வின் தொலைக்காட்சியில் "எதிரும் புதிரும்' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிரபலங்களை அழைத்து முக்கிய பிரச்சினைகள் குறித்து நேருக்கு நேராக வினா தொடுத்து அவர்களின் கருத்துகளை பதிவு செய்யும் நிகழ்ச்சியாக இதனை நடத்தி வருகிறார் நிஜந்தன்.

"எதிரும் புதிரும்' நிகழ்ச்சியில் கடந்த 2ம் தேதி இந்து மக்கள் கட்சியின் தலைவரான அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார். இவரி டம் மதுரை ஆதீன மட சர்ச்சை, நித்தியானந்தா பிரச்சினை, பாஜ கவின் அரசியல், கூடங்குளம் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நிஜந்தன் வினா தொடுக்க... தடுமாற்றத்துடனும், சில வேளை சம்மந்தமில்லாமலும், ஆதாரமில்லாத அவதூறுகளுடனும் தனக்குத்தானே முரண்பட்டும் பேசினார் அர் ஜுன் சம்பத்.

மதுரை ஆதீன மட நிர்வா கத்தை அரசே ஏற்றுக் கொண்ட நடவடிக்கை சரிதான். இது எங் கள் கட்சியின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்ற அர்ஜுன் சம்பத், தொடர்ந்து பேசும்போது “மதச் சார்பற்ற நாட்டில் மத நிறு வனங்களை அரசு நிர்வகிக்கக் கூடாது. கிறிஸ்தவ, முஸ்லிம் சமு தாயத்தின் சொத்துகளை அந்தந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே நிர்வகிக்கிறார்கள். ஆனால் இந்து சமூகத்தின் கோயில்கள், சொத்துகளை அரசு நிர்வகிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது'' என்றார்.

“அப்படியானால் மதுரை ஆதீன மடத்தை அரசு எடுத்துக் கொண்டிருப்பது சரி என்று சொன்னீர்களே?'' என நிஜந்தன் கேட்க... “ஒட்டுமொத்த மடத்தையும் அரசு எடுத்துக் கொள் வதை அனுமதிக்க முடியாது. மடத்தில் ஊழல் நடந்திருக்கிறது. மடத்தின் சொத்துகள் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்கிற சர்ச்சை வரும்போது அரசு தலை யிட்டு சொத்துகளை பாதுகாத்தி ருக்கிறது...'' என்றார் அர்ஜுன் சம்பத்.

“நித்தியானந்தாவும் ஒரு சாமி யார்தானே அவருக்கு ஏன் எதிர் ப்பு தெரிவிக்கிறீர்கள்?'' என்று நிஜந் தன் அடுத்ததாக கேள்வியெ ழுப்ப...

“அவர் சாமியார்தான். ஆனால் சைவ சமயத்திற்கு சொந்தமான மதுரை ஆதீனத்திற்கு அவர் எப்படி சொந்தம் கொண்டாட முடியும். அதோடு, அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு உள்ளது...'' என்று அர்ஜுன் சம்பத் சொல்ல...

“மடாதிபதிகள் மீது ஏன் பாலி யல் குற்றச்சாட்டு வருகிறது?'' என்று கேட்டார் நிஜந்தன். “குற் றச்சாட்டு என் பது எல்லா மதத் தலைவர்கள் மீதும் வருகிறது. ஆனால் அதில் உண்மை உள் ளதா என்பதைத்தான் பார்க்க வேண்டும்...'' என்று மடாதிபதிக ளுக்கு முட்டுக் கொடுத்தார் சம்பத்.

“மத நிறுவனங்களை அரசு தன் பொறுப்பில் எடுக்கக் கூடாது என்கிறீர்களா?'' என்று மீண்டும் நிஜந்தன் கேட்க, “கூடாது என் றோம். முஸ்லிம், கிறிஸ்தவ சம யத்தவர்களுக்கு மட்டும் சலுகை காட்டப்படுகிறது. அவர்கள் கல்வி நிறுவனங்களைத் தொடங் கிக் கொள்ள எவ்வித பிரச்சினை யும் இல்லை. இந்து மக்கள் கல்வி நிறுவனங்கள் தொடங்கினால் அனுமதி பெற வேண்டும்.

