கால் நூற்றாண்டைத் தாண்டியும் தீர்க்கப்படாமல் இருக்கும் இலங்கையின் இனப்பிரச்சினையில் அவ்வப்போது பேச்சுவார்த்தைகள் நடப்பதும் பின்னர் அவை அர்த்தமில்லாமல் முடிந்து விடுவதும் வழக்கமான நிகழ்வுகளாக இருந்தாலும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பது அனைத்து தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இனப்பிரச்சினையை தீர்க்கும் பேச்சு வார்த்தைகள் நம்பிக்கையினூடாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்படியான பேச்சுவார்த்தைகளின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வில் முக்கியத்துவம் வாய்ந்த இன்னொரு தரப்பான சிறுபான்மை முஸ்லிம் சமூகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்பதை தீவிரமாகவே கவனத்திற்குள் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

புலிகளுடனான பேச்சுவார் த்தைகளின்போது முஸ்லிம் தரப்பு புறக்கணிக்கப்பட்டதைப் போன்றே புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு நடைபெறும் தீர்வை நோக்கிய பேச்சுவார்த்தைகளிலும் முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கப்படுகிறது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன் தலைமையில் கடந்த 10ம் தேதி இலங்கைக்குச் சென்ற உயர் மட்டக் குழு, இனப் பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்த பேச்சுவார்த்தையை இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடனும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடனும் நடத்தியி ருக்கிறது.

இப்பேச்சுவார்த்தைகளின்போது மூன்றாம் தரப்பான முஸ்லிம் சமூகம் பங்கெடுக்காதது இலங்கை முஸ்லிம்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூஃப் ஹக்கீம், இந்திய உயர் மட்டக் குழுவை சந்திப்பதற்கான அனுமதியை இலங்கையிலுள்ள இந்தியத் தூதரிடம் கோரியிருந்தும் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் சந்திப்பை நிகழ்த்தாமல் உயர் மட்டக்குழு இந்தியாவிற்கு திரும்பியிருப்பது இனப்பிரச்சினையில் இந்திய அரசின் இரட்டை வேடத்தைத்தான் வெளிப்படுத்துகிறது.

“இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டங்கள் முன் வைக்கப்படும்போது அதில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் உள்வாங்கப்பட வேண்டும். ஏனெனில் இலங்கையில் முஸ்லிம்களுக்கும் தனிப்பட்ட பிரச்சினைகள் இருப்பது உண்மை'' என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்தியப் பாராளுமன்றத்திலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீமுடனான நேரடிச் சந்திப்பின்போதும் தெரிவித்துள்ளார்.

ஆக இலங்கை முஸ்லிம்களை தனித்தரப்பாக இந்தியா அங்கீகரித்துள்ளது. இந்நிலையில் இந்திய அரசு கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ள ஒரு பிரச்சினையில்தான் இலங்கைக்குச் சென்ற இந்திய உயர்மட்ட அதிகாரிகள் புறக்கணிப்பைச் செய்துள்ளனர்.

இனப்பிரச்சினையில் மூன்றாம் தரப்பாக இருக்கும் முஸ்லிம் சமூகத்தை அலட்சியப்படுத்தி விட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பையும், அரசுத் தரப்பையும் மாத்திரம் இந்திய உயர் மட்டக் குழு சந்தித்திருப்பது இலங்கை முஸ்லிம்கள் விஷயத்தில் இந்தியா தனது பங்களிப்பை செலுத்தத் தயாரில்லை என்று சொல்லுவதாகவே இலங்கை முஸ்லிம்கள் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்கள் தனியாக அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலுவாகவே முன் வைத்து வருகிறது. இது, முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்தே அரசியல் தீர்வை முன்னெடுக்க வேண்டும் என்ற திட்டத்தை முன் வைத்து அரசியல் களமாடும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நன்றாகவே தெரியும்.

