”மாதா கோயிலில் மணியடிக்கிறது.
புறாக்கள் பறக்கிறது...!
மாரியம்மன் கோயிலில் போய்
உட்கார்ந்து கொள்கிறது..!
மாரியம்மன் கோயிலில் மணியடிக்கிறது...!
புறாக்கள் பறக்கிறது...!
மசூதியில் போய் உட்கார்ந்து கொள்கிறது..!
புறாக்களுக்கு இருக்கிற புத்திக் கூட..
சில மனிதர்களுக்கு ஏன் இல்லாமல் போகிறது..?”

என்று தொடங்கும் ஒரு அற்புதமான கவிதை படித்தேன். அது முன்பொரு நாள் படித்த கல்கத்தா நகரின் சம்பவம் ஒன்றை நினைவுப்படுத்தியது.

கல்கத்தா நகரின் நெரிசல் மிகுந்த பரபரப்பான சாலை ஒன்றில் காளி கோயில் பூசாரி ஒருவர் சாலை விபத்தில் அடிபட்டுக் கிடந்தார். போவோரும் வருவோரும் வேடிக்கை பார்க்க ஒருவரும் உதவ முன்வரவில்லை. ரத்த பெருக்கில் நினைவிழந்தார். நினைவு மீண்ட போது அவர் மருத்துவமனையில் இருநதார். தன்னை இங்கு வந்து சேர்த்தது யார்? என அறிய விரும்பினார். அப்போது ஒரு வயதான அம்மாவை அறிமுகம் செய்து வைத்தர்கள். "அன்னை தெரசா” என்று..!  அந்த காளி கோயில் பூசாரி சொன்னார்.” நான் முப்பது வருடங்களாக காளியை பூசை செய்து வருகிறேன். அப்போது எல்லாம் என் கண்களுக்கு காட்சி தராத காளி அன்னை தெரசாவின் வடிவத்தில் எனக்கு காட்சி தருகிறாள்”. இது தான் இந்திய தேசத்தின் மதச் சார்பின்மை.

இதை கெடுக்க நினைக்கும் தீய சக்திகளின் வரலாறு நீண்ட நெடியது. ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியான கொடுமை இன்னும் தொடரும் அவலம் நீள்கிறது. இந்திய திருநாட்டில் சுதந்தரப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் இந்துத்துவம் ஓங்கி வளர்ந்து இருந்தது. "காங்கிரஸ்காரர்களுக்கு கதர் உடுத்தவும் அகிம்சையாக வாழவும் அறிவுறுத்தவும் செய்கிற நீங்கள் ஏன் தீண்டாமையை மறுக்க கற்றுத் தரவில்லை?” என காந்தியைப் பார்த்து அண்ணல் அம்பேத்கர் கேட்டார்.

இந்து மதத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்ட காந்தியால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.ஆனாலும், அவர் பிற மதத்தின் மீதும், அதன் உயரிய கருத்துக்கள் மீது மரியாதை கொண்டிருந்தார். தான் நம்பிய மதத்தாலும் தேசத்தாலும் அவருக்கு மரணம் நிகழ்ந்தது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லவாய் பட்டேல் நான் சொல்வதையே கேட்பதில்லை. காந்தி படுகொலைக் குறித்த விசாரணை நேர்மையாக நடைபெறவில்லை என்று பிரதமர் நேருவின் வாக்குமூலம் பதிவாகி இருக்கிறது.

பெரும்பான்மை மக்கள் வன்முறையில் ஈடுபடும் போது அது தேச பக்தியாக பார்க்கப்படுவதும், சிறுபான்மை மக்கள் திருப்பித் தாக்கினால் அது தீவிரவாதம் என்பதும் மிகவும் ஆபத்தான் மனப்போக்கு” என்று நேரு குறிப்பிட்டது, இன்று வரையிலும் தொடர்கிறது. காந்திக்கு நேர் எதிரான ஆளாக ஜின்னா இருந்தார். அய்ரோப்பிய கலாச்சாரத்தில் மூழ்கி குடியும் கும்மாளமாக வாழ்ந்தவர். காங்கிரஸ் இருக்கும் போது எதற்கு முஸ்லிம் லீக்? என வினவியவர். தொழுகை போன்ற இஸ்லாமியக் கொள்கையை மறுத்தவர். முஸ்லிம்கள் வெறுக்கும் பன்றிக்கறியை விரும்பி உண்டவர். காலப்போக்கில் அவரையே திசை மாற வைத்து, தனி நாடு கேட்க வைத்த பெருமை இந்துத்துவவாதிகளுக்கே போய் சேரும்.

