வரஇருக்கும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கோவை, நீலகிரி உள்பட 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெறப் போவதாக நம்ம அண்ணாமலை சொல்லிக் கொண்டு இருக்கிறாராம்.

annamalai 380மிச்சமிருக்கும் 15 தொகுதிகளை அவர் ஏன் விட்டு விட்டார் என்று தெரியவில்லை.

இதில் ஜே.பி.நட்டா கொங்கு மண்டலத்தின் எல்லா தொகுதிகளையும் கைப்பற்றப் போவதாக ‘தமாஷ்’ காட்டியிருப்பதாகத் தகவல்.

ஏன், சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் கூட பா.ஜ.கவே வெற்றி பெறலாம். கேள்வி என்னவென்றால், அக்கட்சிக்கு மக்கள் வாக்களிப்பார்களா என்பதுதான். கனவு காண்பது அவரவர் விருப்பம்.

தி.மு.கழகம் குடும்பக் கட்சியாம், சொல்கிறார் நட்டா. யார் இல்லை என்று மறுப்பார்கள்? திராவிட இயக்கம் என்பதே எங்கள் குடும்பம்தான்.

தி.மு.க மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் ஒன்றுமே செய்யவில்லை என்று இவர்கள் கோவையில் பேசியிருக்கிறார்கள்.

அதை மக்கள் சொல்ல வேண்டும். சொல்லப் போனால் பா.ஜ.க அரசு தமிழ் நாட்டைப் புறக்கணிக்கிறது என்பதுதான் உண்மை.

மாநில அரசு, ஒன்றிய அரசுடன் போராடிப் போராடியே நலத்திட்டங்களைப் பெற வேண்டி இருக்கிறது.

தமிழ்நாட்டில் ரயில்வேயில், வங்கிகளில், ஒன்றிய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள் என்பது நட்டாவுக்குத் தெரியாதா?

தமிழர்களிடம் தாய்மொழியில் படியுங்கள் என்று சொல்லி, ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தி, பிறகு சமஸ்கிருதத்தைக் கொண்டு வரத்துடிப்பது அண்ணாமலைக்குத் தெரியாதா?

குறித்துக் கொள்ளட்டும் பா.ஜ.க. 2024ஆம் ஆண்டு தேர்தலில் அக்கட்சியை மக்கள் தோற்கடிப்பார்கள்.

சங்கிகள் மொழியில் சொன்னால் ‘மங்கு சனி’தான்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It