இப்படிப்பட்ட சூழலில், தம்மைச் சந்திக்க வந்த இந்திய உயர்மட்டக் குழுவினரிடம் முஸ்லிம் சமூகத்தையும் பேச்சுவார்த்தைகளில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றோ, அல்லது குறைந்தபட்சம் முஸ்லிம் தரப்பினரோடும் ஒரு சந்திப்பை நிகழ்த்த வேண்டும் என்றோ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரநிதிதிகள் கேட்டுக் கொள்ளாதது கவலை அளிக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் புலிகளைப் போன்றே முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்து விடக்கூடாது என்று உள்ளுக்குள் எண்ணுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இன்னொருபுறம் இலங்கை அரசும், இனப்பிரச்சினை தீர்வு விஷயத்தில் ஆரம்பம் முதலே முஸ்லிம் தரப்பை தூரமாகவே நிறுத்தி வைத்துள்ளது.

இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் 13வது திருத்தச் சட்டத்தை இயற்றுவதற்கும், மாகாண சபைகளை உருவாக்குவதற்கும் இந்தியா தூண்டுகோலாகவும், அழுத்தம் கொடுக்கும் அதிகாரச் சக்தியாகவும் இருந்திருக்கிறது. அந்த வகையில் முஸ்லிம் தரப்பையும் இணைத்துக் கொண்டு முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று இலங்கை முஸ்லிம்கள் எதிர்பார்க்கின்றனர்.

போரினாலும், இனப்பிரச்சினையினாலும், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களினாலும் கடந்த காலங்களில் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து உள்நாட்டு அகதிகளாக்கப்பட்டுள்ளனர். அவர்களது பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பறிபோயுள்ளன.

இப்படி பலவாறாக பாதிப்புகளை சந்தித்திருக்கும் ஒரு சமூகத்தை அவர்களது அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்வதை விட்டும் - இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தும் இந்தியா போன்ற நாடுகள் புறக்கணிப்பது என்பது கவலைக்குரிய விஷயமாகும்.

பிராந்திய வல்லரசாக விளங்குகின்ற அண்டை நாடான இந்தியா போன்ற நாடுகள் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளுக்கு உரிய முக்கியத்துவத்‌தை தர இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். அதே போல அரசியல் அதிகாரத்தைப் பெற முஸ்லிம் சமூகத்துடன் இணக்கத்தையும், முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டணியையும் வைத்திருக்கும் தமிழ் தேசிய கட்சிகளும், வெறும் வாய் வார்த்தைகளாக மட்டும் பேசிக் கொண்டிருக்காமல் முஸ்லிம்களையும் தனித்தரப்பாக பேச்சுவார்த்தைகளில் சேர்த்துக் கொள்ள இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது முஸ்லிம் தரப்பை புறக்கணித்து விட்டு முழுமை பெறாது என்ற யதாரத்தத்தை இலங்கை அரசும், தமிழ் தேசியக் கட்சிகளும் புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் தீர்வை நோக்கி நகர வேண்டும்.

- ஃபைஸல்

முஸ்லிம் பிரதிநிதிகளை சந்திக்க மறுக்கும் தூதுக்குழுக்கள்

இலங்கை வட கிழக்கு தீர்வு குறித்த பிரச்சினையில் பாராளுமன்றக் குழு ஒன்றை அமைக்க ராஜபக்ஷே அரசு திட்டமிட்டுள்ளது. இக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதிகள் போதிய அளவு இடம் பெற வேண்டும் என முஸ்லிம்கள் எதிர்பார்க்கின்றனர்.

இனப்பிரச்சினைப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களின் தனித் தரப்பு அவசியம் என்பதில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒருமித்த கருத்தில் உறுதியாக இருக்கின்றன. இதனை தொடர்ந்து வலியுறுத்தியும் வருகின்றன.

ஆயினும், சர்வதேச தூதுக் குழுவினர் இலங்கைக்கு வரும்போதெல்லாம் முஸ்லிம் கட்சிகளையும், முஸ்லிம் பிரதிநிதிகளையும் சந்திக்காமல் புறக்கணிப்பு செய்யும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக அரங்கேறுகிறது.

