திமுக, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் குறித்து பாஜகவினர் விமர்சனங்களை வைக்கும்போதெல்லாம் தவறாமல் குறிப்பிடுவது ‘வாரிசு அரசியல்’. வாரிசு அரசியலால் இக்கட்சிகள் நாட்டையே சீரழித்து விட்டன என்பதுபோல மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த பலரும் பேசியிருக்கிறார்கள். ஆனால் இப்போது மோடியின் மூன்றாவது ஆட்சியிலும், அமைச்சரவையிலும் வாரிசுகளாக நிரம்பிக் கிடக்கிறார்கள். அந்த பட்டியலை ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “பல தலைமுறைகளாக போராட்டம், சேவை, தியாக உணர்வுடன் உள்ள பாரம்பரியத்தை வாரிசு அரசியல் என சொல்லும் மோடியின் 3.0 அரசில் 20 வாரிசுகள் உள்ளனர். இது மோடியின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தையே காட்டுகிறது. என்று அவர் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

பட்டியல்

1. எச்.டி.குமாரசாமி – முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன்.

2. ஜெயந்த் சவுத்ரி – முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பேரன்.

3. ராம்நாத் தாக்கூர் – பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் மகன்.

4. ராவ் இந்தர்ஜித் சிங் – அரியானா முன்னாள் முதல்வர் ராவ் பிரேந்திர சிங்கின் மகன்.

5. ரவ்னீத் சிங் பிட்டு – பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கின் பேரன்.

6. ஜோதிராதித்ய சிந்தியா – முன்னாள் ஒன்றிய அமைச்சர் மாதவ் ராவ் சிந்தியாவின் மகன்.

7. சிராக் பாஸ்வான் – முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன்.

8. ராம் மோகன் நாயுடு – முன்னாள் ஒன்றிய அமைச்சர் எரன் நாயுடுவின் மகன்.

9. பியூஷ் கோயல் – முன்னாள் ஒன்றிய அமைச்சர் வேத் பிரகாஷ் கோயலின் மகன்.

10. தர்மேந்திர பிரதான் – முன்னாள் ஒன்றிய அமைச்சர் தேபேந்திர பிரதானின் மகன்.

11. கிரண் ரிஜிஜு – அருணாச்சல் முன்னாள் சபாநாயகர் ரிஞ்சின் காருவின் மகன்.

12. ஜே.பி. நட்டா – மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் எம்.பி மற்றும் அமைச்சர் ஜெய் பானர்ஜியின் மருமகன்.

13. ஜிதின் பிரசாதா – உத்தரப்பிரதேச முன்னாள் எம்.பி. ஜிதேந்திர பிரசாதா மகன்.

14. கிர்த்தி வர்தன் சிங் – உத்தரப் பிரதேச முன்னாள் அமைச்சர் மகாராஜ் ஆனந்த் சிங்கின் மகன்.

15. அனுப்ரியா படேல் – பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அப்னா தளம் நிறுவனர் சோனேலால் படேலின் மகள்.

16. ரக்‌ஷா கட்சே – மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சேவின் மருமகள்.

17. கமலேஷ் பஸ்வான் – உத்தரப் பிரதேச மக்களவை வேட்பாளர் ஓம் பிரகாஷ் பஸ்வானின் மகன் இவர்.

18. சாந்தனு தாக்கூர் – மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் மஞ்சுல் கிருஷ்ணா தாகூரின் மகன்.

19. வீரேந்திர குமார் காதிக் – மத்தியப்பிரதேச முன்னாள் அமைச்சர் கவுரிசங்கர் ஷெஜ்வாரின் மைத்துனர்.

20. அன்னபூர்ணா தேவி – பிகார் முன்னாள் எம்எல்ஏ ரமேஷ் பிரசாத் யாதவின் மனைவி.

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.