மதச்சார்பற்ற நாடு இந்தியா. இங்குதான் முஸ்லிம்கள் அதிக பாதுகாப்புடன் இருக்கிறார்கள். இந்துக்களைவிட முஸ்லிம்கள் சலுகைகளை அனுபவிக்கிறார் கள். முஸ்லிம் நாடுகளில் அவர் கள் நிம்மதியாக இல்லை. சிறு பான்மை என்று அவர்களை அர சாங்கம் பிரிக்கிறது. மதச்சார்பற்ற நாட்டில் சிறுபான்மை பெரும்பா ன்மை எல்லாம் இல்லை. ஆல்ஆர் ஈகுவல்...'' என்றவர் தொடர்ந்து,

“இந்த நாட்டில்தான் முஸ்லிம் கள் ஜனாதிபதியாக வர முடிகி றது. பாகிஸ்தானிலோ, பங்களா தேஷிலோ ஒரு இந்து வார்டு கவுன் சிலராகக் கூட வர முடியாது...'' என்றவுடன்,

“இந்தியாவில் சிறுபான்மையி னர் இருக்கத்தான் செய்கிறார் கள். நீங்கள் கூடாது என் கிறீர்களே...?'' என்றவு டன், “அதை நீங்கள் தான் பிரித்து வைத் துள்ளீர்கள். எல்லோ ருமே சமம்தான்...'' என்ற சம்பத்திடம், “பாஜக கட் சியில் சிறுபான்மைப் பிரிவு இருக்கிறதே...''? என் றார் நிஜந்தன்.

“ஆமாம் இருக்கிறது. அவர்க ளுக்கு அரசியல் ரீதியாக பல கார ணங்கள் இருக்கலாம். கூட்டணி அரசியலுக்கு தேவை இருக்க லாம். பாஜகவும் மதச்சார்பற்ற கொள்கையை அரசியலுக்காக கடைபிடிக்கின்றது. அயோத்தி யில் ராமர் கோவில் கட்டுவோம் என்றார்கள். ஆனால் அதை செய்யவில்லை...'' என்றவுடன், “பாஜக ஆட்சி இந்துத்துவாவிற்கு சாதகமான ஆட்சியல்லவா?'' என்று நிஜந்தன் கேட்க,

“ஓரளவிற்கு சாதகமானது தான். இந்துத்துவாவிற்கு அது ஏணியாகத்தான் இருக்கிறது. ஆனால் எங்கள் கட்சியில் சிறு பான்மை பிரிவு இல்லை...'' என் றார்.

“ஏன் இல்லை?'' என்று நிஜந் தன் கேட்க, “நாங்கள் இந்துக்க ளுக்காக கட்சி நடத்துகிறோம். இதில் இந்துக்கள்தான் சேர முடி யும். பாஜகவில் முஸ்லிம்கள் சேர லாம். அமைச்சராக கூட வரலாம். இந்து ராஜ்ஜியம் உருவாக வேண் டும் என்பதுதான் எங்கள் நோக் கம்...'' என்றவர் என்ன நினைத் தாரோ, “இந்து ராஜ்ஜியத்தில் தான் முஸ்லிம்களும், கிறிஸ்தவர் களும் பாதுகாப்பாக இருக்க முடியும். அவர்களுடைய வழி பாட்டு உரிமைகள் பாதுகாக்கப்ப டும். அவர்கள் பாதுகாப்பாக ஹஜ் செய்ய முடியும். ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை இல்லை. இந்து ஆட்சியில்தான் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் இருந்தனர். இந்துக்கள் முஸ்லிம் களுக்கு ஆட்சியையே வழங்கி னர். ஒளரங்கசீப்பின் ஆட்சியில் இந்து கோவில்கள் இடிக்கப்பட் டன. வீர சிவாஜியின் ஆட்சியில் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் இருந்தனர்..'' என்று வரலாற்றை புரட்டிச் சொன்னார்.

