இந்துத்துவ, பார்ப்பனிய

ஆர்.எசு.எசு காவிக்கும்பலின்

கைக்கூலி “மோடி ஆட்சி’’

மீண்டும் இந்தியாவில்,

இந்துடி பாசிசப்

பயங்கரவாத நஞ்சு இனி

வெல்லமாய் பாயும்,

ஒடுக்கப்பட்ட மக்களின்

வாழ்வை நெரிக்கும்,

சிறுபான்மை யினரின்

உரிமையை நசுக்கும்,

இசுலாமிய இளைஞன் தப்ரேசை

ஜெய் சிரிராம், அனுமான்

சொல்லச் சொல்லிக்

கொல்லும்.

அணுவணவாய் மக்களைக் கொல்ல

அணுஉலை, வேளாண்மையை

வேரோடு அழிக்க

அய்ட்ரோ கார்பன்,

பிறவி இழிவைஞி தினித்து

கல்வி மறுத்தனர்

அன்று,

ஒடுக்கப் பட்டவர்களை

ஒடுக்கியே ஆளடி

புதிய கல்விக் கொள்கை

இன்று,

ஆண்டாண்டாய்  ஆன்டியாய்

வைத்திருந்த ஆதிக்கத்தை

உடைத்து, சமூகநீதியை

வென்றெடுக்கவே இடப்பங்கீடு

இதில்

முற்பட்ட முதலைகளுக்கு

10 சதவீதம் குறுக்கீடு

இந்திய அரசமைப்பிலே

பார்ப்பனரின் “மோசடி’’

இதில்

ஒரே இந்தியாவாம்

ஒரே தேர்தலாம்

துடிக்கிறார் “மோடி’’ ழூ‹ர

இந்தியா என்பது

தேசிய இனங்களின் மீது

திணிக்கப்பட்ட சொல்

தனித்தனி

மொழி, பண்பாடு

இனங்கள் எப்படி

இந்தியராவர் ! சொல்!!

முதலாளித்துவ நாடாளுமன்றத்தில்

சனநாயகம் தேடுவது

கானல் நீரைடி

பருகுவதற்குச் சமம்

மனுதர்மத்தை அழித்து

சமதர்ம, சமஉரிமையை வெல்ல

தன்உரிமை கொண்ட

கூட்டாட்சி இந்தியாவே

தீர்வு

இதையடையத் தடை தகர்த்துப்

பயணிக்க வேண்டும்

நம் அரசியல்

நகர்வு

Pin It