இப்படி வரும் தூதுக் குழுக்கள் இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராகக் கூட இல்லாத சிவாஜிலிங்கம், ஆனந்த் சங்கரி போன்ற தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்கும்போது, எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரûஸயோ அல்லது ஏனைய முஸ்லிம் கட்சிகளையோ சந்திப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு இலங்கை முஸ்லிம்களால் முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டக்குழு கூட்டம் விரைவில் நடைபெறவிருப்பதாகவும் அக்கூட்டத்தில் வடகிழக்கு பிரச்சினை தொடர்பாக இலங்கை பாராளுமன்றம் அமைக்கவுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழு மற்றும் தமிழக சட்டசபையில் இலங்கை பிரச்சினை தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

Comments

8 comments

8
கந்தையா
முதலில் ஏன் முஸ்லீம்களை இந்திய பிரதிநிதிகள் சந்திக்க வேண்டும் என்று தெரியவில்லை. இந்த போரில் பாதிக்கப்பட்டது தமிழர்களே. தமிழர்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படக்கூட வழியில்லாத நிலையில் அவர்களை இந்திய அதிகாரிகள் சந்திப்பதை குறையாக சொல்லும் இந்த நபர் யார்? முஸ்லீம்கள் இந்த போரில் பாதிக்கப்படவில்லை எனப்து மட்டுமல்ல, இந்த போரில் லாபமடைந்தவர்கள் முஸ்லீம்கள்தானே? இப்போது வன்னியிலும் மட்டக்களப்பு புத்தளம் பிரதேசங்களில் சவுதி அரேபியா துணையுடன் 500க்கும் மேற்பட்ட மசூதிகளும் மதரசாக்களும் எழுகின்றனவே.. அதற்கு என்ன இவர்கள் இந்திய அரசிடம் அனுமதி பெற்றா ஆரம்பித்தார்கள்? எல்லா தட்டிலும் கைவைக்கும் எண்ணத்தை முஸ்லீம்கள் விட வேண்டும். மேலும் இப்போது இருக்கும் காங்கிரஸ் அரசு இந்தியாவில் உள்ள இந்துக்களை விட முஸ்லீம்களையே தாலாட்டி சீராட்டும் அரசு. எல்லா வளங்களும் முஸ்லீம்களுக்கே என்று பகிரங்கமாக அறிவித்தவர்தான் இந்த பிரதமர் மன்மோகன் சிங். பயங்கரவாத சிமி அமைப்பின் வழக்குறைஞராக இருந்த சல்மான் குர்ஷித் இப்போது சட்ட அமைச்சராக ஆகியிருக்கிறார். இப்போது நடந்த பயங்கரவாதத்தையே இந்து பயங்க்ரவாதிகள்தான் செய்தார்கள் என்று திசை திருப்பி வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்படி இருக்கும்போது இலங்கை முஸ்லீம்களை முழுக்க முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களுமே ஆட்சி செய்யும் இந்த காங்கிரஸ் ஆட்சி விட்டுவிடுமா? ஏன் வீண் புலம்பல்? எந்த பந்தியாக இருந்தாலும் எனக்கு முதலில் வை என்று ஓலமிட்டு காரியம் சாதித்துகொள்ளும் *** குணம்தான் தெரிகிறது.
tamil maravan
I think that keetru is on the way to support only muslim peoples rather than tamil. This writer always worry about his community rather than important issues. in srilanka, muslims are happily living with out any concerns. he always cares about muslims in palestin and through out the world, go to your community website and vomit those things. we tamil living in a bleady hell world, you concern about your muslim world. please don't publish these type of articles. these kind of articles create lot of tensions. these muslim peoples always worry about their situation. they don't have motherland ( Thaainattu Pattru) believes. they only cares about their religion. they are really pimps ( Mamas). I know this comment will not come but it is true they are #**** *****.
shahzee
இனப்பிரச்சினையினாலும், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களினாலும் கடந்த காலங்களில் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து உள்நாட்டு அகதிகளாக்கப்பட்டுள்ளனர். அவர்களது பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பறிபோயுள்ளன. en ethai parka padika marakerar vemarshar kanthaiya
