தொடர்புடைய படைப்புகள்

கடமையையும்,
கட்டுப்பாட்டையும்,
சுட்டுக்கொன்ற...
காவல்துறை!

கண்களும்...
செவிகளும் செத்துப்போன,
நீதித்துறை!

காசையும், கற்பையும்..
கடன் வாங்கும்,
கல்வித்துறை!

விபச்சாரத்துடன்,
வீறு நடைபோடும்,
விளையாட்டுத்துறை!

முப்படைகளுக்கும்...
நாமமிட,
காத்துக் கொண்டிருக்கும்...
பாதுகாப்புத்துறை!

சுத்தமின்றி.. சத்தமின்றி...
செத்துக் கொண்டிருக்கும்,
சுகாதாரத்துறை!

மாறி, மாறி...
ஊழலை உற்பத்தியாக்கும்,
உள்துறை, வெளித்துறை!

பழதை புதிதாக்கியும்...
புதிதை பழதாக்கியும்...
பொய்த்துப் போன,
போக்குவரத்துத்துறை!

முதல்களை
முழுங்கும் முதலைகளாய்,
தொழிற்துறை!

பஞ்சம், பசியால்...
செத்துக் கொண்டிருக்கும்,
மக்கள்ஜாதி!

அதற்கு நெருப்பிட்டு,
அந்த தீயில்...
குளிர்காயும்,
அதிகாரிகள்,
அதிகார அரசியல்வாதிகள்!

இப்படி எல்லாவற்றிலும்
விபச்சாரத்தை வியாபாரமாக்கி...
ஊழலை உத்யோகமாக்கிய...
ஒட்டுமொத்த நீங்களும்...
ஒருசேர வந்தாலும்,
ஒன்றை மட்டும் மனதில்
மனப்பாடமாக்கி கொள்ளுங்கள்
விலைமாதர்களே!

என்...
இந்தியா...
விற்பனைக்கு,
அல்ல!

Comments

2 comments

2
SOMASUNDARAM
Vaduvoor Raajesh, you are mistaken. It is not 'Your India'. It is belongs to Ambanis, Birlas, Bajajs etc;India is their property. You are permitted to live in India. Understand. Read your poem again.Are you proud of 'your India'.
SUBBARAMAN R
தீவிரவாதம் பிறப்பதற்கு காரணமே நம்பிக்கையின்மை, வெறுப்பு, சுரண்டல், லஞ்சம், எதேச்சதிகாரம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நமது நாட்டில் நாம் அன்றாடம் காணும் அநியாயங்களும், இறுதியாக நமது இயலாமையும்தான்.

மிக அருமையான படைப்பு.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.