கவிஞரின் கடைசிப் பா...

நாம்

அட்டூழியங்களை

அனுபவித்து

அல்லாடுகிறோம்

நரவேட்டை

நரேந்திர மோடி

தேர்தல் நடத்தி

முடித்துவிட்டார்

ஆர்.எஸ்.எஸ்.-யின்

ஆட்டம் ஒருபுறம்

அமிஷாவின் கூத்து

மறுபுறம்

காவிப் பாசிச

பயங்கரவாதம்

கார்ப்பரேட்டு

நிதிமூலதனக் கொள்ளை

அறுபது கோடி

மக்களின் சொத்து

வெறும் ஒன்பது பேரிடம்!

இதில் ரிலையன்சு ஜியோ

கன்னக் கோலர்களின்

கபட நாடகம்.

ஆயிரக் கணக்கான

மக்களின்

வியர்வையில் கலந்து

தூத்துக்குடி

அனில் அகர்வால்

ஸ்டெர் லைட்டின்

பதிமூன்று பேர்

பிணவாடை

நெடுவாசலின்

ஐட்ரோ கார்பன் நெடி

பன்சாரே

தபோல்கர்

கல்புர்கி

கௌரி லங்கேஷ்

துப்பாக்கிச் சூடு

அனிதா, வெமுலா

அநியாயத் தற்கொலை

சிறுமி ஆஷிஃபாவைக்

குதறிய

ஆர்.எஸ்.எஸ்.

தேச பக்தி

அக்லக் படுகொலை

இடையில்

பணமதிப்பிழப்பு

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு

தம்பட்டம்!

தாழ்த்தப்பட்டோர்

பெண்கள்,

இசுலாமியர்

பெண்கள் மீது

இந்து மதவெறி

கும்பலை ஏவுதல்

மாட்டுகறி

தடை சட்டம்

குஜராத் நாறுகிறது

இந்நேரம்

தேர்தல் முடிவுகள்

தெரிந்திருக்கும்

நம் முடிவுகள்

தெரிந்திருக்குமா?

Pin It