சிதறிக் கிடக்கும்
பொம்மைகளைக் கடந்து
கிறுக்கிய ஓவியங்களோடு
மடியில்
அமர்கிறாள் சிறுமி பிரியா...

ஒவ்வொரு பக்கமாக
புரட்டும்பொழுது
விளையாட்டை
ஆரம்பித்து வைத்தாள்
விலங்குபடம் எனக்கும்
பறவைகள் படம் அவளுக்கும்
என்றும் தொடங்கியது ஆட்டம்
சற்று நேரத்தில்
அவளுடன்
விளையாடிக் கொண்டிருந்தன
சிதறிய பொம்மைகளும்
கிறுக்கிய ஓவியங்களும்
வனமாக மாறிக்கொண்டிருந்தது...
வீடு

- பாரிமேகம்

More articles by பாரிமேகம்

Comments

1 comment

1
கி.பிரபா
காலத்தின் கோலம்; அறிவியலின் தாக்கம்; நாகரிகத்தின் மோகம்.இவைகளால் முதியவர்கள், பெற்றோர்கள் வாழும் இடம் பிள்ளைகளால் வனமாகிக் கொண்டிருக்கிறது. அங்கே வண்ணத்துப் பூச்சி இல்லை.ஓசையை எழுப்பும் வண்டு இல்லை. பறிப்பதற்கு மலர்கள் இல்லை. பயன்படா வனமாக மாறி வருகிறது. இருப்பதைத் தின்று விட்டு எப்போது போவாம் உண்மையான வனத்துள் என ஏங்கும் அளவில் உறவுகள் உணர்வற்றுப் போய் விட்டன.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.