தொடர்புடைய படைப்புகள்

education actஅரசியல்வாதி வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க? ஸ்டாலின் வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க? உங்க வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க? என்பதுதான் புதிய கல்விக் கொள்கைக்கு முட்டுக் கொடுப்பவர்களின் கேள்வியாக உள்ளது.

சாமானியர்களின்  வீட்டுக் குழந்தைகள் பற்றி இவர்கள் சிந்திப்பது  இல்லை. வீட்டு வேலை செய்பவர்கள், பூ கட்டி விற்பவர்கள், கட்டிட வேலை செய்பவர்கள், விவசாயக் கூலிகள், மலைவாழ் மக்கள் இன்னும் பலதரப்பட்ட உழைக்கும் வர்க்கத்திலிருந்து வரும் குழந்தைகள் பற்றியோ, முதல் தலைமுறையாகப் படிக்க வரும் குழந்தைகள் பற்றியோ சிந்திப்பது இல்லை. மொத்தத்தில் சமூக நீதி குறித்து சிந்திப்பதே இல்லை.

'தன்னிடம் பணம் இருக்கு. எவ்ளோ பணம் வேண்டுமானாலும் செலவழிக்கத் தயார்' என்கிற மனப் போக்குதான் காரணம். புதிய கல்விக் கொள்கையில் உள்ள பாதகங்களைக் காது கொடுத்துக் கேட்கும் நிலையில் கூட இவர்கள் இல்லை.

1. மூன்றாவது மொழி கட்டாயம் (இந்தி திணிப்பு). இதன் மூலம் மாணவர்கள் மீதான சுமை அதிகரிப்பு.
2. தொழில்க் கல்வி என்னும் பெயரில் மாணவர்கள் அதிக இடைநீக்கம் செய்யப்படுவார்கள். இது குருகுலக் கல்வியின் நவீன வடிவம்.
3. வகுப்பு  3, 5, 8 மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு. இதனால் மாணவர்கள் அதிக இடைநீக்கம் செய்யபடுவார்கள்.
4. இந்தியா முழுவதும் ஒரே பாடத் திட்டம் என்பதன் மூலம் நமது வரலாறு, பண்பாடு அனைத்தும் நீக்கப்படும்.
5. கோச்சிங் சென்டர் வணிகத்திற்கு வழிவகுக்கும் நுழைவுத் தேர்வுகள்.
6. வேதக் கல்வி திணிப்பு
7. கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர நுழைவுத் தேர்வு.
8. பல்கலைக் கழகங்களின் தன்னாட்சி பறிப்பு
9. இட ஒதுக்கீடுக் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாமை
10. செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கு முன்னுரிமை 

இது போன்றப் பல பாதகங்களை உள்ளடக்கிய புதிய கல்விக் கொள்கை கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

பல தரமான  விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் பலரை உருவாக்கியத் தமிழ்நாட்டுக் கல்வி முறை எந்த வகையில் தாழ்ந்து போனது?

குறைகள் இருப்பின் அதனை நீக்க வேண்டியது தமிழ்நாட்டு அரசின் கடமை. எங்கோ டெல்லியில் இருந்துக் கொண்டு தமிழ்நாட்டுக் கல்வியை சில வடநாட்டினர் தீர்மானிப்பது என்பதே தமிழ்நாட்டு இறையாண்மை மீதான தாக்குதல்.

கல்விப் பொதுப்பட்டியலில் இருக்கும் நிலையில் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்காமல், பாராளுமன்ற அவைகளில் விவாதிக்காமல் தன்னிச்சையாக இந்த கொரோனா காலத்தில் அவசரமாக அமல்படுத்த துடிக்கும் போதே தெரியவில்லையா புதிய கல்விக் கொள்கை என்பது மோசடிக் கொள்கை என்பது.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதே தீர்வு.

குருநாதன் சிவராமன்

Comments

17 comments

17
S.Periyasamy
Dr. Periyasamy Thangavelu MTech PhD (IIT Madras)

சென்னை ஐஐடியில் புரொஃபசர் பெரியசாமி தங்கவேலு அவர்கள் பதிவு

இப்பொழுது ஒரு கூட்டம் _நாங்கள் தமிழ்நாட்டில்தான் மிக அதிகமாகப் படித்துள்ளோம்.._ எங்களுக்குத்தான் GER Ratio அதிகமாக உள்ளது, நாங்கள் இந்தியாவை விட மேல் என்றெல்லாம் கம்பு சுற்றி வருகிறார்கள்.