”தப்பிப்பதற்கான..
எல்லா வாசலையும் அடைத்து விட்டு..
பூனையை எதிர்கொள்..!
அங்கே புலியைக் காண்பாய்..!”

என்கிறார் மக்கள் கவிஞர் இன்குலாப். ஜின்னாவிற்கு நிகழ்ந்தது அது தான். பாகிஸ்தானை அவர் ஒரு மத சார்பற்ற நாடாகவே அவர் உருவாக்கினார். பிற்காலத்தில் அதுவும் மதவாதிகளால் மாற்றப்பட்டது. இந்து மத வழிபாட்டிற்கு எதிரானவர்கள் அனைவரும் அன்னியர்கள் என்பது திலகர் போன்றவர்களின் கோட்பாடு. அதனால் தான் ஆங்கிலேயனை அச்சுறுத்த தொடங்கப்பட்ட விநாயகர் ஊர்வலம் இன்றும் இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்கு பயன்படுகிறது.

விநாயகப்பெருமான் யாருக்குமே கிடைக்காத ஞானப்பழம் வேண்டும் என்கிற சூழலில் கூட வெளியில் ஊர்சுற்ற விரும்பாதவர். அவரை வைத்து கொண்டு அரசியல் உள்நோக்க ஊர்வலமா? என கேட்கிறார் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். ஒரு அரசியல் தலைவன் எப்படி இருக்க வேண்டுமென அவரே குறிப்பிடுகிறார்.

காந்தியார் ராமராஜ்யம் வர வேண்டும் என சொன்னதைப்போலவே, அது கலீபா உமர் அவர்களின் ஆட்சியைப் போலவே, அது நேர்மையாக இருக்க வேண்டும்” என்றார். உமர் அரபு தேசத்தின் அதிபராக இருக்கும் போது கிறிஸ்துவ நாடுகளுக்கு அரசு முறை பயணமாக செல்கிறார். ஜெருசலேம் தேவாலயத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தொழுகைக்கான் நேரம் வந்தது. உமர் தொழுகை செய்ய இடம் தேடினார். பாதிரியார்கள் அன்போடு சொன்னார்கள், எங்கள் தேவாலயத்தின் ஒரு பகுதியிலேயே தொழுகை செய்து கொள்ளுங்கள் என்று. உமர் மறுத்தார் வெட்ட வெளியில் வந்து தொழுகை செய்தார். பிறகு விருந்து நிகழ்ந்தது. எங்கள் தேவாலயம் என்ன உங்கள் தொழுகைக்கு தீட்டா? என பாதிரியார்கள் வினவினர். உமர் பொறுமையாக பதில் சொன்னார். “நான் தொழுகை செய்து விட்டு சென்றால் வரலாற்றில் உமர் தொழுகை செய்த இடம் என குறிப்பிடப்படும். ”நீங்களும் நானும் மறைந்து விடுவோம்.அடுத்த தலைமுறை வரும். உமர் தொழுகை செய்த இடம் ஒரு போதும் தேவாலயமாக இருக்க முடியாது. மசூதியாக மட்டுமே இருக்க முடியும்.. என்று கடப்பாரையோடு இடிக்க காட்டுமிராண்டித்தனமாக திரளக் கூடும். ஒரு அரசியல் தலைவன் அடுத்த தலைமுறையின் அமைதிக்கும் சேர்த்து சிந்திக்க வேண்டும்.” என்றார்.

உமரின் அறிவு நாணயம், அரசியல் நேர்மை, நம்ம அரசியல்வாதிகளுக்கு வந்து விட்டால் சமூக நல்லிணக்கதிற்கு ஆபத்து நேராது. பாபர் மசூதி இடிக்கப்பட்டு இருக்கிறது. இத்தனை குண்டுவெடிப்புக்கு தேசம் ஆளாகி இருக்காது. மத வெறியற்ற சமூக நல்லிணக்கம் காப்பதில் தான் உண்மையான தேசபக்தி இருக்கிறது. நாம் தேசம் காப்போம்.