வீரமணி
கீற்று தளத்தினருக்கு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
முஸ்லீமுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் அவர்கள் சிறுபான்மை என்று பாவம் பார்த்து, பரந்தமனது, மதச்சார்பற்ற சிந்தனை என்று நினைத்துகொண்டு தமிழர்கள் நெஞ்சில் குத்தாதீர்கள். ஏற்கெனவே வெந்து போய் கிடக்கும் தமிழர்களுக்கு இன்னும் வாதையை கொடுக்காதீர்கள். தமிழர்கள் வேறு இந்தியர்கள் வேறு என்றெல்லாம் தமிழ் தேசியம் பேசலாம். ஆனால், இந்தியாவுக்கு முஸ்லீம்கள் செய்ததைத்தான் இலங்கையிலும் தமிழர்களுக்கும் செய்யப்பார்த்தார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இந்தியாவுக்கு இவர்கள் செய்ததிலிருந்து நாம் பாடம் படிக்கவில்லை என்றால், நாம் இன்னும் இந்தியர்கள் முஸ்லீம்களால் தினசரி கொல்லப்படுவது போல கொல்லப்பட்டுகொண்டே இருப்போம்.
//இனப்பிரச்சினைப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களின் தனித் தரப்பு அவசியம் என்பதில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒருமித்த கருத்தில் உறுதியாக இருக்கின்றன. இதனை தொடர்ந்து வலியுறுத்தியும் வருகின்றன.// தமிழ் ஈழம் கூடிவரும்போது இலங்கையை பிரித்தாயென்றால் எனக்கும் ரெண்டு பங்கு வை என்று பேசி காரியத்தை கெடுத்த்தை நாகரிகமாக சொல்கிறார்கள். உலக, பிராந்திய வரலாற்று அறிவும், மீநோக்கு பார்வையும் அவசியம் தேவை. மனிதர் கூட்டங்களை எடை போடத்தெரியாமல் ஆதரவு வழங்குவதும் ஆபத்து. அந்த ஆபத்தை ஏற்கெனவே அனுபவித்தவர்கள் நாங்கள். மட்டக்களப்பு, புத்தளம் இரண்டையும் (இந்த பக்கம் பாகிஸ்தான் அந்த பக்கம் பங்களாதேஷ் என்று இந்தியா உடைக்கப்பட்டது போல) இலங்கையை உடைத்து எனக்கு நாடு கொடு என்று கேட்டார்கள். தமிழீழத்துக்காக உயிரை விட்டு போராடினார்கள் தமிழர்கள். ஆனால் அமைச்சர்களாக இருந்துகொண்டே தனிநாடு கேட்டு பேசினார்கள். இதே மாதிரிதானே ஒரு நாள் கூட பிரிட்டிஷ் சிறையில் இல்லாத ஜின்னா தனிநாடு வாங்கிகொண்டு போனார்? எனக்கு தனிநாடு கொடு இல்லையென்றால் இந்துக்களை கொலைகள் செய்வேன் என்று டைரக்ட் ஆக்‌ஷ்ன் டே (http://en.wikipedia.org/wiki/Direct_Action_Day) என்று 72 மணி நேரத்தில் 4000 இந்துக்களை வெட்டிகொன்றார்கள். ஒரு லட்சம் பேரை வீடு வாசல் இல்லாதவர்களாக ஆக்கினார்கள். அதே போல ஒன்றுமே செய்யாமல் போராடாமல், நலுக்காக இந்த பக்கமும் அந்த பக்கமும் இருந்துகொண்டு சிங்களவனின் அமைச்சராகவும் இருந்துகொண்டு பிரித்தாயென்றால் எனக்கு ரெண்டு பங்கு வை என்று கெடுத்தார்கள். இல்லையென்றால் எப்போதோ தமிழீழம் மலர்ந்திருக்கும். (இப்படி முதுகில் குத்தியதன் பிறகுதான் அவர்கள் யாழிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்) இலங்கையில்தான் ஈழத்தின் முதுகில் குத்தினார்கள் இந்தியாவில் தமிழகத்தில் ஒன்றும் செய்யமாட்டார்கள் என்று நினைக்காதீர்கள். இந்தியா ஏற்கெனவே மூன்ராய் உடைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் இந்தியாவில் 180 மில்லியன் முஸ்லீம்கள் இருக்கிறார்கள். இலங்கை முஸ்லீம்கள் தங்களை தமிழர்கள் என்று கருதுவதும் இல்லை. தங்களை அரபியாவிலிருந்து இலங்கைக்கு வந்து வந்தேறியவர்கள் என்று தங்களை மரைக்காயர்கள் என்று இறுமாப்புடன் அழைத்துகொள்கிறார்கள். தமிழும் அரபியும் சேர்ந்த அரவி என்ற மொழி பேசினார்கள். தமிழ்நாட்டில் வெளியே பேசும்போது நாங்கள் இந்துமதத்திலிருந்து மதம் மாறினோம் என்று பேசுவார்கள். உள்ளே பேசும்போது நாங்கள் தமிழர் இல்லை. அரபியாவிலிருந்து வந்தவர்கள் என்று பேசுவார்கள். ஆனால் இலங்கையில் ஆரம்ப காலம் முதலே நாங்கள் மரைக்காயர்கள் அரபியாவிலிருந்து மரக்கலத்தில் வந்தவர்கள் என்ரு தான் தங்களை அழைத்துகொள்கிறார்கள். இதே தான் தமிழகத்திலும் நடக்கும்.

