தெலுங்கானா மக்கள் விழித்துக் கொள்வார்களா?

ஆந்திராவில் தனித் தெலுங்கானா கோரி சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி கட்சி மற்றும் உள்ளூர் கட்சிகளும், அமைப்புகளும் பல ஆண்டுகளாக போராடி வருகின்றன.

பல்வேறு வடிவங்களில் இப்போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. உஸ்மானியா பல்கழைக் கழக மாணவர்களும் இப்போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

மாணவர்கள் மாத்திரமல்லா மல் தெலுங்கானா பகுதியின் அரசு ஊழியர்கள், வழக்கறிஞர் கள், ஆசிரியர்கள், பொது மக்கள் என மத, இன, மொழிகளுக்கு அப்பால் நின்று அனைத்து தரப் பும் தனி தெலுங்கானா கோரிக் கையை வலியுறுத்தி போராட் டத்திற்கு ஆதரவளித்து வருகின்றன.

ஒவ்வொருமுறை போராட்டம் வெடிக்கும்போதெல்லாம் பள் ளிக் கூடங்கள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படும்; இயல்பு வாழ்க்கை பாதிக்கப் படும்.

இப்படி தெலுங்கானா போரா ட்டம் ஒட்டுமொத்த தெலுங் கானா மக்களின் ஜீவாதார உரி மைப் போராட்டமாக மாறி யுள்ள நிலையில், ஆந்திராவில் கால் பதிக்க முடியாமல் தவித்த பாரதீய ஜனதா கட்சி, குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதைப் போல... தெலுங்கானா பிரச்சி னையில் தன்னை உட்படுத்திக் கொண்டு தனது ஆதாய அரசி யலை துவக்கியுள்ளது.

சமீப காலமாக தனி தெலுங் கானா விஷயத்தில் கூடுதல் கவ னம் செலுத்தி வருகிறது பாஜக. பா.ஜ.க.வின் இந்த தலையீட்டை தெலுங்கானா பகுதி முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களும், பெரும்பான்மை இந்து சமய மக்களும் விரும்பவில்லை. எனி னும் எப்படியாவது தனி தெலுங் கானாவை ஆந்திர மாநிலத்திலி ருந்து பிரித்து விட வேண்டும் என்ற வேட்கையில் இருக்கும் தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி யின் தலைவர் சந்திர சேகர ராவ் பா.ஜ.க.வின் தலையீட்டை அனு மதிக்கும் போக்கில் நடந்து கொள்வது முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத் தியுள்ளது.

தெலுங்கானா பகுதியிலுள்ள ஆதிலாபாத், கறீம் நகர், நிஜாமா பாத், ஹைதராபாத், மஹ்பூப் நகர், மெடாக், கம்மம் ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்கள் மிக கனிசமாக வாழ்கின்றனர். இந்த மாவட்டங்களின் பெயரே அவை வரலாற்று காலந்தொ ட்டு முஸ்லிம் பகுதிகளாக இருந்து வருவதை உறுதிப்படுத் தும் வகையில் அமைந்திருப்ப தைக் காணலாம்.

பெரும்பாலான தெலுங்கானா மாவட்டங்களில் முஸ்லிம்கள் கனிசமாக வசித்து வருவதை கவனத்தில் கொண்டுதான் தனி தெலுங்கானா போராட்ட அமை ப்புகள் களமாடி வருகின்றன.

இதை கருத்தில் கொண்டுதான் தனி தெலுங்கானா கோரும் போராட்ட அமைப்புகளில் முதல் இடத்தை வகிக்கும் சந்திர சேகர ராவின் தெலுங்கானா ராஷ் டிரீய சமிதி கட்சி தனது தேர்தல் அறிக்கைகளில் - முஸ்லிம்களுக் குத் தனி இட ஒதுக்கீடு வழங்கு வோம்; அரசியல் அதிகாரத்தில் இட ஒதுக்கீட்டைத் தருவோம் என்றெல்லாம் கூறி வருகிறது.

தனி தெலுங்கானா போராட் டத்தில் அப்பிரதேச முஸ்லிம்கள் துவக்கம் முதலே தங்களை உட் படுத்தி வருகின்றனர். நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் இந்தக் கோரிக்கைக்காக தங்களின் இன் னுயிரை நீத்துள்ளனர். இதனை தெலுங்கானா மூவ்மெண்ட், தெலுங்கானா போராட்டம் குறித்த கையேட்டில் பதிவு செய் துள்ளது.

