இலங்கையில் தம்புள்ள பகுதியில் அமைந்துள்ள பழமை யான பள்ளிவாசலை தகர்க்கும் முயற்சியிலும் இடம் மற்றும் முயற்சியிலும் தோல்வியடைந்து, அப்பள்ளியை சேதப்படுத்திய திருப்தியோடு வலம் வரும் புத்த பிக்குகளை கண்டு கொள்ளாத சிங்கள இனவாத அரசு, அடுத்த கட்டமாக முஸ்லிம்க ளுக்கு எதிரான மற்றொரு காய் நகர்த்தலை தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இலங்கையில் பதிவு செய்யப் பட்ட மசூதிகள், மதரஸாக்கள் எண் ணிக்கையை அறியும் பொருட்டு, அவை பற்றிய தகவல்களைத் தருமாறு முஸ்லிம் மத விவகாரத் துறைக்கு குற்றப் புலனாய்வுத் துறை வேண்டுகோள் விடுத்திருந் தது.

இதனை அறிந்த முஸ்லிம் தலை வர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித் தனர். இந்தத் தகவல் சேகரிப்பில் "உள்நோக்கத்துடன்' குற்றப் புல னாய்வுத் துறை ஈடுபடுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

"மத்திய மாகாணத்தில் தம்புள்ள என்ற இடத்தில் உள்ள மசூதியை இடம் மாற்ற வேண்டும் எனக் கோரி புத்தமதத் துறவிகள் மேற் கொண்ட போராட்டப் பின்னணி யில் இந்த விவகாரத்தையும் முஸ் லிம் தலைவர்கள் பார்க்கின்றனர்.

முஸ்லிம்களின் இந்த பார்வை தவறு என்றும், உண்மையிலேயே அனைத்து மசூதிகளும் மதரஸாக் களும் பதிவு செய்யப்பட்டுள்ள னவா என்பதை அறிந்து கொள் வதே குற்றப் புலனாய்வுத் துறை யின் நோக்கம்; பதிவு செய்வது என்பது இயல்பான சட்ட நடைமு றையாகும்...” என்றும், அரசின் ஆத ரவு நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம். அஜ்வர் கூறியுள்ளார்.

அஜ்வரின் கூற்று உண்மை என்றே எடுத்துக் கொண்டாலும், அனைத்து மத வழிபாட்டுத் தளங் களையும் புலனாய்வுத் துறை கணக்கில் எடுத்திருக்க வேண்டும். மாறாக முஸ்லிம்களின் வழிபாட் டுத் தலங்கள் விஷயத்தில் மட்டும் இந்த உத்தரவு என்பதுதான் தம் புள்ளாவின் தொடர்ச்சியோ என்ற சாந்தேகத்தை முஸ்லிம்களுக்கு எழுப்புகிறது. ஏற்கனவே புலிகளின் துரோகத்தால் மீள முடியா துயரில் வாழும் முஸ்லிம்களுக்கு, இலங்கை அரசும் அவ்வப்போது இடைஞ்சல் கொடுப்பதை பார்க்கும்போது அம்மக்களின் நிலை பரிதாபமானதுதான்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.