அண்மையில் திருச்சிக்கு வந்திருந்தார் பிரதமர் மோடி.

அவருடன் மேடையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அண்மையில் பெய்த பெருமழைச் சேதத்தால் பாதிக்கப்பட்ட தமிழகப் பகுதிதிகளைப் பேரிடர் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும், அதற்குரிய நிவாரண நிதியை விரைந்து தருமாறும் வேண்டுகோள் விடுத்தார்.modi sutta vadaiதமிழ்நாடு முதல்வரின் கோரிக்கையைக் காதில் வாங்கிக் கொள்ளாத மோடி, அவர் தமிழகத்திற்கு வந்தது, அவரின் அமைச்சர்கள் வந்தது, தமிகத்தின் பெருமை என்று வகைவகையாக வடைகளை வாயால் சுட்டுத் தள்ளினாரே ஒழிய, தவறியும் முதல்வரின் கோரிக்கைக்கு எந்தப் பதிலும் கூறவில்லை.

மணிப்பூர், அதானி என்றால் ஒளிந்து கொள்ளும் மோடிக்கு முதல்வரின் கோரிக்கைகளுக்கு ஒழிந்து கொள்வது என்ன கஷ்டமா?

திருச்சியில் 20 ஆயிரம் கோடிகளில் திட்டங்களைத் தொடங்கி வைத்திருக்கிறார் மோடி.

சென்ற ஆண்டு இவர் தொடங்கி வைத்த எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறது.

இப்போது திருச்சி?

நிலாவிலேயே ஒளவைப் பாட்டி வடை சுட்ட கதையைத் தெறிக்க விட்ட தமிழ்நாட்டில், மோடி சுட்டுத் தள்ளும் வடைகள் ‘போணி’ ஆகாது!

2024ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுடன் மூட்டை முடிச்சிகளைக் கட்ட இருக்கும் மோடி, அதற்கு முன்னர் தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கைகளை நிறைவேற்றிப் ‘புண்ணியம்’ தேடிடுவார் என்று நம்புவோமாக!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It