என்றைக்கோ தவறவிட்ட யாருக்கோ
உதவ மறுத்த உதவியை
மீட்டெடுக்கும்
எதிர்பாரா தருணத்தில் கிடைக்கும்
மகிழ்ச்சியைப்போல
தவறிச் செய்துவிட்ட குற்றத்தின்
பரிகாரச் சந்தர்ப்பத்தைக்
காத்து வைத்திருக்கும்
பொரிந்த குஞ்சுகளை காக்கும்
தாய்க் கோழியைப்போல...
மறந்துவிட்ட அல்லது மறைக்கப்பட்ட
காதலின் தடங்களைத் துருவித்துருவி
காட்சிப்படுத்தும்
வயது தளர்வில் தவிர்க்கமுடியாத
நரையைப்போல...
கனிந்த பழத்தைப்போல
எல்லாப் பக்கமும் ”வைக்கும்
கனியவைத்துண்ணும்போது
கவனமாகவும் கையாளவேண்டும்
கச்சிதக் கூராய் முனையிரண்டிக்கும்
கத்தியைப் போலவும்
நிசப்தம்

***********************

ஒரு ஆழமான காயத்தின்
சீழ்பிடித்த வலியும்

நான் என் தந்தையைக்
கை ஓங்கிய தருணத்தின்
வலியும்

இப்போது என்பிள்ளை
என் கழுத்தைப் பிடித்த முக்கிய
தருணத்தின் வலியும்

ஒன்றாகவே
உணர்த்தப்படுகின்றன

நெருக்கடியான சாலையின்நடுவே
திறந்த மார்புகளுடன்
அலையும் அந்த
மனம் பிறழ்ந்த பெண்ணின்
உணர்வான காலத்தின்
வலிகளைப் போலவே...

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.