மாநில சுயாட்சி, நீட் தேர்வு, இந்தித் திணிப்பு போன்ற மக்கள் விரோத ஒன்றியத் திட்டங்களுக்குத் தமிழ்நாட்டில் இடம் தராமல் எதிர்த்து நின்றது தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுகழக அரசு.
இப்போது, திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளை இழுத்து வைத்துக் கொண்டு மைனாரிட்டி ஆட்சி நடத்தும் விஜய் தலைமையிலான தவெக அரசு, ஒன்றிய அரசின் மக்கள் விரோதத் திட்டங்களுக்கு வழிவிடத் தொடங்கியுள்ளது.
கட்சி தொடங்கியதில் இருந்தே பாஜகவை விமர்சனம் செய்வதில்லை விஜய், தவெக அரசு. ஏற்கனவே சிபிஎஸ்சி பள்ளிகளுக்குத் தடையில்லாச் சான்று வழங்குகிறது.
திமுகழக ஆட்சியில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி தரவில்லை, அதன் மூலம் இந்தியைத் திணிக்க ஒன்றியம் முயன்றதால். நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.
இதுகுறித்த விசாரணையின்போது 'தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறோம்' என்று தவெக சார்பில் சொல்லப்பட்டு இருக்கிறது.
"ஆலோசனை செய்கிறோம்" என்ற ஒரு வார்த்தையில், நாளை நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டில் இந்தியைச் சுமந்துகொண்டு நுழைய வழிவகுக்கக் கூடும் என்ற தொனியைத் தருகிறது. இது தமிழ்நாட்டிற்கு ஆபத்தாய் முடியும்.
ஏற்கனவே வேல் தூக்கிக் கொண்டு தமிழ்நாட்டில் அண்ணாமலையை ஆடவைத்தது ஆர்எஸ்எஸ்/பாஜக. மக்கள் அதை ஏற்கவில்லை. இப்போது விஜயை அரவணைத்து ஆடுகிறது.
அன்று திருமாவளவன் சொன்னார்
"ஆர்எஸ்எஸ்- இன், செல்லப் பிள்ளை விஜய்" என்று.
இன்று அது உறுதியாகிறது!
- கருஞ்சட்டைத் தமிழர்