சிந்தனையாளன் 25ஆம் ஆண்டு பொங்கல் மலர் 2022 வெளியீட்டு விழா 20.2.2022 ஞாயிறு மாலை 5 மணிக்கு இணைய வழியில் சென்னை மேடவாக்கம் பாவலரேறு தமிழ்க்களத்தில் நடைபெற்றது. வாலாசா வல்லவன் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் காஞ்சி சி.நடராசன் வரவேற்புரையாற்றினார். தோழர் பொழிலன் மலரை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார். மாம்பலம் சந்திரசேகர் கலந்து கொண்டு ஆனைமுத்து அய்யாவுடனான தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

ந.கருணாகரன், லோ.இரத்தினகுமார், மா.முருகேசன், இரா. இரமணன், அ. சகாதேவன், கோ.மு. கறுப்பையா, இரா. பகுத்தறி வாளன், மீ.டில்லிபாபு, சம்பந்தம் சிவக்குமார் க.குப்புசாமி, நா.மதனகவி, செ. ஆனையப்பன், இரா.சிவப்பிரகாசம், முனைவர் ப. வெங்கடேசன், தொ. எழில்நிலவன், க.பன்னீர்ச் செல்வம், த.இளவரசன், தீ.கோபாலகிருட்டிணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழரின் மொழி - பண்பாட்டு மீட்டுருவாக்க மாநாடு மா.பெ.பொ.க. பொதுச்செயலாளர் தி.துரைசித்தார்த்தன் தலைமையில் நடைபெற்றது. சா.குப்பன் வரவேற்புரை யாற்றினார். தோழர்கள் திருமுருகன்காந்தி, பேராசிரியர் சோம. இராசேந்திரன், இரா. திருநாவுக்கரசு ஆகியோர் கருத்துரையாற்றினார். சு.முருகவேள் நன்றியுரையுடன் மாநாடு இனிதே முடிவுற்றது.

பெரியாரிப் பேரறிஞர் தோழர் வே.ஆனைமுத்து நினைவலைகள் வெளியீடு - படத்திறப்பு - கருத்தரங்கம்.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் சிந்தனையாளன் மாத இதழின் ஆசிரியராகவும் விளங்கிய “பெரியாரியல் பேரறிஞர் தோழர் வே.ஆனைமுத்து அவர்களின்”படத்திறப்பு - நினைவலைகள் வேளியீடு-கருத்தரங்கம் நிகழ்வு 02.01.2022 அன்று மாலை 4.30மணிக்கு சென்னை, சேப்பாக்கம், செய்தியாளர் அரங்கில் நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கத்தில் மா.பெ.பொ.க. தலைமைக்குழு உறுப்பினர் சா.குப்பன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை வரவேற்றார். மா.பெ.பொ.க. துணைப் பொதுச் செயலாளர் வாலாசாவல்லவன் தலைமையில் தமிழ்நாட்டு அரசு திட்டக் குழுவின் மேனாள் துணைத் தலைவர் - பொருளியல் வல்லுநர் - பேராசிரியர் மு.நாகநாதன் அவர்கள் தோழர் வே.ஆனைமுத்துவின் உருவப்படத்தைத் திறந்து வைத்து, நினைவேந்தல் நெகிழ்வுரையாற்றினார்.

அடுத்து ஒன்றிய அரசின் மேனாள் அமைச்சர் -தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் - நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆ.இராசா அவர்கள் “நினைவலைகள்” மலரை வெளியிட்டார். ‘நினைவலைகள்’ முதல் படியினை ஒன்றிய மேனாள் இணையமைச்சர் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திருமதி சுப்புலட்சுமி செகதீசன் அவர்களும் தோழர் வே.ஆனைமுத்துவின் மூத்த மகன் தோழர் ஆனை.பன்னீர்செல்வமும் சூலூர் பாவேந்தர் பேரவை சூ.ந.பன்னீர்செல்வமும் பெற்றுக் கொண்டனர். அடுத்து தோழர் வே.ஆ.அவர்களின் மூத்த மகள் தமிழ்ச்செல்வியும் மருமகன் அரிமாப் பாண்டியனும் தோழர் க.முகிலனும் தமிழ்மறவர் கீ.வை.பொன்னம்பலனாரின் மகள் செந்தமிழ் கொற்றியும் மற்றும் கட்சித் தோழர்கள் சிலரும் பெற்றுக் கொண்டனர்.

தோழர் வாலாசாவல்லவன் தலைமையுரையை அடுத்து ஆ.இராசா அவர்கள் தோழர் வே.ஆ.அவர்களின் கொள்கை உரம், மண்டல் குழு அமைப்பிலும் அதன் பரிந்துரைகள் செயலாக்கத்திற்கு வருவதிலும் அவரின் பங்குபணி பற்றியும் உரையாற்றினார்.

தொடர்ந்து திருமதி சுப்புலட்சுமி செகதீசன் அவர் களும் தோழர் க.முகிலனும் நிகழ்ச்சி நெறியாளுநரும் ‘நினைவலைகள்’ தொகுப்பாசியருமான முனைவர் முத்தமிழும் உரையாற்றினர். வாணியம்பாடி தோழர் நா.மதனகவி நன்றியுரையுடன் இந்த நிகழ்வு நிறை வுற்றது.

அடுத்த நிகழ்வான கருத்தரங்கத்திற்கு மா.பெ.பொ.க. பொதுச் செயலாளர் தி.துரைசித்தார்த்தன் தலைமை ஏற்றார். துணைப் பொதுச் செயலாளர் இரா.திருநாவுக்கரசு வரவேற்புரையாற்றினார்.

தி.துரைசித்தார்த்தன் தலைமையுரையைத் தொடர்ந்து, தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன் அவர்கள் “தோழர் ஆனைமுத்துவின் குறிஇலக்கான கூட்டாட்சி அமைய..” என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். நிறைவாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் “வகுப்புரிமைப் போராட்டத்தில் தோழர் ஆனைமுத்து”என்ற தலைப்பில் தோழர் வே.ஆ.அவர்கள் இட ஒதுக்கீட்டு உரிமைக்காக ஆற்றிய பணிகளை நிரல்படத் தொகுத்து நினைவுகூர்ந்தார். மா.பெ.பொ.க. அரியலூர் மாவட்ட அமைப்பாளர் தமிழ்க்களம் த.இளவரசன் நன்றி கூறலுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தது.

Pin It