- அமீர் அப்பாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

5 comments

5
இந்துத்தமிழன்
மசூதியில் பாங்கு ஒலி கேட்டு புறாக்கள் பறக்கின்றன, அவை மாரியம்மன் கோவிலில் உட்கார்கின்றன. புறாக்களுக்கு இருக்கிற புத்திகூட சில
மனிதர்களுக்கு ஏன் இல்லை என்றும் கவிதை எழுதுங்கள். காளி கோவில்
பூசாரிக்கு தெரசா உதவி செய்தாரா? ம்ம். அப்புறம் அவர் கிறிஸ்துவராக ஆகி வாடிகனில் போப்பாண்டவராக ஆனார் என்றும் கதை விடுங்கள். இந்துக்களை
பிச்சைக்காரர்களாக காட்டுவதில் உங்களுக்கு நிகர் யார்? வாழ்நாள் முழுவதும் தீண்டாமைக்கு எதிராக போராடிய காந்தியை இப்படி கேவலப்படுத்துகிறீர்கள். பெரும்பான்மை மக்கள் வன்முறையில் ஈடுபடும் போது
தேசபக்தியாகவும் சிறுபான்மை மக்கள் திருப்பித் தாக்கினால் அது திவீரவாதமாகவும் பார்க்கப்படுகிறதா? சிறுபான்மை மக்கள் வன்முறையில் ஈடுபட்டு பெரும்பான்மை மக்கள் திருப்பித்தாக்கினால் அதற்கு பெயர் என்ன?
பாகிஸ்தானில் பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லீம்கள் சிறுபான்மை இந்துக்கள் மீதும் கிறிஸ்துவர்கள் மீதும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லீம்கள் சிறுபான்மையாக இருக்கும் சீக்கியர் மீதும் இந்துக்கள் மீதும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். பங்களாதேஷில் பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லீம்கள் சிறுபானமையாக இருக்கும் இந்துக்கள் மீது வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.
இந்தோனேஷியாவில் பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லீம்கள் சிறுபான்மையாக இருக்கும் இந்துக்களது பாலித்தீவில் குண்டுகளை வைத்து வெடிக்கிறார்கள்.
அமெரிக்காவில் சிறுபான்மையாக இருக்கும் முஸ்லீம்கள் அங்கு டைம்ஸ்குயரில் குண்டு வைத்து வெடிக்க முயற்சி செய்கிறார்கள். (முஸ்லீம்
நாடுகளுக்குள்ளேயே ஷியா பிரிவினர் சுன்னி பிரிவினர் மசூதிகளில் குண்டுவைக்கிறார்கள். சுன்னி பிரிவினர் சியா பிரிவினர் மசூதிகளில் குண்டு வைக்கிறார்கள். ஈரானில் சிறுபான்மையாக இருக்கும் சுன்னிகள் ஷியா
மசூதிகளில் குண்டுவைக்கிறார்கள். பாகிஸ்தானில் பெரும்பான்மையாக இருக்கும் சுன்னிகள் அங்கும் அஹ்மதியா, ஷியா பிரிவினர் மசூதிகளில்
குண்டுவைக்கிறார்கள்) இங்கிலாந்தில் சிறுபான்மையாக இருக்கும் முஸ்லீம்கள் அங்கு குண்டு வைத்து வெடிக்கிறார்கள். இந்தியாவில் சிறுபானமையாக
இருக்கும் முஸ்லீம்கள் இங்கும் குண்டுகளை கோயம்புத்தூர், மும்பை, கல்கத்தா, டெல்லி, ஆமதாபாத், ஹைதராபாத் என்று வெடிக்கிறார்கள். இது
பெரும்பான்மை சிறுபான்மை பிரச்னை இல்லை. இது வன்முறை கலாசாரம் கொண்ட ஒரு மதத்தினரின் வெறியாட்டம். பாகிஸ்தானில் பெரும்பான்மையாக இருக்கும் சுன்னி பிரிவினர் சியா பிரிவினர் மசூதிகளில் குண்டு வைத்து கொன்றால், ஷியா பிரிவினர் திருப்பித்தாக்குகிறார்கள். ஆனால், அஹ்மதியா பிரிவினர் திருப்பித்தாக்குவதில்லை. திருப்பித்தாக்க பலம் இல்லை. இந்துக்கள் பாகிஸ்தானில் வன்முறையில் ஈடுபடுவதில்லை. இந்துக்கள் பங்களாதேஷில் வன்முறையில் ஈடுபடுவதில்லை. நேபாளத்தில் பெரும்பான்மையாக இருக்கும்
இந்துக்கள் சிறுபான்மை முஸ்லீம்கள் மீதோ அல்லது சிறுபான்மை பௌத்தர்கள் மீதோ வன்முறையில் ஈடுபடுவதில்லை. இந்தோனேஷியாவில் சிறுபான்மையாக இருக்கும் இந்துக்கள் அங்குள்ள பெரும்பான்மை மீது வன்முறையில் ஈடுபடுவதில்லை. மௌரீஷியஸில் பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்கள் அங்குள்ள சிறுபான்மையினர் மீது வன்முறையில் ஈடுபடுவதில்லை. பிஜித்தீவில்
சிறுபான்மையாக இருக்கும் இந்துக்கள் அங்குள்ள பெரும்பான்மை கிறிஸ்துவர்கள் மீது வன்முறையில் ஈடுபடுவதில்லை. ஆனால் இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான இந்துக்கள் நூறு கோடி இந்துக்கள்
பொறுத்துத்தான் போகிறார்கள். முஸ்லீம்களின் இவ்வளவு கொலைவெறி தாண்டவத்துக்குப் பிறகும் நூறு கோடி இந்துக்கள் பொறுத்துத்தான் போகிறார்கள். அவர்களை நீங்கள் எல்லோரும் திட்டிக்கொண்டே இருந்தால், அந்த பொறுமை போகும். அது இந்துக்களுக்கும் நல்லதல்ல. அதனால்தான் இப்படிப்பட்ட
பொய் பிரச்சாரத்தை செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்துத்தமிழன்
ஆமாம் உமர் முஸ்லீம்களை பற்றி எவ்வளவு கரெக்டாக எடை போட்டிருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. குரானை படித்திருப்பார் என்று நினைகிறேன். அதனால்தான் முஸ்லீம்கள் எப்படி முஸ்லீம் அல்லாதவர்களுடன் நடந்துகொள்வார்கள் என்று சரியாக புரிந்து வைத்திருக்கிறார். காந்தி ஒரு
சர்ச்சில் கும்பிட்டார் என்றால் இந்துக்கள் மசூதியை உடைத்து கோவில் கட்டுவார்களா? அல்லது நேரு ஒரு மசூதியில் கும்பிட்டார் என்றால், அதனை
காரணம் காட்டி மசூதியை உடைத்து கோவில் கட்டுவார்களா? முஸ்லீம்கள் மட்டுமே
மற்றவர்களது கோவில்களை காட்டுமிராண்டித்தனமாக உடைத்து அங்கு மசூதி கட்டுவார்கள் என்பதை நன்றாக
புரிந்து வைத்திருக்கிறார் உமர். பாராட்டுக்கள்.
நிலா
உமரின் உயர்ந்த உள்ளத்தை பாராட்டுகிறேன். அவருக்கு இருக்கும் குணத்தை முஸ்லீம்கள் முன்மாதிரியாக கொள்ளவேண்டும். இதுவரை இஸ்லாமியர்கள் இந்தியாவில் ஆக்கிரமித்துள்ள கோவில்களை இந்துக்களிடமே கொடுத்துவிட்டு விலகவேண்டும்.