இது குறித்து கேள்வியெழுப் பிய நிஜந்தன், “சற்று முன்தான் எல்லோரும் சமம் என்றீர்கள். இப்போது வாக்குரிமை இல்லை என்கிறீர்களே?'' என்று கேட்க,

“ஆமாம். வாக்குரிமை கிடை யாது. அவர்கள் குடிமக்களாக இருக்கலாம் என்று அர்ஜுன் சம்பத் உளற,

“குடிமக்களின் அடிப்படை உரிமையே வாக்குரிமைதான். அதையே இல்லை என்கிறீர் களே?'' என மீண்டும் மடக்கினார் நிஜந்தன்.

“ஏன் கொடுக்க வேண்டும் வாக் குரிமை? பாகிஸ்தானிலே இந்துக் களுக்கு வாக்குரிமை இருக்கிறதா? பங்களாதேஷிலே இருக்கி றதா?'' என்று சொதப்பிய அர் ஜுன் சம்பத், “அவர்கள் (முஸ்லிம் கள், கிறிஸ்தவர்கள்) தாய் மதத் திற்கு திரும்பினால்தான் அவர்க ளுக்கு வாக்குரிமை'' என்றவுடன், “இந்து மதத்தில் ஏற்றத்தாழ்வு கள், சாதி அடிப்படையிலிருப்ப தால்தானே மதம் மாறுகிறார் கள்...'' என்று நிஜந்தன் கேட்க,

“இந்து சமயத்தில் ஏற்றத்தாழ் வுகள் இல்லை. அது மதம் அல்ல. இஸ்லாமிய மதம், கிறிஸ்தவ மதம் போல் இந்து என்பது மதம் அல்ல. அது ஒரு சமயம். கிறிஸ்த வர்களும் முஸ்லிம்களும்தான் இந்து மதம் என பெயரிட்டனர். ஹிந்து சமயத்தில் எல்லோருமே சமம்தான். சாதாரணமானவரை யும் மேல்நிலைக்கு உயர்த்தும் மார்க்கம்தான் இந்து சமயம்...'' என்று அர்ஜுன் சம்பத் கூற,

“எல்லோரும் சமம் என்கிறீர் கள். பிறகு சாதாரணமானவன் என்று நீங்களே பிரித்து பார்க்கி றீர்களே?'' என்று நிஜந்தன் கொக்கி போட, “எல்லோரும் ஒன்று என்றுதான் கூறு கிறேன்...'' என்று அர்ஜுன் சம்பத் திணறிய தைப் பார்த்த நிஜந்தன் டாபி க்கை மாற்றியவாறு, “கூடங்குளம் அணு உலை வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறீர்களே?'' என்றவுடன்,

“கூடங்குளத்திலுள்ள கிறிஸ் தவ சபைகள் மக்களை மூளைச் சலவை செய்து போராட வைத்தி ருக்கின்றன. உதயகுமார் ஹிந்து தான் என்றாலும் அவர் அமெரிக் காவிற்குச் சென்று பணியாற்றி விட்டு வந்தவர். அவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வரு கிறது. அமெரிக்காவின் தூண்டுத லில்தான் கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டம் நடக்கிறது...'' என் றார்.

“அப்படியானால் அமெரிக்கா தான் இந்தப் போராட்டத்தை தூண்டி விடுகிறது என்கிறீர் களா?'' என்று நிஜந்தன் கேட்க,

“அமெரிக்கா மட்டுமல்ல. இதில் சர்வதேச சதியும் இருக்கி றது. உள்நாட்டு சதியும் இருக்கி றது. இந்தப் போராட்டத்தை வெடிகுண்டு வைக்கும் மாவோ யிஸ்டுகள்தான் ஆதரிக்கின்றன. தி.க. ஆதரிக்கிறது. வைகோ ஆதரிக்கிறார். நாத்திகர்களான இவர்களுக்கு கிறிஸ்தவர்களுடன் என்ன வேலை? அங்கே போரா டும் மக்கள் 2 நூற்றாண்டுகளுக்கு முன் இந்துவாக இருந்தவர்கள். அவர்களை மூளைச் சலவை செய்கின்றன கிறிஸ்தவ சபைகள்.

