பிறப்பதும் இறப்பதும் ஆண்டவன் செயல். அவனின்றி அணுவும் அசையா. ஆண்டவன் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார் என்பர் நமது பக்த கோடிகள். அப்படிப்பட்ட ஆண்டவனால் கொடுக்கப்பட்ட குழந்தைகள் சுதந்திர இந்தியாவில் காணாமல் போய்விடுகிறார்களே. அது எப்படி? ஆண்டவரின் ஆற்றல். குழந்தைகளை கடத்தும் கள்வர்களிடம் செல்லா காசானதேன்?

2008 ஆம் ஆண்டில் 7862 குழந்தைகளும், 2009 ஆம் ஆண்டில் 9436 குழந்தைகளும் 2010 ஆம் ஆண்டில் 11297 குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளனர். இந்தக் காலகட்டத்தில் 184000 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமருக்குக் கோயில் கட்டியே தீருவோம். கடலுக்கடியில் இராமர் நடந்து சென்றதாக கூறப்படும் பாலத்தை உயிர் கொடுத்து காப்போம் எனக் கூச்சல் போடும் சங்பரிவார் கூட்டம். மேற்கண்ட அறிவிப்பைக் கண்டிக்க இதுவரை முன்வரவில்லையே ஏன்?

இராமர் இருக்கும்போது குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் பணியை ஏன், உள்துறை மாநில அரசுகளிடம் ஒப்படைக்க வேண்டும். இச்செயல் இராமரை அவமதிக்கதகாதா? இதனால் பக்தர்களின் மனம் புண்படாதா? என உள்துறை அமைச்சர், ப.சிதம்பரம், தனது பதவியிலிருந்து விலக வேண்டும் எனப் பாராளுமன்றத்தை விரைவில் முடக்குவார்களா சங்பரிவார கூட்டத்தை ஆதரிக்கும் பா.ச.க.வினர்?

Pin It