தலைவர் கலைஞர் அவர்கள் 'பராசக்தி' படத்தில், எதிர்காலத்தில் கை ரிக்சாவை ஒழிப்பதாக வசனம் எழுதி இருந்தார். அவரின் ஆட்சியில் கை ரிக்சா ஒழிந்தது. அவர் முதிர்ந்த அரசியல்வாதி. திரைப்படத்தில் சொன்னதை அரசியல்வாதியாக நிறைவேற்றிக் காட்டினார்.

'சர்க்கார்' என்று ஒரு படம் வந்தது. அதில் கதாநாயகனாக நடித்த விஜய், தன்னுடைய வாக்கை வேறு ஒரு நபர் கள்ள ஓட்டாகப் போட்டுவிட்டார் என்பதற்காகப் பெரும் போராட்டம் நடத்தினார்.

தேர்தலைப் பாதியில் நிறுத்தினார், அமையவிருந்த ஆட்சியைத் தடுத்தார். 'ஒரு ஓட்டு என்ன சும்மாவா? அது வாக்காளரின் உரிமை' என்று வசனமெல்லாம் பேசிப்பேசி, விஜயின் வாக்கு திருடப்பட்டதற்கு எதிராக மக்களையெல்லாம் திரட்டிப் போராடினார், பார்த்தோம்.

இப்பொழுது பீகாரில் 65 லட்சம் வாக்குகள் திருடப்பட்டிருக்கிறது, கர்நாடகாவில் 6,000 வாக்குகளுக்கு மேல் திருடப்பட்டுள்ளது என்று எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெருத்தெருவாக மக்களிடம் கத்திக் கொண்டு இருக்கிறாரே, தெரியுமா விஜய்க்கு? அதுபற்றி இதுவரையும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லையே அவர்.

மாநாடு நடத்துவார், பொதுச்சொத்துகள் சேதமாகும். மின்சாரத்தை நிறுத்தச் சொல்லி மனு கொடுப்பார்கள். பிறகு அங்கே போய் நின்று கொண்டு 'நான் பேசும்போது கரண்டை கட் பண்ணுறாங்க' என்று கூவிக் கொண்டிருப்பார்.

 எம்.ஜி.ஆர் நடிகர்தான். அவர் அரசியலுக்குத் தி.மு.க. இருந்தது.

நடிகர் என்பது மட்டும் அரசியலுக்குத் தகுதியல்ல. விஜய்க்கு அரசியலும் தெரியாது, அதில் முதிர்ச்சி பெறவும் முடியாது.

முதிர்ந்த அரசியல்வாதியான முதலமைச்சரை, 'ஸ்டாலின் அங்கிள்' என்றும் 'சார்' என்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஏளனமாகப் பேசிய நடிகர் விஜய்யின் சினிமா அரசியலை மக்கள் பார்த்து விட்டார்கள்.

இனியும் தொடர்ந்து அவரின் கூத்துகளைப் பார்க்கலாம்.

- கருஞ்சட்டைத் தமிழர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.