கூடங்குளம் பாதுகாப்பாக இருக்கிறது என்று நிபுணர்கள் சொல்லி விட்டார்கள். அணு சக்தி தமிழன் அப்துல் கலாமும் சொல்லி விட்டார். 40 வருடங்க ளாக கல்பாக்கத்தில் அணு உலை இருக்கிறதே அது பாதுகாப்பா கத்தான் இருக்கிறது...'' என்ற அர்ஜுன் சம்பத்திடம்,

“அந்த மக்களிடம் நீங்கள் எடுத்துச் சொல்லலாமே?'' என்று நிஜந்தன் கேட்க, “எங்களைத் தான் ஆர்.எஸ்.எஸ்.காரர்களாக, இந்துத்துவ அமைப்புகளாக மக்கள் பார்க்கிறார்களே. இப்படி ஒரு சித்திரத்தை அந்த மக்களி டம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதனால் நாங்கள் சொன்னால் அவர்கள் கேட்பதில்லை...'' என அர்ஜுன் சம்பத் கூறியவுடன்,

“உங்களை அந்த மக்கள் நம்ப மறுக்கிறார்களா?'' என்று நிஜந் தன் கேட்க...”ஆமாம். எங்களை அவர்கள் நம்புவதில்லை...'' என்று அசடு வழிந்தவாறே “அப்படி யொரு பிரச்சாரத்தை கிறிஸ்தவ அமைப்புகள் செய்து வைத்திருக் கின்றன...'' என்றார்.

காமெடியும், சொதப்பலும், திணறலுமாகவே இருந்தன அர் ஜுன் சம்பத்தின் பதில்கள். இந்து மக்கள் மத்தியில் அவரின் நிஜ முகத்தை தோலுரித்தே காட்டி யது எதிரும் புதிரும்.

இந்த எதிரும் புதிரும் நேர் காணலில் அர்ஜுன் சம் பத் சொன்ன பதில்கள் சொதப் பல் ரகம் என்பது ஒருபுறமிருக்க... ஆதாரமற்ற பல தவறான செய்தி களையும் அவர் பதிவு செய்திருக் கிறார். அவற்றை மக்களுக்கு தெளிவுபடுத்தும் கடமையும், பொறுப்புணர்வும் நமக்கு இருக் கிறது.

சலுகைகளை அனுபவிப்பது யார்?

முஸ்லிம்கள் இந்த நாட்டில் பாதுகாப்பாகவும், இந்துக்களை விட அதிக சலுகைகளை அனுப விப்பதாகவும் அர்ஜுன் சம்பத் கூறுகிறார். ஆனால் என்னென்ன சலுகைகளை முஸ்லிம்கள் அனு பவிக்கிறார்கள் என்று அவரால் சொல்ல முடியவில்லை.

கல்வி நிறுவனங்களை அரசின் சலுகையோடு சிறுபான்மை மக்கள் நடத்துகிறார்கள் என்று மட்டும் சொல்கிறார். உண்மை யில் சிறுபான்மையினர் கல்வி நிறுவனத்தை தொடங்கி விட்டு அனுமதி பெறலாம். பெரும் பான்மை சமூகம் தொடங்குவ தற்கு முன் அனுமதி பெற வேண் டும் அவ்வளவுதான். இது படுத் துக் கொண்டு போர்த்திக் கொள் வது, போர்த்திக் கொண்டு படுத் துக் கொள்வது போன்ற விஷயம் தான்.

ஆனால் இதில் என்ன சலுகை இருக்கிறது? பெரும்பான்மை கல்வி நிறுவனங்களைப் போன்று கட்டணக் கொள்ளை யில் சிறுபான்மை கல்வி நிறுவ னங்கள் ஈடுபடுவதில்லை. அவை பெரும்பாலும் சேவை மனப் பான்மையோடுதான் இயங்கி வருகின்றன.

மத வழிபாட்டு விஷயங்களில் மட்டும் சிறுபான்மை மக்களுக்கு அவர்கள் விருப்பப்படி நடந்து கொள்ளலாம் என்று சில சலுகை கள் உண்டு. இதில் என்ன அரசின் சலுகைகளை முஸ்லிம்கள் அனு பவிக்க முடியும்?

