கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

நெல்லை மாவட்டம் செங்கோட்டை தென்காசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு காவி பொறுக்கிகள் கலவரம் செய்துள்ளனர். வேண்டுமென்றே அழுக்குருண்டையை பள்ளிவாசல் வழியாக தூக்கிக் கொண்டு போக முற்பட்ட போது, கலவரம் ஏற்பட்டுள்ளது. காவல்துறை வேடிக்கை பார்க்க, காவி ரவுடிகள் வன்முறை வெறியாட்டம் ஆடியுள்ளனர். கடைகளை உடைத்துள்ளனர். ஒரு மருந்துக் கடையை உடைத்து, ஆணுறைகளைத் திருடியுள்ளனர். 

தமிழகம் முழுக்க பல இடங்களில் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் பொறுக்கிக் கும்பல் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் வைக்காமல், எங்கு வைத்தால் கலவரம் ஏற்படுமோ, அங்கெல்லாம் திட்டமிட்டு அதை வைக்க முயன்றுள்ளது. இதனால் பல இடங்களில் கலவரம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எந்தவித மதக்கலவரமும் இன்றி அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் அழுக்குருண்டையை வைத்து கலவரத்தை ஏற்படுத்த காவி பயங்கரவாதிகள் முயன்று வருகின்றார்கள்.

மக்கள் பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால், ஆள் நடமாட்டமே இல்லாத, ஊருக்கு வெளியே நடத்திக் கொள்ள ஆயிரம் கட்டுப்பாடுகளோடு அனுமதி கொடுக்கும் அரசு, இது போன்று மதக்கலவரத்தை தூண்டுவதற்கென்றே திட்டமிட்டு நடத்தப்படும் விநாயகர் ஊர்வலங்களுக்கு சகட்டுமேனிக்கு அனுமதி கொடுக்கின்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான பிள்ளையார் சிலைகள் வைக்க எதற்காக அனுமதி கொடுக்க வேண்டும்?. உண்மையிலேயே பக்தி இருந்தால் ஊருக்கு ஒரு சிலை வைத்து கும்பிட்டால் பத்தாதா? தெருவுக்குத் தெரு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஊரில் படிக்காமல், வேலைக்குப் போகாமல், காலித்தனம் செய்துகொண்டு, ஊர்வம்பு இழுத்துக் கொண்டு சுத்தும் அத்தனை பொறுக்கிகளும் இன்று இந்துவாக ஒன்றிணைந்து இருக்கின்றார்கள். இவர்களின் வேலை காலை முதல் மாலை வரை குடித்துவிட்டு குத்துப் பாட்டு போட்டுக் கொண்டு விநாயகர் சிலை முன்பு ஆடுவதுதான்.

மக்கள் நிம்மதியாக நடமாடமுடியாத அளவிற்கு இந்தப் பொறுக்கிக் கும்பலின் அட்டகாசம் உள்ளது. சிலைகளைக் கரைப்பதற்காக எடுத்துச் செல்லும் போது பல மணிநேரம் மக்கள் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டி அவதிப்பட வேண்டி உள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற ரசாயனப் பொருட்களால் உருவாக்கப்படும் பிள்ளையார் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் போது மிகப்பெரிய அளவிற்கு நீர் மாசுபடுவது நடக்கின்றது. ஆனால் அரசு இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. விநாயகர் ஊர்வலத்தைப் பார்த்த யாரும் நிச்சயமாக அதை கடவுள் ஊர்வலம் என்று சொல்ல மாட்டார்கள். நான்காம் தரப் பொறுக்கிகளின் ஊர்வலம் என்றுதான் சொல்வார்கள். தமிழக இளைஞர்களை அப்படி மாற்ற வேண்டும், அதன் மூலம் அவர்களை பார்ப்பனக் கும்பலுக்கு அடியாள் வேலை பார்ப்பவர்களாக மாற்ற வேண்டும் என்பதுதான் இவர்களின் திட்டம்.