இந்நிலையில் முஸ்லிம் மக்க ளின் வெறுப்பை பெறும் வகையில் ராஷ்டிரீய சமிதி கட்சி நடந்து வரு கிறது. சில மாதங்க ளுக்கு முன் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்ற இடைத் தேர்தலின்போது மஹ்பூப் நகர் தொகுதியில் களத்தில் நின்ற முஸ்லிம் வேட்பாளர் தோல்விய டைந்து பாஜக வேட்பாளர் வெற்றி பெற்ற சம்பவம் அப்பகுதி மக்களை அதிருப்திக் குள்ளாக்கி யது மட்டுமல்லாமல், தெலுங் கானா ராஷ்டிரீய சமிதி கட்சிக் கான ஆதரவு நிலைப்பாட்டை யும் அவர்கள் மறுபரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளியது.

ராஷ்டிரீய சமிதி கட்சியின் சார்பாக முஸ்லிம் வேட்பாளர் நிறுத்தப்பட்ட பிறகும், பாஜக வேட்பாளர் ரெட்டி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இன உணர் வின் அடிப்படையில் ராஷ்டிரீய சமிதி கட்சியின் முன்னணித் தலை வர்கள் பாஜக வேட்பாளரின் வெற்றிக்கு மறைமுகமாக வேலை செய்ததும், அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ், முஸ்லிம் வேட் பாளர் நின்ற மஹ்பூப் நகர் தொகு தியில் போதிய கவனம் செலுத்த வில்லை என்பதும் தேர்தல் முடிவுக்கு பின்னர் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து விமர்சனமாக வெளிப்பட்டது.

தெலுங்கானா பிரச்சினையில் ராஷ்டிரீய சமிதி கட்சி பாஜ கவை அனுமதித்ததோடு, ஆதர வும் அளித்ததன் விளைவு இன்று பாஜக தெலுங்கானா பிரச்சி னையை கையில் எடுத்துள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்தால் தனி தெலுங்கானா மாநிலம் அமைக் கப்படும் என சில தினங்களுக்கு முன் பாஜக அறிவித்துள்ளது.

கடந்த 5ம் தேதி டெல்லி ஜந் தர் மந்தர் பகுதியில் தெலுங்கா னாவைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சித் தொண்டர்கள் தனி தெலு ங்கானா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தர்ணா போராட்டம் நடத்தியுள்ளனர்.

இப்போராட்ட பகுதிக்குச் சென்ற பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ், “பாரதீய ஜனதா கட்சி ஆட்உக்கு வந்தால் மூன்றே மாதங்களில் தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்போம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அளித்த வாக்குறுதியை அது நிறைவேற்றவில்லை. இனிமே லும் ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசை நம்ப வேண்டாம்...'' என தெலுங்கானாவில் பாஜக அரசியலுக்கு அடித்தளம் அமை க்கும் வகையில் பேசி விட்டுச் சென்றுள்ளார்.

காங்கிரஸ் மட்டுமல்ல பாஜக வும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை தெலுங்கானா மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஊழலற்ற ஆட்சியைத் தருவோம் என்றும், அயோத்தியில் ராமர் கோவி லைக் கட்டுவோம் என்றும் கூறி மத்தியில் ஆட்சியைப் பிடித்த பாஜக ஊழலில் திளைத்ததும், ராமர் கோவில் விஷயத்தில் அட க்கி வாசித்ததும் தெலுங்கானா மக்கள் அறியாததல்ல...

அதேபோல, இன்று அஸ்ஸா மில் வங்கதேச முஸ்லிம்களின் ஊடுறுவல் இருக்கிறது என்று காலங்காலமாக சொல்லி வந்த பாஜக அஸ்ஸாமில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது வங்க தேச ஊடுறுவலை தடுத்து நிறுத்த முடியவில்லை. இதற்கு காரணம் வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்கு முஸ்லிம்களை விட பல மடங்கு இந்துக்கள் வந்ததே காரணம் என்பது தனி விஷயம்.

ஆக, தெலுங்கானாவில் அதி காரத்திற்கு வர, மூன்றே மாதங் களில் தனி தெலுங்கானா அமைப்போம் என்றெல்லாம் அள்ளி விடுகிறது பாஜக என் பதை தெலுங்கானா மக்கள் புரி ந்து கொண்டால் அம்மக்களின் போராட்டம் வெற்றி பெறும். இல்ûலையென்றால் மதவெறி அரசியலையும், வகுப்புக் கலவரத் தையும் அறியாத தெலுங்கானா மக்கள் அதற்கு முகங்கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக நேரிடும்.

இதனை தனி தெலுங்கானாவிற்கான போராட்ட அமைப்புகள் உணர்ந்து கொண்டு பாஜகவை தெலுங்கானா அரசியலிலிருந்து தனிமைப்படுத்த வேண்டும்.

- ஹிதாயா