இந்த 18 வருடங்களாகத் தமிழ்நாட்டு கல்வியைப் பார்த்து வருகிறேன். நான் பார்த்த வரையில் நம் தமிழ்நாட்டின் தேர்வுமுறை உண்மையான அறிவைச் சோதிக்கும் தேர்வு முறை அல்ல. மாணவர்களின் அறிவை வளர்ப்பதை விட்டு அவர்களைத் தேர்ச்சி பெற வைக்க மற்றும் மதிப்பெண் வாங்க வைக்க மட்டுமே உதவும் தேர்வு முறையாக உள்ளது.

இந்தத் தேர்வு முறையில் மிக அதிகமாக மாணவர்களைப் பட்டம் வாங்க வைக்க மட்டும் தான் முடியும். சொல்லப் போனால் இது ஒரு ஏட்டுச் சுரைக்காய்தான்! நமக்கு இருந்த தேர்வு முறையைப் பற்றிச் சிறிது விளக்கமாகக் கூற விரும்புகிறேன்

1. நம் தேர்வுமுறை Blue Print எனப்படும் முறையை பின்பற்றி இருந்தது

2. Bule print என்றால் எந்தப் பாடத்தில் எந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும், எவ்வளவு கேள்வி கேட்க வேண்டும், இந்த நம்பர் கேள்வி இந்த பாடத்தில் இருந்து, இந்த பிரிவில் இருந்து மட்டுமே கேட்க வேண்டும் என்பதாகும். அதுவும் பாடப் புத்தககத்தில் உள்ள கேள்வி ஒரு எழுத்து மாறாமல் கேட்க வேண்டும் என்ற rule புக் ஆகும்.

3. மாணவனுக்கு ஒரு குறிப்பிட்டக் கேள்வி எண்ணில் எந்தக் கேள்வி வரும் என்று தேர்விற்கு முன்னரே தெரியும்

4. இது ஒரு விதத்தில் கேள்வித் தாளை மாணவனுக்கு முன்கூட்டியே கொடுப்பதற்குச் சமம்!

5. கேள்வித்தாளை முழுமையாகப் படித்ததே இல்லை. தேர்வில் கேள்வியின் முதல் வார்த்தையைப் பார்த்தவுடன் பதில் எழுத ஆரம்பித்து விடுவான்.

6. கணக்குப் பாடத்தைக் கூட மனப்பாடம் செய்து எழுதிய அவலம் இங்குதான் நடந்தது

7. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு கூற விரும்புகிறேன். ஒரு _பிரபல பள்ளியில்_ படித்த மாணவன் என்னிடம் ஆலோசனை பெற வந்திருந்தான். அவன் +2 கணித பாடத்தில் 199/200 மதிப்பெண் பெற்றிருந்தான். என் மேசையில் ஒரு கணித Question Bank இருந்தது. அதில் ஒரு கேள்வி _Find the Rank of the matrix_ என்பதாகும். அதைப் பார்த்தவுடன், "சார் இதற்குப் பதில் மூன்று" என்றான். எப்படித் தம்பி கூறுகிறாய்? இதற்க்கு நிறைய calculation செய்ய வேண்டுமே என்றேன்.
"சார், இது எங்கள் book back கேள்விதான் சார்.. _Diagonal element-ல் மூன்று lambda வந்தால்_ பதில் மூன்று சார்!" என்றான். "நாங்கள் அனைவரும் அப்படித்தானே படித்தோம்" என்றான்.
நான் அவனிடம், "off digagonal element எண்களை மாற்றினால் பதில் மாறிவிடுமே?" என்றேன்.
அதற்கு அவன், "சார், அப்படி மாறினால் அதை _out of syllabus_ என்று எங்கள் ஆசிரியர்களே மதிப்பெண் வாங்கி கொடுத்து விடுவார்கள். Rank of the matrix என்று கேள்வி வந்தாலே நாங்கள் மூன்று என்றுதான் பதில் எழுதவேண்டும்" என்றான். இதுதான் நம் கல்வியின் நிலைமை.

8. இன்று போட்டித் தேர்வுகளுக்குப் போகும் நம் மாணவர்களுக்குப் பதில் தெரியவில்லை என்றால் பரவாயில்லை, _கேள்வியே தெரிவதில்லை_ என்பதுதான் மிகப்பெரிய பிரச்னை. இதற்கு மேற்கூறிய தேர்வுமுறையே காரணம்.