ஈழ விஷயத்தில் தயவு செய்து விசயங்களை கேட்டு பிரசுரியுங்கள். காயப்பட்டு கிடக்கும் ரணஙகள் மீது எண்ணெய் ஊற்றி பற்ற வைக்காதீர்கள்.
Ilayavaigai
Dear Friends More than 1 lakh muslims forced to migrate from their homeland leaving all their belongings by Tigers even though they supported Tigers initially. It is not good on part of a minority community Tamils to inflict the same on Muslims what they received from Srilanka govt
rizvi.K.R
we are muslim to think about muslim , you are hindu think about hindu the peaple are wich relegion they love thire relegion so, please think that all relegions came from one so we all are one family do not make relegious wise that tamil, muslim, sinhala and crist these things create war so, try to be cool always
inta
தமிழ் தேசிவதிகளே இனப்பிரச்சினை தீர்வுக்கான நடவடிக்கைகளின்போது மலையக மக்கள் தொடர்பாக கவனம் செலுத்தவேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் அ.லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பது தொடர்பில் மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு தொடர்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு வட,கிழக்கு மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது உசிதமானதா அல்லது பாராளுமன்றத் தெரிவுக்குழுவே பொருத்தமானதா என்ற வாதப் பிரதிவாதங்கள் தொடரும் நிலையில் காலம் கடத்தாது எவ்வழியிலாவது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்வதற்குத் துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டியது கட்டாயமாகும்.
வடக்கு,கிழக்கு மக்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதை மிக நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த மலையக மக்கள் முன்னணி எதிர்வரும் காலங்களிலும் அதற்கான தார்மீக ஆதரவை வழங்கும்.
இந்த நாட்டின் தமிழர்களின் பிரச்சினை என்ற வகையில் வட,கிழக்கு தமிழர்களது பிரச்சினை மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுகின்றது.நிலையில் இந்தியா கூட இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பிலான பிரச்சினையை இனம் காணாத துர்ப்பாக்கியநிலை காணப்படுவதும் சர்வதேச ரீதியிலும் மலையக மக்களது பிரச்சினைகள் இனங்காணப்படாமை கவலைக்குரியது.
இனப்பிரச்சினை குறித்து தீர்வு நடவடிக்கையின் போது இந்த நாட்டில் இருநூறு வருட வாழ்வைக் கொண்ட மலையகத் தமிழ் மக்கள் தொடர்பிலான கவனம் எடுக்கப்படவேண்டியதுடன், மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விமோசனம் எட்டும் வகையில் நிரந்தரமான தீர்வுகள் முன் வைக்கப்பட்டால் மாத்திரமே இனப்பிரச்சினைக்குரிய முழுமையானதும் ஆரோக்கியமானதுமான தீர்வுகளாக அமைய முடியுமென்றார்.
inta
தமிழ் தேசியம் என்றல் ஈழா தமிழன் மட்டுமா மலையக தமிழர்கள் தமிழ் தேசியத்தில் இடம் இல்லையா