ஆனால் இதேபோல, சலுகை கள் பெரும்பான்மை சமூகத்திற் கும் இருக்கிறது. கூட்டுக் குடும்ப மாக வசிக்கும் இந்துக்களுக்கு வரி விலக்கு, குழந்தையை சுவிகா ரம் செய்தல் உள்ளிட்ட சில சலு கைகளை அரசாங்கம் வழங்கியி ருக்கிறது. வரி விலக்கு என்ற வகையில் பெரும்பான்மை சமூ கம் அரசின் சலுகைகளை அனுப விக்கிறதே அப்படி முஸ்லிம்கள் ஏதாவது அனுபவிக்கிறார்களா?

அறநிலையத் துறை மூலம் பழ மையான கோயில்கள் புனரமைக் கப்படுகின்றன. அப்படி பள்ளி வாசல், சர்ச்சுகள் அரசின் செல வில் புனரமைக்கப்படுகிறதா? கோயில்களில் அன்னதானத்தை அரசே நடத்துவதைப் போல பள்ளிவாசல்களிலும், சர்ச்சுகளி லும் உண்டா?

தீபாவளி, பொங்கல் பண்டி கைகளை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பெரும்பான்மை மக்களுக்கு இலவச வேட்டி, சேலை, சிறப்பு அளவுகளில் சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருட்கள் வழங்கப் படுவதைப்போல முஸ்லிம், கிறி ஸ்தவ பண்டிகைகளின்போது வழங்கப்படுகிறதா?

இமய மலையிலுள்ள பனி லிங்கம், முக்திநாத், சீனாவில் உள்ள மான்சரோவர் போன்ற இந்துக்களின் புனித தலங்க ளுக்கு யாத்திரை செல்ல தமிழக அரசு 25 ஆயிரம் முதல் 50 ஆயி ரம்வரை யாத்திரைக் கட்டணம் வழங்குகிறதே. அப்படி முஸ்லிம் களுக்கு ஹஜ்ஜின்போது அரசு கொடுக்கிறதா?

மாறாக ஹாஜிகளிடமிருந்து பணத்தை சுரண்டத்தானே செய் கிறது அரசு! ஆல் ஆர் ஈகுவல் என்று சொல்லும் அர்ஜுன் சம்பத், மான்சரோவர், முக்திநாத் செல்ல இந்துக்களுக்கு தமிழக அரசு யாத்திரைக் கட்டணம் (மானியம்) தருவதைப் போலவே முஸ் லிம்களுக்கும் தர வேண்டும். ஏனெனில் இது மதச்சார்பற்ற நாடு என்று தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதுவாரா?

பாகிஸ்தான், வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு ஓட்டுரிமை இல்லையா?

அடிப்படையற்ற வாதமாக பாகிஸ்தானிலும், வங்காளதே சத்திலும் இந்துக்களுக்கு வாக்கு ரிமை இல்லை என்பதை முன் வைக்கிறார் அர்ஜுன் சம்பத்.

இந்த இரு நாடுகளும் மதச் சார்பு நாடுகள் என்ற போதிலும் அங்கே அனைத்துவித உரிமைக ளும் சிறுபான்மை இந்து சமயத் தவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. நீதி வழங்குவதிலும் கூட அவர்க ளுக்கு பாரபட்சம் காட்டப்படுவ தில்லை. அண்மையில், இஸ்லாத் திற்கு எதிரான அமெரிக்கத் திரை ப்படத்தை எதிர்த்து பாகிஸ்தானி யர்கள் கராச்சியில் போராட் டம் நடத்தியபோது, ஆர்ப்பாட்டக் காரர்களில் சிலர் அங்கிருந்த இந்துக்களின் குடியிருப்புகளில் புகுந்து கலகம் செய்து, அங்கி ருந்த கிருஷ்ணன் கோவிலை சேதப்படுத்தியதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த பாக் அரசு, அந்த கோவில் சீர்படுத்தி தரப்படும் என அறிவித்துள்ளது.

இன்னும், தற்போதைய பாக் ஆளுங்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிற ரமேஷ் லால் என்ற இந்துவின் வேண்டு கோளை ஏற்று இந்துக்களின் வழி பாட்டிற்காக கோவில் கட்ட அனுமதி வழங்கி உத்தர விட்டி ருக்கிறார் அதிபர் ஆசிஃப் அலி சர் தாரி. ஆனால் பாகிஸ்தானில் ஒரு இந்து வார்டு கவுன்சிலராக வர முடியாது என்று உலக நடப்பை அறியாமல் உளறுகிறார் அர்ஜுன் சம்பத்.