9. இந்தத் தேர்வுமுறையை வைத்துக் கொண்டு நாங்கள் இவ்வளவு சதவிகிதம் பாஸ், எங்கள் GER Ratio இவ்வளவு என்று பீத்திக்கொள்வது எப்படி முறையாகும்?

10. இந்த தேர்வுமுறை அடிமைகளை உருவாக்குவதற்குத்தான் பயன்பட்டது. சுய சிந்தனை என்பது இல்லாமலேயே போய் விட்டது. இந்த பெருமை பேசும் அனைத்து போராளிகளின் குழந்தைகளும் CBSE பாடத்திட்டத்தில் படிப்பதே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

11. பாடத்திட்டத்தை குறைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தப்பட்டது தமிழ்நாட்டில்தான். பாடத்திட்டத்தின் தரத்திற்காக போராட்டம் நடத்தப்பட்டதே இல்லை. அதனால் தான் 14 வருடங்களாக பாடத்திட்டம் மாறாமலேயே இருந்தது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அவர்கள் எழுதிய தேர்வு சார்ந்து இல்லாமல், அரசியல் சார்ந்தும் இருந்தது தான் கொடுமையிலும் மிகப்பெரிய கொடுமை.

12. அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்கள் வழங்கி அவர்களை தேர்ச்சி பெறவைத்து GER Ratio அதிகம் என்று பீத்திக்கொள்வது எப்படி உண்மையான சாதனையாக இருக்க்க முடியும்.

நான் சில கேள்விகளையும் கேட்க விரும்புகிறேன்:-

1. GER Ratio அதிகம் உள்ளதை வைத்து நாம் என்ன சாதித்திருக்கிறோம்?

2. எத்தனை கண்டுபிடிப்புகள் செய்திருக்கிறோம்?

3. நம் நாட்டிற்கு அதன் மூலம் எவ்வளவு பயனீட்டிக் கொடுத்திருக்கிறோம்?

4. எவ்வளவு Patent வாங்கியிருக்கிறோம்?

5. மென்பொருள் துறையில் கூட 30 வருடங்களாக அடிமை வேலைதானே செய்து கொண்டிருக்கிறோம்! அடிமை வேலை செய்வதற்காகத்தான் நம் கல்வி முறை மக்களை உருவாக்குகிறதா?

6. அகில இந்திய அளவில் நடக்கும் வேலை போட்டியில் எவ்வளவு வென்றிருக்கிறோம்?

7. விளையாட்டுத் துறையில் எவ்வளவு சாதித்து இருக்கிறோம்?? கேட்டால் இந்தி பேசுபவர்களின் சதி என்பார்கள். இந்தி பேசாத ஆந்திரா போன்ற மாநிலங்கள் தேசிய அளவில் நடக்கும் போட்டிகளில் வெல்கிறார்களே, அது எப்படி??? எடுத்துக்காட்டாக, நாட்டில் உள்ள IITக்களில் 60% மாணவர்கள் ஆந்திராவில் இருந்து மட்டும். அதே போல் தேசிய வேலைவாய்ப்புகளில் அவர்கள் மிக அதிகமாகவே உள்ளார்கள்அது எப்படி??

எனவே வெறும் பெருமை பேசாமல் #NEP 2020 உள்ள _குறைகள் எதாவது இருந்தால் அரசுக்கு எழுதுங்கள்._ இந்திய அரசாங்கம் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் சந்ததிக்கும் சேர்த்தே இந்தக் கல்விக்கொள்கையை 34 ஆண்டுகளுக்கு பிறகு கொண்டுவந்துள்ளார்கள். முதல்முறையாக *6% அரசு வருமானம் கல்விக்கு* செலவிடப்பட உள்ளது. கடந்த _பல வருடங்களாக கருத்து கேட்டு கிட்டத்தட்ட 2 லட்சம்_ கருத்துக்களை உள்வாங்கி இதை வடிவமைத்துள்ளார்கள். அப்போதெல்லாம் எதுவும் சொல்லாமலே இப்பொழுது சில நடிகர்களின் சொல்லை வேதவாக்காக கருதிக்கொண்டு பேசுவது நம்மையெல்லாம் பெரும் குழிக்குள் தள்ளிவிடும்.