வவுனியாவில் வாழும் மலையகத் தமிழர்கள் இரண்டாந்தர பிரஜைகளாகவே நடத்தப்படுகின்றனர் ம.தொ.மு.உபதலைவர்

பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வவுனியாவிற்கு இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்கள் அங்கும் இரண்டாந்தர பிரஜைகளாகவே நடத்தப்படுகின்றனர். என மலையக தொழிலாளர் முன்னணியின் உப தலைவர் எஸ்.ஜெயபாரதி விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் தூதுக்குழுவினர் அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்தது பற்றியும், அங்குவாழும் மலையக தமிழர்களின் நிலன்களுக்காக செயற்பட முற்படுபது பற்றியும் சில அமைப்புகளினால் வெளியிடப்படும் கருத்துகள் சம்பந்தமாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; வவுனியாவிற்கு பல்வேறு காரணிகளினால் இடம்பெயர்ந்த எமது சமூகத்தவர்கள் அங்கும் இரண்டாம்தர பிரஜைகள் போலவே நடாத்தப்படுகின்றார்கள்.

அரசாங்க வேலைகள், கிராம அபிவிருத்திகள் போன்ற சகல தேவைகளிலும் இவர்களின் நலன் புறக்கணிக்கப்பட்டே வருகின்றது. 1958 ஆம் ஆண்டில் தர்மபுரத்தில் குடியேறிய எமது மக்கள் அங்குள்ள அடர்ந்த காடுகளை அழித்தே தமது வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள இந்த இடங்களில் சுமார் 40 அடி ஆழத்திற்க் கிணறு வெட்டினால்தான் தண்ணீர் கிடைக்கின்றது. ஆனால் தர்மபுரத்திலிருந்து சுமார் மூன்றுமைல் தூரத்தில் அமைந்துள்ள விசுவமடுவில் 5 அடி ஆழத்தில் தோண்டினாலும் நீர் வசதி கிடைக்கின்றது. ஆனால் எமது சமூகத்தவர்கள் இந்த வளமான இடங்களில் குடியேற்றப்பட்டதில்லை.

இதைப்போலவே தொழில்வாய்ப்பு, மற்றும் அடிப்படை வசதிகளில் எமது சமூகத்தவர்கள் மலையகத்தை விடவும் பலமடங்கு புறக்கணிக்கப்பட்டே வாழ்கின்றார்கள். எனவே இம் மக்கள் எதிர்நோக்கும் சமூக பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவணத்துக்குக்கொண்டு, எமது சமூகத்தவர்களை வவுனியா பிரதேசத்தில் தலை நிமிர்ந்து வாழ வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது மலையக மக்கள் முன்னணிக்கு தார்மீகக் கடமையுள்ளது.

எமது சமூகத்தவர்களின் நலனில், அவர்கள் இலங்கையில் எங்கு வாழ்ந்தாலும் நாம் அக்கறை காட்டுவோம். இவ்விடயம் குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுரப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.http://www.thinakkural.com/news/all-news/jaffna/5799-vavniya.html

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.