திரைப்படங்களில் கடவுளை கேலி செய்யும் விதமாக தப்பித் தவறி காட்சி வைத்துவிட்டால், குய்யோ முய்யோ என்று கத்தும் கூட்டம் இன்று பைக்கில் வரும் பிள்ளையார், காரில் வரும் பிள்ளையார், கையில் ஏகே 47 துப்பாக்கி வைத்திருக்கும் பிள்ளையார் என விதவிதமாக உருவாக்கி கொட்டம் அடிக்கும்போது அதை ஏன் கண்டுகொள்வதில்லை? இவர்களின் நோக்கம் நிச்சயமாக பக்தியைப் பரப்புவது கிடையாது. இந்த அழுக்குருண்டையை வைத்துக்கொண்டு இஸ்லாமிய வெறுப்பை விதைக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் நோக்கம். இது ஏதோ ஆதாரமற்ற தகவல் கிடையாது. இவர்கள் பி ள்ளையார் சதுர்த்தி ஊர்வலங்களில் விநியோகித்த துண்டுப் பிரசுரங்களை பார்த்தாலே இதை நாம் தெரிந்துகொள்ளலாம். 1994 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த பிள்ளையார் ஊர்வலத்தில்

“இந்துவாக வாழ்வோம்
இந்துவாக மடிவோம்”

“அச்சமற்ற இந்துவே
அணிதிரண்டு வா
வீர விக்னேஸ்வரன் அருள்பெற வா”

“அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவோம்
நாம் இந்துக்கள் நமது நாடு இந்து நாடு”

“நாலும் நாலும் எட்டு
துலுக்கனைக் கண்டால் வெட்டு”

“ஹம் ஹைம் ஒளலாத் ஸ்ரீராம்கீ
இஸ்லாமி ஹை ஒளலாத் ஹராம்கீ”

(நாம் ஸ்ரீராமனின் பிள்ளைகள்; இஸ்லாமியர்கள் விபச்சாரியின் பிள்ளைகள்) (ஆதாரம்: பிள்ளையார் அரசியல்-ஆ.சிவசுப்பிரமணியன்)

vinayaga statuesமுஸ்லிம்கள் மீது எவ்வளவு வன்மம் இருந்தால் இந்த வடநாட்டு காவிக்கும்பல் இதுபோன்ற நச்சு சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்பும். இத்தோடு இந்தக் கும்பல் நின்றுவிடுவது கிடையாது. முஸ்லிம்கடைகளில் பொருட்களை வாங்காதீர்கள், இந்துக் கடைகளிருந்தே வாங்குங்கள், மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டுவர வேண்டும், முஸ்லிம்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும், காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும், பள்ளிகளில் மதக்கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என நாட்டில் பிரிவினையையும், வகுப்புவாதத்தையும், பிற்போக்குத்தனத்தையும், உருவாக்கும் அனைத்து செயல்திட்டங்களையும் அது பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் முன்வைக்கின்றது. இதைத்தான் இந்தக் கும்பல் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மட்டுமல்லமால் இந்தியா முழுவதும் செய்து வருகின்றது. ஏற்கெனவே குடியால் சீரழிந்து கிடக்கும் தமிழக இளைஞர்களுக்கு எல்லாம் மதபோதை ஊட்டி, அவர்களை சிறுபான்மையின மக்களுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியாக உருவாக்கிக் கொண்டு இருக்கின்றது.

காவிக்கும்பலுக்கு பிணத்தை வைத்தும் அரசியல் செய்யத் தெரியும்; பிணங்களை விழ வைத்தும் அரசியல் செய்யத் தெரியும். தமிழ்நாட்டில் உள்ள ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு இதைப் பற்றி எல்லாம் எந்த அக்கறையும் கிடையாது. தம்மை பெரியாரின் கொள்கைகளை, அண்ணாவின் கொள்கைகளை கடைபிடிப்பதாய் சொல்லிக் கொள்ளும் திமுக, அதிமுக போன்ற கட்சிகளிடையே விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தலைமை தாங்குவதில் எப்போதும் போட்டியே நிலவி வருகின்றது.

வெளிப்படையாக இஸ்லாமியர்களுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டவும், விஷக்கருத்துக்களை பரப்புவதற்காகவுமே விநாயகர் சதுர்த்தி விழாக்கள் தமிழ்நாட்டில் நடத்தப்படுகின்றன. இதற்காக பெரும் அளவு நிதி வடநாட்டு மார்வாடி கும்பல் மூலம் தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படுகின்றது. தமிழ்மக்களின் பண்பாட்டை அழித்து அவர்கள் மீது வடநாட்டு மார்வாடிகளின் பண்பாடு திட்டமிட்டு திணிக்கப்படுகின்றது. தன்மானமும் சுயமரியாதையும் உள்ள ஒவ்வொரு தமிழனும் இந்த மானங்கெட்ட ஆபாச விநாயகர் சதுர்த்தி விழாவைப் புறக்கணிக்க வேண்டும். பெரியாரின் பகுத்தறிவுப் பாதையைப் பின்பற்ற வேண்டும்.

- செ.கார்கி