கடந்த 30 வருடங்களாக நடிகர்களின் பேச்சை கேட்டு முட்டாள்களாகவே மாறி அவர்களை அரசாள அனுமதித்திருக்கிறோம். மீண்டும் அது தொடர்ந்தால், ஓட்டிற்குக் காசு வாங்கும் ஈனப் பிழைப்பைத் தொடருவதை தவிர வேறு வழியில்லை.

Dr. T. Periasamy., M.Tech., Ph.D (IIT Madras)
Gurunathan
@S.Periyasamy
Whatsapp forwrad-ai thookkittu vanthutteengalaa?
The article has answer for you questions.
First try to discuss the major flaws of NEP. are you ready for it?

Board exams for the students of class 3, 5 and 8.
Occasional training after Class 6 for weak students.
Mandatory third language (Hindi)
Common entrance exams.
All these will lead to Drop outs and will push TN backward. DO you agree?

The veteran Scientists APJ Kalaam, Mayilsamy Annadurai, Sivan studied in the education policy defined by TN govt.
We also produced many Doctors, Engineers, Economists, IAS/IPS, etc.
We don't need any policies defined in Delhi.
Bring back Education into State list.
S. Periyasamy
கல்வி எப்போதும் மாநிலப் பட்டியலுக்கு வராது தலைவரே. வீணாக அடம் பிடிக்காதீர்கள். ஒருமுறை போனால் போனதுதான். மாநில அரசுக்கு இருக்கக்கூடிய குறைந்தபட்ச அதிகாரங்களை முதலில் இந்த திராவிட கட்சிகளின் (குறிப்பாக திமுகவின்) ஊழல், அரசியல் ஆகியவற்றிலிருந்து காப்பாற்ற பாருங்கள். அதுதான் நீங்கள் தமிழ்நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யக்கூடிய சேவை. இல்லாவிட்டால் அவையும் எதிர்காலத்தில் பறிபோய்விடும். கல்வி என்பது கற்பித்தல் மட்டுமல்ல. தேர்வு நடத்துவதும் தான் கல்வியின் ஒரு அங்கம். தேர்வே இல்லாத கல்வி முழுமையான கல்வி அல்ல. தமிழகத்தில் பள்ளிக்கு போகக்கூடிய மாணவர்களில் நாற்பது சதவீதம் பேர் தனியார் பள்ளிகளுக்கு போகிறார்கள். அங்கே எல்கேஜி யுகேஜி
யிலேயே அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட் என குழந்தைகளின் பயிரை எடுத்துவிடுகிறார்கள். அது ஒரு வகையான extreme. இன்னொரு பக்கம் அறுபது சதவீத குழந்தைகள் போகக்கூடிய அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை தேர்வே இல்லை. அந்தக் குழந்தைகள் அவிழ்த்துவிட்ட கழுதைகள் மாதிரி. ஆசிரியர்களுக்கும் பொறுப்பே கிடையாது. இந்த சமச்சீர் கல்வித் திட்டம் வந்தவுடன் நிலைமை இன்னும் மோசமானது. அரசு பள்ளியில் எட்டாம் வகுப்புக்கு வந்த மாணவர்களுக்கு சாதாரண கூட்டல் கழித்தல் கூட தெரியவில்லை. ஐந்தாம் வகுப்பில் தேர்வு என்பது பக்கம் பக்கமாக எழுதக்கூடிய தேர்வு அல்ல. Objective type questions கொண்ட ஏதோ ஒரு தேர்வை நடத்தித்தான் ஆகவேண்டும். இந்தியாவில் இருக்கும் பல மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அரசியல் ரீதியில் எந்த விதத்திலும் முக்கியத்துவம் இல்லாத ஒரு மாநிலம். இந்த மாநிலத்தில் இருக்கும் நாற்பது தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட வெல்லாத ஒரு அரசியல் கட்சி மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பலமுறை ஆட்சிக்கு வந்து நினைத்ததை செய்ய முடியும். இதுதான் எதார்த்த நிலைமை. வேலைவாய்ப்பு, உயர்கல்வி ஆகியவற்றுக்கு மற்ற மாநிலங்களோடு போட்டி போடக்கூடிய நிலைமை தமிழக மாணவர்களுக்கு இருக்கிறது. நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆதரவு கொடுக்கவும் வேறு எந்த மாநிலமும் தயாராக இல்லை. இப்படிப்பட்ட நிலைமையில் போராட்டம் கீராட்டம் என போவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. இளைஞர்களின் வாழ்வு தான் கெடும். தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் ஒரு பாடப் புத்தகம் கூட இதுவரை உருப்படியாக தயாரிக்கப்பட்டது இல்லை. அதற்கான முயற்சியே இப்போதுதான் எடுத்து எதையோ கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் உயர் கல்வியை தமிழ்மொழியில் வழங்க போகிறார்களாம்.
அப்துல் கலாம் மயில்சாமி அண்ணாதுரை சிவன் ஆகியோர் படித்த காலகட்டம் வேறு. அப்போதைய கல்வி சூழ்நிலையும் வேறு. முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள்.
S. Periyasamy
(எங்கேயோ படித்தது)
//...பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை, மீண்டும் மாநில பட்டியலுக்கே கொண்டு வர வேண்டும்.....//....ஏன் மேலும் மேலும் கல்வியை தரைமட்டமாக்கி அடிமைகளை உருவாக்கி இன்னும் பல்லாயிரம் கோடி கொள்ளையடிப்பதற்கா ??....ஆந்திர , தெலுங்கானா மாணவர்கள் பல போட்டி தேர்வுகளில் தமிழக மாணவர்களை விட முன்னிலை ...அதற்கு காரணம் என்ன ??.... தமிழ் நாட்டில் ஆசிரியர்கள் TET தேர்வில் 1 சதம் தான் தேர்ச்சி ....இவர்கள் எந்த அடிப்படையில் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் ??.....திராவிட கல்வித்தந்தைகள் நடத்தும் பல்கலையில் கட்டணம் எவ்வளவு ?...கல்வித்தரம் என்ன ??....கல்வித்தந்தைகள் நடத்தும் கல்லூரிகளில் பட்டியலினத்தவர் எத்தனை சதம் ஆசிரியர்கள் ??.....தஞ்சை தமிழ் பல்கலை ஏன் B+ தரத்துடன் உள்ளது?? ..உலக தரத்தில் இருந்தால் பல பேருக்கு வேலை வாய்ப்பு கிட்டும் , ஆனால் திராவிட கட்சிக்கு அடிமைகள் கிடைக்காது ..... இங்குள்ள பல துணைவேந்தர்கள் மேல் பல குற்ற வழக்குகள் ..அதற்கு காரணம் என்ன ??.....இலவச டிகிரி , இலவச மார்க் , இலவச பாஸ் , என்று இருந்தால் டிகிரி படித்தவர் வேலை கிட்டாமல் வங்கி கடன் செலுத்த முடியாது .....மாணவர்கள் வெறும் பள்ளிக்கு வந்தால் மட்டும் வேலை திறமை வளராது ....
