தமிழகத்திலிருக்கிற நாம் : இந்திய அரசின் 1961 முடிவை மாற்றிட, நாமே எல்லாம் செய்தோம்!

தமிழக அரசின் 1979 முடிவை மாற்றிட, நாமே காரணர் ஆனோம்!

india states UT map 350இந்திய மக்கள் தொகையில் சரிபாதிக்கு மேற் பட்டோர் சமுதாயத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப் பட்டவர்கள்; 20 விழுக்காடு மக்கள் தீண்டப்படாதோர்; 8 விழுக்காடு மக்கள் பழங்குடிகள். இவர்களின் கூட்டுத் தொகை, மொத்த மக்கள் தொகையில் 83 விழுக் காட்டுக்கு மேல் ஆகும்.

இந்தப் பெருங்கூட்டத்தினரின் சமூக - அரசியல் - பொருளாதார விடுதலைக்காக அல்லும் பகலும் உழைத் தனர் தந்தை பெரியாரும், மாமேதை டாக்டர் அம்பேத்கரும்.

இது உண்மை வரலாறு. இதை நாம் உணர வேண்டும்.

மாமேதை அம்பேத்கர் - சூத்திரர், ஆதிசூத்திரரின் சமூக விடுதலைக்கான இந்துச் சட்டத் திருத்த மசோதாவை, 1947இல் இந்திய நாடாளுமன்றத்தில் முன்மொழிந் தார். அதை இந்திய அரசு 1955இல் அடியோடு புறக் கணித்தது.

தந்தை பெரியார் நால்வருண ஒழிப்புக்காக, 1957 நவம்பரில் அரசியல் அமைப்பு விதிகளை எரித்தார்; 19.12.1973 வரை அதற்காகவே குரல் கொடுத்தார்.

இவை இன்னும் நிறைவேறவில்லை.

மாமேதை அம்பேத்கர் 1950இல், அரசமைப்புச் சட்ட விதி 16(4)இல்-1) பிற்படுத்தப்பட்டோர், 2) தீண்டப் படாதோர், 3) பழங்குடிகள் ஆகிய மூன்று வகுப்பாருக் கும் மத்திய அரசு, மாநில அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு அளித்தார்.

தந்தை பெரியார் 1950இல் போராடி - அரசியல் சட்டத்தில் கல்வியில் மேலே கண்ட மூன்று வகுப்பா ருக்கும் 2.6.1951இல், விதி 15(4)இன்மூலம் இடஒதுக் கீடு பெற்றுத் தந்தார்.

ஆனால், டாக்டர் அம்பேத்கர் விதி 340இல் வழி செய்தபடி, பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியிலும் அரசு வேலையிலும் என்னென்ன செய்ய வேண்டும் என்று, 1955இல் பரிந்துரைத்த காகா கலேல்கர் குழு அறிக்கையை, 1961 மே மாதம் இந்திய அமைச்சர வையைக் கூட்டி,

 

1) கலேல்கர் பரிந்துரைத்த பிற்படுத்தப்பட்டோர் சாதிப் பட்டியலை இந்திய அரசு ஏற்பது இல்லையென்றும்,

2) இந்திய அரசு வேலையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தருவதில்லை என்றும் முடிவு செய் தார், பிரதமர் நேரு!

1961இல் பிரதமர் நேரு செய்த அந்த அநீதியான முடிவை மாற்றிட வேண்டும் என்று, முதன்முதல் 8.5.1978இல், இந்திய அரசிடம் நேரில் கோரிக்கை வைத்தது மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி! இது வரலாறு!

1978இல், செப்டம்பர் முதல், இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று இக்கோரிக்கைக்கு வலிமை சேர்த்தது, மா.பெ.பொ.க.

அதன் விளைவாகவே, 1.1.1979இல் மண்டல் குழு அமைந்தது; 1982இல் ஏப்ரலில் மண்டல் பரிந் துரை நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.

06.08.1990 அன்று, வி.பி. சிங் அரசு மத்திய அரசு வேலையில் இந்தியப் பிற்படுத்தப்பட்டோருக்கு முதன்முதலாக தனி இடஒதுக்கீடு வழங்கியது.

இது, மா.பெ.பொ.க. இந்திய அளவில் செய்த அரிய சாதனை! இதுதான் உண்மை வரலாறு.

தமிழகத்தில், 67.5 விழுக்காடு உள்ள பிற்படுத்தப் பட்டோருக்கு 60 விழுக்காடு இடஒதுக்கீடு தரவேண்டு மென்று, 19.8.1979இல், முதன்முதல், தமிழக அரசிடம் கோரியது நாம்! நாம் கோரியது 60 விழுக்காடு இடஒதுக்கீடு; தமிழ்நாட்டு அ.தி.மு.க. அரசு 1-2-1980 இல் அளித்தது 50 விழுக்காடு இடஒதுக்கீடு!

இது தமிழக அளவில் நாம் செய்த மிகப்பெரிய சாதனை!

தில்லியில் கூட்டாட்சி மாநாட்டில், 19.10.1991இல் நாம் கோரியது, இந்தியா - ஒரே ஒற்றை ஆட்சி (Unitary State) என்பதை மாற்றி - இந்தியாவை, பல்வேறு மொழி மாநிலங்களும் இணைந்த உண்மை யான கூட்டாட்சியாக (Federal India) மாற்றி அமைக்க வேண்டும் என்பது.

இது முழுத் தன்னாட்சி கொண்ட-மொழி மாநிலங் கள் எல்லாம் ஒன்றிணைந்த உண்மையான கூட் டாட்சியாக - அதாவது :

1. பணத்தாள் அச்சடிப்பு

2. பாதுகாப்பு

3. செய்தித் தொடர்பு

ஆகிய மூன்று துறை அதிகாரங்கள் மட்டும் இந்திய அரசிடமும்; மற்றெல்லா அதிகாரங்களும் அந்தந்த மாநிலங்களிடமும் உள்ளதாக உண்மையான இந்தியக் கூட்டாட்சியாக அமைக்கப்பட வேண்டும் என்பது, நம் இறுதி அரசியல் குறிக்கோள்!

கொள்கை விதைப்பு முதல் வேலை.

அதற்காகவே, வரும் 7.1.2018 ஞாயிறு அன்று, சென்னையில் நடைபெறும் கூட்டாட்சி மாநாட்டுக்கு, தமிழகத்திலுள்ள தமிழ்த் தேசிய - திராவிடத் தேசிய - உணர்வாளர்கள் அனைவரும் வாருங்கள்! வாருங்கள் என, மனமார வரவேற்கிறோம்.