வரலாற்றுப் புரட்டு

முகலாய மன்னர் ஒளரங்கசீப் ஆட்சியில் இந்து கோவில்கள் இடிக்கப்பட்டன என்கிறார் அர்ஜுன் சம்பத்.

ஒளரங்கசீப்பின் வரலாற்றை சரியாகத் தெரிந்து கொள்ளாமல் இவர் பிதற்றியிருக்கிறார். ஒளரங் கசீப் இடித்த கோவில்களில் ஒன் றையாவது சுட்டிக் காட்டி அவர் பேசியிருந்தால் அதை நியாயம் எனலாம். பொத்தாம் பொதுவாக ஒளரங்கசீப் மீது இந்துத்துவாவி னர் சுமத்தும் குற்றச்சாட்டுகள் தான் இவை.

முகலாய மன்னர்களில் பெரும் நிலப்பரப்பை ஆண்டவர் ஒளரங் கசீப். இதனால் "ஆலம்கீர்' (உல கத்தை வென்றவர்) என்ற பெயரும் இவருக்கு உண்டு. அவரது ஆட் சிக்குட்பட்ட பல நூறு கோயில் கள் இன்றும் கம்பீரமாகவே காட் சியளிக்கின்றன. 800 ஆண்டு காலம் முகலாய ஆட்சி நடந்திருந் தும் நூற்றுக்கணக்கான கோயில் கள் இன்னும் அப்படியே இருப் பது அவர்களின் சமய சகிப்புத் தன்மைக்குத்தான் சான்று பகர் ந்து கொண்டுள்ளன.

ஒளரங்கசீப் பல கோயில்களு க்கு மானியம் கொடுத்ததற்கு வர லாற்றுப் பதிவுகள் உண்டு. பொது வாக ஒளரங்கசீப் மீது சீறி விழும் இந்துத் தலைவர்கள் பேரரசர் அக் பரைக் கண்டு கொள்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் உண்டு.

அக்பர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி இந்து மதம் உட்பட பல சமயங்களின் தத்துவங்களை இணைத்து "தீனே இலாஹி' என்ற புதிய மதத்தை ஏற்படுத்தியவர். இந்துப் பெண்களை மணந்து இந் துக்களுக்கு சலுகை வழங்கினார். அதே சமயம், ஒளரங்கசீப் மதப் பற்றுடன் தனது வாழ்வை கழித் தவர். மாமன்னராக இருந்த நிலையிலும், தொப்பி தயாரித்து அந்த வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை கழித்தவர் என்று வரலாறு சொல்கிறது.

தனது ஆட்சியின் கீழ் அனை த்து மக்களையும் அவர் சமமாக நடத்தினார் என்பதற்கு சாட்சி கூறுகின்ற ஜிஸ்யா வரியை இந் துக்களுக்கு எதிரான ஒளரங்கசீப் பின் நடவடிக்கையாக இந்துத் துவா சித்தரிப்பது வரலாற்று புரட்டு.

ஒரு மன்னன் தன் குடிமக்களி டம் வசூலிக்கும் வரியை ஒளரங்க சீப்பும் வசூலித்தார். அதனை முஸ் லிம்களிடத்தில் "ஜகாத்' என்ற பெய ரிலும், இந்துக்களிடம் "ஜிஸ்யா' என்ற பெயரிலும் வசூலித்தார் என் பது உண்மை. இதைத்தான் இந் துக்களை மட்டும் கசக்கிப் பிழிந்த தாக பில்டப் செய்யப்படுகிறது. இந்துக்களை ஒளரங்கசீப் கொடு மைப்படுத்தினார் என்றால் இத் தனை வருடங்களாக ஜிஸ்யா வரி மேட்டரைத் தாண்டி வேறெந்த குற்றச்சாட்டையும் ஒளரங்கசீப் பின் மீது இந்துத்துவாவினரால் சொல்ல முடியவில்லை.