Rajan
First,let Periyasamy of IIT admit research students following the Reservation Act passed in 2006 and recruit Assistant Professors,Professors etc following the Act passed in 2019.According to official data accessed through RTI,that too by an IIT Alumni and activist,as on June,2019,of the 684 faculties in IIT,Madras,a whopping 599 are from Other castes (General category) which is 87% of the total strength.Only 16 of them are from SC,66 OBC and 3 from ST category that means only 2%,10% and 0.4% respectively.Data also shows that a majority of dalit,tribal and backward class candidates who applied for faculty posts were not even called for an interview.In 2019,for instance,271 people applied for jobs of which just 5 were interviewed and 2 got selected.In 2018,682 people applied of which 16 were called for interview."Official data shows this has been the trend since 2014"According to this data,less than 3% of those teaching at the IITs across the country are from reserved categories.(contd)
Rajan
According to a news report in Dec,2019,4 of the top 5 IITs haven't filled Phd seats reserved for SC,ST,OBC candidates.In IIT,Madras,no ST Phd candidate was there in 2013-14.In the following years,it had 0.4%.0.9%,1% and 0.8%(as against stipulated 7.5%).Only 7%,5%,6%,4%,7% SC seats were filled in 2013-14,2014-15,2015-16,2016-17,&2017-18.( as against the stipulated 15%)The data was collated by SFI and submitted to the current HRD Minister.The Directors of the IITs are saying that no candidates were available.Prince Gajendra Babu,Educationist reacts thus,"These IITs have constitutional obligation to ensure an adequate no.of marginalized people get admitted into research seats.If there are less no.of people,they should have written to the Government stating the same.They should have explored the reason behind not getting enough students.May be IITs haven't advertised these positions properly.They have failed in their constitutional responsibility"(contd)
Rajan
Periyasamy of IIT talks about the current standard of education in TN. NEP will also produce skilled and semi-skilled workers only in large numbers to big industries since compulsory industrial training will be provided from Std-6 (at the age of 11 itself)and multiple exit options in a country where there is large scale drop-outs.Can he tell the number of feedback examined out of 2 lakhs and odd received?The successive governments were telling about 6% GDP spending right from Kothari Commission of the sixties.
S.Periyasamy
Mr Rajan,
You are living in fool's Paradise. Central government Institutions like IITs are dens of upper castes. They will neither allow nor encourage students from underprivileged sections of society. Suicides by the students Indore educational institutes stand testimony to this fact. The only hope for the students are state run institutions like Anna University. But the Dravidian parties especially the DMK have a ruined the standard of education in the state with their corruption and nepotism. The samacheer kalvi brought by DMK has ruined the education situation in this state for the last 10 years.
Rajan
Mr Periyasamy,Why IITs which are run with tax payers' money should deny opportunities to meritorious students from reserved category? How they can violate the specific Acts prescribing reservation in students' admission and recruitment of their faculties?Instead of questioning this atrocity,you are questioning local politicians only.That shows your slave mentality.Why theses students' options should be limited to state run institutions?You are calling the school students as donkeys. How so many people from reserved categories(in your language -donkeys)have applied for research studies and faculty positions in IIT,Madras? .Why Hindi is taught in Tamil University?Why Hindi is proposed to be taught in Dravidian University,Kuppam?Whether it is subjective or objective,no examination should be conducted for young children in 3rd and 5th std .Do you know the drop-out rates?37% of the total illiterates in the world are in India (Global Monitor Report-2013-14).According to Central Government's 2014 statistics,the drop-out rate is 22.3% in primary education,40.8% in elementary education and 50.3% in secondary education.Will NEP with multiple exit options and many number of examinations right from 3rd Std reduce the drop-out rates?Or is it a deliberate attempt to curtail educational opportunities to all?The IIT Professor in whose institution ,opportunities are denied to underprivileged sections has no right to talk about the quality of education in TN.I am not living in fools' 'paradise.You are only living in slaves' den.
S.Periyasamy
அரசுப் பள்ளியில் வேலை செய்யக்கூடிய ஆசிரியர்கள் யாராவது தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கிறார்களா? இதிலே பணம் படைத்தவர்கள் பற்றி பேசுவதற்கு என்ன இருக்கிறது. இந்த நாட்டில் முறையான தரமான கல்வி என்பது மத்திய அரசின் சிபிஎஸ்ஈ தான் என மெத்தப் படித்தவர்களும் விபரம் தெரிந்தவர்களும் நினைக்கிறார்கள். பணம் கட்டி தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். உங்களுக்கு என்ன வந்தது?
Rajan
Have you got reliable statistics with you to say that Government teachers are not admitting their children in Government schools?It is a myth.I have many government teachers as my relatives and friends.They have admitted their children only in Government schools.The IIT Professor wants us not to listen to cine stars.But the stars who spoke against the NEP are running a family charity for many years and provided scholarships and financial help to many students from the downtrodden. They have legitimate right to talk .Why the Professor talks about these stars only?.Even many educationists including former Professors are against this new policy.Is he ready for debate?
S.Periyasamy
You Mr Rajan,
You are lying. It is a well-known fact that majority of government teachers admit their wards in private schools and many are partners in private school managements too. Poor students have to be helped with free education, free textbooks, free laptops, breakfast and lunch, stipends etc and not with third grade syllabus, third grade textbooks cramming system and grace marks. These things will defeat the objective of empowering them. And these are happening in Tamilnadu for last two decades. Upper castes are well entrenched in Central Government institutes and power corridors in Delhi. They abide by rules of Manu and not Indian constitution. Until people like you are there they can never be displaced from power.
Rajan
I will not accept that the text books and syllabus of the State Board is third grade.It is again a myth like your lie regarding govt teachers admitting their children in private schools.As demanded by me,provide statistics to prove your point.
Rajan
This question is meant for Prof Periyasamy from IIT. You have criticized the education system in Tamil Nadu.You lamented that no inventions/discoveries were made here which could be used for the benefit of our country.You also asked the TN students how many patents they got so far. OK. IITs mostly admit CBSE students. What is the track record of IIT,Madras?In that context,answer the criticism leveled against IITs and Indian universities contained in the following passage;-
"In the decades following independence,the established self-reliant heavy industry in strategic public sector (described by Nehru as 'Commanding Heights')had put India ahead of most developing countries.By 1970s and 1980s,however,we failed to modernize these industries technologically;with no clear agenda to conduct research to meet technological needs of the domestic heavy industry and address local health and other pressing societal issues.Most of our deemed National Institutes and IITs ended up conducting research catering to the requirements of major Western MNCs. Universities became centers for manufacturing thousands of highly qualified engineers and scientists whose final destination was immigration to the US"
You,yourself admitted creating slaves for IT industry flourishing in western countries.
In what way, NEP.2020 will help in improving our research capabilities?
How creation of National Research Foundation will help research scholars in selecting their desired subjects for research?
