியாயமானது என்பதல்ல அதன் பொருள். இலங்கை அரசின் பார்வையில் நியமானது என்பதுதான். போர்க்குணமும் அறம் சார்ந்த வலுவும் இருக்குமானால் சரணடைந்த புலிகள் தாமாக தங்களை வெளிப்படுத்திக்கொண்டு விளைவுகளை ஏற்கத்தயாராகி அப்பாவி மக்களைத் துன்பத்திலிருந்து விடுவிக்க உதவிசெய்ய வேண்டும் என்பதுதான்.

//அய்யா தமிழரே இன்னும் உமக்கு தமிழர்களின் மீது வெறுப்பும்,வன்மமும், அவர்களை வேரோடும் வேரடிமண்ணோடும் பிடுங்கிஎறியவேண்டும் ஆவேசமான் உணர்வும் இருப்பதை புரிந்துகொண்டோம்..//

????????? !!!!!!!!!!!!

//ஈழத்த்மிழர்களை முற்றாக ஒழித்தால் தான் ஈழவிடுதலைப் போரும் முடிவிற்கு வரும் என்று நினைக்கிறீர்கள்.//

இல்லை, ஒருபோதும் இல்லை. புலிகளின் கருத்தியலை ஒழித்தால்தான் ஈழத்தமிழரின் உண்மையான பிரச்சனை குறித்த தீர்வுகளை முன்னெடுப்பதற்கான சூழ்நிலை உருவாகும். ஈழத்தமிழர் பிரச்சனையின் தீர்விற்கு இன்னமும் வெகுதூரம் செல்லவேண்டியுள்ளது. புலிகளின் வீழ்ச்சி என்பது ஒரு 'contributing cause' னுடைய தீர்வு மட்டுமே.

மற்றபடி உங்கள் பதிவில் வெளியாகும் ஈழத்தின் அப்பாவி மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பேரழிவு உங்களிடம் ஏற்படுத்தியிருக்கும் பெரும் வலியிலும், அது ஏற்படுத்தியிருக்கும் பெருங்கோபத்திம், ஏதாவது ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்ற ஆற்றாமை உணர்விலும் நானும் பங்கு கொள்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.
Prema Revathi
https://www.facebook.com/notes/prema-revathi/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/10154283497355864

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.