• நமது தாய் மதமாகிய சைவத்துக்கும் வைணவத்துக்கும் எல்லோரும் திரும்புவோம். - சீமான்

அப்போ இனிமேல் கறி, மீன் எல்லாம் சாப்பிடக் கூடாதா அண்ணே!

• என்னை ‘பாசிஸ்ட்’ என்று எவனாவது சொன்னால் செருப்பால் அடிப்பேன். - சீமான்

அண்ணே, கோபிச்சுக்காதீங்க... இதுக்குப் பேர் தான் அண்ணே பாசிசம்.

• நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் தோற்றதால் நாங்களே கவலைப் படவில்லையே, உனக்கு ஏன் பதட்டம்? - சீமான்

நீங்க எப்போதுமே கவலைப்படாமல் ‘சந்தோஷமாக’ இருக்கணும்ங்கிற ஆசையினால்தான் அண்ணே!

• என்னுடைய கோத்திரம் சிவகோத்திரம்; மதம் சைவம். - சீமான்

அப்படியே ஜாதி, பிறந்த நட்சத்திரம், லக்கனம் எல்லாம் சொல்லிடுங்கண்ணே! பஞ்சாங்கத்துலே பார்த்து, ‘தமிழ்த் தேசியம்’ கிடைக்குமா கிடைக்காதான்னு தெரிஞ்சுக்கிறதுக்கு வசதியா இருக்கும்.

• வரலாற்றிலே திராவிடத்துக்கு வந்த முதல் எதிரி நான் தான்; அதனால் தான் நடுங்குறாங்க... - சீமான்

அச்சச்சோ... இந்த வரலாற்று நாயகனின் அருமை புரியாம பஞ்சாயத்துல ஓட்டுப் போட மாட்டோம்னு மக்கள் அடம் பிடிச்சாங்களே, அண்ணே, அத நினைச்சா தான் துக்கம் தொண்டையை அடைக்குது!

• இஸ்லாமும் கிறிஸ்தவமும் வெளிநாட்டு மதங்கள்; நமது மதங்கள் அல்ல. - சீமான்

அதுக்காக நீங்க போட்டிருக்கிற பேண்ட் சட்டையை கழட்டி விட்டு, மர இலை தலைகளை சுற்றிக் கொண்டு இது தான் தமிழர் அடையாளம் என்று மட்டும் சொல்லிடாதீங்க பிளீஸ்...

Comments

1 comment

1
குமரன்
அகத்திணை
அன்பு, அறம், ஈதல்இசைபட வாழ்தல்,....
சைவம் பதி (தலைவன்), பசு (குடிமக்கள்), பாசம் (ஆட்சி செய்யும் முறை)

புறத்திணை
பகை முடித்தல், பொருள், அரசியல்,...

வைணவம்
அநீதிக்கு எதிரான போர்

சைவம்
அன்பியல், பகைவனுக்கருள்தல்,...
பரமாத்மா - நிறைவானது ஆத்மா - குறைபாடுடையது எனவே இரண்டும் ஒன்றாக முடியாது.
மாயை
'மரத்தில் மறைந்தது மாமத யானை
மரத்தை மறைத்தது மாமத யானை'
இங்கே  மரமும் உண்மை யானையும் உண்மை

வைணவம்
அறிவியல்
வேதம் (பரத கண்டத்திற்கு அப்பால் வேதத்திற்கான தடயங்கள் கிடைக்கப் பெறாமையால் அவை உள்ளூரில் வாழ்ந்த மக்களிடமிருந்து (தமிழர்கள்) வந்தவர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டு தம்வயபடுத்தப்பட்டது)
உபநிடதம்
பகவத் கீதை
வேதாந்தம் (பலவாறாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது)
அதில் ஒன்று சங்கரர் செய்த விளக்கம் இரண்டற்றது (அத்வைதம்)
பரமாத்மாவும் ஆத்மாவும் இரண்டற்றவை. எப்படி சந்திரனின் பிம்பம் பல குடங்களில் வைத்த நீரில் தோன்றுகிறதோ அதே போல் தான் பரமாத்மா ஆத்மாவில் தோன்றுகிறது
மாயை
'ஒளி இல்லாத போது பாம்பு போல் அச்சமூட்டும் கயிறு, ஒளிவந்தபோது அச்சம் நீங்குகிறது' இங்கே பாம்பு பொய் கயிறு உண்மை

சைவம் முப்பொருள் உண்மை பதி பசு பாசம் கிருத்தவம் திரித்துவம் பிதா சுதன் பரிசுத்த ஆவி வைணவம் அநீதிக்கு எதிரான போர்
இஸ்லாம் புனிதப் போர்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.