தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய் நூறு நாள்கள் ஆட்சி செய்து முடித்து விட்டார். அதாவது மூன்று மாதங்கள் முடிந்து விட்டன.
பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், தளபதி ஸ்டாலின் ஆட்சிக்கால சட்டமன்றங்களில் நகைச்சுவை, கலகலப்பு, பொருள் பொதிந்த விவாதங்கள், அமைச்சர்களின் பொறுமையான, பொறுப்பான பதில்கள் இருக்கும், அங்கே.
விஜய்யின் நூறு நாள்கள் ஆட்சியின் சட்டமன்றங்கள் அப்படி ஒன்றும் குறைந்ததாகத் தெரியவில்லை.
சரியான செய்திகளைப் பேச மாட்டார்கள் தவெக உறுப்பினர்கள். அதையும் சரியாகப் பேச மாட்டார்கள். நன்றாகத் தெரிந்திருந்தும் பொய்களை அள்ளி விடுவார்கள். நாலாயிரத்தி முன்னூற்றி இருநூற்றி..........என்பார்கள் அமைச்சர்கள், சிலர் மன்மத நன்றி சொல்வார்கள், தமிழில் கூட சரியாகப் படிக்கத் தெரியாமல் உளறிக் கொட்டிக் கொண்டு, நான் பிறப்பால் கிருஸ்துவன் என்பார் ஒரு மந்திரி.
முதலமைச்சரோ 'அப்பாவைக் காணேம்' என்பார் ஒரு சைகையுடன், பிறகு 'முடிந்தது' என்பதுபோல இன்னொரு சைகை செய்வார்- ஆனால், அவர் பேசவே மாட்டார்.
சபாநாயகர் ? கேட்கவே வேண்டாம், தவெககாரர் போலத்தான் இருக்கிறார் போலும்.
இந்த நூறு நாள் ஆட்சியில் கொலைகள், கொள்ளைகள், சிறுமிகள் உள்பட பாலியல் வன்கொடுமைகள், கடும் மின்வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு, முதல்வர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் போராட்டங்கள், போக்குவரத்துத் துறையில் உ.பி. மாநிலத்தவர்களை நியமிக்க டெண்டர், சேலம் அரசுப் பள்ளியில் தமிழ் தெரியாத வடமாநித்தவர்கள் ஆசிரியர்களாக நியமனம் என்று அலங்கோலமான ஆட்சியாக நூறு நாள்களை அதாவது மூன்று மாதங்களை நிறைவு செய்துவிட்டார் முதல்வர் விஜய் என்றால் என்ன, சும்மாவா?
இனிவரும் காலங்களிலாவது சட்டமன்றம் மக்களுக்காக நடைபெற வேண்டும். மக்களுக்கான ஆட்சியாக, மக்கள் நலம் பேணும் ஆட்சியாக இருக்க வேண்டும்.
ஜனநாயகம் போஸ்டரில் இருந்தால் பயனில்லை. நடைமுறையில் இருக்க வேண்டும்!
- கருஞ்சட்டைத் தமிழர்