Mr Periyasamy,Keetru reader may help in getting the response from the Professor.
S.Periyasamy
No Indian varsity including IIT figures in top 200 in international ranking. But the thing is TN state run education system became far worse and uncompetitive in the last two decades. This is due to the corruption and nepotism of local dravidian politicians. Recently Delhi CM demanded not to admit TN students in central govt varsities in Delhi. In Andhra, they multiply TN board marks with 0.8. Lot of things can be said. You people behave as if you dont know anything. That is the real problem.
Rajan
If it is your contention,then how come 271 people applied in 2019 and 682 people applied for faculty positions in 2018 to IIT,Madras?Of these,at least 20% would have applied from TN. You are exaggerating the ills of educational system in TN since you are averse to Dravidian politicians.In Andhra,regular courses of study are neglected in schools and coaching classes for competitive examinations are going full time in the schools run mostly by corporates. It is just like Namakkal type of coaching and cramming.
Rajan
Dear Mr Periyasamy,read this link to know about the corporate schools in Andhra Pradesh-aspirantworld.in/editorial-analysis-dark-tales-in-andhra-pradesh-iit-success-story/
In a nutshell,two major chains of corporate schools are operating in Andhra .Many are residential schools.
Coaching for IIT begins in class 6.
These schools focus on Physics,Maths and Chemistry.Mother tonque and social sciences are side-lined in order to "complete"the state syllabus along with IIT coaching.
Syllabus for classes 11 and 12 is being taught from class 6 on wards too,with 10% of the syllabus "covered" each year.
Govt officials and teachers said that students in such schools do little or no physical or extracurricular activities,and got no rest.
All the students in such schools lost THE CHANCE TO BE CHILDREN,explore and grow,develop their special talents and form their unique identity. For those who did not get admission to engineering colleges,the loss is manifold.
They get little support in the school,as the best teachers are deployed to teach top-level students.
The students in the bottom layer were pejoratively called"patrons" by the management,as their parents paid high fees,while their chances of getting into an engineering college are negligible.
These schools start their enrolment drive right from January each year through their teachers who are fixed with targets for enrolment as well as for collection of fees.These teachers approach govt schools and get the list of good students and then chase their parents.If a teacher does not fulfill his target,his salary is withheld.
Exorbitant fees are charged beyond govt fixed fees structure towards coaching fees and for facilities adjusting the fees to the paying capacity of the area.
Norms regarding minimum infrastructure,such as space,sanitation,playgrounds,fire safety etc are flouted.
Govt,for want of will power as well as inadequate staff strength cannot regulate the functioning of these schools.
The corporates exert excessive influence on the rulers by contributing election funds and some among them start political career also.
Small private schools complain about the preferential treatment meted out by the Govt to corporate schools.
You may think that this phenomenon persist only partly and there are Govt schools for poor students.There again,from 2017 on wards,there was a move to lease out schools run by local bodies,zilla-parishads and state govt to corporates for 33 years.Children have to forgo education facilities with welfare.The corporates would utilize facilities/infrastructure for commercial purposes.In due course,salary for teachers would also be paid by the corporates..For handing over the schools to corporates,parents were not consulted.
You compare this sorry state of affairs with TN,where we have 49630 govt or govt aided schools.You can read another article in Keetru today by M.Jayaprakash Narayanan about the strong educational infrastructure and enormous facilities to students in govt schools in TN and my challenge to both Periyasamys in the comments column.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.