கூடங்குளம் போராட்டம்

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் இன்று மக்கள் இயக்கமாக பரிணாமம் அடைந்திருக்கிறது. இந்தப் போராட்டத்தை எதிர்க்கும் அரசி யல் கட்சிகளும், அரசாங்கங்களும் சர்வதேச சதி என்றும், வெளிநாட் டுப் பணம் விளையாடுகிறது என் றும் அரசியல் ரீதியாக விமர்சனம் செய்து போராட்டத்தை நசுக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், அர்ஜுன் சம்பத் மட் டும் மதத்தை உள்ளே நுழைக்கி றார். கூடங்குளத்திலுள்ள கிறிஸ் தவ சபைகள்தான் இந்தப் பிரச்சி னையை தூண்டி வருகின்றன என் கிறார்.

அடிப்படை அறிவு கொண்ட சாமானியர்களுக்கும் தெரிந்திருக் கும் விஷயம் அர்ஜுன் சம்பத் திற்கு ஏனோ தெரியவில்லை. இடிந்தகரையில் அணுமின் நிலை யம் அமைக்கப்பட்டுள்ள பகுதி யைச் சுற்றி வாழ்பவர்களில் பெரும்பான்மையாக கிறிஸ்தவ மக்கள் இருக்கிறார்கள். பாதிப்பு என்பது அந்த மக்களுக்குத்தான்.

அணு உலையில் பாதிப்பு ஏற்ப டுமே என்கிற காரணத்தினால் தான் அந்த மக்களும் போராடுகி றார்கள். அதற்கு அங்குள்ள கிறிஸ் தவ சபைகளும் ஆதரவு தெரிவிக் கின்றனவே தவிர இது மத விவகா ரம் அல்ல... தமிழக கிறிஸ்தவ மக் கள் மத்தியிலேயே அணு உலை க்கு ஆதரவும் - எதிர்ப்பும் உள் ளது. அணு உலை போராட்டம் என்பது அப்பகுதி மக்களின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட் டது என்பதால்தான் இந்த எதிர்ப் புப் போராட்டம்.

அங்கே வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக இருந் தால் அவர்கள் சார்ந்த இயக்கங் கள்தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதே யதார்த் தம்.

கூடங்குளம் பாதுகாப்பாக இருக்கிறது என்கிறார் அணுசக்தி விஞ்ஞானி அர்ஜுன் சம்பத் (!?). போராட்டக்காரர்களோ, “இது பாதுகாப்பானது என்று அரசாங் கம் நிபுணர் குழுவை அனுப்பி நிரூபிக்கட்டும். நாங்ககள் எங்கள் நிபுணர் குழுவை வைத்து அணு உலை பாதுகாப்பானதல்ல என் பதை நிரூபிக்கிறோம்...'' என்று நேர்மையோடு சவால் விடுத்து நெடு நாட்கள் ஆகின்றன. அந்த சவாலை அணு விஞ்ஞானி அர் ஜுன் சம்பத் ஏற்றுக் கொண்டு நிபு ணர் குழுவை அங்கு அழைத்துச் செல்ல தயாராகட்டும்!

அணு உலையை மற்றவர்கள் ஆதரிப்பதற்கும், அர்ஜுன் சம்பத் ஆதரிப்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டையும் அறிந்து கொள்ள வேண்டும்.

அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயங்களுக்காகவும், அரசாங் கங்கள் சர்வசேத நிர்ப்பந்தம் கார ணமாகவும், பொது மக்களில் பலர் தமிழகத்தில் மின் தேவையை பூர்த்தியாகும் என்ற புரிதலிலும் அணு உலைக்கு ஆதரவளித்துக் கொண்டுள்ளனர்.

ஆனால் அர்ஜுன் சம்பத்தோ கிறிஸ்தவ சபைகளின் ஆதர வோடு இந்தப் போராட்டம் நடப் பதால் அதற்கு நேரெதிராக நின்று ஆதரிக்கிறார். இவரது ஆதரவு மக்கள் நலன் முன்னிறுத்தப்ப டாத மதவெறி சார்ந்தது!

தொகுப்பு : ஃபைஸல்

Pin It