முஸ்லீம்களால் உடைக்கப்பட்டு மசூதிகளாக்கப்பட்டுள்ள ஏராளமான கோவில்களது பட்டியலை இங்கே இடுகிறேன். அவற்றை திரும்பவும் இந்துக்களிடமே தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த கருத்தை அமீர் அப்பாஸ் போன்ற நடுநிலையாளர்கள் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்
தேவதை
நல்ல கட்டுரை.. அருமையான மேற்கோள்கள்.. தொடரட்டும்...
Guest
இந்த அ.அ. சொல்ல வருவது இதுதான்.....தீண்டாதாகாதவர் என்று கருதப்பட்தவர்களுக்காக பொர்றாடி அவர்களை ஹரிஜான் என்று அன்பாக அழைத்த காந்தி வர்ணசாரமத்தை தூக்கிப்பிடித்தவர்....!! சந்தர்பவாத அரசியல் புரிந்து முஸ்லிம்களுக்கு இருக்கும் பிற மாத வெறுப்பை பயன்படுத்திய ஜின்னா பால் குடிக்கிற பூனை....!!

இவர்களின் மன நிலை நன்றாக வெளிப்படுகிறது. முஸ்லிம்களுக்கு உண்டான எந்த நெரியாயும் மதிக்க விட்டாலும் ஜின்னா முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக பொட்டிரப்டவேண்டியவர். உயர் ஜாதியில் பிறந்த ஒரே காரணத்தினால் காந்தி நடத்திய தீண்டாமைக்கு எதிரான அரப்போர் மறக்கப்டவேண்டியது..!!!

பாரதியை பாபான் என்ற கூட்டம் வேறு என்ன செய்யயும்.?? பாரதிதாசனுக்கு இல்லாத தமிழ் பட்டிரு இவர்களுக்கு இருக்காம்...நாம் நம்புவோம்..!!

அமீர் அப்பாஸ் தொடரட்டும் உங்கள் பிரச்சாரம்.....

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.