மியான்மர் நாடு, பழைய பர்மா ஆகும். அது 1937 வரை இந்தியாவோடு இருந்தது.
அங்கு ராகைன் மாநிலத்தில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். அங்கு பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது.
மியான்மரில் பெரும்பாலோர் பர்மிய இனத்தவர்; அவர்களில் பெரும்பாலோர் பவுத்தர்கள்.
இரண்டாண்டுகளுக்கு முன்வரையில் அங்கு இராணுவம் ஆண்டது. திருமதி. சூயி கி (Suukyi) வீட்டுச் சிறையில் பல ஆண்டுகள் வைக்கப்பட்டார். அவர் உலக அமைதிக்காக நோபல் பரிசு பெற்றவர். இராணுவ ஆட்சியை எதிர்த்து 2 ஆண்டுகளுக்குமுன் மியான்மார் தேர்தலில் போட்டியிட்டார்; அவருடைய கட்சி வெற்றி பெற்றது. ஆனால், அவர் அந்நிய ரைத் திருமணம் செய்து கொண்டதால் மியான்மரின் உயரிய பதவிக்கு வர உரிமை இல்லை. அதனால் ஆட்சிக்கு ஆலோச கராக (Councillor) இருக்கிறார்.
கடந்த 3 மாதங்களாக, மியான்மர் பவுத்தர்கள், ரோஹிங்கா முஸ்லீம்களை அடித்து உதைத்து வெளியேற்றுகிறார்கள். 5 இலட்சம் ரோஹிங்கி முஸ்லீம்கள் தப்பிப் பிழைத்திட அண்டை யிலுள்ள பங்களாதேஷுக்கு ஓடி வருகிறார்கள்; இந்திய எல்லைக்கும் வருகிறார்கள்.
அதைப் பார்வையிட, அண்மையில் ராகைன் மாகாணத் துக்கு சூயி கி சென்றார். ஆனால் ரோஹிங்கியர்களுக்குப் பாதுகாப்பு எதுவும் அவருடைய கட்சி அரசு கொடுக்கவில்லை.
ஏன்? தேர்தல் மூலம் சிவில் ஆட்சி மியான்மரில் நடை பெற்றாலும், இராணுவத்துக்கு அங்கு இன்னமும் அதிகாரம் இருக்கிறது.
இராணுவம் ரோஹிங்கியர்கள் பர்மிய குடி உரிமை இல்லாதவர்கள்; எனவே அவர்கள் இங்கு வாழக்கூடாது என்று தடுக்கிறது.
இதனால், அமெரிக்கா, மியான்மர் இராணுவத்துக்கு உதவி செய்வதை நிறுத்திவிடலாமா என்று ஆலோசிப்பதாக, 3.11.2017 வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
பங்களாதேஷ் அரசும், இந்திய அரசும் ரோஹிங்கியர் களை அகதிகளாக ஏற்க மறுக்கின்றன.
மியான்மர் அரசும் கொடுமை செய்து ரோஹிங்கிய முஸ்லீம்களை வெளியேற்றுகிறது.
ரோஹிங்கிய முஸ்லீம்கள் திக்கற்றவர்களாக இருக்க வேண்டியதுதானா?
அல்லது அவர்கள் செத்துத் தொலைய வேண்டுமா?
எல்லோரும் சிந்தியுங்கள்.